ஜெயலலிதா ஆட்சி என்றாலே, வாரமிருமுறை மற்றும் வார இதழ்களுக்கு செய்திப் பஞ்சம். திமுக ஆட்சியென்றால், கருணாநிதியின் ஆலமரம் போன்ற குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு விழுதும் செய்திகளை அள்ளித்தரும். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள், பேசுவதற்கே தயங்குவார்கள். எந்தத் தகவலும் வெளிவராது. வரும் தகவல்களும் ஊகத்தின் அடிப்படையிலேயே இருக்கும். தகவல்கள் துளியும் கசியாமல் இரும்புக் கோட்டையாகத்தான் தன் வீட்டையும், அதிமுக கட்சியையும் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
சமீப காலமாக, ஜெயலலிதாவின் உடல்நிலையில் சிக்கல் என்ற தலைப்பில் பல்வேறு ஊடகங்களில் செய்தி கசிந்தவண்ணம் இருந்தன. மேலும் டெல்லியில் இருந்து வெளிவரும் ஊடகங்களும், தேசிய ஊடகங்களும், இது குறித்து பல்வேறு செய்திகளை வெளியிட்டன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரெட்டிப் இணையதளம் மீது அவதூறு வழக்கை தொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்ட நக்கீரன் மீது வழக்கு தொடுக்காத ஜெயலலிதா, டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ரெட்டிப் இணையதளம் மீது ஏன் வழக்கு தொடுத்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கெல்லாம் சுவையான பின்னணி உள்ளது.
மத்திய அரசின் நம்பர் இரண்டாக இருப்பவர் அருண் ஜெய்ட்லி என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படி நம்பர் டூ வாக இருக்கும் ஒரு அமைச்சர், மோடியின் நம்பிக்கைக்குரிய ஒரு அமைச்சர், ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியை சந்திப்பது என்பது மிக மிக சர்ச்சையான விஷயம். ஒரு அரசாங்கம் செய்யக்கூடாத விஷயம். ஆனால் மோடி அரசு மாநிலங்களவையில் 48 எம்.பிக்கள் குறைவாக உள்ளதால், எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில், அந்த ஒத்துழைப்புக்காக எத்தகைய கிரிமினலையும் சந்தித்து கெஞ்ச தயாராகவே இருந்தது. அந்த கெஞ்சல் திட்டத்தின் ஒரு வடிவம்தான் ஜெயலலிதாவுடனான சந்திப்பு. ஜெயலலிதாவுடன் நடந்த சந்திப்பில், சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்பதே கார்டன் வட்டாரங்கள் கூறும் தகவல். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா வெளிவர அவர் நிச்சயமாக மத்திய அரசை நம்பியிருக்கவில்லை. குமாரசாமி “நான் விற்பனைக்கு” என்று தன் கழுத்தில் போர்டு மாட்டிக் கொண்டு இருந்த நிலையில் அவருக்கு மத்திய அரசின் உதவி துளி கூட தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், அருண் ஜெய்ட்லிக்கே, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியே என்கின்றனர். மே 11 அன்று பாராளுமன்றத்தின் லாபியில் டைம்ஸ் நவ் அரசியல் எடிட்டர் நாவிகா குமாரோடு உரையாடிக் கொண்டிருந்தார் அருண் ஜெய்ட்லி. அப்போது ஜெயலலிதாவின் விடுதலை செய்தியை அருண் ஜெய்ட்லியிடம் கூறுகிறார் நாவிகா. கேட்டவுடன், ஜெய்ட்லியின் முகமே ஒரு கணம் இருண்டு விட்டது. ஆனால் ஒரு சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அருண் ஜெய்ட்லி, சட்டென்று இயல்பாக பேசினார். ஆக, அருண் ஜெய்ட்லிக்கே ஜெயலலிதாவின் விடுதலை வியப்பைத்தான் அளித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு அல்லாமல், ஜெயலலிதா மற்றும் பாஜக இடையே வேறு ஏதோவொரு டீல் பேசப்பட்டுள்ளது. அந்த டீலின் விளைவாகவே, மத்திய அரசுக்கு மாநிலங்களவையில் ஜெயலலிதா தொடர்ந்து அளித்து வந்த ஆதரவு. நிலம் கையப்படுத்தல் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படுத்தப்படுகையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் பெரும் அமளி நிலவியது. ஆனால் அதிமுகவின் அனைத்து எம்.பிக்களும், மக்களவையில் அந்த மசோதாவை ஆதரித்தனர். இது குறித்த அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, “செயற்கையாக என்ன சமாதானம் கூறினாலும், அதிமுக நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பாஜக வை ஆதரித்ததற்கான அடிப்படைக் காரணத்தை மறைக்க முடியாது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்ட உண்மை உலகத்திற்கு நன்றாகவே புரியும்” என்று கூறினார்.
