2011 ஆண்டின் தொடக்கம் இந்த ஆண்டு போல இல்லாமல், கடும் தேர்தல் பரபரப்புடன் பிறந்தது. 2006ம் ஆண்டு முதல், விளம்பரம் என்ற மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புகளாக இருந்த பெரும்பாலான ஊடகங்கள், திமுகவை வெறித்தனமாக விமர்சிக்கத் தொடங்கின. திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகங்கள், குறைபாடுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்று அத்தனையையும் ஊடகங்கள் தோண்டி எடுத்து பட்டியலிடத் தொடங்கின. ஜனவரி மாதத் தொடக்கம் முதலாகவே திமுகவின் சரிவு வெளிப்படையாக தென்படத் தொடங்கியது. ஆனால் இந்த சரிவுகளை உணர மறுத்த திமுக, உளவுத்துறை தெரிவித்த 110 தொகுதிகளில் வெற்றி என்ற பொய்க்கணக்கை நம்பி கொண்டு தேர்தலை எதிர்கொண்டது.
2016ல் அது போன்ற பரபரப்புகள் இல்லை. மார்ச் மாதம் முடிந்த நிலையில் கூட மே மாதத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் இன்னமும் முழுமையாக களத்தில் இறங்கவில்லை. இதோ அதோ என்று இழுப்பறி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விஜயகாந்தும் ஒரு வழியாக மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகி, ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், இன்னமும் சுறுசுறுப்பின்றி உள்ளன. தேர்தலுக்கு இன்னமும் 45 நாட்களுக்கு மேல் இருக்கிறது என்ன அவசரம் என்று இருக்கிறார்களோ என்னவோ.
இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்களின் முன்னால் ஊசலாடும் ஒரே கேள்வி, தற்போதைய அதிமுக அரசு தொடர வேண்டுமா இல்லையா என்பதே. தமிழகம் எப்போதும் இரு திராவிடக் கட்சிகளிடையே மாறி மாறி பங்கு போடப்பட்டு வந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக ஒரு புறம். முதல்வர் கனவுகளோடு களங்காணும் அன்புமணி மற்றும் சீமான் மறு புறம் என்றால், நடமாடும் கார்ல் மார்க்ஸாக விஜயகாந்தை மாற்றியுள்ள மக்கள் நலக் கூட்டணி மற்றொரு புறம்.
2011ம் ஆண்டு போல, ஊடகங்கள் பெருமளவில் அதிமுக அரசுக்கு எதிராக திரும்பவில்லை என்பது உண்மையே. கடந்த திமுக ஆட்சியில் விளம்பரங்களை அளித்து ஊடகங்கள் கட்டிப்போடப்பட்டது என்றால், இந்த அதிமுக அரசு விளம்பரங்கள் என்ற கேரட்டை காட்டிக் கொண்டே, ஒத்து வராத ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு என்ற பிரம்பை வீசிக் கொண்டே இருந்தது. அரசியல் தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், பத்திரிக்கையாளர்கள், தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று ஒருவரை விடாமல் அவதூறு வழக்கு போட்டு வெளிப்படையான மிரட்டலில் அதிமுக அரசு கடந்த நான்காண்டுகளாக இறங்கி வந்தது. ஆனால், குறைந்தது தேர்தல் சமயத்திலாவது உறக்கத்தை கலைத்து விழித்தெழ வேண்டிய ஊடகங்கள், தேர்தல் நெருங்கிய பின்னரும் கூட, ஜெயலலிதாவுக்கு மயிலிறகு சாமரம் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஊடகங்கள் செய்யத் தவறிய பணியை சமூக வலைத்தளங்களும், வாட்சப்பும் செய்து கொண்டு உள்ளன என்பதே ஒரு ஆறுதலான விஷயம்.
தனது மக்கள் விரோத கொள்கைகளை ஜெயலலிதா ஒரு காலமும் நிறுத்தமாட்டார் என்பதற்கான பெரும் அறிகுறி, மதுவிலக்குக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பேச்சாளர்கள் மீது 26 மார்ச் 2016 அன்று தமிழக காவல்துறை பதிவு செய்திருக்கும் தேச விரோத வழக்கு. “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்காக ராஜு, காளியப்பன், டேவிட் ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன் மற்றும் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.
மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக ஒரு பாடலைப் பாடிய குறறத்துக்காக பாடகன் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த இதே அதிமுக அரசுதான் தற்போதைய கைதுகளையும் அரங்கேற்றியுள்ளது. மதுவிலக்குக்கு எதிராக ஒரே ஒரு குரல் கூட எழுந்து விடக்கூடாது என்பதில் அதிமுக அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தல் நேரமானாலும், மக்களிடையே மதுவிலக்கு கோரிக்கைக்கு எவ்வளவு பெரிய ஆதரவு இருந்தாலும், மதுவால் அரசு கஜானாவுக்கும், தனிப்பட்ட வசூலுக்கும் எவ்விதத்திலும் குறை நேர்ந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே ஜெயலலிதா அரசு கவனமாக இருக்கிறது.
