தமிழகத்தின் தேர்தல் களம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே அனல் பறக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகும். குறிப்பாக தேர்தல் தேதியை ஒட்டி விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகும். ஆனால், திமுகவின் “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” விளம்பரங்கள் அனைத்து நாளிழ்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விளம்பரங்களின் தாக்கத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதிமுக இதற்கு ஆற்றும் எதிர்வினையை விட, மக்கள் நலக்கூட்டணியின் எதிர்வினை அதிகமாக உள்ளது. விளம்பரங்களை கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிடுகிறார். அதிமுக தரப்பு ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களில் திமுக விளம்பரங்களுக்கு எதிரான பல்வறு மீம்ஸ்களை உருவாக்கி உலவ விட்டாலும், அதிமுக தலைமையிடமிருந்து இந்த விளம்பரங்களுக்கென்று உருப்படியான பதிலடி இது வரை வரவில்லை.
திமுக ஏன் இத்தனை அவசரமாக விளம்பரங்களை வெளியிடுவது, இத்தேர்தலை வாழ்வா சாவா போராட்டமாக திமுக பார்க்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. பல கோடி ரூபாய் செலவாகும் இந்த விளம்பரங்களை தேர்தலுக்கு பல நாட்கள் முன்னதாகவே வெளியிடுவதன் மூலமாக, தேர்தல் பிரச்சாரத்தில் இதர கட்சிகளை விட திமுக முன்னணியில் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே. தேர்தல் களத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவதில் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவே கருத வேண்டும்.
இவ்வாறு தேர்தல் களம் பரபரப்பாகி இருந்தாலும் கூட கூட்டணிகள் முழுமையடையாத காரணத்தால், தற்போது ஒரு தெளிவில்லாத சூழலே உள்ளது. அதிமுக பிஜேபி சேருமா ? அதிமுகவோடு வேறு எந்த கட்சிகள் சேரும் ? மக்கள் நலக் கூட்டணி உறுதியாக இருக்குமா என்பது போன்ற கேள்விகளை விட, அதிகபட்சமாக மக்களிடையே விவாதிக்கப்படும் கேள்வி, விஜயகாந்த் எந்தப் பக்கம் செல்வார் என்பதே. விஜயகாந்த் திமுகவோடு செல்வாரா ? பிஜேபியோடு செல்வாரா என்பதே தற்போது பரபரப்பாக அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது.
2005ல் தேமுதிக தொடங்கப்பட்டபோது இரு திராவிடக் கட்சிகளுக்கும் தன்னை ஒரு மாற்றாக அறிவித்தார் விஜயகாந்த். இரண்டு திராவிடக் கட்சிகளையும் மாறி மாறி அரியணையில் ஏற்றிய மக்கள், விஜயகாந்தை ஒரு புதிய சக்தியாகவே பார்த்தனர். அதன் வெளிப்பாடே, கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் விஜயகாந்த் 2006 பொதுத் தேர்தலில் பெற்ற 10 சதவிகித வாக்கு. திராவிடக் கட்சிகளின் செல்வாக்கையும் மீறி, பணபலத்தையும் மீறி, 10 சதவிகித வாக்குகளைப் பெற்று, அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தினார் விஜயகாந்த். 2009 பாராளுமன்றத் தேர்தலிலும் 10.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது தேமுதிக.
இந்த வாக்கு சதவிகிதமே, யாருக்காகவும் காத்திராத ஜெயலலிதாவை விஜயகாந்துக்காக 2011 பொதுத் தேர்தலில் காத்திருக்க வைத்தது. விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்த ஜெயலலிதா, யாரும் எதிர்பாராத வகையில் 41 சீட்டுகளை தேமுதிகவுக்கு அளித்தார். அந்த 41 சீட்டுகளில் 29ல் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது தேமுதிக. தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளி, தேமுதிக 2011ல் பெற்ற வெற்றி பிரம்மாண்டமான வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
சட்டப்பேரவையில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் செயல்படுவார் என்று எதிர்ப்பார்த்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அதிமுக பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே உறவு முறிந்தது. பிப்ரவரி 2012ல் சட்டப்பேரவையில் விஜயகாந்த் நாக்கை துருத்திக் கொண்டு சண்டைக்குப் போக, அத்தோடு அவர் சட்டசபை விஜயமும் நிறைவுக்கு வந்தது. அதன் பின், தேமுதிக உறுப்பினர்கள் யாராவது சபையில் உருப்படியாக விவாதம் நடத்தினார்களா என்றால், வெளிநடப்பைத் தவிர அவர்கள் வேறு எதுவும் செய்யாத வகையில், அதிமுக சபாநாயகர் பார்த்துக் கொண்டார்.
அவ்வப்போது அறிக்கை வெளியிடுவது, அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவது என்பதைத் தவிர்த்து, கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் உருப்படியாக எந்தப் பணியையும் செய்யவில்லை என்பதே உண்மை.
எதிர்க்கட்சித் தலைவராகத்தான் செயல்படவில்லை, ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளாரா என்றால், பொதுவெளியில் அவரின் நடத்தைகள், தமிழகம் சந்தித்திராத ஒரு கேவலமான தலைவராக அவர் உருவாகியிருப்பதையே காட்டுகிறது. பொது வெளியில் வேட்பாளர்களை அடிப்பது. பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டுவது. அனைத்துக் கட்சித் தலைவர்களோடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகையில், “தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” என்று மைக்கை தூக்கி பத்திரிக்கையாளர்களை அடிக்க ஓடுவது. விமான நிலையத்தில் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை ஏக வசனத்தில் திட்டுவது. பத்திரிக்கையாளர்களைப் பார்த்து துப்புவது என்று எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் ஒரு காலத்திலும் செய்யாத கேவலமான நடவடிக்கைகளில் விஜயகாந்த் ஈடுபட்டார்.
இந்த கேவலமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், “கேப்டன் என்ன பேசினாலும் அதுதான் ட்ரெண்ட். கேப்டன் தூக்கி அடிச்சுடுவேன்னு சொன்னா அதுதான் ட்ரெண்ட். கேப்டன் தூ ன்னு துப்புனா அதுதான் ட்ரெண்டு” என்று இதையெல்லாம் புகழ்ந்து பேசுகிறார் அவர் மனைவி பிரேமலதா.
சரி. நடவடிக்கைகள்தான் சரியில்லை. கேப்டன் சிறந்த பேச்சாளரா என்றால், அதுவும் கிடையாது. அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே புரிகிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால், சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்வதே அவருக்கு வாடிக்கை. சமீபத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசியது குறித்து கொஞ்சம் சேம்பிள் பார்ப்போம்.
” நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… டக்கு, டங்கு… டக்கு, டங்கு… டக்குன்னு ஒவ்வொருத்தரும் கொட்டு அடிச்சிகிட்டிருந்தீங்களே. அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திச்சு. அவங்கல்லாம் என்னை விட்டுருப்பீங்களா? நீங்களும் டங்கு… டக்கு… டங்கு… டக்குன்னு, நானும் உங்களோட சேர்ந்து ஆடிக்கிட்டுதான் வந்திருப்பேன். ஆடிகிட்டு இவ்வளவு தூரமா வந்துகிட்டு இருக்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துகிட்டு இருக்கணும். என்ன பண்றது?
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்… என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லி வளர்க்கறதுதானே? பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான். அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு… சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கறதுல, என்னை ஒருத்தரும் சொல்லல. எனக்குக் குடும்பமே உலகம். நான் வாழ்ந்து பணம் சம்பாதிக்கணும்ங்கறதுல எனக்கு ஆசையே கிடையாது. என் ரெண்டு பசங்களும் என்னைக் கண்ணுலயே வச்சு என்னைக் காப்பாத்துவாங்களே. என் பொண்டாட்டி கவலைப்பட. நானும் என்மனைவியும், இவ்வளவு கூட்டம் இருக்கே, ஒரு நேரம் நீங்க சோறு… எனக்கு ரொம்ப வேணாம். கொஞ்சம் பழைய சோறும், ஒரு வெங்காயத்தையும் நான் கடிச்சிகிட்டு, நானும் பிரேமலதாவும் போய்கிட்டே இருந்தா போட மாட்டீங்களா சாப்பாடு.
நத்தம்… நத்தம் சொல்ல முடியுமா? நீ வந்து எங்களை ஜீரோங்கற. ஆண்ணா அப்படிங்கறதுதான் ஏன் வாயில வருது. ஏன்யான்னு மந்திரி வயசுல அதிகமா இருந்தாலும், என்னைவிட வயசுல அதிகமா இருந்தவர் சொன்னாரு. ஜீரோ சட்டசபைங்கறதால நீங்க தப்பிச்சீங்க. நான் போயிருந்தா நிகழ்ச்சியில, யாரு ஜீரோ? உங்க அம்மா ஜீரோவா? நீ ஜீரோவா? உங்க தலைவி ஜீரோவான்னு நான் கேட்டிருப்பேன். நான் சட்டசபைக்குப் போகல. போயிருந்தா என்னுடைய கேள்வி வேறமாதிரி இருக்கும். நீதான் ஜீரோ. 2004 தேர்தல்ல 40 சீட்டுல தி.மு.க வந்துச்சே. அப்ப நீங்கதான் ஜீரோ. யாரை ஜீரோன்னு எங்களைப் பார்த்து ஜீரோங்கறீங்க. போனதடவை 13 இடைத்தேர்தல்ல நீங்க தோத்தீங்களே அது ஜீரோ. உங்ககிட்ட இருப்பது ஜீரோ பன்னீர்செல்வம்தான். அதே ஜீரோ பன்னீர் செல்வம் இருக்குற வரைக்கும் இந்த நாடும் உருப்படாது. அந்தக் கட்சியும் உருப்படாது. ஏனென்றால் சைபர் ஓ.பன்னீர்செல்வம். ஓ என்பது என்ன? சைபர் என்பது என்ன? ஜீரோ என்பதுதான் சைபர். ‘ஓ’ங்கறது நாம என்ன சொல்வோம்? என்னடா இப்படி போட்டா… முட்டைய வாங்கி வந்திருக்குறன்னு சொல்வோம் இல்லை. கோழி முட்டையிலும் இவங்க லஞ்சம் வாங்கி இருக்காங்க. கொள்ளையடிக்கணும்னா கொள்ளையடி! மக்களைத் திருத்தணும்ங்கண்ணே!”
இது அவர் பேசிய முழுப் பேச்சின் ஒரு பகுதிதான். முழுமையாக படித்தால் தலை சுற்றும்.
பேச்சாற்றலும் கிடையாது. பொதுவெளியில் நாகரீகமான நடத்தை கிடையாது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஏக வசனத்தில் திட்டுவது, அடிப்பது. இப்படி எந்தத் தகுதியுமே இல்லாத ஒரு நபர் எப்படி இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு அழைத்துக் கெஞ்சும் அளவுக்கான ஒரு தலைவரானார் ? அதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்கிறார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
“திமுக மற்றும் அதிமுக மாற்றப்பட வேண்டும். அகற்றப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்திருக்கும் கட்சி திமுக அதிமுகவை விட மோசமாக இருக்கிறது. அதிமுகவைக் கூட சகித்துக் கொள்வேன். மீண்டும் ஒரு முறை அதிமுக ஆட்சி வருவதைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் தேமுதிக ஆட்சியைப் பிடிப்பதை என்னால் ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது.
ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, மனைவி, மைத்துனர் என்று குடும்பத்தை வைத்து கட்சி நடத்துகிறார் விஜயகாந்த். கட்சியில் அனைத்து முடிவுகளையும், மனைவி மற்றும் மைத்துனரைக் கேட்டே எடுக்கிறார். இப்படி குடும்ப கட்சி நடத்தும் ஒருவர், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
கட்சி தொடங்கியே பத்து ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் கட்சியையும் தொண்டர்களையும் வைத்து பல கோடிகளை சம்பாதித்து விட வேண்டும் என்று விஜயகாந்த் மனைவியும் மைத்துனரும் திட்டமிடுகிறார்கள். பத்து சதவிகித வாக்கு வங்கி உள்ளது என்பதை வைத்தே பல்வேறு பேரங்களை விஜயகாந்த் நடத்தி வந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அவரது வாக்கு வங்கி கடுமையாக சரிந்து வெறும் ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளதை உணர்த்துகிறது. இந்த ஐந்து சதவிகித வாக்கு வங்கியை வைத்துக் கொண்டுதான் விஜயகாந்த், திமுகவிடம் துணை முதல்வர் பதவியை கேட்டு பேரம் நடத்திக் கொண்டு வருகிறார்.
பிஜேபி தரப்பில் பேசும்போது, தன் மனைவி பிரமேலதாவை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்கிறார். தமிழக மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் செழிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர விஜயகாந்துக்கு எந்த நோக்கமும் இல்லை. அடிப்படை நாகரீகம் கூட இல்லாத ஒரு அறுவெறுக்கத்தக்க அரசியல் தலைவராகவே விஜயகாந்த் உருவாகி உள்ளார். தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய ஜந்து ஒன்று உண்டென்றால் அது விஜயகாந்த்தான்” என்றார்.
திமுகவோடு நடக்கும் கூட்டணி பேரங்களில் மிக மிக அதிகமான கோரிக்கைகளை தேமுதிக தரப்பு வைத்து வருகிறது என்றே தகவல்கள் வருகின்றன. 77 சீட்டுகள். இரண்டு அமைச்சர் பதவி. 400 கோடி தேர்தல் செலவு என்பதுதான் இறுதியாக தேமுதிக தரப்பில் இருந்து திமுகவுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அது எங்களால்தான். அப்படி இருக்கையில் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று பிரேமலதா கூறியது திமுக தலைமையையும் எட்டியுள்ளது. எரிச்சலடைந்த கருணாநிதி, தேமுதிகவை இப்போதைக்கு அணுக வேண்டாம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
1949ல் தொடங்கப்பட்ட திமுக இன்றும் தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாகவே உள்ளது. அதிமுக அரசை அப்புறப்படுத்தும் வலிமை திமுகவுக்கு நிச்சயமாக உள்ளது. 2006 ஆட்சி காலத்தில் திமுக செய்த தவறுகள் இன்னமும் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இதை விட கடுமையான தவறுகளை 1991 மற்றும் 2001ல் இழைத்த ஜெயலலிதாவை மக்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கின்றனர். தேமுதிக கூட்டணிக்கு வந்தால், அது கூடுதல் பலமாக இருக்கும் என்பது உண்மைதான் என்பதற்காக, தேமுதிகவின் அநியாயமான கோரிக்கைகளை திமுக ஏற்றுக் கொள்ளாது என்றே தெரிகிறது.
அரசியலையே ஆக்சிஜனாக சுவாசித்து வரும் கருணாநிதிக்கு நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான விஜயகாந்தை எப்படிக் கையாள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.
திமுக கூட்டணிக்கு செல்லாமல், பிஜேபியுடன் விஜயகாந்த் இத்தேர்தலை சந்திப்பாரேயென்றால், மிக மிக கடுமையான நெருக்கடிக்கு அவரும் அவர் கட்சியும் உள்ளாகும் என்பதில் எவ்விதமான சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தலுக்காக விஜயகாந்தை வழி மேல் விழி வைத்து அழைக்கும் கட்சிகள், இத்தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து அவர் கட்சி படுதோல்வி அடைந்து, தற்போது உள்ள 5 சதவிகித வாக்கு வங்கியும் குறைந்து அது 3 சதவிகிதமாக ஆனால், அடுத்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும், விஜயகாந்தை சீண்டிப் பார்க்கக் கூட ஆளிருக்காது என்பதுதான் உண்மை. இரண்டு திராவிடக் கட்சிகளையும் அவர் ஏகத்துக்கு கடுப்பேற்றி வைத்திருப்பதனால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர் கட்சியை நிர்மூலமாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
2011 ஆட்சி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே அதிமுகவோடு மோதல் ஏற்பட்டதால், தேமுதிக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட தாங்கள் தேர்தலில் செய்த செலவைக் கூட மீட்டெடுக்க முடியாமல் தவித்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் சம்பாதிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அவர்கள் கட்சி தாவுவதைத் தவிர வேறு வழியே கிடையாது. இந்த காரணத்தினால்தான், தேமுதிகவில் இருந்து 10 எம்எல்ஏக்கள், அதிமுக பக்கம் தாவினார்கள்.
பிஜேபியுடன் கூட்டணி என்ற நிலை ஏற்பட்டால், தேமுதிகவில் போட்டியிடுபவர்கள் கூட செலவழிக்கத் தயங்குவார்கள். பிஜேபி தரும் கணிசமான தொகையை தன் மனைவி மற்றும் மைத்துனரோடு பங்கிட்டுக் கொள்ளும் விஜயகாந்த், நிச்சயமாக தனது தொண்டர்களுக்கு அத்தொகையை பிரித்துத் தரப்போவதில்லை என்பது உறுதி.
அதிமுக பிஜேபி கூட்டணி என்று ஒரு பக்கம் பேச்சு அடிபட்டு வருகிறது. அப்படி ஒரு வேளை இந்தக் கூட்டணி அமைந்து விட்டால், விஜயகாந்தின் நிலை நடுத்தெரு நாராயணாதான்.
மனைவி மற்றும் மைத்துனரோடு நடுத்தெருவில் நிற்கப்போகிறாரா, அல்லது சமயோசிதமான முடிவை எடுத்து, தன் அரசியல் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.
அது வரை, கூட்டணி குறித்த பரபரப்பான விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அது வரை இந்த நாடகங்களை ஆனந்தமாக ரசிப்போம்.
That’s not even 10 mientus well spent!
if you look at the educated stupid guys, will support the 3rd rated government because it is avaal government. They will not talk about running the government in the name of thanthai periyar and do exactly opposite to the preaching of thanthai periyar. No development, no infrastructure, no fdi, high price rise, increased deficit, doubled loans, no governance, deteriorated law and order, increased organisational corruption etc etc. One good news to bring Tamil Nadu to the first place in corruption for starting business. Kick the bitch out of Tamil Nadu before further deterioration is all aspects
விஜயகாந்தின் குழப்பவாத அரசியல் காலத்தின் கட்டாயம்!
DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு
இங்க கமெண்ட் பண்ணி இருக்க பாதி கூமுட்டைகள பாத்தா தமிழ்நாடு ஏன் வெளங்காம இருக்குன்னு புரிஞ்சுருது…
//2006 ஆட்சி காலத்தில் திமுக செய்த தவறுகள் இன்னமும் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இதை விட கடுமையான தவறுகளை 1991 மற்றும் 2001ல் இழைத்த ஜெயலலிதாவை மக்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கின்றனர்.// மேற்கண்ட வரிகளில் திமுக செய்த தவறுகளை விட ‘கடுமையான தவறுகள்’ ஜெ செய்ததாக கூறும் நீங்கள் அவற்றையும் பட்டியலிட்டிருக்கலாமே! பண்பட்ட அரசியல் தலைவரான கருணாநிதி தனது 86ஆவது வயதில் 2Gக்கு மாற்றாகப் பல லட்சம் மக்களை ‘இலங்கை’ப் போரில் காவு கொடுத்ததை விடவா? போரில் காயம்பட்ட அப்பாவிகளுக்கு உயிகாக்கும் இரத்தம், மருந்து போன்றவை சென்று சேராமல் ஏவல்துறையை வைத்துத் தடுத்ததை விடவா? இதில் எதை விட? தங்களுக்குத் தெரியாத கருணாநிதியின் துரோகங்கள் ஏதுமில்லை. அவற்றை நீங்கள் மன்னிக்கலாம், மக்களும் மன்னித்துவிடுவார்கள் என்று பகல் கனவு கருணாநிதியுடன் சேர்ந்து காணலாம். ஆனால், உண்மை வேறுமாதிரியாக உள்ளது தோழரே!
அருமையான கட்டுரை ! அவசியமானதும் கூட ! சங்கர் , நீங்களாவது விஜயகாந்தின் நிலைமையை எழுத்தில் படம்போட்டு காட்டுகிறீர்கள். இந்த கட்டுரை முற்றும் முழுவதும் உண்மை. மரியாதைக்குரிய விஜயகாந்த் அவர்கள் ஒரு கவுன்சிலர் பதவிக்குகூட லாயக்கு இல்லை என்பது தெள்ள தெளிவாக கூறிவிட்டீர்கள். இவரை நம்பும் மக்கள் தான் பாவம் … இவர் அரசியலுக்கு ஏற்றவர் இல்லை என்று தெரிந்தும், ஆஹா ஓகோனு புகழ்பவர்கள் அவரையும், தமிழ்நாட்டையும் குட்டிசுராக்க முயற்சி செய்யும் சமூக விரோதிகள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
##மரியாதைக்குரிய விஜயகாந்த் அவர்கள் ஒரு கவுன்சிலர் பதவிக்குகூட லாயக்கு இல்லை என்பது தெள்ள தெளிவாக கூறிவிட்டீர்கள்.##நூழலிம் தன் வாயற் கெடும்.சவுக்கு விதிவிலக்கல்ல.இன்று அவர் நடடுத்தெரு நாராயணன் அல்ல,மூன்றவது அணியின் முதவன்.
பாவம் இந்த சவுக்கு தளம் நடத்தும் கோமாளிகள் விஜயகாந்த் பிஜேபி பக்கம் சென்று விட்டால் திமுகவிற்கு மூன்றாவது இடம் தான் என்பதால் அழுது ஒப்பாரி வைக்கிறார்கள் உங்களுக்கு கச்சேரி மே மாதத்திற்கு பிறகு இருக்கிறது அதுவரை உளறி கொள்ளுங்கள்
Dear Savukku
This article – substance has already featured in thatstamil – oneindia website in different parts but with the same message. It is surprising and shocking to observe that Mr.Shankar – Founder of Savukku who has been a leader and legend in investigative journalism and has been pouring neutral thoughts, making people think, collaborative thought process along with journalists, people, political predictive thinking has been lacking the professional genuineness for the past few months and has only been able to publish borrowed thoughts and substance. IF IT WAS ORIGINAL MR.SHANKAR, he would have categorically and clearly stated which front should be positioned , leaving alone the result and the vote of the people. In today’s scenario PWF and communist combo is a good combo as communist votebank is always in tact with vaiko having close to decimal and thiruma having substantial votebank in some pockets. There is one more faction claiming to be a party called PMK making huge news an noise thinking that it is a presidential election of United States of America on a high platform campaign with a tainted CM candidate Mr.Anbumani and a violent thinker Dr.Ramadoss.
Mr.Savukku, as always a close reader of your thoughts, want you to be original like pre 2011 and publish article on neutrality and publish on the desk than biased towards DMK or ADMK or for that matter any party.
what about Naam Thamizhar Katchi? It is worth doing an article..
what about Naam Thamizhar Katchi? It is worth doing an article..
no
I strongly believe tn people want change. Dmdk + tmc + makkal nala koottani will get huge vote from public. Dmk will be pushed to 3rd position. Contest is between pwf and admk. Savukku does not like that. Thats why started blaming other parties.
Either admk or pwf will win this time.
Savukku and tamilaruvimanian should shut their ass holes and allow people to make change. Savukku being operated by dmk, tamilaruvimanian being operated by admk. Both intensionally degrading vijayakanth.
Fell out of bed feeling down. This has brhegtined my day!
I agree with Deb, you design so well, you are a huge talent. I love it all.I received your package today, but I won't open until Christmas!Love and hugs,xoxo
He is having caste vote .with dmk admk alliance no party has grown in tn in 50 yrs.arasiyal oxygen…lol..then why mk for zero in parl elections?
இந்த கட்டுரை உண்மையிலேயே சவுக்கு எழுதியது தானா…? சந்தேகமாக இருக்கிறது….?
Once upon a time, when Savukku was doing good by providing good articles about all the Politicians. Now a days it act like SUN TV and JAYA TV.
Savuuku your news is false. He have dilemma to join hand with DMK. He know very well about karuna . if DMK win, DMK will try to destroy vijayakkanth at the same time he could not go with other alliance because people will not vote for that alliance. He knows this election is very important to him.
Vijayakanth &dmk kudadha Kutani
Yet another neutral post. It’s your duty to criticize the ruling party. it’s your duty to express your opinion in public. Keep going Savukku.
//அதிமுக பிஜேபி கூட்டணி என்று ஒரு பக்கம் பேச்சு அடிபட்டு வருகிறது. அப்படி ஒரு வேளை இந்தக் கூட்டணி அமைந்து விட்டால், விஜயகாந்தின் நிலை நடுத்தெரு நாராயணாதான்.//
சவுக்கு விரும்புகிறபடி விஜயகாந்த் கட்டுமரம் கட்சியுடன் இணைவாராக இருந்தால் தற்போதைக்கு சில எம் எல் ஏ பதவிகள் கிடைக்கலாம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அவரது அரசியல் இத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.
தாத்தாவுக்கு ஆயுட்காலம் இன்னும் நான்கு மூன்று வருடங்கள் இருக்கிறது அதற்கிடையில் கப்ரனை பிதாமகன் விக்ரம் ரேஞ்சில் பார்க்கலாம்.
ஆனானப்பட்ட வைகோவே இன்றைக்கு கட்டுமரத்தின் சூனியத்தால் ஒரு அரசியல் அனாதையாகத்தான் இருக்கிறார் காலம் அவருக்கு “மக்கள்நல கூட்டணி” என்ற ஒரு வெளியை திறந்துவிட்டிருக்கிறது விஜயகாந்துக்கு அப்படி ஒரு சந்தற்பம் எல்லாம் கிடைக்கப்போவதில்லை.
2016 அவருக்கு பேரம்பேசும் கடைசி தேர்தலாக அமையும். வரும்காலங்களில் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
2011 ஆட்சி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே அதிமுகவோடு மோதல் ஏற்பட்டதால், தேமுதிக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட தாங்கள் தேர்தலில் செய்த செலவைக் கூட மீட்டெடுக்க முடியாமல் தவித்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் சம்பாதிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அவர்கள் கட்சி தாவுவதைத் தவிர வேறு வழியே கிடையாது. இந்த காரணத்தினால்தான், தேமுதிகவில் இருந்து 10 எம்எல்ஏக்கள், அதிமுக பக்கம் தாவினார்கள். அப்ப நீங்களும் காசு வாங்கி னு வேலை யை செய்னு சொல்றீங்க சங்கர் அவர்களே
சங்கர் அவர்களே உங்கUதிவு எல்லா ம் படிப்பேன் இந்த பதிவு கேப்டன் அவர்களை இழிவு படுத்துவதாக உள்ளது கேப்டன் தூ என்று துப்பிய விவகாரம் அனைத்து சமூக வலைதளங்களும் சரி என்றே உரியது 99.9% நீர் மட்டும் தவறு என்று சொல் சிறீர்கள் நீயும் ஒரு பத்ரிக்கையாளர் தானே
ஆளும் கட்சிக்கு எதிராக எழுதி பணம் சம்பாதிக்கும் கலையை கற்று தேர்ந்து விட்டீர்கள். இந்த கட்டுரையை படிக்கும்போது இதே சவுக்கு சங்கர் ஐந்து வருடம் முன்ன்னர் திமுகவை விமர்சித்து எழுதியது நினைவுக்கு வருகிறது. ஊடகங்கள் அரசு என்ற குதிரைக்கு கடிவாளமாக செயல்படாமல் அவர்களுக்கு விளக்கு பிடித்து மக்களை மறந்து விட்டார்கள். கொடுமையப்பா கொடுமை.
என்னடா பரபரப்பான அரசியல் களத்தில் நம்ம சவுக்கு சவுண்டு இல்லாமல் இருக்கேனு.வரவு நல்வரவாகுக.இன்னும் அதிகமாக எதிர் பார்க்கிறோம்..
” தமிழக மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் செழிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர விஜயகாந்துக்கு எந்த நோக்கமும் இல்லை.”
அப்ப மத்தவன் எல்லாம் உன் குடும்பத்த செழிப்பு அக்கி னர்கள?
“பேச்சாற்றலும் கிடையாது. பொதுவெளியில் நாகரீகமான நடத்தை கிடையாது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஏக வசனத்தில் திட்டுவது, அடிப்பது. இப்படி எந்தத் தகுதியுமே இல்லாத ஒரு நபர் எப்படி இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு அழைத்துக் கெஞ்சும் அளவுக்கான ஒரு தலைவரானார் ?”
பேச்சு ஆற்றல் இருந்த நாய்கால் தான் தமிழகத்தை இந்த கதிக்கு ஆள் ஆக்கி இருகிறர்கள். நீ தலைல் தூக்கி வைத்து ஆடும் கருநாய் என்ன கிழித்தது?
How to behave outside, VK does not know… people who supports him also does not have anything… best example is Mahendran.. 🙂
“சூடுபிடிக்கும் தேர்தல் களம் : குட்டையைக் குழப்பும் கேப்டன்.”
ஏன்டா மாமா சங்கரு, இதுவே கருநாய் செஞ்ச ராஜதந்திரம் , எங்க கேப்டன் செஞ்ச வேரே.
you sold yourself to DMK nu nalla theriyuthu..
“அரசியலையே ஆக்சிஜனாக சுவாசித்து வரும் கருணாநிதிக்கு நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான விஜயகாந்தை எப்படிக் கையாள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.”
“மனைவி மற்றும் மைத்துனரோடு நடுத்தெருவில் நிற்கப்போகிறாரா, அல்லது சமயோசிதமான முடிவை எடுத்து, தன் அரசியல் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.”
ஷங்கர் திமுக விற்கு மாமா வேலை பார்க்க ஆரம்பித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.
Rather exposing corrupt people, savukku nowadays trying too hard to bring dmk to power by writing a useless article with no prima face. Savukku don’t think people are fools to believe all your words.
You lost your credibility already by writing a sombu article for Stalin. You try to diminish vijayakanth’s popularity by projecting him as a bargainer. This is what all so called neutral people like you, tamilaruvimanian etc does. In real you people don’t want any other party to grow. If some one grows, you will blame by writing immoral articles. Go away!!
அவரு என்ன பேசறாருன்னு அவருக்கும் புரியலே!மத்தவங்களுக்கும் புரியலே.
தி மு க அவர கூப்பிடவே கூடாது.அவரா வந்தா வரட்டும் என்று விட்டுவிடவேண்டும்!காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்னு (அந்தாளு,மனைவி,மச்சான்)போகவேண்டியதுதான்.அந்தம்மா
என்னமோ அரசியலையே கரைச்சி குடிச்சா மாதிரி பேசுறாங்க.
Savukku will be always supporting too much for DMK. You should have changed savukku to DMK site.