முட்டாள் அரசாக இருந்து வந்த ஜெயலலிதா அரசை, இந்த மழை வெள்ளம் அயோக்கிய அரசாக மாற்றியிருக்கிறது. அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். லும்பன்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கட்சியில் இடம் கிடையாது. லும்பன்களால்தான், ஊழல் வழக்கில் சிறைசென்ற தலைவிக்காக காவடி தூக்கவும், நீதித்துறையை திட்டி போஸ்டர் ஒட்டவும் முடியும்.
வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு அபாயகரமான மழையும் வெள்ளமும், தமிழகத்தைத் தாக்கியபோது, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததோடு நிவாரணப் பணிகளையும் சரிவர கையாளவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது.
டிசம்பர் 1 அன்று பெய்யும் கனமழையை எதிர்ப்பார்த்து, ஏற்கனவே கொள்ளளவு நிரம்பும் அளவுக்கு இருந்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட ஏன் தாமதம் என்றும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணிக்கு ஏன் 29 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது என்ற கேள்வியே இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. நவம்பர் 26 மற்றும் 29 அன்று மழை குறைவாக இருந்த அன்று ஏன் தண்ணீரைத் திறந்து விட்டு, ஏரியின் கொள்ளளவை குறைக்கவில்லை. டிசம்பர் 1 அன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், டிசம்பர் 1 இரவு 10 மணி வரை தாமதம் ஆனது ஏன். மேலும் பொதுப்பணித் துறை செயலர், ஏரியை திறந்து விடலாம் என்று நவம்பர் 27ம் தேதியே தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியும் டிசம்பர் 1 வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுமே பிரதான குற்றச்சாட்டுகள்.
இது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
“இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிக அதிக பலத்த மழை பெய்யும் என்றுதான் வானிலை அறிவிப்பு வெளியிட்டதே தவிர 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என அறிவிக்கவில்லை. நாசா அமைப்பு, 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. மழைப் பொழிவைக் கணிக்கும் வேலையை தாங்கள் மேற்கொள்வதில்லை என நாசா அமைப்பே இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.
மிக பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு டிசம்பர் 1-ஆம் தேதி நண்பகல் முதல் மிக அதிகமான நீர்வரத்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் உதவி ஆணையர்தான் கட்டுப்பாட்டு அதிகாரி ஆவார். பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல நீராதார நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
பொறியாளர்கள் ஏரிக்கான நீர்வரத்தையும், மழைப்பொழிவையும் தொடர்ந்து கண்காணித்து, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி நீரைத் திறந்துவிட்டனர். டிசம்பர் 1-ஆம் தேதி வரை, உபரி நீரைத் திறந்து விடுவதற்காக பொதுப்பணித் துறையின் செயலர் உத்தரவோ, தலைமைச் செயலாளரின் உத்தரவோ தேவைப்படவில்லை, கோரப்படவும் இல்லை.
களத்தில் இருந்த பொறியாளர்களே நிலைமைக்கு ஏற்ப திறந்துவிடப்படும் நீரைத் தொடர்ந்து அதிகரித்து வந்தனர். இதற்கு நீரைத் திறந்துவிட்டது தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆதாரங்களாக உள்ளன.
செம்பரம்பாக்கம் மட்டுமின்றி, பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஏரிகளிலும் நீரைத் திறந்துவிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே முடிவுகளை எடுத்தனர்.
நீரைத் திறந்துவிடுவதற்காக பொறியாளர்கள் பொதுப்பணித் துறைச் செயலாளரிடமிருந்தும், தலைமைச் செயலாளரிடமிருந்தும் உத்தரவை எதிர்பார்த்து இருந்ததாகவும், அவர்கள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுவது உண்மையல்ல. இவை எந்தவொரு அடிப்படையும் இல்லாத அவதூறு பரப்பும் வதந்திகள் மட்டுமே.
100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக மழையின் காரணமாகவே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மிக அரிய இயற்கைப் பேரிடர்தானே தவிர, ஏரியில் நீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறல்ல. அடையாற்றின் முகப்பில் தூர்வாரியுள்ளதால்தான் மிக அதிகளவு நீர் அடையாற்றில் வெளியேறியது. இல்லையென்றால், மேலும் மிகப்பெரிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.”
50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று எந்த அமைப்பும் முன்னெச்செரிக்கை தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஞானதேசிகன். 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று டிசம்பர் 1 அன்று காலை 8.25 மணிக்கு, பிபிசி வானிலை நிலையம் கணித்து கூறியிருந்ததின் இணைப்பு. ஆனால் எந்த அமைப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை என்று கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை வெளியிட்டிருக்கிறார் ஞானதேசிகன்.
செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் உள்ள குளறுபடிகள் கடந்த வாரம் முதலாகவே தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், ஒரு வாரம் கழித்து சாவகாசமாக இப்படியொரு பத்திரிக்கை செய்தியை ஞானதேசிகன் வெளியிட்டுள்ளதின் பின்னணியில், இந்த செய்திகள் அரசு மீது ஏற்படுத்தியுள்ள கோபமே காரணம்.
சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் எல்லா அரசுகளிலும் உண்டு. ஆனால், இந்த அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டது அதிமுக அரசில்தான். எது செய்தால் தவறாகும் ? எது சரியாகும் என்று எதற்கெடுத்தாலும் பயத்தை ஏற்படுத்தும் போக்கு தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதாவதொரு தவறான நடவடிக்கை எடுத்து அதனால் தங்கள் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற கடுமையான அச்சத்திலேயே அனைத்து அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். அதிகாரம் பரவலாக்கப்படாமல், அனைத்தும் முதல்வரின் உத்தரவுப்படியே நடப்பதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கவே இத்தகைய அதிகாரப் பறிப்புகள்.
முதல்வரின் குரலாக, தமிழக அரசில் செயல்பட்டு வரும் இரு மங்குணிகளான ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகன் ஆகியோர் அனைத்து அதிகாரிங்களையும் தங்களிடையே குவித்து வைத்து, ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இவர்கள் இருவரையும் தவிர, வேறு எந்த அதிகாரியும் முதல்வரை அவ்வளவு எளிதில் சந்தித்து விட முடியாது. அப்படியே மற்ற அதிகாரிகளோடு சந்திப்பு நடந்தாலும், அது காணொலி காட்சியின் போது ஓரிரு நிமிடங்களே. அந்த ஓரிரு நிமிடங்களிலும் ஜெயலலிதாவிடம் எந்த கருத்தையும் கூறி விட முடியாது. இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான சூழல் நிலவுகையில் எந்த அதிகாரி சுதந்திரமாக முடிவெடுப்பார்.
“மாண்புமிக தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க” என்றுதானே தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மேட்டூர் அணையில் பாசனத்துக்காக நீர் திறந்து விடப்படுவதும் இந்த அம்மாவின் ஆணையால்தானே செயல்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் எப்படி ஒரு பொதுப்பணித் துறை செயலர் திறந்து விட உத்தரவிடுவார் ?
தமிழக அரசு ஏறக்குறைய ஒரு மன்னர் ஆட்சிபோலவே செயல்பட்டு வருகிறது என்பது வெளிப்படை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் கூட, ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டியே வழங்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்கள் முதல், பேருந்துகள் வரை, அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டாமல் விநியோகிக்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் ஜெயலலிதா, ஏதோ தனது தகப்பனார் ஜெயராமின் பணத்தில் திட்டங்களை செயல்படுத்துவது போல, அனைத்திலும் தன் படத்தை ஒட்டி ஆதாயம் தேடி வருகிறார்.
பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவும், ராணுவமும், கடற்படையும் சென்னை விரைந்தபோது, அவர்களை ஒருங்கிணைக்கக் கூட தமிழக அரசு தவறி விட்டது என்றே செய்திகள் தெரிவிக்கின்றன தங்கள் சொந்த வேலைகளை பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கில் உலகெங்கும் இருந்து வந்து குவிந்த தன்னார்வத் தொண்டர்களால் செய்ய முடிந்த பணியை, அரசு இயந்திரத்தால் செய்ய முடியவில்லை.
மக்களின் மறுவாழ்வுக்காகவும், குப்பைகளை அகற்றுவதற்காகவும், இன்று பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக தங்கள் தொண்டர்களுடன் களத்தில் இறங்கி இன்று போராடிக் கொண்டிருக்கின்றன. வரலாறு காணாத பெருவெள்ளம் என்பதை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா, இந்த மீட்பு நடவடிக்கைகளைக் கையாள, உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டியோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியோ விவாதித்திருந்தால், எந்தக் கட்சியும் ஒத்துழைக்க மறுத்திருக்காது. இன்று தனித்தனியாக நடைபெறும் பணிகள், அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்போடு நடந்திருக்கும். ஆனால், தன் அமைச்சவரவை சகாக்களோடு கூட எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விவாதிப்பதில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகன் என்ற இரண்டு மங்குணிகள்தான். இவர்களைத் தவிர வேறு ஒருவரையுமே சந்திக்காத ஜெயலலிதாவால், எப்படி நாட்டு நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் ?
எத்தனை பேரிடர் வந்தாலும், 24 மணி நேரமும் இயங்கும் தலைமைச் செயலாளர் கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலகத்தில் உண்டு. இதில் ஷிப்ட் முறையில் பிரிவு அலுவலர்கள் இரவு முழுவதும் பணியாற்றுவார்கள். மழைக்காலம் போன்ற அவசர காலங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையிடமிருந்து மணிக்கொரு முறை அறிக்கையை பெற்று, இந்த கட்டுப்பாட்டு அறை தலைமைச் செயலருக்கும், அவர் மூலமாக முதல்வருக்கும் அறிக்கைகளை அனுப்பும். முதல்வரின் பணி, அவர் இல்லத்தில் இருந்தபடியே சூழலை 24 மணி நேரமும் கண்காணித்து உத்தரவு பிறப்பிப்பது மட்டுமே. ஆனால் கடுமையான மழை பெய்த நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் கூட ஜெயலலிதாவை உடனுக்குடன் யாராலும் அணுக முடியவில்லை என்பதே உண்மை. ஒரு பேரிடர் காலத்தில் கூட இரவு முழுவதும் விழித்திருந்து மக்களை பாதுகாக்காத ஒரு முதல்வர் என்ன முதல்வர் ?
முதல்வர் பதவியை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே ஜெயலலிதா கருதுகிறார் என்பது கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர் நடத்திய ஆட்சி கண்கூடாக நிரூபித்துள்ளது. தொழில்துறை, மின்துறை, விவசாயத்துறை, என்று ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்த்து எழுதும் ஊடகங்களின் மீது அவதூறு வழக்குகள், மிரட்டல்கள், காவல்துறையை வைத்து கைது நடவடிக்கைகள், என்று மற்றொரு புறம் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கைகள். இன்னொரு புறம் டாஸ்மாக் மூலமாக அமோக மதுவிற்பனை. டாஸ்மாக்கை எதிர்த்தால் சிறை. ஆனால் ஜெயலலிதாவோடு இருக்கும் மன்னார்குடி மாபியாவோ, ஆயிரக்கணக்கான கோடிக்கு சொத்துககளை வாங்கி வாங்கி குவித்து வருகிறது. தியேட்டர்கள் மேல் தியேட்டர்களாக வாங்குகிறது.
வெள்ளநீர் வடிந்தாலும், குப்பைகளை அகற்ற முடியாமலும், லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை இழந்தும் மக்கள் கடும் அவதியில் இருக்கிறார்கள். ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், தங்கள் குடிசைகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், எங்கே செல்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், கிறித்துமஸ் கொண்டாட்டங்களையும், புத்தாண்டு கொண்டாட்டங்களையும், தவிர்ப்பதாக பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவர்கள் அறிவித்துள்ளார்கள். சென்னை மற்றும் கடலூர் இந்த பேரழிவிலிருந்து மீள எத்தனை மாதங்கள் ஆகும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
ஆனால் ஜெயலலிதாவோ, வண்டலூரில் பிறந்த பெண் குட்டிகளுக்கு NAKULAA, DEVAA, KALAA, MALAA என்று நியுமராலஜி படி பெயர் வைத்து அதற்கான பத்திரிக்கை அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். உலகத்திலேயே புலிக்குட்டிகளுக்கு நியுமராலஜி படி பெயர் வைத்த ஒரே முட்டாள் முதல்வராக ஜெயலலிதா மட்டுமே இருக்க முடியும்.
மக்கள் கடும் அவதியில் இருக்கையில், இப்படி புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்து, பத்திரிக்கை செய்தி வெளியிட ஒரு கல்நெஞ்சம் படைத்த பெண்மணியால் மட்டுமே முடியும். தான் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக தற்கொலை செய்து கொண்ட 200க்கும் அதிகமானோருக்காக 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து அகமகிழ்ந்த ஒரு முதல்வரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
எல்லா தேர்தல்களையும் போல, இந்தத் தேர்தலிலும், வாக்குக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று கணிசமான பணத்தை அளித்து, மீண்டும் வெற்றியைக் குவித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.
adhe periyar, nabiya pathi enna sonnaruni theriyima? Muslim’s pathi enna sonnarunu theriyuma??? sethukku bayandhu Sakataikku support pannadhengenu ungala sollitu poitaaru…. Ippo sollu Periyar sonna ellam righta???? Oru allu 4 pondatiya katikitta adhukku peru thaamba thevidiya thanam….. Marumagalaye kaama pasikku allakinna adhu thaan thevidiya thanam…… 6 vaysasu kozhandhaiya kalyanam pannikitta adhu thaan thevidiya thanam……. Ippo purikiradha edhu deiviga thevidiya thanamnu……. mukkal arivoda pesureengale bossu……
SAVUKKU ENDRA PEYARAI MATRI SAVUKKU AIADMK KU MATTUMEY ENDRU VAITHU KOLLVUM.. ITHU NADUNILAEY KIDAYATHU….