யுகப் புரட்சி

You may also like...

48 Responses

  1. Anonymous says:

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

    “நல்ல வழிதனை நாடு- எந்த
    நாளும் பரமனை நத்தியே தேடு
    வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
    வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”- கடுவெளிச் சித்தர்
    .
    இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ சவுக்குக்கு இப்ப நல்லா பொருந்துது.
    இவ்வளவு ஆண்டுகாலம் ஆகியிருக்கு சவுக்கோட உணமை குணம் எனக்கு தெரிய.
    இப்பவாது தெரிந்ததே என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

  2. balaji says:

    நான் சவுக்கை இனி பார்க்க மாட்டேன் நீங்கள் உண்மையை சொல்லாமல் பொய் தான் உங்கள் கட்டுரையில் உள்ளது

  3. Feroz says:

    நடந்தது அறவழிப் போராட்டமென்றாலும் நிறைவடைந்தது வன்முறையில். சிங்கள அரசிற்கும் தமிழக அரசிற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? ஒன்றுமில்லை. அறவழிப் போராட்டமென்றாலும் இது வித்தியாசமானது. எப்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர் என அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது. இதில் வியப்புகொள்ள என்ன இருக்கிறது? மக்களுக்கான கோரிக்கையில் மக்கள் இணையாமல்? கருத்து மக்களை பற்றிக்கொள்ளும்போது அது மாபெரும் சக்தியாக உருவாகும் என்ற மார்க்சின் கூற்று மெரினாவில் மீண்டும் உண்மையாயிருக்கிறது. தமிழகம் இந்தியாவிலேயே வித்தியாசனது என்பதை நமது மாணவர்களின் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது. நமது மாணவர்கள் அற்புதமானவர்கள். அந்த 6 நாட்களில் சோசலிச சமூகக் கூறை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    போராட்டத்தை சிதைக்க நினைத்த விஷமிகள் பிஜேபி, ஏபிவிபி, அதிமுக, மற்றும் போலீஸ் உளவாளிகளே. சவுக்கு இதை தெரிந்தே மறைத்ததோ அல்லது தெரியாமல் விட்டதோ சவுக்குக்கே வெளிச்சம். குறிப்பாக பொன்.ராதா என்ன சொன்னானோ அதையே ஆதி, ரஜினி முதல் பன்னீர் வரை ஒப்புவித்து கொண்டிருக்கின்றனர். துரோகிகள் இல்லாத போராட்டங்கள் இல்லை. துரோகிகளை ஒழிக்காமல் போராட்டங்கள் நிறைவடைந்த்தில்லை. காவல்துறை மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் துடைத்து எறிந்த இப்போராட்டம் மிகப்பெரிய வெற்றியே.

  4. Ganesh says:

    நிச்சயமாக உங்களுக்கு மாடுகளை பற்றிய அறிவும் அதன் பயனும் சுத்தமாக இல்லை… நானும் ஒரு விவசாயிதான்.. 7 மாடுகள் வளர்க்குறோம்… கண்டிப்பாக நாங்கள் பண்ணையார்கள் கிடையாது… உங்களுக்கு மாடுகளை பற்றி எதுவுமே தெரியாது நீங்கள் தெரிந்து கொள்ளப்போவதுமில்லை.. ஆனால் கோமாதா குலமாதா பாட்டு மட்டும் நல்லா பாடுவீங்க…. உங்களது பத்திரிக்கை தொழில்… அரசியல் பேசுங்கள் ஓகே… கார்பரேட் வாய்ஸ் தராதீர்கள் … அப்பறம் இதற்கு அடுத்த உங்களின் கட்டுரையான என்டிடிவி க்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் நன்றி…

  5. VKK says:

    Savukku, Article should send the message very strongly.
    The 50 Member of Parliament have failed miserably as People Representative in Parliament and have not initiated any action so far. Now they are acting and that also in contradictory with the TN Chief Minister Agenda with Prime Minister which they should have done long back and sorted out this issue.
    So far , the Srilankan Fishermen issue, Cauvery issue, Mullai Periyar Issue, Vardh Cyclone Relief Measures have to be talked in the Parliament. Thambi durai cannot think that he is the King of the Throne and Prince of Sasikala and talk only about her. First demand was for the MPs to resign and the People should make it happen.
    The Government of Tamilnadu should Go and seek fresh mandate from People and not allow Sasikala to become CM. People did not elect the Government even for PanneerSelvam to become Chief Minister.
    Law and Order, Education Ministry Governance, Corporation of Chennai Governance, People Welfare Measures and Issues , Women and Child Welfare Development measures are all being Mismanaged without proper direction. WE do not have a proper Government and the Bureaucrats do not have appropriate freedom to function as well.
    Savukku, with your past history of Investigative Journalism, if you are the same Savukku now, should bring out the Truths and Facts.

