உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான டெண்டர் 28 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடமும் அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22-2-2009 அன்று “உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்” நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று, அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே அமைந்தது.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், உடன்குடியில் பி.எச்.இ.எல். நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முழுவதுமாக 2012ஆம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்தத் திட்டத்தைத் தொடங்கப் போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 24-2-2012 அன்று அறிவித்தார்.
அந்த அறிக்கையில், “இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக நிறைவேற்றுவதென முடிவு எடுத்துள்ளேன். இத்திட்டத்திற்கு மொத்தச் செலவினமான 8,000 கோடி ரூபாயையும், தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பங்கு மூலதனமாக வழங்கும்” என்றெல்லாம் அறிவித்தார்.
இதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன. இதில் மத்திய அரசு பொது நிறுவனமான பி.எச்.இ.எல்., மற்றும் சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மின் நிலையத்திற்காக திருச்செந்துhர் தாலுகாவில் உள்ள 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், மின் வாரியத்திற்கு உரிமை மாற்றமும் செய்யப்பட்டது. தனியாருக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.
2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், “பெல்” (பி.எச்.ஈ.எல்.) நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம்
திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலைப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட வேண்டும். ஆனால் நீண்ட இழுபறிக்குப் பின், 2014ஆம் ஆண்டு நவம்பரில் தான் விலைப் புள்ளி திறக்கப் பட்டது.இதில் பி.எச்.இ.எல்., மற்றும் சீனா நிறுவன டெண்டர்கள் மட்டும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதிகாரிகள் ஒரு முடிவும், அரசு ஒரு முடிவும் தெரிவித்ததால், அந்த டெண்டரை யாருக்கு முடிவு செய்வது என்பதில் குழப்பம் கடந்த ஓராண்டுக் காலமாக நீடிப்பதாகச் சொல்லி வந்தார்கள். மின் வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த நிறுவனத்திற்கு, பணி ஆணை வழங்க, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது.
உடன்குடி டெண்டர் பற்றிய கோப்புகளை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று, எரிசக்தித் துறைச் செயலர் அலுவலகத்தில் பரிசீலித்திருக்கிறார்கள். மின் வாரிய அலுவலகத்தில் 13-3-2015 அன்று மாலையில் நடைபெறுவதாக இருந்த இயக்குனர் குழுக் கூட்டமும், தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே அந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் மின் வாரியத் தலைவர் சாய்குமார், இயக்குனர்கள் தேவராசன், அண்ணாதுரை, அருள்சாமி, கலைவாணன், தமிழக அரசின் சார்பில் எரிசக்தித் துறை, நிதித் துறை, தொழில் துறை செயலாளர்கள் கலந்து கொண்ட போதிலும், சிறிது நேரத்தில் மின்வாரிய இயக்குனர்களை அனுப்பி விட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் கலந்து பேசி, உடன்குடி மின்ன்நிலையக் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை ரத்து செய்து விட்டு, புதிதாக டெண்டர் வெளியிடஅதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வெளி வந்துள்ளது.
டெண்டர் ரத்து செய்யப்பட என்ன காரணம்? “10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யவும்” என்று வலியுறுத்தல் வந்தது தான் காரணமா? இந்த இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்பதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வில்லை என்றால் ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு இவ்வளவு மாதங்கள் முடிவெடுக்காமல் கால தாமதம் ஏன் செய்தார்கள்? உடனடியாக அறிவித்திருக்கலாம் அல்லவா?
ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்; இந்த அரசினர் அதைச்செய்வார்களா?
உடன்குடி அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகளை, 2013இல் தொடங்கி, 2017இல் முடிக்க, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதனால் 1,320 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தால், புதிதாக டெண்டர் விட்டு, அது யாருக்கு என்பது முடிவாகி, கட்டுமானப் பணிகள் முடிவுற்று மின்சாரம் கிடைக்க மேலும் நான்காண்டுகள் தாமதமாகும். திட்டச் செலவும் தற்போது 10,121 கோடி
ரூபாயிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக அ.தி.மு.க. அரசின் கடும் தாமதம் காரணமாக ஏற்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. அது எப்போது திறக்கப்பட்டது? திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாதங்களாகின்றன? ஏன் இந்தத் தாமதம்? தாமதத்திற்கு யார் பொறுப்பு? இந்தத் தாமதத்திற்கு மின் துறை அமைச்சரும், சில குறிப்பிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்பது உண்மையா? தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம் தான் தாமதத்திற்கும், இறுதியில் ரத்து செய்ததற்கும் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா? இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு கோடி ரூபாய்? இந்த இழப்புக்கு யார் காரணம்? மின்சார வாரியமா? தலைமைச் செயலக உயர் அதிகாரிகளா?
தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை முறைப்படி நிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது அல்லவா? அவ்வாறு மின் பற்றாக் குறை ஏற்பட்டதால் தானே, வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது? மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்திட தமிழக அரசு முன் வருமா? இந்த ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்; இந்த அரசினர் அதைச்செய்வார்களா?” இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து, இது வரை, பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் இது வரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Aiyakkalota kudumba uruppinarkalukku varumanam kitailai pole!!
ஆஹா, என்னா அற்புதமா கேள்வி கணைகள் கலைஞர் தொடுத்து உள்ளார். மன நிறைவு தருகிறது. இவர் கட்சியினர் ஊழல் செய்ததால் மற்றவர் செய்யும் ஊழலை வெளிபடுதவோ, கேள்வி கேட்கவோ கூடாது என்று எழுதுவதும்,கருதுவதும் அடிப்படை அற்ற மோசமான கருத்துக்கள். கலைஞர், ramadoss நன்றாக ஸ்கோர் செய்கின்றனர். இவர்களை கண்டு பயப்பட தேவை இல்லை. நல்லது செய்யட்டும். கலைஞர் இதனால் மீண்டும் ஆட்சிகட்டிலில் அமரபோவது இல்லை. இருந்தாலும் இந்த நன்மையை தமிழக மக்களுக்கு செய்யட்டும்.
தண்ணித்தொட்டி தலைமைச்செயலகம் கட்டியதில் ஊழல் என்று ஜெயலலிதா ரகுபதி விசாரணை ஆணையம் அமைத்தார் பதிலாக உடன்குடி மின் ஒப்ப்பந்த்தத்தில் குளறுபடி என்று கருணா விசாரணை ஆணையம் கேட்கிறார். எப்படி ?.
ஏகப்பட்ட தரவுகளை புள்ளி விபரமா கட்டுமரம் குறிப்பிட்டுள்ளது,, அதுபற்றிய சரியான புரிதல் இல்லாவிட்டாலும் உடன்குடியில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது என்பது உண்மைதான் சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற பெயரில் விஜயகாந்தின் கச்சி இருப்பதாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் பேசவில்லை தேமுதிக அங்கே அங்கு இருக்கிறார்களா இல்லை சட்டசபைக்கே போறதில்லையா
இந்த சனியன் புடிச்ச கட்டுமரம் காலையில் காலையி எழும்பினால் காகம் கத்தின மாதிரி ஏதாவது வில்லங்கமாக ஒரு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார், போன வாரம் முழுவதும் Methane எரிவாயு அகழ்வு சம்பந்தமாக ராஜ்யசபாவில் கனிமொழியும் தெரு மேடைகளில் சுடாலினும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மிதேன் அகழ்வு திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்ததே இதே கட்டுமரம் ஆட்சியில்த்தானே, உடன்குடி ஒப்ப்பந்தம் ஆளும் கட்சியினர் இலாப நோக்கம் கொண்டு ஏதாவது தில்லுமுல்லு செய்திருப்பார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவின் அடிப்படை கொள்கையே கட்டுமரம் என்ன திட்டத்தை கொண்டு வந்ததோ அதை மாற்றி அமைப்பதுதானே. குறைந்த பட்ஷம் வர்ணத்தையாவது மாற்றி அடித்து அது வேறு இது வேறு என்று காட்டவே ஜெயலலிதா முயற்சிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவைப்பொறுத்தவரை அரசியல் ஏன்பது ஆட்சியை அபகரிப்பது எப்படி என்பது அரசியலே தவிர மக்கள் நலனை எவர் சிந்தித்திருக்கிறார்கள். நேற்றைய செய்தியில் முன்நாள் பொம்மை பிரதமர் மண்மோகன் உட்பட சோனியா மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் கொள்ளிகள் மின்சாரம் நீர் மற்றும் பொது வரிகளை கோடிக்கணக்காக கட்டாமல் ஏய்ப்பு செய்து வந்திருக்கின்றனர் இவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிட இந்திய சட்டம் இடம் கொடுக்கத்தான் போகிறது.
இது ஒரு காட்டு மிராண்டிகளின் மர்மதேசம்.
