எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தில் டெண்டர் வழங்கப்பட்டது தொடர்பாக சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ராமசுப்ரமணியம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி ராமசுப்ரமணியம். இந்த தீர்ப்பு எந்த வகையில் தவறான தீர்ப்பு என்பதை ஆராயவே இந்தக் கட்டுரை.
தமிழக மின் வாரியம், எண்ணூரில் 1320 மெகா வாட் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக 6 மே 2013ல் ஒரு டெண்டர் வெளியிட்டது. அந்த டெண்டரில் மொத்தம் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இது தொடர்பாக கலந்தாலோசனை கூட்டங்கள் நடந்த பிறகு, நான்கு நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களின் டெண்டர்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பெல் நிறுவனம் மற்றும் சீன நிறுவனத்தின் டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டன.
20 நவம்பர் 2013 அன்று நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, டெண்டரில் சில திருத்தங்களை செய்து தருமாறு சீன நிறுவனத்திடம் மின் வாரியம் கோருகிறது, அதன்படியே திருத்தங்களும் செய்து தரப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் காரணமாக, நடுவே நான்கு மாதங்களுக்கு எவ்விதமான முன்னேற்றமும் இல்லை.
இந்த திட்டமும், பங்குபெறும் நிறுவனம் கடனாக மூலதனம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கூடிய திட்டம்.
இதில் சீன நிறுவனம் கடனாக வழங்கும் தொகை, மொத்த செலவு என்ன என்பதை பார்த்து விடுவோம்.
சீன நிறுவனம் மொத்த திட்டத்துக்கு அளிக்கும் மூலதனம் 85 சதவிகிதம். அதாவது 7826.175 கோடி. பெல் நிறுவனம் அளிக்கும் தொகை 75 சதவிகிதிம். அதாவது 5841 கோடி. சீன நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழக மின் வாரியம் செய்ய வேண்டிய மூலதனம் 1381.089 கோடி. பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மின் வாரியம் செய்ய வேண்டிய மூலதனம் 1947 கோடி. இந்த வகையில் மட்டும் மின் வாரியத்துக்கு ஏற்படும் சேமிப்பு 565.911 கோடி.
சீன நிறுவனம் கடனாக அளிக்கும் வட்டி விகிதம் 6.20 சதவிகிதம். பெல் நிறுவனம் கடனாக அளிக்கும் வட்டி விகிதம் 12.15 சதவிகிதம். இந்த வட்டி விகிதத்தில் மட்டும் மின் வாரியத்துக்கு ஏற்படும் சேமிப்பு சதவிகிதம் 5.95.
திட்டத்தின் இறுதியில் சீன நிறுவனம் திட்டத்தை நிறைவேற்றினால் ஆகும் செலவு 17182.115 கோடி. பெல் நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றினால் ஆகும் செலவு 18744.627 கோடி. இந்த வகையில் மின் வாரியத்துக்கு ஏற்படும் மொத்த சேமிப்பு 1562.512 கோடி. ஒரு மொகாவாட்டுக்கு சீன நிறுவனம் செய்யும் செலவு 7.327 கோடி. பெல் நிறுவனம் செய்யும் செலவு 7.993 கோடி. இந்த வகையில் மின் வாரியத்துக்கு ஏற்படும் மொத்த சேமிப்பு ஒரு மெகாவாட்டுக்கு 0.666 கோடி.
இதுதான் அடிப்படை. இனி இந்த தீர்ப்பை ஆராய்வோம்.
இந்த டெண்டர் 27 செப்டம்பர் 2014 அன்று பெல் நிறுவனத்துக்கு தமிழக மின் வாரியத்தால் வழங்கப்படுகிறது. சீன நிறுவனம் இது தொடர்பாக முதலில் கூறும் குறை என்னவென்றால், ஒரு நிறுவனத்தை தள்ளுபடி செய்கையில் எப்படி முழுமையான காரணங்களைக் கூற வேண்டுமோ, அதே போல ஒரு நிறுவனத்தை ஏற்றுக் கொள்வதற்கும் முழுமையான காரணங்களைக் கூற வேண்டும் என்று வெளிப்படையான டெண்டர்கள் சட்டம் 1998 கூறுகிறது. அது இந்த விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்பதே இவர்கள் எழுப்பும் முதல் குற்றச்சாட்டு.
டெண்டர் சட்டத்தின் விதி 6 பின்வருமாறு கூறுகிறது.
6.(1) On receipt of intimation relating to details of notice of invitation of Tender, from the Tender Inviting Authority, information relating to acceptance of tender together with a comparative analysis and reasons for acceptance of tenders from the Tender Accepting Authority, the State or as the case may be, the District Tender Bulletin Officer shall, publish the same in the State or District Tender Bulletin, as the case may be within such time as may be prescribed
இந்த விதி பின்பற்றப்படாமல் போனதற்கு நீதிபதி ராமசுப்ரமணியம் கீழ்கண்டவாறு நியாயம் கற்பிக்கிறார்.
Once it is found that the statutory requirements of Sections 6 come into play only after the event, namely the award of the tender, there is no scope for holding that the non-compliance of Section 6 would vitiate even the choice of L1.
ஒரு டெண்டர் ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பிறகு, எதற்காக அந்த காரணத்தைச் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார் நீதிபதி.
10 (6) “If the Tender Accepting Authority proposes to accept the tender as per the provisions of this section, he shall pass orders accepting the tender together with reasons for such acceptance.”
இந்த விதியின்படி, எந்த நிறுவனத்தின் டெண்டர் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது விதி 10 (6). இந்த விதியைக் குறிப்பிடும் நீதிபதி, இந்த விதியில் “shall” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதால் இது கட்டாயம் இல்லை என்று கூறுகிறார்.
இதில் அடுத்த விதியான 10 (7) கீழ்கண்டவாறு கூறுகிறது.
“The Tender Accepting Authority shall intimate the information regarding the name and address of the tenderer whose tender has been accepted along with the reasons for rejection of other tenders to the appropriate Tender Bulletin Officers.”
யாருடைய டெண்டர் நிராகரிக்கப்பட்டதோ, அதற்கான காரணங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்று விதி 10 (7) கூறுகிறது. இந்த விதியை தமிழக மின் வாரியம் பின்பற்றியுள்ளதால், இதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறுகிறார் நீதிபதி. ஆனால் இந்த விதியிலும் “shall” என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிபதி வசதியாக மறந்து விட்டார்.
இரண்டாவதாக சீன நிறுவனம் தொடுத்த குற்றச்சாட்டு, குறைந்த வட்டி விகிதத்தில் தங்கள் நிறுவனம் கடன் கொடுப்பதால், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழக மின் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் லாபம் ஏற்படும். முதலில் 7.2 சதவிகிதம் வட்டி என்று அறிவித்த சீன நிறுவனம், பின்னாளில் அந்த வட்டி விகிதத்தை 6.2 சதவிகிதமாக குறைக்க முன்வந்தது. ஆனால் பெல் நிறுவனம் முதலில் 12.25 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 12.15 சதவிகிதமாக மட்டுமே குறைக்க முன்வந்துள்ளது. இந்த வட்டி குறைப்பால் தமிழக மின் வாரியத்துக்கு 1300 கோடி லாபம் வரும் என்று சீன நிறுவனம் கூறியது.
இது குறித்து தனது தீர்ப்பில் நீதிபதி ராமசுப்ரமணியம் இவ்வாறு கூறுகிறார்.