  6. இனியவன் மார்க்ஸ் says:

    அஸ்கரின் கருத்துகள் அருமையான கருத்துகள். சவுக்கு சக்களத்திக்கு சாமரம் வீசத் தொடங்கிவிட்டது. //போராட்டத்தின் ஆரம்பகட்ட கோரிக்கையான வீ வாண்ட் ஜல்லிகட்டு என்பது இப்போராட்டத்தின் ஒரு குறியீடு மட்டுமே. போராட்டத்தின் 2ம் நாளே பல கருத்துக்கள் மாணவர்களிடையே முட்டி மோதிக்கொண்டன. பலர் விவசாயிகளுக்காகவும், பலர் ஊழலுக்கெதிராகவும், டாஸ்மாக்குக்கு எதிராகவும், பலர் கார்ப்பரேட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் கோஷமிட்டனர். தங்களது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர். 6 நாட்களும் நீடித்த போராட்டத்தின் ஊடாக தமிழகமே மாறப்போவதாகவும் மாறிவிட்டதாகவும் மகிழ்ச்சி கொண்டனர். இதை வெறுமனே ஜல்லிகட்டு கோரிக்கை என்ற ஒன்றினால் மட்டும் சாத்திமாகும் என்பதை ஏற்றுக்க்கொள்ள மாணவர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. அவர்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர். தங்களுடைய சுயநலத்திற்காக போராட்டத்தை நீட்டிக்க அனுமதியளித்த அரசு விழித்துக்கொண்டது. மேற்படி வெறிநாய்களை ஏவியது. வெறிநய்களும் அடங்கிக்கிடந்த அரிப்பை தணித்துக்கொண்டது. மர்றபடி ஏபிவிபி கூட்டத்தில் ஊடுறுவியிருந்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!//

  7. இனியவன் மார்க்ஸ் says:

    முகப்புப் படமே (மாணவன் கல்லெறிவது போன்ற) உன் முகமூடியைக் கழற்றிக் காட்டிவிட்டது. நடந்த வன்முறைகள் காவல்துறையாலும், திமுக போன்ற அரசியல் களவாணிகளாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பது கண்கூடு.

    ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துகளை மட்டும், ஆதாரத்தோடு சொல்லி, திமுக களவாணிகள் எல்லாம் உத்தமர்கள் போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியவன்தானே நீ?

    இந்த ஒரு கட்டுரை மூலம் உன் சாயம் வெளுத்துவிட்டது

  8. இனியவன் மார்க்ஸ் says:

    ஒரு விபச்சாரி கூட இந்தக் கட்டுரை எழுதியவனைவிட நேர்மையாக நடந்துகொள்வாள். ஊடக விபச்சாரம் என்று பேசும், உன்னைப் போன்ற ஆட்கள்தான் இந்த சமூகத்தின் சாபக்கேடு. காவல்துறைதான் காவல்நிலையம் முன்பு நின்ற வாகனங்களில் தீவைத்து வன்முறையை ஆரம்பித்தது. பல இடங்களில் ஆட்டோக்களுக்கும் குடிசைகளுக்கும், மக்கள் உடைமைகளுக்கும் தீ வைத்தது. அதைப் பற்றி ஒரு வரி கூட எழுதாத நீ எல்லாம் என்ன மயிருக்கு எழுத வர்றே?

  9. அரங்க ராஜா says:

    எல்லோரிடமும் எதிர்த்து நின்ற சவுக்கு, தற்போது சசிகலா காலில் விழுந்த, பன்னீர் காலில் விழுவது ஏனோ? அதே போல் ஜெயாவின் முந்தைய ஆட்சிக் கடைசிக்காலக்கட்டத்தில் எழுதிய சவுக்கு, அதர்க்குபின் நீண்ட இடைவேலியில். அதாவது ஜெயா அவர்கள் மரைந்தப்பிரகு எழுத துனிந்தது ஏனோ? இப்போது பன்னீருக்காக பரிந்து சவுக்கு வலைவது ஏனோ?

  10. அஸ்கர் says:

    போராட்டத்தின் ஆரம்பகட்ட கோரிக்கையான வீ வாண்ட் ஜல்லிகட்டு என்பது இப்போராட்டத்தின் ஒரு குறியீடு மட்டுமே. போராட்டத்தின் 2ம் நாளே பல கருத்துக்கள் மாணவர்களிடையே முட்டி மோதிக்கொண்டன. பலர் விவசாயிகளுக்காகவும், பலர் ஊழலுக்கெதிராகவும், டாஸ்மாக்குக்கு எதிராகவும், பலர் கார்ப்பரேட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் கோஷமிட்டனர். தங்களது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர். 6 நாட்களும் நீடித்த போராட்டத்தின் ஊடாக தமிழகமே மாறப்போவதாகவும் மாறிவிட்டதாகவும் மகிழ்ச்சி கொண்டனர். இதை வெறுமனே ஜல்லிகட்டு கோரிக்கை என்ற ஒன்றினால் மட்டும் சாத்திமாகும் என்பதை ஏற்றுக்க்கொள்ள மாணவர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. அவர்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர். தங்களுடைய சுயநலத்திற்காக போராட்டத்தை நீட்டிக்க அனுமதியளித்த அரசு விழித்துக்கொண்டது. மேற்படி வெறிநாய்களை ஏவியது. வெறிநய்களும் அடங்கிக்கிடந்த அரிப்பை தணித்துக்கொண்டது. மர்றபடி ஏபிவிபி கூட்டத்தில் ஊடுறுவியிருந்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

  11. Nice article. It should have been even earlier. You could have guided them. You didn’t do it. Many people would have read your article had you written at the time of protest. People still believe you.

  12. மாக says:

    இது சரியான கட்டுரையா சவுக்கு விலைபேனது போல் தெரிகிறது

  13. kumaran says:

    One thing we understand from this, Any revolution at the end of everything needs leader to take it forward to make it success for long time. We need to identify the leader. There is no other right choice for tamilians at this time then Naam Tamiliar party and Seeman. We need to him to hunt this DMK and AIADMK. Tamilians should come out for this.

  14. கணேஷன் says:

    இக்கட்டுரையில் சில நல்ல தகவல்கள் இருந்தாலும், சில அட்டிபடைகளை சிந்திக்க வைக்க கூடிய கருத்துக்கள் இருந்தாலும் கூட, எதோ ஒரு பக்கசார்பு, அதற்கான தொரு இளையோட்டம் இருப்பது வெளிபடையாக தெரிகிறது, தயவு செய்து இனிவரும் காலங்களில் முழுமையாக நடுநிலையில் நின்று எழுதுங்கள். போலீஸ் நடவட்டிகை ஆரம்பமாகும் முன்னர் ஏன் திரு பன்னீர் செல்வம் அவர்கள் நாட்டு மக்களுக்கு தொலை காட்சியில் தோன்றி சகல விடயங்களையும் விளக்கி ஓர் உரை ஆற்றியிருக்க முடியாமல் போய்விட்டது. சுமுகமான முறையில் இதனை முடித்து வைபதற்கு நிறைய வாய்பபுகள் இருந்தும் அ தி மு க அரசு அதற்கு முயலாது செயல் பட்டமைக்கு பின்னணியில் நிச்சயமாக காரணம் உண்டு.

  15. mani says:

    மெரினா அறப்போராட்டமும் கபட புல்லுருவிகளும்…
    தானே சேர்ந்த கூட்டத்தை தனதாக்கிக்கொண்ட கயவர்கள்…..
    OPS ஐ எதிர்க்கும் அதிமுக உயர் மட்ட கூட்டம் ..
    அதிமுகவை அழித்துஆட்சியை பிடிக்க துடிக்கும் திமுக களவாணிகள் ..
    மோடியை எதிர்க்கும் மதவாத சக்திகள்….
    நாட்டில் நல்லதே நடக்க கூடாது என்ற சீரிய எண்ணம் கொண்ட இடதுசா ரி இயக்கங்கள் …
    அறவழியில் சரித்திரம் படைத்துக்கொண்டிருந்த போராட்டடம் இந்த கயவர்களால் கடைசி நாள் அன்று திசை மாற போராட்டக்காரர்கள் இடம் கொடுத்தது ஒரு வரலாற்று பிழை……

  16. Joshua says:

    Finally the Youth Protest came to a Gangsters.

  17. AADHI says:

    Ithu Sariya??—“பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் க்ரீன் பீஸ் போன் அமைப்புகளையும் அல்லவா தடைசெய்ய வேண்டும் ? நமக்கு பிடிக்காது என்று பீட்டாவை தடை செய்ய தொடங்கினால், அவர்களுக்கு பிடிக்காது என்று மக்கள் அதிகாரம், மே 17 , நாம் தமிழர் என்று அவர்களும் தடை கோருவார்களே ? என்ன பதில் சொல்வீர்கள் ? பீட்டா போன்ற அமைப்புகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயகம்.”

