200 கோடி. இதுதான் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மொத்த லஞ்சத் தொகை 200 கோடி மட்டுமே. ஆனால், இந்த ஊழல் இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்து, ஊடகங்கள், பொதுமக்கள் அனைவரும், ஆ.ராசாவையும் கனிமொழியையும் கழுகு போல கொத்தி, அவர்கள் சிறை செல்லும் வரை யாரும் ஓயவில்லை. இது தவறா என்றால் தவறில்லை. இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கிய ஒரு ஊழல். அதில் ஊடகங்கள் சிறப்பாக செயலாற்றிய காரணத்தால்தான், இந்த அளவுக்காவது நியாயம் நடந்திருக்கிறது.
ஆனால் கேடி சகோதரர்களின் ஊழல் எத்தகையது, எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது என்பது பலருக்கு தெரியாது. அது கனிமொழி ஆ.ராசா செய்த ஊழலை விட மிக மிக தீவிரத்தன்மை உடையது. ஆனால், இத்தனை நாட்களாக, ஏன் வருடங்களாக கேடி சகோதரர்கள் எப்படி தப்பி வந்தார்கள் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். சிபிஐ இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹாவையே, வளைத்து, தங்களுக்கு சாதகமாக கருத்து தெரிவித்து, குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் கேடி சகோதரர்கள் இணைப்பு
மாறன் சகோதரர்களின் 2ஜி ஊழல், ஆ.ராசா செய்ததற்கெல்லாம் முன்னோடி. இன்னும் சொல்லப்போனால், ஆ.ராசா செய்த ஊழலுக்கு வழி காண்பித்ததே தயாநிதி மாறன்தான். ஆனால், மாறன்கள் பிரிந்திருந்த காலகட்டத்தில், மாறன் உலகிலேயே யோக்கியமான நபர் போலவும், ஆ.ராசாதான் அனைத்து ஊழல்களுக்கும் காரணமென்றும் எத்தனை செய்திகள் வெளியிட்டது ?
கேடி சகோதரர்களின் 2ஜி ஊழல் என்ன என்பது குறித்து, தமிழில் விரிவான தரவுகள் இல்லை என்பதால், அதை விரிவாக புரிந்து கொள்ளும் வகையிலேயே இந்தக் கட்டுரை.
தயாநிதி மாறன், தொலைத்தொடர்பு அமைச்சரான சூழல் பிரத்யேகமானது. முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு கனிமொழியை மக்களவைக்கு நிறுத்துவது என்று பேச்சு தொடங்கியது. ஆனால் அப்போது கனிமொழி முழுநேர அரசியலுக்கு வருவதற்கு தயக்கம் காட்டியதால், தயாநிதிமாறனுக்கு அந்த யோகம் அடித்தது. 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பெருமளவில் திமுகவின் எம்.பிக்களின் தயவில் இருந்த காரணத்தால், தான் விரும்பும் அமைச்சரவையை கருணாநிதியால் பெற முடிந்தது. அப்படிப் பெற்று தன் பேரனுக்கு கருணாநிதி அளித்த பரிசுதான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் கையில் கிடைத்தவுடனேயே இது ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதை தயாநிதி புரிந்து கொண்டார். அதுவும் அவர் 2004ல் பதவியேற்ற வேளையில்தான் ஸ்பெக்ட்ரத்துக்கான லைசென்ஸ்கள் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
1999ம் ஆண்டு முதல் ஏர்செல் செல்பேசி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தவர் சிவசங்கரன். எம்ஆர்எல் நிறுவனத்தின் ஒரு கான்ட்ராக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய சிவசங்கரன், ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்புத் துறை, கப்பல் துறை, மின் சக்தி, ஆன்லைன் வணிகம், கல்வி, மென்பொருள் என்று தன் சாம்ராஜ்யத்தை விரிவடையச் செய்து ஒரு கட்டத்தில் 3 பில்லியன் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியானார்.