இந்தத் தேர்தலில் முக்கியமான கருப்பொருள் என்ன ? அதிமுக அரசு எப்படியும் அகற்றப்பட வேண்டும் என்பதே அது. அப்படி அகற்றப்பட்டே ஆக வேண்டிய அளவுக்கு அதிமுக அரசு என்ன செய்தது அல்லது என்ன செய்யவில்லை என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.
2006 திமுக அரசாங்கம் அடுத்தடுத்து செய்த பல்வேறு தவறுகள், 2ஜி ஊழல், போன்ற விவகாரங்களால் ஏற்பட்ட கடுமையான கோபம், அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. ஆனால் அந்த பதவியை தங்களது செல்வாக்குக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே அதிமுக எடுத்துக் கொண்டது. பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே தேமுதிகவோடு ஏற்பட்ட கடுமையான மோதல் இதை வெளிப்படுத்தியது.
அதிமுக அரசு பொறுப்பேற்றதும், முதல் வேலையாக தலைமைச் செயலகத்தை பழைய புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார் ஜெயலலிதா. புதிய தலைமைச் செயலக கட்டிடம், ஒரு தேவையற்ற கட்டுமானம் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, பல நூற்றுக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பரிசீலிக்க மறுத்தார் ஜெயலலிதா. அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். அரசு அலுவலர்களை குடியேற்ற வேண்டிய அக்கட்டிடம் ஆபரேஷன் தியேட்டர்களாக இன்று மாறியுள்ளது. நிர்வாக வசதி என்று மாற்றத்துக்கு ஜெயலலிதா காரணம் கூறினாலும், திமுக அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் என்ற ஒரே நோக்கத்தில்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை.
பெரும்பான்மையான கல்வியாளர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட சமச்சீர் கல்வியை அடாவடியாக ரத்து செய்து, அதன் பின்பு பல முறை நீதிமன்றத்தால் குட்டுப் பட்டார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து சமச்சீர் கல்விக்காக 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தையும் குப்பையில் எரிந்து விட்டு, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே புதிதாக பாடப்புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.
இதன் காரணமாக பள்ளி திறந்தும் இரண்டு மாதத்துக்கு மேல் எந்தப் பாடப்புத்தகங்களை படிப்பது என்று மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தனர். புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் ஊழல் என்று அப்போதே ஊழல் புகார் கிளம்பியது. சிங்கிள் கலரில் ஏ4 அளவில் அச்சடிக்க அரசு வழங்கி வந்தது ரூபாய் 34. ஜெயலிதா அரசு பொறுப்பேற்றதும், இந்தத் தொகை ரூபாய் 70ஆக உயர்த்தப்பட்டது. பைண்டிங் செய்ய வழங்கப்பட்டு வந்த ரூபாய் 24 உயர்த்தப்பட்டு 40 ஆகியது. இப்படி புதிய புத்தகங்கள் அச்சடிப்பதால் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற பண விரயத்தைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் குழு அம்மாவின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் சொம்பு ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்பட்டு, சமச்சீர் கல்வித் திட்டம் முழுக்க முழுக்க குறைபாடுகள் நிரம்பியது என்று பரிந்துரை செய்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பரிந்துரையை ஏற்காமல், சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையும் ஏற்றுக் கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.
உச்சநீதிமன்றமும், ஜெயலலிதா அரசின் மேல் முறையிட்டு மனுவை நிராகரித்தது. “புதிதாக ஒரு அரசு பொறுப்பேற்றுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நிராகரிக்க முடியாது. முந்தைய அரசு ஒரு அரசியல் தலைவர் எழுதிய பாடலை பாடத்திட்டத்தில் வைத்திருப்பது ஆட்சேபகரமானது என்றால், அந்தப் பாடலை நீக்கியிருக்கலாம். அதற்கு பதிலாக, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பாடத்திட்டத்தையே நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு பிறகு மேல்முறையீடு செய்ய வேறு வழியில்லை என்ற காரணத்தால், அமைதியானார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அரசியல் விளையாட்டு, லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கிறது என்ற எண்ணத்தை விட, திமுகவின் திட்டங்களை நீக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்ச்சியே ஜெயலலிதாவிடம் மேலோங்கி காணப்பட்டது. ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி என்று அவரது ஆதரவாளர்களால் கட்டி வைக்கப்பட்ட பிம்பம் உடைந்தது.
