நீதியரசர்கள் ராஜ்ஜியம்
போலீசாரையும் குற்றவாளிகளையும் துரத்துவதிலிருந்து, நீதிமன்றங்களுக்கு நகர்ந்தது பெரும் நிம்மதியை, மகிழ்ச் சியை கொடுத்தது.
நீதித்துறை நிருபர்கள் பெரும்பாலான நேரத்தை உயர் நீதிமன்றத்தில் செலவிட வேண்டியிருக்கும். நாள் தோறும் தீர்ப்புகள், வழக்கு விசாரணை, மனு தாக்கல் என பலவற்றை தேட வேண்டியிருக்கும்.
அண்மைக் காலம் வரை சென்னை உயர் நீதி மன்றத் தில் ‘இந்து’ நாளேட்டின் நிருபரே கொடி கட்டி பறப்பார். அவர் வரவுக்காக அனைத்து நிருபர்களும் ஆவலுடன் காத்திருக்கவேண்டும். வந்த பிறகுதான் நிருபர்கள் ரூம் களைகட்டும். அவர் பின் னால் மற்றவர்கள் அணிவகுக்க வேண் டும். சில நேரங்களில், “இருங்கப்பா, நான் ஒரு சுத்து போயிட்டு வந்திடுறேன்” என்றும் சொல் லுவார்.
அவர் நீதிபதிகளின் உதவியாளர்களை சந்தித்து, விசாரித்து, முக்கியம் என்று சொல்லப்படும் அல் லது தனக்கு அப்படி தோன்றும் கேஸ் கட்டுகளை எடுத்து வருவார். முதலில் அவர் படித்துப் பார்ப்பார். செய்தியாக்கலாம் என்று தோன்றினால், அந்த கட்டிலிருந்து முக்கிய பகுதிகளை வாசிப்பார், மற்றவர்கள் குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அவரும் குறிப்பெடுத்து முடித்த பிறகு அவரே பொறுப்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேஸ் கட்டுகளை கொடுத்துவிட்டு வருவார்.
‘சரி, இன்றைக்கு இது போதும்’ என்றோ, ‘இன்றைக்கு எதுவுமே செய்தி இல்லை’ என்றோ கூட அவர் ஆலோசனையின் பேரில்தான் முடிவு எடுக்கப் படும்.
1983ம் ஆண்டில் வாசுதேவன் என்ற மூத்த இந்து நிருபர்தான் எங்கள் தலைவர். இனிமை யானவர், பொறுமையாக விளக்குவார் ஆனால் அவரை மீறி செயல்பட அனுமதிக்க மாட்டார். சில நாட்கள் நான் தனியே நீதிபதிகளின் உதவி யாளர்களை அணுகிப் பார்த்து மூக்குடை பட்டு வந்திருக்கிறேன். ‘‘வாசு சார் வரட்டுமே..” என்று இழுப்பார்கள்.
இந்த தொடரின் ஆரம்பத்தில், நீதிமன்றத்தில் இருந்து ஏன் சிறப்புச் செய்திகள் தரவில்லை என்று பணியின் இறுதிக்கால கட்டத்தில் விரட்டப்பட்டது பற்றி குறிப்பிட்டேன். இப்போது அப்பகுதியை நீங்கள் மீண்டும் படித்தால், மேலிடத்தில் வீற்றிருப்பவர்கள் எப்படியெல்லாம் யதார்த்தங்களுக்கு புறம்பாக சிந் திக்க முடியும், அதன் வழியே நம்மை அவமானப்படுத்த முடியும் என்பதைத்தான் அந்த குறிப்பிட்ட உரையாடல் மூலம் நான் சொல்ல வந்தேன் என்பது புரியும்.
அப்படிப்பட்ட சூழலில் தீர்ப்புகளை விவரமாக, வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுத முடிந்ததால் எனக்கும் மரியாதை கிடைத்தது. கடின மான பகுதிகளை எளிமைப்படுத்தி சற்று பரபரப் பாகவும் கொடுக்கக் கூடிய மொழித் திறனை வளர்த் துக்கொண்டேன்.
சில முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரும்போது நாம் நேரில் சென்று, பார்த்து, கேட்டு, குறிப்பெடுத்து செய்தியாக்க வேண்டியிருக்கும். நீதிபதி சத்யதேவ் என்று ஒருவர் இருந்தார். அண்மையில் ஓய்வு பெற்ற முற்போக்கு சிந்தனையாளர் சந்துரு அவரை தனது மானசீக குருவாக மதித்தார். சத்யதேவ் எளிமை மற்றும் நேர்மையின் சின்னம் என்றால் அது மிகை யாகாது.
