கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை ஒதிஷ்ஷா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு எந்த நேரத்திலும் வரவுள்ள நிலையில், இந்த மாற்றம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த மாற்றத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதையடுத்து, தற்போது திமுக தலைவர் கருணாநிதியும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் உடன்பிறப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“உடன்பிறப்பே, 13-4-2015 தேதிய “டெக்கான் கிரானிகல்” நாளிதழில் ஒரு செய்தி! “Karnataka Chief Justice to move to Orissa” என்ற தலைப்பில் வெளி வந்துள்ள அந்தச் செய்தியில், “In a surprise move the Chief Justice of Karnataka High Court Dhirendra Hirala Waghela has been shifted as Chief Justice of Orissa High Court. xxx Highly placed sources told Deccan Chronicle that soon after the Supreme Court collegium of Judges headed by the Chief Justice of India H.L. Dattu recommended the transfer, Justice Waghela is understood to have expressed certain reservations in accepting it on the ground that the Orissa High Court is a smaller High Court compared to Karnataka High Court””. (ஆச்சரியமடையக் கூடிய வகையில், கர்நாடக உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹிராலா வகேலா அவர்கள் ஒரிசா உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். .
“டெக்கான் கிரானிகல்” இதழுக்கு சில உயர் மட்டத்திலிருந்து கிடைத்த தகவல்படி – உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அவர்களின் தலைமையிலான நீதிபதிகள் குழு, நீதிபதி வகேலாவின் மாறுதலுக்குப் பரிந்துரை செய்தபோது, நீதிபதி வகேலா – ஒரிசா உயர் நீதி மன்றம், கர்நாடக உயர் நீதி மன்றத்தை விட சிறிய நீதி மன்றம் என்பதால், அதனை ஏற்றுக்கொள்வதில் தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்) “டெக்கான் கிரானிகல்” – தினகரன் – தி இந்து (தமிழ்) போன்ற ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே பெங்களூர் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியின் மாறுதல் பற்றி செய்தி வந்துள்ளது. “தினகரன்” நாளிதழ் இவரது மாறுதல் பற்றி குறிப்பிடும்போது, “கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக வகேலா கடந்த 2013 மார்ச் 7ஆம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, அதை விசாரணை நடத்திய நீதிபதி குன்ஹாவுக்கு பக்க பலமாக இருந்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வர உதவினார். கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் இவரை ஒரிசா மாநில தலைமை நீதிபதியாக பணி இட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அவருக்குப் பதிலாக தலைமை நீதிபதியாக கே.எல். மஞ்சுநாத் நியமனம் செய்யப்பட்டார். இடையில் ஒரு வாரத்திற்குப் பின், மீண்டும் தலைமை நீதிபதி பணியை வகேலா தொடர்ந்து வருகிறார். தற்போது மீண்டும் ஒரிசா மாநிலத் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வகேலா மாற்றத்தின் பின்னால் பலமான அரசியல் தலையீடு இருக்கும் வாய்ப்பு உள்ளதாக வக்கீல்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது”” என்றெல்லாம் எழுதப் பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி தற்போது ஒரிசா உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டிருந்த போதிலும், நமது “முரசொலி” நாளிதழில் 29-12-2014 அன்று ஒரு பெட்டிச் செய்தி வெளி வந்தது. அதில், “நீதி மன்ற வட்டாரங்களில் பேசப்படும் இந்தச் செய்திகள் உண்மையா? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை தொடர்பாக, கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி, நேர்மையோடு நடந்து கொள்வதால், அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விரைவில் மாற்றப்படவிருப்பது உண்மையா? கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலாவை மாற்றி விட்டு, அவருக்கு அடுத்த இடத்திலே உள்ள நீதிபதி மஞ்சுநாத் அவர்களை கூடுதல் பொறுப்பில் நியமிக்கவிருப்பது உண்மையா? மத்திய அரசின் சார்பாக ஒருவர் இதற்கான முயற்சியில் மத்திய அரசின் சார்பாக ஒருவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா?