  18. Raghu says:

    இந்த போரட்டத்திலன் முக்கிய காரணி வீரமற்ற தலைமையையை தமிழனால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தானே ஒழிய ஜல்லிக்கட்டு அல்ல. இந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடு தான், நோக்கமல்ல என்பதை உணர தவறிவிட்டீர்கள்.

    எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக போராட தமிழராக திரண்டனர். அவர்களுக்கு பொது குறியீடு தேவை பட்டது அப்போது கிடைத்தது தான் ஜல்லிக்கட்டு.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீர் செல்வம் பதவியேற்றத்தை மக்கள் ஏற்று கொண்டார்கள். ஆனால் சசிகலா கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியையும் வந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு கட்டுப்படாமல் செயல் பட்டிருந்தால் அவர் ஏற்று கொள்ளபட்டிருப்பார். ஆனால் அவர் அனைவரையும் அனுசரித்து போக கூடியவர். அதன் காரணமாகவே இந்த பதவி அவருக்கு கிடைத்தது.

    தமிழன் சர்வாதிகாரியையும் அயோக்கியனையும் கூட தலைவனாக ஏற்று கொள்வான் அவர்களுக்கு பேராண்மை இருந்தால். ஆனால், கோழையை ஒரு போதும் தலைவனாக ஏற்று கொள்ள மாட்டான்.

    இதற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நம் வரலாறை நாம் புரட்டி பார்க்க வேண்டும். ஏனெனில், தமிழனின் உளவியல், பல்லாயிரம் ஆண்டு வரலாற்றுடன் பின்னி பிணைந்தது. மூவேந்தர் காலத்தில் தலைவனுக்கு முதல் தேவை வீரம். வீரமற்றவனிடம் நாடு இருந்தால் பகைவனால் சூறையாடப்படும். அதனால் தான் தமிழன் எப்போதும் வீரத்தை முதலில் வைத்தான். இன்று காலங்கள் மாறினாலும், அந்த உளவியல் மாறவில்லை.

    இன்றைக்கு வீரத்தை விட விவேகமும், நல்லொழுக்கமும் தான் தலைவனுக்கு தேவை என்று அவன் அறிவுக்கு தெரியும். அனால் துரதிர்ஷ்டவசமாக தமிழன் அறிவை விட உணர்வுக்கு கட்டுபட்டவன். இதனால் தான் உணர்ச்சியை தூண்டும் பேராண்மை கொண்டவர்களுக்கு அடிமையாக இருந்து வருகிறான். இது மாற பல்லாண்டுகள் ஆகலாம்.

    இந்த போராட்டத்தில் பன்னீர் செல்வம் அனைவரையும் அனுசரித்து அதே நேரத்தில் காரியத்தையும் சாதித்தார். அவரின் சாதுர்யம் மெச்சப்படவில்லை, ஏனெனில் அவரிடம் மக்கள் எதிரிபார்த்தது அதுவல்ல. அனைத்துக்கும் உச்சமாய் ஒரு முதலைச்சரை ஒரு ஊருக்குள் வர விடாமல் தடுத்த போது அவர் அவருக்கே உரிய பணிவன்புடன் சென்னை திரும்பி வந்தார். இது அவரது பேராண்மைக்கு விடப்பட்ட சவால். அதை அவர் பணிவுடன் கையாண்டது பெரும் தவறு. அங்கே அவர் ஆளுமையை நிலை நிறுத்தியிருக்க வேண்டும். இது அவரின் வீரமின்மையை உறுதிப்படுத்தியது. இத்தனாலேயே போராட்டம் நிற்கவில்லை.

    செய்வதரியாது திகைத்த அரசு, காவல் துறையிடம் நிலைமையை கையளித்தது. அதன் வழக்கமான கைங்கர்யத்துக்கு பின் தமிழனுக்கு புதிய குறியீடு கிடைத்து விட்டது.

    அடிபட்ட வேங்கை மீண்டும் இப்போதே சீறலாம். அல்லது சொத்து குவிப்பின் தீர்ப்பு அல்லது இடைத்தேர்தல்/உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியை கடித்து குதறலாம்.

    எப்படி இருந்தாலும் அது ரத்தம் பார்க்காமல் விடாது.