தொண்ணூறுகளில் இப்படி சிவசங்கரன் தொடங்கிய ஒரு நிறுவனம்தான் ஏர்செல். முதலில் ஏர்செல் சேவைகளை துவக்கியபோது, ஏர் செல்லுக்கு, சென்னை மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு வட்டங்களுக்கு மட்டும்தான் லைசென்ஸ் இருந்தது. பிஜேபி அரசில் அருண் ஷோரி தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனம் மேலும் எட்டு வட்டங்களில் செல்பேசி சேவையை தொடங்குவதற்கு லைசென்ஸ் கேட்டு 5 மார்ச் 2004 அன்று விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரே மாதத்தில் மத்திய பிரதேசம் நீங்கலாக ஏழு வட்டங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. அந்த லைசென்ஸ்கன், டிஷ்நெட் வயர்லெஸ், என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தாலும், இரு நிறுவனங்களின் உரிமையாளர் சிவசங்கரனே. 21 ஏப்ரல் 2004ல் மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு உத்திரப்பிரதேசம் ஆகிய இரு வட்டங்களுக்கு மேலும் லைசென்ஸ் வேண்டி விண்ணப்பித்தார் சிவசங்கரன். இந்த விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த சமயத்தில், தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக 26 மே 2004ல் பொறுப்பேற்கிறார். முதன் முறையாக, ஏர்செல்லுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் அளித்து ஜுன் 2004ல் ஏர்செல் விளக்கம் அளிக்கிறது. 8 ஜுலை 2004ல், தொலைத்தொடர்புத் துறை செயலர், வடக்கு யுபி, மேற்கு யுபி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய வட்டங்களுக்கு ஏர்செல்லுக்கு லைசென்ஸ்கள் வழங்கலாம் என்ற தனது பரிந்துரையை மாறனின் ஒப்புதலுக்கு வைக்கிறார்.
24 ஆகஸ்ட் 2004 அன்று மாறனின் தனிப்பட்ட செயலர், “ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாகவும், அதன் மற்றொரு நிறுவனமான டிஷ்நெட் நிறுவனம் குறித்தும், தமிழகத்தில் அதன் செல்போன் சேவைகள் குறித்தும், இரண்டு நிறுவனங்களின் தொடர்பு குறித்தும் விளக்கங்கள் கேட்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன்” என்று ஒரு குறிப்பு எழுதுகிறார். மாறனின் தனிப்பட்ட செயலரை யார் பணித்திருப்பார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அடுத்த நான்கு மாதங்களுக்கு, ஏர்செல் மற்றும் டிஷ்நெட் நிறுவனத்துக்கு பல்வேறு சந்தேகங்களை கேட்டு பல கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் 1 மார்ச் 2005 அன்று, ஹரியானா, கேரளா, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் வட்டங்களுக்கு மேலும் லைசென்ஸ்கள் கேட்டு, ஏர்செல் நிறுவனம் விண்ணப்பிக்கிறது. ஆனால் இந்தக் கோப்புகளில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், தொலைத் தொடர்புத் துறைக்குள்ளாகவே இந்தக் கோப்புகள் சுற்றித் திரிகின்றன.
இந்த நிலையில் தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக மத்திய அரசால் அதிகரிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில்தான், அக்டோபர் 2005ல் மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் சிவசங்கரனை அணுகி, ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்றுவிடுமாறு கோருகிறது. 14 டிசம்பர் 2005ல் ஒரு வட்டத்துக்கு ஒரு நிறுவனம்தான் செல்பேசி சேவை நடத்த விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு தளர்த்துகிறது. 30 டிசம்பர் 2005 அன்று, ஏர்செல் பங்குகள் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறுகிறது.
இதையடுத்து, ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த ஏர்செல்லின் விண்ணப்பங்கள் வேக வேகமாக பரிசீலிக்கப்படுகின்றன. ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் போக, புதிதாக கர்நாடகா, ராஜஸ்தான், மும்மை, மகராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய வட்டங்களுக்கு ஏர்செல் அளித்த விண்ணப்பங்களின் அடிப்படையில் லைசென்ஸ்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. 14 வட்டங்களுக்கு லைசென்ஸ்களை பெற்று, தமிழ்நாட்டில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏர்செல், இந்திய அளவில் பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது. இந்த லைசென்ஸ்களை பெறுவதற்கு ஏர்செல் அரசுக்கு செலுத்திய தொகை 1399 கோடி ரூபாய். மத்திய கணக்காயர் அறிக்கையின்படி, அரசுக்கு உத்தேசமாக வந்திருக்க வேண்டிய தொகை 22 ஆயிரம் கோடி.
சரி. இதில் என்ன தவறு இருக்கிறது ? லைசென்ஸ் வழங்க தாமதமாகியுள்ளது. இதற்குள் நிறுவனம் கைமாறியுள்ளது. இதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.
இதன் பின்னணியில் நடந்தவற்றை சேர்த்துப் பார்த்தால்தான் முழு உண்மையும் புரியும்.