சென்னை துறைமுகத்துக்கு வர வேண்டிய அத்தனை வருவாயும், அண்டை மாநிலத்துக்கு செல்கிறது என்ற காரணத்தால், சென்னை துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மதுரவாயல் பறக்கும் பாதை உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 5000 நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சென்னை துறைமுகத்தின் மூலமாக அனுப்புகின்றன. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த குறுகிய நேரத்துக்குள்தான் கனரக வாகனங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பயணித்து, சென்னை துறைமுகத்தை வந்தடைய வேண்டும். அங்கேயும் லாரிகளின் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த காரணத்தினால், பெரும்பாலான நிறுவனங்கள், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிருஷ்ணாபட்டினம் தனியார் துறைமுகத்துக்கு செல்கின்றன. தமிழகத்தின வருவாய் குறைந்த வருவதை தவிர்ப்பதற்காகவே மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் 2013ம் அன்று முழுமையாக நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவால் இன்று முழுமையடையாத தூண்களாக அத்திட்டம் முடங்கியுள்ளது.
மதுரவாயல் பறக்கும் சாலை கட்ட உத்தரவு பெற்ற நிறுவனம் சோமா என்டர்பிரைசஸ். அந்த பறக்கும் சாலைக்கான உத்தரவைப் பெறுவதற்கே, சோமா என்டர்பிரைசஸ் நிறுவனம், மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை “நன்றாக கவனித்த பிறகே” உத்தரவை பெற்றது. இதன் காரணமாகவும், மேலும் பறக்கும் சாலைக்கான தூண்கள் அமைக்கும் பணி 80 சதவிகிதம் நிறைவுற்ற நிலையிலும், மேலும் 40 சதவிகித கமிஷனை தர முடியாது என்று சோமா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.
அடுத்த வாரமே, ஜெயலலிதாவிடமிருந்து, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் வடிவமைப்பு பிழையாக உள்ளது என்ற அறிக்கை வெளியானது. உடனடியாக பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குவேன் என்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதாவின் நிர்வாக லட்சணம் இதுதான்.
40 சதவிகித கமிஷன் இல்லாமல், தமிழகத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே மாறிப் போனது.
தொடரும்.
தலைவர் : வணக்கம். எங்களை மன்னித்து விடுங்கள்… நாங்கள் கடந்த ஆட்சியில் சில தவறுகள் செய்துவிட்டோம்.
மக்கள் : ஓஹோ…. என்ன என்ன தவறுகள் செய்தீர்கள் ?
தலைவர் : கடந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன…. லஞ்ச ஊழல் கடுமையாக இருந்தது…. ஏரி, குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை…..நீர் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தோம். அதனால் தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : தாது மணல் கொள்ளை நடந்தது. மக்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் கொள்ளை அடித்து அந்தப் பணத்தினை பதுக்கினார்கள். எங்களுக்கும் பங்கு கிடைத்தது.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : கிரானைட் கொள்ளை நடந்தது. கடந்த இருபது வருடங்களாக கொள்ளை நடந்தது என்று சகாயம் கூட சொன்னாரே ? தெரியும் இல்லையா ?
மக்கள் : நல்ல தெரியுமே. கடந்த இருபது வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக சொன்னாரே.
தலைவர் : ஆமாம், இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : எங்கள் ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளை நடந்தது. இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : மது விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. எங்கள் கட்சிக்காரர்களும் ஐந்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினோம். எங்கள் குடும்பத்திற்கும் நல்ல பங்கு கிடைத்தது. எதிர்க்கட்சி காரர்கள் சில மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்து இருந்தார்கள். அவர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. நாங்கள் இருவரும் இதில் கூட்டாளிகள் .
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : நாங்கள் மின்சாரம் தயாரிக்க வில்லை. அந்த பணத்தில் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றினோம்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : அதனால், எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் தவறு செய்தாலும் இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் செய்வோம். எங்களுக்கு ஓட்டு போடுவீர்களா ?
மக்கள்: ஆம். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். உங்களுக்கும், உங்கள் ‘கொள்ளை’ பங்காளிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். நன்றி. நீங்கள் கிளம்பலாம்.
DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு
Which party is going to be less harm to the Tamil Nadu either DMK or ADMK? Compare with last DMK Govt, ADMK is not much bad to the majority of the common public and poor. though I’m fan of Ragul, this time I’m going to vote for ADMK despite Congress alliance with the DMK. What do you recon, Are politicians here to provide the service? no mate , Don’t be silly. politicians are here to rob the public money and they need power again to look after what they robbed and cover their ass if not the following Govt will fuck their ass.
Or Project Stalin and announce he is a CM candidate, I’m sure and hope ,who may play that role much better than the present CM though he is debauched.
தலைவர் : வணக்கம். எங்களை மன்னித்து விடுங்கள்… நாங்கள் கடந்த ஆட்சியில் சில தவறுகள் செய்துவிட்டோம்.
மக்கள் : ஓஹோ…. என்ன என்ன தவறுகள் செய்தீர்கள் ?
