நம்பிக்கை துரோகத்துக்கு பாடம் புகட்ட மதிமுக தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று, தொல்.திருமாவளவன், அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக அதிமுக தேர்தல் கூட்டணி ‘கூடா நட்பு’ என்று கூறியிள்ளார். (அப்போ உங்களுக்கும் காங்கிரசுக்கும் இருக்குறது என்ன நட்புங்கண்ணா ?
ஈழம் கூடாது என்பதுடன், புலிகள் இயக்கம் தடை செய்யப் பட நான்தான் காரணம் என்ற வெளிப்படையாக அறிவிக்கும் அந்த அம்மையார், மேதகு பிரபாகரன் அவர்களை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே தீர்மானம் இயற்றியவர். (ஜெயலலிதா தீர்மானம் இயற்றினார். சோனியா, தமிழர்களை அழித்தே விட்டாருங்களேண்ணா…. அவங்கக் கூட நட்பு வச்சுக்கிட்டு, பிரபாகரன் பேரை நீங்க சொல்லலாங்களாண்ணா)
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென்ற துடிப்பு மிக்க தலைவர் வைகோ அவர்களுக்கும் மதிமுகவுக்கும் இழைக்கப் பட்டிருக்கின்ற அநீதி மற்றும் நம்பிக்கை துரோகம் என்பது, அரசியல் நாகரீகத்தை போற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டியவையாகும். (நீங்க காங்கிரஸோட கூட்டணி வைச்சு, ஈழத் தமிழர்களுக்கு பண்ண துரோகத்த விடவான்னா அந்த அம்மா பண்ணிருச்சு…. போங்கண்ணா தமாஸ் பண்ணிக்கிட்டு…. குடுத்த காசுக்கு கூவுங்கண்ணா… ஓவரா கூவாதிங்க)
ஆனாலும் வைகோவை இப்படி பழி வாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக் கொள்ள இயலாததாகவுள்ளது. இந்நிலையில் மதிமுக தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். (அண்ணா, மதிமுக காரங்களே மூடிகினு கம்முனு இருக்காங்க…. ஓவரா கூவாதிங்கண்ணா… மொதல்ல… தேர்தலுக்கு திமுக எவ்ளோ துட்டு தர்துன்னு வாங்கப் பாருங்க. அவங்க கட்சி மேட்டர அவங்க பாத்துப்பாங்க)