அனந்தகிருஷ்ணன் ஏர் செல் நிறுவனத்தை வாங்கிய பிறகு அவரது மற்றொரு நிறுவனமான சவுத் ஏசியா என்டெர்டெயின்மென்ட் ஹோல்டிங் மூலமாக கேடி சகோதரர்களின் சன் டிடிஎச் நிறுவனத்தின் பங்குகளை 600 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கேடி சகோதரர்களின் சவுத் ஏசியா எப்எம் என்ற நிறுவனத்தில் மேலும் 100 கோடி முதலீடு செய்திருக்கிறார். இது ஒரு சாதாரண வியாபார பரிவர்த்தனையாக தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. இந்த பங்குகளை வாங்கியபோது சன் டிடிஎச் நிறுவனம் தனது வியாபாரத்தை தொடங்கவேயில்லை. 2007-2008ம் ஆண்டு சன் டிடிஎச் ன் ஆண்டறிக்கையின் படி, அவர்களது ஆண்டு வருமானம் 61.6 கோடி. மொத்த நஷ்டம் 73.27 கோடி. இப்படி நஷ்டத்தில் இயங்கிய சன் டிடிஎச் ன் ஒரு பங்குக்கு அனந்தகிருஷ்ணன் கொடுத்த விலை என்ன தெரியுமா ? ஒரு பங்கு ரூபாய் 79.57 கொடுத்து வாங்கியுள்ளார். அந்த நேரத்தில் பங்குச் சந்தையில் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த டிஷ்நெட் என்ற நிறுவனத்தின் பங்குகள் 40 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரி அதுவும் வேண்டாம். இந்த பங்குகளை அனந்தகிருஷ்ணன் வாங்கும்போது, கலாநிதி மாறனின் பங்குகள் சரியாமல் இருப்பதற்காக அவருக்கு 12.6 கோடி சன் டிடிஎச் ஷேர்கள் வழங்கப்பட்டன. இந்த 12.6 கோடி ஷேர்கள் எந்த விலையில் வழங்கப்பட்டன தெரியுமா ? வெறும் 10 ரூபாய்க்கு. ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சந்தையை கையில் வைத்திருந்த டாடா ஸ்கை நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு எவ்வளவு தெரியுமா ? 2500 கோடி. சன் டிடிஎச் நிறுவனத்தின் சேவைகளைக் கூட தொடங்கியிராத இந்நிறுவனத்தின் அதிகபட்ச மதிப்பீடு 400 கோடி வரை வரலாம். ஆனால், அனந்தகிருஷ்ணன் வாங்கிய பங்குகளின் அடிப்படையில் சன் டிடிஎச்சின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 4039 கோடி
அனந்த கிருஷ்ணன் வாங்கிய விலை, அல்லது கேடி சகோதரர்கள் வாங்கிய விலை இதில் ஏதாவது ஒன்றுதானே சரியான விலையாக இருக்க முடியும் ? பத்து ரூபாய் என்பதுதான் சரியான விலை. அதுதான் அடக்கவிலை. வியாபாரமே தொடங்காமல், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் பங்கு பத்து ரூபாய்க்கு மேல் எப்படி போகும் ? அந்த காரணத்தால்தான் அனந்தகிருஷ்ணன் செய்த முதலீடுகள் அனைத்தும் லஞ்சம் என்று கூறுகிறது சிபிஐ. சன் டிடிஎச்ல் செய்த 600 கோடி முதலீடு, சவுத் ஏசியா எப்எம்ல் செய்த 100 கோடி முதலீடு இவை இரண்டையும் சேர்த்தாலே 700 கோடி வருகிறது. ஆனால் வெறும் 200 கோடிக்காக ஆ.ராசாவும், கனிமொழியும் சிறை சென்றனர் என்பதை மறந்து விடக்கூடாது.
ஏர்செல் சிவசங்கரன் வசம் இருந்தவரை, ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எவ்வளவு இடைஞ்சல்களை தர முடியுமோ அவ்வளவு இடைஞ்சல்களை தந்திருக்கிறார் தயாநிதி மாறன். மாறன் அமைச்சராக ஆன பிறகு, லைசென்ஸ் கேட்ட தனது விண்ணப்பங்கள் வேண்டுமென்றே தாமதிக்கப்படுகின்றன என்று வெளிப்படையாகவே கடிதம் எழுதுகிறார் சிவசங்கரன்.
1 ஜுன் 2005 அன்று சிவகங்கரன் மாறனுக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொலைத்தொடர்புத் துறையோடு தொடர்பில் இருந்து வரும் எங்களுக்கு, சமீபத்திய தொலைத்தொடர்புத் துறையின் நடவடிக்கைகள் வியப்பைத் தருகின்றன. நாங்கள் எப்போதும் இது போல உறைந்து போன ஒரு உணர்வை அடைந்தது கிடையாது. எங்களின் பல கடிதங்களுக்கு தொலைத்தொடர்புத் துறையில் இருந்து எவ்விதமான பதிலும் இல்லாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. உங்களுடைய கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்து வந்த பிறகு, விஷயத்தில் முன்னேற்றமும் இல்லை, தொலைத் தொடர்புத் துறையின் அணுகுமுறையில் மாற்றமும் இல்லை. இந்த சூழலில், தொலைத் தொடர்புத் துறையில் உள்ள யாரோ சில சக்திவாய்ந்தவர்கள், எங்கள் குழுமத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது:”
இந்த கடிதத்தில் சக்தி வாய்ந்தவர்கள் என்று சிவசங்கரன் குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல. தயாநிதி மாறனையே.