தலைவர் : கடந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன…. லஞ்ச ஊழல் கடுமையாக இருந்தது…. ஏரி, குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை…..நீர் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தோம். அதனால் தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : தாது மணல் கொள்ளை நடந்தது. மக்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் கொள்ளை அடித்து அந்தப் பணத்தினை பதுக்கினார்கள். எங்களுக்கும் பங்கு கிடைத்தது.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : கிரானைட் கொள்ளை நடந்தது. கடந்த இருபது வருடங்களாக கொள்ளை நடந்தது என்று சகாயம் கூட சொன்னாரே ? தெரியும் இல்லையா ?
மக்கள் : நல்ல தெரியுமே. கடந்த இருபது வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக சொன்னாரே.
தலைவர் : ஆமாம், இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : எங்கள் ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளை நடந்தது. இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : மது விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. எங்கள் கட்சிக்காரர்களும் ஐந்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினோம். எங்கள் குடும்பத்திற்கும் நல்ல பங்கு கிடைத்தது. எதிர்க்கட்சி காரர்கள் சில மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்து இருந்தார்கள். அவர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. நாங்கள் இருவரும் இதில் கூட்டாளிகள் .
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : நாங்கள் மின்சாரம் தயாரிக்க வில்லை. அந்த பணத்தில் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றினோம்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : அதனால், எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் தவறு செய்தாலும் இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் செய்வோம். எங்களுக்கு ஓட்டு போடுவீர்களா ?
மக்கள்: ஆம். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். உங்களுக்கும், உங்கள் ‘கொள்ளை’ பங்காளிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். நன்றி. நீங்கள் கிளம்பலாம்.
ஊழல், ஈழப் பிரச்சனை, தன் சொந்த நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம், என்று எந்த முகத்தை எடுத்துக்கொண்டாலும், ஜெயலலிதாவும்கருணாநிதியும் தராசுத் தட்டில் சரிசமமாக நிற்பார்கள், ஜெயலலிதா ஒரு கிராம் கூடுதலாக இருப்பார், அவ்வளவுதான். ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் மீது தங்கள் விசுவாசத்தை நியாயப்படுத்த அடிமைகளுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவை ஒரு பொம்மையாக முன்னிறுத்தி, சசிகலாவின் உறவினர்களான கள்ளர்கள்/தேவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் அடாவடிகள் வெளியில் தெரியாமல் அடக்கப்படுகின்றன. பொம்மை முதல்வராக ஓ.பி.எஸ். என்ற அடிமை போடப்பட்டாலும் அவரும் கள்ளர்/தேவர் தான். ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான் என்ற அடிமை சொன்னது மலர்ந்துவிட்டதா? ஈழ இன அழிப்பு நடந்தபோது, ஜெயலலிதா அல்லது வேறு எந்தக் கொம்பன் முதல்வராக இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். இந்திய உளவு அமைப்பை வழிநடத்தும் பார்ப்பனர்களின் சதித்திட்டம் இது. இது புரியாமல், யாரும் தங்கள் அடிமை விசுவாசத்தைக் காட்டவேண்டாம்.
Dear Mr. Shankar, please introduce the option of like and dislike by the readers for the comments.
1
இன்றைக்குமட்டுமல்ல என்றைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட மேற்கத்திய நாடுகளில் நடைமுறையிலிருக்கும் சட்டம் ஒழுங்குடன் கூடிய நல்ல ஆட்சி நிர்வாகம் ஒன்று வரவேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகள் சினிமாகாரர்கள் தொழில் அதிபர்கள் தவிர்ந்த 90 விழுக்காடு மக்களின் மனோநிலையாக இருக்கும் என்பது எவரும் மறுக்க முடியாது.
ஆனால் திமுக அல்லது அதிமுக விடமிருந்து அதை எதிர்பார்க்க முடியாது. இல்லை அவர்கள்தான் நேர்மையாக நடந்துகொள்ள முன்வந்தாலும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் தண்டனை சட்டங்கள் இவர்களை நேர்வழியில் செல்ல அனுமதிக்காது. அவ்வளவுக்கு மத்தியிலிருந்து மாநிலம்வரை அரசியல்த்தலையீடு செல்லரித்து மலிந்து கிடக்கிறது. சலுமான்கான் சஞ்சை தத், மல்லையா, போன்றோர் கடவுளைபோல நடத்தப்படவேண்டுமென இந்திய சட்டம் இடங்கொடுக்கிறது.