நீதி மன்ற வட்டாரங்களில் பேசப்படுவதாக வந்த அந்தச் செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அல்லவா தற்போது கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி மாற்றப் பட்டிருக்கிறார்.
கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா அவர்கள் திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, வகேலா பற்றிய சில விவரங்களை உனக்கு நான் தெரிவிக்கிறேன்.
2-2-2015 அன்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில், பவானிசிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்ற விசாரணை வந்த போது, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, “சி.ஆர்.பி.சி. 24(1)ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தலைமை நீதிபதி வகேலா அவர்கள், “இந்த மேல்முறையீட்டு மனுவில் நீங்கள் (பவானி சிங்) ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது, 24 (1)ஐப் படித்துப்பாருங்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காத போது, பவானி சிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது” என்றெல்லாம் வகேலா உறுதிபடக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தலைமை நீதிபதி இவ்வாறு பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடிப்பதற்குச் சட்டப்படியான எதிர்க் கருத்துகளைத் தெரிவித்ததால், பவானி சிங்குக்காக ஆஜரான வழக்கறிஞர் செபாஸ்டியன் எழுந்து, இந்த வழக்கினைத் தலைமை நீதிபதி வகேலா விசாரிக்கக் கூடாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்றும் கோரியதால், வழக்கினை வேறு அமர்வு விசாரிக்கட்டும் என்று தலைமை நீதிபதி வகேலா தானாக முன் வந்து கூறினார்.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால் வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, தான் இந்த வழக்கை விசாரிப்பதில் ஆட்சேபணை ஏதும் உண்டா என்று பவானி சிங்கின் வழக்கறிஞர் செபாஸ்டியனிடம் கேட்டு, அவர் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து தான் வழக்கினை விசாரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்து விட்டு, தலைமை நீதிபதி வகேலா அவர்கள் விசாரணையின் போது விதிமுறைகளையொட்டிச் சில கருத்துகளைத் தெரிவித்த பிறகு, அவர் அந்த வழக்கினை விசாரிப்பதற்கு செபாஸ்டியன் ஆட்சேபணையைத் தெரிவித்தார். இந்தக் குறிப்புகள் எல்லாம் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!
இவை மாத்திரமல்ல; செல்வி ஜெயலலிதா தரப்பினர் மீது பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, பவானி சிங்குக்கு முன்பாக, அந்தப் பதவியில், அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியதிரு. பி.வி. ஆச்சார்யா தனது வாடிநக்கைப் பயணத்தை “அனைத்தும்
நினைவுகளிலிருந்து (All from Memory)” என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த ஆங்கில நூலின், இருபத்தைந்தாவது அத்தியாயத்தின் தலைப்பே, “Case Against Selvi J.Jayalalitha – Chief Minister of Tamil Nadu” என்பதுதான்! அதில் 206ஆம் பக்கம் முதல் 220ஆம் பக்கம் வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக தான் இருந்த போது எப்படிப்பட்ட அனுபவம் தனக்கு ஏற்பட்டது, என்னென்ன தவறுகள், முறைகேடுகள் அந்த விசாரணையில் நடைபெற்றன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்த நூலை பெங்களூரில் 15-11-2014 அன்று நடைபெற்ற நிகடிநச்சியில் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.வகேலா தான் வெளியிட்டிருக்கிறார். நீதிபதி திரு. வேணுகோபால் அவர்களும், மத்திய அரசின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களும் நூல் வெளியீட்டு நிகடிநச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியையும் இந்தத் தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது அல்லவா?
வகேலா அவர்கள் மாற்றப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருசில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
“சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டத்தின் மரபுகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தலைமை நீதிபதி தத்து ஜாமீன் வழங்கியிருக்கிறார்.
