கடந்த திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் திடீர் பரபரப்பு…… ஜாபர் சேட்டை தலைமைத் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி அழைததிருக்கிறது என்று…. இந்தச் செய்தி பத்திரிக்கையாளர்கள் பலருக்கு சவுக்கால் சொல்லப் பட்டவுடன், ஜாபர் சேட்டையே தொடர்பு கொண்டு கேட்டார்கள். உடனே ஜாபர் சேட்டுக்கு, “திருடனுக்கு தேள் கொட்டியது போல்” ஆனது….. (இந்தப் பழமொழி இவருக்கென்றே உருவானது போலில்லை ? ) இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கினார் ஜாபர் சேட்.
தமிழகத்தில் தினத்தந்தி என்பது, அரசு கெஜட் போல….. தினத்தந்தியில் செய்தி வந்தால், அதை மறுத்துப் பேச ஆளே கிடையாது. அந்த அளவுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஊடகம், தினத்தந்தி. உயர் உயர் அதிகாரிகள் தகவல் சொன்னால் மட்டுமே தினத்தந்தியில் செய்தி வரும். சில சமயங்களில், தேவைப்பட்டால், கருணாநிதியிடமே தகவல் கேட்டு வெளியிடும் அளவுக்கு ஒரு வலிமையான ஊடகம் தினத்தந்தி. ஜாபர் உடனடியாக என்ன செய்கிறார், தினத்தந்தியில் செய்தி வந்தால், ஊர் வாயை அடைத்தாற் போல் ஆகி விடும் என்று, தினத்தந்தி நிருபரிடம், ஒரு தகவலை கூறுகிறார். அந்த செய்தி, முதல் பக்கத்தில் வருமாறும் கேட்டுக் கொள்கிறார். தேர்தல் ஆணையம் ஜாபரை வரவழைத்தது, ஜாபர் டவுசரை கழற்றுவதற்காக. ஆனால், ஜாபர், தந்தி நிருபரிடம், சட்டம் ஒழுங்கு விவாதம் நடத்துவதற்காக அழைத்திருக்கிறார்கள் என்று போட்டாரே ஒரு போடு. சட்டம் ஒழுங்குக்கென்று, தனியாக ஒரு கூடுதல் டிஜிபி இருக்கும் போது, உளவுத் துறையைச் சேர்ந்த ஜாபரை எதற்காக அழைக்க வேண்டும் ? ஜாபர் என்ன அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா ? இந்த ஆள் ஒரு டம்மி பீஸு என்பது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்படி ஒரு பில்டப்பை கொடுத்தார் ஜாபர். ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள். ஜாபரின் புளுகு, எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை.
டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தவுடனேயே, ஜாபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜாபரை அமரவைத்து, சராமாரியாக கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள். சவுக்கும் தன் பங்குக்கு, அன்று காலை 6 மணிக்கு, தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், ஜாபர் பற்றிய புகாரையும், ஆதாரங்களையும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தது. 4 மணி நேரம். பின்னு பின்னென்று பின்னியிருக்கிறார்கள். முதலில் ஜிம்பிய ஜாபர் சேட், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார். பிறகு, குழப்பி ஒரு வழியாக சமாளித்து, முடித்த போது, தேர்தல் ஆணையர்கள் ஜாபரை வெளியே அனுப்பி காத்திருக்கச் சொல்லி விட்டு, தங்களுக்குள் விவாதித்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஜாபரை அழைத்த, தேர்தல் ஆணையர்கள், உங்களை மேற்கு வங்கத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்க முடிவெடுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அதிர்ந்து போன ஜாபர் சேட், (மம்தா பேனர்ஜி போனையெல்லாம் ஒட்டுக் கேட்டா பின்னிடுவாங்க ஜாபர்) தனது விருப்பமின்மையை தெரிவித்திருக்கிறார். இதில் உங்கள் விருப்பம் என்று எதுவும் இல்லை. இது உத்தரவு, இதை மதிக்காவிட்டால், கடும் விளைவுகள் ஏற்படும் என்பதை மூத்த போலீஸ் அதிகாரியான உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
இறுகிய முகத்துடன் வெளியே வந்த ஜாபர் சேட், அன்று டெல்லியிலேயே தங்கி, டெல்லியில் தனக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவரையும் சந்தித்து, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டிருக்கிறார். அனைவரும் உதவி செய்ய இயலாது என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒரு சிலர், மூடிக்கிட்டு, வெஸ்ட் பெங்கால் போ என்றும் சொல்லியிருக்கிறாக்கிறார்கள். மறுநாள் முழுவதும் டெல்லியில் தனது பகீரத முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறாததால், அன்று மாலை சென்னை திரும்பினார் ஜாபர். திரும்பி வந்ததும், யாருடனும் பேசவேயில்லை. மிகுந்த கோபமாயிருக்கிறார். இதற்குள், ஜாபர் மேற்கு வங்கம் செல்லும் தகவல் பரவியது. பத்திரிக்கைகளை அழைத்து, முதல் நாள் தந்தியில் பொய்ச் செய்தி வரவைத்தது போல, வரவைக்கக் கூட ஜாபரால் முடியவில்லை. அமைதியாக இருந்திருக்கிறார்.
இதற்குள் தினத்தந்திக்காரர்கள், உஷாராகி விட்டனர். தன் மீது நடக்க இருக்கும் விசாரணையை மறைத்து, ஜாபர், பொய்ச்செய்தி வெளியிட வைத்ததாக கோபம் கொண்டனர். உண்மை என்ன என்று விசாரித்து எழுதுவோம் என்று விசாரித்து, நடந்த உண்மைகளை அப்படியே எழுதுகிறார்கள்.
பூனைக்குட்டி வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஜாபர் சேட். மறு நாள் காலை கருணாநிதியைச் சந்தித்தார் ஜாபர். கருணாநிதிக்கு ஜாபர் மீது கடும் கோபம் இருந்தாலும், தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்து வைத்துள்ள ஜாபர் சேட்டை விலக்கி வைத்தால் அதுவே பெரும் ஆபத்தாக முடியும் என்ப உணர்ந்து, கோர்ட்டுல கேஸ் போடுய்யா என்று கூறுகிறார்.
இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் ஜாபரிடம் கருத்து கேட்ட போது, நான் திங்கட் கிழமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற போது, என்னை வியாழனன்று வருமாறு ஒரு கடிதத்தை கொடுத்தனர். அந்தக் கடிதத்தின் படி நான் வியாழனன்று தேர்தல் ஆணையம் சென்றேன். அவர்கள் அந்தக் கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். நான் என் அலுவலகத்தில் தான் அமர்ந்திருக்கிறேன். கட்டாய விடுப்பில் செல்லும் திட்டமில்லை. மேலும், தேர்தல் சமயத்தில் ஒரு அதிகாரி விடுப்பில் செல்லக் கூடாது என்று எங்கும் சொல்லவில்லையே ? என்று கூறியிருக்கிறார்.
ஜாபரு…. இதெல்லாம் ஒனக்கே ஓவரா தெர்ல ? எலெக்ஷன் கமிஷன் லெட்டர் குடுத்தாங்களாம். இவரு அங்க போனாராம்….. அந்த லெட்டர திருப்பி வாங்கிக்கினாங்களாம். என்னாய்யா கலர் கலரா ரீல் உட்ற… ஜாபரை தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பிய வரவழைத்தது. அந்த சம்மனை திருப்பியெல்லாம் வாங்கவில்லை. எதற்காக சம்மனை திருப்பி வாங்க வேண்டும் ? சிம்பிளா சொன்னா லூசுத்தனமா இருக்கு ஜாபர்….. இன்னைக்கு தேர்தல் ஆணையத்துக்கிட்டேர்ந்து தப்பிச்சுடலாம்னு மனப்பால் குடிக்கிறீங்களே….. அமலாக்கப் பிரிவு விசாரணைன்னு ஒன்னு இருக்கே… அதுலேர்ந்து எப்படி தப்பிக்கப் போறீங்க….
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஜாபர். இப்டியே…. நாம தர்பார் நடத்திக்கிட்டு இருக்கலாம். திருப்பி திமுக ஆட்சி வந்துடும். நம்பள யாரும் அசைக்க முடியாதுன்னு என்னா
ஜாபர் ஒனக்கு அப்டி ஒரு நம்பிக்கை… ?
தேர்தல் ஆணையம் ஜாபர் சேட்டின் விடுப்பு விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவது குறித்து இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறது.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சோனியாவும், ராகுலும் வருகை தருகையில் தீவிரவாதிகள் தாக்க இருப்பதாக உளவுப் பிரிவுக்கு தகவல் வந்திருக்கிறது. நான் மாற்றப் பட்டால், ராஜீவ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது படுகொலை செய்யப் பட்டது போல, ஏதாவது நிகழலாம், நிகழ்ந்தால் நான்தான் அதற்கு பொறுப்பாக வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஜாபர் தெரிவித்ததாக செய்தி வந்திருக்கிறது. அப்டி ஏதாவது நடந்தா, உன்ன எப்டி கேப்பாங்க ? உன்னத்தான் வெஸ்ட் பெங்காலுக்கு போன்னு அனுப்பிட்டாங்களே… ? கம்முனு மூடிக்கிட்டு போக வேண்டியதுதானே… ? யாரு உன்ன கேக்கப் போறா ? ஓவரா பில்டப் குடுக்குறியே ஜாபர்… இது இல்லாம, இந்த டெர்ரர் அலர்ட்டெல்லாம் எப்படி உருவாகுதுன்னு எங்களுக்கும் தெரியும் பாஸு… மத்திய உளவுத்துறை எப்போதும் அனுப்பும் அலர்ட் தான் அது. சோனியாவும் ராகுலும், இஸட் பிரிவு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், அவர்கள் எப்போது ஒரு மாநிலத்துக்கு சென்றாலும், அந்த மாநிலத்துக்கு டெர்ரர் அலர்ட் அனுப்புவது வழக்கமே. புதிதாக, ரகசிய தகவல் ஏதாவது வந்தால், அதை சிறப்பு தகவலாக நேரடியாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மாநில உளவுத்துறையிடம் அளித்து விட்டு, உடனடியாக அந்த தகவலில் உள்ளவற்றை விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.
சொம்மா பீலாவா உட்டுனுக்கீறியே நைனா ?
ஞாபம் இருக்கிறதா ஜாபர்… ஒரு காலத்தில், ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் நான் என்ன நினைத்தாலும், அதை செய்தியாக வரவைப்பேன் என்று இறுமாப்போடு திரிந்தாயே ஜாபர்…… உனக்கு பிடிக்காத ஏகே.விஸ்வநாதன் என்ற அதிகாரி, அவரது ஆடிட்டரிடம், வருமான வரி கணக்குக்காக கொடுத்திருந்த ஆவணங்களை எடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா விஸ்வநாதன் என்று ஜுனியர் விகடனில் உனது அடிமை இரா.சரவணனை வைத்து செய்தி வர வைத்தாயே ஞாபகம் இருக்கிறதா ஜாபர். ? பிறகு அந்த அதிகாரி, இது நானே, ஆடிட்டரிடம் கொடுத்த ஆவணங்கள். வருமான வரி கட்டுவதற்காக கொடுத்த ஆவணங்களை எப்படி ஊழல் சொத்து ஆவணங்கள் என்று செய்தி போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய பிறகு, உனது அடிமை, அந்தச் செய்திக்கு அப்படியே அந்தர் பல்டி அடித்து மறுப்பு செய்தி போட்டது ஞாபகம் இருக்கிறதா ஜாபர்…. ?
விகடன் நிறுவனத்தில் எனக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது என்று இறுமாப்போடு திரிந்தாயே ஜாபர்… விகடனின் எம்.டி., தொலைபேசியில் என்ன பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்டு, அதன் மூலம், விகடன் நிறுவனத்தையே விலைக்கு வாங்கி விட்டது போல இறுமாந்து இருந்தாயே ஜாபர்…… இன்று அதே ஜுனியர் விகடனில் உன்னைப் பற்றி அட்டைப் பட செய்தி வந்திருக்கிறது ஜாபர். தலைப்பு என்ன தெரியுமா ? “விடுமுறையில் போகிறாரா வீழ்த்தப் பட்ட ஜாபர் சேட் ?” இதை எழுதியது யார் தெரியுமா ஜாபர்…. உனது அடிமை இரா.சரவணன் தான்.
ஜுனியர் விகடனின் கவர் ஸ்டோரிக்காக, சென்னை நகரம் முழுக்க போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் ஜாபர். நீ கேவலமாக நடத்தி மரியாதை இல்லாமல் பேசுவாயே….. காவலர்களும், தலைமைக் காவலர்களும். அவர்கள் அத்தனை பேரும் படிப்பார்கள் ஜாபர்….. விகடன் இணைய தளத்திலும் கிடைப்பதால், நீ தமிழ் தெரிந்த அணங்கோடு “சட்டம் ஓழுங்கு” விவாதம் நடத்தியிருந்தால், அந்த அணங்கும் இதைப் படிக்கும் ஜாபர். பர்வீன் அண்ணியும் படிப்பார்கள் ஜாபர். கல்லுரியில் உள்ள உனது மகளும் படிப்பார் ஜாபர். கல்லூரியில் உன் மகளின் நண்பர்கள் இதைப் படித்து விட்டு ” என்னடி… உங்க டாடியப் பத்தி இவ்ளோ கேவலமா வந்துருக்கு ? உங்க டாடி ஒட்டுக் கேப்பாரா டி… -? ” என்று உன் மகளைக் கேட்பார்களே ஜாபர்… கேட்பார்களே…. இதை நினைக்கும் போது சவுக்காலேயே தாங்க முடியவில்லையே…. இதை நீ எப்படி ஜாபர் தாங்கப் போகிறாய் ? எப்படி தாங்கப் போகிறாய் ?
சாதிக்போல முடிவெடுக்க அந்த அளவுக்கு உனக்கு மான ரோஷமெல்லாம் இல்லை என்பது நன்கு தெரிந்தாலும், இத்தனை நாளா தாயா புள்ளையா பழகுன பாசத்துல சவுக்கு உனக்கு சொல்லும் அட்வைஸ்… மனமுடைந்து சாதிக் போல முடிவெடுத்து விடாதே ஜாபர்…. முடிவெடுத்து விடாதே…. சவுக்கால் அதைத் தாங்கவே முடியாது.