லைசென்ஸ்கள் தாமதப்படுத்தப்படுவது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு சாதாரண பெயர் மாற்றம் செய்வதற்குக் கூட சிவசங்கரனின் நிறுவனத்தை தொலைத் தொடர்புத் துறை அனுமதிக்கவில்லை என்பதுதான் வேதனை.
4 ஏப்ரல் 2005 அன்று, சிவசங்கரன் மாறனுக்கு எழுதிய கடிதத்தில் “டிஷ்னெட் டிஎஸ்எல் என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரை டிஷ்னெட் வயர்லெஸ் என்று மாற்றம் செய்துள்ளோம். இந்த மாற்றத்தை தொலைத் தொடர்பு லைசென்ஸில் பதிவு செய்வதற்காக தொலைத் தொடர்புத் துறைக்கு எழுதினோம். ஆனால் எட்டு மாதங்கள் கடந்த பிறகும், இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது போல சாதாரண பெயர்மாற்றங்கள் அனைத்தும் கீழ் நிலையில் உள்ள பணியாளர்களாலேயே செய்து முடிக்கப்படும். ஆனால், இது வரை இது நடக்காமல் இருக்கும் காரணத்தாலேயே அமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு வரும் வகையில் தள்ளப்பட்டுள்ளோம். இந்த தாமதங்களில் ஒரு அசாதாரணமான பின்புலம் இருப்பதாக உணர்கிறோம்” என்று எழுதுகிறார் சிவசங்கரன்.
22 ஆயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டிய ஸ்பெக்ட்ரத்தை வெறும் 1400 கோடிக்கு தயாநிதி மாறன் ஏர் செல் நிறுவனத்துக்கு தாரை வார்த்தது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இதை இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படி தயாநிதி மாறனால் விற்க முடிந்தது ?
23 பிப்ரவரி 2006 அன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட ஒரு அமைச்சரவைக் குழுவை அமைக்கிறார். அந்தக் குழு, ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பான முடிவுகளையும் எடுக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.
அவ்வளவுதான்…. துடித்தெழுகிறார் மாறன். உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். “1 பிப்ரவரி 2006 அன்று உங்களுக்கு நான் எழுதிய கடிதம் நினைவிருக்கும். அந்த கடிதத்தில் பாதுகாப்புத் துறை வசம் இருக்கும் அலைக்கற்றையை மீட்பது தொடர்பாக பேசினோம். அந்த அடிப்படையிலேயே, அமைச்சரவை குழு அமைக்கப்படும் என்று என்னிடம் நீங்கள் தெரிவித்தீர்க்ள. ஆனால், தற்போது, அலைக்கற்றையின் விலையையும் அமைச்சரவைக் குழு நிர்ணயம் செய்யும் என்று அதன் வரண்முறைகள் தெரிவிப்பது வியப்பளிக்கிறது. இது எனது அமைச்சரவை வேலைகளில் குறுக்கிடுவதாக ஆகும். உடனடியாக அந்த அமைச்சரவைக் குழுக்களின் வரண்முறையை மாற்றி அமைக்கச் சொல்லி சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்”
இதுதான் தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய கடிதம். அமைச்சரவைக் குழு அலைக்கற்றை விலைகளை நிர்ணயித்தால், 22 ஆயிரம் கோடி மதிப்பிலான லைசென்ஸ்களை வெறும் 1400 கோடிக்கு வழங்கியிருக்க முடியுமா ?
2ஜி ஊழலின் தந்தை தயாநிதி மாறன் என்று சொன்னால் அது மிகையாகாது. 2ஜி ஊழல் வெளியானபோது, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“ஏர்செல் (டிஷ்நெட்) நிறுவனத்திடம் தொலைத் தொடர்புத் துறை கேட்டுள்ள பல்வேறு சந்தேகங்கள் தேவையற்றவை. லைசென்ஸ் வழங்குவதற்கு சம்பந்தமில்லாதவை. ஏற்கனவே அமலில் இருந்த நடைமுறைகளை மாறன் பல்வேறு சமயங்களில் மீறியுள்ளார்.”
அலைக்கற்றை உரிமங்கள் வழங்கியதற்காக கலைஞர் டிவிக்கு 200 கோடி வழங்கப்பட்டது என்கிறது சிபிஐ குற்றப்பத்திரிக்கை. அலைக்கற்றை உரிமங்களை சலுகை விலையில் சட்டவிரோதமாக வழங்கிய ராசாவுக்கும், கலைஞர் டிவிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் ராசா இதற்காக இன்று வழக்கை எதிர்நோக்கியுள்ளார். ஆனால், தயாநிதிமாறனின் சொந்த அண்ணனின் நிறுவனமே சன் டிடிஎச் மற்றும் சவுத் ஏசியா எப்.எம். அந்த வகையில் பார்க்கப்போனால், ஆ.ராசா மீதான வழக்கை விட, மாறன்களின் மீதான வழக்கு நேரடியானது. அதிக ஆதாரங்கள் கொண்டது. ஆனாலும், ஐந்தே மாதங்களில் ராசா சிறை சென்றார். ஐந்து வருடங்களாக மாறன்களின் வழக்கு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற இளங்கோவடிகளின் வாக்குக்கு ஏற்ப, தற்போது அமலாக்கப் பிரிவு, கேடி சகோதரர்களின் சொத்துக்களை இணைத்து உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமலாக்கப்பிரிவு நடத்திய புலன் விசாரணையில் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாநிதி மாறனுக்கும், கலாநிதி மற்றும் தயாநிதி கட்டுப்பாட்டில் உள்ள சன் டைரக்ட் மற்றும் சவுத் ஏசியா எப்எம் என்ற நிறுவனத்துக்கும் 742.58 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், அந்த லஞ்சப் பணத்தை அவர்கள் மற்ற தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது. மேலும், சன் டைரக்ட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன் ஆகியோர். இவர்கள் இருவரும் 80 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்கள். சவுத் ஏசியா எப்எம் நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை சன் டிவி நெட்வொர்க் மற்றும் ஏஎச் மல்டிசாப்ட் பிரைவேட் லிமிட்டெட் 20 சதவிகிதமும், சவுத் ஏசியா மல்டி மீடியா டெக்னாலஜிஸ் 20 சதவிகிதமும் வைத்துள்ளதாகவும், கலாநிதி மாறன் சன் டிவி நெட்வொர்க்கின் 75 சதவிகிதி பங்குகளை வைத்துள்ளதாகவும், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் கல் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் முறையே 90 மற்றும் 10 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாகவும் புலனாய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கீழ்கண்ட அவர்களின் சொத்துக்களை இணைக்கிறோம்
தயாநிதிமாறன் மற்றும் மற்றவர்களின் வைப்பு நிதி 7.47 கோடிகள்
சன் டைரக்ட் வைப்பு நிதி 31.34 கோடிகள்
சவுத் ஏசியா எப் எம் வைப்பு நிதி 6.19 கோடிகள்
சவுத் ஏசியா எப் எம் பரஸ்பரி நிதி 15.14 கோடிகள்
கலாநிதி மாறனின் வைப்பு நிதி 100 கோடிகள்
கலாநிதி மாறனின் பரஸ்பர நிதி 2.78 கோடி
காவேரி கலாநிதி மாறனின் வைப்பு நிதி 1.30 கோடி
காவேரி கலாநிதி மாறனின் பரஸ்பர நிதி 1.78 கோடி
கல் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் கட்டிடம் 171.55 கோடி
சன் டிவி கட்டிடம் 266 கோடி
சன் டைரெக்ட்டில் கலாநிதி மாறனின் பங்கு 139 கோடி
கடந்த பல வருடங்களாக மத்திய அரசு, மாநில அரசு, சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை என்று அனைவரையும் போக்குக் காட்டிக் கொண்டிருந்த கேடி சகோதரர்களின் அஸ்தமனம் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு சிக்கல்கள் தொடங்கியது முதலாக, கேடி சகோதரர்களின் மனைவிகள், மாதம் இரு முறை திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வந்துள்ளனர். பல்வேறு யாகங்களை நடத்தியுள்ளனர். ஊரை ஏய்த்துப் பிழைத்து ஊரான் சொத்தை கொள்ளையடித்து, சட்டத்தையும் அரசையும் ஏமாற்றி சொத்து சேர்த்துவிட்டு, கடவுளை தரிசித்து லஞ்சம் கொடுத்தால் தப்பித்து விடலாம் என்ற இவர்களின் நம்பிக்கைக்கு அமலாக்கப் பிரிவு ஆப்பு வைத்துள்ளது.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
i wonder, what these people will do with so much of wealth… Life is so uncertain. if tsunamis and 26/11 don’t teach them lessons, wonder who will !!!!!God bless these looters!