தமிழ்நாட்டில் கருணாநிதி செய்வதை ஜெயலலிதாவும் ஜெயலலிதா செய்வதை கருணாவும் விதண்டாவாதம் செவதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது. இருந்தும் கருணாநிதி என்ற கடைந்தெடுத்த ஊழல்வியாதி இதுபற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
ஐந்துமுறை முதலமைச்சராக இருபத்தைந்து ஆண்டுகள் பதவியிலும் 70- 80 ஆண்டுகள் அரசியலிலும் இருந்து கோடிகளை சுருட்டுவதற்காகவே வாழ்ந்துவரும் ஒரு சமூக விரோதியின் வாக்குமூலங்களை பத்திரிகை ஊடகங்கள் வெளியிடாமல் புறக்கணித்தாலே கருணாநிதி போன்ற சதிகாரர்கள் கொஞ்சமேனும் திருந்துவதற்கு இடமிருக்கிறது, கருணாநிதி சுயநலத்துக்காக கூவும் குற்றாச்சாட்டுக்கள் உண்மை இருந்தாலும் அரசியலே அங்கு முன்னணி வகிப்பதாக உள்ளது
கருணாநிதி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கிறதோ அக்கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு மந்திரி பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார் தொலைத்தொடர்பு மந்திரிப்பதவையை தயாநிதிக்கு பெற்றுக்கொடுத்தார் தயாநிதி வஞ்சகமில்லாமல் சன் ரிவியை வளர்த்துக்கொண்டான் தினகரன் கருத்துக்கணிப்பு வந்து தினகரன் அலுவலகம் கொழுத்தப்பட்டபோது அந்த துறை கனிமொழியை குறி வைத்து கனிமொழியின் ஆசை நாயகன் ராசாவுக்கு வழங்கப்பட்டது கனிமொழி ராசாவை அரவணைத்து அந்த துறையை கலைஞர் ரிவி தொடங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது கருணாநிதி தொலை நோக்கு சிந்தனை உள்ளவனாக இருந்திருந்தால் மின் துறை அமைச்சை பெற்று மின்சாரத்தை தன்நிறைவு செதிருக்க முடியும் பாதுகாப்பு அமைச்சை பெற்று இலங்கை படைகள் மீனவர்களை சுட்டு கொல்லுவதை தடுத்திருக்க முடியும் ஆனா கருணா அப்படி செய்யவில்லை.
இப்போ உடன்குடி ஒப்பந்தம் பற்றி கட்டுமரம் கருணா நியாயமாக பேசுவதுபோல் இருந்தாலும் உள் அர்த்தம் காழ்ப்புணர்ச்சியாகவே இருக்கும். கருணாநிதி ஏதோ நாட்டு நலனில் பேசுகிறார் என்று வெளிப்படுத்துவதுபோலவே அமைந்துவிடும் ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் அதற்காக “மாட்டறைந்த” மக்கள் மத்தியில் காலாவதியாகிக்கொண்டிருக்கும் ஒரு கருங்காலியை முன்னிலைப்படுத்தவேண்டாம். கருணாநிதி என்றால் அவன் தமிழர்களின் துரோகி நாட்டை மண்ணாக்கிய ஊழல்வியாதி.

பா.ம.க மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில் நாம் கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய அம்சங்கள்..
கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் நடைபெற்ற மின்சார வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட போது ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், அடுத்த ஒரு மாதத்தில் அவசர அவசரமாக மின்வாரிய இயக்குனர்கள் கூட்டத்தை கூட்டி உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?
===================================
இந்த மின்திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் அந்த நிறுவனத்திற்கே வழங்க மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர்பதவியில் இருந்து, இப்போது தமிழக நிர்வாகத்தை கவனிக்கும் உயர் பதவிக்கு மாறியுள்ளவர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் விரும்பியுள்ளனர்.
===================================
இதுபோன்ற மின்திட்டங்களை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.15.10 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் தாங்கள் பெருமளவில் பயனடையலாம் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம்.
===================================
மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பையெல்லாம் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி நுகர்வோர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதே அவர்களின் எண்ணம். அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தங்களின் பணம் ஈட்டும் நோக்கத்திற்கான கருவியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
===================================
தகவல் (மார்ச் 15, 2015): http://statements.pmkparty.in/pmk-dr-ramadoss-cites-reasons-behind-cancelling-udangudi-power-project-tenders-way-for-corruption/
While cancelling the DMK awarded tender in this case, AIADMK Govt told that Govt itself finance the entire project amount instead of the tenderer brought in Capital as joint venture . Why not Karunanidhi not asking inquiry for Cancellation of the first awarded tender .
There is a trouble when I open your news letter
what happens is that ,,there is viral attack.I think
is the work of your enemies.Kindly go through
this problem & find a solution.There is lot of
I.T companies offering solutions. This should be
the E mail id which is safe & secure :https;savakkuonline.com?10745,,,
The domine number can change .but,secured web should be there.
kindly take with the help of I.T pros.
WITH REGARDS
V.NARAYANAN
“அம்மா” வுக்கு அதிக வருமானம் இதன்மூலம் இருக்க்குனு நினைக்கிறேன் அதான் “தாத்தா” அறிக்கைவிட்டுருக்கார்.
அப்ப இன்னும் பல வருசத்துக்கு மின்சார பிரச்சனை தொடருமா??