அந்த நேரம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பில் ஒரு பிரச்னை. சட்டமன்றத்தில் முதல் வர் எம்ஜிஆர், ‘‘நீதிபதிகள் சரியில்லை, இவர்களே சிபாரிசுக்கு வருகிறார்கள், கண்டனமும் தெரிவிக்கின்றனர்” என்ற ரீதியில் பேசினார். மறுநாள் அந்த வழக்கு விசாரணையில் சத்யதேவ், ‘‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் உங்கள் முதல்வர்? அவர் யாரைச் சொல்கிறார்… வழக்கை இப்போது நான்தானே விசாரித்து வருகிறேன், என்னைத் தான் குறிப்பிடுகிறாரா?” என்று சீறினார்
சத்யதேவ் கூறியதை ஒரு வார்த்தை விடாமல், அதே நேரம் பின்னணியை எல்லாம் சேர்த்து செய்தி யாக்கினேன். ‘‘என்னைத்தான் சொல்கிறாரா எம்ஜிஆர் என நீதிபதி கேட்கிறார்” என்று தலைப்புச் செய்தியாக அது வெளியாக ஒரே பரபரப்பு. இந்து வழக்கம்போல் அடக்கியே வாசித்திருந்தது. எனவே அன்று எக்ஸ்பிரசுக்கு மவுசு.
அந்த கட்டத்தில்தான் நான் நீதிபதிகளின் டவாலி கள் செருப்பு அணியக்கூடாது என்று அறிந்தேன். சந்துரு மூலமாகத்தான். அதாவது அய்யா கூப்பிட்டால் உடனே உள்ளே ஓடவேண்டுமாம். ‘‘செருப்பை கழற்றிவிட்டல்லவா இறைவன் சன்னிதிக்கு செல்லவேண்டும், அதற்கு நேரமாகி விட்டால், அவனுக்கு கோபம் வந்துவிடுமே…” இப்படி ஒரு காரணம் சொன்னது நீதிபதி மோகன்! ஒவ்வொருத்தர் நியாயப்படுத்தினர். ஒவ்வொருத்தர் ‘‘எங்களுக்கு தெரியாதே..” என்றனர் கூசாமல். கடிந்து கட்டுரை எழுதினேன். வெளியானது.
ஆனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இன் னமும் வெள்ளித் தடி ஏந்திய, காலணி இல்லாத பணியாளர்களின் ‘‘உஷ்.. உஷ் பராக்”குடன் நீதியர சர்கள் ஊர்வலம் நம் ஜனநாயக நாட்டில் தொடரத் தான் செய்கிறது.
இப்படி சற்று வித்யாசமான செய்திகளை அளித்து எக்ஸ் பிரஸ் பக்கம் பலரை நான் திரும்ப வைத்தாலும், நீண்ட அனுபவத்தின் விளைவாய் உருவாகும் தொடர்புகள், அவற் றின் வழியே கிடைக்கும் சிறப்புச் செய்திகள் விஷயத்தில் நான் தோற்றுதான் போனேன்.
இந்து நாளேட்டின் வலிமையே அதன் நிருபர்கள் பல காலம் தொடர்ந்து ஒரே பீட்டில் பணியாற்றுவது தான். அவர்களில் பலர் ஒரே ஒரு குறிப்பிட்ட துறையிலேயே இறுதிவரை இயங்குவார்கள். அதன் விளைவாய் அபாரமான தொடர்புகள், அத்துறை சார்ந்த மெச்சத் தகுந்த அறிவு, புரிதல், இப்படி மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் வலம் வருவார்கள்.
அப்படி இயங்கும்போது அரசு இயந்திரத்துடன் நெருக்கம் ஏற்பட்டு இவர்களது ராஜ விசுவாசம் அள வுக்கு மீறிப்போய், சம்பந்தப்பட்டவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை தொடவே மாட்டார்கள். ஒரு சிலர் ஊழல் பேர்வழிகளாகி விசா ரணை எல்லாம் நடந்திருக்கிறது. அது வேறு கதை.
அனுபவம் மிக்க வாசுதேவனும் ஒருநாள் எங்கள் எல்லோரையும் திகைக்க வைத்துவிட்டார். எம் ஜி ஆர் அரசு தங்கள் டெலிஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக குற்றஞ்சாட்டி தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் கூடி அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் இயற்றி அனுப்பி இருப்பதாக இந்துவில் செய்தி வந்தது.
‘‘ஆஹா.. எவ்வளவு முக்கியமான செய்தி. நாம் கோட்டை விட்டு விட்டோமே..” என்று நொந்து கொண்டே அலுவலகத்துக்கு வந்தேன். சம்பந்தம் என்ன சொல்லப் போகிறாரோ என்ற அச்சம் வேறு. நல்லவேளையாக அவர் என்னை கடிந்துகொள்ள வில்லை. ‘‘இதெல்லாம் நடக்கிறதுதாம்பா, கவலைப் படாதே, சரி வா,” என்றவர் அதிசயமாக என்னை அழைத்துக்கொண்டு ஓரிரு நீதிபதிகளை சந்திக்கச் சென்றார். ஆனால் பெரிதாக ஒன்றும் தேறவில்லை.
இந்து ஏகபோகமெல்லாம் பின் நாளில் தகர்ந்தது. இப்போது டைம்ஸ் ஆஃப் இண்டியா மணி கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரும் முதலில் இந்துவில் பணியாற்றியவர்தான்.
நாம் மட்டுமே கொடுத்தது, கோட்டை விட்டது என்று அன்றாடம் பல நாளேடுகளில் முதல் வேலையாக ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இரண்டுமே நடக்கும், அதிகம் அலட்டிக்கொள்வதில் பயனில்லை என்பதை சம்பந்தம் அறிந்திருந்தார்.
அவர் அடிக்கடி சொல்வார், ‘‘எதிலும் ப்ரொஃ பெஷனலா இருக்கணும்பா, வேண்டியவன், வேண்டா தவன், கட்சி, கவர்ன்மென்ட் இதெல்லாம் பார்க்கவே கூடாது… செய்தியை செய்தியாத்தான் பார்க் கோணும்…”
அப்படித்தான் அவர் பொதுவாக நடந்துகொள்வார். ஆனால் அவரது கோபத்துக்கு ஆளாவோர் தொலைந் தார்கள்.
சில மாதங்கள் அவர் தலைமைப் பதவியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதையும் அதை முன்கூட்டியே நான் அறிந்து ஒரு சிலரிடம் பெருமை அடித்துக் கொண்டதையும் முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி என்னிடம் கதை கேட்ட சக ஜூனியர் நிருபர் ஒருவர்தான் எனக்கு வில்லனாக அமைந்தார். நான் சொல்லாததையெல்லாம் சேர்த்து சம்பந்தத்திடம் வத்தி வைத்துவிட்டார். ‘‘ஸ்வீட் எடு கொண்டாடு,” என்று நான் கூத்தாடியதாக பரப்பிவிட்டார்.
அந்த நாட்களில் நாள்தோறும் என்னிடம் ரகசியமாகப் பேசுவது போல நடித்து, மிகுந்த அக்கறை காண்பித்த அந்தப் பையனை நண்பன் என நினைத்து உளறியதற்கு நல்ல பரிசு. ஒரு நாள் அலுவலகத்துக்குள் நுழையும்போது ஒரு மூலையில் நின்றுகொண்டு அவர் சம்பந்தத்திடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றேன். அதன் பிறகு அவரிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன்.
ஆனாலும் என்ன, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ் காரம். சம்பந்தம் என்னை இறுதிவரை மன்னிக்கவே இல்லை. அவர் பதவி இழந்தபோது நான் லட்டு கொடுத்ததாக அவரது தர்பார் ஆசாமிகள் நேரடி யாகவே என்னைக் குற்றம் சாட்டி என்னை நோகச் செய்வார்கள்.
ஒவ்வொரு சமயம் மனம் இளகுவார். அந்த நீதிபதி கள் செய்தியின்போது என்னை அழைத்துச் சென்று சமாதானப் படுத்தியதுபோல. ஆனால் அலுவலகத்தில் தீண்டத் தகாதவனாகவே இருந்தேன்.
பேசுவோம்
அருமையான அனுபவங்கள். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இன்னும் நிறைய எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.
Well written . Looking forward to more such articles .
இன் னமும் வெள்ளித் தடி ஏந்திய, காலணி இல்லாத பணியாளர்களின் ‘‘உஷ்.. உஷ் பராக்”குடன் நீதியர சர்கள் ஊர்வலம் நம் ஜனநாயக நாட்டில் தொடரத் தான் செய்கிறது. – this says clear and loud…
Welcome after a deep slumber. Hope this hibernation is not regular. I wish Savukku to be back like in 2013 & 2014. What happened to you in 2015 & after? Are you fed up with the centre & state administration or in political scenario prevailing over there?
இம்புட்டுநாள் வேணுமாசாமி இந்த 18ம் கோடு தாண்ட. ஊரெல்லாம் தீ பிடிச்சு எரியுது. அங்க ஒன்னுமே இல்லையா?.