அத்துடன் இந்த அரசியல்வியாதிகள் அனைத்து ஓட்டைகளையும் நன்கே அறிந்து வைத்திருக்கின்றனர் பிதச்சினை என்று வரும்போது எந்த துவாரத்தால் வெளிவரவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கருனாநிதி அரச பாதுகாப்புடன் அரச வாகனத்தில் சென்று மாலை ஒருத்தியுடன் படுத்து கலவி புணர்ந்து பிள்ளை கொடுத்துவிட்டு இரவு இன்னொருத்தியுடன் உடலுறவு கொண்டுவிட்டு பத்துமணிக்கு சமூகநீதிபற்றி பேசும்போது எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட சமூகம் அவரை கடவுளாக மதித்து அவர் செய்வது நியாயம் என்றே தீக்குளித்து நியாயப்படுத்தவ்தயாராக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜீ ஆர் அவர்களின் ஆசை நாயகியாக இருந்துகொண்டு சோபன் பாபுவுடனும் ஜெய்சங்கரருடனும் உறவில் இருந்ததாக கூறப்படும் ஜெயலலிதா மனித இனத்தை தாண்டிய அவதார வணக்கத்துக்குரியவராக தொண்டனை எண்ண வைக்கிறது
2
மாநில அரசு கொண்டுவரும் ஒரு நியாயமான கோரிக்கையை மத்திய அரசு அரசியலாக்கியே அதற்கு ஒப்புதல் கொடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறாது.
இதுதான் இந்தியா.
எனவே கருணாநிதியின் தீமைக்கு ஜெயலலிதாவின் தீமைதான் மாற்று என்பது ஏற்புடையதல்ல.
ஒருவன் அரசியலில் இறங்கி முழு அழுக்கையும் ஆழமாக அறிந்து சுதாகரித்தபின் அவனை திருத்தலாம் என்பதை விட நிராகரிப்பதே மேல்
இந்த தேர்தலில் புதியவர்களை உள்வாங்கி மாற்றத்தை கொண்டு வருவதே மேலானது என்பது எனது கருத்து.
இரண்டு முறைக்கு மேல் எவனும் அரசியலில் பதவி வகிக்க இடமளிக்கக்கூடாது என்ற சட்டம் வரையப்பட வேண்டும்.
சவுக்கு உங்கள் கூற்றுப்படி இம்முறை ஜெயலலிதாவை அப்புறப்படுத்திலால் அடுத்து நாற்காலில் உட்கார்ந்து நாறடிக்கப்போவது கருணாநிதி.
அது வேண்டாம் சீமானை ஆதரித்துப்பார்ப்போம் சரி வரவில்லையென்றால் அடுத்த முயற்சிக்கு முயலலாம்
Dear Savukku Shankar
The Cinema Industry, Education Industry, REal Estate industry, Property industry, Construction Industry, Manufacturing Industry, Food industry, Media Industry,Sports Industry, Shipping Industry, Entertainment industry and many other captured by Kanimozhi, Azhagiri, Stalin & Co, Maran Group [Tata Armtwisting in TataSky, Airlines], Kalanidhi Maran – Sun Network – Dinakaran- underselling, never allowed anyone to flourish. Everything had to go through these 10 families if you want to get anything approved. Shankar, I have appreciated your investigative journalism and introspection qualities, but this time, without analysis , you have written this article jumping the gun. Nobody wants both dravidian parties but show me the good administrator.
Vaiko, who like to be behind, Vijaykanth lost his local standing when he joined with AIADMK last elections, now very apparent and shameless, Premalatha talking nonsense than Plans for Tamilnadu, Seeman talking about Tamil and other aspects although stating the developmental plans, Anbumani – most fascist , fanatic and Vanniar sect factionist who claims too many things when CBI is in front of him,
DMK is not a choice for that reason. hence it should be AIADMK vs DMK again. Vijaykanth cannot be and should not be the alternate. Communist – Congress – BJP do not have proper leader to lead in Tamilnadu. BJP lacks a good leader to lead in Tamilnadu when they are running BJP like a club and not as a party.
Shankar, your quality of journalism has really questionable, by these type of articles. please withdraw this article, Shankar.
dmk is correcct choice for this election.
விலை போய் விட்ட சவுக்கை நினைத்து வருந்துகிறேன். எப்படியும் உங்களை அழிக்க துடித்த திமுக தற்போது உங்களுக்கு நல்லவர்கள்.
திமுகவை வசைபாடி நீங்கள் எழுதிய கட்டுரைகள் இன்னும் என்னிடம் இருக்கிறது. இப்போது அவர்கள் உங்களுக்கு புனிதமானவர்கள் …ஆனால் நாங்கள் எதையும் மாறாக வில்லை. மன்னிக்கவும் தயாராகவில்லை.
2011 தேர்தலின் போது ஊடகங்கள் திமுகவை கடுமையாக விமர்சிக்க காரணம் கூடகங்களின் சுயநலன் தான். தினகரனை சன் குழுமம் கையகப்படுத்தி ரூ 1 இக்கு நாளேடு வெளியிட்டது. இதனால் தங்கள் ஆணி வேரே ஆடும் நிலை வந்ததால் தான் ஊடகங்கள் திமுகவை கடுமையாக விமர்சித்தன. அதிமுக கட்சிக்கு நெருக்கமான எந்த நிறுவனமும் இப்போது ஊடகங்களை கையகப்படுத்தவில்லை எனவே 2016இல் அதிமுக அரசுக்கு எதிராக ஊடகங்கள் திரும்பவில்லை.
