தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர் அமைச்சரவை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழக சட்டப் பேரவையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமது உரையில் மொத்தம் 151 முறை ‘அம்மா’ புகழ் பாடி தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி கொண்டார். அதையும் தாண்டி அவர் கூறிய சில கருத்துக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமானவையாகும்.
நிதிநிலை அறிக்கையை முழுமையாக வாசித்து முடித்த பன்னீர்செல்வம், தமது உரையின் முடிவில்,
‘‘போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்’’
என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தான் அமைக்கப்பட்டுள்ளது என்றால், நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்குத் தேவையான அரசின் கோப்புகளும், புள்ளி விவரங்களும் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன; அவற்றை ஆய்வு செய்த ஜெயலலிதா நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெற வேண்டும்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்; அதன் அடிப்படையில் தான் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தான் பொருளாகும்.
இது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். தமிழ்நாட்டின் முதல்வராகவும், அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (3) பிரிவின்படி பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் ஏற்க வேண்டியது கட்டாயமாகும். இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆளுனரின் முன்னிலையில்,
‘‘தமிழ்நாட்டு மாநில அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரியவரும் அல்லது எனது பரிசீலனைக்காக வரும் எந்த விஷயத்தையும், அமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளை ஆற்றுவதற்காகத் தவிர வேறு எதற்காகவும் யாருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்க மாட்டேன் என்று கடவுளின் பெயரால் (அல்லது உளமாற) உறுதியேற்கிறேன்’’
என உறுதிமொழி ஏற்கிறார்கள். இவ்வாறு முதல்வர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் தாம் கையாள வேண்டிய கோப்புகளை ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சென்று, அவற்றை ஆய்வு செய்து அவர் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பதன் மூலம் ரகசியக் காப்பு உறுதி மொழியையும், இந்திய அரசியலமைப்புச் சட்டவிதிகளையும் பன்னீர்செல்வம் மீறிவிட்டார்; முதல்வர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு, தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் பல முறை சந்தித்து பேசியுள்ளனர். முதலமைச்சரும், அமைச்சர்களும் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் என்ற முறையில் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை சந்தித்து பேசுவதை குறை கூற முடியாது. ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் எந்த அடிப்படையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை சந்தித்து அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்? இதை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எப்படி அனுமதிக்கிறார். இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் முக்கியக் கோப்புகள் அனைத்தும் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது ஒப்புதலுக்குப் பிறகு தான் அவற்றில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்திடுவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையென்றால் இதுவும் அப்பட்டமான அரசியலமைப்பு சட்ட விதி மீறல் ஆகும்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தை அனுபவித்து முடிந்த நாளிலிருந்து 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதை ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது தண்டனையாக பார்க்க முடியாது. மாறாக ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து அவர்களின் தண்டனைக் காலத்திற்கு பிறகும் 6 ஆண்டுகளுக்கு மக்களையும், நாட்டையும் காப்பாற்றுவதற்கான ஏற்பாடாகவே இதை பார்க்க வேண்டும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் உடனடியாக அரசு நிர்வாகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டால், அந்த நிர்வாகம் ஊழல் மலிந்ததாகத் தான் இருக்கும் என்ற என்ற அடிப்படையில் தான் இப்படி ஒரு பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஊழல் குற்றவாளியில் வழிகாட்டுதலை பின்பற்றுவது மட்டுமல்ல… அவ்வாறு கூறுவதே தவறு தான். ஊழல்வாதியை பின்பற்றுபவர் எப்படி நல்ல முதலமைச்சராக இருக்க முடியும்?
நிதிநிலை அறிக்கை உரையின் இன்னொரு இடத்தில்,
‘‘மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை’’
என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விடுதலை ஆவார் என்ற பொருளில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசுவது நீதித்துறையில் செய்யும் தலையீடு ஆகும். இது கண்டிக்கத்தக்கது.
