நான் குமாராசாமி அல்ல !!!!

You may also like...

31 Responses

 1. Spark_Shakthi says:

  கேடு கெட்ட சொம்பு தூக்கி கூட்டமே….!
  ஜெயலலிதா பரப்ஹன அக்ரஹார ஓர் கீழமை நீதி மன்றத்தால் எதே மாபெரும் குற்றம் செய்தது போல் குற்றம் சாட்டி முதல்வர்.ஜெயலலிதா சிறையில் அடைத்தது.
  அப்போது அதை கண்டித்த அதிமுக வினரை நீதிமன்ற அவமதிப்பில் இடுபடுவதாக விமர்சித்த நாதாரிகள்.

  கீழமை நீதிமன்றத்தை விட உயர்ந்த கர்னாடக உயர்நீதி மன்றத்தினால் குற்றம் அற்றவர் என தீர்ப்பு வழங்கிய பின் அதை திமுக வின் சொம்பு தூக்கிகள் விமர்சனம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

 2. belive in future says:

  Keep it up

 3. Anonymous says:

  என்ன ஒரு அருமையான பதிவு

 4. வெங்காயம் says:

  இந்திய தொலைக்காட்சி sorry நீதி துறை வரலாற்றிலே முதன் முறையாக TOP 5 ரேங்க்ல் வந்த பழுதுபட்ட தீர்ப்பில் அய்யாகுமாரசாமி http://jayaverdict.blogspot.in/p/ranking-of-thisverdict.html

 5. வெங்காயம் says:

  நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. https://www.facebook.com/photo.php?fbid=1444055252582336

 6. வெங்காயம் says:

  இந்திய தொலைக்காட்சி sorry நீதி துறை வரலாற்றிலே முதன் முறையாக TOP 5 ரேங்க்ல் வந்த பழுதுபட்ட தீர்ப்பில் அய்யாகுமாரசாமி http://jayaverdict.blogspot.in/p/ranking-of-thisverdict.html

  நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

  https://www.facebook.com/photo.php?fbid=1444055252582336

 7. வெங்காயம் says:

  சவுக்கு இவ்வளவு நாள் மவுனம் காத்து மிக சிறப்பான கட்டுரையை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி உள்ளீர்கள். மக்கள் பணியே மகேசன் பணி. உங்கள் பணி மிக உன்னதமானது. தூய்மையானது.புனிதமானது. போயஸ் கார்டன் மட்டும் 45 கோடி என மதிப்பீடு செய்ய தெரிந்தவருக்கு கொடநாடு எஸ்டேட் இன் உண்மையான மதிப்பு தெரியாதா.? பாருங்க affidavit யில் பொய் சொல்லி உள்ளதை :-https://goo.gl/2LjXpd http://goo.gl/Zr9GYl

 8. வெங்காயம் says:

  ஆச்சார்யா சமீத்தில் அளித்த பேட்டியில் 77 சதம் அல்ல 200 சதம் மேலே வரும் என்கிறார் அவர் refer செய்த விபரம்:—
  இந்த வெப் சைட் ஐ http://jayaverdict.blogspot.in/ கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல முறை படித்து பார்த்து உள்ளார்…!! அதன் பின்னர் தான் 200 சதம் மேலேயே வருகிறது, முன்னர் குறிப்பிட்டது போல 77 அல்ல” என்று சற்று முன்னர் பேட்டி கொடுத்து உள்ளார்.!! ஒன்று இரண்டு தப்பில்லை ..!!!
  ஓராயிரம் தப்பு இருக்கலாம் போல …???
  என்கிற முடிவுக்கு வர வைத்தது மேற் சொன்ன வெப் சைட் விபரம் தான் என்கிறார்கள் விபரம் தெரிந்த வட்டாரங்கள் …!!!!!!!!!

 9. வெங்காயம் says:

  “தொகுதியில் ஒளிமயம்..தூங்கும் தேர்தல் ஆணையம்” என்ற தலைப்பில், கடந்த 10.06.2015 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில், செயதியாளர் மா.அ.மோகன்பிரபாகரன் எழுதிய கட்டுரையும், அதற்கடுத்த 14.06.2015 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில், செயதியாளர்எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி என்ற நண்பர் “ஜெயலித வெளியிட்ட சொத்துப் பட்டியல் – காரில் சிக்கல்” என்ற தலைப்பில், ஜெயாவின் வேட்பு மனுவில் உள்ள குளறுபடிகளை விவரித்து மூன்று பக்க கட்டுரை. இலட்சோபலட்சம் மக்கள் வாசிக்கின்ற பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி குறித்து வாய்திறக்காத தேர்தல் ஆணையர் இருக்கும் பொது ஜெயா மனு ஏற்பு என்பது வியப்புக்குரிய செய்தியன்று..

