உலகத் தமிழ் மாநாடு
மதுரையில் 1981 ஜனவரியில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நான் ரசித்துச் சிரித்த கேலிக்கூத்து.
நான் ஒன்றும் தமிழில் விற்பன்னன் இல்லைதான். இத்தகைய மாநாட்டு அமர்வுகளில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் தரம் குறித்து வல்லுநர்கள்தான் சரியான கருத்து எதுவும் கூறமுடியும்.
என்னைப் பொறுத்தவரை மதுரை மாநாடு எம்ஜிஆரின் ஆளுமையை சராசரி மக்கள் மத்தியில் பிரம்மாண்டப் படுத்திக் காட்ட மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி. இப்போது எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் ஜெயலலிதாவிற்கான விளம்பரமாகவே கருதப்படுகிறது அல்லவா… அதற்கு வழி அமைத்துக் கொடுத்தது அவரது அரசியல் குருநாதர்தான்.
நான் அந்தக் கட்டத்தில்தான் மதுரைக்கு மாற்றப்பட்டேன். அங்கு சென்றவுடன் சில நாட்கள் தங்கியிருந்தது மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரது வீட்டில். அவர் ரொம்ப சனாதனி. பூஜை, புனஸ்காரம், பஞ்சகச்சம், நாமம் இப்படி.
அவரது மனைவிக்கோ பல்வேறு விஷயங்களில் ஈடுபாடு. தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் கேட்டுவிட்டேன். ”நீங்கள் ஒன்றும் பழம் பஞ்சாங்கமாக தெரியவில்லை. உங்களுக்கு எப்படி ஒத்துப் போகிறது?”
அவர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்: “வாழ்க்கை என்ன நாம் திட்டமிட்டபடியா அமைந்துவிடுகிறது? .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திருப்பம்…. நேர்ந்துவிட்ட வாழ்க்கையை எதிர்த்து புரட்சி செய்யலாம்தான்… ஆனால் நான் இதற்கு பழகிக்கொண்டேன்… வருத்தம் எதுவும் இல்லை… No complaints….”
35 ஆண்டுகள் சென்றும் அந்த உரையாடல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யதார்த்தமாக, ஆர்ப்பாட்டமில்லாமல் வாழ பழகிக் கொள்வதும் ஒரு கலைதானே.
நான் தங்கியிருந்தது ஆசிரியர்கள் குடியிருப்பில். தற்செயலாக ஒரு பேராசிரியர் நடக்கவிருந்த மாநாடு பற்றி புலம்பினார், அப்போதைய துணைவேந்தர் வ.சு,ப. மாணிக்கம் எவரையும் கண்டுகொள்வதில்லை, எல்லாம் சென்னையில் இருந்து, அரசிடமிருந்து, அதிமுகவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வரும் கட்டளைப்படியே. எந்தத் துறை பேராசிரியர்களையும் கலந்து ஆலோசிக்காமல் மொழி குறித்த மாநாடு ஒன்றை எப்படி நடத்தலாம் என்றெல்லாம் அந்த பேராசிரியர் பொரிந்து தள்ளினார்.
வேறு சில பேராசிரியர்களையும் துணைவேந்தர் மாணிக்கத்தையும் சந்தித்து பேசினேன். மதுரைக்கு சென்ற இரண்டு மூன்று நாட்களிலேயே, பல்கலைக்கழக பேராசிரியர்கள் எப்படி புறக்கணிக்கப்படுகின்றனர் என்று ஒரு செய்தி கொடுத்தேன். துணை ஆசிரியர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. முதல் பக்க செய்தியாக வெளியிட்டார்கள். பெரிதாக எதுவும் நடந்துவிட வில்லை என்றாலும் கொஞ்சம் பரபரப்பு. எனக்கு உற்சாகம்.
ஆனால் அதன் பிறகு சுணக்கம் ஏற்பட்டது. மதுரை நகரை அழகுபடுத்துவதாக சொல்லி அன்றைய ஆணையர் மலைச்சாமி (பின்னால் அதிமுக எம்பி ஆனாரே, அவரேதான்) ஜிகினா வேலையில் இறங்கினார். மதுரை முழுவதும் வண்ண நீரூற்றுக்கள். அத்துறையில் வல்லுநர் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது, ’காசை விரயம் செய்கின்றனர், மிக மலிவான பொருட்களை பயன்படுத்துகின்றனர், இவையெல்லாம் மாநாட்டிற்குப் பிறகு நீடிக்காது’, என்றார் அவர்.
அது குறித்து நான் மேலு,ம் விசாரிக்க, அரசு அதிகாரிகள் உஷாராயினர். நான் எல்லா ஏற்பாடுகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் மதுரைப் பதிப்பு செய்தி ஆசிரியர் எல் டி நடராஜனை ‘கரெக்ட்’ செய்து விட்டனர். ராஜமரியாதையுடன் அவருக்கு நகரைச் சுற்றிக்காட்ட, முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாகவோ என்னவோ, கொட்டை எழுத்தில், ’மதுரை மிளிர்கிறது, இதைச் செய்கிறார்கள், அதைச் செய்துவிட்டார்கள், மாநகர் வரலாற்றில் ஒரு மைல்கல்’ என்ற ரீதியில் எல்.டி.என் பெயரில் கட்டுரை பிரசுரமானது.
அவரிடம் போய் ஏதோ சொல்லப்போனேன், ”நீ உன் வேலையைப் பார், எனக்கு எல்லாம் தெரியும், விமர்சனம் செய்வதுதான் ஜர்னலிசம் என நினைத்துக் கொள்ளாதே. நக்வி உன்னை பாராட்டிவிட்டால் நீ பெரிய ஆளா…” என்று வாங்கி கட்டிக் கொண்டதுதான் மிச்சம்.
நான் சந்தித்த வல்லுநர் குறிப்பிட்டபடியே ஒரு நீரூற்று கூட மாநாட்டைத் தாண்டி நீடிக்கவில்லை.
இதுபோக கருணாநிதிக்கு முறையாக அழைப்பு அனுப்பவில்லை. முதல் நாள் எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை. அமர்வுகளில் குழப்பம், இப்படி என்னென்னவோ பிரச்னைகள். ஆனால் எதுவும் எந்த நாளேட்டிலும் வராதபடி பார்த்துக் கொண்டனர் அதிகாரிகள், எல்டிஎன்னும்தான். என் பங்குக்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கே ஏ கிருஷ்ணசாமியிடம் எடக்கு மடக்காக கேள்வி கேட்டதுதான்.
பதிலும் சூடாகவே வந்தது. “ஓ நீங்கதானா எக்ஸ்பிரஸ் கோவாலு? சொன்னாங்களே உங்களைப் பத்தி. இதே வேலையா போச்சு… சின்ன விஷயத்தையெல்லாம் பூதாகாரப்படுத்தி… நீங்க என்ன கலைஞர் ஆளா…” மாநாடு முடியும் வரை அவருக்கும் எனக்கும் ஏதோ லடாய் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. கிருஷ்ணசாமி பொதுவாக இனிமையான மனிதர். ஆனால் அந்த நேரம் அவருக்கு டென்ஷன். பின்னர் கொஞ்சம் சகஜமானார்.
இதைத் தவிர எங்கள் ஏட்டில் இன்னொரு கூத்தும் நடந்தது. இந்து நாளேட்டில் எப்போதுமே கடைபிடிக்கப்படும் ஒழுங்கு, கட்டுப்பாடு இவற்றின் அவசியம் அப்போதுதான் எனக்கு தெரியவந்தது.
எங்களுக்காக சென்னையிலிருந்து முதுபெரும் செய்தியாளர் என்.எஸ் ராமசாமி, ஓர் இளம் நிருபர் (என்னுடன் திருப்பத்தூர் வந்தவரேதான்!), நான், மதுரை எக்ஸ்பிரசில் அப்போது பணியாற்றிவந்த ஒரு நிருபர், தினமணிக்கென்று ஒருவர், அப்புறம் எல் டி என். மாநாட்டுக்காக இப்படி ஒரு பட்டாளமே இருந்தது.
இந்துவுக்கோ இரண்டே பேர்தான். ஒருவர் அங்கேயே பணியாற்றியவர். இன்னொருவர் வாமனன் என்ற பெயரில் இப்போது பிரபலமாகியிருக்கும் கிருஷ்ணசாமி. சென்னையில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார். அவர்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பு. அதிகமான செய்திகளை கிருஷ்ணசாமிதான் கொடுத்தார். நாள்தோறும் ஏதாவது சிறப்பு செய்தி கொடுத்து எங்களை கதறவிட்டார்.
பத்மா சுப்பிரமணியத்துக்கும் தமிழ்ப் பேராசிரியர் இளவரசுக்கும் ஓர் அமர்வில் மோதல். சிறப்பு செய்தி ஒன்றுமல்ல… அமர்வுக்கு சென்றார், கண்டார், கேட்டார், பரபரப்பான செய்தியாக்கினார்… நாங்கள் கோட்டைவிட்டுவிட்டோமே… எங்கள் எழுவரில் ஒருவர் கூட அங்கே அப்போது இல்லை. இது குறித்து எங்கள் மத்தியில் விசாரணையும் இல்லை. நான்தான் புலம்பிக் கொண்டிருந்தேன்.. ஒருங்கிணைக்க வேண்டிய எல் டி என்னோ அரசை திருப்திப் படுத்துவதில்தான் கவனமாக இருந்தார். அதற்காக சென்னையிலிருந்து வந்திருந்த அந்த இளம் நிருபரையும் பயன்படுத்திக் கொண்டார். அவர் கண்காட்சி சிறப்பு பற்றியெல்லாம் எழுதி மக்கள் தொடர்பு அலுவலர்களின் நன்றியையும் பெற்றுக்கொண்டிருந்தார். நான் எங்குமே போகமாட்டேன். கோபம்.
மாநாட்டு வளாகத்தில் நிருபர்களுக்கென பெரிய அறை ஒன்றை ஒதுக்கியிருந்தனர். நிறைய டெ;லிஃபோன்கள். உள்நாட்டு, வெளிநாட்டு கால்கள் எல்லாம் ஃப்ரீ. கேள்விமுறை கிடையாது. என் பங்கிற்கு என் குடும்பத்தார் உட்பட ஒவ்வொருவரையாக அழைத்து வெட்டிக் கதை பேசி அரசு நிதியை வீணடித்துக் கொண்டிருந்தேன்.
அதுபோக, ஓரிரு சிறப்புச் செய்திகளையும் கொடுக்க முடிந்தது. எல் டி என் மற்றும் அவரது செல்லப் பிள்ளையின் செய்திகள் எதுவுமே சென்னையில் வெளியாகவில்லை, நான் ஓரிரண்டு அனுப்பினாலும் அவை வெளியாயின. அதில் எனக்கு ஒரு வக்கிர திருப்தி.
அந்த மாநாட்டில்தான் பல எம் ஜி ஆர் படங்களை இயக்கியிருந்த மாபெரும் இயக்குநர் ப.நீலகண்டனின் ஆக்கத்தில் லெமூரியா கண்டம் பற்றி ஒரு ஆவணப்படம். மஹா அபத்தம். உடையிலிருந்து பேச்சுமொழி வரை எல்லாம் சராசரி வரலாற்று / புராணப் படம் போல. ஆய்வாளர்களை கலந்தாலோசிக்கக் கூடாது, அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவவும் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு உருவாக்கியிருந்த ஒரு படம். எல்லோரும் நகைத்தனர்.
படம் முடிந்தவுடன் வேகவேகமாக எனக்குத் தெரிந்த பேராசிரியர்களிடம் கருத்து கேட்டு, என்னிடம் வாகனமும் இல்லை, 2/3 கிலோமீட்டர் விரைந்து நடந்து அலுவலகத்திற்கு வந்தால், எனக்கு முன்னரே அறிஞர் அய்யா என்.எஸ் ராமசாமி, வந்து சேர்ந்து கட்டுரை டைப் செய்யத் தொடங்கியிருந்தார். (அவருக்குக் கார் கொடுக்கப்பட்டிருந்தது.) எனக்கு ஏமாற்றம். என்ன செய்ய. அதிலும் கொடுமை மறுநாள் வெளியான அவர் கட்டுரையில் ஆஹா ஓஹோ வென்று நீலகண்டனையும் எம்ஜிஆரையும் புகழ்ந்திருந்தார்.
பேசுவோம்
Very very great news
This article proves that Jaya is just following her mentor’s footstep in every activity. This media jaalra today prevalent unashamedly is the proof of it. Media people are worst hypocrites in TN. They have always make sure that either DMK or ADMK rule TN forever. Political goondaism , media jaalra all started by MGR in TN. You can hardly find any articles about MGR in negative shade. Whoever tried to write against MGR have been threatened or beaten or bought out by his stooges like Jeppiar or Ramachandra udayar. Still it pains to see some morons praising MGR to god level in TN even now. Try to find the India Today article titled a Decade of Decay about MGR’s rule. It was a outline of how government machinery became corrupt and inefficient. If you follow Vikatan closely in recent times you can easily find that they are trying to project DMK again instead of Jaya. This is exact opposite to what they did in 2010-2011. Only agenda of media is to make the TN public fools and let these DMK & ADMK families rule. That is how they earn money , circulation revenue is just to cover the operating expenses. They help these two corrupt groups by diverting important issues by projecting cinema stories. Cinema is the ultimate poison that is sown in the minds of TN people. The day cinema craziness goes away is the day political awakening can happen in TN.
Eppo full ah thandi mudipparu? but it’s good!
Well said Mr. arun!!!
எம் ஜி ஆர் ஒரு பலே கில்லாடின்னு பலபேருக்கு இன்னும் தெரியாமயே போய்டுச்சு. அதுக்கு காரணம் விளம்பர யுக்தி. இன்னைக்கி மோடி ஜெயலலிதா ஸ்டாலின் செய்யற விளம்பரத்த ஆரம்பச்சு வச்சதே நம்ம தலைவர்தான். நல்ல வேல காமராசர் இவங்களுக்கு முன்னாடியே ஸ்கூல் கட்டி கொஞ்சம் அறிவ வெதசுட்டாரு இல்லனா இன்னும் நம்ம பீகார்கூடதான் போட்டிபோட்டுகிட்டு இருப்போம்.
Nice to read all the narratives of the past with the amount of journalistic ethics & boldness associated with it. It in a way resembles the present Jaya’s administration. My notion of the clown called MGR’s style of malfunctioning is further amplified through these incidents. And I’m convinced my judgement about this clumsy goof. Long live that idiot.