சாதாரண வழக்கு என்றாலுங்கூட, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன் எதிர் தரப்பினரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆனால் இந்த வழக்கில் எதிர்தரப்பான கர்நாடக அரசையும், தமிடிநநாடு லஞ்ச ஒழிப்புத் துறையையும் விசாரிக்காமலேயே ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றவாளிகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போது அதற்கான காரணங்களைத்தெளிவாகக் கூற வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதி மன்றமே தீர்ப்பளித்திருக்கிறது.
இதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான காரணம் எதையுமே கூறாமல் நான்கே வரிகளில் தலைமை நீதிபதி தத்து ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா உட்பட நான்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்களை கர்நாடக உயர் நீதிமன்றமே நாற்பது பக்க உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் ஜாமீன் கேட்டு மட்டுமே மனு செய்தவழக்கில் (குற்றவாளிகள் கோரிக்கை எதுவும் வைக்காத நிலையிலேயே) மேல் முறையீட்டு மனுவையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டுள்ளார். கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நுhற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி தத்து வழங்கியிருக்கும் இந்தச் “சூப்பர்” சிறப்புச் சலுகை முறை கேடானது. ஒரு ஊழல் குற்றவாளி தொடர்பான வழக்கிலேயே இப்படியொரு முறைகேடான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு விடப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கையாகும்”
என்றெல்லாம் கூறியதோடு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயிரம் வழக்கறிஞர் களின் கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரிடம் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,பாலி நாரிமனின் மகன் உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருப்பதால், பாலி நாரிமன்ஜெயலலிதா சார்பில் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று புகார் அளித்துள்ளார். “இந்த வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால், விசாரிப்பதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளவேண்டும்” என்று டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி தத்துவுக்கே மனு அளித்துள்ளார் என்பதும் நினைவிலே கொள்ளத் தக்கது.
கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலா அவர்கள் ஒரிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி எச். எல். தத்து அவர்கள் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய காலேஜியம் இந்த உத்தரவை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பிறப்பித்துள்ளது.
நமது மதிப்பு மிக்க நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால் “”மாறுதல்கள்” போடுவதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடமிருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன்.
ஒரிசா உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிப் பதவி கடந்த பிப்ரவரி மாதம்2015லிருந்து காலியாக இருக்கும்போது, திடீரென்று ஏன் ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த “டிரான்ஸ்பர்” போடப்பட்டது? தேசிய நீதித் துறை நியமனக் கமிஷனுக்கான அறிவிக்கை திங்கள்கிழமை அன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த மாறுதலைச் செய்ய வேண்டிய காரணம் என்ன?
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரஉருவாக்கப்பட்ட “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை” எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு 15-4-2015 அன்று விசாரணைக்கு வருவதற்குள் ஏன் இந்த மாற்றல் உத்தரவு போடப்பட்டது?
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டுள்ளதை நாம் இந்த நேரத்தில் மறந்து விட முடியாது. எனவே இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதிலே தவறு இருக்க முடியுமா?
உச்ச நீதி மன்றத்தில் 15ஆம் தேதியன்று அளிக்கப்படும் தீர்ப்பில் பவானி சிங் நியமனம் தவறானது தான் என்று ஒருவேளை சொல்லப்படுமேயானால், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டினை விசாரிப்பதற்கு புதிய நீதிபதி ஒருவரை கர்நாடக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும். மேலும் அரசு புதிய வழக்கறிஞராக பவானி சிங் அவர்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும், கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு. மேலும் தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் திங்களில் ஓய்வு பெறவிருப்பதால், அவருக்குப் பதிலாக இந்த முக்கியமான வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதியையும் நியமிக்க வேண்டிய பொறுப்பும் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே உண்டு. இந்தநிலையில் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த உச்சக் கட்ட ஊழலுக்கெல்லாம் முழு முதற்காரணம் யார் ? எதற்காகஇந்த மாறுதல்? இதையெல்லாம் உன்னுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
நீதித் துறையின் சுதந்திரம், நேர்மை, நடுநிலை – ஆகியவற்றின் மீது மிகஉயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதித் துறையின் நிர்வாக முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்று சில மூத்த வழக்கறிஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும் போது நாம் என்ன பதில் கூறுவது?
