முன்னாள் வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும், வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட 44 நாட்கள் கழித்து நடந்திருக்கிறது.
இந்தத் தற்கொலை நடந்த உடனே இது ஒரு சாதாரண தற்கொலை போலத்தான் தோற்றம் ஏற்படுத்தி மூடி மறைக்கப்பட இருந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் இந்த விவகாரத்தில் முதல் அஸ்திரத்தை தொடுத்தவர். அதன் பிறகே இந்த விவகாரம் சூடு பிடித்து மற்ற எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தை கையில் எடுத்தன. அதன் பிறகு அவசர அவசரமாக இந்த வழக்கை சிபி.சிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பின்னணி குறித்து பின்னர் பார்ப்போம்.
முதலில் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது என்ன என்பதை பார்த்து விடுவோம்.
நெல்லை வேளாண் பொறியியல் துறைக்கு 7 டிரைவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அரசுத் துறைகளில் டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்றவர்களை நியமனம் செய்வதற்கு விதிமுறைகள் இருக்கிறது. வேலை வாய்ப்பகத்தில் இருந்து மூப்பு பட்டியல் பெறப்பட வேண்டும். அவர்கள் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் பட்டியலை அனுப்புவார்கள். உதாரணமாக மூன்று காலியிடங்கள் என்றால் ஒன்பது பேரின் பட்டியலை அனுப்புவார்கள். அந்த பட்டியலின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தி, இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த தேர்ச்சியில் முறைகேடுகள் நடந்தால், தேர்ச்சியடையாதவர்கள், நீதிமன்றத்தை அணுகவும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும், தேர்ச்சிகள் வெளிப்படையாக நடக்கும் வகையில் விதிமுறைகள் உள்ளன.
இந்த வகையில்தான் செயற்பொறியாளர் என்ற வகையில் முத்துக்குமாரசாமி ஓட்டுநர்களின் தேர்ச்சியை இறுதி செய்திருக்கிறார். செயற்பொறியாளர் என்ற வகையில் அவர்தான் நியமன அதிகாரி. இந்த நிலையில்தான், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவர் கட்சியினரும், தனியாக ஒரு பட்டியலை கொடுத்து, அந்தப் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்கும்படி வற்புறுத்தியிருக்கின்றனர். ஒரு ஓட்டுநர் பதவிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 7 டிரைவர் பதவிக்கும் ரூ.14 லட்சம் வசூலித்துள்ளனர். பணம் வசூலித்த 7 பேரை வேலைக்கு தேர்வு செய்ய குறிப்பிட்ட அரசியல் புள்ளிகள், முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஓட்டுனர் பதவியும் நிரந்தரமான பதவி கிடையாது. மாதம் 9 ஆயிரம் வீதம், இரண்டாண்டு ஒப்பந்த பதவி. ஒப்பந்தப் பதவியாக இருந்தாலும் இரண்டு லட்சம் கொடுத்தால்தான் பதவி கிடைக்கும் என்ற நிலை. இந்த ஒப்பந்தப் பதவிக்கு 2 லட்சம் தருவதற்கு மக்கள் தயாராக இருப்பதற்கான காரணம், என்றாவது ஒரு நாள், அந்தப் பதவி நிரந்தரமாகி விடும் என்பதே.
முத்துக்குமாரசாமியோ, விதிப்படி நியமனங்களை செய்து முடித்து விட்டார். பணம் கொடுத்தும் வேலை கிடைக்காதவர்கள் சும்மா இருப்பார்களா ? பணம் பெற்ற அரசியல்வாதிகளை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கின்றனர். அவர்களோ, நீ நேர்மையாக நியமனம் செய்ததால் 14 லட்ச ரூபாய் நஷ்டம் ஆகி விட்டது, ஆகையால் அந்த 14 லட்ச ரூபாயை நீதான் தர வேண்டும் என்று முத்துக்குமாரசாமிக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளனர்.