“55. In any case, there appears to have been some kind of suspicion with regard to the loading of management fees, commitment fees and legal fees. Therefore, if the reduction in the rate of interest was not considered by the first respondent to be very advantageous in terms of overall financial implications, the Court cannot sit in judgment over the same. The jurisdiction of this Court to test the correctness of the decision to award tender to a party, does not extend to the arithmetic and financial jugglery. Therefore, I am unable to accept the first part of the second contention that revolves around the benefit that would have accrued to the first respondent in the form of reduced rate of interest, if the tender had been awarded to the petitioner. ”
இந்த வழக்கில் மேலாண்மை கட்டணம், மற்றும் இதர கட்டணங்கள் குறித்து சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக தமிழக மின் வாரியம், வட்டி விகிதக் குறைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அது குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது. இந்நீதிமன்றத்தின் அதிகாரம், ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது சரியா இல்லையா என்பதை மட்டுமே பார்க்க முடியும். இந்நீதிமன்றம் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால், வட்டி விகிதம் குறைவாக இருந்ததால் தமிழக மின் வாரியத்துக்கு ஏற்பட்ட லாபம் குறித்த வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் ஏற்கனவே நஷ்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழக மின் வாரியத்துக்கு கிடைக்க இருந்த 1300 கோடி ரூபாய் லாபத்தை நான் கணக்கில் கொள்ள மாட்டேன் என்று தீர்ப்பளிப்பதா ஒரு நீதிபதிக்கு அழகு ? மின் வாரியம் 72 ஆயிரம் கோடி கடனில் தள்ளாடிக் கொண்டிருப்பது நாள்தோறும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கிறதே ? இது நீதிபதிக்கு தெரியாதா ? ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு 1300 கோடி ரூபாயை சேமித்து தருவது ஒரு நீதிபதியின் கடமை இல்லாவிட்டால் வேறு என்ன நீதிமன்றத்தின் கடமை ?
மேலும், தமிழக மின் வாரியம் சொன்ன ஒரு பச்சைப் பொய்யை நாசூக்காக கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் நீதிபதி. இதே வழக்கு ஜுன் மாதம் நடந்த போது, டெண்டரை பரிசீலிக்கும் பணி முடிவடையவில்லை என்று மின் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையும் தனது தீர்ப்பில் இவ்வாறு பதிவு செய்கிறார் நீதிபதி.
However, the above submissions of the learned Advocate General are repudiated by Mr.N.L.Rajah, learned counsel for the petitioner on the short ground that if the evaluation process had not been over in June 2014 as the first respondent submitted before this Court in the previous writ petition, the first respondent ought to have given the very same opportunity as was given to the third respondent in relation to the reduction of the rate of interest. The failure of the first respondent to treat the petitioner on par with the third respondent in the matter of post bid negotiations with regard to the rate of interest, struck at the root of fairness and equality of treatment.
இந்த டெண்டர்கள் பரிசீலனையில் இருக்கையில் பெல் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வட்டி விகிதத்தை 12.25 சதவிகிதிதத்தில் இருந்து 12.15 சதவிகிதமாக குறைக்க மின் வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. இது நடந்த சமயத்தில் சீன நிறுவனம் தங்கள் கடிதம் மூலமாக, வட்டி விகிதத்தை 7.2 சதவிகிதத்தில் இருந்து 6.2 சதவிகிதமாக குறைக்க முன்வந்தது. சீன நிறுவனம் தங்கள் வட்டி விகிதத்தை குறைக்க முன் வந்த நாள் 4 ஜூன் 2014. பெல் நிறுவனம் வட்டி விகிதத்தை குறைக்க முன் வந்த நாள் 27 ஜுன் 2014. ஆனால் நீதியரசர் ராமசுப்ரமணியனோ, 30 மே 2014 அன்று இந்த டெண்டர்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நிறுவனம், டெண்டர்களின் மீது இறுதி முடிவு எடுத்து விட்டதால் சீன நிறுவனம் வட்டி விகிதத்தை குறைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கிறார். இவரது கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், பெல் நிறுவனம் வட்டி விகிதத்தை குறைக்க அளித்த கடிதமும் ஜுன் மாதம் அல்லவா ? பெல் நிறுவனத்தின் கடிதத்தை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
ஜுன் மாதம் நடந்த ரிட் மனு விசாரணையிலும், ஜுலை மாதம் நடந்த ரிட் அப்பீல் விசாரணையிலும், மின் வாரியம் இந்த டெண்டர் பரிசீலனையில் இருக்கிறது என்று நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. இது குறித்து நீதிபதி தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
- It is true that in the previous writ petition, the first respondent took a stand that the process of evaluation was still on. But it is seen from the current files that the Consultant appointed by TANGEDCO had already submitted a report on 30-5-2014. As per this report titled “Price Evaluation Report”, the third respondent was identified as L1. From the sequence of events that have taken place, which I have culled out from the files produced before me and which I have dealt with in the last part of this judgment, it appears that the petitioner started making representations only after the submission of the said evaluation report. I do not know if this happened by sheer co-incidence. I do not wish to think that the offer of the petitioner to reduce the rate of interest was made after the petitioner gained an inside information about the submission of the evaluation report. Nevertheless, the offer was subsequent to the consultant’s report. Therefore, the first respondent was right in not considering the reduction in the rate of interest, which the banker of the petitioner was also willing to offer. In so far as the third respondent is concerned, their offer to reduce the rate of interest did not actually tilt the balance in their favour, since there was already a report of the consultant in their favour.
ஜுலை மாதம் டெண்டர் பரிசீலனையில் இருக்கிறது என்று மின் வாரியமே நீதிமன்றத்தின் முன் தெரிவித்துள்ளது. ஆனால் அதை வசதியாக கண்டுகொள்ளாமல், மின் வாரியமே கவலைப்படாத மே மாதத்தின் ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு, டெண்டரின் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதி முடிவெடுக்கிறார். ஆய்வறிக்கை மே மாதம் முடிவு செய்யப்பட்டால், ஜுன் மாதம் டெண்டர் பரிசீலனையில் உள்ளது என்று எதற்காக மின் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் ?
நீதிபதியின் இரட்டை நிலைபாடு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?
அடுத்ததாக சீன நிறுவனம் தொடுத்த குற்றச்சாட்டு, பெல் நிறுவனம் எடுத்து நடத்திய பெரும்பாலான ப்ராஜெக்டுகளில் தாமதம் என்றும், மத்திய கணக்காயர் அறிக்கை இது குறித்து தமிழக மின் வாரியத்தை கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது என்பதே.
முதலில் மத்திய கணக்காயர் அறிக்கை மின் வாரியம் மற்றும் பெல் நிறுவனம் மீது என்ன குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது என்பதை பார்ப்போம்.
மின் உற்பத்தியில் 2007-2008ம் ஆண்டில் 15,075.21 கோடியாக இருந்த முதலீடு 2012-2013ல் 76,788.47 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2007-2008ல் 76.50 சதவிகிதமாக இருந்து 2012-2013ல் 92.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் (2007-2012) தமிழ்நாடு 7808 மெகாவாட் கூடுதலாக தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இவற்றுள் தமிழக மின் வாரியத்தின் உற்பத்தித் திறனை 3270 மெகா வாட்களாக அதிகரிக்கவும், அவற்றுள் 2500 மெகா வாட்கள் நான்கு அனல் மின் நிலையங்களில் இருந்து பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது. வட சென்னை அனல் மின் நிலையம் (1320 மெகா வாட்) மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையம் (660 மெகா வாட்) திட்டங்கள் ஏற்கனவே, 24 முதல் 31 மாதங்கள் தாமதத்துக்கு உள்ளாகியுள்ளன. மீதமுள்ள திட்டங்கள் ஒன்று தொடங்கப்படவில்லை, அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மார்ச் 2012 அன்று உள்ளபடி, தமிழக மின் வாரியம் வெறும் 112 மெகா வாட்களை மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்ய முடிந்தது.
பெல் நிறுவனத்தோடு செய்திருந்த ஒப்பந்தத்தின்படி, பெல் நிறுவனம் தமிழக மின் வாரியத்துக்கு தர வேண்டிய கூடுதல் வட்டியான 56.68 கோடிகளை தமிழக மின் வாரியம் வசூலிக்கத் தவறி விட்டது.
திட்டங்களில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, தமிழக மின் வாரியம், மின் நிதிக்கழகம் (Power Finance Corporation) மற்றும் ஊரக மின் கழகம் (Rural Electrification Corporation) ஆகியவற்றிடம் இருந்து பெற்றிருக்க வேண்டிய வட்டிச் சலுகையான 36.14 கோடியை பெறத் தவறி விட்டது.
வட சென்னை முதல் யூனிட் அனல் மின் நிலையத் திட்டத்தை பெல் நிறுவனத்துக்கு வழங்கியதில், தேசிய மின் திட்ட விதிகளை பின்பற்றத் தவறி விட்டது தமிழக மின் வாரியம்.
சர்வதேச டெண்டர்களை விடாமல், நேரடியாக பெல் நிறுவனத்துக்கு வடசென்னை யூனிட் 2ன் பணிகளை அளித்ததால், மத்திய அரசின் பெரும் மின் திட்டங்களுக்கான சலுகைகளை தமிழக மின் வாரியம் பெறத் தவறி விட்டது.
திட்டங்களை செயல்படுத்துவதில் ஏராளமான தாமதம் இருந்தும், அதற்கான பொறுப்பை கான்ட்ராக்டர்களிடம் இருந்து தாமதத்துக்கான கட்டணத்தை வசூலிக்க தமிழக மின் வாரியம் தவறி விட்டது.
1800 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களில் பெரும் தாமதம் ஏற்பட்டதால், தமிழக மின் வாரியம் 22,557 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை இழந்து, அதன் காரணமாக, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டது.
மேட்டூர் அனல் மின் நிலைய திட்டத்தில் தாமதத்துக்காக 10 சதவிகிதம் தண்டக் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு மாதத்துக்கு 107 கோடி ரூபாய் வீதத்தில் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இதே போல வடசென்னை அனல் மின் நிலையத் திட்டத்துக்கு வாரத்துக்கு 0.5 சதவிகிதமும், 40 முதல் 43 மாதத்துக்கு மேல் தாமதமானால் 0.75 சதகிகிதமும், 44 முதல் 45 மாதத்துக்கு ஒரு சதவிகிதமும், 45 மாதங்களுக்கு மேல் போனால் உச்சவரம்பின்றி தண்டக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், இந்த இரண்டு திட்டங்களுக்கும், எவ்வித தண்டக் கட்டணத்தையும் வசூலிக்காமல், திட்டத்துக்கான காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்றது மின் வாரியம். மேட்டூர் அனல் மின் நிலையத்தை செயல்படுத்திய பிஜிஆர் என்ற நிறுவனத்திடம் இருந்து மின் வாரியம் 7418.07 கோடியை தண்டக் கட்டணமாக வசூல் செய்திருக்க வேண்டும். இந்த தாமதத்துக்கான பொறுப்பை இரண்டு நிறுவனங்கள் மீதும் சுமத்த மின் வாரியம் தவறியது. இந்த தண்டக் கட்டணத்தை வசூல் செய்வதற்கு பதிலாக மொத்த கட்டணத்தில் 82 சதவிகிதத்தை மின் வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
டிசம்பர் 2013ல் அரசு அனுப்பிய பதிலில், தண்டக் கட்டணம் வசூல் செய்யும் உரிமையோடுதான் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 2013 வரை, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்தும் தண்டக்கட்டணத்தை வசூலிக்க மின் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாமதங்கள்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாய்லர் நிறுவ 5 மாதம் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாய்லர் தூக்கி நிறுவும் இயந்திரம் நிறுவ 9 மாதம் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் இயந்திரம் நிறுவ 32 மாதங்கள் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் டர்பைன் கியர் நிறுவ 30 மாதங்கள் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாய்லர் லைட் அப் யூனிட் நிறுவ 24 மாதங்கள் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் வேலைகளை தொடங்குவதில் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தீ தடுப்பு வேலைகள் டிசம்பர் 2013 அன்று உள்ளபடி தொடங்கப்படவேயில்லை.
வடசென்னை அனல் மின் நிலையம் யூனிட் 2ல், ஜெனரேட்டர் இயந்திரம் நிறுவ 14 மாதங்கள் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் யூனிட் 2ல், டர்பைன் கியர் நிறுவ 16 மாதங்கள் தாமதம்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் யூனிட் 2ல், பாய்லர் லைட் அப் யூனிட் நிறுவ 11 மாதங்கள் தாமதம்.
இது போல மேலும் பல்வேறு தாமதங்களை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த தாமதங்களால், தமிழக மின் வாரியம், தனியாரிடமிருந்து கூடுதல் விலையில் மின்சாரம் வாங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
சிஏஜி அறிக்கை என்பது யாரோ சில ஆடிட்டர்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அல்ல. மாறாக, தமிழக மின் வாரிய அதிகாரிகள் அனைவரும் கையெழுத்திட்ட பிறகே இறுதி செய்யப்படும் ஒரு அறிக்கை. 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல்களை வெளிக்கொண்டு வந்தது, சிஏஜியின் அறிக்கைகள் என்பதை மறந்து விடக்கூடாது.
பெல் நிறுவனம் குறித்து சிஏஜி அறிக்கையை சீன நிறுவனம் சுட்டிக்காட்டியதற்கு நீதிபதி ராமசுப்ரமணியம் அவரது தீர்ப்பில் என்ன கூறுகிறார் தெரியுமா ?
“the report of the Comptroller and Auditor General is always subject to parliamentary debates and it is for the Public Accounts Committee either to accept the Ministry’s objection to the report or to reject the report itself. It is no doubt true that the Supreme Court highlighted the respect to be shown to the report. But, the Court held that the comments offered on the report also assumed significance. Therefore, I do not think that the petitioner can pitch the claim on the basis of the report. Hence the second ground of attack is also liable to be rejected.”
மத்திய கணக்காயர் அறிக்கை என்பது பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் பொது கணக்குக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் ஆட்சேபத்துக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளது உண்மைதான். இருப்பினும், அந்த அறிக்கையின் மீது அளிக்கப்படும் கருத்துக்களும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆகையால், மனுதாரர் (சீன நிறுவனம்) இந்த அறிக்கையை காரணம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால் இந்த காரணத்தை நிராகரிக்கிறேன்.
மேலும், பெல் நிறுவனம் பல்வேறு திட்டங்களை தாமதப்படுத்துவது குறித்து நீதிபதி என்ன கூறுகிறார் என்று பாருங்கள்.
- I have carefully considered the rival submissions. Just as the completion of a project on time need not necessarily be an indicator of efficiency, every delay in the completion of a project need not also indicate inefficiency. At any rate, Indian Courts cannot buy such an argument, as it will be self-destructive.
ஒரு திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பது எப்படி திறமைக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியாதோ, அதே போல ஒரு திட்டத்தை தாமதமாக செயல்படுத்துவதை திறமையின்மைக்கான அளவுகோலாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. நீதிமன்றங்கள் இது போன்ற வாதங்களை ஏற்றுக் கொண்டால், அது சுய அழிவில் முடியும்.
- It is not the case of the petitioner that every project undertaken by the third respondent in India and abroad has always been completed after a delay. If the statistics furnished by the third respondent are more or less correct, the third respondent has put up at least 50% of the power projects that have come up in the country. While dealing with a staggering volume of projects, it is not always possible to stick to a time schedule. If this is true of the judiciary, it should be true of any other industry also, except perhaps, the olympics.
பெல் நிறுவனம் இது வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுத்த அத்தனை திட்டங்களும் தாமதம் என்று சீன நிறுவனம் கூறவில்லை. பெல் நிறுவனம் கூறியதை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மின் திட்டங்களை பெல் நிறுவனமே செய்திருக்கிறது. இப்படி அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது இயல்பே. ஒலிம்பிக்ஸ் விளையாட்டைத் தவிர்த்து நீதித்துறையிலேயே இவ்வளவு தாமதம் இருக்கிறதென்றால், மற்ற துறைகளில் தாமதம் ஏற்படுவது இயல்பே.
அடுத்ததாக சீன நிறுவனம் எழுப்பிய மற்றொரு குற்றச்சாட்டு, யார் குறைவான விலைப்புள்ளிகளை அளித்தது என்பதில், தவறான கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது. யாருடைய விலைப்புள்ளிகள் குறைவானது என்பதை கணக்கீடு செய்வதற்கு பெரிய அணு விஞ்ஞானி தேவையில்லை. ஒரு எக்செல் கோப்பில் எளிதாக இதை கண்டுபிடித்து விடலாம். ஆனால், அதற்குள் செல்ல விரும்பாத நீதிபதி இவ்வாறு தெரிவிக்கிறார்.
- In other words, if the case on hand is examined by experts in the field of finance and banking, they may probably agree with the petitioner. But, what lies within the realm of experts, is an area where Courts, like angels, fear to tread. A court, in matters of this nature, is concerned only with the legal soundness and not the financial soundness of the ultimate decision. If I have understood the defence of the first respondent correctly, it appears that they fear hidden costs in the proposal of the petitioner. Today, the fear of hidden costs cannot be easily dispelled, especially in the Insurance and Banking sectors. Therefore, once it is shown that the first respondent has carried out an analysis of the financial implication of the debt structure quoted by two rival bidders, it is not possible for the Court to adorn the role a super specialist in the field of finance and find out which of the two offers is beneficial to the first respondent. Hence, the third contention of the petitioner is also liable to be rejected.
தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை, நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும். ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில் நுழையக்கூடாது. மின் வாரியம் கூறியபடி பார்த்தால், இந்த விவகாரத்தில் மறைமுக கட்டணம் இருக்கும் என்று தெரிகிறது. ஆக மின் வாரியம், இந்த விவகாரத்தில் ஒரு கணக்கு போட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நீதிமன்றம் ஒரு நிபுணரின் பணியை எடுத்து, எது குறைந்த விலைப்புள்ளி என்று கணக்கிட இயலாது. ஆகையால் இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன்.
இந்த வழக்கின் அடிப்படையே, யாருடைய விலைப்புள்ளி குறைவானது, யாருக்கு தகுதி அதிகமாக இருக்கிறது என்பதே. விலைப்புள்ளிகளை கணக்கிடுவது நிபுணர்களின் வேலை என்றால் குறைந்தபட்சம் ஒரு கணக்கியல் நிபுணரைக் கொண்டு, இதில் எது குறைந்த விலைப்புள்ளி என்பதையாவது நீதிமன்றம் கண்டறிய முயன்றிருக்க வேண்டுமா இல்லையா ? நான் நிபுணர் அல்ல என்று கூறி விட்டு, எந்த மின் வாரியம் மீது குற்றச்சாட்டோ, அந்த மின் வாரியம் கணக்கிட்ட முடிவை சரி என்று ஏற்றுக் கொள்வது எந்த வகையில் சரியாக இருக்கும் ? இதற்காகவா நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுகுகிறார்கள் ?
- Admittedly, there were only four offers to the tender in question. Two of them were disqualified and ultimately, the petitioner and the third respondent alone were left in the fray. As between the petitioner and the third respondent, there were no common denominators upon which a comparison could have been made. If the petitioner had the advantage of age, the third respondent had the advantage of experience. In terms of the number of projects so far handled in India and abroad and in terms of the sheer volume of installed capacity, the third respondent perhaps appeared in the eyes of the first respondent to be a giant, while the petitioner appeared to them to be a novice. As a public sector undertaking, if the first respondent did not want to take a chance and bet on the petitioner as David and the third respondent as Goliath, the same cannot be found fault with.
அடுத்ததாக நீதிபதி சொல்வதுதான் பெரிய வேடிக்கை. சீன நிறுவனம், மற்றும் பெல் நிறுவனம் இரண்டையும் ஒப்பிடுவதற்கான பொதுவான அளவுகோல்கள் இல்லை. சீன நிறுவனம் பழமையான நிறுவனம் என்றால், பெல் நிறுவனம் அனுபவம் வாய்ந்த நிறுவனம். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு திட்டங்களை கையாண்ட அனுபவம் மிக்க பெல் நிறுவனம் ஒரு பெரும் நிறுவனமாகவும், சீன நிறுவனம், ஒரு சாதாரண பொடியனாகவும் தமிழக மின் வாரியத்துக்கு தோன்றியிருக்கக் கூடும். ஒரு பொதுத்துறை நிறுவனம் என்ற வகையில், டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடக்கும் போட்டியில் டேவிட்டை விட கோலியாத்தை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்று மின் வாரியம் கருதுமேயானால் அதை குறை சொல்ல முடியாது. அடுத்ததாக, தெரியாத தேவதையை விட, தெரிந்த சாத்தானே மேல் என்று மின் வாரியம் பெல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்று கூறுகிறார் நீதிபதி.
” the only thing that the first respondent could have done is to choose whom the petitioner may brand as a known devil rather than choosing the petitioner who was an unknown angel.”
இப்படி தெரியாத தேவதையை விட, தெரிந்த சாத்தானை தேர்ந்தெடுக்க எதற்காக உலகளாவிய டெண்டரை விட வேண்டும். நேரடியாக எடுத்த எடுப்பிலேயே பெல் நிறுவனத்துக்கு உத்தரவை வழங்கியிருக்கலாமே ? உலகலாவிய டெண்டர், அதை ஆய்வு செய்ய ஒரு நிறுவனம், இதற்கு இரண்டு ஆண்டு கால தாமதம், இதற்கெல்லாம் பிறகு, பெல் நிறுவனம் ஒரு நவரத்னா நிறுவனம் என்று சான்றிதழ் அளிக்க எதற்கு இந்த டெண்டர் நாடகம் ?
நீதிமன்றத்தை ஒரு நிறுவனம் அணுகுவது எதற்காக ? விதிமுறைகளின் படி டெண்டர்கள் விடப்பட்டுள்ளனவா ? விலை குறைந்த நிறுவனத்தை விட்டு விட்டு, விலை அதிகம் கேட்ட நிறுவனத்துக்கு சாதகமாக முடிவெடுக்கப்பட்டுள்ளதா, விதி மீறல்கள் உள்ளதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை பெறத்தானே ? இது போன்ற பஞ்சதந்திரக் கதைகளைக் கேட்கவா மனுதாரர் நீதிமன்றத்துக்கு வருகிறார் ?
அடுத்ததாக நீதிபதி சீன நிறுவனத்தின் மீது சுமத்தும் மிகப்பெரிய குறை, 16.6.2014, 17.6.2014, 01.7.2014 மற்றும் 08.7.2014 ஆகிய நாட்களில், இந்த டெண்டர்கள் தொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு சீன நிறுவனம் மனுக்கள் அனுப்பியிருப்பதை மிகப்பெரிய குறையாக பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் நீதிபதி.
தமிழக மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களும், குளறுபடிகளும் ஊரறிந்த விஷயம். ஒரு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம், தங்களது குறைகளை மனுவாக தெரிவிப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இதை ஒரு பெரிய குறையாக நீதிபதி சுட்டிக்காட்டுவது, பெரும் வியப்பை அளிக்கிறது.
- In order to test the correctness of the above contention, it is necessary to take a look at three communications dated 27.9.2014, by one of which, the third respondent was informed of the acceptance of their offer by the Board, by the second of which, the third respondent accepted the award of contract and by the third of which, the petitioner was informed of the reasons for the rejection of their bid. None of the communications of the fourth respondent bear any indication of time, at which they were signed. The letter of acceptance of the contract dated 27.9.2014 signed by the Senior Manager of the third respondent alone bears the time 15.15 hours. The letter of rejection dated 27.9.2014 sent by the first respondent to the writ petitioner appears to have been tendered at the post office (MES Post Office) at Chennai-2 at about 14.56 pm for being sent by speed post.
- Therefore, merely because the letter of rejection of the petitioner’s representation travelled from the office of the first respondent to the speed post counter of the post office located in the immediate vicinity and registered there at 14.56 pm to be carried by speed post, it cannot be contended that the letter of award issued to the third respondent by the office of the fourth respondent should have also travelled simultaneously, giving only a time span of 19 minutes for them to accept it. The entire argument of the learned counsel for the petitioner loses sight of two important factors, namely (i) that the letter of rejection was sent from the office of the first respondent to the writ petitioner by speed post, and (ii) that the letter of acceptance of the offer of the third respondent emanated from the office of the fourth respondent.
- Therefore, if the third respondent had also exhibited at least a percentage of the same anxiety as exhibited by the petitioner and made one of their officials to wait at the entrance of the Electricity Board to know the outcome of the tender and happened to collect the letter of acceptance by hand, I cannot find fault with them. After all, I have to test, from the notings found in the files, as to whether there has been any procedural irregularity in the decision making process. If I find that there was no procedural irregularity in the decision making process, the allegations that border on presumptions cannot be accepted.
அடுத்ததாக சீன நிறுவனம் கூறும் மற்றொரு குற்றச்சாட்டு, 27 செப்டம்பர் 2014 அன்று, தங்களுடைய டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக ஒரு கடிதம், தமிழக மின் வாரியத்திலிருந்து மதியம் 2.46க்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பெல் நிறுவனத்திலிருந்து, 27 செப்டம்பர் 2014 அன்று மதியம் 3.15க்கு, மின் வாரியத்தின் டெண்டரை ஏற்றுக் கொண்டதற்கான கடிதம் கையெழுத்திடப்பட்டது எப்படி என்ற கேள்வியை சீன நிறுவனம் எழுப்புகிறது. பெல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நீதிபதி என்ன பதில் அளிக்கிறார் என்றால், பெல் நிறுவனமும் இந்த டெண்டரில் அதிக ஆர்வம் காட்டியதன் காட்டியதன் காரணமாக, பெல் நிறுவனத்தின் பிரதிநிதி மின் வாரிய அலுவலகத்தின் வாசலிலேயே காத்திருந்து இந்த ஆணையை பெற்றிருக்கலாமே என்கிறார்.
ஆனால் பெல் நிறுவனம் தனது பதில் மனுவில் என்ன குறிப்பிடுகிறது தெரியுமா ? இன்றைய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தில், டெல்லியில் இருந்து ஒரு கடிதத்தை சென்னைக்கு ஒரு நாளில் அனுப்புவது பெரிய காரியம் ஒன்றுமில்லை என்கிறது. பெல் நிறுவனமே இப்படி கூறுகையில், நீதிபதியோ, பெல் நிறுவனத்தின் பிரதிநிதி மின் வாரிய வாசலில் காத்திருந்தார் என்று கூறுகிறார்.
இறுதியாக, பெல் நிறுவனம் ஒரு நவரத்னா நிறுவனம்.. அந்த நிறுவனம் தாமதம் செய்தால் அது ஒரு பெரிய விஷயம் அல்ல. தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை விட அரசு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பது தவறே அல்ல என்று கூறி முடிக்கிறார் நீதியரசர்.
எண்ணூர் டெண்டரை பொறுத்தவரை உலகலாவிய அளவில் விடப்பட்ட டெண்டர். உலகலாவிய அளவில் டெண்டர் விடப்படாமல் இருந்தால், சீன நிறுவனமோ வேறு நிறுவனமோ கலந்து கொண்டிருக்கப் போவதேயில்லை. உலகலாவிய டெண்டர் விட்டால் அனைத்து நிறுவனங்களும் கலந்து கொள்ளத்தான் செய்யும். இன்றைய உலகமயமாக்கலில் எந்த நிறுவனம், மின் வாரியத்துக்கு அதிக செலவு வைக்காமல், திட்டத்தை விரைவாக முடித்துத் தருகிறது என்பதுதான் முக்கியம்.
நீதிமன்றத்தின் முன் இந்த வழக்கு வந்தபோது நீதிமன்றம் ஆராய வேண்டியது என்ன ? இரண்டு நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் விலைப்புள்ளி குறைவானது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா ? இரண்டு நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளதா ? இவற்றை ஆராய்ந்து, தேவைப்பட்டால், நீதிமன்றமே, தனியாக ஒரு ஆய்வு நிறுவனத்தை அமைத்து, இந்த டெண்டரை ஆய்வு செய்யக் கூட உத்தரவிடலாம். இதுதான் நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்ப்பார்ப்பது.
அதை விடுத்து, டேவிட், கோலியாத், நவரத்னா, பாரதரத்னா போன்ற பஞ்சதந்திரக் கதைகளை நீதிமன்றங்களிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும். நீதிக்கதைகளை அல்ல.
நீதிமன்றங்கள் சட்டபூர்வமாக விஷயத்தை அணுகி, அதில் உள்ள நியாய தர்மங்களை ஆராய்ந்து தீர்ப்ளிக்க வேண்டும். ஒரு பொதுத்துறை நிறுவனம், தனது திட்டங்களில் எல்லாம் ஏராளமாக தாமதம் செய்திருக்கிறது என்று மத்திய கணக்காயரின் அறிக்கையே தெளிவாக சுட்டிக்காட்டுகையில், அந்த நிறுவனத்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் ஒரு நீதிபதியின் தீர்ப்பு எப்படி நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும் ?
சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான ராமசுப்ரமணியம் இவ்வாறு பக்க சார்பாக தீர்ப்பளித்திருப்பது, நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கையையே சிதைக்கிறது. பல்வேறு திட்டங்களின் மூலமாக, தமிழக மின் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய பெல் நிறுவனத்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் நீதிபதி.
உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தில், பெல் நிறுவனத்தோடு இணைந்து தமிழக மின் வாரியம் உருவாக்கிய புதிய நிறுவனத்தை ஜெயலலிதா ரத்து செய்ததே, பெல் நிறுவனம் ஏற்படுத்திய தாமதம்தான் என்பதை சட்டப்பேரவையிலேயே வெளிப்படையாக தெரிவித்தார் ஜெயலலிதா. அவ்வாறு தெரிவித்து விட்டு, அந்தத் திட்டத்தை ரத்து செய்தார்.
பெல் நிறுவனம் தன் மின் திட்டங்களில் எவ்வளவு தாமதம் செய்துள்ளது என்பதை இந்த இணைப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படி அனைத்துத் திட்டங்களையும் தாமதம் செய்து, மின் உற்பத்தியை தாமதப்படுத்தும் பெல் நிறுவனத்துக்குத்தான் தனது தீர்ப்பில் பாராட்டுப்பத்திரம் படிக்கிறார் நீதிபதி ராமசுப்ரமணியம். பெல் நிறுவனத்தின் இந்த தாமதங்களால், மின் வாரியம் ஒரு யூனிட் 13 ரூபாய் வீதம் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி வருகிறது என்பதை நீதிபதி ராமசுப்ரமணியம் அறியாமல் போனது விந்தையே.
ராமசுப்ரமணியம் போன்ற நேர்மையான நீதிபதிகளே, இந்த டெண்டர்களுக்குப் பின்னால் ஊழலை கண்டுபிடிக்கத் தவறி, பிழையாற்றுவார்களேயானால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ?
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
Hi,
You have mentioned that the BHEL HQ is in Delhi and how can they get the lr from Delhi in few hrs. The Southern Region HQ is in Nandanam, Chennai and this is clear in their letter signed by George Simon. The Chinese quality is a big concern and later the O & M support is nil from any of the Chinese manufacturer. Further no clear tech document with all the relevent drawings are existing in Chinese companies. Further, the loan is in foreign exchange and the interest quoted by Chinese Company is much higher than the LIBOR rate. The interest burdon should be calculated with consideration for currency fluctuation. The loan amount to be repaid in RMB or INR is not clearly spelled in the article. Many missing links in the document. The past experience in many Power Projects has given a clear direction in the field of Power Plants. It is not like a road or Building Project. Hence it will be better to reject a company with out a quick support base and consider a long run support in running the plant. I am not a supporter of BHEL and hence my comments about this article is not biased. When we write something about technical, get some more experts opinion .
With Regards,
R. Selvaraj
இவர்களை உன்னால் எந்த ஜென்மத்திலும் திருத்த முடியாது. அய்யோ அநியாயம், அய்யோ அநியாயம் என புலம்பிக்கொண்டே ஒரு நாள் நீ செத்துப்போவாய். அவனும் செத்துப்போவான். அடுத்து, அவனுடைய சந்ததிகள் பதவியேற்கும். உன்னுடைய சந்ததிகள் மீண்டும் பழிவாங்கப்படும். அவர்களும் புலம்பிக்கொண்டே சாவர். உங்களில் ஒருவன் முதல்வனோ பிரதமனோ ஆனால், அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு உங்களை உதைப்பான். போராடினால், சுட்டுத்தள்ளுவான். பட்டினி போட்டு சாவடிப்பான். மஹாகனம் நீதிபதி உன்னை தூக்கில் தொங்கவிடுவான். இது ஒரு முடிவற்ற சுழல். எப்படி இந்த வதைச்சுழலிருந்து வெளியேறுவாய்?.
கத்தியின்றி ரத்தமின்றி உங்களுக்கு நீதி வேண்டுமானால், லட்சக்கணக்கில் ஒன்று சேருங்கள். திருக்குரானை எடுங்கள். நேராக அந்த அயோக்கியரின் கோட்டை முன்னால் அணி திரளுங்கள். அல்லாஹு அக்பரென்று முழங்குங்கள். நொடிப்பொழுதில் நீதி கிடைக்கும். வறுமை ஒழியும். அமைதி மலரும்.
திருத்தப்படவேண்டியது இந்த தீர்ப்பு மட்டுமல்ல, அடிப்படை திரியிலிருந்து அதிகார மையம்வரை நிறைய விடயங்கள் இருக்கின்றன, இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பல விடயங்களில் கிணற்றுத் தவளைகள்போல 21ம் நூற்றாண்டிலும் மிகவும் பிந்தங்கி இருப்பது இருப்பது மிகவும் கவலைக்குரியதும் வெட்கக்கேடானதும் ஆகும்.
திருத்தப்படவேண்டியது இந்த தீர்ப்பு மட்டுமல்ல, நாடளாவிய அளவில் ஒன்று இரண்டு அல்ல அடிப்படை திரியிலிருந்து அதிகார மையம்வரை திருத்தி அமைக்கவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன, இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பல விடயங்களில் கிணற்றுத் தவளைகள்போல 21ம் நூற்றாண்டிலும் மிகவும் பின்தங்கி இருப்பது இருப்பது மிகவும் கவலைக்குரியதும் வெட்கக்கேடானதும் ஆகும்.
ராம சுப்பிரமணியம் மட்டுமல்ல எவராக இருந்தாலும் இந்தியாவில் அரசியல் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு எழுதிவிட முடியுமா என்ன?
அருமை. அருமை. அற்புதம் சவுக்கு அவர்களின் பணி.எப்படி உங்களால் அயராது நேர்மை, தூய்மை, செயல்திறன், ஊழல் எதிரப்பு, நாட்டு நலன், மக்கள் அறியாமை நீக்குதல், செயல் திறன் மேம்படைய செய்தால் ஆகியவற்றிக்காக பாடுபட முடிகிறது. ஒ. கடவுளே, இவரை போன்றவர்களை பதிவுலகில், இணையம் மூலம் மட்டுமே படித்து தெரிந்துகொள்ள முடியும் என்ற இடத்தில வைத்து இருக்கிறாய். ராமசுப்ரமணியன் போன்ற அயோகிரகளை அரசு ஊதியம், சலுகைகள், லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு நீதியை சாகடித்தல் போன்ற இடங்களில் வைத்து இருக்கிறாய்.கடவுளே நீ நாண்டுகொண்டு சாகாமல், ஏன் பாமர மக்களை கொடுமை படுத்துகிறாய்.இப்படி பட்ட அயோக்கியர்கள் ஆட்சி செய்யவைத்து,அந்த அயோக்கியர்களுக்கு அடிவருடிகளாக நீதித்துறையை சீரழித்து மக்களை ஏமாற்றி,வஞ்சகம் தீர்க்கும் சூழல் இருப்பது கடவுள் தன்மையை மிக அசிங்கமாக்குகிறது. கோவில்கள், அர்ச்சனைகள், பராமரிப்பு செலவு, மசூதிகள், தேவாலயங்கள் இதற்கு ஆகும் செலவுகள் அத்தனையும் இழப்பு. முதலில் கோவில்களில் இருந்து brahmin சமூகத்தினரை அப்புறபடுதினால் தான் கடவுள் தூய்மை அடைந்து அநியாயங்கள் நடைபெறாமல் மக்களை காப்பார். சவுக்கு அவர்களின் உன்னதமான தொண்டு பெரும் போற்றுதலுக்கும், அங்கீகரிதலுக்கும் உரியது. சவுக்கு அவர்களுக்கு என்று இந்த தேசம் இராணுவத்தையும், மற்ற வசதிகளையும் தரவேண்டும். உரிய அங்கீகாரம் கிடைத்தால் சவுக்கு தேசத்தை செம்மைபடுத்தி,நேர்மையான ஆட்சியை மலர வைப்பார். இதை இந்த தேசம் செய்ய மறுத்தால் சவுக்கு அவர்கள் சீன அதிபர்கள் உடன் ஒப்பந்தம் இயற்றி சீன ராணுவத்தை கொண்டு நம் தேசத்தை அழிக்கும் கயவர்களை, அயோக்கியர்களை, ஊழல் ஒன்றே மூச்சு என்று ஊழல் செய்து சொத்து சேர்க்கும் திருடர்களை, அயோக்கியத்தனம் செய்வதற்காகவே படித்து நீதிபதி பதவிய பெரும் அயோக்கியர்களை கொன்று குவித்து நல்ல சமுதாயத்தை மலர செய்ய சீன ராணுவத்தை வேண்டுவோம்.இது ஒன்றும் நடக்காத விஷயம் அல்ல. பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் புகுந்து அல்கொய்தா இயக்கத்தின் தலைவரை கொன்றது இயல்பானது, சாத்தியமானது, அங்கீகரிக்கப்படவேண்டியது, இதில் மற்ற தேசத்தினால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை உள்ளது. நாம் அல்கொய்தாவின் தலைவரை விட மிக கொடியவர்களை, அயோக்கியர்களை, துரோகிகளை, கயவர்களை, பதவியையும், அதிகாரத்தையும் ஏமாற்றி கைப்பற்றி எளியவர்களுக்கு மோசம் செய்யும் கொடியவர்களை இந்த தேசம் காப்பாற்ற நினைத்தால் சவுக்கு போன்ற வல்லவர்கள் சீனாவின் துணையை நாடுவதில் நன்மை மலரும். சவுக்கு அவர்களே உங்களை போன்ற திறன் மிக்கவர்கள் மட்டுமே இது போன்ற சிறப்பான செயலை செய்யமுடியும். சீனாவை போன்று நம் நாடும் ஊழல் அற்ற, நேரமையான, தொழில் நுட்பம் மிகுந்த நாடாக மாற இந்த அயோக்கியர்கள் சாகவேண்டும். நம் தேசத்தின் அவலங்களை,அருவருப்புகளை அந்நிய தேசத்திற்கு காட்டிய இந்த அரசியல்வாதிகளும், நீதிபதிளும் தண்டனையை பெற்று நல்லவர்கள் ஆட்சியை செய்வதற்கு நமக்கு மற்ற வல்லவர்களின் துணை தேவை. நீங்களோ, நானோ,பொதுமக்களோ இந்த அயோக்கியர்களை ஒன்றும் செய்ய இயலாது. இவர்கள், அதிகாரம், அரசியல் பலம், அரசு பணம்,போன்றவற்றால் நம்மை நசுக்கிவிடுவார்கள். இந்த தமிழக மக்களை போன்ற கயமைக்கு, திருட்டுக்கு, ஊழலுக்கு துணை போகும் மக்களை வைத்துகொண்டு, நீதி, நேர்மை எதிர்பார்ப்பது வீண். விரயமான வலிகள் தரும் அனுபவம்தான் கிடைக்கும். மாற்று வழி கொண்டு நல்ல மாற்றங்களை மலர செய்யுங்கள்.நன்றி சவுக்கு அவர்களே.
//சீனாவை போன்று நம் நாடும் ஊழல் அற்ற, நேரமையான, தொழில் நுட்பம் மிகுந்த நாடாக மாற இந்த அயோக்கியர்கள் சாகவேண்டும்.
laughing from backside.. ha ha ha ha ahah
Modus Operandi
Red sanders smuggling involves four layers of operation. Tribal woodcutters and local carriers/loaders belong to the first rung. At the second stage, transporters operate in connivance with the forest and police departments. Next are the exporters who take it out of the country. At the fourth level are the managers who oversee everything from recruitment to negotiation and report to the political kingpin. While the woodcutters rarely make more than Rs 10,000 per tree (average 200 kg), the booty fetches between Rs 40-60 lakh per tonne abroad. Last November, the state government earned Rs 1,000 crore by auctioning a huge cache of confiscated red sanders. A second auction of 3,500 tonnes will be notified soon by the inhumane AP officials.
NCDNTHR report
In 2014, a multi-organisation team led by National Campaign for Denotified Tribes Human Rights (NCDNTHR) probed such earlier killings and detentions and observed: If arrested, the local rich in the smuggling racket are sent to the Rajahmundry central prison, so that they could get bail easily, while the majority of the poor tribal woodcutters are booked under the charges of murder or attempted murder. Fortune of rival smuggling groups depends on changing political equations, and targeted killings of tribal labourers of a rival smuggling group through the STF by the dominant group are meant to destroy the opponent’s supply base among Tamil tribals who are hired for felling and carrying red sanders.
Most of those killed are Vanniyars, a denotified tribe at the bottom of the social hierarchy, while the majority of those detained belong to other tribes. About 300 of them are still in jail since last April,” said Hyderabad-based M Subba Rao, NCDNTHR national convener. In the name of cracking down on smugglers, say insiders, the politically powerful gangs of the day have taken out members, usually tribal recruits at the lowest rung, of the rival groups.
Indeed, red sanders encounters do seem to have been timed with shifts in the state’s political equations since 2011. A Tamil labourer, named Varadi, was killed in an allegedly fake encounter during the tenure of forest minister Peddireddy Rama Chandra Reddy in 2011. After the resignation of Peddireddy in November 2012, another labourer from Tamil Nadu, Murugan, was killed in December 2012. Another, named Sambarian Mani, was killed in January 2014, weeks before Kiran Kumar Reddy resigned as chief minister. Days before Chandrababu Naidu became chief minister, Vijaykanth, Venkatesh and Siva — all below 25, belonging to denotified tribes and neighbours in an interior village near Javadi hills of Tamil Nadu — were killed in May 2014. Another five were killed in the forests of Chittoor and Kadapa districts between June 21 and August 6, 2014. Subsequently about 2,000 Tamils were arrested from railway stations and bus stands — rather than crime spots — and branded smugglers and kept in various jails in Nellore, Chittoor and Kadapa districts. Two of them died. Last year, the Nellore district jail had about 440 booked in the red sanders case, and of them 236 were booked on the charges of murder and the remaining for attempted murder. These tribal woodcutters from Tamil Nadu’s Tiruvannamalai, Salem, Dharamapuri and Villupuram districts traditionally worked in coffee estates and also in sugarcane fields before they were lured by red sander smugglers and their agents. We need independent inquiries into these killings,” said S Anna Durai, Tamil Nadu convener of NCDNTHR.
Opportunistic politics
The DMK, BJP, PMK and CPI claim now that poor labourers from the state were among the victims and also ask the AP government to “pursue lawful means” to check red sanders smuggling. Where were these parties when 2,000 Tamils were arrested from railway stations and bus stands and 440 booked in the red sanders cases, and when 236 were booked on the charges of murder and the remaining for attempted murder? Why is the fate of the Tamil people of the world based on these political pathogens? People of Tamil Nadu should be aware of all the facts involved in this operation and be weary of these opportunistic parasites who take advantage of these tense situations.
சவுக்கு சங்கருக்கு என்னுடைய சிம்பிள் அட்வைஸ். சீன நிறுவனத்துக்கு எதிராக தரப்பட்ட இந்த தீர்ப்புக்கு எதிராக நீங்கள் பதியும் அனைத்து கட்டுரைகளையும் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் எழுதுங்கள். அனுபவமிக்க அதிகாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து எப்படி சட்டப்படி சீனா இந்த டென்டரை வெல்ல முடியும், தேவைப்பட்டால் இன்டெர்னேஷனல் கோர்ட்டுக்கும் செல்ல முடியும் என்பது பற்றி ஒரு ஃபைலை தயார் செய்துகொள்ளுங்கள். நம்பிக்கையான நன்பர்களுடன் சேர்ந்து சென்னையிலுள்ள சீன தூதருடன் பேசுங்கள்.
உங்களூடைய ஃபைல அவரிடம் கொடுங்கள். இந்த ஒரு டெண்டரை வென்றால், இந்தியாவின் எந்த டெண்டரையும் சீனாவால் வெல்ல முடியும். பீஜிங்கில் வேண்டிய வசதிகள் செய்து தந்தால், எப்படி உங்களால் சீனாவின் ஆலோசகராக வேலை செய்ய முடியும் என்பதை விளக்குங்கள். லைப்ல ஜம்முனு செட்டில் ஆயிடுங்க. குட் லக்.
Thanks a lot for your suggestion…Savukku articles always open sources articles.. You can do this by yourself and get the credits.
Appreciate your time and comments..
WOW! WHAT A WONDERFUL JUDGMENT!! and competing the greatest saying “segapa irukkavan poi solla matanda!” Only courts are alive and justice is already. now, they are working to bury it. Even a panjayat leader’s verdict would be much better. What to do? you stammer with your posts and we do with comments.
Judgement comes from experience, and experience comes from bad judgement. Hope the honorable judges learn from experience and see and scrutinize all the facts elaborated by Savukku. Failure is not a single, cataclysmic event. We don’t fail overnight. Instead, failure is a few errors in judgement, repeated every day which will then amount to a big failure. Per Thomas Aquinas, every judgement of conscience, be it right or wrong, be it about things evil in themselves or morally indifferent, is obligatory. In such ways, that he who acts against his conscience always sins. Let the judges follow their conscience based on facts and act blindly based on law.
Blood Logs
What is Red Sanders?
Red Sanders, botanical name Pterocarpus santalinus, is a non-fragrant variety of sandalwood that mostly grows in rocky, hilly regions. Saplings reach 8 to 10 m in 3-4 years, but growth slows down after that. The trunks are slender, and it takes at least 20-25 years for the tree’s beautiful, deep red wood to be of use. AP forest department officials say this particular type of Red Sanders grows nowhere else in the world.
Where exactly does it grow?
In the thorny scrub/dry deciduous forests of the central Deccan, between 500 ft and 3000 ft. Geographically, only in a small pocket roughly 5,200 sq km in the Palakonda and Seshachalam hills in the districts of Kadapa and Chittoor, in some contiguous areas of Anantapur district, in the Nallamalla forests in Kurnool and Prakasam, and in parts of Nellore district. Some contiguous patches in Tamil Nadu and Karnataka see some wild growth.
Why is it coveted?
There is very little supply. Red Sanders is a fast disappearing species restricted to a tiny geographical area. Felling is illegal, export is highly restricted. Permission is required to fell and sell even trees in private farms. But there is big demand overseas, especially in China and Japan, where Red Sanders furniture, chess sets and musical instruments are status symbols. In the black market, a tonne of Red Sanders fetches between Rs 15 lakh and Rs 30 lakh depending on its quality (Grade A, B, or C).
How is the trade controlled?
Red Sanders is a protected species under the Convention on International Trade in Endangered Species (CITES) of Wild Fauna and Flora. Until 2014, auction or trade of even seized logs was banned. The ban was lifted because over 10,000 tonnes of logs had accumulated in Andhra Pradesh government godowns. Only e-auction is allowed. Last December, the state government raised Rs 991 crore in e-auctions — an average Rs 27 lakh per tonne.
What rampant is smuggling?
According to AP CM, the seizure of approximately 200 tonnes per annum of logs on average was the tip of the iceberg — over 500 tonnes are is smuggled out every year. China, Japan, Singapore, Malaysia and UAE are believed to be the destinations or transit points, with the consignments leaving India through ports in Chennai and Mumbai, and by road across the Nepal border and through the Northeast.
How frequent are police-smuggler clashes?
Almost daily skirmishes happen between forest personnel and smugglers in Chittoor, Nellore, Kadapa and Kurnool, and especially in the Seshachalam forests into which smugglers enter from Tamil Nadu and Karnataka. The largest number of confrontations take place in Chittoor.
On December 15, 2013 two forest officers were stoned and axed to death by a gang of at least eight suspected smugglers in the Seshachalam forests near Tirupati in Chittoor district. Two years earlier, on July 12, 2011, a forest officer was killed by smugglers in Panuguru near Chittoor. This was the first killing of a forest official in 20 years. DIG Task Force (Anti-Red Sanders Smuggling) B Kanta Rao says forest officers are often helpless against the gangs who launch vicious attacks with stones and sharp instruments at anyone who challenges them.
How do the smugglers operate?
Red Sanders has been seized in Mumbai, Nepal, Chhattisgarh, J&K, Kolkata and Orissa. Officials say the main smuggling gangs are from Tamil Nadu. They camp in hotels and lodges in Proddatur and Mydkur towns in Kadapa district, and rope in villagers on the periphery of the forest to do the felling, often paying them Rs 1,500 to Rs 2,000 for a day’s work. The agents get up to Rs 1 lakh per operation. They use cell phones and GPS to keep track of forest vehicles, and of their own men and trucks. The agents carry firearms and large amounts of cash to bribe forest guards. The usual modus operandi is to send a decoy on a motorcycle who — in case he is stopped by a vigilance squad or forest guards — alerts the truck driver by cell phone. A ‘pilot’ vehicle, usually carrying an agent, then arrives to check if the officials can be bribed. If that is not possible, firing usually follows. Many ring leaders camping in Kadapa have been arrested under the Andhra Pradesh Prevention of Dangerous Activities of Bootleggers, Dacoits, Drug Offenders, Goondas, Immoral Traffic Offenders and Land Grabbers Act (PD Act).
Are the police mixed up?
Members of a police task force that was supposed to protect forest officials were alleged to be taking bribes from smugglers. An inquiry by the AP Vigilance Department in September last year revealed two senior officers who were tasked with protecting forest officers, and monitoring activities of smugglers, were in fact taking large bribes and allowing them to enter the forest.
Why those killed are always woodcutters?
Barring the scale, the encounter killing of 20 red sanders “smugglers” in Andhra Pradesh has not come as a surprise to those watching the illegal industry. Since 2011, such encounters and operations have killed 11 and led to the detention of more than 2,000 — all tribal woodcutters hired by mafia agents from Tamil Nadu. The timing of the current operations reveals a pattern.