கிரைம் பீட்
ஷோபா மர்ம மரணம்
இருவேறு காலகட்டங்களில் இண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரைப் பதிப்பில் பணியாற்றியிருக்கிறேன். என் செய்தியாளர் வாழ்க்கையில் மிக முக்கிய பகுதியே அங்குதான்.
”செய்தியாளன் தகவல் சேகரித்து வழங்கும் ஒவ்வொரு செய்தியும் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படவேண்டும். சாதாரண மக்கள், அடித்தட்டு மக்கள் வாழ்வில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் உருவாக, ஓரள வேனும் அநீதிகள் களையப்பட, நாம் கொடுக்கும் செய்திகள் உதவவேண்டும்” என்ற எனது நம்பிக்கைக்கு ஸ்தூலமான உரு கொடுத்தது மதுரைப் பணியே.
நான் ஏதாவது பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்றால், அது எனது அந்த காலகட்ட செய்திகளை ஒட்டியே இருக்கும்.
முதல்கட்டம் 1981 இறுதியில் முடிவுக்கு வந்தது. சொந்த வாழ்வில் ஒரு சோக திருப்பம். சென்னை திரும்ப வேண்டிய கட்டாயம். அந்த நேரம் சம்பந்தம் மீண்டும் தலைமை நிருபராகி விட்டார்.அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருந்த இருவரும் திறமை யாக செயல்படவில்லை. அது மட்டு மில்லை. சம்பந்தமே நக்வியுடன் சமா தானமாக போய்விட்டார்.
தலைமை நிருபராகவும் ஆகி நக்வியுடனும் நல்லுறவை வைத்திருந்தார் என்றால், நிச்சயம் சம்பந்தம் என்னை ஒரு வழிசெய்துவிடுவார் என்று எனக்கு நன்றாக தெரியும். அதுதான் நடந்தது.
அவருக்கு ஃபோன் செய்து நான் வந்துவிட்டேன் என்றவுடன் கடகட வென சிரித்தார். “மகனே, வாலண்டியரா வந்து வண்டில ஏறுகிறாய் அனுபவி” என்று சொல்வதுபோல இருந்தது அந்த சிரிப்பு.
நான் ஏன் திரும்பிவருகிறேன் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.
11 மணிக்கு வரச் சொன்னார். 12.30 மணி அளவில்தான் தனது குடிபடை களோடு நுழைந்தார்.
“வாப்பா” என்றவர், ரொம்ப ஜூனியர் ரிப்போர்ட்டர் ஒருவரைக் கூப்பிட்டு, ‘‘நீ விடுப்பா, புரட்சி போகட்டும் அங்கே” என்றார். ஏதோ தீ விபத்து. என்னை அவர் புரட்சி என்றுதான் அழைப்பார். அதில் எனக்கு ஒரு அற்ப சந்தோஷம்!
சிறு சிறு சம்பவங்கள், ரோட்டரி கிளப் நிகழ்ச்சிகள் இப்படி. சிறப்புச் செய்திகள் பல சென்ற ஓராண்டில் கொடுத்திருந்தேன் என்பதை கணக்கிலேயே கொள்ளமாட்டார். அரசியல் நிகழ்வுகள் பக்கம் செல்லவிடமாட்டார்.
எனக்கு எதெல்லாம் சற்றும் பிடிக்காதோ அங்கெல்லாம் அனுப்பி என்னை வதைப்பார். ‘‘சங்கராச்சாரியார் சென்னைக்கு வருகிறாராம். தாம்பரம் போ, சென்னை எல்லையைத் தொட்டவுடன் ஃபோனில் செய்தி கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போ” என்பார்.
நானாக முந்திக்கொண்டு அங்கே போகிறேன் இங்கே போகிறேன் என்றால், ‘‘இல்லப்பா, அதுக்கு வேற ஆளு இருக்கு” என்பார். கொஞ்சம் வற்புறுத்தினால் ‘‘நான் சீஃப் ரிப்போர்ட்டரா, நீயா?” என்பார்.
வந்த ஒருசில நாட்களிலேயே கிரைம் பீட்டுக்கு போட்டுவிட்டார். கிரைம் பீட் என்பது போலீஸ் தொடர்பான செய்திகளை சேகரிப்பதாகும். நச்சு வேலை.
