எங்கெங்கும் குமாரசாமிகள்

You may also like...

13 Responses

  1. ravi says:

    Dear Savukku,

    if you use the pictures, Please remove innocent people / students photos. they will get affected.

    thanks
    Ravi

  2. Murugan says:

    Great news , thanks savukku

  3. Somasundaram Valliappan says:

    எனக்கு இதுவரை நீதி மன்றங்களின் மேல் தான் ஓரளவு நம்பிக்கை இருந்தது…பொது மக்களை அது தான் கடைசியில் காப்பாற்றும் என்றல்ல….மிக்க அதிகாரம் கொண்டோரை நீதி மன்றம் ஒன்றால் தான் தண்டிக்க முடியும் என்று……குறைந்தபட்சம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட ஒன்றை மக்களுக்கு பயந்தாவது நீதி வழங்கி தண்டிக்கும் என்று……ஆனால் என்று உலகறிந்த ஒன்றை, மக்களாவது மயிராவது என்று குமாரசாமி தீர்ப்பு வழங்கினாரோ…..அதை வேடிக்கை பார்த்து உச்சநீதி மன்றம் உச்சா போய் கொண்டிருந்ததோ….அன்றே நீதியின் மேல் நம்பிக்கை போய்விட்டது.

    இந்த இரண்டும் நடைபெற்றால் தான் நம் நாடு உருப்படும்…

    1. உச்ச நீதி மன்றத்தில் 31 குன்ஹாக்கள்.

    2. பாராளுமன்றத்தில் 795 அப்துல் கலாம்கள்

    இப்ப சொல்லுங்க நம்ம நாடு முன்னேறுமா….? தல கிர்ர்ர்ர்ருஇன்னு சுத்துதுல…!!!!

    • Whip says:

      உச்ச நீதி மன்றத்தில் 31 குன்ஹாக்கள்.??? நம்ம நாடு முன்னேறுமா….? savukku kumarasamy visayathil thavaru seithuvittathu .innamum naan savukkirkku savaal vidukirean mudinthal witness of subramaniya samy ,nallama naidu ,lathikasaran umudi ,ithellam vida FIR pottaney oru paavi IG avan witnessium tamil paduththi intha thalaththil vida thayaaraa ??? mudiyavillaiyendral savukku yarukkaaka குமாரசாமி தீர்ப்பு உலகறிந்த ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட ஒன்றை மக்களுக்கு பயந்தாவது உடனடியாக veliyida vendum .இப்ப சொல்லுங்க தல கிர்ர்ர்ர்ருஇன்னு சுத்துதுல…!!!! குன்ஹா uththaman alla alla alla . itharkku melum kumarasamy methu koorum kutrachchattu savukku methu ulla ஓரளவு நம்பிக்கை???.

  4. Alaguraja says:

    முதன் முதலாக இன்று போக்குவரத்து காவல்துறையிடம் கெல்மெட் அணியாமல் 100 பைன் கட்டிட்டேன்.

    எப்பா நீதிபதி கிருபாகரா ஒனக்கு இப்ப சந்தோசமா?
    வயிறு எறிஞ்சு சொல்றேன்யா… நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட…

    என் தலையில நான் கெல்மெட்ட சொமக்கனும்னு சொல்ல நீ யாருப்பா? ஒனக்கு என்ன உரிமை இருக்கு?
    ஒனக்கு என்னய்யா என் உயிர்மேல அக்கறை…
    நாளைக்கி நான் ஒரு 10 லட்ச ரூபாய் கடன்பட்டு இருக்கேன்னா நீ வந்து அக்கறையோட குடுப்பியா? என் உயிர் மேல எனக்கு இல்லாத அக்கற ஒனக்கு எதுக்குப்பா? எனக்கு எது நல்லது கெட்டதுன்னு எனக்குத் தெரியும்பா.. நீ ஒன் வேலய மட்டும் பாரு.
    நீதிமன்றத்தோட வேல என்ன? சட்டத்துக்கு புறம்பா எது நடந்தாலும் அது மூனாவதா ஒருத்தன பாதிக்கிறதா இருந்தா அந்த மனுசன காப்பாத்த வேண்டியதுதான்..

    நான் எவன் குடும்பத்தயும் கெடுத்தனா? இல்ல பைக்ல கஞ்சா கடத்திட்டு போறனா?…

    நான் பாட்டுக்கு கஞ்சிய குடிச்சிட்டு எவனயும் டிஸ்ட்ர்ப் பன்னாம என் வேலைய பாத்துட்டு இருக்கேன். என் வாழ்க்கைல தலையிடுதுக்கு ஒனக்கு என்னய்யா உரிமை?
    இம்புட்டு பேசுறியே… ஒனக்கு தைரியம் இருந்தா தெருவுக்கு ரெண்டு சாராய கடய தெறந்து வச்சு பொதுமக்க வாழ்க்கை சீரழிச்சுட்ருக்கே கவர்மெண்ட்… அத தடுத்துப்பாரு..
    அதுக்கு தைரியம் இருந்தா அடுத்து மக்கள் மேல அக்கறப்படலாம்..
    அதுக்காக அடுத்து கெல்மட் போடலாம்னு சட்டம் போடலாம்னு அர்த்தம் இல்ல.. அது அவனவன் இஷ்டம். அவனுக்குத் தேவன்னா அவன் போட்டுக்குவான்.

    சட்டத்துல இருக்குறததான் அமல்படுத்துறேன்னு சொன்னியாமேப்பா? சட்டத்துல இருந்தா அத திருத்துற வழியப்பாருப்பா.. அந்த சட்டமே தப்புதான். நான் எத போடனும்னு சட்டம் சொல்றதுக்கு சட்டத்துக்கு என்ன உரிமை இருக்கு.

    நாளைக்கி ஜட்டி போட்டா இருக்கமா இருக்கும். உயிரணு பாதிக்கப்பட்டு ஆண்மைக்குறைவு வந்துரும். அதுனால யாரும் ஜட்டி போடக்கூடாதுன்னு ஒரு உத்தரவு போட்ருங்க. வௌங்கும்யா தமிழ்நாடு.
    எனக்கு கடைசியா ஒன்ன தெரியனும். நாளைக்கி கெல்மெட் போட்டுட்டு போகும்போதும் ஒரு லாரி என்னய நெஞ்சுல ஏத்தி கொன்னுருச்சுன்னா ? எங்குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுத்துருமா கோர்ட்டு? குடுக்காதுல்ல…

    கெல்மெட் நல்லதுதான்யா… ஆனா அத நீ எனக்கு கட்டாயப்படுத்தி போட வைக்க முடியாது. போட மாட்டேன். முடிஞ்சத பாத்துக்கங்க. எதயும் சந்திக்க தயார்.

  5. Alaguraja says:

    நீதிமன்ற பயங்கரவாதம்.

  6. Tamil Selvan says:

    தமிழ்நாட்டில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 32 தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.
    தென் மாவட்டங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளியது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விதிகளை பின்பற்றி நடக்காததால் அந்த நிறுவனம் தாது மணல் அள்ள தடை விதித்து மத்திய அரசு ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 32 வழக்குகளில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஒற்றை நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் உள்ள குடிமையியல் நீதிமன்றத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தை வி.வி. மினரல்ஸ் அணுக முடியும். ஆனால், அந்த நிறுவனம் அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்புகளை பெற்றிருப்பது பல ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
    அதுமட்டுமின்றி, இவ்வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து உரிய காலத்தில் மேல்முறையீடு செய்வதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறது. நீதிப்பேராணை வழக்குகளில் தீர்ப்பின் ஆணை தயாரான நாளில் இருந்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். ஆனால், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு 6 மாதங்களாகியும் அதன் சான்றளிக்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, அந்த வழக்குகளில் மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்காமலேயே, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட தீர்ப்பாணை குறித்த காலத்தில் வழங்கப்படாவிட்டாலும் கூட, அதைக் காரணம் காட்டி, தீர்ப்பாணை இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனாலும் அந்த வாய்ப்பை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவில்லை.
    வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட விதமும், தீர்ப்பாணைகளை வழங்குவதில் திட்டமிட்டு செய்யப்பட்ட காலதாமதமும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்து விட்டன. 2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இயற்கை வளங்கள் தேசிய சொத்தாக கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. தாது மணலை பொறுத்த வரை, அது பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயமும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது தாது மணல் குவாரிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் விதிகளை மீறும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அகற்றுவதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுவதும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயலாகும்.
    ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் தான் உள்ளன. ஆட்சியாளர்களாலோ, அதிகாரிகளாலோ அநீதி இழைக்கப்படும் போது நீதிமன்றங்களை அணுகி நீதி பெறலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தோற்கும் வகையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமையக் கூடாது.வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது யார்? தீர்ப்பாணைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசுக்கு வழங்கப்படாததற்கு காரணம் யார்? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. ஆனாலும், வி.வி. மினரல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக ஒருசிலர் செயல்படுவது தொடர்ந்தால், ஏழைகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் மேல்நிலை நீதிமன்றங்கள், பணக்காரர்களின் முதல் நம்பிக்கையாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை உரியவர்கள் உணர வேண்டும்.
    எனவே, வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தவறு செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதுடன், இனியும் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காலம் காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • B.Sairam says:

      Before 1991 private parties chould not involve in mining. It is the responsiblity of privatization and globalization. Now, india is looted ny privates..

  7. Jako says:

    Its all our fate..

  8. Raaj says:

    கட்டுரையின் முதல் வரியில் “அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் என்பதை “ஆட்சியாளர்கள் அவருக்கு துணை போவதும்” என மாற்றினால் மிகப் பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

  9. What is happening in this country sir? So, Justice can be available anywhere except courts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress