வில்லா கட்டும் வில்லன்.

1-20170225_JMT_0590-e

ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 122 அடி உயர சிவன் சிலையை நிறுவி அதை திறப்பதற்கு பிரதமர் மோடியை வரவழைத்ததும், எதிர்ப்புகளை மீறி அதில் பிரதமர் கலந்து கொண்டதும் பல்வேறு மட்டங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷா மையம் குறித்தோ, ஜக்கி வாசுதேவ் குறித்தோ எவ்விதமான விமர்சனங்களையும் எழுப்ப முடியாது.   அந்த அளவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரவலாக பெருகி இருந்தனர்.   ஆனால், இன்று ஈஷா மையத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தலுக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.     ஈஷா மையத்துக்கு வரும் அனைவரையும் மூளைச்சலவை செய்து, அவர்களை அடிமைகளாக மாற்றும் வல்லமை பெற்ற ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இத்தனை குரல்கள் எழுந்திருப்பதே ஒரு வியப்பான விஷயம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நண்பரின் அறிவுரையின்படி, ஈஷா மையத்தின் ஒரு வார கால யோகா பயிற்சி வகுப்புக்கு செல்ல நேர்ந்தது.   முக்கிய நபர்கள் பலர், அந்த பயிற்சி நன்மை பயக்கும் என்றனர்.  பயிற்சிக்கான கட்டணமாக 750 ரூபாய் பெற்றனர் என்று நினைவு.   அந்த கட்டணம் விருப்பக் கட்டணம் அல்ல.  கட்டணம் செலுத்தினால்தான் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும்.   கட்டணம் செலுத்தியவுடன் அவர்கள் அளித்த ரசீதில், நன்கொடை என்று இருந்தது.   வருமான வரிச் சட்டம் பிரிவு 80 Gயின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டது என்றும் இருந்தது.  இதுவே பெரும் நெருடலாக இருந்தது.    நன்கொடை என்பது நாமாக விரும்பி அளிப்பது.  கட்டாயமாக வசூலித்து விட்டு அதற்கு நன்கொடை என்று ரசீது அளித்தால் அது மோசடி இல்லையா ?  இப்படிப்பட்ட மோசடியை தெரிந்தே அரங்கேற்றி வரும் ஜக்கி வாசுதேவைத்தான் இவ்வுலகை வாழவைக்க வந்த வள்ளல் என்று புகழ்கின்றனர். ஈஷா யோக மையம் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 80ஜி வரி விலக்கை துஷ்பிரயோகம் செய்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வருவதால், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த சலுகையை ரத்து செய்ய வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முறையிடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் சொல்லிக் கொடுத்த யோகா பயிற்சிகள் பயனுள்ளவைதான்.       ஆனால், பயிற்சியின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் உண்மை முகத்தை காட்டத் தொடங்கினர்.   உருத்திராட்ச மாலை அணிந்தால் அது மனதை ஒருமுகப்படுத்தும் என்றனர்.   ஒரு உருத்திராட்ச மாலையின் விலை 1500 ரூபாய் என்றனர்.  அதன் பிறகு ஜக்கியின் உரைகள் அடங்கிய டிவிடிக்கள், அவர் படங்கள், கடவுள் படங்கள் போன்றவை பல நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டன.  அத்தனை விற்பனைக்கும் நன்கொடை என்றே ரசீது அளிக்கப்பட்டது.

இதன் பிறகே ஜக்கி குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றியது.  உடனடியாக கோவை சென்று, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜக்கி ஆசிரமத்துக்கு சென்றேன்.   ஆசிரமத்தினுள்ளே தியான லிங்கம் என்ற குடில் இருந்தது.   அதனுள் பலரும் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர்.    அங்கே கண்ட பலரும், மொட்டை அடித்துக் கொண்டு சன்னியாசம் ஏற்றவர்களாக இருந்தனர்.     பல லட்ச ரூபாய் சம்பளம் தரும் பதவிகளை துறந்து குடும்பத்தை துறந்து சன்னியாசம் ஏற்பது அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது.  ஆனால், வயதான பெற்றோரை, கணவரை, மனைவியை, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, இருக்கும் பணத்தையெல்லாம் ஜக்கியிடம் அளித்து விட்டு சன்னியாசம் என்று ஒரு ஆசிரமத்தில் குடியிருப்பது சரியான காரியமாகப் படவில்லை.    தன் மகளும், மகனும் துறவறம் பூண்டு சென்று விட்டனர்.   அவர்களை பார்த்தே வருடக்கணக்காக ஆகிறது என்று பெற்றோர்கள் கண்ணீரோடு பேசுவதை பார்க்கையில், அவர்களின் துறவறம் எப்படி அறம் சார்ந்த காரியமாகும் ?  இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான துறவறங்களை ஊக்குவித்து விட்டு, தன் மகளுக்கு மட்டும் சிறப்பாக திருமணம் செய்து வைக்கும் ஜக்கியின் நடத்தை விமர்சனத்துக்கு உட்பட்டதா இல்லையா ?

20140903_CHI_0420-e

mo

ஜக்கியின் தந்திரங்கள் எளிமையானவை, ஆனால் வலிமையானவை.   சமுதாயத்தில் பிரபலமாக உள்ள அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களுக்கு நேர்முகம் கொடுத்து, அதை ஊடகங்களில் பிரபலமாக்கி, அதன் மூலம் சாமான்ய மக்களை தன் பக்கம் இழுத்து அடிமையாக்குவதே இவரது தந்திரம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், திமுக ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.    கருணாநிதியிடம் ஜக்கி வாசுதேவை அறிமுகப்படுத்தியவர் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ்.   அந்த நெருக்கத்தின் அடிப்படையில், திமுக ஆட்சியில் பல சலுகைகளை பெற்றுள்ளார் ஜக்கி.    அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர், அதில் ஈர்க்கப்பட்டு, ஜக்கியின் மவுண்ட் கைலாஷ் யாத்திரைக்கு பணம் கட்டினார்.  அதற்கான கட்டணம் 1.5 லட்சம் ரூபாய்.    அந்த யாத்திரையில் அவரோடு பயணித்தவர்கள் மொத்தம் 600 பேர்.   யாத்திரை சென்று வந்த பிறகு ஒரு ட்ராவல் ஏஜென்சியில் கைலாஷ் யாத்திரைக்கு எவ்வளவு ஆகும் என்று விசாரித்தபோது, வெறும் 42 ஆயிரம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.   600 பேருக்கு எவ்வளவு ஆகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இது மட்டும் அல்ல.   ஈஷா யோக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்த தாக்கத்தில் அந்த நண்பர், ஈஷாவில் சொல்லிக் கொடுக்கும் யோகா பயிற்சிகளை வீடியோ வடிவில் உருவாக்கி ஒரு இணையதளத்தில் ஏற்றியிருக்கிறார்.    அந்த வீடியோவை உடனடியாக நீக்குங்கள் என்று ஈஷா தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது.   நண்பர் மறுத்ததும், அவர்களே புகார் அனுப்பி அந்த இணையதளத்தையே முடக்கியுள்ளனர்.

யோகா பயிற்சியை சொல்லிக் கொடுக்கிறோம் என்றால், அதை இப்படி ரகசியமாக மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன ?  ஈஷா மையத்துக்கு பணம் கட்டித்தான் யோகா கலையை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது வியாபாரம் இல்லாமல் வேறு என்ன ?

ஈஷா நிறுவனத்தால் 12 நிறுவனங்கள், கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல கட்டுமான நிறுவனங்கள்.  இந்த 12 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் ஈஷாவின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் செயல்பட்டு வருகின்றன.

Isha Companies JPEG

ஈஷாவில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் செல்வந்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்களை தங்க வைக்க தற்போது உள்ள ஈஷா மையத்திற்கு உள்ளாகவே குளிர்சாதன வசதியோடு கூடிய குடில்கள் அமைந்துள்ளன.  ஆனால் ஈஷா மையத்துக்கு வரும் பிரமுகர்களை வசதியோடு தங்கவைத்து, அவர்களிடமிருந்து டாலர்களை உருவுவதற்கு தற்போது உள்ள இடங்கள் போதுமானதாக இல்லை.   இதனால்தான் வில்லா போன்ற வீடுகளை ஈஷா மையத்துக்கு அருகாமையிலேயே கட்டவதற்கு திட்டமிடப்பட்டது.  ஏற்கனவே ஈஷா மையக் கட்டிடங்கள் அனைத்துக்கும் அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.   இந்த மனு தவிர, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு பொதுநல வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Capture1

இந்த பதில் மனுவில், ஈஷா மையத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இன்று வரை எவ்வித அனுமதியும் இல்லாமல்தான் கட்டப்பட்டுள்ளன என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது.  இந்த நிலையில் புதிதாக வில்லாக்கள் கட்டுவதற்கு விவசாய விளை நிலைங்களை அழித்து, யானைகள் வழித்தடத்தில் புதிய கட்டுமானங்களை செய்தால், அதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது ஜக்கிக்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான், க்ருஷி லேன்ட் ஃபார்ம் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதனை வழக்கம் போல கோவையில் பதிவு செய்யாமல், டெல்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார் ஜக்கி.   இதன் இயக்குநர்களாக உலகளவில் பிரபலமான சத்தியபால் டிசைனர்ஸ் என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் உரிமையாளரான புனீத் நந்தா என்பவரும், ஏபிஎன்  மற்றும் இராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட் வங்கிகளின் முன்னால் துணைத்தலைவரான மெளமித சென் சர்மா என்ற பெண்மனியும் உள்ளனர்.