இது போல ஒரு கொடுமையை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? வேலை வாங்கித் தருகிறேன் என்று பணம் வாங்கியவன் பணத்தை திருப்பித் தருவதுதானே முறை ? ஆனால், நேர்மையாக நியமனம் செய்த அதிகாரியை பணத்தை திருப்பித் தரச் சொல்லும் கொடுமை எங்காவது நடக்குமா ? ஆனால் தமிழகத்தில் நடந்தது. தன்னிடம் பணம் இல்லை என்று முத்துக்குமாரசாமி எவ்வளவோ மன்றாடியும், பணத்தை தந்தே ஆக வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். ஒரு சாதாரணமான அரசு அதிகாரி, 21 லட்சம் பணத்துக்கு எங்கே போவார் ? ஆனால் முத்துக்குமாரசாமியோ, தனது மனைவியின் நகைகளை விற்றும், ஜிபிஎப் கணக்கில் கடன் எடுத்தும் 6 லட்ச ரூபாயை கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அதிமுக அப்பரசண்டிகள், கொடுத்தால் முழுமையான தொகையைத்தான் கொடுக்க வேண்டும் என்று கடுமையாக மிரட்டியுள்ளனர்.
முத்துக்குமாரசாமிக்கு மிரட்டல்கள் எந்த வகையில் வந்ததென்றால், அவரை பணியில் இருந்து ஓய்வு பெற விட மாட்டோம். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடுவோம். பென்சன் கிடைக்காமல் செய்வோம் என்ற ரீதியில் மிரட்டல்கள் தொடர்ந்துள்ளன. அரசுப் பணியில் இருப்பவர்கள் அனைவருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் சிக்கினால் என்ன ஆகும் என்பது நன்றாகவே தெரியும். விசாரணையில் ஆதாரங்கள் கிடைக்கிறதோ இல்லையோ…. விசாரணை மட்டும் முடியவே முடியாது. வருடக்கணக்கில் தொடரும். இப்படி விசாரணையில்சிக்கி, .ஓய்வூதியப் பலன்களை இழந்து, பல வருடங்களாக அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். மேலும், இல்லாத ஊழல் புகாரை ஒரு அரசு ஊழியர் மீது சுமத்தி, அவர் வாழ்க்கையை நாசம் செய்வது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒன்றும் புதிதல்ல.
25 அல்லது 30 ஆண்டுகாலம் பணியாற்றிய பின்னர், ஓய்வூதியம் கிடைக்காது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரும் என்ற நிலையில் பலவீனமான மனதை உடைய முத்துக்குமாரசாமி போன்றோர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்ததில் வியப்பொன்றும் இல்லை. முத்துக்குமாரசாமி டிசம்பர் 2015ல் ஓய்வு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனசாட்சி உடைய ஒரு நேர்மையான அதிகாரி இப்படியொரு முடிவை எடுத்தது வேதனையான நிகழ்வே. முத்துக்குமாரசாமி, தனக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் அனைத்தையும் பதிவு செய்து ஊடகங்களுக்கு கொடுத்திருந்தால், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவர் உதவியாளர்களும் இந்நேரம் தற்கொலை செய்திருப்பார்கள். ஆனால் முத்துக்குமாரசாமி அவ்வாறு செய்ய தவறி விட்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்னதாகவே முத்துக்குமாரசாமி, மிகுந்த மன உளைச்சலோடும், ஊசலாட்டத்தோடும் காணப்பட்டிருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொலைபேசி வந்தால் கூட, சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு வெளியே எழுந்து சென்று பேசி விட்டுத்தான் வருவார். அவ்வாறு பேசி விட்டு வருகையில் அவர் முகம் மிகுந்த வாட்டமாகவும் கவலையாகவும் இருக்கும் என்கின்றனர் அவர் குடும்பத்தினர். இவர் இப்படி ஒரு மாதிரியாக இருப்பதைக் கண்டு கவலைப்பட்ட அவர் மனைவி, சென்னையில் உள்ள அவரது நண்பரிடம் இவரது நிலை குறித்து கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 16ம் தேதி சென்னையில் அலுவல் ரீதியாக ஒரு கூட்டத்துக்கு வந்த முத்துக்குமாரசாமியை அவரது நண்பர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போதுதான் முத்துக்குமாரசாமி, தான் சந்தித்து வரும் மிரட்டல்கள் அனைத்தையும் அவரிடம் கூறியிருக்கிறார். ஓட்டுனர்கள் நியமனம் அனைத்தும், மாவட்ட ஆட்சியர், மற்றும் இதர அதிகாரிகள் கொண்ட ஒரு கமிட்டியால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் என்னமோ இந்த நியமனங்களை நானே செய்தது போல என்னை மிரட்டுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து பேசினேன். ஆனால் அவரும் உதவிசெய்வதாக இல்லை. இதன் பிறகு, நெல்லையில் உள்ள அமைச்சரின் உதவியாளர் ஒருவர் அவர் வீட்டுக்கு என்னை அழைத்து, அனைத்து நியமன ஆணைகளையும் பறித்துக் கொண்டார். ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் தலா 2 லட்சத்தை வாங்கிக் கொடுங்கள். அல்லது நாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களை நியமியுங்கள் என்று கடுமையாக மிரட்டினார்கள். என்னால் என்ன செய்வது என்றே தெரிவில்லை என்று புலம்பியிருக்கிறார். அதற்கு முத்துக்குமாரசாமியின் நண்பர், கவலைப்படாதீர்கள். நான் அடுத்த வாரம் நெல்லை வருகிறேன். அங்கே வந்து பேசிக்கொள்வோம். அது வரை தைரியமாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அடுத்த வாரத்துக்குள் தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார் முத்துக்குமாரசாமி. முத்துக்குமாரசாமிக்கு இந்த ஓட்டுனர் நியமனம் மட்டும் பிரச்சினை இல்லை. வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான, விவசாயிகளுக்கு சேர வேண்டிய நெல்லையைச் சேர்ந்த இரண்டு டிராக்டர்கள் மற்றும் சேரன்மாதேவியைச் சேர்ந்த இரண்டு டிராக்டர்கள் ஆகிய நான்கு ட்ராக்டர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வயல்களில் இயங்கிக் கொண்டிருந்தது. இதனால் நெல்லை மாவட்ட விவசாயிகள், முத்துக்குமாராசாமி, இந்த ட்ராக்டர்களை அவர் விற்று விட்டார் என்று கருதி அவரிடம் இதற்காக தனியாக பிரச்சினை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2001ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த ஞானதேசிகன் , அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான நான்கைந்து ட்ராக்டர்களை தனது சொந்த நிலத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து இடது சாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தியும் ஒரு பிரேயோசனமும் இல்லை. அந்த டிராக்டர்கள் இன்னும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வயலில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துக்குமாரசாமியின் மரணத்தை, சர்ச்சையாக்கி, ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததில், காங்கிரஸ் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே பெரும் பங்கு சேரும். அவர்தான் இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலில் குரல் கொடுத்தவர். அவர் குரல் கொடுத்த பிறகே இந்த விவகாரம் சூடு பிடித்தது.
இந்த விவகாரம் சூடுபிடித்த நிலையில், தமிழக அரசு இந்த வழக்கின் விசாரணையை சிபி.சிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. சிபி.சிஐடி போலீசார் என்றதும், அப்படியே நேர்மையின் சிகரங்கள் என்று நினைத்து விடாதீர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வியாசர்பாடியில் நடந்த ரயில் விபத்து குறித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராமஜெயம் கொலை வழக்கு குறித்தும் விசாரிக்கும் சிபி.சிஐடி இது வரை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பதே இவர்களின் லட்சணம். அவசர அவசரமாக சிபி.சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதே, இந்த விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைக்க மட்டுமே.
உண்மைகளை மூடி மறைப்பதில் ராமானுஜம் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கினார் என்பதற்கு இந்து நாளேட்டில் வந்த ஒரு செய்தியே உதாரணம்.
ஒரு அடுக்குமாடி வீடு வாங்குவதற்காக முத்துக்குமாரசாமி ஒரு கட்டிட நிறுவனத்திடம் முன்பணம் செலுத்தியிருந்ததாகவும், அது தொடர்பாக வருமான வரித்துறை அவரை விசாரணைக்கு அழைத்திருந்ததாகவும், அவ்வாறு அழைத்த நாளன்று முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த இந்து செய்தி கூறுகிறது இணைப்பு
அதாவது இந்த செய்தியின் பொருள் என்னவென்றால், முத்துக்குமாரசாமியை யாருமே மிரட்டவில்லை. வருமானவரித்துறையின் அழைப்புக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதே. வங்கியிலே கடன் வாங்கி வீட்டுக்கு முன்பணம் செலுத்தும் ஒரு நபர் எதற்காக வருமான வரித்துறையின் சம்மனைக் கண்டு அஞ்ச வேண்டும்.