இதற்கு நீண்ட விளக்கம் அளித்த ஜெயலலிதா பக்கம் பக்கமாக, நில கையப்படுத்தல் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்று ஒரு அறிக்கையை மார்ச் மாதத்தில் வெளியிட்டிருந்தார். ஜெயலலிதா தனது அறிக்கையில்
“தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா 5 வகை திட்டங்களுக்கு சில விதிவிலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. மாநில அரசு தேவை என்று கருதினால், ஒவ்வொரு திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, பொதுநலத்திற்கு ஏற்ப, அந்தந்த திட்டத்திற்கு மாநில அரசு, சில குறிப்பிட்ட வரையறையிலிருந்து விலக்களிக்க இயலும். மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும்?
குறிப்பிடப்பட்ட 5 வகை நில எடுப்புக்கும் இந்த இரு அத்தியாயங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மாநில அரசே முடிவு செய்யலாம் என்னும் போது, அந்தந்த திட்டங்களுக்கு ஏற்ப, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு முடிவு செய்ய இயலும்.2013 ஆம் ஆண்டைய மூலச் சட்டத்தில், 13 மத்திய சட்டங்களுக்கு பொது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே? அது போன்று பொது விலக்கு எதுவும், இந்த 5 வகை நில எடுப்புகளுக்கு தற்போது வழங்கப்படவில்லையே? மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டாம்; மத்திய அரசிடம் தான் இந்த அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்கிறாரா திரு.கருணாநிதி ?” என்று கூறியிருந்தார்.
நிலம் கையப்படுத்தல் சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால், இந்தியாவில் உள்ள அனைவரும் சுபிட்சம் பெறுவர் என்பது போல பேசியிருந்தார் ஜெயலலிதா.
மத்திய அரசின் திட்டக்கமிஷன் கூட்டமான நிதி ஆயோக் கூட்டத்துக்கு முக்கிய அரசு அலுவல்கள் காரணமாக வர இயலாது என்று கூறியிருந்த ஜெயலலிதா, நில கையகப்படுத்தும் சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டில் அந்தர் பல்டி அடித்துள்ளார். திடீரென்று விவசாயிகளின் அபலக்குரல் தனது காதில் விழுந்தது என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், தனது அறிக்கையில், “ டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில்,கடிதம் வடிவில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உரையில் தான் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், இதற்காக ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம் தான் நம்பும்படியில்லை. நிலச் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்களுக்கு தமிழகத்திலுள்ள உழவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களின் உணர்வுகளை மதித்து தமது அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் தேசப் பாதுகாப்பு, ராணுவம், ஊரக கட்டமைப்பு வசதிகள், சமூகக் கட்டமைப்புகள், தொழில் தாழ்வாரங்கள் ஆகிய 5 தேவைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்; நிலங்களை கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்; பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மோடி அரசு இந்த பிரிவுகள் அனைத்தையும் நீக்கியிருக்கிறது.
இந்த நடவடிக்கை உழவர்களை கடுமையாக பாதிக்கும் என்று தொடக்கத்திலேயே எதிர்த்ததுடன், போராட்டமும் நடத்தினேன். மற்ற கட்சிகளும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. உழவர் அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தின.
ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்த ஜெயலலிதா மட்டும் இச்சட்டத்தை ஆதரித்ததுடன், கடந்த மார்ச் 10 ஆம் தேதி மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும்படி அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
அதன்பிறகும் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பேரவைக்கு வெளியே ஜெயலலிதாவும் இச்சட்டத்தை தீவிரமாக ஆதரித்தனர்.
இது குறித்து கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ நிலம் எடுத்தல் சட்டத்திருத்த மசோதா 5 வகைத் திட்டங்களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
மாநில அரசு தேவை என்று கருதினால் ஒவ்வொரு திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, பொதுநலனுக்கு ஏற்ப விலக்களிக்க முடியும். மாநிலத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கும் முடிவை எதற்காக எதிர்க்க வேண்டும்’’ என்று கூறினார். ஆனால், இப்போது திடீரென தமது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சினையின் தொடக்கக் கட்டத்தில் உழவர்களும், எதிர்க்கட்சிகளும் எழுப்பிய எதிர்ப்புக் குரலை புரிந்து கொள்ள முடியாத ஜெயலலிதாவுக்கு, இப்போது உழவர்களின் குரல் புரிந்திருப்பது விந்தையாக உள்ளது.