Company Registration Directors

க்ருஷி கட்டுமான நிறுவனத்துக்கும் ஈஷா நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்பது போல நிரூபிக்கவே தனியாக வேறு பெயரில் கட்டுமான நிறுவனம் தொடங்கப்பட்டாலும், க்ருஷி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள்  இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஈஷாவின் தீவிர ஆதரவாளர்கள். இதில் மெளமித சென் சர்மா தனது வேலையினை உதறிவிட்டு தற்போது ஈஷா யோகா மையத்திலேயே வசித்து வருகின்றார். இவருக்கு தொண்டாமுத்தூர் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது.  புனீத் நந்தா தனது முகநூல் மற்றும் வலைப்பக்கத்தில் தன்னை ஈஷா மையத்தில் 2006 முதல் தன்னார்வலராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

atm

Moumita sen

மேலும் கிருஷி லேண்ட் பார்ம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டாலும் இதனை பதிவு செய்தவர்கள் திருப்பூர் வேலம்பளையம் சுவர்ணபுரி அவன்யூவில் உள்ள சத்குரு இல்லத்தில் இயங்கிவரும் ஒரு கணக்கு தணிக்கையாளரால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வில்லா வகையிலான வீடுகளை கட்டுவதற்கு அனுமதி கேட்டபோது, வனப்பகுதி மற்றும் மலைத்தள பாதுகாப்புக் குழு அனுமதி வேண்டும் என்று அனுமதி தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   ஆனால் இந்த நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, வீடு கட்டுவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளது.  அந்த வழக்கில்  பதில் மனு தாக்கல் செய்த வனத்துறை, இவர்கள் கட்டுமானத்துக்கு அனுமதி கோரும் இடம், யானைகளின் வழித்தடம் என்று பதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.   அவர்கள் கட்டுமானம் செய்ய அனுமதி கோரும் இடத்துக்கு வெகு அருகில்தான் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

High Court Case 1

க்ருஷி நிறுவனம் அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில், வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பு

க்ருஷி நிறுவனம் அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில், வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பு

ஈஷா நிறுவனம் 3 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட கட்டிடங்களை நகர் ஊரமைப்புத் துறையிடமோ, மலைத்தள பாதுகாப்புக் குழுமத்திடமோ அனுமதி பெறாமல் கட்டு வந்தது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்தை ஏமாற்றவே க்ருஷி என்ற பெயரில் இந்த கட்டுமானங்களை செய்து வருகிறது.

ஈஷா நிறுவனம் மீதான முக்கிய குற்றச்சாட்டே யானைகள் வழித்தடத்தை அடைத்து, கட்டுமானம் செய்து வருகிறார்கள் என்பதுதான்.   இந்த நிலையில் தற்போது அதே பகுதியில் விவசாய நிலங்களை அழித்து, அடுக்குமாடி வீடுகள் மற்றும் வில்லாக்களை கட்ட இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

ஈஷா நிறுவனம், சட்டத்தை மதிக்காமல், இயற்கையை அழித்து கட்டுமானம் செய்து வருவதும், அரசு அதிகாரிகள் துணையோடு, இக்கட்டுமானங்கள் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருவதும் ஆவணங்களோடு நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.   இந்நிலையில், வேறு பெயரில் இதே போன்ற சட்டவிரோத கட்டுமானத்தை நடத்துவதற்கு ஈஷா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

இது தவிர, டீசர்ட் முதல் ஊறுகாய் வரை, நேரடியாகவும் இணையம் மூலமாகவும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்து வருகிறது ஈஷா.  இந்த வியாபாரத்தின் மூலம் வரும் அனைத்து வருமானமும் நன்கொடை என்று வரவு வைக்கப்பட்டு, வாட் வரி, வருமான வரி என்று கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      ஒட்டுமொத்தமாக மோசடியின் மொத்த உருவமாக ஈஷா நிறுவனம் திகழ்ந்து வருகிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.

Capture2

 

சத்குரு சன்னதி என்ற பெயரில் விற்கப்படும் ஒரு படத்தின் விலை 1,31,700 ரூபாய்.

சத்குரு சன்னதி என்ற பெயரில் விற்கப்படும் ஒரு படத்தின் விலை 1,31,700 ரூபாய்.

2013ல் இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டது.   நீதிமன்றம் அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 112 அடி உயர சிலை உருவாகியிருக்காது.    சட்டத்தை மதிக்காமல் மதத்தின் பெயரால் சாமியார் ஒருவன் அயோக்கியத்தனம் செய்து வருகிறான்.  ஆனால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய நீதிமன்றமோ மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.  இந்த ஆழ்ந்த உறக்கத்தினால்தான், ஜக்கி வாசுதேவ் போன்ற பலப்பல மோசடி சாமியார்கள் மேலும் மேலும் உருவாகி வருகின்றனர்.

இப்போதாவது நீதிமன்றம் தலையிட்டு, ஈஷா நிறுவனத்தின் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தத் தவறினால், நீதிமன்றமும், ஈஷாவுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

 

You may also like...

40 Responses

 1. Satis says:

  Readers, Then how he got Padma Vibhushan award from Govt Of India.

 2. suresh says:

  Iyappan is not confluence Shiva and Vishnu.There is no reference from authenticate Hindu text books. Iyappan nothing but Sashtha village diety of TamilNadu.

  I surprised when this concept came.

 3. S RANGARAM says:

  எந்த சிவப்புராணத்தில் காட்டை அழித்து 112 அடி சிலையைக் கட்டச் சொல்லியிருக்கிறது. எம்மதமும் சம்மதமே

 4. இனியவன் மார்க்ஸ் says:

  ஜக்கி ஒரு கேடி. அவனை நக்கிப் பிழைக்கும் ஜெயமோகன், லட்சுமி மணிவண்ணன், மோடியென்ற கேடி, இவர்களிடமிருந்து அறிவுசார்ந்த எந்த எதிர்வினையையும் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில் வாடிவாசல், நெடுவாசல் போராட்டங்களுக்குப் பிறகு, நாம் முன்னெடுக்க வேண்டிய போராட்டம், இந்தப் பக்கியை வெள்ளியங்கிரி மலைகளிலிருந்து விரட்டுவதாக இருக்கட்டும். சவுக்குக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

 5. Ayyasamy says:

  இந்த சவுக்கு சொல்வதுபோல், சென்னையில் உள்ள கிண்டி கிங் இன்ஸ்டிடூடில், dogs இன்ஜுக்ஷன் போடும்போது ரசீதை கொடுப்போர்கள் பொய் வாங்கி பாருங்கள், அதில் டொனேஷன் என்பது தன இருக்கும், ஏதோ குற்றம் சொல்லனுனு சொல்லாதீர்கள். லக்க்ஷ கணக்கான பேர்கள் வந்து செல்கிறார்கள்

  • 5kodi Tamilanil oruvan says:

   I personally know a guy who follows isha yoga, why he needs to keep jaggi image in poojai room, is he equal to all the available gods…….They all brain washed by him…Y they need to charge for yoga…Injection may cost,……sharing knowledge cannot be priced

 6. Ayyasamy says:

  இந்து மதத்தை விமர்சிக்கிக்கும் இவர்கள்,எல்லா காடு மலைகளையும் ஆக்கிரமித்து கட்டியிருக்கும் church -கலை குறை சொல்லமுடியுமா, ஏனனில் இந்துக்கள் இளிச்சவாயன்கள் தானே. தில்ல இருந்தால் charch & மசூதி பத்தி பேசுங்கள்

  • Sindu says:

   Excuse me.. nanum Hindu dhan sir. Naane soldran. Ivan oru fraud.
   Naanum meditation yoga follow pandren.
   Ungalukellam nalladhe pidikadhulla .?
   Nallavangalayum pidikadhu?
   Vedathri Maharishi Vallalaar Kirubananda Vaariyar pondra Mahaangal vaazhndha boomi idhu. Ivanga ellam yaarunu therilana google pannunga. This guy jakki is an illuminati.. poisoning next generation and a curse to the society.
   Please Don’t encourage him.

