ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வுதான் வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ, நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக, நீதிபதி அமித்தவ ராய் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை. ஆர்.கே. அகர்வால் இவ்வழக்கை விசாரிப்பார் என்றதும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், நீதிபதி ஆர்.கே.அகர்வால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். அவர் அவ்வாறு பணியாற்றியபோது, பல்வேறு வழக்குகளில் இப்படித்தான் தீர்ப்பு வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி மூலமாக ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தார். ஆனால் எவ்விதமான அழுத்தங்களுக்கும் நீதிபதி அகர்வால் செவிசாய்க்கவில்லை. ஒரு கட்டத்தில், சோமயாஜியிடமே, “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுக்காதீர்கள்” என்று வெளிப்படையாக சொல்லியே விட்டார். அதனால், ஜெயலலிதா அரசு எப்படிப்பட்ட கேடுகெட்ட அரசு என்பதை அவர் நன்றாக அறிவார். அவரிடம், சொத்துக்கு குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணைக்கு வந்திருந்தால், ஊசலாட்டத்துக்கு இடமில்லாமல் இருந்திருக்கும். ஆனால், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பதை யாருமே ஊகிக்க முடியாது. சட்டபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும், நியாயத்தின்பாற்பட்டும், ஒரு வழக்கின் விசாரணை நடைபெறுகிறதென்றால், அந்த வழக்கில் நேர்மையான தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கலாம். ஆனால், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதியையா வழங்குகின்றன ? ஒருவன் குடித்து விட்டு காரை ஓட்டி சாலையில் படுத்திருக்கும் சிலரை கொலை செய்கிறான். அவனுக்கு பாதுகாவலாக இருந்த காவல் துறை அதிகாரி, அவன் மீது புகார் செய்கிறார். வண்டியை ஓட்டியவன் வண்டியை விட்டு இறங்கி ஓடி விடுகிறான். அதன் பிறகு வழக்கு விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. அடடே… தண்டனை கிடைத்து விட்டதே என்று யோசித்து முடிவதற்குள் உயர்நீதிமன்றம் அவனை விடுதலை செய்கிறது. சாட்சிகளும், ஆதாரங்களும் போதுமானதல்ல என்கிறது. அருகே அமர்ந்து காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதை நேரில் பார்த்த சாட்சியின் சாட்சியத்தை காற்றில் எறிகிறது நீதிமன்றம். உயிரை பறிகொடுத்தவர்களின் வயிறு எரிவது நீதிமன்றத்தின் கண்களுக்கு தெரியவில்லை.
மற்றொரு மாநிலத்தில் ஒரு மூத்த அரசியல் தலைவர். அவர் முதல்வராக இருந்தபோது அரசு அதிகாரிகளை தேர்ந்தடுத்ததில், பெரும ஊழல் என்று குற்றச்சாட்டு. மே 2004ல், சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது. ஜுன் 2008ல் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. ஜனவரி 2013ல், அந்த மூத்த அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். மூத்த அரசியல்வாதி சிறையில் அடைக்கப்படுகிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோருகிறார். ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டதும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கிறார் 79 வயதான அந்த அரசியல் தலைவர். டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்கிறது. சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 2013ல் தீர்ப்பு வழங்கியது என்றால், இரண்டரை வருடத்துக்குள் உயர்நீதிமன்றமும், அத்தீர்ப்பை உறுதி செய்கிறது. மே 2015ல், தண்டனை வழங்கப்பட்டது சரியே என்று தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். அடுத்த ஆறு மாதத்துக்குள், உச்சநீதிமன்றமும் இந்த மேல் முறையீட்டை விசாரித்து, தண்டனையை உறுதி செய்கிறது. 79 வயதான அந்த மூத்த அரசியல்வாதி தற்போது சிறையில் இருக்கிறார்.
அந்த அரசியல்வாதியின் பெயர் ஓம் பிரகாஷ் சவுதாலா. அவர் மீது இந்த அரசு ஊழியர் நியமனம் தொடர்பான வழக்கை தவிர்த்து, சொத்துக் குவிப்பு வழக்கு உண்டு. வேறு ஊழல் வழக்குகள் இல்லை. ஆனால் தற்போது 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்.
ஆனால், கோமலவல்லி என்கிற ஜெயராம் ஜெயலலிதா மீது ஒன்றல்ல இரண்டல்ல. 20க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் உண்டு. 1996ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளில் ஒரே ஒரு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்து, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்புவதற்கு 18 ஆண்டுகள் ஆனது. அந்த ஒரே வழக்கிலும், ஒரு உலகறிந்த கணித மேதையினால் ஒரு ஆண்டுக்குள் விடுதலையாகி, மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார் அந்த ஜெயலலிதா. இதுதான் இந்திய நீதிமன்றங்கள், வழக்குகளை விசாரிக்கும் விதம். சவுதாலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இப்படி மாறுபட்ட அணுகுமுறையை நீதிமன்றங்கள் அளிப்பதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஜாதியா ? அவர் பணமா ? அவர் திறமையா ? அவர் செல்வாக்கா ?
எது காரணமாக இருந்தாலும், ஜெயலலிதா, இந்தியா நாட்டின் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதிப்பதோடு இல்லாமல், ஆனந்தமாக துணை நிற்கின்றன என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
1996ம் ஆண்டு திமுகவுக்கு மக்கள் அளித்த வாக்கு, ஜெயலலிதாவின் ஊழலை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே. ஜெயலலிதா ஆட்சியின் அழுகி முடைநாற்றமெடுக்கும் ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாமலேயே மக்கள் அதிமுகவை ஓட ஓட விரட்டினார்கள். 1996ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருந்த இடம் ஓட்டையாக இருக்கும்” என்றார். அவர் கூறியது மிகைப்படுத்தல் அல்ல. அந்த அளவுக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெயலலிதாவும், மன்னார்குடி மாபியா கூட்டமும். கண்ணில் பட்ட சொத்துக்களையெல்லாம் வாரிக் குவித்தார்கள். விற்க மறுத்தவர்களிடம் அடித்துப் பிடுங்கினார்கள். மிரட்டி வாங்கினார்கள். இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பியே மக்கள் அதிமுகவுக்கு மரண அடி வழங்கினார்கள்.
ஊழல் எதிர்ப்பை முழக்கமாக வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அந்த வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்தது. அது வரை, ஐந்தும் பத்தும் வாங்கிய அரசு ஊழியர்களை பிடித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையில், அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளுக்கென்று தனியாக இரண்டு புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டன. லஞ்ச ஒழிப்புத் துறை தவிர்த்து, சிபி.சிஐடி பிரிவும், தனியாக வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகளின் விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் என்பதற்காக தனித்தனியாக மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
லஞ்ச ஒழிப்புத் துறையும், சிபி.சிஐடி பிரிவும், முதல்வர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பில் இயங்கின. இரு பிரிவுகளுக்கும் சேர்த்து, சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலகத்தில் விழிப்புப் பணி கண்காணிப்பகத்தில், இரண்டு கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, அரசுக்கு வரும் புகார்களில் விசாரணைக்கு ஏற்றவை எவை என்று ஆராயப்பட்டது. அந்தப் புகார்களின் மீது பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறைக்கோ, சிபி.சிஐடிக்கோ அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பெரும்பாலான அறிக்கைகளில், ஜெயலலிதாவின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை, அல்லது ஜெயலலிதாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளிக்க அன்றைய புலனாய்வு அதிகாரிகளுக்கு எவ்வித அச்சமும் இல்லை. நேரடியாக முதல்வர் கருணாநிதியோடு விவாதம் நடந்தபோதும் கூட, ஆதாரங்கள் இல்லை என்ற தகவலை நேரடியாகவே சொல்லும் துணிச்சல் அப்போதைய அதிகாரிகளுக்கு இருந்தது. கருணாநிதியும் அவர்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்.
அப்படி தேவையற்றதை வடிகட்டி, ஆதாரங்கள் உள்ள வழக்குகளை மட்டும் எடுத்து, அவற்றில் மட்டும் ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்குகள் 12க்கும் மேல்.
கலர் டிவி வழக்கு : தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் இலவச கலர் டிவி வழங்குவது என்று முடிவெடுத்து, டெண்டர் கோரப்பட்டது. இவ்வாறு 45,302 கலர் டிவிக்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு என்று, ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், உள்ளாட்சித் துறை செயலாளர் எச்.எம்.பாண்டே ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜுலை 2000 ஆண்டிலேயே, ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர். செல்வகணபதியும் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டனர்.
கொடைக்கானல் ஹோட்டல் வழக்கு : கொடைக்கானலில், ப்ளசெட் ஸ்டே என்ற ஹோட்டல் கட்டுவதற்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியது குறித்து தொடரப்பட்ட வழக்கு இது. வழக்கு தொடரப்படுவதற்கு முன்னதாகவே, பழனி மலை பாதுகாப்பு அமைப்பு ஒன்று, இந்த ஹோட்டலுக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஐந்து மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாத என்று இருந்த விதியை மாற்றுவதற்காக, அந்த ஹோட்டலுக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் சட்டத்திருத்தத்தையே ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி சீனிவாசன். சட்டத்திருத்தத்தை ரத்து செய்து தீர்ப்பளித்ததோடு, தனது தீர்ப்பில், “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்: கெடுப்பா ரிலானுங் கெடும்” என்ற குறளையும் கோடிட்டுக் காட்டினார்.
கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா. தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாசனின் வீட்டுக்கு தண்ணீரும் மின்சாரமும் நிறுத்தப்பட்டன. சீனிவாசன் எப்படிப்பட்ட நீதிபதி என்றால், இவ்வாறு இணைப்பு நிறுத்தப்பட்ட விபரங்களை வெளியில் சொல்லவேயில்லை. பின்னர் வழக்கறிஞர்களுக்கு இந்த விபரங்கள் தெரிந்து, அவர்கள் பிரச்சினை எழுப்பவும், மூன்று நாட்களுக்கு பிறகு, இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டன.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திருக்குறளை நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று மூக்குடைபட்டார் என்றால், நீதிபதி சீனிவாசனின் தீர்ப்பு எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்புத்துறை 1996ல் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் 2 பிப்ரவரி 2000 அன்று, தீர்ப்பளித்த சிறப்பு நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான், அதிமுக அடிமைகள், கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த வழக்கில் செய்த மேல் முறையீட்டிலும் ஜெயலலிதா விடுதலை பெற்றார்.
நிலக்கரி இறக்குமதி வழக்கு : தமிழக மின்சார வாரியத்துக்கா தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த வகையில் மின்வாரியத்துக்கு 6.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஜெயலலிதா, அப்போதைய மின்துறை அமைச்சர் கண்ணப்பன், நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், முன்னாள் மின்வாரிய சேர்மேன் ஹரிபாஸ்கர், நிதிச் செயலாளர் என்.நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சின்டெக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ஹாலி நிறுவனம், இந்தோனேசியாவின் ப்ரைமா காமெக்ஸ் நிறுவனம், சிங்கப்பூரின் கவுன்ட்டர் கார்ப் ட்ரேடிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் எனர்ஜி ட்ரேடிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை முதன் முதலில் எழுப்பியவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளர் சுந்தரம். இவ்வழக்கில் போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறி, 10 ஜுன் 1999 அன்றே, ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும், சிறப்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 13 ஜனவரி 2000 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தங்கராஜ், ஜெயலலிதா உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது சரி என்று தீர்ப்பளித்தார். இந்த நீதிபதி தங்கராஜ்தான், ஜெயலலிதாவை டான்சி வழக்கிலிருந்தும் விடுவித்தவர். தங்கராஜ், நமது குமாரசாமிக்கெல்லாம் முன்னோடி. ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்தால் என்னென்ன சலுகையெல்லாம் அனுபவிக்கலாம் என்று மற்ற நீதிபதிகளுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்தவர். அவர்தான் ஜெயலலிதாவிடம் தன்னையே விற்றுக் கொண்ட முதல் நீதிபதி என்று கூறலாம். அதன் பிறகு, கழுத்தில் தங்களுக்கான விலை என்ன என்ற அறிவிப்பு பலகையோடு பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுற்றினார்கள், இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாறு.
தங்கராஜின் தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவை விடுவித்தது தவறு என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நிலக்கரி இறக்குமதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் முக்கியமான சாட்சி பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சுந்தரம் ஐஏஎஸ். “நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரில் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், நிலக்கரிக்கான குறைந்தபட்ச தரம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக தரம் குறைந்த நிலக்கரியை கூடுதல் விலை கொடுத்து தமிழக அரசு வாங்கியது.
இந்த விபரங்களை நான் ஒரு விரிவான குறிப்பாக எழுதி முதலமைச்சருக்கு அனுப்பினேன். ஆனால், எனது ஆட்சேபணைகளையும் மீறி, டெண்டர் நிபந்தனைகள், ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தப்பட்டன.
சுந்தரத்தின் சாட்சியம் 1999ம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. சுந்தரம் 18, ஜுன் 2001 அன்று, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். அப்போது சுந்தரத்தின் சாட்சியம் எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டுமா என்ன ? “நிலக்கரி இறக்குமதியில் எந்த விதமான நிதி இழப்பும் இல்லை. இதற்கு முன் காவல்துறை முன் அளித்த வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டது. நான் தெரிவித்த ஆட்சேபணைகள் அனைத்துக்கும் மின்வாரிய தலைவர் உரிய பதிலை அளித்து விட்டார். அவர் பதிலில் திருப்தியடைந்த நான், எனது ஒப்புதலை அளித்தேன். நிலக்கரி இறக்குமதியில் எவ்விதமான ஊழலும் நடைபெறவில்லை எவ்விதமான ஊழலும் நடைபெறவில்லை” என்று சுந்தரம் சாட்சியளித்தார்.
இதன் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன ?
மீதம் உள்ள வழக்ககளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Brahmins think they should be neutral even if other castes media govt act against them.Sikhs Muslims marwaris Christians nadars help others in their communities.similarly Brahmins should try to help their oppressed community and fight anti brahmin forces in tn
நமது தாய் திருநாடாம் தமிழ் திருநாட்டில் அனைத்து மக்களும் மாமேதைகள் ஆனால் அவர்களின் உணர்ச்சி மிகுந்த கோவமும் வீரமும் சில சமயம் பதர்களாய் மாற்றி விடுகிறது அகாயால் தான் எவர் ஊழல் பெரியது எவர் ஊழல் சிறியது என்று போட்டி போட்டு எழுதுகிறோம் ஆனால் ஒரு வகையில் நாம் இந்த வாதிகளை அதாறிக்கிறோம் .
அதிமுக ஆட்சியில் மீதேன் திட்டம் கொண்டுவந்து விவசாயிகளை அழிக்க நினைக்கவில்லை அது தெரியுமா தமிழின துரோகியே எங்கள் உப்பை தின்றுவிட்டு எங்களுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு விவசாயிகளை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது ? காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்ட யோக்கிதையா ? விவசாய நிலங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்திலும் ஊழல் செய்த யோக்கிதையா ? விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்திய யோக்கிதையா அல்லது விவசாயம் பொய்த்து போனதால் ..உரிய காலத்தில் கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தாத விவாசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ..மாடு கன்றுகள் , பாரவண்டிகள் , ஏர் கலப்பைகள் , பாத்திரம் பண்டங்கள் , விதை நெல்களை கூட விடாமல் அள்ளிச்சென்று விவாசிகளில் தன்மானத்தை கேள்விக்குறியாக்கிய யோகியர் அறிக்கை விடுகிறாரா கருணாநிதியின் துரோகத்தை யார் மறந்தாலும் விவசாயி மறப்பனா ?
நம் இனத்தையே கூறு போட்டு அழித்த தீய சக்தி கருணாநிதி கருணாநிதியின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ..DNA வும் தமிழின துரோகத்தை பற்றியே இருக்கும் .. தமிழின துரோகம் என்பது கருணாநிதியின்இரத்த சுழற்சியோடும் ..இதய துடிப்போடும் கலந்துவிட்ட ஒன்று …அவர் எது செய்தாலும் தீதுதான் ..தீயவரிடமிருந்து தீமைதான் வரும் ..தீயாரை காண்பது தீதே தீயார் சொல் கேட்பதும் தீதே தீயாரோடு இணங்கி இருப்பதும் தீதே 176000 ஈழ தமிழர்களின் உயிரை பறிகொடுத்தும் நமக்கு உணர்வு வரவில்லை என்றால் என்னசெய்வது மீதேன் திட்டத்தை கொண்டுவந்து தமிழக விவசாயத்தை பாழாக்கி .தமிழகத்திற்க்கே சோறு போட்ட விவசாயிகளை பிச்சை கார்களாக பார்க்கதுடித்த துரோகியை எப்படி ஏற்று கொள்ளமுடியும் ராஜபக்சே வீட்டில் விருந்து சாபிட்டுவிட்டு ..அவனிடம் பெட்டி நிறைய பணம் வாங்கிகொண்டு ..அவனை புகழ்த்து பேசிய குடும்பத்தை எப்படி நாம் ஏற்று கொள்ள முடியும் சொந்த கட்சி மாவட்ட செயலாளர் தா கிருஷ்ணன் நடை பயிற்சி சென்ற போது அவரின் மனைவி கண்ணெதிரே துடிக்கக் துடிக்க வெட்டி கொன்று தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்ற பாவிகளை நாம் சகித்து கொள்ள முடியுமா அண்ணாமலை பல்கலை கழக மாணவன் உதயகுமார் ..கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்தார் ,… அதற்காக அவனை கொல்வதா வெறும் கருந்து கணிப்பு நடத்திய பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திவிட்டு அங்கு வேலை செய்த ஊழியர்களை தீயிட்டு துடிக்க துடிக்க கொன்ற மனிதர்கள் தீய சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது மதுரை கம்னியுஸ்ட் பெண் கவுன்சிலர் லீலாவதி என்ன பாவம் செய்தார் ? திமுக செய்த ஊழலை எதிர்த்த காரணத்தால் ..அரிவாளால் வெட்டி கொன்ற துரோகிகளை என்னவென்று சொல்வது ஈழ தமிழினமே மாண்டபோது இங்கு பதவி பேரம் பேசிகொண்டிருந்த இதயத்தில் ஈரமில்லா வஞ்சகர்களை எப்படி அழைப்பது பதவி , சுரண்டல் ,கொள்ளை , கொலை , துரோகம் , லஞ்சம் என்று தன் வாழ்க்கையையே மாற்றி கொண்ட மனிதனை எப்படி அழைப்பது கருணாநிதி தமிழ் தமிழ் என்று பேசுவது தமிழினத்தை அழிக்க போடப்படும் தூண்டிலில் மாட்டப்பட்ட புழுவிற்கு சமம் …புழுவுக்கு ஆசைப்பட்டு .சாகப்போகும் மீனா நம் தமிழினம்
தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கல் நன்னாளை , உழவர்களின் உற்சாக நாளை தமிழ் புத்தாண்டு என்று மாற்றிய முகமது பின் துக்ளக் கருணாநிதிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கல் நன்னாள் கருணாநிதிக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும் , அவரின் மனதிலிருந்து தமிழின துரோக சிந்தனை அகலட்டும் , அவரின் விவசாயிகளை மீதேன் திட்டம் கொண்டுவந்து அழிக்கும் ஆணவபோக்கு அழியட்டும் ஸ்பெக்ட்ரம் கொள்ளை அடித்தவர்கள் இந்த ஆண்டாவது தீகாரில் களி திங்க செல்லட்டும் ஜல்லிகட்டை தடை செய்யும்போது கை கட்டி வாய் பொத்தி நின்றுவிட்டு ..இன்று வீரத்தை காட்டும் கருணாநிதியின் கோழை தனம் விலகட்டும் கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தபோது சர்க்காரியா பயத்தில் மவுனமாய் இருந்த கருணாநிதியின் மனதில் துளி அளவாவது தைரியம் வரட்டும் 176,000 ஈழ தமிழர்களுன் சாவுக்கு துணைபோன துரோகிகள் இந்த வருடத்துடன் தேர்தல் களத்தை விட்டு அகலட்டும் .
உடன் பிறப்பே நீ தேர்தல் நிதியாக அள்ளிகொடு ..நாங்களும் எங்கள் பங்கிற்கு ஆற்றுமணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் ஊழல், நில அபகரிப்பு, வீராணம், பூச்சி மருந்து, வோல்டாஸ் அது இது எதுவென்று கொள்ளை அடித்து எங்கள் குடும்பத்திற்கு சேர்க்கிறோம் வளமாக வாழ்கிறோம். பேரன்கள் கோடிகளில் படமெடுக்கிறோம் ..இதெல்லாம் தமிழினம் விழித்து கொள்ள வேண்டுமே என்று செய்கிறோம். ஆனால் உங்களுக்கென்று திருப்பி தரும்போது வெறும் பத்து ரூபாய்தான் தருவேன். நான் என்ன எட்டாவது வள்ளல் எம்ஜிஆரா அள்ளி அள்ளி கொடுப்பதற்கு ..அவருக்கு பிள்ளை குட்டிகள் இல்லை அள்ளி கொடுத்தார் … எனக்கு இருக்கும் குடும்பத்திற்கு …என்னால் அள்ளி கொடுக்க முடியாது..ஆட்டையை போடத்தான் முடியும்.. தேர்தல் நிதியை குவித்திடு நாம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் 176,000 கோடிகளை விட அம்மையார் குவித்த 64 கோடிகள் பெரிதென்று உனக்கு தான் தெரியுமே
சட்டசபையில் போய் எது பேசினாலும் இவர் இதற்குமுன் ..அதில் ஊழல் செய்திருப்பார் …ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி இவர் பேச ஆரம்பித்தால் ,…உடனே சர்காரியாவில் ஆரம்பித்து ..தீஹார் வரை மானத்தை வாங்கிவிடுவார்கள் … உதயகுமாரன் முதல் தா கிருஷ்ணன் வரையும் …கச்சதீவு, காவிரி நதிநீர், மீதேன் என்று அதிமுகவினர் கிழிக்க …ஆரம்பித்தால் கட்டுமரம் துண்டை தலையில் போட்டுகொண்டு சக்கர நாற்காலியை 150 கிலோ மீட்டர் வேகத்தில் உருட்டிக்கொண்டு .. தெறித்து ஓடுவார் ..
சட்டசபைக்கு போகாதவர் நாளைக்கு ஆட்சியை பிடிக்க போகிறாராம் , ஒருவேளை திமுக ஆட்சியை பிடித்தால் என்ன நடக்கும் ,, இந்த ஐந்து வருடங்களாக எதையும் சுருட்ட முடியாமல் ,,எதையும் பிடுங்க முடியாமல் கை அரிப்பு எடுத்து அலையும் மாவட்ட செயலாளர்களுக்கு கொண்டாட்டம்,,,, ஐந்து வருடங்களாக மூலையில் முடங்கிக்கிடந்த இணைவி, துணைவி, கிழவி, பேரன், பேத்தி, மகன், மகள்கள் புதிய அதிகார மையங்களாக மாறுவார்கள்,,,,கண்கள் பனிக்கும்,,இதயம் இனிக்கும் ..அழகிரி மீண்டும் தென் மண்டலத்துக்கு பொறுப்பேற்பார் ….இளம்பெண்கள், ரோட்டில் நடமாட முடியாது,, தி,மு க ரவுடிகளால் கற்பழிக்கப்படும் பெண்கள் தரும் புகார்களை காவல்துறை வாங்காது,,, கவுன்சிலர் மகன் கூட சென்னையை ஸ்தம்பிக்க வைப்பான் ,,, மீதேன் திட்டம் அமலுக்கு வரும் , நில அபகரிப்பு மீண்டும் தொடரும், தினமும் பாராட்டு விழாக்கள் நடக்கும் , சேது சமுத்திர திட்ட கொள்ளை மீதும் புது பொலிவுடன் நடக்கும் … தா கிருஷ்ணன் போல சில திமுக நிர்வாகிகள் நடை பயிற்சியின் போது வெட்டி சாய்க்கபடலாம் , கருணாநிதி ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்,,, இவை எல்லாம் நடக்கும்..திமுக ஆட்சிக்கு வந்தால்…இவைகளை நமது வாக்கு சீட்டில் தடுக்க வேண்டும் ..
இந்தியாவில் வெள்ளைக்காரன் விமான நிலையம் கட்டிய காலம் துவங்கி பயணிகள் வந்துபோகும் எண்ணிக்கையின் அடிப்படையில் டில்லி, மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையம் என்ற பெயரைத் தக்கவைத்த சென்னை விமான நிலையம் இந்த ஆண்டு நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. மூன்றாம் இடத்தை பெங்களூரு விமான நிலையம் கைப்பற்றி உள்ளது. இத்தனைக்கும் பெங்களூரு விமான நிலையத்திற்கு பயணிகளின் வரத்து பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. சென்னை விமான நிலையத்திற்கு வந்துபோகும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததே காரணம். தொழில் ரீதியாக தமிழகம் மிகுந்த பின்னடைவைச் சந்தித்து உள்ளதால் வர்த்தகத்திற்காக தமிழகம் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததே காரணம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விசயம் என்னவோ விமானம் பற்றியது. ஆனால் மானம் ஏறியதோ கப்பலில்!!
நான் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லா திருடர்களும் ஆந்திராவிற்கு ரயில் ஏறி ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா சொன்னார். அப்படி என்றால் அவர்கள் கிளம்பும் முன் ஜெயலலிதாவிடம் சொல்லி விட்டுப் போனார்களா? எல்லாத் திருடர்களும் ஒரே நேரத்தில் பேசி வைத்துக் கொண்டு கிளம்பினார்களா? அதற்கு யார் ஏற்பாடு செய்தது? எல்லோரும் ஒரே நேரத்தில் ரயிலில் செல்ல யார் டிக்கெட் ரிசர்வ் செய்து கொடுத்தது? எல்லாம் இவங்க ஏற்பாடா? அம்மா உணவகத்தில் விக்கிற இட்லி ஒரு ரூபாய். நெல்லை விளைவித்து, அரிசியாக்கி, மாவாக்கி, இட்லி சுட எவ்வளவு செலவாகும். அது ஒரு ரூபா. இலவசமா கிடைக்கிற தண்ணீரை, ஒரு லிட்டர் பத்து ரூபாய்க்கு அரசாங்கம் விக்குது. என்ன பொருளாதாரம்.
முதலாளிகள் 90 சதவீதம் இருக்கும் நாட்டில் பொதுவுடைமைக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு ஒப்பானது ஒவ்வொருமுறை திமுகழகம் ஆட்சிக்கும் வருவதும். ஏறத்தாழ 85 சதவீதம் இருக்கும் தமிழ்நாட்டில், ஊடகங்களால் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரான கட்சி , பெரும்பான்மையான சாதிமக்களுக்கும் அவர்களை பின்புலத்திலிருந்து இயக்கும் வேதவிற்பன்னர்களுக்கும் எதிரான கட்சி என்று தொடர்ந்து பரப்புரை நடந்தாலும் பெரும்பான்மையான இந்துக்கள் உதவியுடன் தமிழ்நாட்டு மக்கள் , அவலஆட்சியினால் ஏற்படும் மனவுளைச்சலில் இருந்து மீள மீண்டும் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி திமுகழகம் மட்டுமே. பெரும்பான்மையினர் இந்துக்கள், அல்லது பெரும்பான்மையான சாதி இந்துக்கள் வெறுக்கும் கட்சி என்றால் திமுக ஆட்சியமைத்திருக்கவே முடியாது. சமயங்களில் பார்ப்பனர்களே ஒரு கையில் பூணூலைப்பிடித்துக்கொண்டு மறுகையில் வாக்களித்த தேர்தல்களுமுண்டு. மூட – நம்பிக்கைகளைக் கிண்டலடித்தாலும் பெரும்பான்மை இந்துக்கள் உட்பட அனைத்துத் தமிழ்நாட்டுத்தமிழர்களின் நம்பகத்தன்மையைப் பெற்றிருக்கும் கட்சி திமுக.
அடுத்த சட்டமன்றத்தேர்தல் எந்நேரத்திலும் வரலாம் என்பதால், மக்களின் நம்பகத்தன்மையை பெற்றிருக்கும் திமுகவின் வெற்றிக்கான சாதக அம்சங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதைப் பற்றி கலைஞரை முந்தி நான் எழுதியிருக்கும் சின்ன அலசல்.
கடந்த காலங்களில் , தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்ததற்கான காரணங்களைப்பட்டியலிட்டால்
1. சாவு அல்லது நோவு. (1984,1991)
2. ஜாதிக்கூட்டணியை நிராகரித்தல் (2001, கலைஞரின் மிகப்பெரிய சறுக்கல் சாதிக்கட்சிகளுடன் கூட்டு வைத்தது , அவரின் மற்றொரு சறுக்கல் 1980யில் எம்ஜிஆர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவைத்தது)
3. இல்லாததை இருக்கு என்று நம்பவைத்து ஊடகங்களினால் செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள். (1977 சர்க்காரியா , 2011 2ஜி).
தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடித்ததற்கான காரணங்களைப்பட்டியலிட்டால்
1. சாவு அல்லது நோவு
2. எம்ஜிஆர் – ஜெயலலிதா சினிமா ஆளுமைகளின் மீதான கவர்ச்சி. சினிமா ஆளுமை என்பதைவிட வெள்ளையாய் இருப்பவர் பொய் சொல்லமாட்டார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை.
3. சாமி பக்தர்கள். அதாவது பார்ப்பனியம் கட்டமைத்திருக்கும் எம்ஜிஆர் ஜெ. ஆகியோர் இந்துக் கடவுள்களின் பக்தர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் நல்லவர்களாக இருப்பர் என்ற சனாதன கால நம்பிக்கை.
4. கருணாநிதிதான் நம்பியார் என்று நம்பும் படிப்பறிவற்ற பாமர இரட்டை இலை பழந்தலைமுறையின் கண்மூடித்தனமான வாக்குகள்
5. ஆயிரம் இருந்தாலும் “நம்மவா” என்று எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பார்ப்பனிய ஊடகங்கள் தரும் நேரடியான ஆதரவு.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு சாதகமான அம்சங்கள் முன்பு எப்பொழுதுமில்லாத அளவிற்கு இருக்கின்றன. அது என்ன என்னவென்று பார்ப்போம்.
1. சாவு – நோவு –> இல்லை.
2. 2ஜி, சர்க்காரியா கமிஷன் விசாரணை போன்ற விசயங்கள் –> இல்லை
“என்னை ஸ்பெக்ட்ரம் ராஜா ” என்று அழையுங்கள் என்று ஏ.ராசா தைரியமாகப்பேசும் அளவிற்கு நீதி மன்றத்தில் தன் தரப்புகளை வைத்து தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யென்று நிரூபித்துவருகின்றார். மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரம் இல்லாமல் கடந்த இரண்டரையாண்டுகளுக்கு மேல் இருப்பதால் திமுகவின் மேல் எந்தவித புதியக் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாத நிலை.
3. திமுகழகம் தங்கள் ஆட்சிக்காலங்களில் செயல்படுத்துகின்ற மக்கள் நல திட்டங்கள், தொலைநோக்குத் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் புரட்சிகள், புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்றவற்றில் பத்து சதவீதம் கூட அதிமுக ஆட்சியில் இல்லாத நிலைமை.
4. காசு கொடுப்பவர்களுக்கில்லாத நேர்மை, நமக்கு மட்டும் எதற்கு என்று எல்லாப்பக்கமும் காசு வாங்கி யாருக்குப்போடவேண்டுமோ அவர்களுக்கு வாக்களிக்க விரும்பும் பெரும்பான்மையான மக்களின் மனநிலை. திமுகழகத்திற்கு திருவரங்கம் இடைத்தேர்தலில் கிடைத்திருக்கும் 25% வாக்குகளே இதற்கு சாட்சி.
5. இந்தத் தலைமுறைக்கு ஜெ., கலைஞர் என்று இரண்டு முதலமைச்சர் முகங்களையே பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. ஸ்டாலின் முதல்வாராவர் என்ற நிலையில்., கலைஞரை “நம்பியார்” என்று நம்பி வாக்களிக்காதவர்கள் கூட, “மெட்ராஸ் ஹீரோ” ஸ்டாலினுக்காக வாக்களிக்கப்போகும் சூழல். மக்களாட்சியில் ஒரு சதவீத வாக்கு மாற்றம் கூட பெரிய அளவில் தேர்தல் முடிவுகளை மாற்றும்.
6. கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று உறுதிமொழிக் கொடுக்கும் சூழலிருக்கையில் , பாமக மாதிரியான பலம் வாய்ந்த கட்சி கூட அணிக்கு வந்து பலமான கூட்டணி அமைய வாய்ப்புண்டு.
7. ஜெ. விற்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால், ஜெ.வைத்தவிர கட்சியில் பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் இருப்பது. பன்னீர் செல்வம் பரப்புரை செய்வதென்பதெல்லாம் குருவித்தலையில் பனங்காயை வைப்பதற்கு சமம்.
இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும் திமுகழகம் ஏன் அசட்டையாய் இருக்கக் கூடாது என்பதற்கும் சிலக்காரணங்கள் இருக்கின்றன.
1. ஒரு பொய்யை ஒருத்தர் சொன்னால் பொய் எனத்தெளிவாகத் தெரியும். பத்து பேர் சொன்னால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று எண்ண ஆரம்பிப்போம். பத்து பேர் பத்தாயிரம் தடவை பத்து லட்சம் விதமாக சொன்னால் அது உண்மையாகிவிடும். திமுகழகம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை விதைக்க நியுட்ரினோ ஸ்டார், முப்பாட்டன் முருகனின் பேரன்கள், இடதில் இருக்கும் வலதாட்கள், பதிப்பக மேதாவிகள் கொண்டு ஊடகங்களால் கர்மசிரத்தையாக வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
2. இந்தியப்பிரஜையாக, எனக்கு நீதிமன்றங்களின் மேல் நம்பிக்கையிருந்தாலும், ஜெ. எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று ஆடே திருடபோகலிங்கய்யா தீர்ப்பு வந்தாலும் வரும் அல்லது வரவழைக்கப்படும்.
3. அதிமுக – பாஜக பாதிக்குப்பாதி கூட்டணி. உடன் ஒத்து ஊத வாரியர் டமிள்ஸ் , சமத்துவ டமிள்ஸ் போன்ற பேக்வர்டு பிளாக் டைப் கட்சிசாதித்தலைவர்கள்.
மேற்சொன்ன அதிமுக சாதக அம்சங்களின் மூன்று அடிப்படை செயற்பாட்டுத்தளங்கள்.
அ. இந்துக்களின் எதிரி – திமுக ,( இதற்கு கலைஞரே பதில் சொல்லிவிட்டார்.)
ஆ. ஈழத்தவர்களின் எதிரி – திமுக . (ஏற்கனவே திமுக அனுதாபிகள் ,ஈழமாயையிலிருந்து அப்பாவி தமிழ்நாட்டு இளைஞர்களை வெளிவரச்செய்ய பரப்புரையை ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் வரும் சமயத்தில் ஈழ மாயையிலிருந்து எல்லோரும் வெளிவருகையில் தொகுதிக்கு 100 – 150 வாக்குகள் போனஸ். )
இ. திமுக – ஊழல் கறை படிந்தது, நேர்மையின் எதிரி – ) இந்தக்கறை பொய் என்று ஏ.ராசா நிரூபித்துக்கொண்டிருக்கிறார். )
அ, ஆ, இ ஆகியவற்றிற்கான பிரதிவாத பிரச்சாரங்களுடன் திமுகவின் நிர்வாகத்திறன், உட்கட்டமைப்பு , தொழில் வளர்ச்சி , சமூகநீதித்திட்டங்கள் இவற்றையும் சேர்த்து திமுக அனுதாபிகள் ஒவ்வொருவரும் ஊடகமாய் செயற்பட்டு பரப்புரையைத் தொடர்ந்தால் அடுத்தது ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அமையும். திமுக ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன பயனென்று கேட்கிறீர்களா?
வியாபாரிகள் நிம்மதியாய் வியாபரம் செய்யும் சூழல், சிறு தொழில் முனைவோர் தேக்கமின்றி தொழில் முனையும் சூழல், சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசு அமைந்திருக்கும் நிலையில் , நமது சமூகநீதி உரிமைகள் பறிக்கப்பட அனுமதிக்காத மாநில அரசு, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு இதன்மூலம் மதச்சண்டைகளை தவிர்க்கும் இணக்கச்சூழல், ஈழத்து வியாபார காந்தங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையிலான வியாபாரச்செழிப்பை உருவாக்கி மேம்படுத்தல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வளமான தமிழகம், ஒட்டு மொத்த இந்தியத்துணைக்கண்டத்திற்கே எடுத்துக்காட்டு என்பதை வேதவிற்பன்னர்களே ஒப்புக்கொள்வார்கள்.
என்னைப் போன்ற அரக்கர்கள் கொக்கரக்கோ என்று கூவுவதால் மட்டும் பொழுது விடியாது. பொழுதுவிடியவேண்டுமென்றால் சூரியன் உதயமாகவேண்டும். நாம் தமிழ்நாட்டுத்தமிழர்கள், நமது ஒரே ஆயுதம் வாக்கு. அதைவைத்துத்தான் காரிருள் நீக்கி விடியலைக் கொண்டுவர இயலும். எனக்கு விடியல் வேண்டும். உங்களுக்கும் வேண்டுமென்றால் உங்களைச்சுற்றியிருப்பவர்களிடம் எண்ண மாற்றங்களை ஏற்படுத்துங்கள். மாயையில் இருக்கும் மக்களின் எண்ண மாற்றம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாற்றமாக அமையப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் பல்லாவரம் சந்தையில் நிறைய பார்த்திருக்கோம் – கிராமத்திலே இன்னும் நிறைய இருந்திருக்கும் – என்னவோ நீங்க உங்க சினிமா பாணியிலே மந்திரிகுமாரி மனோகரா பராசக்தி என்று ஏக போக வசனங்களை பேசி மக்கள் பழச மறப்பாங்க என்ற மனப்பால் குடிக்கிறீர்கள் -தமிழன் மறக்கமாட்டான் – நீங்கள் தமிழக மக்களுக்கு கொடுத்த ஊழல் ஆட்சி இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்த ஊழல் நிர்வாகம் – ஈழத்து ஏற்பட்ட எழவு – எல்லாம் உங்களால்தான் – ஆட்சியால் வளர்ந்தது உங்கள் குடும்பம் மட்டும் தான் – இதை மக்கள் மறப்பார்களா – நீங்கள் என்ன அவர்களுக்கு சித்தாபாவா பெரியப்பாவா விட்டு கொடுக்க – தயவு செய்து பல லட்ச கோடி அதிபதியான நீங்கள் – அந்த நான்கு குணங்கள் உங்களுக்கு இருந்தால் – வெளிப்படையாக சொல்லுங்கள் எப்படி அவ்வளவு சேர்த்தீர்கள் – பிறகு நீங்கள் மற்றவர்களை குறை சொல்லலாம் – உங்கள் கவுன்சிலர் வ்ெவொருவரும் ( ஆதிமுக கூட ) 100 -150 கோடி சேர்த்தது எப்படி – உழைத்த – உங்களை மாதிரியே உழைத்தா – இன்னும் தமிழ்நாட்டில் சுரண்ட என்ன இருக்கிறது – மக்கள் எதிர்பார்ப்பது சகாயம் போன்ற நேர்மையான அரசியல் வாதிகளை தான் – கண்ணுக்கு தெரிந்தவரை அன்புமணி ஒருவர் தான் தெரிகிறார் – அவருக்கு அடுத்தபடி வைகோ-நல்லக்கண்ணு – வேறு யாரும் மக்கள் மனதில் இந்த நேரம் ஆழமாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்க தோன்றுகிறது – இந்த மூவர் தான் தமிழகம் இன்னும் வீழாமல் காக்கவேண்டும் என்று உயரிய கொள்கையோடு இருக்கிறார்கள் – அம்மா அவர்கள் – எல்லா துறையையும் அடித்து துவைத்தால் மீனும் வரலாம் – ஜெய் ஹிந்த் – இல்லாவிட்டால் பழைய ஆட்களில் 50 சதவீதம் கொஞ்சம் கூட சுறுசுறுப்பு இல்லாதவர்கள் – ஆற்றல் இல்லாதவர்கள் – ஜெய் ஹிந்த்
இது, இன்றைய பராசக்தி கருணாநிதி- இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன்தான். தமிழக அரசியலில் குழப்பம் விளைவித்தேன். முதல்வரை தாக்கி அவதூறாக எழுதினேன் என்றுகுற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் . நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்… நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லைநிச்சயமாக இல்லை தமிழக அரசியலில் குழப்பம்விளைவித்தேன். அரசியல் கூடாது என்பதற்காக அல்ல. அரசியல் எங்கள் குடும்பத்தை விட்டு அடுத்தவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக. அதிமுக ஆட்சியை தாக்கினேன்.. ஊழல் கூடாது என்பதற்காக அல்ல. எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக. உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் குடும்பநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு இனத்தை பெருக்குகிறதே மீன் அதைப்போல. என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் நான் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை நீதிபதி அவர்களே.. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே திருவாரூரரில் திருக்குவளையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை டிக்கெட் எடுக்க வழியின்றி டிரைன் ஏறி திருவாரூரில் இருந்து வந்த என்னை இந்த மாநிலத்தையே விலைக்கு வாங்குமளவிற்கு வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. இதோ என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அம்மையார். அவர்களால் தான் நான் ஆட்சியை இழந்தேன், அடுத்தவர்களின் ஆட்சியை சகித்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றும் இருந்ததில்லை. அதனால் தான் ஆட்சியை பழி சொன்னேன். தற்பொழுது இங்கு வந்து நிற்கிறேன். ஆட்சி இல்லாததால் ராஜாத்தி அம்மாள் கனிமொழியை காப்பாத்த என்னை மிரட்டுகிறார். பயந்து போய் கோபாலபுரம் சென்றேன் அங்கே ஸ்டாலின் தலைவர் பதவி கேட்டு என்னை துரத்தினார் அலறி அடித்து அறிவாலயம் வந்தேன். அங்கே அழகிரி அதிகாரம் கேட்டு அதட்டினார்.. ஓடினேன் ஓடினேன் அன்பழகன் வீட்டிற்கு.. அங்கும் வந்து நின்றார் தயாநிதி தாத்தா எதாவது தா தா என்று. ஓடினேன் ஓடினேன் ஒருவர் வீடு பாக்கியில்லாது. ஓடினேன் பதவி இருந்திருந்தால் நான் ஓடியிருப்பேனா? என் ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? ஆள விட்டார்களா என்னை ? அரசு வக்கீல்: குற்றவாளி வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்.. கருணாநிதி-இதுவும் வழக்கோடு சம்பந்தம் உள்ளதுதான்.. என்னை ஆட்சிக்கு எதிராக பேச வைத்தது யார் குற்றம்? ஊழலின் குற்றமா? அல்லது ஊழலின் பெயரைச் சொல்லி என் ஆட்சியை மாற்றிய தமிழர்களின் குற்றமா? பணம் பறிக்கும் எங்கள் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் எங்களின் குற்றமா? பகுத்தறிவின் பெயரால் மஞ்சள் துண்டை போர்த்தி கொண்டு போலிப் பகுத்தறிவாதி களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? பெரியாரின் குற்றமா? அல்லது பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகளும் வீரமணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.. நீதிபதி-வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது.. கருணாநிதி- இதுக்கு தான் இவ்வளவு பில்டப் விட்டேனா…
வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி தான் என்னையும் கைது செய்யுங்கள் என்று கத்துவார் . கருணாநிதியும் எவ்வளவோ தில்லாலங்கடி திருட்டுத்தனம் செய்து , என்னை கைது செய்து பார் என்று உதார் விடுவது அவருக்கு கை வந்த கலை . ஐயோ ஐயோ என்னை கொல்றன்களே என்று அழுமூஞ்சி ஆட்டம் ஆட வேண்டியது. கருணாநிதி இந்த கைதை வைத்து நாடகம் போட முயற்சி செய்தார் . புஸ் புஸ் புஸ் புஸ் புஸ் புஸ் . இனிமேல் அவரின் அரசியலுக்கும் புஸ் புஸ் புஸ் புஸ்
aiyaa savadaal vaithi avargalae, what is your comment on this particular article?
கணம் கோர்ட்டார் அவர்களே நான் திருட்டு ரயிலில் சென்னை வந்தேன் அதற்கு காரணம் என்ன ? வறுமை என்னை சென்னைக்கு வாடா என்று அழைத்தது கையிலோ மஞ்சப்பை அதிலோ காசில்லை என்ன செய்வது சிந்தித்தேன் அதனால் திருட்டு ரயிலில் சென்னை வந்தேன் அய்யகோ என்னை டிக்கட் பரிசோதகர் பிடித்திருந்தால் அபராதம் கட்ட வழியில்லாத என்னை சிறையில் அடைத்திருபார்கள் மூன்று வேளை உணவு கிடைத்திருக்கும் . இன்று சட்டத்தை நீட்டுவோர் அதை செய்தார்களா ? சென்னை வந்து சினிமா கம்பனிகளின் கேட்டில் தவம் கிடந்தேன் நட்பாக பழகிய அகப்பட்ட அப்பாவிகளின் தயவில் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்க பெற்றேன் .எனக்கு உதவி செய்தவர்களின் கழுத்தை அறுத்து இன்று உன்னதமான நிலைக்கு வந்தேன்.’ தம்பி வா கட்சிக்கு தலைமை தாங்கு’ என்று பேரறிஞர் அண்ணா தொண்டர்களை அழைத்தார். தொண்டர்களுக்கே தொண்டனாக இருந்து அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி , ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைத்து அதற்காக எட்டப்பனை மிஞ்சும் வேலைகளை செய்து என்னை எதிர்த்தவர்களை கருவோடு அழித்து திமுகவின் முன்னணி தலைவர்களை பின்னுக்கு தள்ளி எனது அடிவருடிகளான ஒரு கூட்டத்தை வளர்த்து , அண்ணா தலைமையில் 1967 ல் ஒரு அமைச்சர் ஆனானேன் . ஜவகரிஸ்ட் என்ற ஒரு பத்திரிகையில் எனது துணைவி ராசாத்திக்கு /தர்மாம்பாளுக்கு பிறந்த பெண் குழந்தையின்(கனிமொழி ) தந்தை அமைச்சர் மு.கருணாநிதி என்று வந்த செய்தி கேட்டு புழுவாக துடித்தேன். உண்மைக்கு மாறாக என் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக அந்த பத்திரிகை ஆசிரியர் மீது வழக்கு போட்டு அவரால் கனிமொழி எனது மகள்தான் ,ராசாத்தி என்ற தர்மாம்பாள் எனது துணைவிதான் என்று நிருபிக்க முடியாத காரணத்தால் அவர் சிறை வாசம் அனுபவிக்க நேர்த்ந்தது . வராத ரயில் தண்டவாளத்தில் எனது உயிரையும் பொருட்படுத்தாது தலை வைத்த நான் , மொழி போராட்டத்தில் பாளையம்கோட்டை சிறையில் வாசம் செய்த காலத்தில் ‘மாங்குயில் கூவும் பூஞ்சோலை இந்த பாளையம் கோட்டை சிறைச்சாலை ‘என்று பரணி பாடிய நான் ‘சிறையை கண்டு என்றும் அஞ்சியதில்லை. பொதுவாழ்வில் மக்களுக்கு சேவை செய்யவந்து சற்றொப்ப எழுபதாண்டு கால அரசியல் வாழ்வில் காணாத போராட்டங்களா ? நீதி கேட்டு நெடிய பயணம் சென்ற நான் எனது நண்பர் எம்.ஜி யார். ஆட்சியில் அவ்வப்பொழுது ‘கிடுகிடு ‘போராட்டம் , மறியல், அரசியல் நிர்ணய சட்ட புத்தகம் எரிப்பு ‘ (பின் வெறும் தாள்களை எரித்தேன் என்று வீரவசனம் பேசியது )என்று பலமுறை சிறை சென்ற நான் ,காவல்துறையை தனது ஏவல் துறையாக ஆட்சியாளர் மாற்றி என்னை கைது செய்யவந்த ‘காவல்துறை அதிகாரிகளுடன் அமைதியாக சிறைக்கு செல்லவில்லையா ? ( கொல்றாங்களே ,கொல்றாங்களே ). நான் என்ன தவறு செய்தேன் .? ஒரு பத்திரிகையில் ( அதற்கு பெட்டி கொடுத்து ) வந்த செய்தியை எனது பத்திரிகையில் வெளியிட்டேன் .அது தவறா ? இன்று கூட ஹிந்து நாளிதழ் ‘கருணாவிற்கு இந்த அரசு செய்யும் கொடுமைகள் ‘ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.இன்னொரு வார பத்திரிகை இந்த ஆட்சியின் நடக்கும் ஊழல்களை துறைவாரியாக வெளியிட்டுள்ளனர். அதற்கு இந்த அரசு அவதூறு வழக்கு போடுமா ? போட்டால் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கும். போடாவிட்டால் அரசு உண்மையை ஒத்துகொண்டுவிட்டது என்று நான் அறிக்கை விடுவேன்.என்ற பயம் வேறு இந்த அரசுக்கு இருக்கிறது. கணம் நீதிபதி அவர்களே ,இதுவரை பல வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டு அதனை உயர்நீதிமன்றம் அணுகி அந்த வழக்குகளிருந்து கருணாவிற்கு விலக்கு ‘ என்று ‘ஆஜராக விலக்கு .சில நீதிபதிகள் என் மீது வழக்கு போட்டவர்களுக்கு அபராதம் என்றுதான் வழக்கப்படி செயல்பட்டது. பாண்டியன் அவையில் நீதி கேட்பது போல் நான் இங்கு நீதி கேட்க கண்ணகி போல் வந்துள்ளேன். என் மகள் செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது காசோலைவழக்கு ,மோசடி வழக்கு என்று நெடுமாறன் என்பவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலம் வாங்குவது தொடர்பாக 5.14 கோடி என்று விலை பேசப்பட்டு 3.50 கோடி காசோலை மூலமும் மீதி பணம் ரொக்கமாகவும் நெடுமாறன் கொடுத்ததாகவும், ஆனால் எனது மகளும் , அவரது மருமகனும் மேற்படி நிலத்தை வழக்கு தொடுத்த நெடுமாறன் பெயரில் மாற்றி பதிவு செய்ய மறுத்ததாகவும் ,அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்ற காரணத்தால் திரும்பி வந்ததாக வழக்கு போட்டுள்ளார். வங்கியில் பணம் இல்லை என்பது எனது மகளின் குற்றமா ? எங்கள் குடும்பத்தினரிடம் பணம் கொடுத்து அதை திருப்பி கேடடவர்கள் இந்த மண்ணுலகில் வாசம் செய்யமுடியாது என்பது தமிழக மக்கள் அறிந்த உண்மை..பொதுவாக அப்படிப்பட்ட விசயங்களில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஜே .அன்பழகன் , மற்றும் குணசேகரன், தனசேகரன் போன்றவர்களிடம் சம்பந்தப்பட்ட நபர் ,’நான் கொடுத்த பணத்தை முழுவதும் திரும்ப பெற்றுகொண்டேன் . எந்த வழக்கும் போடமாட்டேன் .போட்டிருந்தாலும் அதை உடனே திரும்ப பெறுவேன் ‘என்று உறுதிபட,குருதி சிந்தி கையெழுத்திட்டு செல்வது வழக்கம் .மேற்படி வழக்கு அதையும் மீறி பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் நான் ஆட்சியில் இல்லை என்ற குறைபாடுதான்’ எனினும் எனது மகள் சென்னை உயர்நீதிமன்றம் சென்று ‘நீதி அரசர் செல்வம் ‘ எனது மகள் அந்த நபர் குறிப்பிட்ட காலத்தில் ‘கலகத்தாவில் ‘இருந்தார் என்பதை ‘ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்டு ‘வழக்கிலிருந்து விடுபட்டுள்ளார். கணம் கோர்ட்டார் அவர்களே இந்த அவதூறு செய்தி வெளியிட்ட சமயத்தில் ‘நானும் என் மகளுடன் கல்கத்தாவில் ‘ இருந்தேன் என்பதை இங்கு நிருபித்து ‘இந்த அவதூறு செய்தியை சரியாக ‘புரூப் ‘பார்க்காமல் வெளியிட தொழிலாளி பொன்னுச்சாமி , மற்றும் பிரிண்டர் பழனி ஆகியோரின் தவறுக்கு நான் பொறுப்பல்ல ‘ என்பதால் என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும் ‘…
DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு
My friend, the growth rate in Tamil Nadu was 13% and there were major infrastructural projects ongoing and the ministers were managing the portfolio. The CM was in the secreteriat every day and interviews were given to media on regular basis. The prices were not increased multifolds . If there were corruption in the previous regime, nothing stopped this government to bring corrupt people under law. This government is good for nothing except looting the country’s resources and no brain to think beyond fooling people.
The major power cut in DMK regime was due to high inflow of FDI inform of major automobile and IT industries. The common man had more money and people were more happy with less umemployment.
If you have guts, list the major achievements of the current government rather than cutting and pasting stupid list again and again.
some allkai adimai’s here tend to debate DMK brought development indirectly by talking about AIADMK and try to picture themselves they are super intellectuals and debate on facts with out so called emotions.
this peoples just want to talk bad only about current government because that would be convenient to hide all the past assuming people would have forgotten all those facts in period of time.
1, If over bridges and few visible constructions are the only indicators of development for a government then they are totally ignorant and smart way to cheat people.
2, Talking about roads it is not only DMK who build it, there are lot other districts and for example my village and many villages in erode district for got new widen roads in this government, hence we cant conclude subjectively on this who build better roads and that differ area to area.
3, With regard to power cut, let us take what is the status of power cuts now and previous dmk rule. At the end of dmk rule it was 12- 14 hours power cut in my village and all districts expect Chennai. Most small scale industries and farmers went into total loss because of this and many declared complete loss and shut down their businesses. There are peoples who got loss at that time lost all their complete livelihood.
Now in this AIADMK government the power is stable, we get power to our farming and small scale industries uninterrupted. which is one major achievement then previous bogus DMK rule.
4, We know why the 12 hour power cut happen during dmk rule.They gave approval to industries just for commission for the project with out minding the gap between power production and consumption. hence this industries suck the power that lead to power cuts in other sectors mostly to farmers and all small scale industries through out the state. Just for the benefits of few high scale industries power was distributed to them. Many poor family along with farmers went with out job due to this mis managment. Those kind of mindless approval just for commission got ended now and thus the power is distributed to all areas (not just chennai) and they are able to run our industries and farming better now.
5,There is no power cuts during 2001 – 2006 and now in this government from 2011 to till now because this government improves the power supply regulations and ended approving mindless projects for heavy industries just for corrupt commission.
6, yes dmk government start power projects that we all know, but for what that projects are is the hidden agenda. They start it and find the commission by all means and leave the project with out completing it in their period after looting the project money and blame the successive government for not completing it. This is the jackal cunning tactics they do and they are good in it. people of TN well aware of all this.
Hence any DMK supporter say DMK is better then AIADMK then yes that is true and everyone would accept that DMK family is better in handling corruption systematically with out leaving much loop holes.
உங்கள பார்த்தா ரொம்ப படிச்சவங்களா தெரியுது ..அண்ணா வளர்த்த திமுகவில் அண்ணாவின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை .அண்ணாவின் மனைவிக்கு அம்மா உதவி செய்யற நிலையில் இருந்தாங்க. ஆனால் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு வளமான அமைச்சர் பதவிகள் அவங்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. இன்றைக்கு சன் டி.வி யின் 743 கோடி ஊழல் பரிவர்த்தனைக்கு தயாநிதி மாறன்,கலாநிதி மாறன்,காவேரி மாறன் மீது அமலாக்க துறை குற்றபத்திரிகை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.சில தினங்களுக்கு முன் கலைஞர் டி.வி.க்கு வந்த 214 கோடி 2ஜி ஊழல் பண பரிவர்த்தனை கம்பனிகள் போலியானவை என்று சிபிஐ வாதம் செய்துள்ளது. கலைஞர் டி.வியின் பங்குதார்கள் 60% தயாளு அம்மாள், கலைஞரின் இணைவியின் மகள் கனிமொழி 20% பங்குதாரர். இவர்களுக்கு எப்படி பணம் வந்தது ? ஐந்து முறை முதல் அமைச்சர் ஆக இருந்த கருணா ஊழல் செய்து சேர்த்த பணம். 2ஜி ஊழல் பணம் அனைத்தும் ஸ்டாலின் மூலம் அசோக் ஜெயின் மற்றும் சூரத் மார்வாடி மற்றும் சென்னை ஐந்து நட்சத்திர ஓட்டல் அதிபர் மூலம் வெளிநாட்டு வங்கிகளுக்கு சென்றது என்றும் சிபிஐ கண்டுபிடித்துள்ளனர். இன்றும் ஸ்டாலினை இயக்கம் சபரீசன் போலி மருந்துகள் விற்பனை, மற்றும் காலாவதி மருந்து விற்பனை சம்பந்தப்பட்டவர். டிஜிபி துரை, காண்ட்ராக்டர் சத்திய நாராயணா, அண்ணா நகர் ரமேஷ் குடும்பம், சாதிக் பாஷா போன்றோர் எப்படி செத்தார்கள்? ஏன் செத்தார்கள் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. குடும்ப கட்சியான திமுக, ஊரார் சொத்துக்களை மிரட்டி உருட்டி,ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து, நல்ல நிலையில் நடைபெறும் தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள்,நாளிதழ்கள், தனியார் மருத்துவமனைகள், துணிக்கடைகள்,நகைக்கடைகள், கல்லூரிகள், பள்ளிகள், திரை அரங்குகள் , ஏன் திரைத்துறையையே கபளீகரம் செய்தது. தூங்குகிறவனை எழுப்பி விடலாம் .உங்களை போன்று தூங்குவது போன்று நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்.? அதிமுகவின் தலைமை மக்கள் நலம் கொண்டது. திமுகவின் தலைமை ‘தன மக்கள் நலம் ‘கொண்டது .அதிமுக தலைமை உறுதியானது. அதன் கட்டளை கட்சியில் இறுதியானது. திமுகவின் அதிகார மையம் அதன் தொண்டர்களை பல திசைகளிருந்து இயக்குவதால் உறுதியாக இருந்த ஒரு இயக்கம் இன்று இறுதி யாத்திரை செய்து கொண்டிருக்கிறது. தமிழக நலனுக்கு திமுக 17 வருடம் மத்தியில் அங்கம் வகித்து எந்த நன்மையை செய்யாவிடினும் செய்த துரோகங்கள் பல உண்டு. காவிரி ,முல்லை பெரியார். கச்சத்தீவு, இலங்கை தமிழர் ,ஜல்லிக்கட்டு என்று அனைத்து விசயங்களிலும் தமிழக நலன்களை விட்டுகொடுத்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து பல லச்சம் கோடி சொத்து சேர்த்து ,ஹம்மர் காரில் பவனி வரும் திமுக குடும்ப உறுப்பினர்களின் சிப்பாயாக நீவிர் இருந்து சிறப்புடன் தொண்டாற்றுவது ஏன் என்பதுதான் என் கேள்வி. ஏன் சார் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் ஏழை ,அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல,நடுத்தர, சாதிமத பேதமற்ற அனைவரும் விரும்பும் கட்சி அதிமுக. ஒரு டீ,பன்னுக்காக போஸ்டர் ஒட்டி வியர்வை சிந்தி உழைக்கும் உண்மையான திமுக தொண்டர்கள் இப்போது அந்த கட்சியில் இல்லை. குடும்ப உறுப்பினர்களின் அடிவருடிகள் தான் இப்போதைய திமுக குண்டர்கள். மேற்கூறிய காரணங்கள் அறிந்த தமிழக மக்கள் ‘எப்படி சார் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்
You are right..Infact the growth rate was 100 % during last dmkrule..but one correction that is for DMK family not for TN..dont crack jokes here. we all know we were at 14 hours power cut during dmk left this government..stop your nonsense
2016 தேர்தல் பயம் மஞ்ச துண்டை பெரிதும் படுத்துகிறது. எனவே ஆத்திகன் ஆக கூட மாற தவற மாட்டார். பதவி ஆசை பிடித்து அலையும் கிழட்டு நரிக்கு ஆப்பு ஒன்று தயாரா உள்ளது. கொள்கை பிடிப்பு இல்லாத இந்த கோமாளியை பார்த்தல் பாவமாக உள்ளது. உதராச்ச கோட்டை மாலை ஒன்றும் போட்டு நெற்றியில் பட்டை போட்டு கொண்டு வாக்கு சேகரிக்க வந்தாலும் அச்ச்ராயம் இல்லை.கருணா சுவாமிஜி ஒரு ஆஷ்ரம் கூட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். நம்மக்கு நாமம் நாயகன் கூட இனிமேல் காவி சட்டை அணிந்து கொள்வார்.
the appu is for Komala valli. either the big appu comes from the Supreme court, if judiciary is really clean or great appu is getting ready in the state elections. DMK did not concentrate on the corruption of ADMK during the previous regime. This time, I think once DMK wins, must put the CM and all the ministers behind bars for all the looting they have done and tamil nadu will then be peaceful
He he he if DMK wins ???? !!!! Entire DMK family is trapped in DELHI and you are blabbering here about acquitted person in the case. dmk going to put minisiters for corruption..poda duppukku..
poda duppukku..