மாநகரில் எத்தனை போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றனவோ அவை அனைத்திற்கும் ஃபோன் செய்து, ‘‘என்ன சார், இன்னிக்கு ஏதாவது நியூஸ் உண்டா?” என விசாரிக்கவேண்டும். ‘‘ஆமாம் சார்… ஒரு கொலை, ரெண்டு கொள்ளை…” என்று பொத்தாம் பொதுவாக சொல்வார்கள். அதற்கு மேலும் விவரம் கேட்டால், “இன்ஸ்பெக்டர் அய்யா இல்ல, ஸ்பாட்டுக்கு போயிருக்காரு” என்ற பதிலோடு முடித்துக் கொள்வது தான் வழக்கம்.
அப்போதெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகளில்தான் குற்றங்கள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம். எனவே அவற்றின் செய்தியாளர்களே சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். தொலைக்காட்சிகளும் கிடையாது. ஆங்கிலத்தில் இரண்டே இரண்டு ஏடுகள்தான், இந்து மற்றும் எக்ஸ்பிரஸ். இவற்றின் நிருபர்களுக்கு சற்று கூடுதல் மரியாதை. ஆங்கிலம் தெரியுமே, உயர் அதிகாரிகளுடன் உரையாட முடியுமே. மற்றபடி குற்றங்கள் தொடர்பான செய்திகளைப் பெறுவதில் தமிழ் நிருபர்களுக்கு ஈடுஇணை கிடையாது.
வேறொரு சிக்கலும் இருந்தது. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, கான்ஸ்டபிள் என அந்த மட்டத்தில் பலரை நண்பர்களாக்கிக் கொண்டு சகஜமாகப் பழக வேண் டும். உயர் அதிகாரிகளாக இருந்தால் அவர் களுக்காகக் காத்திருந்து, மஸ்கா அடித்து, நம்பிக்கையைப் பெற்று, பிரத்யேக செய்திகள், ’ஸ்கூப்’ அடிக்கலாம். எனக்கோ இதெல்லாம் சற்றும் ஒத்தே வராது.
நாள்தோறும் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு, அதுதான் கமிஷனர் ஆஃபீசுக்கு செல்லவேண்டும். அங்கே செய்தியாளர்களுக்கென ஓர் அறை இருக்கும். நிறைய நாற்காலிகள், ஒரு சில டெலிபோன்கள். எல்லா இடங்களிலும் டெலி போனுக்கு அடிதடிதான், மொபைல் இல்லாததால்.
நான் அலட்டிக்கொள்ளவே மாட்டேன். என் பேப்பரில் என்ன பெரிய ‘கிரைம் நியூஸ்’ வாழுது என்ற அலட்சியம் வேறு…
பன்னிரண்டு மணி அளவில் அங்கு செல்வேன். எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஒரு மூலையில் அமர்ந்து ஏதாவது படிக்கத் தொடங்கி விடுவேன்.
எல்லோருடனும் நன்கு பழகுவேன். ஆணையரை சந்திப்பதென்றால் தலைமை தாங்குவேன். ஆங்கிலத்தில் யார் எது சொன்னாலும் அதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்வேன். ஏதாவது பெரிய கொலை கொள்ளை என்றால், என்னுடைய செய்திகள் சற்று விறுவிறுப்பாக இருக்கும். இந்தக் காரணங்களினால் பொதுவாகவே சக நிருபர்களுடன் நல்லுறவு இருந்தது. சபை கலையும் போது அவர்களே என்னை அழைத்து எல்லா விவரங்களையும் கொடுத்து விட்டுப்போவார்கள்.
ஆனாலும் செய்திகளைத் தவறவிடுவேன். செமத்தியாக வாங்கிக் கட்டுவேன்.
காலையில் கமிஷனர் அலுவலகம், மாலை ரோட்டரி, லயன்ஸ் என்று ஏதாவது ஒரு கிளப் அல்லது அமைச்சர் கலந்துகொள்ளும் ஒரு சடங்கு நிகழ்வு. அப்போதெல்லாம் நான் வசித்த பகுதிக்கு மவுண்ட் ரோட்டிலிருந்து ஒரிரு பஸ்கள்தான். நான் வீட்டிற்குப் போய்ச் சேர பத்து மணியாகிவிடும். அதற்குள் எங்கே என்ன நடக்கி றதோ என்ற கவலை என்னைத் தின்னும். ஆனால் எதிலிருந்தும் தப்பிக்கமுடியாது.
அப்போது நடந்த ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு நடிகை ஷோபாவின் ‘தற்கொலை’ எல்லோரைப் போல எனக்கும் சந்தேகம். சற்று கூடுதல் அக்கறை காட்டி விசாரித்து, விசாரணைக்குப் பொறுப்பான மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடமும் பேட்டியெடுத்து, ‘‘வழக்கை பொங்கல் செய்கின்றனர். அது கொலையாக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன” என செய்தி கொடுத்தேன், சம்பந்தம் ஓகே செய்தார். ஆனால் ஆசிரியர் குழுவில், ‘‘அய்யய்யோ இதெல்லாம் வேண்டாமப்பா. சிக்கல் வரும். அவதூறு வழக்குப் போடுவார்கள்” என்றெல்லாம் சொல்லி செய்தியை நிராகரித்துவிட்டனர்.
ஓராண்டு கிரைம் பீட் வதை. அப்புறம் என்னை உயர்நீதிமன்றத்துக்கு, ஹைகோர்ட் பீட்டிற்கு, மாற்றினார். அப்போது சம்பந்தம் எல்லோர் முன்னும் சொன்னார்:
“நீ ஏதோ பெரிய கொம்பன்னு நக்வி சொல்லிகிட்டிருந்தாரு. க்ரைம்ல இருந்தவன் சரியில்லைன்னாரு. நீ ஒண்ணும் கிழிக்கமுடியாது அதுலேன்னு எனக்குத் தெரியும். அதை ப்ரூவ் பண்ணத்தான் அங்கே அனுப்பிச்சேன். நான் சொன்னது சரின்னாயிருச்சில்ல இப்ப. முன்னால போயிகிட்டிருந்தானே அவனே ‘கவர்’ பண்ணட்டும் நீ கோர்ட்டுக்குப் போ” என்றார்.
இடையில் மண்டைக்காடு கலவரம். கிறிஸ்துவ மீனவர்களுக்கும் இந்து நாடார்களுக்கும் இடையே மோதல். அதிக சேதம் கிறிஸ்துதவர்களுக்குதான். கிளப்பிவிட்டது வழக்கம்போல் பரிவா ரத்தினர்தான். ஆனால் மீனவர்களும் தங்கள் பங்குக்கு அடிதடியில் இறங் கினர்.
ஜெயேந்திரர் ‘‘ஆஹா, இந்துக்களுக்கு ஆபத்து” என கண்ணீர்விட்டார். ஆனால் குன்றக்குடி அடிகளார் பொறுப்பாக நடந்து கொண்டு கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார். அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆயினும் நல்லிணக்கத்திற்காக குரல் கொடுத் தவர் என்பதை மறுக்க இயலாது.
அந்த கலவரப் பின்னணியை கண்டறிய அமைக்கப் பட்ட உண்மை அறியும் குழுவில் நானும் இருந்தேன். நானும் டிஎஸ்வி ஹரியும்தான் இறுதி அறிக்கையினை தயார் செய்தோம். அறிக்கை நீதிபதி வேணுகோபால் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தக் கால இண்டியன் எக்ஸ்பிரசில் செய்தியா ளர்கள் இப்படி ஆர்வலராக செயல்படமுடியும். அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அத்தகைய தொடர்புகள் மூலம் சிறப்புச் செய்திகள் கிடைக்குமே என ஊக்கப் படுத்துவார்கள். சம்பந்தத்திற்கு என்னைப் பிடிக்கா விட்டாலும் இதற்கெல்லாம் தடை சொல்லமாட்டார்.
பேசுவோம்…
நான் ஒரு அரசாங்க ஒப்புதல் மற்றும் சான்றிதழ் கடன் நிறுவனத்திடமிருந்து கடனளிப்பவர் ஆஸ்டின் பார்ரி. நீங்கள் தனிப்பட்ட அல்லது வணிக கடன் தேவைப்பட்டால், நீங்கள் தாளில் இருக்கிறீர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிதியுதவி தேவைப்படுகிறது. நாங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் 2% கடன் வழங்குகிறோம். கடன் தேவைக்காக, நாங்கள் முழுமையாக இங்கே இருக்கிறோம் மற்றும் உங்களுடைய நிதி பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் .. உங்களை மிரட்டுகிறீர்கள், ஏன் மவுனமாக இறந்து போகிறீர்கள்? உங்கள் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும். எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக (austinebarry50@gmail.com)
I see there is IOS App, but can’t find in IOS App Store, can anyone advise.
thanks
i see there is ios app, but can’t find in IOS app store. can anyone advise. thanks
Chistian meenavarkal anna jaathi?thoondi vittathu Hindu amsippinat enpatharku aathaaram?? Ethu venumnaalum vaanthi edukkalaamnu ahip poi vittathu.Hindus should record anti Hindu activities and post them in social media.this includes conversion mafia activities starting from every busstand
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தை அதிமுக துணை அமைப்பாக மாற்றுவதா: ராமதாஸ் கண்டனம்
By dn, சென்னை
First Published : 01 February 2016 11:43 AM IST
புகைப்படங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருந்த இடங்களை நிரப்பும் நோக்குடன் 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவர். அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தை அ.தி.மு.க.வின் துணை அமைப்பாக மாற்றும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை அரசு நியமித்துள்ளது. அவர்களில் இ.ஆ.ப. அதிகாரி இராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேரும் ஆளுங்கட்சி வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடை முறைகள் குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 316 ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு அ.தி.மு.க.வினர் இப்பதவிகளில் திணிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக் கப்படுபவர்களில் பாதி பேர், அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாளில் மத்திய அல்லது மாநில அரசு பணிகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தற்போதைய உறுப்பினர்கள் 3 பேரும் அரசு ஊழியர்களாக இருந்தவர்கள். இப்போது நியமிக்கப்பட்டுள்ள 11 பேரில் இராஜாராம் உள்ளிட்ட 4 பேர் அரசு பணிகளில் இருந்தவர்கள். இவர்களைச் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களில் பாதிப் பேர் அரசு ஊழியர்களாக இருப்பார்கள் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ள 7 இடங்களில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறது ஆட்சி மேலிடம். அதுமட்டுமின்றி, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களில் ஒருவர் கூட மகளிர் இல்லை. பெண்களுக்காக நடைபெறும் ஆட்சி என்று பெருமை பேசிக்கொள்ளும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும். இந்த பணிக்கு விருப்பு, வெறுப்பு இல்லாத, நெருப்புக்கு நிகரான நேர்மை கொண்டவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால், தங்களுக்கு துதி பாடுவோருக்கு பதவி வழங்குவதற்கான அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை மாற்றி அதன் பெருமையை அதிமுகவும், திமுகவும் சீரழித்து விட்டன.
புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இ.ஆ.ப. அதிகாரியான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளரான மு. இராஜாராம் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. உறுப்பினராவார். செய்தித்துறை செயலர் என்ற முறையில், ஊடக நிர்வாகங்களை கெஞ்சியும், சில நேரங்களில் மிஞ்சியும் ஊடகங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது தான் இவரது சாதனை. வெள்ளத்தின்போது வெளியில் வராத ஜெயலலிதாவை வாட்ஸ்&அப்பில் பேச வைத் ததும் இவர் தான். அரசுத்துறை செயலாளர் பணியை பார்த்தாரோ இல்லையோ, ஜெயா தொலைக்காட்சியின் ஊதியம் வாங்காத மனிதவளத்துறை மேலாளராக பணியாற்றி அந்நிறு வனத்திற்கு தேவையான செய்தியாளர்களை தேர்வு செய்யும் தொண்டூழியம் பார்த்தவர். இதன்மூலம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி பல கோடி ஊழல் செய்த இவர், இம்மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதால், இவரது விசுவாசத்துக்கு பரிசாக இப்பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கு முன் இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் இவரைப் போன்ற வர்கள் தான். காவல்துறை தலைமை இயக்குனராக இருந்தபோது காட்டிய விசுவாசத்திற்காக ஆர். நட்ராஜ் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிந்தவுடன் தன் னையே அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை நடத்திய அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகியான நவநீதகிருஷ்ணன் ஆணை யத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.
தகுதியும் நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப் படுவ தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது. லஞ்சம் கொடுத்து பணியில் சேர்பவர்களின் முதன்மை நோக்கம் லஞ்சம் வாங்குவதாகத் தான் இருக்கும் என்பதால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடும். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பதவிக்கு தகுதியான ஆட்களை பரிந்துரை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட சமூக ஆர்வலர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.