   • Vinoth Kumar says:

    இப்ப எல்லாம் சர்ச்சைல சிக்குனாலே குற்றவாளி ஆயிடுறாங்க. காருண்யா பற்றியும், சில நாட்கள் முன்பு கேரளாவில் நடந்த பாதிரியார் பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதை பற்றி கட்டுரை போடலாமே. குற்றம் களைவது நோக்கமா இல்லை இந்துக்கள் பற்றி மட்டும் தான் இங்கு கட்டுரை வருமா?

    • 5kodi Tamilanil oruvan says:

     Hinduism is a culture more than a religion. So dont boast that hinduism is a religion

     • Shankar says:

      You are absolutely right, You may please add and give more clarity, Hinduism is a science, and more than a religion. we follow hinduism philosophies, means, we follow science and nature. Vivekananda did not attribute Hinduism to Idol workship, he only stated and portrayed it as science and asked everyone to followed Dhyana, Yoga and Sidda. Which God he asked to follow. IN fact , he has argued when his Guru Ramakrishnaji told him to go to kali temple.

  • 5kodi Tamilanil oruvan says:

   Dont make and pull hinduism into it….Cld u imagine jaggi as vishnu or siva…………….If some one say about something speak about it instead pulling other string….a simple crooked mentalilty common u people need other sites not savukku i think….keep ur religion in home dont take it in your pocket wherever u go

   • Sindu says:

    Am not concerned about religion. To make him understand.. I mentioned my religion. Am sorry for that.
    To me… religion has nothing to do with “yoga and meditation”
    There is only one God just in different forms. That’s it. And person like jakki has no rights to claim ownership on the treasured practice by our ancestors.

 7. Vinoth Kumar says:

  கைலாஷ் யாத்திரைக்கு தனியாக சென்றாலும் ஒரு லட்சம் வரை செலவாகும். உண்மையை வெளியிடுவதாக நினைத்து நடுநிலை தவறி போகிறது சவுக்கு. அப்ப ராஜா சொல்வது போல காருண்யா விதி மீறல் பற்றி ஒரு கட்டுரை கூட இல்லை.

 8. லோகன் says:

  ஏன் இங்கே பொய்யான தகவல்களை கூறி எதை சாதிக்க முயற்சிக்கிறீர்கள்.
  தனிஒழுக்கம் இல்லாதவர்களை தலைவர்கள் என துதிபாடும் கூட்டம் வேறென்ன சிலாகிக்க முடியும்…

 9. V K K says:

  Crime, Crime Management, Crime Practices, Crime Punishment has attained Philosophical and Moral values due to our Politicians’ auspices and endorsement.

  Mr.Edapadi Pazhanisamy, Tamilnadu CM has Criminal Cases against him. Ms.Sasikala is said to be discussing about the Positions of IAS and IPS officers sitting in Jail controlling the Governance and Government procedures. If Accused Detainees like Ms.Sasikala is allowed to control Tamil Nadu Government through her Proxy and the so attached Honourable Ministers are taking instructions how can people like Jaggi Vasudev be in the Legal Tangle or Law / Legislation can near him while he knows that there is a cost and cause.

  Can anyone register a case in Coimbatore against Jaggi Vasudev. It is a a Challenging Question ? While a case itself cannot be registered and after Modiji visit the cases registered by the Tribal can also be nullified and made void

 10. GV K K says:

  Dear Savukku,

  Your Great Contributions have some meaning spiritually, Religiously and certainly Adds Social Values. Article on Jaggi is not on Hinduism but on the Religious Values of Velliangiri which people should understand which has been encroached, eloped and grabbed by ISHA and group.
  Please continue your Good Work, Savukku.

  Hinduism is a religion which embraces and endorses the eternity to God by Service to Mankind which was followed earlier.

 11. GV K K says:

  Savukku,
  There are mixed responses this reaction itself proves that there is conspiracy on this.

  Whenever we discussion about one Discrepancy or potential allegation, we always balance it by putting another similar one to compromise like , Isha discussion leads to Karunya always. Karunya should be dealt separately if there is one. Isha should be dealt separately.

  Velliangiri Hills is a cultural, heritage and does possess pilgrim value and although some parts are under HR & CE has been fortified by Isha foundation. If Modi Govt can award Shri, Ravishankar, Shri Baba Ram Dev, Shri Jaggi Vasudev with Padma Awards then it goes to prove that Modi Government is certainly Agreeing to all the modalities, procedures, processes of these institutions.

  Until Now, none of the allegations, criminal cases have been proven at Judiciary committed by eminent personalities like Jaggi Vasudev. IAS, IPS officers, Politicians have paraded behind Jaggi which we saw on Feb 24 Feb under the auspices of the Guest of Honor , Prime Minister Shri Narendra Modi. This is solely private function of a private disputed Leader Jaggi Vasudev.

  Prime Minister did not find time to visit during Varda Cyclone where there was a huge disaster for Chennai and neighbouring places but he could spend close to 10 hours including his travelling time , FOR WHAT ? BJP stalwarts will have a reason to state that for Modiji all are equal. It is not a Government HR & CE function. It is a very private function and of course, you would find some of the eminent IAS officers, IPS officers and I*S officers witnessing the Maha Shivratri. Is this function accelerating Good Employment opportunities, Good Industrialisation or any good for Economic Development or Value Addition for the People or Government or Industries or any virtue. ABSOLUTELY NO.

  JAGGI is not the protector of Hinduism nor the creator of Hinduism. People who have been embracing Hinduism like Shri.Ramana Maharishi, Shri, Ramalinga Adigalar, Shri Vallalar, Shri Ramakrishna Paramahamsar, Mutts like Ahobila Mutts have been doing so quitely. Mutts like Sankara Mutt who have been managing Temples and Institutions in India and Nepal are doing so with Sanctity as well. They have been Preaching REsponsibility, Discipline and Duties towards Oneself, God, Nation and People. So Let us not insult those predecessors that Jaggi is trying to save Hinduism. Not at all, if one could visit Isha Center, one could see that Hinduism is being commercialized, merchandised and sold.

  There could be no one to prove Jaggi VAsudev in the Court of Law as there will not be a case registered against him although there may be watermark cases registered and fade away in front of money and muscle power. It will be a waste of time to bring out evidences like Savukku as there are still people to debate, table and dispute IF KARUNYA CAN , why ISHA should not? It should be ISHA vs ISHA, KARUNYA vs KARUNYA, MUTT vs MUTT etc.

  If culture can be restored by a mass protest without a brand, leader, party like Jallikattu in Tamilnadu, Supporters of Crime and Criminals should remember that Evil shall be punished and Perish without any cherishes. Certainly there has been a Landgrab by Jaggi which should not be denied with the glorified alliance f Politicians and relevant people and with/without endorsement now with Central Government. Anything we discuss against BJP or Mr.Modiji , we are termed as Anti-Nationals is the trend after Demonetisation and now for this Function also.

  While Lord Murudeeshwara did not require Modiji, While Kumbabishekam of Tiruvannamalai did not require Modiji, The Ancestoral Centre of Deceased – Kumbabishekam of Lord Ramanathaswamy did not require Modiji, Kumbabishekam of Shri Kalahatheeswara did not require Modiji , why should Adi Yogi Shiva require Modi. It is simply to protect the Land and the Crime of Jaggi Vasudev.

 12. thiru says:

  Evanalam nadutharula amanama oda vitu sudanum jakki nai

 13. Raaj says:

  Ella naaigalum panathikkaga edai vendumanalum saapiduvaargal..edhir kaalathil saapadu kidaikkamal saagappogirargal..kadabulin peyaril kaiyaadal..thu..ivargalellam eppo thirunduvaargalo..

 14. selvarajan says:

  சவுக்கு … ! நீங்கள் எவ்வளவோ ஆதாரங்களை காட்டியுள்ளீர்கள் … ! ஆனால் : // Posted Date : 20:07 (02/03/2017) Last updated : 20:23 (02/03/2017)
  ‘ஒரேயொரு குற்றச்சாட்டை நிரூபியுங்கள், நான் விலகிக் கொள்கிறேன்…!’- ஜக்கி வாசுதேவ் பதிலடி // http://www.vikatan.com/news/tamilnadu/82528-prove-one-damn-thing-i-will-leave-says-jaggi-vasudev.html என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் — கூறியுள்ளது … ?

 15. Senthil says:

  சில விளக்கங்கள் ….