இக்கட்டுரையின் மூலம் நீங்கள் கூறவருவது தான் என்ன? தி.மு.க. வந்த பின்பு நாட்டில் தேனாறும் பாலாறும் ஒடபோகிறதா? 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கருணாநிதி தான் இத்தனை கேட்டிற்கும் மூலம் என்பது கூட உங்களுக்கு புரியாதது போல் நடிக்கிறீர்கள? 2ஜி வழக்கின் இறுதி வாதம் நடந்து வருகிறதே அது குறித்து ஒரு கட்டுரை கூட இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லையே? நீங்கள் எங்கோ விலை போய் விட்டதாகவே தெரிகிறது.
Hello Savukku,
I am your regular reader
I am ADMK mean Anti DMK.
No other choice to defeat DMK otherthan AIADMK
but AIADMK is not that much good, agreed but we dont have choice
atleast our leaders should feel shame for this.
When savukku trying to project Stalin as nadamadum Gandhi, nothing wrong in projecting vijayakanth as Carl mark by makkal nala kootani
Very good comment Mr.ganesh this is a sample one. Lots more behind him educated people will not forget.
Continue Savukku.
Well said Bala sir.
Super
வற்றாது எமது வன்மம்!
————————————-
சில நினைவுகள் நம் வாழ்நாளில் மறக்க முடியாததாக மாறிவிடும். பிஸ்கெட் சாப்பிட்டபடி அமர்ந்து வெறித்து பார்க்கும் பாலச்சந்திரனின் கண்கள்.. முத்துகுமாரின் கடிதம்.. கர்ப்பிணி தாயின் வயிறு கிழிந்து வெளியே தொங்கும் சிசுவின் கால்பாதங்கள் என்று மங்காத சில நினைவுகள் எனக்குண்டு.
அதில் ஒன்று மே 19 அன்று வெளியான தினத்தந்தியின் இந்த முதல் பக்கம். முதல் பக்கத்தில் இரண்டே இரண்டு முக்கியச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. இரண்டுமே தமிழினத்திற்கு மறக்க முடியாத செய்திகள்.
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகளின் வீர மரணத்தை சொல்லும் செய்தி தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருந்தது. முள்ளிவாய்க்காலில் ஒரு இனத்தின் பெரும் கனவு கலைக்கப்பட்ட செய்தி அது.
அதற்கு கீழ் ஒரு செய்தி இருக்கிறது. அது அந்த இனத்தின் பெரும்கனவு கலைக்கப்பட துணை நின்றதற்காக கிடைக்கப்போகும் எலும்பு துண்டை பொறுக்க குடும்பத்துடன் டெல்லி சென்ற ஒரு ஈனத்தலைவனின் பதவிவெறி பற்றிய செய்தி.
ஆளும் கட்சிக்கு ஏற்ப மாறிக் கொள்வதுதான் தினத்தந்தியின் பாலிஸி என்று பொதுவாக தினத்தந்தி குறித்து சொல்வார்கள்.
ஆனால் தமிழின வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் இவ்விரு செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிட்டதற்கு அப்போதைய தினத்தந்தியின் செய்தி ஆசிரியரின் மன உணர்வுகள் முக்கிய காரணமாக இருக்கும்.
ஒரு இனம் அழிக்கப்பட்டு நிற்கும்போது பதவிவெறிக் கொண்டு டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியை அம்பலப்படுத்த தனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த செய்தியை முதல் பக்கத்தில் பயன்படுத்தியிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தினத்தந்தியின் இந்த முதல் பக்கம் ஒரு வரலாற்றுச்சுவடு.
ஆண்டுகள் கடந்துவிட்டால் கருணாவின் கண்ணீர் நாடகங்கள் எல்லாம் மறந்துபோகுமா என்ன.
என்ன செய்தாவது போரை நிறுத்திவிட முடியாதா என்று ஒவ்வொருவரும் ஏங்கி தவித்தபோது, கண்ணீர் அஞ்சலி.. மனிதசங்கிலி என்றெல்லாம் நடித்துப் பார்த்தும் முடியாமல் முதுகுவலி என்று மருத்துவமனைக்குள் ஓடி ஒளிந்து கொண்ட கபட நாடக நயவஞ்சகர் கருணா அவர்களே..
கவலைப்படாதீர்கள்.. உங்களை அத்தனை எளிதில் தமிழர்கள் நாங்கள் மறந்துவிடமாட்டோம்.
எந்த நாற்காலிக்காக எமது இனத்தை பலி கொடுத்தீர்களோ.. அந்த நாற்காலி உமக்கு எத்தனை கடைசித் தேர்தல் வந்தாலும் கனவாகவே போகும்.
பலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது.
உண்மைதான்..
நள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது.