  19. VKK says:

    Firstly , 50 MPs should have resigned which was the first demand as Jallikattu was not initiated by these Members in the Parliament.
    SEcondly, for the past 2 years, Tamilnadu BJP has only been singing MODI song and not concentrating on any Tamilnadu specific problems like Mullai Periyar, Srilankan Fisherman, Farmers Issues, Cauvery Issue. These people have mnot done any thing except simply talking
    Thirdly, every political party, Cinema people including Ragava Lawrence, Hip Hop Adhi, RJ Balaji were only trying get mileage out of any big disaster happening. People like Kamalhasan, Samutrakani were also supporting but certainly they wre kept out by the Jallikattu protest team
    Fourthly, There was no Legal team to safe guard them although Law college students were in the protest.
    Fifthly , the foremost question AIADMK and Police atrocity has always been there with the Teachers protest, Political Protest, Disabled Protest, Any Protest for that matter, where they were not able to face and resolve or remedify or ratify the issues . Hence O.Panneerselvam is no exception
    Sixthly undoubtedly THIS GOVERNMENT HAS TO GO WHICH HAS TO TAKE PEOPLE MANDATE AS PEOPLE DID NOT VOTE FOR OPS LEADERSHIP WHICH EVERY VOTABLE PERSON WILL ACCEPT. This will safe guard the interest of the People of Tamilnadu and Nation also.

  20. Raj says:

    we have to appreciate OPS and he should continue, otherwise somebody will occupy his position which will be dangerous for tamilnadu.

  21. Rayan says:

    As like agitation ended in bad way you have ended article with soft corner towards police attack rather then tough. Firstly Police attacked peaceful protester instead of providing more clarity. Without giving ordinance details to agitator. You have made a point if ordinance is provide it will make peta to file case. Is it not diverting ?

  22. mdbharathi says:

    அருமையான கட்டுரை

  23. L.Panneerselvam says:

    சவுக்கின் இந்த கட்டுரை உண்மையை உரைப்பதாகவே உள்ளது. நேற்று வரை நல்லவர்களாக விளங்கிய ஆதி,ஆர்ஜே.பாலாஜி, சேனாதிபதி போன்றோர்கள் இப்போது கெட்டவர்களாக தெரிகின்றனர். இது எத்தகைய வெளிப்பாடு? நல்லதை தெரிவிப்பவர்கள், உணர்ச்சியைத் தூண்டி எதிர்ப்பவர்கள் என்பவர்களுக்கு இடையே வேறுபாட்டை உணராத கூட்டமாகத்தான் இருந்தார்கள். உண்மையை உணர்ந்தவர்கள் விலகிவிட்டனர். சிலர் உண்மையைத் தெரிந்தும் போலியாக உணர மறுத்தனர்.இந்த போராட்டத்திலிருந்து தெரிந்துக்கொள்ள வேண்டியது.: மாணவ இளைஞர் சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். எந்த போராட்டத்திற்கும் வரையறுக்கப்பட்ட தெளிவான நோக்கம் அல்லது கோரிக்கை வேண்டும். நிச்சயம் ஒரு தலைமை தேவை. தவிர, கலவரம் என்றாலே அழிவும், இழப்பும்தான். இதில் ஒரு சாராரை மட்டும் குறை சொல்லி பயனில்லை. அரசு என்பது அரசுதான்.

  24. P.R.Chandran says:

    As rightly pointed in the Savukku, though it is a himalayan victory for the general public by assembling such big crowd in the marina, the entire world talks about the agitation,but the ending was become sad due to non availability of readership of coordination among the Students,Social activities etc., It is natural in any movement the political parties will always try to sanitise the movements.Here also it happened.However we have to salute the entire people who have sat day and night to convey their feeling to the Governments. Please don’t criticize the voluntaries who have done good job for success of this agitation.

  25. SundarWipro says:

    அருமையான கட்டுரை! எந்த போராட்டமும் உரிய நேரத்தில் முடிக்கவில்லை என்றால் அது வீணர்கள் கையில் கிடைத்துவிடும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஜல்லிக்கட்டு போராட்டம்.

  26. Ila says:

    Good artical..

  27. manohar says:

    true true true

  28. Narayanan says:

    சவுக்கு பன்னீர்க்கு ஜால்ரா அடிக்காதே நீ ஒரு ஆம்பளையா
    மானம் கெட்டவனே மெரினா போரட்டம் மாபெரும் வெற்றி கரும்புள்ளி என உளறுகிறாயே மட சாம்பிராணி… புரட்சி புடலங்காய் ஒடி போ…

  29. ANAND THIAGARAJAN says:

    வழக்கம் போல் ஆழமான அலசல். இதை சொல்ல அறிவும் நேர்மையும் வேண்டும். சவுக்கை தவிர வேறு யாரை நம்ப முடியும்,

  30. சி.நி says:

    நல்ல திசை திருப்பும் கட்டுரை, இந்த கட்டுரையை நியமான கட்டுரையாக ஏற்றுகொள்ள முடியவில்லை. நீங்கள் கட்ரை எழுதிய உள்னோக்கமும், ஒருபச்சமாக எழுதியுள்ளதும் வெளிச்சம். ஆக இந்த கொத்துவிட்டு அளையிர கட்டுரை சொல்லாது. மீண்டும் முயற்ச்சிக்கவும்.

