நக்கீரனில் இணை ஆசிரியராக பணி புரிந்த காரணத்தால், தன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது என்று நக்கீரன் இதழின் முன்னாள் இணை ஆசிரியர் காமராஜ் சென்னை நீதிமன்றம் ஒன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
2ஜி வழக்கின் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ, பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் 2010ல் சோதனைகள் நடத்தியது. நக்கீரனின் இணை ஆசிரியராக பணி புரிந்த காமராஜின் பெசன்ட் நகர் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. காமராஜின் நெருங்கிய நண்பரான போலிப் பாதிரி ஜெகத் கஸ்பரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
2ஜி வழக்கின் முக்கிய கதாநாயகனான ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் காமராஜ். ஆ.ராசா மத்திய அமைச்சரான பிறகு இவர்களது நெருக்கம் அதிகரித்தது. ஆ.ராசாவின் பினாமியான காலஞ்சென்ற சாதிக் பாட்சாவும் பெரம்பலூரைச் சேர்ந்தவரே. இவர்கள் மூவர் கூட்டணி இணைந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். இந்த தொழில் கூட்டணியின் ஒரு பகுதியாகவே காமராஜ் ஐந்திரம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற கட்டுமானத் தொழில் நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். 2ஜியில் வந்த ஊழல் பணம், காமராஜ் மூலமாகவும் முதலீடு செய்யப்பட்டது.
டிசம்பர் 2010ல் காமராஜ் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டது பத்திரிக்கை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் வீட்டில் நடந்த சோதனை தேசிய அளவில் பெரும் செய்தியாகியது. கொல்கத்தாவைச் சேர்ந்த டெலிகிராப், டெல்லியின் இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தேசிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. இது போலவே, சென்னையைச் சேர்ந்த என்டிடிவி இந்து செய்தி சேனலும் இந்த சோதனைகள் குறித்து செய்தி வெளியிட்டது.
காமராஜ் வீட்டில் நடந்த சோதனைகள் குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், தனக்கு பிடிக்காத ஒரு பத்திரிக்கையாளர் என்டிடிவி இந்து செய்தி சேனலில் இது குறித்து செய்தி வெளியிட்டார் என்ற காரணத்துக்காக அவர் மீது மட்டும் அவதூறு வழக்கு தொடுத்தார் காமராஜ். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று, நக்கீரன் காமராஜ் அளித்த புகார் குறித்து குறுக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போதுதான் காமராஜ் நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் என்பதால்தான் சிபிஐ தன் வீட்டில் சோதனை நடத்தியது என்று கூறினார்.
அவதூறு வழக்கு தாக்கல் செய்ய நக்கீரன் அலுவலகத்திலிருந்து கடிதம் தரப்பட்டதா என்ற கேள்விக்கு தரப்படவில்லை என்று பதிலளித்தார் காமராஜ். 15.12.2010 அன்று சிபிஐ தன் வீட்டில் சோதனை நடத்தியது என்பதை காமராஜ் ஒப்புக் கொண்டார். தன் வீட்டைத் தவிர, நக்கீரன் சம்பந்தப்பட்ட எவரது வீட்டிலும், நக்கீரன் அலுவலகத்திலும் சோதனை நடந்ததா என்றால் இல்லை என்றார். பின் எதற்கான உங்கள் வீட்டில் சோதனை நடந்தது என்றதற்கு, நான் நக்கீரனில் அசோசியேட் எடிட்டராக இருந்ததால்தான் சோதனை நடந்தது என்றார். நக்கீரனில் வேறு யாரையும், அல்லது வேறு எந்த பத்திரிக்கையாளரையும் சோதனைக்கு உட்படுத்தாத சிபிஐ, உங்களை மட்டும் சோதனை செய்ததற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு “நான் பல அரசியல் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது என்னை பிடிக்காத சிலர் பொறாமையின் காரணமாக அவதூறு கிளப்பி விட்டதால், சோதனை நடத்தப்பட்டது” என்றார்.
நக்கீரன் ஆசிரியர் வீட்டிலோ, அல்லது நக்கீரன் தவிர்த்து, இதர பத்திரிக்கை ஆசிரியர்கள் அல்லது நிருபர்கள் யாருடைய வீட்டிலாவது சோதனை நடந்ததா என்றதற்கு இல்லை என்று பதிலளித்தார் காமராஜ். நக்கீரன் பத்திரிக்கையில் பணி புரிந்ததற்காக சோதனை நடத்தப்படவில்லை, மாறாக தனிப்பட்ட முறையில் நடத்திய தொழில்கள் காரணமாக சோதனை நடத்தப்பட்டது என்று கூறியதை காமராஜ் மறுத்தார்.
தற்போது நக்கீரன் பத்திரிக்கையில் நீங்கள் இணை ஆசிரியராக இல்லை. தற்போது இந்த வழக்கை நீங்கள் நடத்துவீர்களா, அல்லது நக்கீரனில் தற்போது உள்ள இணை ஆசிரியராக உள்ளவர் நடத்துவாரா என்றதற்கு, வழக்கை நான்தான் நடத்துவேன் என்றார் காமராஜ்.
குறுக்கு விசாரணை நீண்ட நேரம் தொடரும் என்பதால், காமராஜ் தரப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காமராஜின் குறுக்கு விசாரணை மீண்டும் தொடர உள்ளது.
அடுத்த விசாரணையின்போது, காமராஜ் ஐந்திரம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்தது. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு கட்டுமான தொழிலில் ஈடுபட்டது. வீட்டில் இருக்கும் அவர் மனைவியை சமூக சேவகர் என்று பொய் சொல்லி, தமிழக அரசிடமிருந்து சலுகை விலையில் இரண்டு திருவான்மியூரில் வீட்டுமனைகளை பெற்று, அந்த வீட்டுமனையை ஒரு தனியார் நிறுவனத்தோடு பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து லாபம் பார்த்தது, நக்கீரன் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று தெரிகிறது.
மற்றொரு பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப் போய் சொந்த காசில் சூனியம் வைத்தது போல காமராஜ் தான் விரித்த வலையிலேயே சிக்கிக் கொண்டார் என்று சிரிக்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்.
நக்கீரனின் பணியாற்றிய முன்னாள் பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், “நக்கீரனில் காமராஜ் எழுதிய பொய் செய்திகளுக்கு அவதூறு வழக்கு தொடுத்தால், ஆயிரத்தையும் தாண்டும். பச்சைப் பொய்யை கூசாமல் செய்தியாக எழுதக் கூடியவர்தான் காமராஜ். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமே, சிபிஐயில் டிஐஜியாக பணியாற்றிய முருகன் என்ற அதிகாரியைப் பற்றி பல்வேறு பொய்களை எழுதியதுதான். அப்படி இருக்கையில் காமராஜ் மற்றொரு பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடுப்பது வேடிக்கைதான்” என்றார்.
பத்திரிக்கையாளர் சார்பில் காமராஜை குறுக்கு விசாரணை செய்தவர் வழக்கறிஞர் திரு என்.ரமேஷ். தமிழகத்தில் பத்திரிக்கைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஏராளமான அவதூறு வழக்குகளில் ஆஜராகியிருப்பவர். ஆஜராகி வருபவர். அவதூறு சட்டம் மற்றும் வழக்குகள் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் மேஜிஸ்ட்டிரேட்டாக பணி புரிந்து, பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த குறுக்கு விசாரணை குறித்து அவரிடம் பேசியபோது, வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்து அவர் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று பேச மறுத்து விட்டார்.
அடுத்த குறுக்கு விசாரணை இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நக்கீரனிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட காமராஜ், தற்போது மின்னம்பலம் என்ற இணைய இதழை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாருக்கு.நாத்தம்
//நக்கீரனிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட காமராஜ், தற்போது மின்னம்பலம் என்ற இணைய இதழை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.//
பொன்னம்பலம்-ன்னு வச்சிருந்தா பொருத்தமா இருக்கும்
நீதிபதிகள், அரசியல்வாதிகள்,பத்திரிக்கை நிருபர்கள் ,இப்படி எல்லோருமே ஊழல்வாதிகளாக இருந்தால் , யாரைத் தான் இந்த சமூகம் நம்புவது ?
Appatakkar Kamaraj! Avara maathiri sirantha pathirigaiyalarai , arivujeevi , Vennaya paarkka
mudiyathu!
Gud post
Good beginning after a long time.