நமது ஜனநாயக நாட்டில் அனைத்துக்கும் மேலானது நீதித் துறை தான்;ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதே நீதித் துறை தான். அப்படிப்பட்ட உயிர்நாடியான அந்தத் துறையின் மீதே, இதுவரையில் இல்லாத அளவுக்கு, இப்படி யெல்லாம் விமர்சனங்கள் வருவது நம் நாட்டுக்கும், நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் – (சத்தியமேவ ஜயதே)என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா?”
இவ்வாறு கருணாநிதி இந்த மாறுதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Karunanidhi avargalae intha vazhakkil kannakil than pizhai irukirathu aanal ungal vazhakkaiyae pizhaiyaga irukiradhae pombala porikkiyaga irundha neenga pala pombala porikkigalaiyum pettru avargal pala pengalin vazhvai seerazhithu ullanar..ithanai thatikketta palarai kolai seithu ullergal..Indira ungalin ungal pillaigalin attagasathai adakka meesa konduvanthu ungal veetu perum pombalai porikkiyana Stalin vayai udaiththar..ungal puthiran seitha thavarai thiruththi ozhukamaga vazhavaikkamal indiravin magan rajivai tharkolai padai vaithu kolai seithirgal..atharku uruthuaiyaga irundhavarai match it I lieu shu veliyettri thanikatchi nadaththa indruvarai panam tharugirirgal..palar neenga avarai katchiyai vittu veliyettriyadhu ungal pillai valarchikaga endru Ninaikavaithirgal.. Aanal sattam purinthavarukku theriyam avar yen veliyerinar endru I than moolam rajiv kolai vazhakkin mukkiya satchiyar endru satta vallunargal yugikka mudiyatha nilaiyai uruvakinirgal..aanal ith naliniyai santhithapin urithi seitha rajiv Gandhi magal ungal manaiviyai kaithu seiyya 2G vazhakkil mukkiya kuttravaliyaga ungal kula vilkkai kaithu seiyya vazhivaguththar aanal neengal athai thavirka kanimozhiyai vazhakkil mukkiya kuttravaliyaga mattrineergal..ayya neenga yen Kanimozhiyai veli menai kattu Delhi sendrigal enbathaiyum nangal unarvom..ozhukka mattra ungalal perapatta valarkka patta pillayum ozhukkamatruthan irukkum enbathai unaramaruththu pirar pettra pillaigalai kolai seithirgal..indru kolaiyundavanin pillaigal valarnthu ungal kudumbathar pazhithirka purapattu ullathu..90 vayathilum neengal thavurukku kidaiththa kuliyaga karuthamal menmelum thavurugal seigirigal..2G vazhakkil irunthu thappikka pala satchigalai kolai seithirgal..sadiq badsha,auditor ramesh moththa kudumbam..pothumae ungal kolaiveri..thamizhanai izhukkindri vazhavidungal..
“நீதியே, நீ இன்னும் இருக்கின்றாயா?” இந்த கேள்வியை இந்த சாக்கடை கேக்கலாமா???????
Uzhal rany jeyalalitha theriuma?
ஊழல் சக்கரவர்த்தி, ஊழல் மன்னன், திருட்டுக்கூட்டத்தின் தலைமை தளபதி, இந்தியாவின் ஊழல் குரு, இந்த போக்கிரி பேசுவதை சபைக்கு எடுத்துக்கொள்ளலாமா?
// நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் //
———–
இந்த கிழட்டு நரி சொல்வது “வாய்-மொய்யே வெல்லும்”. அதாவது வாய்ஜாலம் செய், மொய் வாங்கு.
/வாய்மையே வெல்லும் – (சத்தியமேவ ஜயதே)என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாடு/
Is HE really remember this slogan..?