he is leaving even after crossing 90 he is cheating death
தினமும் இப்படியான செய்திகளை படிக்கும்போது எரிச்சல்தான் மிஞ்சுகிறது, ஒன்று அரசியல் வியாதிகளின் முறைகேடு ஊழல் திருட்டு, அடுத்தது முக்கிய செய்திகள் என்று பார்த்தால் ஆட்சியை பிடிப்பதற்கான அரசியல், கூட்டணி அமைப்பதற்கான “நீயா நானா” சூழச்சி விளையாட்டுக்கள் இல்லையென்றால் தேவலோக தீர்க்க தருசிகளான சினிமா நடிகர்களுக்கு விருது கொடுப்பது இதுதான் இந்தியாவின் அன்றாட செய்திகள்,
கடந்த வருட தமிழ்நாட்டு முக்கிய செய்தி ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு தீர்ப்பு சம்பந்தமான விசாரணைகள் அதனை பின்னணியாக கொண்ட அடிமைகளின் போராட்டம் மண்சோறு நேர்த்திக்கடன் கோவில்களில் கூட்டு பிரார்த்தனை.
அதற்கு முன்னர் கிழவன் ரஜினிகாந்துக்கு கிட்னி றபிள் ஆஸ்பத்திரியில் அனுமதி ரசிகர்கள் அலகு குத்தி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை..
அதற்கு முதல் கருணாநிதியின் வைப்பாட்டியின் மகள் கனிமொழியின் 2ஜீ ஸ்பெக்ரம் ஊழல் கொள்ளை, ராசா கனிமொழி கள்ளக்காதலா ஸ்பெக்ரம் பணத்தை எண்ணிக்கொண்டு கருணாநிதி கூட்டிக்கொடுத்து குப்புற கிடந்தாரா.
இன்றைய செய்தி கேடி கலா, கில்லாடி தயா, பல்லாயிரம் கோடி மோசடி.
இடையிடையே ராகுலை காணவில்லை, மோடியின் கோவணம் ஏலம், நிலக்கரியை தின்று ஏப்பம்விட்ட மண்மோகன், பிரணாப் முக்கிய நிகழ்ச்சியாக சினிமா நடிகர்களுக்கு விருது வழங்குகிறார்.
இடையிடையே நகைச்சுவை உணர்வை கூட்ட கருணாவின் காலைநேர காழ்ப்புணர்ச்சி அறிக்கைகள், தமிழசை சவுந்தரராஜனின் சந்தக் கவிதை அரங்கம், விஜயகாந்தின் விழுந்துவிட மாட்டேன் நிகழ்ச்சி, இளங்கோவனின் கோவணமா ஜட்டியா பட்டி மன்றம், குஷ்புவின் கோமதியின் காதலன் யார் கும்மிப்பாட்டு, அமித் ஷாவின் ஆயிரம் கோடி உறுப்பினர் சேர்ப்பு, கற்பழிப்பு பற்றிய அகிலேஷ் யாதவின் கண்டு பிடிப்புக்கள். திருமாவின் சிலம்பாட்டம், சிதைந்துபோன சீமானின் சிலப்பதிகாரம், கண்ணீர் விட்ட வைகோவின் வரலாற்று நிகழ்வுகள் இவைதான் முக்கிய் செய்திகள்.
ஒரு ஓரத்தே இந்தியாவை தூக்கி நிறுத்தும் விஜய் ரிவி கோபிதாத நடத்தும் உயர் குடி வகுப்பாருக்கான நிகழ்ச்சிகள். சுப்பர் சின்கரில் ஏமாற்றப்பட்ட ஜஷிக்கா, விஜய், அஜித், இவை தவிர வேறு எதையும் காணவில்லை.
ஒருவேளை உணவுக்காக போராடும் ஏழைகள், குடிநீர் கிடைக்காமல் சாக்கடை நீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள், விவசாயிகளின் வில்லங்கம், மின்சாரம் இல்லாமல் உலக வல்லரசாகிக்கொண்டிருக்கும் இந்தியாவின் அதிசயம், தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் அரசியல் பின்னணியில் கருணைக்கொலைக்கு ஜனாதிபதி நடிகர் திலகம் பிரணாப் முகர்ஜியிடம் மனுப்போட்டு காத்திருக்கும் கைதிகள்.
என்ன ஒரு விந்தை நிறைந்த நாடு பாரத நாடு.
Great
These guys should be hanged asap. In India there are 40% of people are having just a meal per day. Shankar do as much as the good work you’re doing.
yes he is imbalance in economy in chennai he should be hanged
ஆனந்த கிருஷ்ணன் ஆஸ்ரோ டீவி தொடங்கியதிலிருந்து இந்திய நிகழ்ச்சிகளில் சன் டீவி நிகழ்ச்சிகள்தான் பிரதானமாக இன்று வரை இருந்து வருகின்றன. மற்றபடி இதனால் அவருடைய company revenueவில் 5% கூட கொடுக்க முடியாது. தாங்கள் மேலே சொன்னவற்றில்; இருவரும் (ஆனந்த கிருஷ்ணன்/கலாநிதி) பரஸ்பரம் உதவிக் கொண்டார்களா அல்லது ஆனந்த கிருஷ்ணனை மிரட்டி பணிய வைத்தார்களா, duped into investing என்பார்களே அது போல் நடந்ததா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். மலேசியாவிலேயே இரண்டாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனுக்கு இவர்களால் பயன் அடைந்து பிழைப்பு நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அதைத் தாங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
This is the problem in India. Mark zucherbug can make billions, Steve jobs can billions, bill gates makes billions, we call them heros, role models, but one of our own race, identifies the people’s needs and using their brilliance and technological curiosity to build a media mogul inspite of Indian import restrictions. We call them corrupts !!!
People like savukku will write anything to gain users attention. People who commented here against Marans do not have any idea what is going on
Karuna is corrupt, no doubt about it, but marans? I don’t think so. Their father, murasoli maran might have made some crores in illegal way, but making BIllions not at all possible.
Come on guys, there are hundred of central ministers out there. Every one is corrupt but none of them are bilionairs. Think about it don’t just believe people like savukku.
Are u stupid or what to defend these rascals?
The people u have mentioned here ( Mark Zuckerbug, Steve Jobs & Bill Gates ), have not amassed wealth in an illegal manner, have not hid behind a political party to pursue their ‘brilliance and technological curiosity’ to amass wealth. In their country it is not possible to amass wealth illegally. It is pity that u justify KDs’ illegal ways in amassing this much wealth which is impossible without a political protection. The entire world knows this thing, which u r reluctant to understand.
Mark Zuckerbug stole idea of facebook from fellow reseachers but steve jobs and bill gates made legally both apple and windows are used all over the world but can u compare the products and amount they made
Awesome bro,none of the other sources explain it in a detailed way.. Hats off to you !!! I’m getting confident on Indian Judicial system nowadays but still long way to go.
I have a gut feeling its nothing but an hogwash. They would escape unscathed if these businessmen are willing to pay what the government demands.
Just observe the pattern
1) Dayanithi Marans BSNL connections – he was on the brink of arrest along with his brother although they tried their best to cover up the scam. At the same point an arm twisting happened through which they lost out the Spice Jet to Ajay Singh (BJP) through for a lesser price….Once it got done the BSNL case has gone down the gutter again it would never come up
2) Three weeks back when KD’s were facing arrest suddenly the CBI court deferred the case to August, delaying the arrest. Ambanis plan is to take over the entire media in the country and SUN TV was their next target. Just like when the inital Spice jet sale got proposed KD’s were adamant. They had denied, their TV was not for sale before a week or two.
Now suddenly the ED had taken over their small share of wealth. A warning to them. If they sell their TV to Ambani then normal life is restored, they would get away.else they would get arrested.
I can see a pattern here. KD’s are corrupt and their corruption has evidence, but BJP govt are not interested to punish them, they are using it as a stick to buy their illegal property out of them. and let them free. As long as the KD are willing to pay what the central govt demands they would be safe.
I cannot see them getting arrested or brought to justice.
#TrueThat
Very well written article by Savukku & a brilliant PoV by you
While Iam no expert like the person who has written the article or like you who has a very logical PoV, there is something very interesting i felt around the Spice Jet fiasco.
In about 2010 stakes were picked up, there was apprx 1100 crs totally spent on the SJ buys.
SJ posted profits in 2011, Loss in 2012, NPNL* in 2013 & Loss in 2014 (FYs); (NPNL* – No Profit No Loss)
In the mean time, around 2012-13 period, a total of 875 Crs were paid by SJ to some Sun Group companies as advertising expenses
Early this year, a major stake on SJ were sold out
Doing a basic math on the above numbers, it struck me that there could have been a NPNL* OR a marginal profit scenario for Mr Maran in the way how this entire buy out and sell out has happened
As a layman, I do feel it is not a right thing to take personal benefit in the name of politics. However, as a wannabe entrepreneur iam confused i can appreciate them for the way in which they have done their business moves in the past 2 decades
sun tv investment 55 lakhs in 1993
now after 22 years in 2015 valued at 2.7 billion us$ = 17000Cr INR any news about how it was made savukku
உள்ள போவுது உறுதி
அம்மையார் உள்ள போகும்
அது அடத்தால் இரண்டும் திரவிடம் திருடர்களும் உள்ள போவா வாழ்த்துக்கள் சங்கர்
உனது வாய்க்கு சக்கரை
Real Hard-Work Team. You are awesome. Indian court is not giving higher degree punishment for any criminal cases, Why? please write a separate article , if possible.
these are just for entertainment of common people they can read about scams but cant see any one punishing for the scam because they have money power to neutralize
600cr is not the amount kd brothers bought 12.6cr shares for 126cr at 10rs each share
actual cost of that 12.6 crore share is 12.6×79.57 =1000cr
so he got share worth 1000cr for 126cr almost 874cr less this is the actual profit for KD bros because of ananthakrishnan investment in sun dth
600cr anthankrishnan amout is investment we should consider this 874cr as commision
Corruption is the culmination of our human compromise against others interests, where the need for self before others is calibrated to the need for self even at the expense of others. The brothers become motivated by the demise of others as a means of gaining their own success and fulfillment such that they even invested the demise of DMK party members and the common man’s trust for them to rule over them as a means of staying successful. They ended up existing solely for the purpose of preserving their own narrow business interests even if it is to the detriment of a greater cause. The corrupt brothers have proved right the findings of research into corruption that corrupt people may tip and bribe others in order to receive special services in the future like what Anandhakrishnan has been alleged of.
Human beings are innately greedy. Some people can contain the urge for self-enrichment and instant gratification; others like these Kedi brothers cannot. They constantly felt the need to accumulate wealth and took any opportunity to do so as a ruling party in the center and in the state. When it comes to corrupt public officials who were in collusion with them, since there is a prospect for self-gratification, they grabbed it also with both hands since they were not monitored closely. There was a complete lack of monitoring and accountability in the DMK dominated governments, which opened up the potential for corruption. Corruption is often committed to supplement an inadequate income like for in this instance the DTH business. The dichotomy is money-for-greed with these crocodiles versus money-for-need among the corrupt officials.
Mathematicians employing their game theory and their complicated mathematical calculations have mostly led them all to the same simple conclusions that psychologists and economists have reached regarding corruption: Punishing bribery after the fact is not a good way to stop it from happening in the future, and it will only stop when the risk outweighs the potential reward. Why is it now that corrupting the system is acceptable, whereas our ancestors gave their lives to fight against the same evil nothing more than 50 years ago?
We have seen the same educated few like the abroad educated Kedi brothers (privileged by circumstance at a time when education was a rarity) endorse misguided policies; undermine the sheer fabric of the professions that put them into power and our society in its totality in the process without a blink. Education, for one, which is at the heart of any society’s sustainable development, is a classic example of the blindsiding effects of corruption. People get into positions of influence and as opposed to using those positions to support a greater cause; they use them to preserve their access to this limited line of power through more corruption. The actions rendered give way to severing consequences for both the beneficiary and victim in the long term once they are caught by the long hand of law. Prison time is awaiting these corrupted brothers!!!!!!
திருப்பதி மோசடி, ஊழல், துரோகம் போன்றவற்றின் தாய். இந்த மலை ஊழல் செய்பவர்கள், துரோகம் செய்பவர்கள். ஊரை அடித்து உலையில் போட்டு பணம் பார்க்கும் மனிதர்கள் நிறைந்த, இவர்களால் வணங்கப்படும் தெய்வம். இத்தகைய மோசடிகள் செய்வது எப்படி, இதிலிருந்து கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி தப்பிப்பது எப்படி என்று கோவிந்தனை வணங்கினால் தெரியும் போல் உள்ளது.
டில்லியில் புகைய ஆரம்பித்த 2 G ஊழலை தமிழ் நாட்டிற்கு தினகரன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ராஜாவுக்கு தொந்தரவு கொடுக்கவும் மற்றும் தான் சம்பாதிக்க முடிய வில்லையே என்ற ஆத்திரமே.அது இப்படி திரும்பும் என்பது தெரிந்து இருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்து இருப்பார்கள்..
Good detail cover story sun Tv has showed bathroom bedroom to opposite person.but didn’t captured this news
super thala (shankar).. FB cover page la yaaroda pic set pandreengalo avunga kali thinpathu uruthi..
இது அழிவின் ஆரம்பம்…
Need to give you a story about Global Hospital. I had a direct connect with you in your earlier FB accounts but now i am unable to reach. Please reach out to me.
Great Work ..Shankar Ji .