தமக்கு காரியம் ஆக வேண்டுமானால் எத்தகைய நாடகத்தையும் அரங்கேற்ற ஜெயலலிதா தயங்க மாட்டார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தால், மக்கள் தம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே இப்படி ஒரு நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்திருக்கிறார்.
ஒருவேளை தமிழக விவசாயிகளின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாக அக்கறை இருந்தால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எதிர்க்கும்; சட்டத்திருத்த முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தேவைகளுக்காக தமிழகத்தில் ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.”
ராமதாஸின் இந்த அறிக்கை, ஜெயலலிதாவின் ஓரங்க நாடகத்தை அம்பலப்படுத்தவதாக உள்ளது.
தலைமைச் செயலகத்துக்கு செல்வதும், ஆளுனர் மாளிகைக்கு செல்வதும், ஜெயலலிதாவின் ஓரங்க நாடகத்தினால் தடைபட்டிருந்த நிலையில், புதனன்று அவசர அவசரமாக புதன் ஓரை சமயத்தில் தலைமைச் செயலகம் சென்று, சரியாக நாற்பது நிமிடங்கள் இருந்து விட்டு மீண்டும் வேதா நிலையம் திரும்பியுள்ளார் ஜெயலலிதா. இந்த லட்சணத்தில் “முக்கிய அலுவல்கள்” காரணமாக, டெல்லி செல்ல முடியவில்லையாம். இப்படி ஜெயலலிதா மெனக்கெட்டு, புதனன்று தலைமைச் செயலகம் சென்ற காரணமே, தனக்கு சிறுநீரகக் கோளாறு, மற்றும் கல்லீரல் கோளாறு என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே.
இந்த வதந்திகளை கிளப்புவதில், தமிழக ஊடகங்களும் முன்னணியில் இருந்தன. டெகல்கா இணையதளம் ஒரு படி மேலே சென்று, ஜெயலலிதா தொடர்ந்து பெத்தடின் ஊசி போட்டதால், சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்து விட்டன என்று அப்பட்டமான ஒரு பொய்யை செய்தியாகப் போட்டும், அந்த ஊடகங்கள் மீதெல்லாம் ஜெயலலிதா வழக்கு போடவில்லை. ஆனால், ரெட்டிப் இணையதளத்தின் மீது மட்டும் வழக்கு போட்டுள்ளார். இதற்கான பின்னணி என்னவென்றால், ரெட்டிப் இணையதளம் ஓரளவுக்கு நிதானமான, பழைமைவாத ஊடகம். கிட்டத்தட்ட இந்து நாளேடு போல. முழுமையாக செய்திகளை சரிபார்த்த பிறகே வெளியிடுவர். அப்படிப்பட்ட ஒரு இணையதளத்தில், ஜெயலலிதாவுக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. அதற்காக அவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார் என்பதோடு, கூடுதலாக போட்டிருந்த வார்த்தைதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூடுதலான வார்த்தைகள என்னவென்றால், “மத்திய அரசு வட்டாரத் தகவல்களின்படி” என்பதே.
இந்த மத்திய அரசு வட்டாரத் தகவல் என்பது, மத்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி என்கிறது டெல்லி வட்டாரங்கள். அப்படிப்பட்ட ஒரு மூத்த அதிகாரி சொல்லாமல், ரெட்டிப் இணையதளம் அப்படியொரு செய்தியை வெளியிட்டிருக்காது.
இதுதான் ஜெயலலிதாவை அதிகமாக கோபப்படுத்தியது. அதற்கு நேரடியாக பதிலளிக்கும் விதமாகவே ரெட்டிப் இணையதளம் மீது வழக்கு போட்டிருக்கிறார். நக்கீரன் இதழ், இந்த வாரம் அட்டைப்படக் கட்டுரையாக “ஜெயலலிதாவுக்கு டயாலிசிஸ்” என்ற செய்தியை போட்டதை அடுத்து, நக்கீரன் மீதும், செய்வாயன்று மான நஷ்ட வழக்கு தொடுத்தார்.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கையில், உடல் நலம் சரியில்லாதது போன்ற அவரின் நாடகம் அவர் எதிர்ப்பார்த்தது போல வெற்றிபெறவில்லை என்பதையே நிரூபிக்கிறது. வாரக்கணக்கில் தலைமைச் செயலகமே செல்லாமல், உண்டு உறங்கி, நாட்களை வெட்டியாக கழித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, தன்னுடைய தந்திரம் பலிக்கவில்லை என்பதாலோ என்னவோ, தலைமைச் செயலகத்துக்கு கடந்த புதனன்று வருகை தந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருக்கிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்து, ஆபத்து விளைவிக்கும் எந்த சிக்கலும் ஜெயலலிதாவுக்கு இல்லை என்பதை சவுக்கு தளம் மட்டுமே அறுதியிட்டு கூறியது. இணைப்பு,
ஜெயலலிதா எதற்காக இப்படியொரு நாடகத்தை நடத்தினார், பிஜேபியோடு செய்து கொண்ட உடன்பாடு என்ன என்பவை எல்லாம், வேதாநிலைய ரகசியங்களாகவே இருக்கும்.