  (தப்பு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு !!! )

  // அந்த கட்டணம் விருப்பக் கட்டணம் அல்ல. கட்டணம் செலுத்தினால்தான் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும் //
  இதற்கு அங்கேயே விளக்கம் சொல்லிருப்பார்கள். ஏனென்றால், உங்களைப்போல இன்னும் சிலர் யோகா வகுப்பு எப்போதும் ப்ரீ தான் என்று நினைத்து வருவது உண்டு. ஆனால் இடத்திற்கான வாடகை, மின் கட்டணம்,etc என்று சில விஷயங்களும் உண்டு

  // கட்டணம் செலுத்தியவுடன் அவர்கள் அளித்த ரசீதில், நன்கொடை என்று இருந்தது // // அத்தனை விற்பனைக்கும் நன்கொடை என்றே ரசீது அளிக்கப்பட்டது //
  இந்த நடைமுறை மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 7-8 வருடங்கள் ஆகி விட்டது. 3 வருடத்துக்கு முன் நடந்ததாக நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை

  // ஆனால், வயதான பெற்றோரை, கணவரை, மனைவியை, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, இருக்கும் பணத்தையெல்லாம் ஜக்கியிடம் அளித்து விட்டு சன்னியாசம் என்று ஒரு ஆசிரமத்தில் குடியிருப்பது சரியான காரியமாகப் படவில்லை //

  இதுவும் தனிப்பட்ட விருப்பமாக தானே இருக்க முடியும். பணத்தை ஜக்கியிடம் கொடுத்தார்கள் என்று சொல்வதெல்லாம் அதீத கற்பனை. மேலும் ஆசிரமத்தில் இருந்தாலும் அடிக்கடி வீட்டிற்கும் சென்று வருவார்கள். ஆசிரமத்தில் இருந்து பார்த்தால் இதெல்லாம் தெரியும்

  // தன் மகளுக்கு மட்டும் சிறப்பாக திருமணம் செய்து வைக்கும் ஜக்கியின் நடத்தை விமர்சனத்துக்கு உட்பட்டதா இல்லையா //

  “சன்னியாசம் ஏற்பது அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது” என்று சொல்லிவிட்டு, மகளுக்கு திருமணம் செய்ததை விமர்சனம் செய்வது எப்படி நியாயம் ??. நாங்களும் தான் கல்யாணம், குழந்தை என்று வாழ்கிறோம்.

  // ஒரு ட்ராவல் ஏஜென்சியில் கைலாஷ் யாத்திரைக்கு எவ்வளவு ஆகும் என்று விசாரித்தபோது, வெறும் 42 ஆயிரம் என்று தெரிவித்திருக்கிறார்கள் //

  இதிலும் உண்மை இருப்பதாக தெரியவில்லை. வசதிகளை பொறுத்து தான் ட்ராவல் பேக்கஜ்.

  // ஜக்கியின் தந்திரங்கள் எளிமையானவை, ஆனால் வலிமையானவை. சமுதாயத்தில் பிரபலமாக உள்ள அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களுக்கு நேர்முகம் கொடுத்து, அதை ஊடகங்களில் பிரபலமாக்கி, அதன் மூலம் சாமான்ய மக்களை தன் பக்கம் இழுத்து அடிமையாக்குவதே இவரது தந்திரம். //

  அவர் யோக கலாச்சாரத்தை தான் பரப்புவார். நீங்களும் சாமான்ய மனிதர் தானே, பின் நீங்கள் ஏன் so called அடிமை ஆகவில்லை

  // யோகா பயிற்சியை சொல்லிக் கொடுக்கிறோம் என்றால், அதை இப்படி ரகசியமாக மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன ? ஈஷா மையத்துக்கு பணம் கட்டித்தான் யோகா கலையை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது வியாபாரம் இல்லாமல் வேறு என்ன ? //

  நோக்கம் என்னவென்றால், முறையான சில கால பயிற்சி இல்லாமல், எதை செய்தாலும் பிரச்சனை தான். வண்டி நன்றாக ஓட்ட தெரிந்தவர் தானே, வண்டி ஓட்ட கற்று கொடுக்க முடியும் ??

  // The Cottages //

  இது ஆசிரமம் உள்ளே தான் இருக்கிறது. நீங்கள் சொல்லியதில் உண்மை இல்லை

  // ஈஷா நிறுவனத்தால் 12 நிறுவனங்கள், கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல கட்டுமான நிறுவனங்கள். இந்த 12 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் ஈஷாவின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் செயல்பட்டு வருகின்றன //

  நீங்களே சொல்லி விட்டர்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என்று.

  // இந்த வியாபாரத்தின் மூலம் வரும் அனைத்து வருமானமும் நன்கொடை என்று வரவு வைக்கப்பட்டு, வாட் வரி, வருமான வரி என்று கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. //

  இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு

  =============================

  Sadhguru : There are groups which have their own agenda, They are all posing to be as environmental groups.

  👉There are whole lot of people who have Josh for hunting. Every Saturday Sunday they are eating venison (deer meat). We have stopped that.

  👉They were chopping sandalwood trees whenever they want; we have stopped that.

  👉There are groups growing marijuana in the forest; we have stopped that.

  👉And there were people who were exploiting tribal girls; when I stopped that, you should have seen the media onslaught that happened on me.

 16. Anonymous says:

  Ok aana ithuku mela kaata azhicha karunya pakathu iruke.atha pathi yaarume kelvi kekka mateengala

 17. A Responsible Citizen says:

  Keep up the good work ! savukku!!

 18. Dr MCS says:

  I hope he gets caught someday !

 19. Siva says:

  ராஜராஜசோழன் கோவில் காட்டியதும் இது போல தானே இருந்திருக்கும் ! கோவில் சிவம் நம்ம கலாச்சாரம் . சோறு , மனைவி , குழந்தை நீங்க விரும்பி உருவாக்கியது அது ஜக்கி சொல்லியா பண்ணீங்க . அவரால இந்த உலகத்துக்கு என்ன பண்ண முடியுமோ பல்லார் உங்களால ஏதும் பண்ண முடிஞ்சா பண்ணுங்க . நல்ல விஷயம்னா எல்லாரும் உங்க பின்னாடி வருவாங்க …ஏன் மத்தவளா திட்டுறீங்க … எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பது தான் தமிழர் மரபு

 20. இவ்வளவு பித்தலாட்டங்களையும் எந்த பயமும் இல்லாமல் ஜக்கி செய்கிறார் என்றால் சுலபமான காரியம் இல்லை, சமீப சில காலமாக அவருக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் தோன்றியபோதும் எவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை பிரதமர் மோடி கூட ஈஷாவுக்கு போய் ஜக்கியை அங்கீகாரத்தை கூட்டுமளவுக்குத்தானே நிலமை இருக்கிறது. மச்சக்காரப்பய.

 21. Ms says:

  They can’t compule to purchase product if u willing purchase otherwise …….. go don’t create fake images

 22. Ms says:

  ஜக்கி – அவதூறுகள்,வசைகள்.ஐயங்கள் குறித்து ஜெயமோகனின் நீண்ட நெடிய கருத்து. போலி செகிலர்கள், புரட்சியாளர்கள் மத்தியில் தன்னுடைய கருத்தைத் தெளிவாக வைப்பதில் ஜெயமோகனுக்கு நிகர் அவரே. தொடர்ந்து படியுங்கள்.

  * ( கொஞ்சம் நீளம்தான்….ஆனாலும் சரியான சாட்டையடி)

  சென்ற எட்டு நாட்களில் முப்பத்திமூன்று மின்னஞ்சல்கள், ஜக்கி வாசுதேவ் பற்றி கேட்டு. எப்படியாவது ஒரு வசையை வாங்கிப் பரப்பலாம் என்னும் நோக்கம் கொண்டவை, உண்மையிலேயே ஐயம் கொண்டவை, என்ன ஏது என்று தெரியாமல் பரப்பப்படும் ஒற்றைவரிகளை முன்வைப்பவை.

  இளையவாசகர் சந்திப்பில் அமர்ந்ததுமே ஒருவர் கேட்ட முதல்கேள்வியும் அதுதான். விளக்கமாக பேசவேண்டியிருந்தது. ஆகவே கேள்விகளை தொகுத்துக்கொண்டு ஒரு விளக்கத்தை பதிவுசெய்யலாமென நினைத்தேன். அதற்கு இணையக்களேபரங்கள் கொஞ்சம் முடியட்டும் என காத்தேன்

  முதலில் இவ்விஷயத்தில் தொண்டைநரம்பு புடைக்கக் கத்திக் கூச்சல்போடும் நபர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி, சென்ற காலங்களில் இந்துமதத்தின் ஏதாவது அமைப்பு குறித்து, ஏதாவது ஆளுமையைப்பற்றி, ஏதேனும் நூல்சார்ந்து நீங்கள் ஏதாவது சாதகமான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்களா என்பதுதான். இல்லை, இந்துமதமே ஒட்டுமொத்தமாகச் சாணிக்குப்பை என்று பதில்வருமென்றால் அவர் பேசுவது வெறும் காழ்ப்பு. ‘அது உன் புண் ராசா, நீயே வைத்து நோண்டு’ என்பதைத்தவிர அந்த ஆத்மாவிடம் எதுவும் பேசவேண்டிய தேவை இல்லை.

