ஜாபர் சேட்டிடம் தேர்தல் ஆணையம் கேட்டது என்ன ?
நேற்றைக்கு முன்தினம், உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஒட்டக் கூத்தர் என்கிற ஜாபர் சேட்டிடம், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்கிறது… அப்படி என்னதான் கேட்டிருப்பார்கள் ஜாபர் சேட்டிடம், இவர் என்னதான் பதிலளித்திருப்பார் என்று விசாரித்ததில்…..
பிரிக்க முடியாதது என்னவோ ?
நானும் ஒட்டுக் கேட்பதும்.
பிரியக் கூடாதது ?
நானும் உளவுத் துறையும்
சேர்ந்தே இருப்பது ?
நானும் ஊழலும்
சேராதிருப்பது ?
நானும் நேர்மையும்
சொல்லக் கூடாதது ?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் என் பங்கு
சொல்லக் கூடியது ?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவின் பங்கு
பார்க்கக் கூடாதது ?
என் ‘திருவிளையாடல்கள்’
பார்த்து ரசிப்பது ?
நான் நடத்தும் நாடகங்கள்.
கலையிற் சிறந்தது ?
ஒட்டுக் கேட்பது
நாடகமென்பது ?
கருணாநிதி ஆட்சி
ஒட்டுக்கேட்புக்கு ?
நான்
ஒத்து ஊதுவதற்கு?
குருமாராஜ்
அழகுக்கு ?
கனிமொழி
ஆட்டையைப் போடுவதற்கு ?
கருணாநிதி
ஜெயிலுக்கு ?
ஆ.ராசா
வெயிலுக்கு ?
திஹார்
வெற்றிக்கு ?
நான்
வெட்டி வேலைக்கு ?
சிபிஐ….
திருவிளையாடல் வசனங்கள் அருமை..You are witty repartee.