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, இந்து செய்தி எவ்வளவு விஷமத்தனமானது என்பதை விளக்குகிறது. “வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்காக தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் ரூ13.50 லட்சம் முன்பணம் கொடுத்திருந்ததாகவும், அது குறித்த விசாரணைக்காக பிப்ரவரி 20 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்ததாகவும், விசாரணை நடைபெறவிருந்த நாளில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தமிழக காவல்துறை அவதூறு செய்தி பரப்பி வருகிறது.
அதாவது முத்துக்குமாரசாமியிடம் வருமான வரித்துறை அழைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு பணம் இருந்தது, வருமானவரித் துறையின் விசாரணைக்கு பயந்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமிழக காவல்துறையின் நோக்கம். உண்மையில், முத்துக்குமாரசாமியிடம் அவர் செய்த முதலீடுகள் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை சம்மன் அனுப்பவில்லை. அவர் வீடு வாங்குவதற்காக முன்பணம் கொடுத்திருந்த நிறுவனம் ரூ.2.30 கோடியை முன்பணமாக வசூலித்திருந்ததாக வருமானவரி ஆய்வில் தெரியவந்திருந்தது.
இதுகுறித்து முன்பணம் கொடுத்த 47 பேரிடமும் விசாரிப்பதற்காக அவர்கள் அனைவரையும் வருமான வரித்துறை அழைத்திருந்தது. முத்துக்குமாரசாமி உள்ளிட்ட அனைவரும் சாட்சிகளாகத் தான் அழைக்கப் பட்டிருந்தார்களே தவிர குற்றஞ்சாற்றப்பட்டவர்களாக அழைக்கப்படவில்லை. வருமானவரி துறைக்கு கணக்கு காட்ட முடியாமல் தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த காவல்துறை முயல்வது வெட்கக்கேடானது.
அதுமட்டுமின்றி, பிப்ரவரி மாதத்தின் முதல் 20 நாட்களில் செல்பேசி மூலம் 600 அழைப்புகளை செய்திருப்பதையும் பூதாகரமாக சித்தரிக்க காவல்துறை முயன்றிருக்கிறது. தற்கொலை செய்து கொள் வதற்கு முன்பாக அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் அவருடன் பேசியியுள்ளனர்; அவரும் இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக பலரை தொடர்பு கொண்டிருக்கிறார். முத்துக்குமாரசாமியின் தொலைபேசி அழைப்புக்களில் சர்ச்சை எதுவும் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்டே அதை காவல்துறை பெரிய செய்தியாக்கியிருப்பது நேர்மையான செயல் அல்ல.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு செய்தியை தமிழக காவல்துறை திட்டமிட்டு பரப்பியிருக்கிறது. ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நேர்மையான அதிகாரி மீது அவதூறு சேற்றை அள்ளி காவல்துறை பூசியிருக்கிறது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகளை அவசரமாக மறுத்த காவல்துறை, பாதிக்கப்பட்டவர் குறித்து அவதூறு செய்தி பரப்புவதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணரலாம்.
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கருதப்பட்ட தமிழக காவல்துறையின் பெருமை இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது வேதனையளிக்கிறது. வழக்கையே அடியோடு திசை திருப்ப முயலும் தமிழக காவல்துறை, இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் யாருக்கும் இல்லை. எனவே, அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். முத்துக்குமாரசாமி குறித்து அவதூறு தகவல்களை ஊடகங்களுக்கு பரப்பிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்”
காவல்துறை அளித்த பொய்ச் செய்தி என்று ராமதாஸ் குறிப்பிடுவது வேறு யாரையும் கிடையாது. மக்கள் டிஜிபியாக இன்று காவல்துறை தலைமையகத்தில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கும் ராமானுஜத்தையே ராமதாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
காவல்துறை தலைமை இயக்குநர் என்று அசோக் குமார் என்ற அதிகாரி இருந்தாலும், ஜெயலலிதா மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகனின் அடியாள் போல செயல்பட்டுக் கொண்டிருப்பது ராமானுஜமே. ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கழித்து தனது 64வது வயதில், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையையும் ராமானுஜம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். காவல்துறையில் விபரமறிந்தவர்கள் அனைவரும் கூறுவது என்னவென்றால், சசிகலாவை விட, ஜெயலலிதாவிடம் ராமானுஜம் அதிக செல்வாக்கோடு இருப்பதாக கூறுகிறார்கள்.
ராணிப்பேட்டையில் நடந்த தோல் தொழிற்சாலை விபத்தை சிபி.சிஐடிக்கு மாற்றியது, முத்துக்குமாரசாமி தற்கொலையை சிபி.சிஐடிக்கு மாற்றியது உட்பட முக்கியமான அனைத்து முடிவுகளையும் எடுப்பது ராமானுஜமே. ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் முதல், சட்டம் ஒழுங்கு குறித்த பெரும்பாலான முடிவுகள் அனைத்தையும் ராமானுஜமே எடுத்து வருகிறார். ஒரு சில அதிகாரிகளுக்கு பணம் பலவீனமாக இருக்கும். ஒரு சில அதிகாரிகளுக்கு பெண் பலவீனமாக இருக்கும். ராமானுஜம் போன்ற அதிகாரிகளுக்கு பதவியே பலவீனம். 64 வயதில், இன்னமும் பணியில் இருப்பது போன்ற அதிகாரித்தை காவல்துறை மீது செலுத்திக் கொண்டு, முக்கிய முடிவுகளை எடுத்துக் கொண்டு இருக்கும் ராமானுஜத்தை விட, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எவ்வளவோ மேல்.
முத்துக்குமாரசாமி வழக்கு நீதிமன்றத்தின் மூலமாக எங்கே சிபிஐ வசம் சென்று விடப்போகிறதோ என்ற அச்சத்தின் காரணமாகவே ராமானுஜம் அவசர அவசரமாக சிபி.சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதிமுக அரசில் எங்கும் லஞ்சம், எதற்கும் லஞ்சம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறு தொழில் நடத்துபவர்கள் முதல் பெருந்தொழில் நடத்துபவர்கள் வரை, அமைச்சர்களுக்கு லஞ்சம் தராமல் ஒரு குண்டுமணியைக் கூட நகர்த்த முடியாது என்பது வெளிப்படையான ரகசியம்.
இப்படி வசூல் செய்யப்படும் லஞ்சத் தொகையை அந்தந்த அமைச்சரே எடுத்துக் கொள்வார் என்பது அதிமுக அரசில் நடக்காத காரியம். தலைமைச் செயலக வட்டாரத் தகவல்களின்படி, ஒவ்வொரு அமைச்சரும் துறைக்கு ஏற்றார்ப்போல வாரத்துக்கு 5 கோடி முதல் 50 கோடி வரை தந்தே ஆக வேண்டும். நத்தம் விஸ்வநாதன் போன்றோர்க்கு வாரம் தந்தாக வேண்டிய கப்பத்தொகை 50 கோடி.
இந்த கப்பத்தொகையை சரி வர கட்டத் தவறுபவர்கள் தங்கள் அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கொடுக்கும் கப்பத் தொகையில் 30 சதவிகிதம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு.
இப்படிப்பட்ட சூழலில்தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்த வசூலை பார்க்க வேண்டும். முத்துக்குமாரசாமி பொறியாளரை அவர் மிரட்டி வசூல் செய்ய முயற்சித்த தொகை அவருக்கு மட்டுமானதல்ல. அவரது பங்கு 30 சதவிகிதம் மட்டுமே. மீதம் உள்ள 70 சதவிகிதம் யாருக்கு என்பதை சிபிஐ கண்டுபிடித்து விடக்கூடாதே என்பதற்காகத்தான் சிபிஐ விசாரணையை தடுக்க தமிழக அரசு இப்படிப்பட்ட தகிடுதத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழக சிபி.சிஐடி, ஐபிஎல் ஊழலை எப்படி விசாரித்தது, எப்படி குற்றவாளிகளை காப்பாற்றியது, அவர்களை காப்பாற்றுவதற்காகவே அன்பு என்ற அதிகாரி சிபி சிஐடிக்கு எப்படி அழைத்து வரப்பட்டார் என்பது குறித்து சவுக்கில் ஏற்கனவே விரிவாக எழுதப்பட்டுள்ளது.
முத்துக்குமாரசாமியின் மனைவி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகனின் உறவினர் என்பது மற்றொரு வியப்பான விஷயம். இவரின் மரணம் கேள்விப்பட்டதும் ஞானதேசிகன் செய்தது என்ன தெரியுமா ? முத்துக்குமாரசாமியின் மனைவியையும் மகனையும் அழைத்து இந்த விஷயம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடமோ, வேறு யாரிடமோ எந்த விஷயமும் பேசக்கூடாது என்பதே. இந்த விவகாரம் நடந்து முடிந்த ஒரு சில நாட்களில் முத்துக்குமாரசாமியின் வீட்டுக்குச் சென்ற பத்திரிக்கையாளர்களிடம், அவரின் மகன் சீத்தாராமன் பேசுவதற்கு மிகவும் பயந்திருக்கிறார். அவர்கள் வீட்டுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வரலாம் என்று திட்டமிட்டு அவர்கள் அனுமதி கேட்டபோதும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ஞானதேசிகனின் மிரட்டலாலே.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதும், தானாக முன்வந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை என்ன தெரியுமா ? முத்துக்குமாராசாமி குடும்ப பிரச்சினைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதே. ஆனால் அவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை அவர் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இந்த தற்கொலை நடந்த பிறகு, தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைமைப் பொறியாளர் செந்தில், முத்துக்குமாரசாமியின் மகன்களை அழைத்து, அரசு நிறுவனமான எல்காட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக ஒரு கடிதம் எழுதித்தருமாறும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தை மூடி மறைக்க, அரசும் காவல்துறையும் எப்படி முயற்சிகளை எடுக்கின்றன என்பது அப்பட்டமாக தெரிகிறது. எதற்காக இந்த முயற்சி ?
சிபிஐ தனது விசாரணையை தொடங்கி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் யாருக்காக பணம் வசூல் செய்தாய் என்று கேட்டால் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும். அந்த விசாரணை நேராக போயஸ் தோட்டத்தில்தான் சென்று நிற்கும் என்பது ராமானுஜத்துக்கும், முதல்வரின் மூன்றாவது செயலாளர் வெங்கட்ரமணனுக்கும் நன்கு தெரியும்.
காவல்துறையை தற்போது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் இந்த வெங்கட்ரமணனும், ராமானுஜமுமே. அரசு அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டிய ஒரு நிர்வாகம், முதியோர் இல்லத்தில் இருக்க வேண்டிய வெங்கட்ரமணனாலும், ராமானுஜத்தாலும் நடத்தப்பட்டு வருவது வேதனையிலும் வேதனை. இது மட்டுமல்ல. காவல்துறை அதிகாரிகளுக்கு வர வேண்டிய பதவி உயர்வு ஆண்டுக்கணக்கில் தாமதிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெறுவதற்கு முன்பாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுவோம் என்ற கனவில் இருக்கும் அத்தனை அதிகாரிகளின் கனவிலும் மண் அள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இப்படி இத்தனை பேர் சாபத்துக்கும் ஆளாகி, வெங்கட்ரமணன், ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் போன்றோர் எதற்காக இந்தப் பதவியில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மனித அறிவுக்கு புலப்படாதது. துளியாவது சூடு சொரணை இருக்கும் ஒரு சாதாரண மனிதன் இந்நேரம் இப்பதவியை தூக்கி எரிந்து விட்டு சென்றிருப்பான். ஆனால் மனிதர்களா இவர்கள் ?
முத்துக்குமாரசாமியின் இந்தக் கொலையை மூடி மறைத்து, ஜெயலலிதாவையும் மன்னார்குடி மாபியாவையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, ராமானுஜமும், சிபி.சிஐடியும் முழு வேகத்தோடு வேலை செய்கின்றனர். கடந்த வாரம் சிபி.சிஐடிக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட, முத்துக்குமாரசாமியின் நெருங்கிய நண்பர், சிபி.சிஐடி அதிகாரிகளால் கடுமையாக மிரட்டப்பட்டு, யாரோடும் பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார் என்பதே இதற்கு சான்று.
தற்போது நடந்துள்ள இந்த கைது நடவடிக்கைகளும் வெறும் கண் துடைப்பே. சிபி.சிஐடி விசாரணை தொடர்ந்தால், இந்த விவகாரத்தில் அடங்கியுள்ள உண்மை, மிக மிக ஆழமாக குழிதோண்டி புதைக்கப்படும். இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளியான ஜெயலலிதாவோ, சசிகலாவோ, எப்படியாவது காப்பாற்றப்படுவார்கள் என்பதே உண்மை.
இந்த கொலை விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மை வெளி வரும். ஆனால், அப்படி நேராமல் பார்த்துக் கொள்வதற்காகத்தானே மக்கள் டிஜிபி ராமானுஜம் இருக்கிறார்.
பேய் அரசாண்டால்
பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்று பாரதியார் சரியாகவே சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயத்துக்காக முதல்வர் வீடு வரை சென்று போராட்டம் நடத்தி, சிறை சென்ற ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்கும், இவ்விஷயத்தை தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தில் வைத்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், மருத்துவர் ராமதாஸ், மற்றும் முக.ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் எல்லா கட்சிகளிலும் இது மாதிரி ஆட்கள் உள்ளார்கள். எப்படியாவது அரசாங்க வேலையே வேண்டும் என்று எவ்வளவு கேட்டாலும் லஞ்சம் கொடுக்கும் மக்களை பற்றி என்ன சொல்வது
Atleast in AIADMK rule the minister got arrested and took for all posts in party which is way way better then previous dmk regime. hope savukku doesn’t forget the atrocities of the previous dmk ministers like nkkp raja, veerapandi arumugam etc. comparing this to agri krishnamoorthy is nothing. we all know how this dmk ministers went hands free after all their mis chiefs ans remain in the party with all power. atleast here the person is sacked and put into prosecution. savukku now days gives too much sombu to dmk. funny it went to appreciate stalin as well. come on savkku we are not fools. no matter how many articles you write aiadmk is far better then dmk in handling party and party peoples. so stop your filthy journalism
yes you are right.. Savvukku is not neutral now a days.
whatsoever Saukku says, AIADMK is far better than DMK. we all known savukku is anti-hindu, now it cannot tolerate atlease government has Hindu beliefs.
எனக்கென்ன, என்று வாழும் முட்டாள் மக்களை எப்படித்தான் விழிப்படையச் செய்ய ?
தமிழ் மக்கள் தெருவில் அல்லது சாலையில் இறங்கி போராடதவரை இத்தகைய அட்டுழியங்கள் தொடர்ந்து நடக்கவே செய்யும். இந்த சோத்துஅமுக்கி சோம்பேறி சொரனையற்ற மக்களை வைத்து நாம் இறுதி வரை அக்கிரமக்காரர்களை மட்டுமே ஆட்சியாளர்களாக பெறுவோம் !!
இப்போதான் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு ஒரு மாதம் சிறை வாசத்திற்கு பின் பிணை பெற்று அதன் பின் பெங்களூர் கோர்ட்டில் அப்பீல் செய்து விசாரணை முடிவுக்காக கட்சித் தலைவியே காத்திருக்கும் நிலையில் எவ்வளவு தைரியமாக இந்த காரியத்தை செய்த குங்கும பொட்டுவைத்து கொண்டு ஊரை ஏமாற்றும், கொலை மற்றும் கொள்ளைக்காரனை கொலை குற்றவாளியாகதான் கருத வேண்டும்.
Venkatraman ramanujam. Hmm. Not surprised. These kinds are primary responsibility for corruption in India. They do it scientifically. No 1 criminals come from agraharams.
kanna,
first you have to know Venkatraman ramanujam is not from Agraharams, He is from Naydu community. May be kamma or kapu. All culprits belongs to all communities. you hate brahmins. many tamils hate brahmins .They all gone to periyar a kannda speaking guy. Now losing all rights kaveri, periyar dam, chittor Dt all gone man. There is no unity among tamils. That’s why other state people downrodded Tamils. ha haT
@kanna
other state people simply showing Brahmins like periyar as target to tamils and cheating tamils who are emotional people easily. They dominated Tamilnadu go to coimbatore, salem, and chenai maximum industries owned by other language people. haha
நீங்க பா.ம.க. நிருவனர் ராமதாசுக்கு அதிகமா சொம்படிக்கிரமாதிரி தெரியிதே? மத்தபடி கட்டுறைகள் அனைத்தும் உந்மை.
பாமக இந்த விடயத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் பூதாகரமான அனைத்து ஊழல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் மிக அரிய காரியத்தை செம்மையாக செய்து வருகிறது. ஆனால் பாமக மீது உங்களைப் போன்ற சிலர் இன்னும் காட்டும் கோபம் அர்த்தமற்றது.
It is to be noted that the Chief engineer who had been arrested is close relative of Mr. EVKS Elangovan. i. Elangovan’s cousin’s daughter is married to Senthil’s second son.
வருத்தமும் வெறுப்பும் ஏற்படுத்திய பதிவு .. நம்மை சுற்றி கிருஷ்ணமுர்த்தி போன்ற பல பினம்தின்னிகள் இருக்கிறார்கள்.
இவ்வழக்கில் மேலும் பலர் சிறை செல்ல கூடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
Factural errors corrected. Thanks for pointing out.
Atrocious.
ஒன்றும் புரியவேயில்லை…………… இப்போதான் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு ஒரு மாதங்கள் சிறைப்பறவையாக களி தின்றுவிட்டு “படுபட்சியாக” பெங்களூர் கோர்ட்டில் அப்பீல் செய்து விசாரணை முடிவுக்காக ஜெயலலிதா காத்திருக்கின்றார், தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பால்குட பூஜை, தீச்சட்டி, அன்னதானம் ஆராத்தனைகள் அரச கட்டளையுடன் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன,
ஒரு படிப்பினையிலிருந்து ஒரு பாடத்தை கற்று திருந்திக்கொள்ளுவதுதான் மனித யதார்த்தம் அப்படியிருக்கும்போது மீண்டும் ஜெயலலிதா ஊழலுக்கு திரும்பியிருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை.
இதிலிருந்து புரிந்துகொள்ளக்கிடைப்பது என்னவென்றால் ஏதோ ஒரு வியாதி இவர்களை பற்றிப்பிடித்துக்கொண்டுள்ளது அது அரசியல் வியாதி என்று நாம் நம்பினாலும் அதைவிட கொடூரமான வைரஸ் இவர்களை தாக்கியிருக்கிறது என்பதே உண்மை.
முத்துக்குமாரசாமியின் மனைவி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகனின் உறவினர் என்பது மற்றொரு வியப்பான விஷயம். இவரின் மரணம் கேள்விப்பட்டதும் முத்துக்குமாரசாமி (here -ஞானதேசிகனின் should come)— செய்தது என்ன தெரியுமா ?
2001ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த முத்துக்குமாரசாமி –Here name should come அக்ரி கிருஷ்ணமூர்த்தி), அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான நான்கைந்து ட்ராக்டர்களை தனது சொந்த நிலத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
Please correct these factual (name) errors
முத்துக்குமாரசாமியின் மனைவி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகனின் உறவினர் என்பது மற்றொரு வியப்பான விஷயம். இவரின் மரணம் கேள்விப்பட்டதும் முத்துக்குமாரசாமி செய்தது என்ன தெரியுமா ? முத்துக்குமாரசாமியின் மனைவியையும் மகனையும் அழைத்து இந்த விஷயம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடமோ, வேறு யாரிடமோ எந்த விஷயமும் பேசக்கூடாது என்பதே.
Mr. Ilangovan?? see this .. in your ruling party game?? are you eating food?
கர்நாடக மாநிலத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
நேர்மையாக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி கடந்த மாதம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம் அடைந்தார்.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வந்தது.
போராட்டம் வலுத்ததால், திடீரென சிபிஐ விசாரணைக்கு ஒப்புக் கொண்டது.
ஆனால், கர்நாடக மாநில அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக் வேண்டும் என்று வைத்துள்ள நிபந்தனையை ஏற்க சிபிஐ தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒரு வழக்கை இந்த காலத்துக்குள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட எந்த சட்டத்திலும் இடமில்லை என்று சிபிஐ பதிலளித்துள்ளது.
ilangokavan edukkum munbu Dinakaran mattum iruandha udaneye agri miithu sandekam therivithu periya seithi nellai editionil pottathu… thangal katturaiyil pala idangalil sor pizhai ullathu….
Please correct the names/wordings.1.2001ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த “முத்துக்குமாரசாமி”2.இவரின் மரணம் கேள்விப்பட்டதும்” முத்துக்குமாரசாமி “செய்தது என்ன தெரியுமா 3.அவர்களை காப்பாற்றுவதற்காகவே “அன்பு என்ற அதிகாரி சிபி சிஐடிக்கு எப்படி அழைத்து வரப்பட்டார் “
Please correct this too:”2001ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த ஞானதேசிகன்”
மிக உண்மையான பதிவு என்ன வேதனை ஒரு முத்து குமர சாமியின் சாவுக்கு பின் இந்த முகத்திரை கிழிந்துள்ளது எப்படியோ சவுக்கு போன்ற சில மீடியா மூலம் இது வெளிவநதுளது.