  தேர்தல் ஆணையம் என்றால் என்று அதன் மாண்பினை உயர்த்திய சேஷன் அவர்கள் வழிகாட்டுதல்களை புதைக் குழிக்கு அனுப்பிவிட்டு . ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு ஒத்துஊதி, அவர்கள் விரும்புவோரை தேர்வுசெய்து அறிவிப்பு வெளியிடும் ஆணையமாக மாறிப் போனதேன்?

  ஜூனியர் விகடன் கட்டுரையில் கண்ட செய்தி உண்மையெனில், துணிந்து ஜெயாவின் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையத்தின் மாண்பைக் கட்டி காத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் அதுதான் செய்தி.

 10. Sudhan says:

  I think you forgot who exposed the 2G tapes to Media. Its the same savukku. it clearly shows you have no knowledge in politics, better you join ADMK where adimaigal thevai advertisement vandhu iruku.

 11. Anandhsankar says:

  கொஞ்சங்கூட கூச்ச நாச்சமில்லாம டாக்டர் பெஞ்சமின்னு ஒருத்தர் நானும் ஒரு அடிவருடிதான்னு காண்பிக்க சவுக்குக்கு பதில் எழுதி இருக்காரு.இதுபோன்ற மதிகெட்டவர்களுக்கு நியாயம் என்பதே தெரியாது போலும்.உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின்னர் இவர்கள் எந்த மூஞ்சியை வைத்து கொண்டு வெளியே நடமாடுவார்கள்.

 12. Anonymous says:

  குமாரசாமியின் தீர்ப்புக்குப் பிறகு சாதாரண பொதுமக்களில் பெரும்பாலானோர், நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதே உண்மை. அந்த நம்பிக்கையை மீண்டும் துளிரச் செய்யும் பணியையே சத்யநாராயணன்களும், குன்ஹாக்களும் செய்து வருகின்றனர். அவர்களே நீதித்துறையின் கலங்கரை விளக்கங்கள். குமாரசாமிகள் களங்கங்கள்.

 13. Raman says:

  When will Supremely Corrupt Court hear JJ case?

 14. raghavi says:

  Hon’ble SC directed to Hon’ble HC to wrap case in 3 months. But now total silence is being felt. Perhaps Hon’ble SC might wrap case in 30days surpassing that of Hon’ble HCl Jai HInd

 15. Adv.S.Sureshkumar.Nagercoil says:

  Very realistic & practical .Your article reflects majority people’s opinion. I really appreciate the courage in writing this.

 16. Rajesh says:

  அருமையான கட்டுரை…சவுக்கு அவர்களுக்கு நன்றி….

 17. நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வெளியிட்ட 1,136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 665-வது பக்கத்தில் தங்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 20,548 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராமுக்கு 433 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மொத்த தொகை ரூ.88,97,284 (என்பத்தெட்டு லட்சத்து தொன்னூற்றி ஏழாயிரத்து இருநூற்றி எண்பத்தி நான்கு) என்பதுதான் சரியானக் கணக்கு.

  ஆனால், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா 20548 x Rs.433/- = Rs.8,90,55,032/- இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது எட்டு கோடியே தொண்நூறு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்து முப்பத்தி இரண்டு என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். ஆக ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பில் 8,01,57,748 எட்டு கோடியே ஒரு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து எழு நூற்றி நாற்பத்தி எட்டு ரூபாய் கூடுதலாக நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா குறிப்பிட்டுள்ளார்.
  இதுதான் தீர்ப்பின் இறுதி வடிவத்தை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தனது கைப்படவே திருத்தி, தட்டச்சு செய்த லட்சணமா? இவர்தான் கறைப்படாத கரத்திற்கு சொந்தக்காரரா? இவர்தான் திருத்த முடியாத தீர்ப்புக்களை வழங்கியவரா? இவர்தான் ஊழலை ஒழிக்க வந்த உத்தமனா?

  நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை, தமிழில் மொழிப்பெயர்த்து, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தினந்தோறும் தொடராக வெளியிட்ட மு.கருணாநிதிக்கு இது தெரியுமா, தெரியாதா?