//கருணாநிதி முன்னாள் ஊழல் மன்னனாக இருந்தாலும் இந்நாளில் நியாயம் பேசுகிறார். அதிலென்ன தவறு என சிலர் கேட்கின்றனர்.//
those are RAJATHANTHIRAM. WHO SAID .. all press frauds.. if other did they are idiot.. pee thinraa press pasanga
Manmohan threatened for judge appointment ? who has done that one? indha killattu paya? ivan arrikkai ku oru site?? kevalam
கருணாநிதி முன்னாள் ஊழல் மன்னனாக இருந்தாலும் இந்நாளில் நியாயம் பேசுகிறார். அதிலென்ன தவறு என சிலர் கேட்கின்றனர். அதாவது முன்னாள் விபச்சாரி இப்பொழுது கற்புக்கரசியாக மாறிவிட்டாள் என சொல்வது போல் இருக்கிறது. வறுமையின் கொடுமையால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பென்னை மீட்டு மறுவாழ்வு தந்தால் நிச்சயமாக அந்த பெண் சாகும் வரை அந்த தொழிலை செய்யமாட்டாள். ஆனால், அரசியல் விபச்சாரன் சாகும்வரை திருந்தவே மாட்டான். அவன் யோக்கியனாக வேடம் போட்டால், அதுவும் பேரம் பேசுவதற்கான ஒரு யுக்தியேயன்றி வேறெதுவுமில்லை.
ஜெயலலிதாவை மிரட்டி தனது அருமை மகள் கனிமொழிக்கு அடைக்கலம் தேடுகிறார். மற்றபடி இந்த கிழட்டு நரிக்கு எவன் செத்தாலும் கவலையில்லை.
Savukku avargalae karunanidhi ungal seyalpadai mudakka muyarchipathal neengalum pizhappu nadaththa avarathu seithiyai podugirirgal endru unaramudigirathu..intha seithiyil niyayam irukiradha endru koorungal..India neethi thooraiyae vetki thalaigooniyum alavukku neethi arasargalai sattaththai emattriyavar karunanidhi enbathu ulagu ariyam..90 vayuthu kadanthum than vaippatti magalai satchiyai kolai seithi athai evvaru sattathin mun tharkolai endru nirubanam seithar enbathu ulagu nangu ariyum..Rajiv kolaiyin karana karthavana karunanidhi visaranaikku kooda sellamal irukka evvaru arasiyal natpinai payanpaduthinar endru anaivarum arivar..indru Ivar neethi thuraiyin seyalpadai kuraikoorugirar..
எளிதாக தமிழிழ் டைப்படிக்க:
http://english-to-tamil-keyboard.appspot.com/
குரு அவர்களே, யார் சொல்றாங்க என்பது முக்கியம் அல்ல. என்ன சொல்றாங்க என்பது தான் முக்கியம்.
Intha oor porukigal solliyadhu kettuketudhan vaipattigalodu suttri indru pombalai porukigalai pettru Potta oru ayogyan nammai aalum nilai uruvagi irukiradhu..andrae nam moon or ivanai seruppal adiththu viratti irundhal indru gurudanaga theruvil pitchai eduthiruppan aanal nam munnor seithathavaru indru indru ellathuraiyilum uzhal ayogyathanam uruvakki irukirar karunanidhi..seitha thavarai maraikka kolaiyum seithu athai tharkolai endru evidence uruvakkum oru kizhtharamana kudumbathinai intha samudhaya urupinaraga koduthu irukirar..
I don’t find any fault in this article. It doesn’t matter whether Mr. karuna is corrupt or not. the problem is, currently, he speaks truth or not. his questions are valuable now. Bad must be punished should be the result. It is applicable to all. Let Savukku continue it’s fight for justice and let us follow.
Jaya thavaru seithalum vazhakkai izhuthadithalum vazhakkai muzhumaiyaga nadathi mudithullar..aanal karunanidhi indru oru uzhal vazhakkaiyum.kolai vazhakkaiyum muzhumaiyaga santhithathum nadaththa vittathum illai..vazhakkil irundhu vidupada arasiyal pathavi moolamum arasiyal nanbargal moolamum thiruttuthanam seithavar than karunanidhi.. Rajiv kolai vazhakkil vidupada natpai thavaraga payanpaduthinar..vingnana thirudan endru pattam vangiya vazhakkil satchiyai kalaiththu vazhakkaiyae udaiththar..indru 2G alaikattrai muraikedaga pettra vazhakkil mukkiya satchi unitech sadiq BASHA maranamum athu tharkolai nirubikka payan paduththa patta katchiyin visuvasiyana doctor enna palavattrai adukalam..athaiyellam Vida kodumai avarathu peran thoopakki vaiththu woodlands hotel vasalil nindru suttathai maraikka CCTV pathivugalai kuda police commissionerai vaiththu azhithar..pillai seitha thavurukku auto sankarai palikonduthar..neelum nanbarae intha kudumbam seitha akiramam..
“உ.பியில் வீட்டையும் நிலத்தையும் பாதுகாக்க, 800 வால்மீகி தலித்துக்கள் ஓட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர்” எனும் செய்தி படித்தேன். நீதி கேட்டு போராடி போராடி கடைசியில் இஸ்லாம் ஒன்றே வழியென்று இவர்கள் அம்பேத்கர் பிறந்த நாளன்று முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது. இப்போழுது பி.ஜே.பி அலறியடித்துக்கொண்டு இவர்களுடைய வீட்டையும் நிலத்தையும் பாதுகாக்க ஓடுகிறது.
தமிழக மக்களுக்கும் நான் இதைத்தான் சொல்கிறேன். உங்களுக்கு நீதி வேண்டுமானால், நீங்கள் இஸ்லாத்தை தழுவ வேண்டிய அவசியமில்லை. திருக்குரானை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு கோட்டையின் முன்னால் லட்சக்கணக்கில் அணிதிரளுங்கள். “அல்லாஹு அக்பர்” என்று முழங்குங்கள். “என்னை எவனும் அசைக்கமுடியாது” என இறுமாந்து தூங்கும் அய்யா, அம்மாவெல்லாம் அலறியடித்துக்கொண்டு உங்கள் காலில் விழுந்து கெஞ்சி உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறார்களா இல்லையா பாருங்கள்.
They converted to Islam to protect themselves from SP MP Azam Khan.. Don’t twist the case!
This is started by Karuna only during 67’s. now ivan yokkkiyan mathri pesaran.. savukku…. this article shows how ugly you are…
எப்படி கொள்ளையடிப்பது என தமிழக அரசியலுக்கு கற்றுக்கொடுத்த ஊழல் மன்னன், இப்படி ஊழலுக்கெதிராக குரல் கொடுப்பது “சாத்தான் வேதம் ஓதுவது போல்” உள்ளது. “கனிமொழிக்கெதிராக நீ வாயைத்திறந்தால், நான் உனக்கெதிராக அலறுவேன்” என ஜெயலலிதா மற்றும் பார்ப்பன சாணக்கியர்களை மிரட்டும் யுக்திதான் இது. “சரி, நமக்குள் ஒரு டீல் போடுவோம்” என அம்மா தூது அனுப்பினால், அம்மாவை பாதுகாக்க இந்த குள்ளநரி அலறுவது போல் அலறி ரகசியமாக சட்டத்தில் எப்படி ஓட்டை போட்டு தப்பிப்பது எனும் கலையையும் அம்மாவுக்கு கற்றுத்தரும்.
முஸ்லிம்களுக்கு அல்வா தர தொப்பி போட்டு நோன்பு கஞ்சி குடிப்பான், பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு பேசுவான், குடும்பத்தாரை சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கச்சொல்வான், சங்கராச்சாரியார் மந்திரித்து தந்த மஞ்சள் துண்டை போர்த்திக்கொண்டு டெல்லிக்கு காவடியும் தூக்குவான். கடைந்தெடுத்த அயோக்கியன்.