  லட்சுமி மணிவண்ணன் சொன்னதுபோல இதில் முற்போக்கு, சூழியல், பகுத்தறிவு முகமூடிகளை மாட்டிக்கொண்டு வந்து பேசுபவர்களில் கணிசமானவர்கள் மாற்றுமதங்களைச் சேர்ந்தவர்கள். தங்கள் மதத்தின் உலகளாவிய அழிவுப்போக்கு, வன்முறை வரலாறு, இன்றைய ஊழல்கள், உள்மோதல்கள், அப்பட்டமான மூடநம்பிக்கைப் பரப்பல்கள், மோசடி மதமாற்றங்கள் பற்றி ஒரு சொல்லும் சொல்லாதவர்கள் இவர்கள். அங்கே இந்த முகமூடிகள் ஏதுமில்லாமல் சொந்த முகத்துடன் வாய்பொத்தி நிற்பவர்கள். ஏனென்றால் அவர்களின் மதஅமைப்பு சர்வவல்லமைகொண்டது. அவர்களை வேரடி மண்ணோடு கெல்லி அகற்றும் ஆற்றல்கொண்டது. அவர்களுடையதை மதக்காழ்ப்பு என்னும் மனநோய் என்று அன்றி கருத்தில் கொள்ளவேண்டியதில்லை

  கடைசியாக, உண்மையிலேயே பகுத்தறிவுத்தரப்பாகச் செயல்படக்கூடியவர்கள். சொந்தவாழ்க்கையில் அந்தப்பின்புலம் கொண்டவர்கள் ,அனைத்து நிலையிலும் பகுத்தறிவுநோக்கை கைகொள்பவர்கள் மட்டும் கருத்தில்கொள்ளப்படவேண்டும். அவர்கள் தர்க்கப்பூர்வமான மொழியில் பேசினார்கள் என்றால் மறுதரப்பாகக் எடுத்துக்கொள்ளலாம். வெறும் அவதூறு, வசைபாடல் என்றால் ’போடா’ என்று மட்டும் அன்போடு சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

  தான் மறுக்கும் ஒரு தரப்பைப்பற்றி எள்ளலையும் வெறுப்பையும் அவதூறுகளையும் மட்டுமே கக்கிக்கொண்டிருப்பவன் ஒரு நோயாளி மட்டுமே. அவனுக்குச் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. விவாதத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல அவன் எதிர்க்கும் தரப்பு அவன் நம்பும் ஆளுமைகளையும் கருத்துக்களையும் எள்ளலும் காழ்ப்புமாகப் பேசினால் அவன் கொந்தளிப்பதைப்பார்க்கலாம். பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

  மற்றவர்களின் ஐயங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றியே இக்கட்டுரையில் பேசலாமென நினைக்கிறேன்.

  காப்பரேட் சாமியார்கள் தேவையா? அவர்களால் என்ன நன்மை?

  1980களில் நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பாதிப்பேர் இந்துக்கள் அடங்கிய எங்கள் கல்லூரியில் உச்சகட்ட மதமாற்றப் பிரச்சாரம் நிகழும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இருசாராருமே இந்துக்களை நோக்கி ‘உங்களுக்கு வெறும் சடங்குகளும் ஆசாரங்களும் மட்டுமே உள்ளன. உங்கள் மதத்தில் ஞானநூல்கள் இல்லை. எங்களுக்கு மெய்நூல்கள் உள்ளன’ என வாதிடுவார்கள். நான் உட்பட எந்த இந்துமாணவனுக்கும் இந்துமதநூல்களைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இந்து தத்துவமோ ஆன்மீகமோ தெரியாது. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும்.

  அவர்களுடன் எப்போதும் இணைந்துகொண்டு செயல்படும் திராவிடர் கழகமும் அதையே சொல்லும். புராணக்கதைகளை எடுத்துக்கொண்டு அதை மிக எளிய அன்றாடத்தளத்தில் வைத்து ‘கட்டுடைப்பார்கள்’ . சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் அவர்கள் ஓரினச்சேர்க்கையா செய்தார்கள் என்பதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்.

  இந்தத்தாக்குதல்களுக்குப் பதில்சொல்ல மரபான மடாதிபதிகளால், மதப்பிரச்சாரகர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர்களும் சடங்குகள், புராணங்களுக்குள் மட்டும் செயல்பட்டவர்கள்தான். நவீனச்சிந்தனைகளுடன் அறிமுகம் அற்றவர்கள். ஒருமுறை நான் இந்தப் பகுத்தறிவுக்கேள்விகளைப்பற்றி ஆழ்ந்த ஐயத்துடன் கிருபானந்தவாரியாரிடம் விளக்கம் கேட்டேன். முருகனின் வேல் உங்களை காப்பாற்றும், அதை வழிபடுங்கள் போதும் என்று பதில் சொன்னார்

  ஆன்மிகமும் தத்துவமும் அறிந்த சிலர் இருந்தனர், அவர்களை மிகச்சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அறிந்திருந்தனர். பெரும்பான்மையை நோக்கிச்செல்ல அவர்களிடம் ஊடகம் இல்லை, அமைப்பு இல்லை. இந்துமதம் சார்ந்து அமைப்புக்களை உருவாக்குவது எளிதும் அல்ல.

  இச்சூழலில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் வருகிறார்கள், குறிப்பாக ஜக்கி வாசுதேவ், வேதாத்ரி மகரிஷி, மற்றும் ரவிசங்கர். “இந்துமதத்திற்கு நூல்கள் ஏதேனும் உண்டா?” என டிஜிஎஸ் தினகரன் நாகர்கோயிலில் பல்லாயிரம்பேர் கூடிய மாபெரும் கூட்டத்தில் அறைகூவியதை நான் நினைவுகூர்கிறேன். இன்று அதே மைதானத்தில்தான் ஜக்கி பல்லாயிரம்பேரைக் கூட்டி பதஞ்சலி யோகசூத்திரம் பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் பேசுகிறார். இப்படி ஒரு காலம் வந்துள்ளது.

  இன்று மேலே சொன்ன இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்த்தை ஓர் இந்து இளைஞனிடம் சொல்லமுடியுமா? உன்னதமான யோகநூல்களும் தத்துவநூல்களும் காவியங்களும் இந்துமதத்தில் உள்ளன என்று ஒருவனாவது எழுந்து பதில் சொல்வான். பதஞ்சலியோகசூத்திரம் என்றும் யோகவாசிஷ்டம் என்றும் உபநிடதங்கள் என்றும் எடுத்துச் சொல்வான். இந்த இடத்துக்கு வந்துசேர இருபதாண்டுக்காலமும் அமைப்புசார்ந்த மாபெரும் பிரச்சாரமும் தேவைப்பட்டுள்ளது.

  நாகர்கோயிலிலேயே எட்டாண்டுகளுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஐயப்பனைப்பற்றி அதே பழைய பகுத்தறிவு நையாண்டியைப் பேசிய பழைய கறுப்புச்சட்டைக்காரரிடம் 18 வயதான ஓர் இளைஞன் எழுந்து ’சிவன் யோகசக்தி. விஷ்ணு போகசக்தி. இரண்டும் இணைந்து உருவானதே ஐயப்பன். அது குறியீட்டு முறையில் சொல்லப்பட்டுள்ளது. உலகம் முழுக்க எல்லா ஞானமரபுகளிலும் குறியீடுகள் உள்ளன, உளறாதீர்கள்’ என பதில் சொன்னான்.

  கறுப்புச்சட்டை பரிதாபமாக “தம்பி நீ இங்கர்சால், கார்ல்மார்க்ஸ் ,பெரியார்லாம் படிக்கணும்’ என்றார்.”அதெல்லாம் பழைய சிந்தனைகள். நீங்க முதல்ல ஜோசஃப் கேம்பல் படியுங்க. சிமியாலஜின்னு ஒண்ணு இருக்கு, போய்ப் படியுங்க. குறியீட்டை குறியீடா பாக்கிறது எப்டின்னு தெரிஞ்சுட்டு பேசுங்க. உளறாதீங்க’ என்றான்

  ‘அட!’ என வியந்தேன். அவனை அழைத்துப்பேசினேன். அவன் பேசியது அப்படியே நாகர்கோயிலில் ஜக்கி வாசுதேவ் அக்கேள்விக்குச் சொன்ன பதில் என அறிந்தேன். கார்ப்பரேட் குருமார்களைப்பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பெரிய அளவில் மாறியது.

  இதற்குத்தான் கார்ப்பரேட் அமைப்பு. நானும் இதே விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் ஐம்பதாயிரம்பேரைச் சென்றடைய முடியாது. ஜக்கி வாசுதேவின் அமைப்புதான் அந்த அடிப்படைச் சிந்தனைகளை ஐந்துகோடிப்பேரிடம் கொண்டுசென்று சேர்க்கமுடியும்.

  இங்கே இந்துச் சிந்தனைகளையும் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தி பேசிவருபவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே அமைப்பாகத் திரண்டவர்கள். ஈவெரா ஊர் ஊராகப்போய் நிதி திரட்டினார். எடைக்கு எடை நன்கொடை பெற்றுக்கொள்ள ஊர்தோறும் தராசில் அமர்ந்தார். அந்தப்பணத்தால் பேச்சாளர்களை உருவாக்கி ஊர்தோறும் அனுப்பினார். இன்றும் அது ஜக்கிவாசுதேவ் அமைப்பை விட பலமடங்கு வலுவான செல்வமும் அரசியல் ஆதரவும் கொண்ட அமைப்பு.

  இங்குள்ள மதமாற்ற அமைப்புகள் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமானவை. செல்வமும் ,அதிகாரமும் ,சர்வதேசத் தொடர்புகளும், அறிவுலகில் ஐந்தாம்படை வலையும் கொண்டவை. அந்த அமைப்புக்கள் உருவாக்கிய கருத்துப்பிரச்சாரத்தை, அதிலுள்ள அப்பட்டமான திரிபுகளையும் காழ்ப்புகளையும் கொஞ்சமேனும் எதிர்ப்பதற்கு இன்னொரு அமைப்பால் மட்டுமே முடியும். இன்றிருப்பவை ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்களின் ஓரிரு சின்ன அமைப்புக்கள்தான். இன்னமும் உருவாகவேண்டும்.

  இங்கு இந்துமதம் மீது காழ்ப்பை வளர்க்கும் அத்தனை அமைப்புக்களையும் அவற்றின் அத்தனை ஊழல்களுடன், அத்தனை குற்றக்கறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொண்ட கும்பல்கள்தான் இப்போது ஓரளவு உருவாகி வரும் இந்த அமைப்புக்கள் மீது அவதூறுகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன. இது எவ்வகையிலும் அறம் சார்ந்ததோ , எதிர்க்கருத்தியல்சார்ந்ததோ அல்ல. வெறும் பதற்றம் மட்டுமே.

  ஒரு சின்ன அவதானிப்பைப் பாருங்கள். ஒருநாளில் உங்கள் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கக்கிடைக்கும் மதப்பரப்பு தொலைக்காட்சிகள் எத்தனை! கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புக்கள் எவ்வளவு! எவ்வளவு பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டவை அவை! எத்தனை செல்வம்! ஜக்கிக்கோ ரவிசங்கருக்கோ ஒரு தொலைக்காட்சி ஊடகம் இன்றில்லை. அதற்கான நிதி அவர்களிடம் இல்லை [எப்படியாவது நிதி திரட்டி அவர்கள் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது என் வலுவான கோரிக்கை]

  அந்த அமைப்புக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நம்மூர் முற்போக்குப்பகுத்தறிவுக்கு இந்தச் சின்ன அமைப்புக்கு எதிராக மட்டும் ஏன் இத்தனை காழ்ப்பு? மிக எளிய பதில் இதுதான், ஐயப்பனைப்பற்றி பேசிய அந்த இளைஞன் இங்கு உருவாகி வந்திருக்கிறானே, அவனைத்தான் இவை அஞ்சுகின்றன.

  இவ்வகை அமைப்புக்கள் முன்பு இருந்ததில்லையே? இப்போது ஏன் இவை தேவையாகின்றன?

  ஒரு கருத்தியல் அதற்கான அமைப்பை உருவாக்கிக் கொள்வது என்பது வரலாற்றில் எப்போதுமே இருந்து வந்ததுதான். கிறிஸ்தவம் இஸ்லாம் சீக்கியம் போன்ற தீர்க்கதரிசன மதங்கள் தன்னளவிலேயே மாபெரும் அமைப்புக்கள். மைய அதிகார அமைப்பும், வட்டார அதிகார அமைப்புக்களும், நிர்வாக முறைமைகளும் கொண்டவை. அவற்றுக்குள்ளும் நூற்றுக்கணக்கான துணைஅமைப்புகள் பெரும் நிதியாதாரங்களுடன் அம்மதங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச அளவில் பரவியவை.

  இந்துமதம் ஒரு தொகைமதம். பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவானது. பழங்குடி வாழ்க்கையில் இருந்த பலநூறு ஆன்மிகதரிசனங்களும் வழிபாட்டுப்போக்குகளும் வரலாற்றின் பெருக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து , உரையாடி , தத்துவத்தைக் கட்டமைத்து உருவாகி வந்த ஒரு மரபு இது. ஆகவே அதற்கு மைய அமைப்பு இல்லை. ஆனால் வெவ்வேறு ஆன்மிகத் தரப்புகள், கருத்தியல்கள் தங்களுக்குரிய அமைப்புக்களை வரலாற்றில் உருவாக்கிக்கொண்டுதான் இருந்தன

  இன்றுள்ள சைவ, வைணவ மடங்கள் கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குள் பக்தி இயக்கத்தின் எழுச்சிக்காலத்தில் உருவானவை. சைவ ,வைணவ மதங்களுக்கான கல்விமுறையை நிலைநிறுத்துவதும் ஆலயங்களைப் பராமரிப்பதும் அவற்றின் பணி. அவற்றுக்கு அரசர்களால் பெரும் செல்வம் அளிக்கப்பட்டது.

  சங்கர மடங்கள் சங்கரரின் கொள்கையை நிலைநிறுத்தும்பொருட்டு அவரது மாணவர்களால் உருவாக்கப்பட்டவை. சங்கர வேதாந்தம் போன்ற தத்துவக்கொள்கைகளுக்கு இருவகை அமைப்புக்கள் உண்டு. ஒற்றை அமைப்பாகத் திரளாதவர்களும் அலைந்துதிரியும் துறவிகளுமான சங்கர வேதாந்திகளின் குருசீடமரபு ஒருவகை அறிவியக்கம். இது ஏகதண்டி மரபு என்றபேரில் அறியப்பட்டது. வெவ்வேறு இடங்களில் அமைந்து நிர்வாகம் போன்றவற்றில் ஈடுபட்ட சங்கர மடங்கள் இன்னொரு வகை அமைப்பு.

  பின்னர் இந்திய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் மதச்சீர்திருத்த அலை உருவானது. அதில் தோன்றிய அத்தனை ஞானிகளுக்கும் அமைப்புக்கள் உள்ளன. விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடம், நாராயணகுருவின் நாராயணமடம், வள்ளலாரின் சத்யஞானசபை போல நூற்றுக்கணக்கில் உருவாயின. இவை அனைத்துமே மைய அமைப்பும் கிளைகளும் கொண்டவை. நிதியாதாரங்களை பக்தர்களின் கொடைகள் வழியாக திரட்டிக்கொண்டவை.

  இன்று வேதாத்ரி மகரிஷி, ஜக்கி, ரவிசங்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்களை மூன்றாவது அலை என்று சொல்லலாம். இந்த ஒவ்வொரு அலைக்கும் அதற்கான பங்களிப்பு உள்ளது. நம் சைவ மடங்கள்தான் மிகமிக இடர்மிக்க படையெடுப்புக்காலகட்டங்களில்கூட தமிழ்நூல்களை பேணி, தமிழ்க்கல்வியை நிலைநிறுத்தியவை. ஆலய வழிபாட்டை காத்தவை. சிருங்கேரி மடம் இல்லையேல் தென்னகத்தில் இந்துமதமே இருந்திருக்காது.

  ஆனால் அடுத்த காலகட்டத்தின் தேவைகளை அவை நிறைவேற்ற முடியவில்லை. ஐரோப்பிய கல்விமுறையுடனும் நவீன ஜனநாயகச் சிந்தனைகளுடனும் அவற்றால் உரையாட இயலவில்லை. ஆசாரங்களில் இருந்து அவை வெளியேறவும் முடியாது, ஏனென்றால் அவற்றின் கட்டமைப்பே ஆசாரங்களைக் காப்பதற்காக அமைந்தது. ஆகவே தங்கள் பங்களிப்பை வரலாற்றில் ஆற்றிவிட்டு அவை பணியை வரையறை செய்துகொண்டன. ஆகவே அடுத்த தலைமுறைக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் விவேகானந்தரின் அமைப்பும் நாராயணகுருவின் அமைப்பும் உருவாகி வரநேர்ந்தது.

  [பழைய அமைப்புக்களுக்கும் புதிய அமைப்புக்களுக்கும் இடையே மோதலும் இருந்தது. அருட்பா மருட்பா விவகாரமே வள்ளலாருக்கும் சைவ மடங்களுக்கும் இடையே நிகழ்ந்த பூசல்தான் பார்க்க ப.சரவணன் அருட்பா மருட்பா ]

  இன்று மூன்றாவது காலகட்டத்தில் இன்றைய தேவைக்குரிய அமைப்புக்கள் உருவாகிவரவேண்டியிருக்கிறது. சென்றகாலகட்டத்தின் அமைப்புகளை விட மேம்பட்ட செயல்பாட்டுமுறை இவற்றுக்கு உள்ளது. இன்றைய யுகம் கார்ப்பரேட் யுகம். எதுவும் அறிவியல்முறைகளை கருவிகளாகக் கொண்டு, நவீனநிர்வாக முறைகளை பயன்படுத்திக்கொண்டுதான் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகவே கார்ப்பரேட் அமைப்புக்கள் உருவாகின்றன.

  திருவாவடுதுறை மடத்தின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் அல்ல ராமகிருஷ்ண மடத்தின் வழிமுறை. அது இன்னும் நவீனமானது. ஜக்கி வாசுதேவ் அமைப்பின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் ராமகிருஷ்ண மடத்தின் அமைப்பை விட மேலும் நவீனமானவை, கார்ப்பரேட் தன்மைகொண்டவை. இது காலத்தின் தேவையால் எழுந்தவை.

  நவீனச் சாமியார்கள் கறாராகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். நிறையப் பணம் பெறுகிறார்கள். இது தவறு அல்லவா?

  நவீனச் சாமியார்கள் கார்ப்பரேட் அமைப்பை வைத்திருக்கிறார்கள் என்பதன் அவசியத்தைச் சொன்னேன். அந்த அமைப்பு தேவை என்றால் அது கட்டணம் வசூலிப்பதும் அவசியமே. அந்த நிதி இல்லையேல் அவ்வமைப்பே செயல்படமுடியாது.

  சென்றகாலத்திலும் அமைப்புக்கள் அரசக்கொடையை, நிதிக்கிழார்களின் அளிக்கைகளைப் பெற்றே இயங்கி வந்தன.நிதியாதாரம் இல்லாத அமைப்பு ஏது? வெளிநாட்டு நிதிபெறும் அமைப்புக்கள்தானே இங்கே மிகுதி? அவற்றுடன் ஒப்பிடுகையில் ஜக்கியின் ஈஷா அமைப்பு ஒரு சின்னக்கொசு.

  ஜக்கியின் அமைப்பின் கட்டணம் அதிகமா? என்னிடம் பேசிய நண்பர் சொன்னார் “ஆறுநாள் தங்கி தியானம் பயில மூவாயிரம் ரூபாய் கேட்டனர் சார்” என்று. தங்குமிடம் சாப்பாடு உட்பட செலவு நாளுக்கு ஐநூறு ரூபாய். இது கொள்ளை என நினைப்பவரின் மனநிலை என்ன?

  உண்மையில் இந்த மனநிலைதான் பிரச்சினை. நாம் ஒரு நுகர்பொருளுக்கு, அந்தஸ்தைக் காட்டும் பொருளுக்கு பணத்தை அள்ளிக்கொடுப்போம். ஐந்தாயிரம்ரூபாய்க்குச் சட்டை வாங்குவோம். அறுபதாயிரம் ரூபாய்க்கு செல்பேசி வாங்குவோம். அவற்றின் உண்மையான மதிப்பு ஐந்தில் ஒன்றே என அறிந்தாலும் கவலையில்லை.

  ஆனால் பண்பாட்டு, ஆன்மிக விஷயங்கள் சும்மா கிடைக்கவேண்டும். ஒரு புத்தகம் நூறுரூபாய் என்றால் கொந்தளிப்பு. ஒரு நவீனநாடகத்துக்கு நூறுரூபாய் டிக்கெட் வைத்தால் எதிர்ப்பு. இங்கே ஒரு சொற்பொழிவுக்கு ஐம்பதுரூபாய் கட்டணம் வைக்க முடியுமா? கட்டணம் பற்றிப்பேசுபவர்கள், அதை கொள்ளை என்பவர்களிடம் வெளிப்படுவது இந்த வெறுக்கத்தக்க நடுத்தரவர்க்கக் கீழ்மை மட்டுமே

  ஜக்கியின் அமைப்பு ஒரு சேவையை வழங்குகிறது. அதற்குரிய கட்டணத்தை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். தேவை இல்லை என்றால் நிராகரிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. அவர்கள் அதை சும்மா தரவேண்டும் என கொந்தளிப்பதைப்போல பைத்தியக்காரத்தனம் ஏதேனும் உண்டா?

  சரி, சும்மா கொடுத்தால் எவரேனும் செல்வார்களா? ஜக்கி அளிக்கும் அதே பயிற்சியை, அதைவிட பலமடங்கு நுட்பமான தத்துவ விளக்கத்தை இலவசமாக அளிக்கும் நூறுபேராவது இங்கே உள்ளனர். ஏன் நீங்கள் அங்கே செல்லவில்லை?

  ஏனென்றால் உங்களுக்கு கார்ப்பரேட் அமைப்பு தேவைப்படுகிறது. அது விளம்பரம்செய்யவேண்டும். வாசலில் வந்து அழைக்கவேண்டும். அண்மையில் இருக்கவேண்டும். தெரிந்தமொழியில் பேசவேண்டும். உங்களுக்கு அத்தனை வசதிகளையும் செய்து தரவேண்டும். ஆனால் நீங்கள் காசுகொடுக்கமாட்டீர்கள். காசு கொடுக்காது கிடைப்பதை மதிக்கவும் மாட்டீர்கள்

  ஜக்கி வாசுதேவ் மோசடி செய்கிறாரா?

  திரும்பத்திரும்ப இங்கே இந்த அவதூறாளர்களால் போலிச்சாமியார், மோசடிப்பேர்வழி என வசைபாடப்படுகிறார் ஜக்கி. Godman என்னும் சொலை சில ஊடகங்கள் திட்டமிட்டு பயன்படுத்துகின்றன

  நான் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி இதுதான் .அவர் எங்கேனும் தன்னை தெய்வம் என்றோ தெய்வ அருள்பெற்றவர் என்றோ சொல்கிறாரா? நோய்களை தன் தெய்வீக ஆற்றலால் குணமாக்குவதாகச் சொல்கிறாரா? ஏதாவது மாயமந்திரங்கள் செய்கிறாரா?

  உண்மையில் அவர்கள் அளிக்கும் யோகப்பயிற்சிகளைப் பற்றிக்கூட மிகையான பிம்பங்களை உருவாக்குவதில்லை. எதிர்மறையான எச்சரிக்கையுடன் மட்டுமே சேர்த்துக்கொள்கிறார்கள். யோகத்தின் பொதுவான நன்மைகளைக்கூட குறைத்தே சொல்கிறார்கள்.

  யோகமுறை போன்றவை மிகவும் அகவயமானவை. அதன் பயன்களும் பெரும்பாலும் அவற்றை பயில்பவரின் அக்கறை, முயற்சி, மற்றும் உளவியல் சார்ந்தவை. ஆகவே திட்டவட்டமான புறவயமான விளைவுகளை அனைவருக்கும் அவை அளிக்கமுடியாது.

  இது யோகத்துக்கு மட்டும் அல்ல, சாதாரண உளவியல் ஆலோசனைக்கேகூட பொருந்தும். உளவியலாளர் ஆலோசனைதான் அளிக்கமுடியும், அதைச் செயல்படுத்துவது நாம்தான் ‘இந்த உளவியலாளர் மோசடிக்காரர், ஒருவாரம் போனேன் ஒண்ணுமே ஆகலை’ என்று ஒருவர் சொன்னால் அது எவ்வளவு கேனத்தனம். [பெரும்பாலான உளச்சிக்கல்கொண்டவர்கள் உளவியலாளர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்]

  இந்தவகையான நவீன யோகமுறைகளுக்கு விளம்பரத்தைக் கண்டு ஆர்வம்கொண்டு செல்பவர்களில் ஒருசாராருக்கு மிகப்பெரிய உளச்சிக்கல் ஒன்று உண்டு என்பதை கண்டிருக்கிறேன். தன்னைப்பற்றி மிகையான பிம்பத்தைக் கொண்டிருத்தல். போன மூன்றாம்நாளே நெற்றிக்குள் ஒளி தெரிகிறது என ஒரு கூட்டம் சொல்லும். ‘மூணுநாள் போனேன், ஒண்ணுமே ஆகலை’ என இன்னொரு கூட்டம் அலுத்துக்கொண்டு கிளம்பிச்செல்லும்.

  அசாதாரணமான அறிவாற்றலும் ஞானத்திறனும் கொண்டவர்களாகத் தங்களை எண்ணிக்கொள்கிறார்கள் பலர். ஊடகங்களில் கூச்சலிடுபவர்களின் அந்த வீங்கிய அகந்தையை கவனியுங்கள். ‘டேய் ,நீயெல்லாம் யாரு?’ என்னும் வியப்பையே நான் அடைகிறேன். கொஞ்சமேனும் தங்களைத் தாங்களே நோக்கி மதிப்பிட முடியாதவர்கள் யோகம் தியானம் போன்றவற்றுக்குள் நுழையவே முடியாது. அவர்களுக்கு உளவியல் சிகிழ்ச்சையே தேவை

  ஜக்கி போன்றவர்கள் சொல்லிக்கொடுப்பது ‘உண்மையான’ யோகமா? அவர் யோகக்கலையை சிதைக்கிறாரா?

  உண்மையான யோகம் என்றால் என்ன? யோகம் இந்தமண்ணின் தொன்மையான ஒரு மரபு. அது தெய்வநம்பிக்கை, வழிபாடு, பக்தி ஆகியவற்றின் ஒரு பகுதி அல்ல. ஆறுதரிசனங்களில் ஒன்றாக, பொருள்முதல்வாத தரிசனமாகிய சாங்கியத்தின் ஒருபகுதியாக அது இருந்தது. அதில் பிரபஞ்சம் குறித்த ஒரு தரிசனமும், அதை அடைவதற்கான பயிற்சிமுறைகளும் இருந்தன.

  பின்னர் அது இந்துமதத்திற்குள் உள்ளிழுக்கப்பட்டது. இந்து தெய்வங்கள் அனைத்திற்குமே யோகத்தில் அமர்ந்த தோற்றம் உண்டு. ஒவ்வொரு இந்துமதப்பிரிவும் வெவ்வேறு முறைகளில் யோகத்தை வளர்த்துக்கொண்டன. வெவ்வேறு முறைகளை உருவாக்கிக்கொண்டன. குறிப்பாக சைவம் யோகத்தை மிகவிரிவாக முன்னெடுத்தது. ஆறுவகை சைவப்பிரிவுகளுமே யோகத்தை முதன்மையாகக்கொண்டவை.

  அதேபோல பௌத்தமும் யோகத்தை தன்னுள் எடுத்துக்கொண்டது. பௌத்த யோகாசார மரபு புத்தரின் பல்வேறு யோகநிலைகளை உருவகித்தது. சமணமும் யோகமுறைகளை தன்னுள் இழுத்துவிரிவாக்கிக் கொண்டது. இன்று கிறித்தவத்திற்குள் யோகமுறைகள் சிலதரப்புகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அது மிக இயல்பானது, வரவேற்புக்குரியது.

  ஜக்கி சைவமரபு சார்ந்த யோகத்தை முன்னெடுக்கிறார் என நினைக்கிறேன். அதற்கு இங்கே குறைந்தது மூவாயிரமாண்டுக்கால மரபுத்தொடர்ச்சி உண்டு. அதேசமயம் அவர் அதை மரபான சைவமாக குறுக்கவும் விரும்பவில்லை. ஆகவே சைவத்திலுள்ள அனைத்தையும் அப்படியே கொண்டுவந்து நிறுத்தவில்லை. இன்றைய காலகட்டத்திற்குரிய சைவம் ஒன்றை உருவாக்க முயல்கிறார் என தோன்றுகிறது. அது தத்துவம், யோகம் சார்ந்த ஒன்றாக இருக்க விரும்புகிறார்.

  ஜக்கியின் யோகமுறைகளின் இடம் என்ன? யோகத்தை இப்படிப் பரப்பலாமா? சென்றகாலங்களில் மக்கள் இந்த யோகமுறைகள் ஏதும் இல்லாமல்தானே வாழ்ந்தார்கள்?

  யோகமுறைகள் நம் மரபில் மிகச்சிறுபான்மையினருக்குரியவையாக மட்டுமே வைக்கப்பட்டன. யோகம் என முன்பு சொல்லப்பட்டது உடல் மனப்பயிற்சிகளின் தொகுதி. அவற்றை பிரிக்கமுடியாது. ஆனால் நவீனகாலத்தில் யோகாசனங்களை வெறும் உடல்பயிற்சியாக ஆக்கி பரவலாக்குகிறார்கள். அது ஒருதேவையை நிறைவேற்றுகிறது. ஆகவே பயனுள்ளதுதான்.

  நவீன குருமார்கள் உடல் மனப்பயிற்சிகளை கலந்து, தனிப்பட்ட தியானம் கூட்டுத்தியானம் இரண்டையும் பின்னி சிலவகையான முறைமைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவையே இன்று யோகப்பயிற்சி எனப்படுகின்றன.

  இந்து மதம் மூன்றுவழிகளை முன்வைக்கிறது. பக்தி முறையே பெருவாரியான மக்களுக்குரியது. எளிய அர்ப்பணிப்பு போதும் அதற்கு. ஆழமான நம்பிக்கையும் சீரான சடங்குகளும் இருந்தால் ஒருமனிதர் தன்னளவில் நிறைய முடியும். ஆலயவழிபாடு, பஜனை, தீர்த்தயாத்திரை என அதற்கான வழிகள் பல.

  பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்குரியதே ஞானமுறை. அது அறிதலின் பொருட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்குரியது. கற்கவும் சிந்திக்கவும் நேரமும் வாழ்க்கையமைப்பும் இருக்கவேண்டும். ஆசிரியர்களைத் தேடிச்செல்லவேண்டும். அறிதலில் சமரசமற்றிருக்கவேண்டும்.

  மூன்றாவது முறையே யோகம் எனப்பட்டது. அது அதன்பொருட்டு பிற அனைத்தையும் விடுவதற்கும் துணிபவர்களுக்கு உரியவை.மிகக்கடினமான சுயஉளவியல் பயிற்சிகளின் வழி அது. உலகியலில் இருந்து விலகவேண்டும்.

  • Shankar says:

   Dear MS Sir,

   Your Comment, Spirit , Substance, Meaning, Values, Virtues have really kindled and evolved the Modern Hinduism going to prove that Hinduism is a Science and not a religion , Appreciate and Truly Thank you for bringing the Realization of Truth behind the Religion. No Religion was created to hurt another Religion , it was always created to refine Discipline, Responsibility and Duty towards Human Kind.

   I would differ with you only on your Protracted and Refracted comments of protecting Jaggi, if you have really meant as per my interpretation , which should be changed to protect the True Values as you have portrayed by your historical-Vedic-Spiritual and citable quotes which does not deserve to even get near Jaggi Vasudev who is sheerly selling Hinduism as a commodity and material out at Isha. I may be blunt, crude and sharp unlike your dressing of your statement, but the hard fact you will find after visiting the ISHA. I am not able to write in Tamil due to constraints and hence I am writing in English.

   Appreciations again

 23. Vaishnavi vv says:

  Hahaha . Yezhuthamudiyum na enna venalum yezhurathu. After u register for a class ,they give u a receipt ,using that receipt u can re enter any class happening anytime ,how many ever times u want . Know facts b4 u post.
  Don’t just randomly write articles becoz u r bored

 24. தனசேகரன் says:

  நானும் எனது குடும்பத்தாரும் அந்த ஈஷா யோகத்திற்கு சென்று இருந்தோம். அங்கு ஒரு பகுதியில் அம்மன் சிலை வைக்கப்ட்டு இரண்டு போ்ஷிப்ட் கணக்கில் முறை வைத்து இந்த சேலை யை வாங்கி சென்றால் உங்களுக்கு எல்லா நலம் வரும் இந்த கயிற்றை கட்டி கொண்டால் உங்களுக்கு உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று சொன்னதையே சொல்லி அதனை விற்று கொண்டிருந்தாா்கள். இன்னும் கொஞ்ச நாளில் வெள்ளியங்கிாி மலை இருக்குமா அல்லது அவருக்கு சொந்தமாகிவிடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பாா்க்க வேண்டும் . தமிழ் மக்கள் இதனை இனி எப்படி பாாக்க போகின்றாா்கள் என்பது காலம் தான் பதில் சொல்லும் அந்த சிவன் தான் இவா்களை தண்டிக்க வேண்டும்

 25. Anonymous says:

  சவுக்கு சங்கர் அவர்களின் முயற்சியால் ஈஷா ஜக்கியின் பித்தலாட்டங்கள் விரைவில் நிறுத்தப்படும் ….

 26. Sarawanan says:

  //…மேலும் கிருஷி லேண்ட் பார்ம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டாலும் இதனை பதிவு செய்தவர்கள் திருப்பூர் வேலம்பளையம் சுவர்ணபுரி அவன்யூவில் உள்ள சத்குரு இல்லத்தில் இயங்கிவரும் ஒரு கணக்கு தணிக்கையாளரால் பதிவு செய்யப்பட்டது.// the auditor name is r m sentil kumar

Leave a Reply

Your email address will not be published.