  இந்த இந்திய தேசத்தில், கொலை குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு கூட, காலை நேரத்தில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உடனே, ஜாமின் பெறுவதற்கான வாய்ப்பும், போதிய அவகாசமும், வழங்கப்பட்டிருக்கிறது.

  ஆனால், ஜெ.ஜெயலலிதாவிற்கு, விடுமுறை நாளில், மாலை நேரத்தில் தீர்ப்பு! தீர்ப்பிற்கு பிறகு ஒரு வாரக்காலம் தொடர் விடுமுறை! நூறு கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை! அப்பப்பா! எதிரி நாட்டுகாரர்களுக்கு கூட, இது போன்ற நிலமை இனி ஏற்படக் கூடாது.

  ஜெ.ஜெயலலிதாவிற்கு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய சட்டவிரோதமான, தவறானத் தீர்ப்பால், தமிழகமும், தமிழக மக்களும் மிகப்பெரிய இழப்பையும், அவமானத்தையும் சந்தித்து உள்ளனர். நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் சட்டவிரோதமான, தவறானத் தீர்ப்பால், இதுவரை 245-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

  தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், பெங்களூர் தனி நீதிமன்றத்திதிற்கு சென்ற ஜெ.ஜெயலலிதாவை, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தனது சட்டவிரோதமான, தவறானத் தீர்ப்பால், அவருடைய பதவிகளை பறித்து, அவர் காரில் இருந்த தேசிய கொடியை அப்புறப்படுத்தி, ஜெ.ஜெயலலிதாவை மட்டுமல்ல, இந்த இந்திய தேசத்தையே அவமானப்படுத்தியுள்ளார்.

  வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள், வில்லில் இருந்து ஏவப்பட்ட அம்பு, கடந்து போன காலம், உடலில் இருந்து போன உயிர், பட்ட அவமானம், இழந்த நிம்மதி… இவற்றைத் திரும்பப் பெறுவது என்பது இயலாத ஒன்று. இதற்கு ஈடாக எதையும் வழங்கவும் இயலாது.

  இதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா என்ன பதில் சொல்ல போகிறார்?

  -டாக்டர் துரைபெஞ்சமின்.

  • kaduvan says:

   திரு பெஞ்சமின் அவர்களே,
   பெருக்கல் பிழையை தெளிவாக சுட்டி காட்டிய நீங்கள், அதே பக்கத்தில் வெறும் 16 வரிகள் தள்ளி, மொத்த தங்க, வைர நகைகளின் கூட்டு தொகையில் அனைத்தும் சரியாக கணக்கிடப்பட்டுள்ளதை ஏனோ வசதியாக மறைத்து விட்டீர்…
   இது குன்ஹா மீது உங்கள் துவேசத்தை நிரூபிக்க எடுத்துக்கொண்ட நிலையா, இல்லை மக்கள் எல்லோரும் எதை சொன்னாலும் நம்புவார்கள், நானும் பிதற்றுகிறேன் என்று நீங்க நினைத்த நினைப்பா என்று நானறியேன்.!

   You just want to take what you wish, and you had considered what is needed for you.! When you want to be in the midpoint, you ought to consider either ends. By this very simple logic we all can easliy fathom that your ultimate motive is to save MUMMY by defaming Honr. Cunha. And, besides you conveniently thought that no one would notice.!!! Come on sir, if you are able to read a document and comment, so is everyone…!!!!

   Please open your eyes and be realistic, even if you fail to be logical.!!!

  • rami says:

   ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 20,548 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராமுக்கு 433 ரூபாய் மேலும் அதில் பதிக்கபட்ட தங்க,வைர,மரகத,பவல,முத்து எ‌ன பல ஆபரணங்களின் மதிப்பு செர்ந்து Rs.8,90,55,032 ,
   இ‌து மு.கருணாநிதிக்கு இது தெரியுமா, தெரியாதா? என்பதை ‌விட
   ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்த 1000 வக்கீல்லிடம் தெரியுமா, தெரியாதா?
   தெரிந்து இருந்தால் கர்நாடக கொர்ட்டிடம் கொடுக்கதிருக்க வேன்டும்