இந்திய நிர்வாக முறையின் புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான். அந்த சட்டத்தையும், அதன் அடிப்படையில் ஆளுனர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியையும் ஓ.பன்னீர்செல்வம் மீறிவிட்ட நிலையில் அவர் முதலமைச்சர் பதவியில் நீடிப்பது முறையல்ல. எனவே, அவரையும், அவரது அமைச்சரவையையும் பதவி நீக்க மாநில ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
uhkjh]; ehap xU [hjp ntwp GLr;rtd;
Please write a true factor/true report about cavuery river water disputes between tamil nadu and Karandaka.
savukkala adi nnu sonnanaa , adhu indha savukkula eluthi addikarathu pola?? kena payan ramdoss unakku irrukkudi….
நீ எல்லாம் சோத்துல உப்பு போட்டு தின்கிறாயா இல்லையா நல்லவன் என்கிற நாயே? எப்படா இராமதாஸ் பற்றி எழுதுவாங்க என்று நாக்கை தொங்க போட்டுட்டு இருப்பாய் போல.
unga medical corruption and also murder case both has to speed up as well
ஜெயலலிதா எலும்புத்துண்டு எறிந்தால், அதைப்பிடிக்க “அம்மா வாழ்க” என அலறிக்கொண்டு ஓடுவார் இந்த ஜாதி வெறியன்.
ஜெயா அவர்கள் எலும்பு துண்டை எரியாமல் இல்லை..அந்த எலும்பு துண்டை எகிறி குதித்து பிடித்தவர்கள் தான் வேல்முருகன் தொடங்கி பாமக-வின் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் முதல் பேராசிரியர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் பொன்னுசாமி வரை. இத்தனை பேர் எகிறி குதித்தாலும், வால் ஆட்டினாலும், ஜெயலலிதா பண்ணும் ஊழல்களையும், அட்டுழியங்களை தட்டி கேட்க நாதியில்லாத இந்த தமிழகத்தில் துணிச்சல் உள்ள ஒரே தலைவர் என்னை பொருத்தவரை மருத்துவர் இராமதாசு மட்டுமே.
// அட்டுழியங்களை தட்டி கேட்க நாதியில்லாத இந்த தமிழகத்தில் துணிச்சல் உள்ள ஒரே தலைவர் என்னை பொருத்தவரை மருத்துவர் இராமதாசு மட்டுமே. //
———
தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ வன்னியரை, பார்ப்பன இந்திய ராணுவத்தின் உதவியுடன் ரஜபக்சே கொன்றுகுவித்தான். அதுபற்றி வாய் திறவாமலிருக்க அய்யாவுக்கு சோனியாகாந்தி தந்த பரிசுதான் கேபினட் அமைச்சர் பதவி. ஜெயலலிதாவும் இதற்கு உதவினாரென்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.
உண்மையான பேரைக் கூட சொல்லாமல் யாருடைய எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு இராமதாசை சாதி வெறியன் என்கிறாய்? பாராட்ட வேண்டிய விடயத்தில் கூட விஷமத்தை கக்கும் உம் போன்ற மன நோயாளிகளுக்கு என்ன நன்மை செய்தாலும் தவறாகத்தான் தெரியும். தமிழகத்தில் அம்மா இட்லி தின்று, அம்மா தண்ணியை குடித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் போலும். இட்லியும் சட்னியும் போதும். எவன் செத்தா நமக்கென்ன?
1. // யாருடைய எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு இராமதாசை சாதி வெறியன் என்கிறாய்? //
————
உமக்கு வேண்டுமானால், வன்னியர் மானங்காத்த குலவேந்தராக அய்யா இருக்கலாம். ஜாதி வெறியன் யாரென்று, தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக்கி வீசப்பட்ட தருமபுரி இளவரசனிடம் கேள்.
