தலைவெட்டி சங்கம்
“Hey, meet my journalist friend Gopalan”
”இவர்தான் என் பத்திரிகையாள நண்பர் கோபாலன்,” என என்னை ஒருவர் அறிமுகம் செய்தார் ஒரு சந்திப்பில். அப்போதுதான் எனக்கு உறைத்தது ஏதோ ஒரு வகையில் நான் பத்திரிகையாளன் ஆகிவிட்டேன் என. ஒரே குஷி. என் தந்தை, மற்ற நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
இது நடந்தது 1978ல். அப்போது நான் எந்த முன்னணி பத்திரிகையிலும் இல்லை. விவேகானந்த கேந்திரா எனும் சங்க பரிவார அமைப்பின் வெளியீடான ’யுவ பாரதி’ எனும் ஆங்கில மாத இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். துணை ஆசிரியர், நிருபர், அச்சுப் பிழை திருத்தும் ப்ரூஃப் ரீடர் என பலவழிகளில்.
நான் யுவ பாரதியில் இருந்திருக்கிறேன் என்று நான் சொல்லி தெரிந்து கொள்பவர்கள் சிலர், “ஆகா, இவன் பார்ப்பான்… இவன் ஆதி இப்படித்தானே இருக்கவேண்டும்,” என தங்களுக்குள் பேசியிருக்கின்றனர். சிலர் என்னிடமே, ”நீ என்ன யோக்கியம்?” என்ற ரீதியில் கேட்டிருக்கின்றனர்.
சரி, இப்போது எல்லோருக்கும் தெரியட்டுமே என்பதால் இதை பதிவு செய்கிறேன்.
உண்மையிலேயே பள்ளி நாட்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் பங்கேற்றிருக்கிறேன். அப்போது அதை ’தலைவெட்டி சங்கம்’ என கிண்டல் செய்வார்கள். தலை குனிந்து வணக்கம் செய்யும் வழக்கத்தை அப்படி சொல்வார்கள்.
ஷாகாக்களில் பொதுவாக விளையாட்டுகள்தான். அவ்வபோது ஏதோ தேசபக்தி அது இதுவென குட்டி லெக்சர் இருக்கும். ஒரு நாள் மத மாற்றம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். கிறித்தவர்களை விமர்சித்தனர். இங்கிலாந்து இளவரசரே மாறுவேடத்தில் இந்தியா வந்து மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ஒருவர் சரடு விட்டார்.
”அதெப்டி சார் யாருக்கும் தெரியாம வர முடியும்….பேப்பர் காரங்களுக்கெல்லாம் தெரியாமலா போயிடும்?” என ஒருவர் சாதாரணமாகக் கேட்க, நமது புலனாய்வுத் திலகம் திணறிப் போய்விட்டார். ஏதோ வழிந்து பேச்சை மாற்றினார்.
நான் கடைசியாகச் சென்ற ஷாகா அதுதான் என நினைவு. இவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என நின்றுவிட்டேன்.
அதன் பிறகு கல்லூரி முடித்து வேலைக்குப் போன பிறகும் அவ்வப்போது யாராவது ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் வீட்டுக்கு வந்து, ”நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள்? உங்களைப் போன்றவர்கள் எங்களுக்குத் தேவை,” என கரைக்க முயல்வார்கள். என் தந்தையிடம் முறையிடுவார்கள். ஆனால் பிடி கொடுக்காமல் விடை கொடுத்துவிடுவேன்.
ஆனால் நான் யுவபாரதியில் சேர்ந்ததற்கும் பள்ளிப் பருவ ஷாகாவிற்கும் தொடர்பேதும் இல்லை. சென்னைக்கு வந்து, சுருக்கெழுத்தாளராக நிறுவனம் விட்டு நிறுவனம் மாறி, வழி தெரியாமல் திகைத்து நின்ற காலத்தில்தான், ’ஆங்கிலம் அறிந்த இளைஞர் தேவை – ஒரு பத்திரிகைக்கு’ என்று வரி விளம்பரம் பார்த்தேன். கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்குச் சென்றால் விவேகானந்த கேந்திரா. அப்போது அது குறித்து அதிகம் தெரியாது.
ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்தான் இதழ் ஆசிரியர். எனது அரசியல் பற்றி எதுவும் கேட்கவில்லை. யுவபாரதி இதழைக் காண்பித்தார். பெரிதாக இந்துத்துவ பிரசாரம் இல்லை. ஆனால் ஆன்மிக வாடை தூக்கல். கொஞ்சம் நெளிந்தேன்.
நான் பல்வேறு பிரச்னைகள் குறித்து கட்டுரைகள் எழுதலாம், மற்றவர்கள் எழுதி அனுப்புவதை திருத்தலாம் என்றெல்லாம் சொன்னார் அந்தப் பேராசிரியர். அதை நான் ஊடகப்பணி என நினைக்காவிட்டாலும், எழுத வாய்ப்பு கிடைக்கிறதே என மகிழ்ச்சி. எப்படியும் எனக்கு வேலை முக்கியம். மாதம் முன்னூறோ நானூறோ சம்பளம். 70 களில் கணிசமான தொகைதான் அது. சிக்கனமாக வாழ்ந்தால் பெற்றோருக்கும் அனுப்பி வைக்கலாம்.
அப்போது தெரியாது, இண்டியன் எக்ஸ்பிரசில் நுழைவதற்கு யுவ பாரதி ஒரு என்ட்ரி பாயின்ட்டாக இருக்கப் போகிறது என.
பட்டப் படிப்பு காலத்திலிருந்தே எக்ஸ்பிரஸ் நிருபர் வேலைக்கு மனு அனுப்பிக் கொண்டிருப்பேன். எழுத்துத் திறமையெல்லாம் காண்பிக்க முயற்சி செய்தும் பயனில்லை. கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் யுவபாரதியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து வழக்கம்போல் மார்ச்-ஏப்ரலில் மனு அனுப்பியபோது, தேர்வு எழுத வரச்சொல்லி அழைத்தார்கள்.
யுவபாரதிக்கும். பிந்தைய பணிகளுக்கும் அதிகத் தொடர்பில்லைதான். ஆனாலும் நிறைய படிக்க முடிந்தது. மற்றவர்களின் கட்டுரைகளை பிரசுரத்திற்காக சரி பார்க்கும்போது நமது மொழித் திறனை வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது.
அப்போதெல்லாம் எனக்கு ஆங்கில மொழி தொடர்பான அய்யங்கள் ஏற்படும்போது, பிரிட்டிஷ் கவுன்சிலில் பிரபு என்பவர், பெரும் நிபுணர், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஏன் கடிதம் எழுதிக் கூட, கேட்பேன். சலிக்காமல் உதவுவார்.
அப்போது கைப் பேசி கிடையாது. இ மெயில் இல்லை. கையால் எழுதுவது அல்லது தட்டச்சு தான்.
நாம் மதிப்பவர்களின் கையெழுத்தில் வரும் கடிதங்களைப் பெறும்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
யுவபாரதி காலகட்டத்தில் பலவகையான மனிதர்களைத் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. அது பற்றி அடுத்த பகுதியில்.
தொடரும்
நன்றி நம்ம அடையாளம் வார இதழ்
நம்ம அடையாளம் ஆன்ட்ராய்ட் இணைப்பு
https://play.google.com/store/apps/details?id=com.magzter.nammaadayalam
there r some anti brahmin thugs also there. Even if somebody kills brahmins, another brahmin will say, blood is coming , but i dont know who stabbed you. No wonder Brahmsin are under Nazi reservation in TN. On Converstion, go to all busstops in CHennai and blore in hte morning . You will notice. Even Gandhi condemned. If these fellows dont trust Gandhi who else will they trust?Lies of DK thugs wont win forever.
கட்டுரை மிக நன்றாக உள்ளது. வரும் கட்டுரைகளில் இளம் எழுத்தாளர்கள் பயன் பெரும் வகையில் தமது அனுபவங்களைச் சொன்னால், அனைவரும் படித்தாலும் சிலராவது கற்றுக்கொண்டு பயன் அடைவர்.
Tamil Nadu nowhere near many other states for attracting investments. World Bank Report
http://www.dnaindia.com/money/report-gujarat-ranks-first-in-ease-of-doing-business-world-bank-report-2125147
http://www.dnaindia.com/money/report-gujarat-ranks-first-in-ease-of-doing-business-world-bank-report-2125147