  31. அர்ஜுன் says:

    உங்க பதிவை கொஞ்சம் சீக்கிரமா பதிவிட்டிருக்கலாம்

  32. kumar ns says:

    கரும்புள்ளி மாணவர்க்கு இல்லை. காக்கும் கரங்களுக்கே

  33. kumar ns says:

    வசதியாக மறுக்கப்படும் நிஜங்கள்:
    1. ஜல்லிகட்டு மட்டும் நிறைவேறிவிட்டால் போதுமா. இதற்கு மட்டும் ஆசைபட்டவர்கள் முந்தைய நாளே வெளியேறிவிட்ட குறுகிய குறிக்கோள்கொண்ட ?ஆதிக்க அமைப்புகள். 1 வாரம் ஜல்லிகட்டிற்கு போராடியது மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் மட்டுமே. ஜல்லிகட்டு அமைப்புகள் கூட்டம் திரட்டவில்லை.
    2. அத்தகைய மாணவர் மக்களுக்கு ஜல்லிகட்டைவிட மிக அத்தியாவசியமான அவமானகரமான பிரச்சனைகளை கேட்பதற்கு கட்டாயம் உரிமை இல்லை என்றுகூறுவதுதான் காட்டுமிராண்டித்தனம். விவசாயிகள் தற்கொலை -காவிரி கிடைக்கவில்லை என்றாலோ -peta cocacola போன்ற அந்நியநாட்டு ஆதிக்க முதலாளிகளை எதிர்த்து கேள்விகேட்டால் இளைஞர்களுக்கு “தேசவிரோதிகள்” என்று முத்திரை குத்துவதா? peta ban முதல் 4 நாள் கோரிக்கை எங்கே போனது ஏன் மழுங்கடிக்கப்பட்டது. ஆதி வெற்றி meetல் சொல்கிறார் “jersey” மாடு, (இறக்குமதி, அதாவது A2 பால், குழந்தைகளின் உடல்நலம்,) Coke Pepsi எல்லாம் பற்றி அக்கறையில்லை என்று. திடீரென்று பின்வாங்க என்ன காரணம். அப்படியென்றால் போராடும் மாணவர் தங்களை எப்படி நம்புவர்.
    3. மெரினாவில் மாணவர் கூட்டத்தில் தற்போதுவரை வன்முறை நடந்தது என்று காட்டமுடியுமா? கலவரம் கடற்கரைக்கு வெளியேத்தானே நடந்தது?
    4. யார் வன்முறையில் ஈடுபட்டது என்பதை உள்ளூர் ஊடகங்கள் மறைக்கச்செய்தாலும் உலக ஊடகங்கள் yutubeல் அனைவரும் பார்க்கின்றனர்.நான் CNN 18 ல் பார்த்து வெட்கி தலைகுனிந்தேன்.
    5. 3 வருடம் மத்திய மாநில ஆட்சியாளர்கள் இத்தகைய சட்டம் இயற்றாமல் தமிழக மக்கள் அனைவரையும் ஏமாற்றிவந்தது மெத்தனமாகவா கயமைத்தனமாகவா? இதை சுட்டிக்காட்ட தைரியம் இல்லாத ஊடகங்கள் no morality
    6. தாங்கள் சொன்ன 2 அமைப்புகள் (ம.அதிகாரம் போன்றவை) களத்திலேயே தென்பட இல்லை.
    7. சாலைகளில் வன்முறையில் ஈடுபட்டது அந்தந்த பகுதிமக்கள் மற்றும் xxx மாதிரித்தான் தெரிகிறது. அதுவும் மெரினாவில் கூட்டத்தை கலைத்ததற்காக என்றுபுலப்படுகிறது.
    அப்பட்டமாக தவறான கருத்துரைகளை பரப்பி அறவழிப்போராட்டத்தை களங்கப்படுத்துவது கேவலம்.

