போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதாக இருந்தாலும் சரி, திண்டுக்கல் பாண்டியை சுட்டுக் கொன்ற சம்பவமும் சரி, எல்லா போலி என்கவுன்டர்களையும் சவுக்கு எதிர்த்தே வந்திருக்கிறது.
ஒரு பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியை ஒருவன் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கினான் என்றால் கூட, அவனையும் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்வதில் உடன்பாடு கிடையாது. பத்து வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குபவன் எப்படி சாதாரண மனநிலையில் இருக்க முடியும் ? அவன் மனநிலை பிறழ்ந்தவன்தானே ? அப்படி மனநிலை பிறழ்ந்தவனுக்கு உரிய தண்டனை வழங்கி, இறுதி வரை அவனை சிறையில் வைத்திருக்க வேண்டியதே ஒரு வளர்ந்த ஜனநாயகத்துக்கு அழகு. நாம் ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில குற்றங்களுக்கு மட்டும் என்கவுண்டர்களை ஆதரித்து வந்தோமேயென்றால், சித்தூரில் நடந்தது போலத்தான் நடக்கும். போலி மோதல் படுகொலைகளை ஒரு நாளும் ஆதரிக்க முடியாது. இன்று ஒரு சில குற்றங்களுக்காக காவல்துறை நடத்தும் போலி மோதல் படுகொலைகளை ஆதரித்தோமேயென்றால், நாளை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கு பிடிக்காதவர்களை இப்படித்தான் சுட்டுக் கொல்வார்கள்.
உதாரணத்துக்கு, ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். ஜுலை 2012ல், திருநெல்வேலி மாவட்டத்தில் வானுமாமலை என்ற இளைஞரை, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றார். விஷயம் என்னவென்றால், அந்த இளைஞருக்கும், அந்த ஆய்வாளருக்கும் தொலைபேசியில தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதை மனதில் வைத்து அந்த ஆய்வாளர் மறுநாள் ஜீப்பில் வந்து, அந்த இளைஞரை எவ்வித காரணமும் இன்றி சுட்டுக் கொன்றிருக்கிறார். அந்த சாதாரண இளைஞரை மணல் கடத்தல் காரன் என்று சித்தரித்தது காவல்துறை. காவல்துறையின் செய்திகளை விசாரிக்காமல் அப்படியே வெளியிடும் ஊடகங்களும், இச்செய்தியை அப்படியே வெளியிட்டன. இது குறித்து சவுக்கு தளத்தில் வந்த இரண்டு கட்டுரைகள். இணைப்பு 1 இணைப்பு 2 . இறந்து போன வானுமாமலையின் மனைவிக்கு அரசு வேலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்து, இந்த வழக்கை அப்படியே முடித்தது காவல்துறை.
இதே போலத்தான் சென்னை வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்களின் படுகொலையும், ராமநாதபுரத்தில் இஸ்லாமிய இளைஞரின் படுகொலையும் சம்பிரதாயமான விசாரணைகளோடு மூடி மறைக்கப்பட்டன. இது போன்ற படுகொலைகளை, நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருப்பதால்தான், காவல்துறை எவ்விதமான அச்சமும் இன்றி, இது போன்ற போலி மோதல் படுகொலைகளை அப்பட்டமாக அரங்கேற்றி வருகிறது. அதன் வெளிப்பாடே, ஆந்திர மாநிலத்தில் நடந்த 20 பேரின் படுகொலைகள்.
ஆந்திராவில் நடந்த இந்த என்கவுன்டர் போலி என்கவுன்டர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. சம்பவம் நடந்த உடனே செய்தியாளர்களிடம் பேசிய இந்த அதிரடிப்படையின் தலைவர் டிஐஜி காந்தாராவ், இவ்வாறு கூறினார் ““As soon as they saw police, at least 150 to 200 labourers, hired by the smugglers, rained stones, shot arrows and threw sticks and iron rods. They hid behind boulders and attacked. At least eight forest officers were injured and the task force opened fire in self-defence. At least 20 were killed. They are hired daily wagers from Tamil Nadu. We believe they had been camping here since Monday evening.”
அதாவது காவல்துறையைப் பார்த்ததும் 150 முதல் 200க்கும் மேல் இருந்த கூலித் தொழிலாளிகள் இரும்பு கம்பிகள், மரக் குச்சிகள், அம்புகள், கற்கள் போன்றவற்றை வைத்துத் தாக்கினார்கள். இதில் குறைந்தது எட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்காக சுட்டதில் 20 பேர் இறந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார். இணைப்பு
இவர் கூறியபடி காயம்பட்ட அந்த வனத்துறை அதிகாரிகளின் பெயர் என்ன, அவர்கள் எங்கே சிகிச்சை எடுக்கிறார்கள், எந்த மாதிரியான காயம் அவர்களுக்கு ஏற்பட்டது என்பது குறித்து எவ்விதமான தகவலும் இது வரை வெளிவரவில்லை. ஊடகங்களும் இத்தகவலை சரிபார்க்க முயலவில்லை.
இறந்து போனவர்களில் ஏழு பேர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சேலம் மற்றும் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த 12 பேரில், 5 பேர் ஜமுனாமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும், மலையாள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விவசாயம் செய்ய நிலமும் இல்லை, கூலி விவசாயம் செய்வதற்கு அங்கே விவசாயமும் நடைபெறவில்லை. கண்ணமங்கலம் என்ற இடத்துக்கு அருகாமையில் உள்ள ஆனந்தபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், அவருக்கு சொந்தமான நான்கு பனைமரங்களை 1000 ரூபாய்க்கு சமீபத்தில் விற்றுள்ளார். ஏன் என்று கேட்டபோது எங்களுக்கு பிழைக்க வேறு வழியே இல்லை. அதனால் எங்கள் கால்நடைகளையும், மரங்களையும் விற்று பிழைப்பை நடத்துகிறோம் என்கிறார். சரி இதையெல்லாம் விற்ற பின்னால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், கிடைக்கும் வேலையைச் செய்வோம் என்கிறார்.
இந்த இடத்தில்தான் இடைத்தரகர்கள் வருகிறார்கள். வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில், கிடைக்கும் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள். தரகர்கள் ஆந்திராவிலோ, கேரளாவிலோ மரம் வெட்டும் பணிக்கு இவர்களை அழைத்துச் செல்கையில் 500 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கிறது. நான்கு பனை மரங்களை விற்றுக் கிடைக்கும் பணம், ஒரு நாள் கூலியாக கிடைக்கையில் இவர்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்.
மேலும் ஜவ்வாது மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு, நாம் தமிழகத்தில் வாழ்கிறோம், இந்தியாவில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அரசியல்வாதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கு என்று திட்டங்கள் இருக்கிறதென்பதே இவர்களுக்கு சற்றும் தெரியாமல் இருக்கிறது. எங்கே வேலை கிடைக்கிறதோ, அங்கே செல்கிறார்கள். சாதாரண மரம் வெட்டுவதும், செம்மரங்களை வெட்டுவதும் இவர்களுக்கு ஒன்றுதான். இப்படித்தான் இவர்கள் மரம் வெட்டும் வேலைக்கு சென்றபோது, பேருந்தில் இருந்து இறக்கி ஆந்திர மாநில காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை நகரில் நாகரீக வளர்ச்சியின் எல்லா பயன்களையும் அனுபவித்துக் கொண்டுள்ள நாம், நமக்கு வெகு அருகாமையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், வயிற்றைக் கழுவவே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்ய வேண்டிய ஒரு சமூகத்தை வைத்திருபபதற்கு வெட்கப்பட வேண்டும். நம்மை விட, மாறி மாறி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இரு திராவிடக் கட்சிகளும் வெட்கப்பட வேண்டும்.
ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவல் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானோரை மரத்தில் கட்டி, கீழே தீ வைத்து உயிரோடு எரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பின்னர் அந்த திட்டத்தை மாற்றி, சுட்டுக் கொன்று, தற்காப்புக்காக சுட்டோம் என்ற கதையை பரப்பி வருகிறார்கள். இறந்தவர்களில் பலரின் உடலில் தோல் வழன்று, எரிந்த தீக்காயங்களோடு இருப்பதன் காரணம் இதுதான். உயிரோடு ஒருவரை எரிக்க முனையும், ஆந்திர காவல்துறையினர் எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் இரு குழுக்களுக்கு இடையே உள்ள போட்டியில் காவல்துறையை பயன்படுத்தி, இந்த படுகொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என்று பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அது ஒரு புறம் இருக்கட்டும்.
இறந்த அனைவரும் தமிழர்கள். நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 21ம் நூற்றாண்டிலும், சாலை வசதி இல்லாத, பள்ளி வசதி இல்லாத ஒரு ஊர் தமிழக்ததில் இருக்கிறது என்பதை விட வேறு அவமானம் என்ன வேண்டும் நமக்கு ? “மூன்றாண்டு ஆட்சி முழுமையான வளர்ச்சி” என்ற கிரிமினலின் போலிக் கூப்பாட்டின் லட்சணம் இதுதான்.
அந்தப் பகுதிக்கு சென்று வந்த ஒரு பத்திரிக்கையாளர் “அந்தப் பகுதி மக்களுக்கும் சென்னைக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களோடு நாம் உரையாட சென்றபோது, நம்மை வேற்று கிரகவாசிகள் போல பார்த்தார்கள். அங்கே உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள், ஆந்திராவிலோ, கேரளாவிலோ பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் அவர்களுக்கு வேலையே இல்லை. அங்க உள்ள சிறு குழந்தைகளிடம் உரையாட முயற்சித்தபோது அவர்கள் வெறித்துப் பார்க்கிறார்களே தவிர, நாம் பேசுவது தமிழில் இருந்தாலும் அவர்களுக்குப் புரியவில்லை. சென்னைக்கு அருகிலேயே இப்படி நாகரீகத்துக்கு அப்பால், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஊரும் மக்களும் இருக்கிறார்கள் என்பதே நமது ஜனநாயகத்துக்கு அவமானம்” என்றார் அவர்.
இதை விட ஒரு மோசமான அவமானகரமான சம்பவத்தை அரங்கேற்றியது பாட்டாளி மக்கள் கட்சி. இறந்து போனது மொத்தம் 20 பேராக இருந்தாலும், அவர்களில் வெறும் ஆறு பேருக்கு மட்டும், அதாவது அந்த ஆறு பேரும் வன்னியர்கள், அவர்களுக்கு மட்டும் மறு போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த சம்பவம் நடந்தது ஆந்திர மாநிலத்தில் என்பதால், இந்த நீதிமன்றத்துக்கு மறு போஸ்ட் மார்ட்டம் நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நீதிபதி கூறியபோது, பாமக வழக்கறிஞர் பாலு, இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கூறியுள்ளார். மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால், ஏன் வெறும் ஆறு உடல்களுக்கு மட்டும் மறு போஸ்ட் மார்ட்டம் கோருகிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு நினைத்தால் மறு போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்று நீதிபதி கோரியபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி நீதிமன்றம் உத்தரவிட்டால் செய்கிறோம் என்றார். இணைப்பு . இந்த ஆறு உடல்களை ஏப்ரல் 17ம் தேதி வரை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட்டார் நீதிபதி. தமிழகத்தின் முதல்வராகும் கனவோடும், தமிழகத்தின் அரவிந்த் கேஜ்ரிவால் என்று தன்னை கருதிக் கொள்ளும் அன்புமணி ராமதாஸின் கட்சியின் நிலைபாடு இதுதான். இவர்கள் என்றுமே வன்னியர் கட்சியாக மட்டுமே இருப்பார்கள் என்பதையே இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.
இறந்துபோன ஜவ்வாது மலையைச் சேர்ந்த போயர்களின் வீட்டுக்கு சென்ற பத்திரிக்கையாளர், அவர்கள் நிலைமை மிக மிக பரிதாபகரமாக இருப்பதாக கூறினார். உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படுகையிலேயே ஓரளவு அழுகத் தொடங்கியிருந்தது என்றும், மலை கிராமங்களில் ஐஸ் பெட்டிகள் வைக்கும் வசதி இல்லாத காரணத்தால், பல வீடுகளில் உடல்கள் நாற்றமெடுக்கத் தொடங்கியிருந்தது என்றார். ஒரே ஒரு காவல்துறை அதிகாரியோ, ஒரே ஒரு அரசு அதிகாரியோ கூட அந்த வீடுகளில் இல்லை என்றார். இறந்த உடலின் அருகே அந்த நாற்றத்தை சகித்துக் கொண்டு, மனைவி மட்டும் அமர்ந்திருந்தார் என்றார் அந்த பத்திரிக்கையாளர்.
கூலிக்காக மரம் வெட்டச் சென்றவர்களில் இது வரை ஏறக்குறைய 2000ம் பேருக்கும் மேல் ஆந்திர சிறைகளில் இருக்கிறார்கள் என்ற விபரம் தமிழக அரசுக்கு நன்றாகத் தெரியும். ஊழல் செய்து, ஊரார் பணத்தை அடித்து உலையில் போட்டு சிறை சென்ற ஜெயலலிதாவால் 22 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க முடியாமல் தவித்தபடி என்ன நிபந்தனையென்றாலும் ஏற்றுக் கொண்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்தியாவின் தலைச்சிறந்த வழக்கறிஞரை வைத்து, தன் ஜாமீனுக்காக வாதாடினார். இவரைப் போலத்தானே இந்த 2000 பேர்களும் சிறைகளில் இருக்கிறார்கள். இவர்களை சிறையிலிருந்து வெளியேற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ? அவர்களுடையது உயிர் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ? தெரிந்தே ஊழல் செய்து சிறை சென்றார் ஜெயலலிதா. ஆனால் இந்த அப்பாவித் தொழிலாளர்கள் பிழைக்க வழியின்றி கூலிக்காக மரம் வெட்டச் சென்று மாட்டிக் கொண்டுள்ளார்கள்.
தற்போது, இந்த பிரச்சினையை அமைதியான வழியில் மூடி மறைக்க, தமிழகத்தில் உள்ள தெலுங்கு லாபி வேலைசெய்து வருகிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வந்த வண்ணம் உள்ளது. முதல்வரின் செயலாளராக உள்ள ராம் மோகன ராவ் என்பவர் தெலுங்கர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இந்த படுகொலை தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதப்பட்ட மென்மையான கடிதத்தின் பின்னணியில் இந்த ராம் மோகன ராவே இருக்கிறார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள். மேலும், ஐதராபாத்தில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் உள்ளன. மேலும் ஜெயலலிதாவின் புதிய பினாமி நிறுவனங்களில் ஒன்றான ஹரிசந்தானா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமாரின் கணவர் கே.எஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் இயக்குநராக இருக்கும் இந்த நிறுவனத்தின் தலைமையகம், ஐதராபாத் நகரில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்பதை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?
நியாயப்படி தமிழக அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றால், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்க வேண்டும். ஒரு தனி நபரோ, அல்லது மனித உரிமை அமைப்போ, தொடுக்கும் வழக்கை விட ஒரு மாநில அரசு தொடுக்கும் வழக்குக்கு முக்கியத்துவம் உண்டு. காவிரி பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை போன்றவற்றுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தையோ, அல்லது உச்சநீதிமன்றத்தையோ அணுகுவதை தடுப்பது எது ? ராம் மோகன ராவ் ஐஏஎஸ் போன்ற தெலுங்கு அதிகாரிகளும், ஏ.எல்.சோமாயாஜி போன்ற தெலுங்கு அரசு தலைமை வழக்கறிஞர்களுமே. தமிழ்நாட்டிலேயே தமிழனுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல நிலைதான் இங்கே நிலவுகிறது.
இந்த படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிலர், சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிடேஜ் கடைகளை அடித்து நொறுக்கி தங்கள் வீரத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கடைகளை அடித்து நொறுக்குவதால், அங்கே வேலை செய்யும் ஒன்றிரண்டு தமிழர்களும் வேலை இழப்பதைத் தவிர இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.
தருமபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் வறட்சியான மாவட்டங்கள், அங்கே விவசாயம் பெரிய அளவில் கிடையாது என்பது, தமிழக ஆட்சியாளர்கள் அனைவருக்குமே தெரியும். இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. இலவச மிக்சி க்ரைண்டர்களை வழங்க ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கும் தமிழக அரசு, இம்மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதே யதார்த்தம்.
தமிழக அரசின் பெரும் வருவாய், டாஸ்மாக் விற்பனையை மட்டுமே நம்பியுள்ளது. டாஸ்மாக்கின் ஆயத்தீர்வை மூலமாக 1112 கோடி ரூபாயும், கூடுதல் விற்பனை வரி மூலமாக 2150 கோடி ரூபாயும், டாஸ்மாக் மூலமாக மட்டுமே வருகின்றன. தங்கம், கரும்பு, சர்க்கரை போன்ற பல்வேறு பொருட்களைத் தவிர்த்து, திருமண மண்டபங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு நிலையங்கள் ஆகியவற்றுக்கு மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்ததன் மூலமாக கூடுதலாக 1737 கோடி வரி வருவாய் வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கனிமப் பொருட்களை ஏலம் விடுவதன் மூலமாக ஒரு 5000 கோடியும், பொது வினியோகத் திட்டத்தில் பருப்பு போன்ற பொருட்களின் அளவை குறைப்பதன் மூலமாகவும் வருவாயைக் கூட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இப்படி கடுமையான நிதிப்பற்றாக்குறையில் தமிழக அரசு தள்ளாடுவதால், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தவோ சுத்தமாக நிதி இல்லாமல் தள்ளாடுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே ஒரு புதிய தொழிற்சாலை கூட தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் எங்குமே உருவாக்கப்படவில்லை. எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளேடு, 2010-2011ல் 13.12% ஆக இருந்த தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 2014ல் 4.14% ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிடுகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இத்தனை மோசமான வீழ்ச்சி இருந்தால் இது வேலை வாய்ப்பில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
கடந்த ஆட்சி காலத்தில் 4 முதல் 8 சதவிகிதமாக இருந்த வசூல் அளவு, இந்த அரசில் 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. 20 சதவிகிதம் லஞ்சமாகத் தந்து விட்டு, எந்த தொழில் அதிபரால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியும் ?
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூன்று தயாரிப்பு யூனிட்டுகளை வைத்திருந்தது. நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து, படிப்படியாக தனது தயாரிப்பை நிறுத்திய ஃபாக்ஸ்கான், மொத்தமாக தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.
தமிழகத்தில் தனது தொழிற்சாலையை மூடியுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், நொய்டாவிலும், குஜராத்திலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியிலும் தனது தொழிற்சாலையை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இணைப்பு பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது காருக்கான உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அரக்கோணத்தில் நிறுவ முயற்சி செய்து, தமிழக தொழில்துறை அமைச்சர் கேட்ட அதிப்படியான லஞ்சத்தை தர முடியாத காரணத்தால் குஜராத்துக்கு மாறியது.
காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் ஆகிய அனைவரும், பிற மாநிலங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.
தமிழகத்தின் நலனை பாதுகாத்து, வேலை வாய்ப்பையையும் உட்கட்டமைப்பு வசதியையும் பெருக்கி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய அமைச்சர் பெருமக்களோ, கிரிமினலின் விடுதலைக்காக யாகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
சாதாரணமாக நகரத்தில் வாழ்வபர்களே, தங்கள் வாழ்வாதாரத்துக்காக சிரமப்படுகையில், அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் எங்கே செல்வார்கள் ? கூலிக்காக வேலைக்கு அழைக்கையில், அவர்கள் செம்மரம் வெட்ட அழைக்கிறார்களா, சந்தனமரம் வெட்ட அழைக்கிறார்களா அல்லது வேப்ப மரம் வெட்ட அழைக்கிறார்களா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை. அன்று வேலை பார்த்தால் வயிற்றுக்கு உணவு என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் இன்று ஆந்திர மாநில காவல்துறையால் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம், ஆந்திர அரசு அல்ல. இம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாத தமிழக அரசே இதற்கு முழுக் காரணம். இம்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாவிட்டால், இது போன்ற படுகொலைகள் தொடரத்தான் செய்யும்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.
நன்றி : புகைப்பட உதவி இந்தியன் எக்ஸ்பிரஸ், புது தில்லி மற்றும் இணையம்.
Photos courtesy : Indian Express, New Delhi and internet.
Dear Savuukku,
Hats off for this article. but my question is how many of us condemned this attrocities?. we started to watch IPL. Fool tamils are victims of every atrrocities. i request all my young tamil generations, ” please stand together and fight againsts casteism, alocholism. work hard. identify the good people and vote for them. we should get literacy.
Thank you,
Sincerely,
Dr. M. S. Senthil Saravanan
Marx Anthonisamy
“பா.மகவினரின் பணி பாராட்டுக்குரியது… அ. மார்க்ஸ்”
இது திருவண்னாமலை மாவட்டம், படவேடுக்கு அருகில் உள்ள முருகாப்படி எனும் மலையடிவாரக் கிராமம். கையில் குழந்தையுடன் நிற்பது தஞ்சியம்மாள். அவளின் கணவர் முனுசாமி ஆந்திர போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பொருளாதார நிலையில் மலை மேலுள்ள பழங்குடியினருக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
கொல்லப்பட்ட அறுவரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனப் பா.ம.கவினர் நீதிமன்றத்தை அணுகி ஆணை பெற்றுள்ளது வரவேற்கத் தக்க ஒன்று.
பா.ம.கவினர் தமது மக்களுக்கு மட்டும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்களே எனச் சிலர் நினைக்கக் கூடும். என்னிடமும் அப்படிச் சிலர் கூறினார்கள். என்னைப் பொருத்த மட்டில் நான் அப்படிக் கருதவில்லை. இந்த மலையடிவார மக்களோடுதான் அவர்களுக்கு அரசியல் தொடர்பு உள்லது. மலைமேலுள்ள பழங்குடியினரைப் பொருத்தமட்டில் அவர்களோடு நம்மைப்போலவே இவர்களுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.
அதோடு பா.ம.கவினரின் போராட்டப் பாரம்பரியமும் இதில் ஒரு பங்கு வகித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்ட அன்று, அம் மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியல் செய்துள்ளனர். எனவே கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசி இந்த வழக்கைப் போடுவதும் அவர்களுக்கு எளிதாகியுள்ளது.
மலையிலுள்ள பழங்குடியினரைப் பொருத்த மட்டில் அவர்கள் மிகவும் அச்சம் கொண்டவர்களாகவும், அரசியல் உணர்வு அற்றவர்களாகவும் உள்ளனர். மறு பிரேத பரிசோதனை கேட்பது என்பதற்கெல்லாம் பொது நல வழக்கு (PIL) போட இயலாது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்தான் வழக்குப் போட வேண்டும். இந்நிலையில் அவர்களைச் சம்மதிக்க வைத்து இதைச் செய்வது என்பதும், அவர்களை ஆந்திரா வரை அழைத்துச் சென்று வழக்குத் தொடர்வதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நாம் புறந்தள்ளி விடக் கூடாது.
இந்நேரம் இப்படியான ஒரு மனித உரிமை மீறல் பழங்குடி இருளர்களுக்கு ஏற்பட்டிருந்தால் பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டிருக்கும் என அடிக்கடி பேரா. கல்யாணி (பிரபா கல்விமணி) சொல்லிக் கொண்டிருந்தார். உண்மை. ஆனால் அதற்குப் பின் கல்யாணி போன்றோரின் முப்பதாண்டு கால உழைப்பும், நடத்திய போராட்டங்களும் உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.
மலைகளில் வாழும் பழங்குடி மக்களை அரசியல் படுத்துவது என்பது கடும் உழைப்பைக் கோரும் பணி. உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யும் உயர்ந்த பணியைத் தன்னலமும், தன் சாதி நலமும் மட்டும் பார்க்காத மனித உரிமை ஆர்வலர்கள் கையில் எடுக்க வேண்டும்.
இப்போது கூட ஒன்றும் தாமதமாகவில்லை. ஜவ்வாது மலையில் இப்போது கொல்லப்பட்ட நான்கு மலையாளிகள் புதைக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களைக் கொன்றதாக இதை ஒரு இனப் பிரச்சினையாக மட்டும் முன் நிறுத்துபவர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். இந்த நால்வரது உடல்களையும் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற முயற்சியை முன்னெடுங்கள். சற்றுச் சிரமமான, கொஞ்சம் செலவையும், கடும் உழைப்பையும் கோரும் பணி இது. ஆனாலும் பா.ம.க வைக் குறை சொல்லிக் கொண்டிராமல் ஆக்கபூர்வமாகச் செய்யக்கூடிய செய்ய வேண்டிய பணி இது.
https://www.facebook.com/photo.php?fbid=841077525964973
“பாமக புகாரில் அதிரடி வெற்றி: ஆந்திர போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!”
“பாமக சார்பில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் அனுப்பப்பட்ட உண்மை அறியும் குழுவினர், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களில் 18 பேரின் குடும்பத்தினருடன், ஆந்திர மாநிலம் சந்திரகிரி காவல் நிலையத்தில் நேற்று (12.4.2015) நேரில் புகார் அளித்தனர்.
வழக்கறிஞர் ரகுநாத் மூலம் இந்த புகார் மனு இன்று (13.4.2015) ஆந்திர உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் ஜோதி சென்குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்விடம் அளிக்கப்பட்டது.
பாமகவின் புகார் மனுவை தானாக ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர்நீதி மன்றம், புகார் அளித்த முனியம்மாளை மனுதாரராக அறிவித்துள்ளது. (இவர் கொலை செய்யப்பட்ட சசிக்குமாரின் மனைவி, மறுபிரேத பரிசோதனைக் கோரி பாமக மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.)
“ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு”
1. பாமக அளித்த புகாரின் கீழ் ஆந்திர போலிசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும்.
2. மனுதாரின் புகாரை வழக்காக ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கிறது.
3. இந்த வழக்கு குறித்த தவறான தகவல்களை வெளியிட ஆந்திர காவல்துறைக்கு தடை.
– ஆகிய உத்தரவுகளை ஆந்திர உயர்நீதிமன்றம் பிரப்பித்துள்ளது. இந்த படுகொலை நிகழ்வில் தொடர்புடைய ஒருவரையும் தப்பவிட முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அவசர வழக்கு நாளை மறுநாள் (15.4.2015) ஆந்திர உயநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்காக பாமக வழக்கறிஞர் குழுவினர் ஹைதராபாத் விரைகின்றனர்.
“தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை பாமக ஓயாது”
———————————————————————-
செய்தி: Andhra Pradesh Civil Liberties Committee (APCLC) General Secretary C Chandrasekhar, had in a writ petition filed in the high court earlier, alleged that it was a case of “murder” and the victims were poor labourers from Tamil Nadu.
The petitioner’s counsel, V Raghunath, told the high court that Muniyammal, wife of one of the deceased Sashi Kumar, had lodged a complaint with Chandragiri Police in Chittoor district with the specific allegation that “it was not an encounter death but was a well-planned and organised crime, committed by the STF police.”
The bench wanted Additional Advocate General D Srinivas to ascertain whether any such complaint has been received by the Station House Officer (SHO) or not.
“Whether they (Chandragiri Police) have received any complaint or not and if received what action has been taken,” the bench asked.
The bench, after going through the complaint of Muniyammal, added her as a party (as another petitioner) to the case and asked for issuing notices to her to inform her in this regard.
“She can engage a lawyer or free legal aid will be provided to her,” the court said.
The court then posted the matter to April 15.
“It was a cold-blooded murder of 20 poor labourers from Tamil Nadu,” APCLC had alleged and sought directions for registration of an FIR under IPC Section 302 (murder) against the policemen involved in the operation besides seeking a CBI probe.
http://www.business-standard.com/article/pti-stories/hc-restrains-ap-cops-from-giving-info-to-media-on-firing-probe-115041301032_1.html
// “தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை பாமக ஓயாது” //
———–
மோடியிடமிருந்து பெட்டி வந்ததும், அய்யா வன்னியரை மறந்து விடுவார். ஈழ வன்னியர் படுகொலைக்கு இந்திய ராணுவம் ராஜபக்சேவுக்கு முழு ஆதரவு தந்தது அனைவருக்கும் தெரியும். சோனியாவிடனிருந்து கேபினட் அமைச்சர் பதவியும் பெட்டியும் வந்ததும், அய்யா தொப்புள்கொடி உறவை அறுத்தெறிந்து விட்டார் என்பது ஊரறிந்த ரகசியம். அதுபோல்தான் இங்கேயும் நடக்கும்.
Let their souls rest in peace. Let Savukku be conscious of facts to avoid some agitative comments of common people. otherwise, great job.
கட்டுரை அருமை!
இதே போல இந்தக் கடத்தல்களுக்கெல்லாம் துணைபுரியும்/நடத்தும் தமிழக , ஆந்திர அரசியல்வியாதிகளையும், பின்நின்று இயக்கும் மாஃபியா கூட்டத்தையும் அழகிய வண்ணப்படங்களுடன் தோலுரித்துக் காட்டவும்!
காத்திருக்கிறோம்!
Good words. Except the PMK against words…
good words. except ur PMK against words…
கட்டுரை அருமை. ஆனால் உங்களின் வன்னிய சாதி, பாமக மீதான வெறி மட்டும் அப்படியேதான் உள்ளது போல. இறந்த ஒரு உடலில் இருக்கின்ற துன்புறத்தல்களை கண்டுபிடித்தாலே அந்த 20 பேருக்கும் நிச்சயம் நீதி கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பாமக இறந்து போன அனைவரின் குடும்ப வாரிசுகளுக்கும் கல்விச் செலவை ஏற்றுள்ளது. 19 குடும்பங்களை சேர்ந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆந்திரா சென்று காவல் துறையில் புகார் அளித்துள்ளது. உண்மையறியும் குழு அனுப்பி ஆய்வு செய்கிறது. இது எல்லாமே வன்னிய சமுதாய மக்களா? நல்லது உங்கள் பார்வையில் மிக சொற்பமாகவே தெரியும் போல.
ஏழைத் தொழிலாளிகளை சித்திரவதை செய்தால் யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே இவ்வளவு அட்டூழியங்களும் அரங்கேறியுள்ளன. இது வரை எந்த போராட்டமும் பெரிய அளவில் நடக்க வில்லை என்பது, மேலும் இது போன்ற செயல்களைச் செய்ய அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இது ஏழைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நடுநிலை, உண்மை என்று பல முகங்களை கொண்ட சவுக்கு, இந்த கட்டுரையில் தேவையில்லாமல் பாமக மற்றும் வன்னியர்களை “இடைசொருகல்” சேர்த்திருப்பது சவுக்கின் எழுத்து தன்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
சவுக்குக்கு தெரியாதது ஒன்றுமில்லை,
இன்றைய சூழலில் படுகொலை செய்யப்பட்ட இந்த தமிழர்களுக்கு, தெலுங்கு லாபிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசை நம்ப முடியமா?
நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் ஆறுதலுக்கு கூட ஒரு அறிக்கைவிடாத மத்திய அரசை தான் நம்ப முடியமா?
நீங்கள் சொல்லும் அந்த 6 வன்னிய குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் அவசர அவசரமாக உடலை எரித்ததன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது சவுக்குக்கு தெரியாதோ?
இறந்துபோன உடலை மறுபரிசோதனை செய்ய நீதிமன்றத்தை அணுக வேண்டுமென்றால் அந்த குடும்பத்தினர் மட்டும் தான் (அதுவும் மனைவி மற்றும் பெற்றோர்) வழக்கு தொடுக்க முடியும் என்பது சவுக்குக்கு தெரியாதோ?
மற்ற குடும்பங்கள் முன்வராத போது, பல வகையான மிரட்டல்களுக்கு மத்தியிலும், தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தாலும் பரவாயில்லை என்று தன் சொந்த வாழ்க்கையை இந்த தமிழ் இனத்திற்காக தியாகம் செய்து தைரியமாக சட்டரீதியான போராட்டத்திற்கு முன்வந்த அந்த 6 தமிழ் சாதி வன்னிய குடும்பங்களையும், அவர்களுக்கு துணை நிற்கும் பாமக மீதும் குறை கண்டுபிடிப்பதை என்ற ரகத்தில் சேர்ப்பதோ?
ஒரே ஒரு உடலில் குற்றத்தை நிரூபித்தாலே – அதன்மூலம் 20 படுகொலையையும் நிரூபிக்க முடியுமே” என்பதுதான் பாமகவின்நோக்கமாக இருக்க முடியும். ஆகவே, இந்தப் போராட்டம் கொல்லப்பட்ட 20 குடும்பங்களுக்கும் சேர்த்துதான் நடக்கிறது.
இவர்களுக்கு மரணம் தீர்வென்றால், இவர்களை அங்கு அழைத்து சென்று இக் கதிக்கு ஆளாக்கிய அயோக்கியர்களுக்கு தண்டனை என்ன? ,
மனித உயிரின் விலை தெரியாத மடையர்களால் சட்டம் எவ்வாறு பாதுகாக்கப் படும்?
எழுத்துகளை வலிமையாக்கும் சவுக்கே என் போன்றோரின் உணர்வுகள் இச் சமூகத்துக்கு தெரிய இதைக் காட்டிலும் ஏதாவது ஓர் வகையில் துணையாக நில்.
தவறாக எண்ண வேண்டாம். நான் முதலில் தேடியது, யாரவது முஸ்லிம் இதில் இருக்கிறாரா என்றுதான். நல்ல வேளை ஒரு முஸ்லிம் கூட கிடையாது. இல்லாவிட்டால், பாக்கிஸ்தானின் ISI உளவாளி இந்தியாவின் மிக உயர்ந்த ரக மரங்களை பாக்கிஸ்தானுக்கு கடத்த, ஏழை ஹிந்து தொழிலாளர்களுக்கு பணத்தாசை காட்டி மயக்கிவிட்டார். கடமை தவறாத இந்திய போலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலி கொடுத்துவிட்டார் என்று செய்தி வந்திருக்கும்.
எங்களுடைய வேதனையை சிறிது மறந்து, இறந்து போன இந்த ஏழை ஹிந்து சகோதரர்களின் குடும்பத்துக்கு என்னால் முடிந்தது ஒரு சொட்டுக்கண்ணீர்.
எந்தக் காலத்தில் முஸ்லிம் சகோதரர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டார்கள், வெடிகுண்டு உபயோகத்தைத் தவிர
// எந்தக் காலத்தில் முஸ்லிம் சகோதரர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டார்கள், வெடிகுண்டு உபயோகத்தைத் தவிர //
————
உண்மைதான். இதற்கு காரணம் திருக்குரான். காபிர் அயோக்கியன் மீது ஜிஹாத் செய் என திருக்குரான் தெள்ளத்தெளிவாக போதிக்கிறது.
ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், திருக்குரானை தடை செய்யுங்கள். 40 கோடி முஸ்லிம்கள் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி வெளியேறிவிடுவர். அப்புறம் உங்களுடைய தூய ஹிந்து ராஷ்டிரத்தில் பிராமின்ஸ், மேல்ஜாதி, கீழ்ஜாதி, பள்ளர், பறையரென 3500 ஜாதிகளும் எந்தையும் தாயுமாக மாமன் மச்சான்களாக கொஞ்சிக்குலாவி சந்தோஷமாக வாழலாமே. பாலும் தேனும் ஆறாக ஓடுமல்லவா?. என்ன செய்வதாக உத்தேசம்?
இறந்தவர்களின் இறப்புக்குக் காரணமான மூடர்களை அழிப்பதற்கு நான் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு, எனது மூளை அறிவுறுத்துகிறது, சட்டம் கடமையை செய்யவில்லையெனில் அவ் உயிர்களைப் பாதுகாக்காத சட்டத்தை மதிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்காது.இறந்த ஆன்மாக்களே! நீங்கள் என்னுடன் பிறக்கவில்லை என்றாலும் எனது ரத்தம் கொதிப்பதை என்னால் தடுக்க முடியவில்லை.
தம்மை காக்க ஆட்சி அமைப்பு எதுவும் வராது என மக்கள் புரிந்துகொள்ளும் தருணம் வந்தால் தன்னையும், குடும்பத்தையும் காக்க ஆயுதமேந்துவான் என்பது இந்த மடையர்களுக்கு எப்போது புரியும்?
அமெரிக்க பர்குசன் நகரில் கருப்பினத்தை சார்ந்தவர் ஒருவரை காவல்துறை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மத்திய புலனாய்வுத் துறை தானாகவே முன்வந்து விசாரனை செய்தது. அதுபோன்று இங்கு எதுவும் நடக்கவில்லை.
சிட்னி நகர கபே நிகழ்வில் குருவியாக சத்தம்போட்ட மோடி இந்த நிகழ்வில் ஊமையா நடிக்கிறார். எல்லாம் நம் தலையெழுத்துன்னு இனியும் போக முடியாது. திருப்பி அடிக்கனும்.
இறந்த 20 பேரில் 6 பேருக்காக மட்டும் பாமக வழக்கு தொடுத்தது என்பது உங்களின் அறியாமை அல்லது மட்டமான காழ்ப்புணர்ச்சி. வழக்கு தொடுக்கலாம் என முடிவெடுத்து உடலை எரிக்காதீர் என அனைவரிடமும் கூறியபோது யாரும் கேட்காமல் காவல்துறை அச்சுறுத்தலுக்கு பயந்து எறித்துவிட்டார்கள். மீதமுள்ள உடல்களை பாமகவினர் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே 6 உடலை எரிக்காமல் தடுத்தார்கள். மற்றவர்கள் சாதி சடங்குகளை சொல்லி எரித்துவிட்டார்கள்
great job. It’s logical with lots of figure and facts. Let the love for the society continue to grow. Best of luck.