savukku, dmk sombu. what is wrong in jj reviewing her stand on land bill. if this yiled good what’s wrong as like karunanidhi dramas. go and die in hell savukku dmk sombu sankar
O….
Your uploaded news is best ever
God save everything.
அய்யா சவுக்கு, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மதிய அரசு உதவியை ஜெ நாடவில்லை என்று சொல்கிறீர். அதே சமயம் ஜெ லம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை முன்னர் ஆதரித்து சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுபடத்தான் என்ன்று ராமடோஸ், கருணாநிதி சொல்வதாக எழுதுகிறீர்!
என்னதான் சொல்ல வரீங்க?
ஒருவர் தன கருத்தை மாற்றிக் கொள்ளவே கூடாதா? முதலில் ஆதரித்தால், பின் அந்த நிலைப்படை மாற்றிக் கொள்ள கூடாதா? இதற்க்கு முன் கருணாதி தன நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதே இல்லையா? தன் மகளை காப்பாற்ற கொங்கரசின் காலில் பொய் விழவில்லையா? ராமதாஸ் பிஜெஇபி யுடல் கூட்டணி வைத்தது அன்பு மணியை சிபிஇ வழக்கில் இருந்து காபற்றதான் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்கள?
தயவு செய்து எழுதும் பொது ஒரு லாஜிக் கோடா எழுதுங்கள்.
Savukku,
what is the big deal in changing JJ position on land bill? So, if she was ok before, she cannot change her position after?? what is this stupid? You even say she was not depending on Central govt for her asset case and they you say she voted for land bill because of her asses case???
isn’t this contradictory?
Now a days, Savukku is just writing about JJ because he doesn’t like her. We cannot expect unbiased articles from SAVUKKU,
yes the news is tru
poda sunni …neee sonnna elllam unmai yaru maa….dai sunni sankar nee oru ambilaya da…sankar oru daviya payayan
அரசியல் புலனாய்வு கட்டுரையை தொடர்ந்து சவுக்கில் படித்து வாசக பெருமக்களுக்கு ஒருவித சலிப்பு நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.
எங்கே போனது டாஸ்மார்க் தமிழ், கருப்பு ஆடுகள், காக்கி கம்முனாடிங்க, கேடி பிரதர்ஸ், சீனி கூத்து… இன்னும் சில பல சுவாரசியம் மர்மம் நிறைந்த கட்டுரைகள்.
அவைகள்சில காலமாக சவுக்கில் பார்கமுடியவில்லையே…..
மேல்மட்ட அரசியல் அ நீதிகளை பார்கும் வேளையில் கீழ்மட்ட அநீதிகளையும் பதிவேற்ற வேண்டிய கடமை சவுக்குக்கு உள்ளது. என்பதை பணிவுடன் இங்கு நினைவுட்ட விரும்புகிறேன்.
விரைவில் “கழன்ற காக்கி டவுசர்” என்ற பெயர் கொண்ட கட்டுரை சவுக்கின் வெள்ளிதிரையில் வரும் என்று எல்லோரும் நம்புவோமாக…. !
ஆமென்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால்..கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா முக்கிய தலைவர்களும் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை பற்றிய சர்ச்சைகளை பல முறை பேசிவிட்டனர்..ஆனால், தினமும் அறிக்கை விடும் ராமதாஸ் மட்டும் இதுவரை வாய்திறக்கவே இல்லை..ஒரு சமயம் ராமதாசுக்கு ஜெயலலிதாவின் நாடகம் முன்கூட்டியே தெரிந்திருக்குமோ?
savukku is always great.
என்ன சார் இது, தமிழ்நாட்டை பிடித்த சாபம் எப்ப முடியும்?