பரிவாரத்தில் சுதந்திரம்
’யுவபாரதி’ இளைஞர்களுக்கான இதழ். எவ்வளவு இளைஞர்கள் அதனால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள் என்பது சந்தேகம்தான்.
கடவுள், சமய இலக்கியங்கள், ஆன்மீகவாதிகள் தவிர ஆங்கில மொழி, கல்வி, விளையாட்டு குறித்த கட்டுரைகளும் வெளியாகும். அது அடிப்படையில் பரிவார சிந்தனையுடைய இளைஞர்களுக்காக என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் நேரடி இந்துத்துவா பிரசாரமோ மற்ற மதங்கள் மீது வெறுப்பை வளர்ப்பது மாதிரியான கட்டுரைகளோ எதுவும் அப்போது இடம்பெற்றதில்லை. இப்போது மாறியிருக்கக்கூடும். ஆனால் பார்க்காமல் சொல்லக்கூடாது.
நான் துணையாசிரியராக சேர்ந்த பிறகு கல்வி, சமூகம், கலை, பண்பாடு ஆகியவை குறித்து வாசகர் ஆர்வத்தினை சற்றே தூண்டும் வகையில் சில பகுதிகளை யுவபாரதியில் சேர்க்க முடிந்தது.
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். நான் சேர்ந்தது வெறும் துணையாசிரியராய். முன் அனுபவம் ஏதும் கிடையாது. ஆனால் என் ஆர்வம், மொழித் திறன் இவற்றுக்கு மதிப்பளித்து அவர்களின் வரையறைக்குள் நான் விரும்பியவற்றை இதழில் அறிமுகப்படுத்த அனுமதித்தனர்.
உள்ளே நுழைந்த நாளிலிருந்து வெளியேறும் வரை ஒரு முறை கூட ’நாம் ஏன் இங்கு வந்து சேர்ந்தோம்’ என்று யோசிக்கும் நிலையை எவரும் உருவாக்கவில்லை. எந்த ஒரு கருத்தியலையும் என் மீது திணிக்க முயலவில்லை.
சேர்ந்த சில நாட்களிலேயே நான் ஒரு மார்க்சிஸ்ட் என்பதையும், குறிப்பாக இறைப் பற்றாளன் இல்லை என்பதையும் நிர்வாகத்தினர் உணர்ந்திருப்பார்கள். ஆனால் ஒருவரும் முகம் சுளிக்கவில்லை. என் நிலைக்கு அதிகமாகவே மதித்தார்கள், அன்பு செலுத்தினர். அவர்களின் எளிமையும் என்னை மிக ஈர்த்தது.
ஏக்நாத் ரானடே என்பவர்தான் கேந்திராவின் தலைவர். சர்வ வல்லமை பெற்றவர். ஆர் எஸ் எஸ் மேலிடத்தால் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்பும் பணிக்கென அனுப்பப்பட்டவர்.
பின்னாளில் அது பிரம்மாண்ட உருக்கொண்டபோது விவேகானந்த கேந்திரா ஒரு தன்னாட்சி அமைப்பாகவே ஆனது. ஏக்நாத் இந்து மத சிந்தனைகளை பரப்ப பல புதிய முயற்சிகள் மேற்கொண்டார். ஜெசூட் பாதிரிமார் போன்று திருமணம் செய்துகொள்ளாமல் மதப் பணிக்கென தங்களை அர்ப்பணித்துக் கொள்வோரைக் கொண்ட அமைப்பை நிறுவினார்.
நான் அவர்களை அறிந்திருந்த காலத்தில் முஸ்லிம்களை, கிறிஸ்துவர்களை பற்றி ஜாடை மாடையாக விமர்சிப்பார்கள் ஆனால் பெரிதாக காழ்ப்புணர்ச்சி வெளிப்படாது. நாமாகப் புரிந்துகொள்ளவேண்டும் அவர்கள் எண்ணவோட்டம் எப்படி இருக்கிறதென்று. மிதமான இந்துத்துவா எனக் கொள்ளலாம். அத்தகையதொரு சூழல் உருவாக ஏக்நாத் ரானடேதான் காரணம் என நினைக்கிறேன்.
அவர் சென்னை வரும்போது கேந்திரா அலுவலகத்தில்தான் தங்குவார். ஏதோ ஒரு பெஞ்சில் படுத்துறங்குவார். மென்மையாக பேசுவார். நான் சகஜமாக அவரிடம் உரையாடியிருக்கிறேன். வாதமெல்லாம் செய்யமாட்டேன். விவேகானந்தரைப் பற்றி, கேந்திராவின் செயல்பாடுகள் பற்றி என்ன கேட்டாலும் தயங்காமல் பதிலளிப்பார். நிறுவனத்தின் தலைவர் என்ற பந்தா துளியும் இருக்காது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வேலை கிடைத்தவுடன் யுவபாரதியிலிருந்து விலகும் கடிதத்தை அவருக்கே அனுப்பினேன், அவர் மிகுந்த அன்புடன் எழுதிய பதிலை நீண்ட காலம் பாதுகாத்து வைத்திருந்தேன்.
அந்த எளிமையும் இனிமையும் பரவலாக எல்லோரிடமும் இருந்தது. உள்குத்து அரசியலும் உண்டுதான். ஆனால் அதிர்ந்து பேசமாட்டார்கள். அதே போல நிர்வாகி பணியாளர் வேறுபாடெல்லாம் அதிகம் இல்லை.
என்னை நியமித்த பேராசிரியர் விடுப்பில் செல்ல, எனக்கும் இன்னொரு துணை ஆசிரியருக்கும் இடையில் ஏதோ பிரச்னை. நேரடியாக அலுவலக நிர்வாகி வெங்கட்ராம்ஜியிடம் (அங்கே எல்லோரும் ஜிதான்) சொல்லத் தயங்கி, கேந்திரா வந்து போகும் இன்னொரு முக்கிய புள்ளியிடம் புலம்பினேன்.
அவர் ஏதாவது ஆறுதல் சொல்லிவிட்டுவிடுவார், நடவடிக்கை என்றாலும் நேரடியாக என்னை சீனில் இழுக்கமாட்டார் என்று நினைத்தே அவரிடம் சொன்னேன்.
மறுநாள் காலையிலேயே வெங்கட்ராம்ஜியிடமிருந்து அழைப்பு. பயந்துவிட்டேன். நம்முடைய அவசர குடுக்கைத் தனத்தில் வேலை காலியாகப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அவரோ மிக தன்மையாக, ”ஏன் என்னிடம் சொல்லத் தயங்கினீங்க… நான் கவனிக்கமாட்டேனா?” என்றவர் விவரங்களைக் கேட்டறிந்து ஏதோ பஞ்சாயத்து செய்து வைத்தார். புதிய ஆசிரியர் ஒருவரையும் நியமித்துவிட்டார். அவரும் தங்கமான மனிதர். நீண்ட காலம் அவருடன் தொடர்பில் இருந்தேன்.
புதிய ஆசிரியர் சிவகுமார், ஆர் எஸ் எஸ் இல்லை. ஆனால் ஆன்மீகம், தத்துவ விசாரணை இப்படி. ஆனால் அவரது பாணியில் சென்றால் யுவபாரதிக்கு சரிவராது என்று புரிந்துகொண்டு, “நீ விருப்பப்படி எழுதிக்கொள், கேந்திராவின் அடிப்படைக் கொள்கைகளில் கைவைக்காமல் இருந்தால் சரி,” என்று சொல்லிவிட்டார்.
ஆக ஒரு துணை ஆசிரியராக இருந்துகொண்டு, பரிவார அனுதாபங்கள் துளியும் இல்லாத போதிலும் நான் ஏறத்தாழ யுவபாரதியின் ஆசிரியர் போல செயல்பட்டேன். ஒவ்வொரு சமயம், ’இது ஏனப்பா, விவகாரம், விட்டுவிடுவோம்’ என்பார் சிவகுமார், நானும் பிரச்னை செய்யமாட்டேன்.
நான் விரும்பிய இதழ்களை வாங்கிக் கொள்ள அனுமதித்தனர். அப்போது டெல்லி என்று ஒரு வார இதழ், இல்லஸ்ட்ரேடட் வீக்லியிலிருந்து வெளியேறிய குஷ்வந்த் சிங் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார். நல்ல ஆழமான கட்டுரைகள் வெளியாகும். அது போன்ற முக்கிய இதழ்களிலிருந்து சிலவற்றை சுருக்கமாக யுவபாரதியில் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. அதாவது சற்றும் ஆன்மீக, இந்துத்துவ வாடை இல்லாத பல விஷயங்கள் அவ்வாறு பிரசுரமானது. எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
எந்த ஓர் இடதுசாரி இதழிலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா, இப்படி ஒரு அணுகுமுறை இருக்குமா சொல்லுங்கள்.
ஆனால் கசப்பான ஓரிரண்டு அனுபவங்களும் இருந்தன. சொல்கிறேன்.
தொடரும்
கோபாலன் அண்ணன் மோல்டிங் ஆனது ஆர் .எஸ்.எஸ் ல தானா! பெரியார் அன்னைக்கே சொன்னார் பார்பனனை என்றும் நம்பக் கூடாதுன்னு!
bbc nirubaraga 1996il tng sir tuticorin vanthirunthar. appothu naan ange dinamalar nirubar. thiru ilangovan sir hindu reporter. tng sir ange dmk perumpulli oruvari petti kandar. appothu antha pirabalam etharthamaka pala unmaikalai sonnathai kettu achariyapattar. athiyum sir theriyapadutha vendum unkalin udkan kodu thandukiran thodaril. nandri mohan dinamalar chennai
Why sir?