  34. போராட்டம் துவங்கும் போது இந்த இளைய தலைமுறை ஏட்டுச்சுரைக்காய்கள், முட்டாள்கள், அரசியல் அறிவு அற்றவர்கள் மேலும் இவர்கள் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க மாட்டார்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் இன்றைய அரசியல் சூழல் அவர்களுக்கு உதவிவிட்டது. அதில் அவர்கள் வென்றும் இருக்கிறார்கள். ,சூழ்ச்சிகளில் சிக்கியது, அடி வாங்கியது, கூட்ட மனப்பான்மைக்கு மயங்கியதால் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து நிறைய கற்றும் இருக்கிறார்கள். வெறும் பணங்காய்ச்சி மரங்களாக வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு சமூக அக்கறை இருக்காது,சுயநலமிகளாக தான் இருப்பார்கள்,தனக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பார்கள் என்ற பொதுபுத்தியை தகர்த்து விட்டார்கள்..

    இன்றுள்ள அரசியல் சூழல் இளைஞர்களிடம் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கையை தந்துள்ளது.தற்போதைய இளைய சமுதாயம் பணமதிப்பு இழப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலை நிச்சயமின்மை போன்றவற்றால் பாதிப்படைந்துள்ளனர். அரசு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிற இந்த சூழலும் புரட்சிக்கு வித்திட்டது. போராட்டம் கொண்டாட்டமானதும் இளைய சமுதாயத்தை எழுச்சி கொள்ள வைத்துவிட்டது…

    இந்தப்புரட்சியின் விளைவு மெரினாவோடு போகாமல் தன்னளவில் இளைய சமுதாயம் விழிப்படைந்தால் அதுவே வெற்றி.

  35. Jai says:

    தாத்தா காலத்துக்கு ஒரு சுதந்திர போராட்டம்
    அப்பா காலத்துக்கு ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம்
    நம்ம காலத்துக்கு இது (அறவழியில் உரிமை மீட்பு போராட்டம்)
    மார்தட்டிக்கொள்ளலாம்

  36. Thamil Sandron says:

    But why you don’t include RSS role in distrubing this protest ? They are man behind the fierce lathi charge …

  37. Sathya says:

    மத்திய அரசு தொடர்ந்து சேகர் ரெட்டி, ராஜசேகர் ராவ் போன்றோரை குறி வைத்ததால் தன் பலத்தை காட்டவே இந்த போராட்டத்தை வேடிக்கை பார்த்தாரா OPS

  38. vijay says:

    இந்த கட்டுரை பண்ணீர்செல்வம் அவர்களுக்கு சோம்பு தூக்கும் வம்பு கட்டுரை !
    எதோ பண்ணீர்செல்வம் அவர்கள் ஆளுமை மிகுந்த மனிதர் போலவும் மக்கள் நலனில்
    அக்கறை கொண்டவர் போலவும் , காவல் துறை அவரின் ஆளுமையில் இல்லை என்பது போலவும்
    பண்ணீர் செல்வத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது போலவும்
    எதற்கு இந்த வீண் வேலை ?

    பண்ணீர் செல்வம் முதல்வர் அனைத்து DEC 6 இன்று தேதி JAN 24 மாணவர்கள் போராடும் வரை
    இந்த அவசர சட்டம் என்ற ஒரு வழிமுறையை என் அவர் கொண்டு வரவில்லை ?

    இதை பொங்கல் முன்பே செய்து இருந்தால் இந்த போராட்டமே இல்லையா !
    ஊரே பத்தி எறிந்தாள் தான் பண்ணீர் அசைவு கொடுப்பாரா ?
    அதற்கு savvuku ஒரு பாராட்டு பாத்திரம் வேறு வாசிக்கிறார்

    Jan 3 அன்று அலங்காநல்லூரில் எதிர்கட்சி தலைவர் போராட்டம் செய்தபோது இதே அவசர சட்டத்தை
    கொண்டு வாருங்கள் என்று கூறினார் !

    அது ஏன் பண்ணீர் காதில் விழவில்லை !

    சசிகலாவிடம் இருந்து தன் பதவியை காப்பாற்றி கொள்ள இந்த போராட்டத்தை
    பண்ணீர் அனுமதியளித்தார் , தண்ணீர் ஊத்தி வளர்த்தார் , அந்த வேலை முடிந்த உடன் அதை களைத்து விட்டார் போலீஸ் வெய்து
    இது தான் நடந்தது !

    இனி ஒவ்வொரு முறையும் இதே முறையை தான் அவர் கையாளுவார் !