———
2. // தமிழகத்தில் அம்மா இட்லி தின்று, அம்மா தண்ணியை குடித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் போலும். //
லஞ்சுக்கு மாட்டுக்கறி பிரியாணியும் டின்னருக்கு சூடான பாயாவும் புரட்டாவும் போட்டால், சாகும் வரை அம்மாதான் தமிழக முதல்வர். ஆசையிருந்தால், நீயும் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். மேல்ஜாதி கீழ்ஜாதி வித்தியாசமெல்லாம் இங்கே கிடையாது. பள்ளர் பறையர் பார்ப்பனர் வன்னியர் கள்ளர் தேவரெல்லாம் அம்மா உணவகத்தில் சரிசமம். இது சமபந்தி போஜனம்.
பாமக சாதி பயனடைய வேண்டும் என்றால் போராட்டம்,கடை அடைப்பு, மரம் வெட்டி சாலைகளில் போடுதல், போக்குவரத்தை பாதிப்படைய செய்தல் என்று போராடி இன்று பல்வேறு சலுகைகளை பெற்று உள்ளது. ஆனால் ஊழல் அரசை அப்புறபடுத்தவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பினால் மக்கள் பயனடைய உதவாமல் கவர்னரிடம் மனு கொடுத்துக்கொண்டும், பேட்டி அழித்து கொண்டும் உள்ளது. ஏன் தீவிரமாக போராடவில்லை. சட்டசபையை கேலி கூத்தாக்கும் கயவர்களிடம் இருந்து தமிழகத்தை காக்க அறிக்கைகள் வெளியிட்டால் போதுமா? தேமுதிக இதை கூட செய்வது இல்லை.மற்ற கட்சிகளை விட நாங்கள் தமிழகத்தில் அக்கறை கொண்டுள்ளோம் என்று வெறும் அறிக்கைகள் தந்தால் போதாது. போராடி கயவர்களை அப்புறபடுத்தவேண்டும். இது தமிழனின் கடமை.
ஒரு மாநிலத்தில், ஒரு முதல் அமைச்சரே சட்டத்தை மதிக்காமல், ஜனநாயக நெறியை மீறி ஊழல் குற்றவாளிக்கு அரசின் கள்ள தொடர்புகளை ஏற்படுத்தி தரும் ஒருவரை, அந்த பதவியில் இருக்க தகுதியானவர் இல்லை என்று தைரியமாக சொன்னால் இவர் சாதிவெறியர்..தகுதியில்லாத ஒருவரை பதவிவிலக சொல்வதற்கும் அவரை சாதிவேறியராய் சித்தெரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
அறிக்கை விட்டால் போதுமா? என்று கேட்கும் நீங்கள் அவர் விடும் அறிக்கைகள் மேல் தான் இன்று தமிழகத்தில் உள்ள எல்லா ஊடகங்களும் மணிகணக்கில் விவாதம் செய்கிறது என்பதையும், பல எழுத்து ஊடகங்கள் அவரின் அறிக்கையை வைத்துதான் அட்டை படமும், கட்டுரைகளும் எழுதுகின்றன என்பதையும், இந்த ஆட்சியின் பல ஊழல்களை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியதும், மறைக்கவும் மறுக்கவும் முடியுமா?
எவனுமே பேசாத நிலையில் தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் இராமதாஸ் மட்டுமே. அவர் பெயரை கேட்டவுடன் உங்களுக்கு அவரின் சாதி மட்டும்தான் ஞாபகம் வருகிறது போலும்.
The bail was given with the condition, she should not intrude the government affairs. Please this should be brought to Supreme court notice.
// எனவே, அவரையும், அவரது அமைச்சரவையையும் பதவி நீக்க மாநில ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். //
————–
சிறிது பொறுமை காக்கவும். அம்மாவிடம் பேசி, அம்மா ஆசிர்வாதத்துடன் ஆளுனர் முடிவுசெய்வார்.
Forward to Justice Kumarasamy who is only the hope of Tamil Nadu.