திடீரென்று சவுக்கில் ரவுடிகளைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார்களே என்று வியப்பாக இருக்கிறதா ? இது வழக்கமாக கத்தியை காண்பித்து ரவுடித்தனம் செய்து, மாமூல் வாங்கும் ரவுடிகளைப் பற்றியது அல்ல.
சமூகத்தில் பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டு, விலை உயர்ந்த கார்களில் பவனி வரும் ரவுடி ஒருவரைப் பற்றியது. அந்த ரவுடியின் பெயர் ஆர்எம்ஆர்.ரமேஷ். இந்த ஆர்எம்ஆர் கலாநிதியோடு லயோலா கல்லூரியில் படித்தவர். கலாநிதி மாறனுக்கு எதிராக லயோலா கல்லூரி தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சொந்த ஊர் பொன்னேரி. நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். இவர் மனைவி கலாச்சேத்ராவில் நாட்டியம் பயின்றவர். அவரை ஆர்எம்ஆர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அவர் வீட்டில் பேச்சுவார்த்தை நின்றது. இதையடுத்து, சன் டிவி தொடங்கிய காலத்தில், கேடி சகோதரர்களோடு இணைந்து சன் டிவியில் பணியாற்றத் தொடங்கினார்.
முதலில் சன் டிவியில் ஹவுஸ் கீப்பிங் பணிகளைத்தான் கவனித்து வந்தார். அந்த ஹவுஸ் கீப்பிங் பணியில் இவர் ஆட்களை அரட்டி உருட்டி வேலை வாங்குவதைப் பார்த்து வியந்த கலாநிதி மாறன், பின்னர் இவரை சன் டிவிக்குள்ளேயே வேலைக்கு அமர்த்திக் கொண்டார். சன் டிவி தொடக்க காலத்தில் சன் டிவிக்காக கேபிள் பதிக்கும் வேலைகளை செய்கையில் இரண்டு கேடி சகோதரர்களும் நேரடியாக செல்வது வழக்கம். அப்போது கேடி சகோதரர்களோடு ஆர்எம்ஆரும் உடன் செல்வார். அப்போது சண்டியர் போல செயல்பட்டு, வரும் பிரச்சினைகள் அனைத்தையும் ஒரே ஆளாக கையாண்டதால், ஆர்எம்ஆரை கிட்டத்தட்ட நிரந்தர ரவுடியாகவே நியமித்தனர் கேடி சகோதரர்கள். சன் டிவியின் தொடக்க காலம் முதலாக கேடி சகோதரர்களோடு இருப்பவர்கள் சக்சேனா, ஷம்மி, ஆர்எம்ஆர், நடராஜன் மற்றும் சமீபத்தில் பாலியல் புகாரில் கைதான கண்ணன்.
இதில் ரவுடித்தனத்தில் ஈடுபடுவது ஆர்எம்ஆர் மட்டுமே. சன் குழுமத்தின் முழுநேர ரவுடி என்று ஆர்எம்ஆரை தாராளமாக சொல்லலாம். ஆர்எம்ஆர் ரமேஷ் தற்போது, தினகரன் மற்றும் தமிழ் முரசு குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். தினகரன் இதழிலும், இதே ரவுடித்தனத்தைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.
கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களுக்கான ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இந்த ஊதியக் குழுவின் பரிந்துரை ஏறக்குறைய எல்லா நிறுவனங்களிலும் செயல்படுத்தப்பட்டு விட்டது. தினகரன் மற்றும் அதன் குழும இதழ்களான, தமிழ் முரசு, முத்தாரம், வண்ணத்திரை, மற்றும் குங்குமம் ஆகிய இதழ்களில் பணியாற்றும் அனைவருக்கும் புதிய ஊதிய விகிதங்கள் வழங்கப்பட்டன.
முத்தாரம், வண்ணத்திரை மற்றும் குங்குமம் இதழ்களில் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்டுகளுக்கு மட்டும் 3000 முதல் 4000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ் முரசு மற்றும் தினகரன் லே அவுட் ஆர்டிஸ்டுகளுக்கு வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வாக வழங்கப்பட்டு இருந்தது. இந்தத் தகவல் வந்ததை அடுத்து, தினகரன் மற்றும், தமிழ் முரசு லே அவுட் ஆர்டிஸ்டுகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒரு மணி அளவில் மைலாப்பூர் தினகரன் அலுவலக வாயிலில் கூடினர். கூடி, இந்த குறைந்த ஊதிய உயர்வுக்கு நம்மால் ஆன எதிர்ப்பை தெரிவிப்பது என்று முடிவெடுத்தனர்.
மாலை நான்கு மணி வரை, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூட யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் மாலை நான்கு மணிக்கு, தினகரன் இதழின் தலைமை நிருபராக இருக்கும் சுரேஷ் என்ற பிட்டு சுரேஷ் இவர்களிடம் பேசுவதற்காக வருகிறார். பிட்டு சுரேஷ் யார் என்ற அறிமுகம் இல்லாத புதிய வாசகர்களுக்கு பிட்டு சுரேஷ் குறித்து சவுக்கில் ஏற்கனவே வந்த கட்டுரையின் இணைப்பு.
தலைமை நிருபராக இருக்கும் பிட்டு சுரேஷின் வேலை என்ன தெரியுமா ? கேடி சகோதரர்கள் மற்றும் அவர்கள் தொடர்பாக காவல்துறையில் என்ன வேலை இருந்தாலும் அதை முடித்துக் கொடுப்பதே. தனக்கு பிடிக்காத காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்து, தினகரன் பீட்டர் மாமா பகுதியில் பொய்ச் செய்திகளைப் போடுவது, அல்லது பொய்ச் செய்திகளை போட்டு விடுவேன் என்று மிரட்டுவது இதுதான் பிட்டு சுரேஷின் முழு நேர வேலை.
தினகரனில் ஆர்எம்ஆர் ரமேஷிடம் நேரடியாக பேசக்கூடியவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் வேதா. மற்றொருவர் பிட்டு சுரேஷ். இந்த பிட்டு சுரேஷூக்கு ஆர்எம்ஆரோடு நேரடியாக பேசும் சதாவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நெடுநாளாக வெறி.
இப்படிப்பட்ட சூழலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் சென்று பேசிய பிட்டு சுரேஷ், ஆர்எம்ஆர் ரமேஷிடம் இந்த ஊழியர்களின் நிலை குறித்து பேசுவதாகவும், ஊதிய உயர்வுக்கு உத்தரவாதம் செய்வதாகவும் உறுதியளிக்கிறார். அதன் அடிப்படையில் ஊழியர்கள் கலைந்து தங்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனர். 13 ஏப்ரல் 2015 திங்கட்கிழமை அன்று, மதியம் இரண்டு மணிக்கு ஆர்எம்ஆர் ரமேஷ், சம்பந்தப்பட்ட ஊழியர்களை சந்திக்க அழைப்பதாக தொலைபேசியில் அழைப்பு வருகிறது.
சரி ஆர்எம்ஆர் ரமேஷ், நம்மிடம் பேசி, நமது குறைகளைத் தீர்க்கத்தான் போகிறார் என்று நம்பி எம்.ஆர்.சி நகரில் உள்ள சன் குழும அலுவலகத்துக்கு செல்கின்றனர். சமீபத்தில் அமலாக்கப் பிரிவால் இணைக்கப்பட்டதே, அதே அலுவலகம்தான்.
அந்த அலுவலகத்தில், ஆர்எம்ஆர் அறைக்குள், மதி, ராஜி, அருணாச்சலம், சுதாகர், மகேஷ் மற்றும் வேதா ஆகிய லே அவுட் ஆர்டிஸ்டுகள் நுழைகிறார்கள். இவர்கள் நுழைவதற்கு முன்னதாக, இவர்களை சந்தித்த பிட்டு சுரேஷ், வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதே வேதாதான். நாங்கள் மைலாப்பூர் அலுவலகத்துக்குள்ளேதான் நின்று கொண்டிருந்தோம். உள்ளே நின்றால் தெரியாது. கேட்டுக்கு வெளியே சென்று கோஷம் போடுவோம் என்று சொல்லுங்கள். சார், வேதா மேலதான் ரொம்ப கோவமா இருக்கார்” என்று அறிவுரை கூறி அனுப்புகிறார் பிட்டு சுரேஷ்.
எடுத்த எடுப்பிலேயே “எவன்டா இதுல மகேஷ்” என்று உரத்த குரலில் கேட்கிறார் ஆர்எம்ஆர்.
நான்தான் என்று மகேஷ் முன் வந்ததும், அவரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, “ஏன்டா XXXXXX பையா, உனக்கெல்லாம் சோறு போட்டு வளக்குறோம்…. அந்த அளவுக்கு திமிருப். XXXXXx யா போச்சா ? XXXXXX XXXXXXx மிதிச்சே கொன்னுடுவேன் உங்களை. உங்களுக்கெல்லாம் வேலையும் கிடையாது, ஒரு XXXXX கிடையாது. ஐடென்டிட்டி கார்டை கழட்டி வைச்சுட்டு கௌம்பி வெளியில போங்கடா” என்று கத்துகிறார்.
கார்டை கொடுத்த ஐவரில், நால்வர் ஆர்எம்ஆரிடம் கெஞ்சி கூத்தாடி, காலில் விழுந்து ஐடென்டிட்டி கார்டை திரும்பப் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் கடுமையாக அடி வாங்கியதில் மகேஷின் முகம் வீங்கியிருந்தது. அவர் என் கார்டை குடுங்க சார் என்று கேட்கிறார். “உன்கிட்ட கார்டையும் குடுக்க முடியாது ஒரு XXXXX குடுக்க முடியாது. வெளியில போடா நாயே…. உன்னால என்னை ஒரு XXXXX புடுங்க முடியாது. உனக்கு எங்கயுமே வேலை கிடைக்காம செய்யறேன் பாரு” என்று கூறி அனுப்பி விடுகிறார்.
தினகரன் நாளிதழுக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கியிருந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷை அன்று இரவே அறையை காலி செய்யச் சொல்கிறார்கள். மைலாப்பூர் தினகரன் அலுவலகத்திலும் மகேஷுக்கு அனுமதி இல்லை.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று நினைத்தால், பிட்டு சுரேஷின் செல்வாக்கால், காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று அஞ்சுகிறார் மகேஷ்.
வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்குப் போகும் ஊழியர்களை ஆர்எம்ஆர் எப்படி நடத்துகிறார் பார்த்தீர்களா ?
ஏற்கனவே சன் டிவியில் வேலை பார்த்த பல்வேறு ஊழியர்களிடம் பேசியதில், கடந்த 20 வருடங்களில், ஆர்எம்ஆர் நூற்றுக்கணக்கானவர்களை இது போல அடித்திருக்கிறார். ஆனால் இவருக்கும் கேடி சகோதரர்களுக்கும் காவல்துறையில் இருக்கும் செல்வாக்கால், இவர் மீது இது வரை ஒருவர் கூட புகார் கொடுக்க துணியவில்லை என்கின்றனர்.
சன் டிவியில் பணியாற்றிய ஒரு ஊழியர் கூறுகிறார் “ஆர்எம்ஆர் எப்போது யாரை அடித்தாலும் எல்லோர் முன்னால்தான் அடிப்பார். வாய்க்கு வந்தபடி ஆபாச வார்த்தைகளால் திட்டுவார். இவரை எதிர்த்து யாருமே எதுவுமே பேச முடியாது. கலாநிதி மாறனின் முழு ஆசிர்வாதம் இவருக்கு உண்டு என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்” என்கிறார்.
மற்றொரு ஊழியர், ஆர்எம்ஆர் கலாநிதி மாறனுக்கு நெருக்கம் என்பது மட்டுமல்ல, ஆர்எம்ஆரின் மனைவி, கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதிக்கு வலது கரம். அவர் மனைவியை கேட்டுதான் காவேரி மாறன் பல்வேறு முடிவுகளை எடுப்பார். இந்த காரணத்தாலும், ஆர்எம்ஆரை யாருமே அசைக்க முடியாது என்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, ஆர்எம்ஆர் கருத்தை அறிவதற்காக, அவரிடம் தொலைபேசியில் பேசினோம். “அது போல ஒரு சம்பவமே நடக்கலைங்க. அது முழுக்க பொய்” என்று மட்டுமே சொன்னார்.
ஆனால், இந்த சம்பவத்தின் போது உடனிருந்தவர்களோடு பேசியதில் இந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை என்பது தெரிந்தது.
வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு வரும் ஊழியர்களை அடிக்கும் அளவுக்கு ஆர்எம்ஆருக்கு உரிமையை யார் கொடுத்தது. வேலை பார்க்கும் ஊழியர்கள், ஏழைகள், செல்வாக்கு இல்லாதவர்கள் என்ற திமிர்தானே அவரை இந்த ரவுடித்தனம் செய்யத் தூண்டுகிறது.
யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல், பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் மகேஷ், காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். துணிந்தவனுக்கு துக்கமே இல்லை. இந்த ஆர்எம்ஆர் ரமேஷ் இத்தனை ஆண்டுகளாக இத்தனை பேரை அடித்ததற்காக, ஒரு நாளாவது புழல் சிறையில் தட்டேந்தி உணவு உண்ண வேண்டும்.
இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நடக்கும்.
panam irukum pannikalin attam atangum neram vanthu vitadhu…………………
He calls himself the Editor. But has never written even a single column news. Bloody imprint Editor.
முதலுக்கே மோசம் வந்து விட்டது .இதுவெல்லாம் வெறும் வெத்து வேட்டு.கூடிய சீக்கிரம் முதலாளிகளுடன் களி தின்ன ஆசைப்படுகிறார்..
சவுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊழியர் படும் பாட்டை விளக்கி, அட்டூழியம் செய்யும் ஆதிக்க சாதியினரின் நடவடிக்கைகளை வெளிபடுத்திய பணி போற்றுதலுக்கு உரிய பணி. தன்னலம் கருதாமல் பணம்,வசதி படைத்தவர்கள் இவர்களுக்கு ஜாலரா தட்டாமல் நேர்மையாக,துணிவுடன் உண்மையை வெளிக்கொணர இன்று விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஆட்கள் உள்ளனர். சவுக்கு உங்களின் இது போன்ற பணி மென் மேலும் ஊக்கமடையவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களை பாதுகாக்க வேண்டும் என்று உளமார விரும்புகிறேன். R.M.R ரமேஷ்,பிட்டு சுரேஷ் போன்ற ஆட்களால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். கட்டுரை பணிக்கு நன்றி.
http://www.exchange4media.com/54586_our-innovations-have-struck-a-chord-with-our-readers-rmr-ramesh.html
read mr. rmr interview 😉
Anney. Use multiple variables instead just xxxxx. I’m trying to substitute value for xxxxx, but doesn’t work out. :).
ஆர்ம்ஆர் தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிளாலியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிண்றான் அடிக்கின்றான் என்றால் அப்போ! கேடி சகோதர்களின் கீழ் இவன் வேலை செய்கிறான் அப்படி என்றால் இவன் இரவில் அவர்களுக்கு ——– கொடுக்கின்றானா!!
மானம் மரியாதைக்கு பயந்தவர், இந்த நாட்டில் வாழமுடியாது. ஐரோப்பாவிலுள்ள சட்டம் மற்றும் அந்த மக்களின் தராதரத்தை இந்த காட்டுமிராண்டிகளோடு ஒப்பிட்டால், “அடச்சீ இது ஒரு நாடா” என கேட்கத்தோன்றுகிறது.
சாதி பெயர் செல்லி திட்டுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கின்றது
அவன் (ஆந்திராவை) செர்ந்தவன் என்பதால் தான்
இவனுக்கும் தமிழன் என்றால் இலக்காரமோ?????
அந்த.போட்ட பாடு…இப்படி பல பேர்களை இப்படி தான் செய்து கொண்டிருக்கிறான் இவனுக்கு ஒரு முடிவு பிறக்கும் அவனுக்கு முடிவுகட்டும் நாள் வெகுதூரம் இல்லை….
//உன்கிட்ட கார்டையும் குடுக்க முடியாது ஒரு XXXXX குடுக்க முடியாது. வெளியில போடா நாயே…. உன்னால என்னை ஒரு XXXXX புடுங்க முடியாது. உனக்கு எங்கயுமே வேலை கிடைக்காம செய்யறேன் பாரு” என்று கூறி அனுப்பி விடுகி//
if this is a bhramin you publish but since they are soothiran. your passam shows “xxxxx:
soothira punda maganagla irukkuda appu
New entry to Savukku? nice! he will be punished!
He should be beaten like a dog in public…….. filthy bastard….