  39. Tamilandreams says:

    Vaikunda Rajan is against present Government.. Other than that this article is more or less good

  40. Ragu says:

    .பெரும்பாலும் போராட்டம் என்றால் ஆளும் கட்சியை எதிர்த்தே நடக்க வேண்டும் ( சில மிக குறுகிய போராட்டங்களை தவிர ). மக்களாட்சியில் பெரும்பாலும் பாதி பேருக்கு மேல் ஆளும் கட்சிக்காரர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 30 விழுக்காடு ஆதரவாவது இருக்கும். அதனால் அவர்கள் முழு மனதோடு எந்த போராட்டத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆகவே இது போன்று தமிழகமே ஒரே குரலை கேட்பது அரிது.

    ஜெயலலிதா மரணத்துக்கு பின் சசிகலாவின் கட்டுப்பாடுக்குள் தமிழகம் வந்ததை அதிமுக அடி மட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை என்பது உலகறிந்த ரகசியம். அதனால் அவன் அரசை எதிர்த்து போராட தயங்கவில்லை. எதிர்கட்சி காரனுக்கு போராட காரணமே தேவையில்லை. இருவரும் ஒன்று சேர்ந்தால் ? இத்துடன் தான் வாக்களிக்காத நடுவண் அரசு. நடுவண் அரசை வெகுவாக வெறுக்கும் சிறுபான்மை சமுதாயம். வரலாறு காணாத சூழல், அதனால் வரலாறு காணாத போராட்டம்.

    சுருங்க சொன்னால் இது சசிகலாவுக்கு எதிரான போராட்டம். ஆனால் எனோ இது பெரிதாக தெரியவில்லை. நுணுக்கமாக பார்த்தால் புலனாகும்.

    இந்த போராட்டம் சுமுகமாக முடியவில்லை என்பதாலும். அடிப்படை கூறுகள் மாறவில்லை என்பதாலும் இது மீண்டும் வேறொரு வடிவத்தில் வெடிக்க வாய்ப்பு உள்ளது.
    அப்படி வெடித்தால் அது இனி அற வழியாய் இருக்காது. ஆட்சி மாற்றமில்லாமல் முடியாது என்று எனக்கு தோன்றுகிறது.

    • Rajasekaran.T says:

      உண்மை .தமிழக மக்கள் வெறுமையில் இருக்கிறார்கள் ,தாங்கள்தான் எஜமானர்கள் என்று தெரியாமலேயே ,தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாய் வாழ்கிறார்கள் .

  41. suresh says:

    அருமை அண்ணா

  42. Manikandan says:

    ஆஹா, மெச்ச தகுந்த குறுக்கு வெட்டு தோற்றத்தை காட்டும் பார்வை மிக நீண்ட நாட்கள் கழித்து உங்களிடம் இருந்து….ஆயினும் காலம் கடந்த ஒன்று, இந்த சங்கை சரியான நேரத்தில் ஊதி இருந்தால், உங்களை ஆதர்சனமாக கொண்டு வரும் முன்னணி சமூக வலைதள போராளிகள் இதை கொஞ்சமாவது சரியான முறையில் முடித்திருப்பார்கள். போராட்டம் நடக்கும் போது வந்த உங்களின் பதிவுகளுக்கும், இதற்கும் – மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்.

  43. கருணாகரன் says:

    நிரந்தர சட்டம் பழைய பல்லவி என்ற கருத்து ஏற்ப்புடையதல்ல. அது குறித்து அரசோ, நீதித்துறையோ, ஊடகங்களோ, இதர பொது அமைப்புகளோ விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. எனவே இந்த தோல்வியானது அரசு, நீதித்துறை மற்றும் ஊடகங்களின் தோல்வி.

  44. Anonymous says:

    Very nice Mr.shankar sir.
    மிகவும் அற்புதமான வார்த்தைகள் ஒவ்வொன்றும்.

  45. முதல் 5 நாட்கள் மாணவர்கள் நடத்திய போராட்டம், அமைதியாக நடந்தது. பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர் எனில், போராட்டம் எவ்வளவு நல்ல முறையில் நடந்திருக்கும் என்பதை அறியலாம். சனிக்கிழமை இரவு, போராட்டம் கைநழுவிப் போனதை நாம் ஆதி அவர்களின் முகப்பதிவு மூலம் அறிந்தோம். அதில், எவ்வாறு திசை திரும்பியது, தான் வெளியேறியது அனைத்தையும் விளக்கினார். திரும்பவும், சேனாதிபதி போன்றவர்கள் பத்திரிக்கை சந்திப்பு மூலம் எவ்வாறு வெற்றி கிடைத்தது, போராட்டத்தை நிறுத்தி வீடு திரும்ப கோரிக்கை வைத்தார். இதுவரை மாணவர் போராட்டம். இது மகத்தான வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress