கருணாநிதி மீண்டும் என்னை ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆக்குங்கள் என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக கருணாநிதி தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கின் படி, (பிள்ளைகள், மகள், மகன்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் சொத்து நீங்கலாக) பல கோடிக்கு அதிபதி.
சரி, தனது அரசியல் வாழ்வை தொடங்கி, அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் சொத்துக் கணக்கை பார்ப்போமா ?
இந்த விபரங்கள் சவுக்கு சொல்வது இல்லை. கருணாநிதியின் ஊழல்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா சொன்னது.
கோபாலபுரம் நான்காவது தெருவிலுள்ள இரண்டாவது எண்ணுள்ள வீட்டை ரூ.50,000க்கு வாங்கியது. அதற்காக நிதி ஆதாரம்.
MSR 1335 என்ற எண்ணுள்ள காரை 5,000
விற்றதிலிருந்து கிடைத்த தொகை
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000
கடனாக பொற்ற தொகை
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனமே ஒரு டுபாக்கூர் நிறுவனம். இந்த நிறுவனத்தில், யார் பங்குதாரர்கள் என்பது தெரிந்தால் உங்களுக்கே புரியும்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் 1951ல் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தில், கருணாநிதி, காசிலிங்கம் மற்றும், கேடி சகோதரர்களை பெற்றெடுத்த புண்ணியவான் மாறன் ஆகியோர் பங்குதாரர்கள்.
காசிலிங்கம் என்பவர், 1965ல் அந்நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். பிறகு, மாமனும் மருமகனும் மட்டுமே பங்குதாரர்கள். இந்த நிறுவனம், கருணாநிதி முதலமைச்சராக இருந்து சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக பயன்படுத்தப் பட்டது.
கருணாநிதி முதலமைச்சரானதும், இந்நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதிலிருந்து விலகுகிறார். விலகியபின், தயாளு அந்நிறுவனத்தின் பங்குதாரராகிறார். இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து கருணாநிதி பெற்ற கடன் விபரங்கள்.
31.03.1967 2,55,112
31.03.1968 2,87,112
31.03.1969 2,77,112
31.03.1971 2,88,002
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனம், கருப்பை வெள்ளையாக்குவதற்கு பயன் பட்டது என்று கூறப்பட்டது அல்லவா ? எப்படி வெள்ளையாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு தொகைகளை கடனாக கொடுத்ததாக எழுதப் பட்டிருந்தது. அவர்கள், விசாலாட்சி ஆச்சி, காசிநாதன் செட்டியார், ராமநாதன் செட்டியார், சௌந்தரவல்லி ஆச்சி, சொக்கலிங்கம் செட்டியார், சுந்தரம் செட்டியார், சோமசுந்தரம், ராம.வெள்ளையன், லட்சுமி, மாணிக்கச் செட்டியார், உண்ணாமலை ஆச்சி, இந்திரா ஆச்சி, லட்சுமணன் செட்டியார், திருநாவுக்கரசு செட்டியார், திண்ணப்ப செட்டியார், கருப்பன் செட்டியார், லட்சுமணன் செட்டியார் ஆகியோர்.
இவர்களிடம் கடன் பெறப்பட்டதாக கணக்கு எழுதப் பட்டிருந்தது. இந்தப் பெயர்களில் ராம.வெள்ளையன் என்பவர்தான், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் தரகராக செயல்படுபவர்.
இந்த ராம.வெள்ளையன் சர்க்காரியா கமிஷன் முன்பாக அளித்த சாட்சியம் என்னவென்று பார்ப்போமா ?
“இவர் 1976ம் ஆண்டு ஜுலை திங்கள் 5ம் நாளிட்ட தனது உறுதி மொழிப் பத்திரத்தில் தாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் என்றும், திரு.மு.கருணாநிதியை இருபது ஆண்டுகளாக்கு மேலாகத் தெரியும் என்று கூறியிருந்தா. 1970ல் எப்போதோ ஒரு தடவை மேகலா பிக்சர்ஸ்சாரின் கணக்குகளில் சிலரது பெயரில் ரொக்கக் கடன் வசதி பெறுவதற்காக குறிப்பாக, தேவக்கோட்டையில் பணம் தருபவராக பெயர் மட்டும் கொடுக்கின்ற செட்டியார்கள் சிலரின் பெயர்களை சேகரித்துத் தருமாறு திரு.கருணாநிதி இவரது உதவியை நாடினார். திரு.கருணாநிதி விரும்பியவாறே வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் சிலரின் பெயரைச் சேகரித்துத தர சாட்சி ஒப்புக் கொண்டார். மேலும், தனது பெயரிலும், தனது மனைவி திருமதி.வி.லட்சுமி பெயரிலும், ரொக்க வரவு வைத்துக் கொள்ளவும் அவர் ஒப்புக் கொண்டார். இவ்வாறு மேகலா படத்தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் மேற்குறிப்பிட்ட 18 பேர்களில் மொத்தம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கருணாநிதி கணக்கில் கொண்டு வந்தார். ராம.வெள்ளையன் மேலும் தெரிவித்ததாவது, 1973ம் ஆண்டு இறுதியிலோ, 1974ம் ஆண்டு தொடக்கத்திலோ திரு.கருணாநிதி அவரைக் கூப்பிட்டனுப்பி வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால், ரொக்க வரவுக்காக அவர் சேகரித்துத் தந்த பெயர்களில் அவர்கள் பணம் கொடுத்ததாக உறுதி செய்யும் கடிதங்களை தயாரித்து அவற்றில் அவர்களது கையொப்பங்களை பெற்றுத்தருமாறு அவரிடம் கேட்டார். ரொக்க வரவுக்கு ஆதரவாக போலி புரோநோட்டுக்களை தயாரிக்குமாறு திரு.கருணாநிதி ராம.வெள்ளையனிடம் கூறினார். அப்போது சில கடிதங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் அழகுமாணிக்கம் என்பவரால் தயாரிக்கப் பட்டு தட்டச்சு செய்யப் பட்டன. காசோலைகள் கடன் கொடுத்தவர்கள் பெயருக்கு வழங்கப் படும் என்றும், அந்தக் காரோலைகளை மாற்றி பணத்தை மேகலா பிக்சர்ஸார் பயன் படுத்திக் கொள்வதற்காக காசோலைகளின் பின்புறத்தில் கடன் கொடுத்தவர்களின் கையொப்பத்தை அவர் பெற வேண்டும் என்றும் ராம.வெள்ளையனிடம் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கீழ்கண்ட விபரங்கள் தெரிய வந்தன.
கொடுத்துள்ளதாகக் கூறப்பட்ட கடன்களுக்கு ஆதரவாக இருக்கும் புரோநோட்டுக்களையும், கடனைத் திருப்பிக் கொடுத்தவகையில் வழங்கப்பட்டதாகத் தோன்றும், ரொக்கமாற்று காசோலைகளையும், சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள இந்தியன் வங்கி கிளையிடமிருந்து வருமான வரித் துறை கைப்பற்றியது. கொடுத்துத் தீர்க்கப் பட்ட புரோ நோட்டுக்களின் மீது கடன் கொடுத்ததாக கூறப்படுபவர்களின் கையொப்பத்திற்கும் கடன்கள் பெற்றுக் கொண்டதை உறுதிப் செய்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுபவைகளையும் 05.02.1974 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்துள்ள கடிதங்களில் உள்ள அவர்களது கையொப்பங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பல இடங்களில் கையொப்பங்கள் வேறுபட்டன. கடன்களை திருப்பிக் கொடுத்தவகையில் அவர்களுக்கு வழங்கப் பட்ட ரொக்க மாற்றுக் காசோலைகளின் பின்புறத்தில் அவர்கள் இட்டுள்ளதாக தெரியவந்த கையொப்பங்களும் வேறுபட்டிருந்தன.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்ததில், அந்நிறுவனத்தின் நிதிகளை கருணாநிதியும் அவரது நெருங்கிய உறவினர்களும் எடுத்துள்ள தொகை பின் வருமாறு:
1967-68
மு.கருணாநிதி 45,000.00
மாறன் 69,115.70
அமிர்தம் 3,179.73
1968-69
தயாளு 2,582.00
அமிர்தம் 1,320.00
1969-70
அமிர்தம் 1,320.00
1970-71
மாறன் 96,675.00
தயாளு 9,000.00
அமிர்தம் 600.00
1971-72
தயாளு 15,922.00
மாறன் 4,600.00
செல்வம் 15,000.00
1972-73
மாறன் 10,500.00
எப்படி கருணாநிதி குடும்பம் லஞ்சப் பணத்தை வெள்ளையாக்குவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
சரி… இவர்கள் கணக்குப் படியே வைத்துக் கொண்டாலும் கருணாநிதி மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000 ரூபாய் கடன் வாங்கித் தான் கோபாலபுரம் வீட்டை வாங்கினார். ஆக, 1971ம் ஆண்டு, கருணாநிதியிடம் 45,000 ரூபாய் கூட இல்லை.
2011ல் கருணாநிதியின் சொத்துக்களைப் பாருங்களேன்…..
கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.
கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.
இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் ரூபாய் 11,39,441
ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.
இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180
முதலில் மனைவி தயாளு அம்மாள்.
ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000
நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை
1 கோடியே 20 லட்சம்.
3 கோடியே 50 லட்சம்
ரூபாய் 3,90,373
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,98,247
ரூபாய் 32,50,255
இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்
ரூபாய் 6,98,250
ரூபாய் 6,93,579
ரூபாய் 13,92,503
ரூபாய் 1,40,723
கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்
ரூபாய் 13,74,664
கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய் 30 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.2,66,226
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.1,65,380
அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.
இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்
நிரந்தர வைப்பு நிதி.
ரூபாய் 15,00,000
ரூபாய் 33,04,087
ரூபாய் 1,14,93,325
ரூபாய் 10,55,641
ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753
ரூபாய் 46,78,221
சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.
கையிருப்பு ரூ.11,378
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய்.4,84,027
தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.
கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்
ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்
வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்
சொந்தத் தொழில் முதலீடு
ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878
வாகனங்கள்.
தயாளு அம்மாள்.
ஹோண்டா அக்கார்டு கார்
ரூபாய்.16,02,321
இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு
ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855
மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு
ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287
இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு
தயாளு ரூ.5,51,1000
ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628
கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.
இந்தக் குடும்பத்திடம் மீண்டும் ஒரு முறை தமிழகத்தை ஒப்படைத்தால் என்ன ஆகும் ?
Now u are supporting Kalaignar