என் கோடுகள் இருக்கும் வரை வற்றாது அந்த வன்மம்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
2-4-16
பெருமதிப்புக்குரிய ஐயா,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நீங்கள் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை நுகர்ந்து கோபம் கொண்டீர். நான் கையறு நிலை என்றால் என்னவென்று வாழ்வில் முதல் முறை அறிந்ததால் தண்ணி அடித்துவிட்டு கண்கள் சிவக்க கதவை பூட்டிக்கொண்டு அழுது கொண்டு இருந்தேன். நீங்கள் என்னை குடிகாரன் என்று சொன்னாலும் பரவா இல்லை. எனக்கு இருக்கும் ஒரே பயம் அதிமுக வெறுத்து மக்கள் மீண்டும் திமுக தாவி விட போகிறார்கள் என்று தான். வைகோ போன்றவர்களின் உண்மை முகம் நன்றாக தெரியும். அதனால் அந்த கூட்டணிக்கு நான் வாக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. ராமதாசின் சாதி வெறி நன்றாக தெரியும். நம் இனத்தை கொன்று அழித்தது சாதி தான் என்று உணர்ந்தவன். அதனால் அவருக்கும் என் வாக்கு கிடையாது. நான் சீமானை ஆதரிப்பது தவறா?
ஊழல், ஈழப் பிரச்சனை, தன் சொந்த நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம், என்று எந்த முகத்தை எடுத்துக்கொண்டாலும், ஜெயலலிதாவும்கருணாநிதியும் தராசுத் தட்டில் சரிசமமாக நிற்பார்கள், ஜெயலலிதா ஒரு கிராம் கூடுதலாக இருப்பார், அவ்வளவுதான். ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் மீது தங்கள் விசுவாசத்தை நியாயப்படுத்த அடிமைகளுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவை ஒரு பொம்மையாக முன்னிறுத்தி, சசிகலாவின் உறவினர்களான கள்ளர்கள்/தேவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் அடாவடிகள் வெளியில் தெரியாமல் அடக்கப்படுகின்றன. பொம்மை முதல்வராக ஓ.பி.எஸ். என்ற அடிமை போடப்பட்டாலும் அவரும் கள்ளர்/தேவர் தான். ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான் என்ற அடிமை சொன்னது மலர்ந்துவிட்டதா? ஈழ இன அழிப்பு நடந்தபோது, ஜெயலலிதா அல்லது வேறு எந்தக் கொம்பன் முதல்வராக இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். இந்திய உளவு அமைப்பை வழிநடத்தும் பார்ப்பனர்களின் சதித்திட்டம் இது. இது புரியாமல், யாரும் தங்கள் அடிமை விசுவாசத்தைக் காட்டவேண்டாம்.
மதிப்புக்குரிய கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஈழ தமிழின ஆதரவானவர்களுக்கு ,
கருணாநிதி ஒன்றும் ஒரு இனம் அழிக்கப்படுவதை தடுக்கும் சக்தி படைத்தவரில்லை ,ஈழ தமிழ் இனம் அழிக்கப்படுவது உலகின் பல (அமரிக்க ,சைனா ,இந்திய ,பாக்கிஸ்தான் .etc ..)நாடுகள் முடிவு செய்தவை .
கருணாநிதியால் 117 சீட்டே ஜெய்க்க முடியவில்லை ,இவர் ஒரு இனம் அழிக்கப்படுவதை தடுக்கும் சக்தி படைத்தவர் என்று சொல்பவர்கள் யார்?,ஏன் அப்படி சொல்கிறார்கள்?
அல்லது யார் யாரோ( பல நாடுகள் உட்பட) கூட்டு சேர்ந்து ஈழ தமிழ் இனத்தை அழித்துவிட்டு பழியை கருணாநிதி மேல்(தமிழ் நாட்டில் மட்டும் ) போடுகிறார்களா?
தமிழ் நாட்டில் வரும் செய்திகள் (செய்தி ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள்,காட்சி ஊடகங்கள்,நடுநிலையாளர்கள் போர்வையில் உள்ளவர்கள் )அனைத்தும் (ஒரு சில தவிர )கருணாநிதி மட்டுமே அழிக்க நினைத்து அழித்தார் என்பது போன்ற கருத்தை ஏன் உருவாக்குகிறார்கள்?
மேலும் பல வெளிநாட்டு தகவல்கள் (கூகுள்-லில் தேடி பாருங்கள் ) தீவிரவாதம்,பொருளாதாரம் ,வல்லரசு ஆதிக்கம் ,வேறுநாட்டு அத்து மீறிய தலையீடுகள் ,வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளை பணியவைக்கும் தந்திரம் ,FBI ,MOSART ,INTERPOL ,CBI ,INTERNATIONAL POLITICS ஆகிய அனைத்தும் சேர்ந்து தான் செய்தது போல் உள்ளது .
விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சோல்ஹீம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “To End A Civil War” என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது.
மேலும் கடைசி கட்ட போரில் அமெரிக்கா கப்பல் ஒன்று புலிகளுக்காக அனுப்ப நினைத்திருந்ததாக செய்திகள் உள்ளன அது ஏன்?
பல நாடுகள் ஏன் புலிகளை தீவிரவாதிகளாக அறிவித்தார்கள் ,
சரி கடைசியாக ஒன்று ,கருணாநிதி மட்டும் தான் அழிதார் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதே நிலைபாட்டை தான் கொண்டிருப்பர், ஏன் என்றால் அது தலைவர்களின் நிலைப்பாடு அல்ல அது இந்தியாவின் நிலைப்பாடு (காங்கிரஸ் ,பிஜேபி இரண்டு பெரும் ஒரே நிலைப்பாட்டைதான் உட்சநீதிமன்றத்தில் சொல்கிறார்கள் ,வெளிஉறவு கொள்கையும் அது தான் )
என பல கேள்விகள் உள்ளன நண்பர்களே
மதிப்புக்குரிய கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஈழ தமிழின ஆதரவானவர்களுக்கு
—————-
இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்
முனைவா் பு.பிரபுராம்
தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா? ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் முன்வைத்தன. இம்முழக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றுவதற்கான வல்லமை தமிழக முதலமைச்சா் பதவிக்கு இல்லை என்பதே நிதா்சனமான உண்மை.
உலக அரங்கில் தமிழ்நாடு தனிநாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் அவ்வளவே. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளைக் கவனிக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவோர் சட்டமன்ற உறுப்பினா்கள் அவ்வளவே. மத்திய அரசையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களையும் மீறி ஒரு அணுவைக்கூட தமிழக முதலமைச்சராலும், சட்டமன்ற உறுப்பினா்களாலும் அசைத்துவிடமுடியாது. அதிகபட்சமாக சட்டமன்றத்தில் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு முதலமைச்சா் அனுப்புவார். இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது. மத்திய அரசை எதிர்த்துப் போராடும் வல்லமையும் நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லவே இல்லை. உண்மை இப்படியிருக்க இலங்கைத் தமிழா் விடயத்தில் எத்தனை, எத்தனை போலி முழக்கங்களும், பொய் வாக்குறுதிகளும் வாரி, வாரி வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதை இந்தத் தோ்தலிலாவது மக்கள் உணரவேண்டும்.
தமிழகத்தில் தோ்தல் என்றால் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற அரசியல் முன்னிருத்தப்படுகிறது. ஏன் தமிழ் மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பது போதாதா?. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா?. நினைக்கவே அருவறுப்பாக இருக்கிறது. அறிவுப்புரட்சி செய்ய வல்லமையற்ற அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மொழிவெறியையும் சாதிவெறியையும் இளைஞா்களுக்குள் திணிக்கின்றனா்.
2009-இல் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன. இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் உருவாவதற்குச் சாத்தியமே இல்லை. உருவானாலும் அதற்குப் பயன் இல்லை என்ற நிலையே உள்ளது. உலக நாடுகளுக்கும் இலங்கைத் தமிழா்கள் மீது அவ்வளவு கரிசனம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. 2009க்குப் பிறகு ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டங்கள் பல முடிந்துவிட்டன. ஐந்து வருடங்களில் எந்தப் பெரிய அரசியல் அழுத்தங்களோ, நிர்வாக அழுத்தங்களோ இலங்கை அரசிற்குக் கொடுக்கப்படவில்லை. இன்னும் இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் வீடிழந்து, விவசாய நிலங்களை இழந்து, உரிமைகளையும் உணா்வுகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவலச் சூழல்தான் நிலவுகிறது.
தமிழகத்தில் இந்தப் போலி அரசியல்வாதிகள் விடும் பொய்கள் காதுகளில் நாராசமாய் வந்து விழுகின்றன. நான் முதலமைச்சரானால் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பேன் என்று இன்னும் எப்படி அவா்களால் வெட்கமில்லாமல் சொல்ல முடிகிறது. சீச்சீ… தமிழகத் தோ்தல் அரசியல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் சதிவலையாக அல்லவா உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளே மக்கள் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கை. இனிமேல் உங்கள் அரசியல் சுயலாபத்திற்காக இலங்கைத் தமிழா்களை பயன்படுத்தாதீா்கள்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் பட்டதெல்லாம் போதும். இலங்கை இராணுவத்தால் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கும், கொடுமையான பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் தமிழா்கள் பலா் பலியான, துயரத்தின் வடு இன்னும் யார் மனதிலும் ஆறிவிடவில்லை. அவா்கள் துயரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நாம் ஆகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டும் அரசியல்வாதிகளே உங்கள் மனதில் கொஞ்சமாவது ஈரம் இருந்தால், அவா்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால், இலங்கைத் தமிழா்களை வைத்துத் தமிழகத்தில் தோ்தல் அரசியல் செய்யாதீா்கள்.
கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஈழ தமிழின ஆதரவானவர்களுக்கு