கவுரவம் பார்த்தால் சம்பளம் கிடைக்குமா?
“இந்த இடத்துல ரெக்கார்டிங் சரியா வரல.. பாருங்க… ஏதோ நாய்ஸ்…”
“அய்யோ, சாரி… நல்லாத்தானே இருந்திச்சு.. நான் கேட்டேனே அனுப்புறதுக்கு முன்னால…”
“அது சரி …………….…..ரை ஏன் பேட்டி எடுக்கல? கம்ப்ளீட்டாவாதே..”
“ஏம்ப்பா, இருக்குறது எட்டு நிமிஷம்… எவ்வளவு வாய்ஸ்… அவ்ரு கருத்தை சொல்ற இன்னொருத்தர் பேட்டி இருக்குதே…”
“இருந்தாலும் அவ்ரு மாதிரி வருமா… ட்ரை பண்ல நீங்க… அவ்வளவுதான். சோம்பேறித்தனம்… வயசாயிருச்சி. அலைய இஷ்டமில்ல…”
“ஏன் டிஎன்ஜி, நேத்து மு.க அறிக்கை கொடுக்காம விட்டீங்க..?”
“அது எனக்கே தெரியாதே… ரொம்ப லேட்டா வந்திருக்கும்…”
“செக் பண்ணணும்… செக் பண்ணணும்… அலர்ட்டா இருக்கணும்… இன்னிக்கு நியூஸ் கொடுத்தாச்சுன்னு வேற வேலை பாக்க போயிறக்கூடாது… 24/7 வேலை இது…. அப்றம் அந்த ஜட்ஜ்மென்ட்…”
“ஓ காட்… எனக்கு தெரியாதய்யா.. எவ்வளவு எடத்துல ஒரு ஆளால இருக்கமுடியும்…?”
“அதெல்லாம் கான்டாக்ட் டெவலப் பண்ணணும்… நியூஸ் ஒண்ணுமில்லேன்னா கோர்ட்க்கு போகணும்… ஒவ்வொரு நீதிபதி சேம்பருக்கும் போய் பெஞ்ச் கிளார்க்கை பார்த்துட்டு வரணும்… அவங்க டிப் ஆஃப் பண்ணமாட்டாங்க?”
இப்படித்தான் முடிந்தது என் ஊடக அனுபவம்.
அனைத்து அவமானங்களையும் பல்லைக் கடித்துக்கொண்டு ஏற்றுக்கொண்டுதான் இறுதியாண்டுகளைக் கழித்தேன். முறைத்துக்கொண்டால், ரொம்பவும் சுய கவுரவம் பார்த்தால் யார் சம்பளம் தருவார்கள்?
துவக்கத்திலும் அவமானங்களுக்கு பஞ்சமில்லை.
பெருங்களத்தூர் அருகே விளை நிலங்களை வாங்கி கட்டிடங்கள் கட்டுகின்றனர். விவசாயம் பாதிக்கப்படும் என்று ஓர் ஆங்கில் இதழில் செய்தி வெளியாக, தலைமை செய்தியாளர் இராம திரு சம்பந்தத்திடம் கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்கி, பஸ்சில் நெடு நேரம் பயணம் செய்து, இரண்டு நாட்கள் எங்கெங்கோ அலைந்து பின் சரியான இடத்தைக் கண்டுபிடித்தேன்.
சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் பேட்டியும் எடுத்து அலுவலகத்துக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்து, இன்னமும் அரசு அதிகாரிகளிடம் பேச தொலைபேசி எண்கள் வாங்க முயன்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சம்பந்தம், ”என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார் சற்று எரிச்சலுடன்.
“போய்விட்டு வந்திருக்கிறேன்… அதிகாரிகளின் கருத்தை வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்..”
“தெரியாமத்தான் கேக்கிறேன், நீ என்ன நெனச்சிகிட்டிருக்கே… அருண் ஷோரின்னா…? ஒரு ஸ்டோரிக்கு ரெண்டு நாளு மூணு நாளா… அதெல்லாம் இங்கே சரிப்படாது… இது டே டு டே ரிப்போர்ட்டிங்… சும்மா இன்வெஸ்டிகேஷன் அது இதுன்னு அலைய முடியாது இங்க… ஆமா… சொல்றதக் கேட்டு வேலை செய்றதுன்னா இரு… இல்லேன்னா…”
செம டோஸ். பெருங்களத்தூர் ஸ்டோரி அத்தோட காலி.
ஏதோ அம்பத்தூர்ல கொலை. யார் என்ன என்ற தகவல் வாங்கும் வேலையில் இறங்கினேன்.
ஒரு கட்டத்தில் நிருபர்கள் அறைக்குள் நுழையும் முன் மூடியிருக்கும் கதவின் கைப்பிடியை முழுதாகத் திருகாமல், ’இன்று உள்ளே போகத்தான் வேண்டுமா? எல்லா அவமானங்களையும் பெற்றுத்தான் ஆகவேண்டுமா’ என என்னையே கேட்டுக்கொண்டு, என் கையறு நிலையினை உணர்ந்து, என் சுயமரியாதைக்கு இரண்டு சொட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு நுழைய வேண்டியிருந்தது.
இவ்வாறு துவக்கத்திலும் சரி, முடிவிலும் சரி சுயமரியாதையை நிறையவே பலி கொடுக்கவேண்டியிருந்தது.
ஆனாலும் இடைப்பட்ட காலங்களில் சில உருப்படியான காரியங்களையும் செய்ய முடிந்தது. இல்லையெனில் ஏன் கோசல்ராமோ, கதிரோ என் அனுபவங்களை நினைவுகூர சொல்லப்போகின்றனர்!
நீண்ட நாட்களாகவே சவுக்கு சங்கர் என்னை எழுதச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை. என் சுய பிரலாபத்தில் எவ்வளவு பேருக்கு அக்கறை இருக்கும், தூறல் நின்னு போச்சு நம்பியாரை, ’சும்மா இரு பெரிசு’ன்னு பாக்யராஜ் அடக்குவதைப் போல மற்றவர்கள் கடிப்பார்களோ என்ற தயக்கம்தான்.
ஒரு பத்து வருடம் முன்புகூட ஒரு முன்னணி வெளியீட்டாளர் கேட்டுக்கொண்டபடி என் அனுபவங்களை தொகுத்தேன். எழுதி முடித்தபின், அவர்கள் ’என்ன இவரை இப்படித் தாக்குறீங்க, அவரை அப்படி விமர்சிக்கிறீங்க, இதெல்லாம் நமக்காவாது..’ எனக்கூறி பின்வாங்கினர்.
இப்போது நம்ம அடையாளம் ஆசிரியர் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அதனால் எழுதுகிறேன்.
முன்பு நான் எழுதியது என் கணினியில் கூட காணோம். புதிதாகத்தான் எழுதவேண்டும். அதுவும் நல்லதே. கூட ஒரு தசாப்த அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறதே.
பலவற்றை அலச இருக்கிறேன். கூடியவரை வெட்டி பந்தா, ஓவர் சீன் இருக்காது. ஆனால் சில இடங்களில் சிலவற்றை தவிர்க்க இயலாது. பொறுத்தருள்க.
இயன்றவரை எல்லாவற்றையும் நேர்மையுடனே எடுத்துரைக்க முயல்வேன். சம்பந்தப்பட்டவர்கள் பலர் என் நட்பு வட்டாரத்தில் இருப்பதால் ஆங்காங்கே பூசி மெழுகலும் இருக்கும். ஆனால் வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும்.
பிரஸ்டிட்யூட்ஸ் எனும் சொலவடை இப்போது அதிகமாக, குறிப்பாக வலதுசாரி வட்டாரங்களில் புழங்குகிறது. சோரம் போன பத்திரிகையாளர்கள் என சாடுவதற்கு அச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அது பரிவாரத்தினரின் எரிச்சலை வெளிப்படுத்தினாலும் உண்மையில் செய்தியாளர்கள் பலர் விலைபோகவே செய்கின்றனர்.
ஊடகம் என்பதே ஆள்வோரின் கையாளாகத்தான் செயல்பட்டுவருகிறது நீண்ட காலமாக. செய்தியாளர்களும் ஆளும் வர்க்க பார்வைகளை அப்படியே உள்வாங்கியிருப்போராகத்தான் இருக்கின்றனர்.
ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சமூக மாற்றத்துக்கு, சமூக நீதியை நிலைநாட்ட ஊடகங்கள் உதவ முடியும் என்பதே என் அனுபவம்.
ஒன்றை துவக்கத்திலேயே தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊடகவியலாளனாக 40 ஆண்டு காலம் பல்வேறு நிறுவனங்களில். ஒரு சமூக ஆர்வலனாகவும். பல தவறுகள் புரிந்திருக்கிறேன், கோட்டை விட்டிருக்கிறேன், கடமையிலிருந்து தவறியிருக்கிறேன், நான் ஒன்றும் பெரிய முன்மாதிரியெல்லாம் இல்லை. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிகமாக அறம் சார்ந்தே வாழ்ந்திருக்கிறேன். வழுவிய தருணங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள் உண்டு என நம்புகிறேன்.
அந்த நம்பிக்கையில்தான் இத்தொடரை துவங்குகிறேன்.
தொடரும்
யாருங்க எழுதறா?
நாற்பதாண்டுகால எழுத்து – காத்திருக்கிறோம்
//நீண்ட நாட்களாகவே சவுக்கு சங்கர் என்னை எழுதச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். //
– அப்ப இந்த தொடர எழுதப் போறது யாரு?
சங்கர் சார் இல்லையா? அவ்வ்வ்….
any news new in Foreign Contribution Regulation Act
Welcome Sir wait for more news………………………………………………
Eagerly awaiting.
Pls continue sir… We support you.
ஊடகத்தில் புதியவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் வாழ்த்துகள்
we welcome you sir !
நல்ல ஆரம்பம்…..சவுக்கு அவர்களே உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.
I hope this would be very much interesting to know about our system, people who rule us and inside work culture for people who is interested in Journalism.
And kindly update the news with corruption in various fields, local politics because based on these information we citizens get an idea to choose our representatives in assembly election,local body elections.