தமிழகத்தின் பாரம்பரியமிக்க செட்டிநாட்டு பாரம்பரியங்களில் ஒன்றான எம்ஏஎம் ராமசாமியின் குடும்பச் சொத்துக்கள் நீண்ட நாட்கள் நீதிமன்ற சிக்கல்களில் சிக்கியிருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கிறது.
எம்ஏஎம் ராமசாமியின் உடல்நிலை மிகவும் நலிவடைந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை, சமீபத்தில் அவர் உருவாக்கிய அறக்கட்டளைக்கு, சாட்சிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் எழுதி வைத்தார். இதையடுத்து, விலக்கி வைக்கப்பட்ட அவரது வளர்ப்பு மகன் எம்ஏஎஎம்ஆர் முத்தையா என்கிற அய்யப்பன், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உள்ளிட்டோர் ராமசாமியின் சொத்துக்களை அபரிக்க திட்டமிட்டு வருவதாகவும், காவல்துறை உடனடியாக தலையிட்டு அதை தடுக்க வேண்டும் என்றும் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் மீதான விசாரணை முடிவடையும் முன்பே, அய்யப்பன் எம்ஏஎம் ராமசாமிக்கு சொந்தமான கார்களை திருடி விட்டார் என்று புதிய புகார் எழுந்துள்ளது.
எம்ஏஎம் ராமசாமி – சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு வாரிசு இல்லாத காரணத்தால், 1996ம் ஆண்டு, ஒரு சாதாரண செட்டியார் குடும்பத்தில் பிறந்த அய்யப்பனை தனது வாரிசாக தத்தெடுத்துக் கொண்டார் ராமசாமி. இந்த தத்தெடுப்பு நடவடிக்கை நடந்த சமயத்திலேயே சர்ச்சைகள் எழுந்தன. செட்டியார்கள் குல வழக்கப்படி, ஒரு கோயிலைச் சேர்ந்தவர்கள், அதே கோயிலைச் சேர்ந்தவர்களைத்தான் தத்தெடுக்க முடியும் என்று ஒரு வழக்கம் உள்ளது. ஆனால், ராமசாமி, அய்யப்பனை மற்றொரு கோவிலில் இருந்து தத்தெடுத்துள்ளார். இதுவே நகரத்தார் வழக்கத்துக்கு எதிரானது என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் ராமசாமி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அய்யப்பனை தத்தெடுத்து அவருக்கு சொத்துக்களையெல்லாம் எழுதி வைத்தார்.
எம்ஏஎம்.ராமசாமிக்கென்று நூற்றுக் கணக்கில் வேலையாட்கள் உண்டு. அந்த வேலையாட்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கும் பணியில் அய்யப்பன் இறங்கினார். தொடக்க காலத்தில் சாதாரண மனக்கசப்பாக இருந்தது, நாளடைவில் வெளிப்படையான மோதலாகவே உருவாகத் தொடங்கியது. அய்யப்பனும், செட்டிநாடு சிமென்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு செட்டிநாட்டு குழும நிறுவனங்களை படிப்படையாக கையகப்படுத்தினார். செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து எம்ஏஎம் ராமசாமியை அகற்றும் முயற்சியில் அய்யப்பன் ஈடுபடுவதாக தெரிந்ததும், அதற்கான எதிர் நடவடிக்கைகளில் ராமசாமி ஈடுபட்டதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, செட்டிநாடு சிமென்ட்ஸின் ஆண்டு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அங்கீகரிக்க வேண்டாம் என்று, கம்பெனிகள் பதிவாளரை வலியுறுத்தி, அவருக்கு 10 லட்ச ரூபாய் எம்ஏஎம் ராமசாமி லஞ்சமாக கொடுத்தபோது, சிபிஐ கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனை கைது செய்தது.
இதையடுத்து நடந்த செட்டிநாடு சிமென்ட்ஸின் பங்குதாரர்கள் கூட்டத்தில், எம்ஏஎம் ராமசாமியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி அவரை அதிகாரமில்லாத கவுரவத் தலைவராக நியமித்து தீர்மானம் இயற்றினார் அய்யப்பன். இதைத் தொடர்ந்து, தந்தைக்கும் மகனுக்கும் மோதல் வெளிப்படையாகவே வெடித்தது.
இந்த ஆண்டு ஜுன் மாதத்தில், அய்யப்பனுக்கு சொந்தமாக, ஆர்ஏபுரம் அரண்மனையில் இருந்த ஒரு அறையை, ராமசாமியின் வேலையாட்கள் திறக்க முயல, அய்யப்பனின் ஆட்கள் அவர்களை தாக்க, இதையொட்டி இரு தரப்பும் பரஸ்பரம் காவல்துறையில் புகார் பதிவு செய்தன. அய்யப்பனுக்கு கார்டனில் இருந்த செல்வாக்கின் காரணமாக, ராமசாமியின் வேலையாட்களில் பத்துக்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ராமசாமியின் ஆட்களில் சிலர் ரத்தகாயம் அடைந்திருந்தும் கூட, அய்யப்பனின் ஆட்களில் ஒருவரைக் கூட காவல்துறை கைது செய்யவில்லை. அந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன.
எம்ஏஎம் ராமசாமியின் வேலையாட்களை, அய்யப்பன் தரப்பினர் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தினர். இது தொடர்பாக காவல்துறை எம்ஏஎம் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருந்தாலும், அது தொடர்பாக ஒரே ஒரு நபரைக் கூட கைது செய்யவில்லை. இவ்வழக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு, எம்ஏஎம் தரப்பு நீதிமன்றத்தை அணுகியும் எதுவும் நடக்கவில்லை.
அய்யப்பனை எம்ஏஎம் தத்தெடுத்ததே பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. எம்ஏஎம் ராமசாமி – சிகப்பி ஆச்சி தம்பதிக்கு வாரிசு இல்லாததால், ஒரு சாதாரண செட்டியார் குடும்பத்தில் பிறந்த அய்யப்பனை தனது வாரிசாக 1996ல் தத்தெடுத்தார் ராமசாமி. செட்டியார்கள் குல வழக்கப்படி, ஒரு கோயிலை (பிரிவு அல்லது குழு) சேர்ந்தவர்கள், அதே கோயிலை சேர்ந்தவர்களைத்தான் தத்தெடுக்க முடியும் என்பது மரபு. ஆனால், ராமசாமி மற்றொரு கோயிலில் இருந்து தத்தெடுத்துள்ளார். இதுவே நகரத்தார் வழக்கத்துக்கு எதிரானது என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. ராமசாமி அதைப்பற்றி கவலைப்படாமல், அய்யப்பனை தத்தெடுத்து அவருக்கு சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்தார்.
அப்படி எதிர்ப்புகளை மீறி தத்தெடுத்ததுதான் பிற்காலத்தில் ராமசாமிக்கு தீராத வேதனையை அளித்தது. ராமசாமி உயிரோடு இருந்த காலத்திலேயே அவருடைய வேலையாட்களை பணி நீக்கம் செய்வது, ராமசாமியின் சொந்த விவகாரங்களில் தலையிட்டு அவருக்கு தொல்லை கொடுப்பது என்று பல்வேறு நடவடிக்கைகளை அய்யப்பன் எடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் செட்டிநாடு குழுமத்தின் முக்கிய நிறுவனமான செட்டி நாடு சிமென்ட்ஸின் தலைவர் பதவியிலிருந்து ராமசாமியை அய்யப்பன் நீக்கினார். இதற்கு பிறகுதான் மனம் திறந்தார் ராமசாமி. பத்திரிகையாளர்களை அழைத்து ”அய்யப்பனை தத்தெடுத்ததன் மூலம் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறேன்” என்று தெரிவித்தார். அய்யப்பனிடம் சென்றது போக எஞ்சியுள்ள தனது சொத்துக்கள் அனைத்தையும், இரண்டு அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்த ராமசாமி, அந்த சொத்துக்களில் ஒரு பைசா கூட அய்யப்பனுக்கு சேரக்கூடாது என்று ஒரு உயில் எழுதி அந்த உயிலை பதிவும் செய்தார். அய்யப்பனை கோயில் மூலமாக எடுத்திருந்த தத்து நடவடிக்கையையும் ரத்து செய்தார் ராமசாமி. தனது இறுதிச் சடங்குகளைக்கூட அய்யப்பன் செய்யக் கூடாது என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
சென்னையை மழை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த டிசம்பர் 2 அன்று ராமசாமி இறந்தார். அவர் உயிலில் எழுதியது போலவே, அவர் இறுதிச் சடங்கினை அய்யப்பன் செய்யவில்லை. ஏ.சி.முத்தையா, மீனா முத்தையா உள்ளிட்டோர்தான் இறுதிச் சடங்கினை செய்தனர்.
ஆனால், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத அய்யப்பன், அரண்மனை உள்ளிட்ட சொத்துக்களை கைப்பற்றுவதில் தீவிரமாக இறங்கினார். அரண்மனை மற்றும் வேறு பல சொத்துக்களின் மீது மேல் பூட்டு போட்டு பூட்டினார். அனைத்து சொத்துக்களையும் இரண்டு அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்த ராமசாமியின் உயிலையும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் மோதல் முற்றிய சமயத்திலேயே தனது அனைத்து சொத்துக்களையும், டாக்டர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார் ட்ரஸ்ட் மற்றும் டாக்டர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார் செட்டிநாடு ட்ரஸ்ட் என்ற இரு ட்ரஸ்டுகள் பெயரில் எழுதி வைத்தார் எம்ஏஎம். இந்த ட்ரஸ்டுகளை நிர்வகிக்க ஏ.சி முத்தையா மற்றும் மீனா முத்தையாவை நிர்வாகிகளாக நியமித்தார்.
சொத்துக்கள் அனைத்தும ட்ரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் சென்று விட்டதால், சட்டவிரோதமாக சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியில் அய்யப்பன் இறங்கினார்
எம்ஏஎம் ராமசாமிக்கு சொந்தமான டொயோட்டா கேம்ரி மற்றும் பென்ஸ் கார்கள் அரண்மனை வளாகத்தில் ஷெட்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த கார்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அனைத்தும் மீனா முத்தையா நிர்வாகியாக இருக்கும் ட்ரஸ்டின் கட்டுப்பாட்டில் இருந்தன.
கடந்த டிசம்பர் 21 அன்று, அய்யப்பன் ஆட்கள், கார்கள் நிறுத்தப்பட்டிருந்த ஷெட்டுகளின் பூட்டுக்களை உடைத்து வேறு பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்த நடவடிக்கை குறித்து மீனா முத்தையா தரப்பினர் உடனடியாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் காவல் துறை வழக்கு பதிவு செய்யவேயில்லை.
பென்ஸ் கார் மற்றம் டொயோட்டா கார் ஆகிய இரண்டுக்கும் டூப்ளிகேட் சாவிகளை பெற்று, 25 பிப்ரவரி 2016 அன்று இரண்டு கார்களையும் அய்யப்பன் தரப்பினர் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, கார்கள் எடுக்கப்படுவதன் வீடியோ பதிவுகளோடு மீனா முத்தையா தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, வழக்கு தொடரப்பட்டது. 4 மார்ச் அன்று, சென்னை உயர்நீதிமன்றம், மீனா முத்தையாவின் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
வேறு வழியேயின்றி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கார் திருட்டு என்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கார்களை எடுத்துச் சென்ற அய்யப்பனின் ஓட்டுனர்கள் ராஜ், செல்லதுரை, ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகியது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் எப்ஐஆர் நகல், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது. ஆனால் வழக்கு பதிவு செய்து 15 நாட்களைக் கடந்தும், இந்த எப்ஐஆரின் நகல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவில்லை. பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்தால் பொறுப்பான பதில் இல்லை.
பணக்காரர்கள் என்றாலே, அவர்கள் பக்கம் காவல்துறை சாய்வது, அவர்களுக்காக சட்டத்தை வளைப்பது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த விவகாரத்தில் புகார் அளித்த தரப்பும் செல்வத்தில் கொழிக்கும் தரப்புதான். குமாரராணி மீனா முத்தையாவும் பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிதான். ஆனால், காவல்துறை அய்யப்பன் பக்கம் சாய்வதன் மர்மம் என்ன ?
போயஸ் தோட்டத்தில் தற்போது சர்வ வல்லமை படைத்தவராக வலம் வருபவர்தான் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். சசிகலாவுக்கு அடுத்தபடியாக இவர்தான் மிப்பெரும் அதிகார மையமாக விளங்குகிறார். இவரும் அய்யப்பனும் மிகவும் நெருங்கி உள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும், அய்யப்பன் போயஸ் தோட்ட இல்லத்துக்கே சென்று பல முறை சிவக்குமாரை சந்தித்துள்ளார். இந்த அதிகாரத்தின் காரணமாகத்தான், காவல்துறை அய்யப்பன் மீது வரும் அனைத்துப் புகார்களையும் கிடப்பில் போடுகிறது. இந்த அதிகாரத்தின் காரணமாகத்தான், அய்யப்பனுக்கு காவல்துறை, சட்டம் போன்ற எதன் மீதும் பயமோ மரியாதையோ இல்லை.
தற்போது எம்ஏஎம் ராமசாமிக்கு தான்தான் ஒரே வாரிசு என்ற வாரிசு சான்றிதழ் பெறும் முயற்சியில் அய்யப்பன் ஈடுபட்டுள்ளார். வழக்கமாக வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகையில் யாரிடமிருந்தாவது எதிர்ப்பு வந்தால், வாரிசு சான்றிதழ் வழங்கப்படாது. அந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து வருவாய்த் துறை முழு விசாரணையும் நடத்திய பின்னரே சான்றிதழ் வழங்கப்படும். அய்யப்பன் எம்ஏஎம் ராமசாமியின் வாரிசு என்று அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்ஏஎம்மின் சொந்த ஊரிலிருந்து பல்வேறு புகார்கள் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, தற்போது அய்யப்பன்தான் வாரிசு என்று அறிவிக்கும் வேலையிலும் வருவாய்த்துறை ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
எம்ஏஎம் ராமசாமி, சட்டபூர்வமாக அய்யப்பனுக்கு அளித்த சொத்துக்களே பல கோடிகளைத் தாண்டும். ஆனால், பேராசை பிடித்த அய்யப்பன், திருட்டுத்தனமாக கார்களைத் திருடும் அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளார். வயிற்றுக்காக, இல்லாதவர்கள் திருடுவதைக் கண்டிருக்கிறோம். பல கோடிகளை வைத்திருந்தும், தனக்கு சொந்தமில்லாத கார்களை திருடும் அளவுக்கு கேவலமான நபராகத்தான் அய்யப்பன் இருந்து வருகிறார்.
இவரது குணநலன்களை மிகவும் தாமதமாக உணர்ந்ததால்தான், எம்ஏஎம் தான் உயிருடன் இருக்கையிலேயே சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்துள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அய்யப்பனின் செல்வாக்கு இதே வகையில் நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான். சாதாரண பொதுமக்களைப் போன்றே, செட்டிநாட்டுக் குழுமமும், அரசியல் மாற்றத்துக்காக காத்திருக்கிறது.
1, வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
2 , சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
3 , பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
4, அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
5, கூடங்குளம் மக்களை ஏமாற்றியது –
6, பஸ் கட்டணம் உயர்தியது.
7, பால் விலையை உயர்த்தியது.
8, மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
9, கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
10, ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
11, தொழில் வளர்ச்சியை முடக்கியது .
12, தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
13, சட்டசபையை ” பெஞ்ச் தட்டும் சபையாக ” மாற்றியது.
14, கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
14, நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
15, கெயில் விவகாரத்தில் விவசாயிகளை வாட்டியது.
16, முல்லை பெரியாரில் மக்களின் முட்டியை உடைத்தது.
17, வில்லேஜ் & தாலுக் அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
18, சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
19, உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து ‘
20, அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
21, தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
22, எதிர்கட்சியை உடைத்தது.
23, கொடநாட்டில் உல்லாச வாசம்.
24, அரசு ஊழியர்களை தற்கொலை செய்ய வைத்தது.
25, பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
26, மீனவர்களை ஜெயிலில் தவிக்க விட்டது.
27, கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
28, படகுகளை பறிகொடுக்க வைத்தது.
29, மாற்றுதிரணாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
30, மக்கள் நல பணியாளர்களை மரணத்தை நோக்கி உந்தியது.
31, இலக்கு வைத்து மது விற்றது.
32, தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
33, காவல் துறையை ஏவல் துறையாக்கியது.
34, ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
35, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
36, மந்திரிகள் மண் சோறு தின்றது.
37, ஊழலில் திளைப்பது.
38, தாது மணலை கொள்ளையடித்தது.
39, ஆவின் ஊழல் .
40, கமல்ஹாசனை கலங்கடித்தது.
41, விஜயை வியர்க்க வைத்தது .
42, சினிமா விழாவை சின்னாபின்னாமாக்கியது.
42, சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
43, கனிமவளத்தை களவாடியது.
44, அப்துல் கலாமை அவமதித்தது.
45, ஊழல் IAS அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
46, 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
47, முட்டை, பருப்பு என அனைத்திலும் ஊழல்.
48, மின்சாரத்தில் கமிஷன் .
49, மணல் கொள்ளை.
50, லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
51 , பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
52, நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
55, ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
56, தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
57, திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
58, பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
59, செவிலியரை சொல்லியடித்தது.
60, உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
61, ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
62 ,RK நகரில் இமாலய கள்ள ஓட்டு.
63, செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
64, ஸ்டிக்கர் ஒட்டியது.
65, கோவனை கைது செய்தது.
66, பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
67, மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
68, ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
69, வெற்று வார்தைகளில் வர்ணஜாலம் காட்டியது.
70, விஷன் 2023 வெளியே வராமலே போனது …..
71, உபி சகோதரி உலகையே வாங்கி குவிப்பு .
@GR: how much have you received to post this comment?
Sariyaa sonneenga vinoth,
MAM ee oru fraud . Thamizh naatil kalvic ciirkettirku pithamakana avarthaan. counter vacci kaasu collect panninavar. neraiya chetti maarkal nermaiyaa yookiyama irukaanga…. aana aaluvatharku adimaiyee illaatha poli raja kudumbam naasama pona andha jaathikku nallathu….
eppadi SAP Annamalai chettiyaar valartha kumudhaththai ulaka maka yyokiyar cho marrum ”naan paappaathithaan” pukal jaya PVvarahdarajan enra IYangaar surutta vazhi panninaangannu oru report podunga thambi.
சங்கர் இந்த பதிவிற்குஉனக்குஎவ்வளவுபணம்தந்தந்தார்கள்அதைஏன்எழுதவில்லை
yes your question is right Mr.GR. I am the follower and fan of Mr.Shankar in last six year, but nowadays he sold to DMK. this information are right and agree, but the last two lines says who you are ?