கருணாநிதி….. இந்தக் கருணாநிதி எப்படியெல்லாம் ஊழல் செய்தார் என்பதை, திமுக ஆட்சியைப் பற்றி விரிவாக விவாதித்து விசாரணை நடத்திய நீதிபதி சர்க்காரியா தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இன்று கருணாநிதி தேர்தல் அதிகாரி முன்பு தாக்கல் செய்துள்ள, ஆவணங்களின் படி அவர் மனைவியின் சொத்துக்களோடு சேர்த்து, மொத்த மதிப்பு 41 கோடி. இந்தச் சொத்துக்களில், இவரின், மொரீஷியஸ் தீவின் மொத்த ஜனத்தொகை அளவு உள்ள, இவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து சேராது. இவர், மனைவி தயாளு, துணைவி ராசாத்தியின் சொத்துக்கள் மட்டும் 41 கோடி…. இந்த 41 கோடியும் எப்படி வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி, மேடை மேடையாகப் பேசி, தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கியதைத் தவிர வேறு எந்த தொழிலும், வேலையும் செய்யவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்று 41 கோடிக்கு அதிபதியாக இருக்கும் கருணாநிதி தன் வாழ்வை எப்படித் தொடங்கினார் தெரியுமா ? அவர் நெஞ்சுக்கு நீதியில் எழுதியதை பார்ப்போம்.
“குடியரசு துணை ஆசிரியனாக இரு என்று பெரியார் பணித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இதழில் என்னைக் கட்டுரைகள் எழுத அனுமதித்து அதைப் படித்து மகிழ்ந்தார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் சம்பளம், அதில் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைச் சிற்றுண்டி, மாலைச் சிற்றுண்டிக்கு மாதம் பத்து ரூபாய் ஆகி விடும். இதரச் செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் ஐந்து ரூபாயை என்னை அண்டி வந்த அருமை மனைவுக்கு பத்மாவிற்கு மாதந்தோறும் திருவாரூருக்கு மணியார்டர் செய்து வந்தேன்.”
“என் திருமணச் செலவுக்காக நான் எழுதிய தூக்கு மேடை நாடகத்தை அண்ண அவர்கள் தலைமையில் திருச்சியில் நடத்தினேன். நானே நடத்தேன். யாரிடமும் நாடகத்திற்காக நன்கொடை வசூலிக்கவில்லை. நாடகத்தில் மிச்சப் பட்ட தொகை எண்ணூறு ரூபாய்.”
“என்னிடமிருந்த மணிப்பர்ஸை கண்ணதாசனிடம் கொடுத்து சேலத்திற்கு இரண்டு டிக்கட் வாங்கக் சொன்னேற். டிக்கட் வாங்கிக் கொண்டு, கண்ணதாசன் மணிப்பர்சை என்னிடம் கொடுத்தார். என்னய்யா பர்ஸ் காலியாக இருக்கிறதே என்று கேட்டேன். இரண்டாம் வகுப்பு டிக்கட்டுக்கு உமது பணம் சரியாக இருந்தது என்று கூறினார். ஐயையோ உம்மை யார் இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்கச் சொன்னது… மூன்றாம் வகுப்பு போதாதா என்று நான் சலித்துக் கொண்டேன்.”
கண்ணதாசன் இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்கியதால், மதிய உணவுக்கு காசில்லாமல், பட்டினியாகவோ இருவரும் ஊர் போய் சேர்ந்திருக்கிறார்கள்.
இப்படித்தான் தொடங்கியது கருணாநிதியின் பொது வாழ்வு. இப்போது கருணாநிதி தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தின் படி, அவருக்கு இருக்கும் சொத்துக்களைப் பார்ப்போமா ?
கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.
கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.
இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் ரூபாய் 11,39,441
ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.
இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180
முதலில் மனைவி தயாளு அம்மாள்.
ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000
நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை
1 கோடியே 20 லட்சம்.
3 கோடியே 50 லட்சம்
ரூபாய் 3,90,373
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,98,247
ரூபாய் 32,50,255
இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்
ரூபாய் 6,98,250
ரூபாய் 6,93,579
ரூபாய் 13,92,503
ரூபாய் 1,40,723
கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்
ரூபாய் 13,74,664
கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய் 30 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.2,66,226
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.1,65,380
அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.
இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்
நிரந்தர வைப்பு நிதி.
ரூபாய் 15,00,000
ரூபாய் 33,04,087
ரூபாய் 1,14,93,325
ரூபாய் 10,55,641
ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753
ரூபாய் 46,78,221
சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.
கையிருப்பு ரூ.11,378
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய்.4,84,027
தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.
கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்
ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்
வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்
சொந்தத் தொழில் முதலீடு
ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878
வாகனங்கள்.
தயாளு அம்மாள்.
ஹோண்டா அக்கார்டு கார்
ரூபாய்.16,02,321
இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு
ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855
மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு
ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287
இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு
தயாளு ரூ.5,51,1000
ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628
கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.
தன் பெயரில் மட்டும் பல கோடி சொத்துக்களை வைத்திருக்கும், ராசாத்தி அம்மாளின் நிதி நிலைமை என்ன என்பது குறித்து சர்க்காரியா விசாரணை அறிக்கையில் கூறியிருப்பது.
பட்டயக் கணக்கர் திரு.ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் திருமதி தர்மா இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும். அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது.”
எழுபதுகளில், ராசாத்தி அம்மாளிடம் 40 ஆயிரம் இல்லாமல், கடன் வாங்கியிருப்பதை கவனியுங்கள்.
ஏழைகள் வயிற்றில் அடித்து, பணத்தை கொள்ளையடிப்பது குறித்து, கருணாநிதி எழுதிய கவிதையை இந்த நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !
பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !
பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!
வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!
மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?
என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் – அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !
உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?
உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது – இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?
தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்…!
– கலைஞர் கருணாநிதி எழுதிய “சங்கத் தமிழ்“ புத்தகத்திலிருந்து (பக்கம் 288)