   ————–
   ஜெ.ஜெயலலிதாவிற்கு, விடுமுறை நாளில், மாலை நேரத்தில் தீர்ப்பு! தீர்ப்பிற்கு பிறகு ஒரு வாரக்காலம் தொடர் விடுமுறை! நூறு கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை! அப்பப்பா! எதிரி நாட்டுகாரர்களுக்கு கூட, இது போன்ற நிலமை இனி ஏற்படக் கூடாது.
   நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை ஒரு வாரம் முன்பெ கொடுக்க வ‌ந்த பொது, 1000 அடிமைகல் நாள் சரிஇ‌ல்லை ,ஜெ.ஜெயலலிதாவின் ஜாதகம், ந‌ல்ல நேரம் பார்த்து , அந்த நாளை கேட்டு வாங்கி ஆப்ப நீந்கலெ வச்சிகிட்டு ஏ‌ன்பா இதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவ குரை சொல்லி என்ன பயன்.—–
   இதர்கெல்லாம் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா என்ன பதில் சொல்ல தேவை இ‌ல்லை , குமாரசாமி தான் பதில் சொல்லணும் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்களே.–மேலும் குமாரசாமி செய்த தவறுகளை சின்ன பையன் கூட சொல்லுவான்4+3=8

  • rami says:

   திரு பெஞ்சமின் அவர்களே,

  • rami says:

   திரு பெஞ்சமின் அவர்களே,

   1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ?

   ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.

   1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள் வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.

   நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு

   கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை. மேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.

   சில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா?

   ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக்குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படி தான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அதுபற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது.இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

   ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு நீதிபதி

   குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இதுபற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.

   கட்டடங்களின் மதிப்பீடுகள்

   ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.

   ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார். பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.

   இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது.

   சுதாகரன் திருமணச் செலவுகள்

   ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரன் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி குமாரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமானவரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.

   கடன் மூலம் வந்த வருமானங்கள்

   மிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.

   அப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப் பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.

   குற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி குமாரசாமி அதைப் புரிந்துகொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும். இப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டுமொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.

   திராட்சைத் தோட்ட வருமானம்

   ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம் 10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார். ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில்கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.

   கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமானவரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.

   பரிசுப்பொருள் மூலம் வந்த வருமானங்கள்

   ஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப்பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.

   ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும் வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.

   சசி என்டர்பிரைஸஸ்

   சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர்தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.

   ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்

   நமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் என்று 4 கோடி என்று கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ்சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   சூப்பர் டூப்பர் டி.வி

   சூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல், சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.

   சொத்துகள்…

   அசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர்தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

   இதுபோன்ற குளறுபடிகளால், எதிர்தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார்.

   – இவ்வாறு பட்டியல் போட்டுள்ளது அப்பீல் மனு. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.
   ———
   இந்திய தொலைக்காட்சி sorry நீதி துறை வரலாற்றிலே முதன் முறையாக TOP 5 ரேங்க்ல் வந்த பழுதுபட்ட தீர்ப்பில் அய்யாகுமாரசாமி http://jayaverdict.blogspot.in/p/ranking-of-thisverdict.html
   —————————-
   இதோடு இப்ப லேட்டஸ்ட் ஒன்றையும் சேர்த்தால் அதுவும் ஒரு முக்கிய ஆவணமாக ஆகி விடும் அது தான் வேட்பு மனு தாக்கலின் போது அவரே தெரிவித்த affidavit போயஸ் கார்டன் மட்டும் 45 கோடி என மதிப்பீடு செய்ய தெரிந்தவருக்கு கொடநாடு எஸ்டேட் இன் உண்மையான மதிப்பு தெரியாதா.? பாருங்க affidavit யில் பொய் சொல்லி உள்ளதை :-https://goo.gl/2LjXpd இதையும் அப்பீல் இல் சொல்லி இருந்தால் …விஷயம் தீவிரமாகி விடும்

 18. வெங்காயம் says:

