கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எச்.வகேலா அவர்களை ஒதிஷா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இந்திய தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டிருக்கிறார். வகேலா இரண்டு மாத காலத்துக்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஏற்கனவே, தலைமை நீதிபதி வகேலாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி தத்து எடுத்த முயற்சிகள் சில காரணங்களுக்காக தடைபட்டன. இந்நிலையில், மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற தத்து முனைந்திருப்பது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாகவா என்ற சந்தேகத்தை வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
இதே சந்தேகத்தை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒதிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்குரிய அதிகாரம் நீக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தவறாகும்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நாளிலிருந்தே வகேலாவை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரைக் கர்நாடகத்திலிருந்து சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முயன்றபோது அதை வகேலா கடுமையாக எதிர்த்ததால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் அதிகாரம் முடிவுக்கு வரும் நிலையில் அவசர அவரசமாக வகேலா மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவரான வகேலா அடுத்த சில மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது முறையல்ல. வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்குத் தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒதிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றத்திற்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை.
தலைமை நீதிபதி வகேலா இடமாற்றம் செய்யப்பட்ட நேரமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும்.
இவ்வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இதற்காக புதிய நீதிபதியை நியமிக்க வேண்டியிருக்கும். அந்த புதிய நீதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குத் தான் உள்ளது. யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை கொண்ட நீதிபதி வகேலா, ஏற்கனவே இந்த விஷயத்தில் மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களை நிராகரித்தவர். இத்தகைய சூழலில் நீதியரசர் வகேலா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியது, அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை யாரும் கேட்காமலேயே 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது போன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவின் நடவடிக்கைகள் நீதித்துறை வட்டாரங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிருக்கின்றன. இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருப்பது இந்த ஐயங்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதி வகேலா இன்னும் இரு மாதங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீடிக்கலாம் என்ற போதிலும், அவை விடுமுறை காலம் என்பதால் அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது.
நீதிபதி வகேலாவின் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைகளையும், ஐயங்களையும் போக்க வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர செய்ய வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முட்டுக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடதீரகள். ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்காதிர்கள்.
விஷயம் என்ன என்பதை புரிந்து காெண்டு பதில் எழுதவும்.
நீதியே உன் விலை என்ன???
@nallavan Please have some decency while writing in public forums. I wonder the kind of education you had… You need not to gain good names for your teachers at least avoid gaining bad names to them.
Savukku should not allow this kind of messages.
Well Pointed out by PMK leader.
maraam veetti — neya oru criminal? maram vettina periya hero va?? olunga case nadantha nee 100 varusam jail irrukkavenidya paya, petchai paru
நீ எல்லாம் ஒருஅப்பனுக்கு பொறந்தியா நல்லவன் என்கிற நாயே? தவறு செய்யும் போது சுட்டிக் காட்டலாம். ஆனால் எப்பவுமே இராமதாஸ் மேல் என்னடா தேவையில்லாத விமர்சனம். எல்லாத்தையும் மூடிக்கிட்டு இரு. உனக்கு எல்லாம் அவரைப் பற்றி துளி கூட அருகதை இல்லை.
So, what is the moral of the story? India will be corrupt for ever! and good people cannot except raising their voice against these things. only the voice will be our’s and the choice isn’t! country of democracy! Very good!
If modi’s hands are behind this cheap trick then it is a SHAME. As a person who still believes MODI only can bring good change given the present conditions , I strongly condemn this action of the THICK SKINNED Dattu.
Loosing hope on Jaya asset case and also on SC
தேசத்துக்காகத்தான் சட்டம். சட்டத்துக்காக தேசமில்லை. தேச பாதுகாப்பு என்று வந்துவிட்டால், எந்த சட்டத்தையும் குப்பையில் தூக்கியெறிய பார்லிமெண்டுக்கு அதிகாரமுண்டு. தேவைப்பட்டால் சட்டசாசனத்தை மாற்றவும், பழைய சட்டங்களை நீக்கவும், புதிய சட்டங்களை ஏற்றவும் அதிகாரமுண்டு.
“தேசிய பாதுகாப்பு கருதி நீதிபதி வகேலாவை இடமாற்றம் செய்யும் கட்டாயம் வந்தது” என பர்லிமெண்டின் பெரும்பான்மை கூட்டு மனசாட்சி தீர்வு கொடுத்தால், எந்த கொம்பனாலும் எதுவும் செய்யமுடியாது.
இந்துத்துவாவின் கரங்கள் வலுவானது யாராலும் முறியடிக்க முடியாதென்பது இதன்மூலம் தெளிவாகிறது