  கோட்டைசாமி சாரி குமாரசாமி செய்த தவறுகளை உச்ச நீதிமன்றமும் செய்யுமா என்ன? அங்கு உண்மையிலேயே சட்ட நுணுக்கமும்,நீதியின் மீது அக்கறையும், நேர்மையும் கொண்ட, எதற்கும் விலை போகாத, நீதிபதிகள் இல்லாமலா போய் விடுவார்கள்? அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, உடனடியாக, கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிப்பதோடு, இந்த வழக்கை நன்றாக அலசி ஆராய்ந்து, வயது, உடல்நிலை, அரசியல், போன்ற எந்த காரணத்திற்காகவும், சலுகை காட்டாமல், கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.அப்படி வழங்கப்படும் தண்டனை மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.கிழவியும், மன்னார்குடி கூட்டமும் பெறப்போகும் தண்டனை, தமிழகத்தின் விடிவுகாலத்துக்கு ஒரு விடிவெள்ளி.விடுதலையை விலைக்கு வாங்கி வெளியில் வந்த உடனேயே கிழவியின் ஆட்டம், ஆரம்பித்து விட்டது. மகாராணியார் அரண்மனையிலிருந்து கிளம்பி, தர்பாருக்கு போகும் வரை போக்குவரத்தை நிறுத்தி வைப்பது, வழியெங்கும் கட்அவுட்கள் வைப்பது என்று அட்டகாசங்கள்.நிர்வாகம் என்ற ஒன்று நடக்கிறதா?என்றே தெரியவில்லை.கிழவியின் துதிபாடிகளும், அடிவருடிகளும் பட்டவர்த்தனமாக, இருபத்து நாலுமணி நேர கொள்ளையில் இறங்கி விட்டனர். இது போதாதென்று, ஏற்கனவே ஆயாவின் அலங்கோல ஆட்சியால் நொந்து போயிருக்கும் மக்களை வாட்ட கட்டாய ஹெல்மெட் போன்ற இம்சைகள் வேறு. இது உயர்நீதி மன்ற உத்தரவு என்று, அதிமுக அடிமைகள் ஜாலரா அடிக்க அவசரப்பட வேண்டாம். அப்படிதான் நீதிமன்ற உத்தரவுகளையும் இந்த ஆயா அரசு அப்படியே மதித்து கடைப்பிடிக்கிறதா? எத்தனை வழக்குகளில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போடபட்டிருக்கின்றன.ஹெல்மெட் வியாபாரிகளிடம் வசூல் செய்திருப்பதால், இதில் கடுமை காட்டப்படுகிறது என்பது, எல்.கே.ஜி குழந்தைக்கு கூட தெரியும். இவ்வளவு லட்சணமாக நடக்கும் இந்த அலங்கோல ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்டப்படவேண்டும். மேல்முறையீட்டில் வழங்கப்படும் தீர்ப்பு, அதிமுக என்ற கட்சிக்கும் சாவுமணி அடிப்பதாக இருக்க வேண்டும். .அந்த வகையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதிலாவது நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பது என் போன்ற நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு. இதிலும், கிழவி தப்பிவிட்டால்,தமிழ்நாட்டுக்கு குடிகாரநாடு என்றோ இலவச நாடு என்றோ பெயர் மாற்றி, ஆயா நாடு என்றே அழைக்கலாம். இதையும் வெட்கமில்லாமல் ஏற்றுக்கொள்வார்கள் நம் மக்கள். அவர்களுக்கு தேவை இலவசங்களும், எம்.ஜி.ஆர் படங்களுமே.)

 19. இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு கொடுக்கும் தீர்ப்புக்களை விமர்சித்தால் கோர்ட் அவமதிப்பாம். சாதாரணன் போலீஸ்க்காரனை அடித்தால் நமக்கு கேள்வி முறையில்லாமல் தண்டனை, ஆனால் அவன் மட்டும் மதிப்பு மிகுந்த யூனிபாரம் போட்டுக் கொண்டு நடுத்தெருவில் லஞ்சம் வாங்கலாமாம். 1௦% சதவிகித வரை கணக்கில் வராத சொத்து வைத்துக் கொள்ளலாமாம். கருப்பு பணம் 1௦% சதவிகித வரை வைத்துக் கொள்ளலாம். இன்னும், நாட்டில் 1௦% சதவிகித வரை பெண்களை கற்பழித்தால் தவறில்லை என்பார்கள் நீதிபதிகள். அதை நாம் கேட்டால் கோர்ட் அவமதிப்பாம். எவன்யா இந்திய அரசியல் சட்டத்தை எழுதினான்? சுத்த அயோக்கியத்தனமா இல்லே இருக்குது…

 20. kumar says:

  savkku dmk sombu..for you gunha is right and every body is wrond..poda dai..

 21. badboy says:

  scam in electricity consumption in madras high court, during feb, march, april average bill rs33 lakhs and for 1 may to 30 may current consu,ption charges Rs.27 lakhs. check how, where ?

 22. Super sir. especially last line was simply awesome.

 23. p.narayanan says:

  நீதித்துறையின் மாண்பு கெட்டுவிட்டால் மக்கள் யாரை நம்புவது ….கோவில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் என்ற பாரதியின் வாக்கு தான் நினைவுக்கு வருகிறது .

 24. venkayam says:

  குன்ஹா calculation so right? which means if you don’t like anybody , take a revenge with these judges? pongala naikala

 25. Selvaraj says:

  மிகவும் அருமையான கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress