உத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஈட்டியுள்ள இமாலய வெற்றியைக் கண்டு எல்லோருமே பிரமிக்கின்றனர். 2019ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அக் கட்சி மீண்டும் வெற்றி பெறும், மோடி ஆட்சி தொடரும் என்று பொதுவாக ஊகிக்கப்படுகிறது.
அதெல்லாம் சரி, அதன் பிறகு? ராமர் கோயில் கட்டுவார்களா? பொது சிவில் சட்டம் கொண்டு வருவார்களா? கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களா? பாடத்திட்டத்தில் பாரதூர மாற்றங்கள் ஏற்படுமா? பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவார்களா? ட்ரம்புடன் சேர்ந்துகொண்டு முஸ்லீம்கள் இந்த நாட்டுப் பிரஜைகளே இல்லை என அறிவிப்பார்களா? இதற்கெல்லாம் விடையில்லை.
ஊடகங்களில் இன்னமும் இக்கேள்விகள் எழுப்பப்படவில்லை. இடதுசாரிகளைத் தவிர வேறு எவரும் இவற்றைப் பற்றி கவலைப்படுவதாகவும் தெரியவில்லை
உ.பி வெற்றி இந்துத்துவாவிற்குக் கிடைத்த அங்கீகாரமல்ல. மாறாக மோடியின் ஆளுமைக்கு அம்மாநில மக்கள் அளித்துள்ள பரிசு. மக்கள் அவரை முழுமையாக நம்புகின்றனர்.
மேல் சாதியினரின் கட்சியல்லவா பாஜக என்றால், இல்லையே, “மோடி சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்…..அகிலேஷ்யாதவ் நல்ல பையன் தான்…ஆனால் சமாஜ்வாடி ஆட்சியில் யாதவர்கள் மட்டுமே பயன் பெற்றனர்..மோடியோ தான் எல்லா சாதிகளுக்கும் பொதுவானவர் என்கிறார்…பாருங்க தலித், தலித்னு மாயாவதி கூவுறாங்க…ஆனால் ஜாதவ் இனத்தவருக்கு மட்டுமே அவர் கட்சியில் முக்கியத்துவம்…இப்போது கூட முஸ்லீம்களை சேர்த்துக்கொள்கிறார்…அவர்களுக்கு டிக்கெட் வாரி வழங்குகிறார், மற்ற தலித் பிரிவினரைக் கண்டுகொள்ளவே இல்லை…” எனக்கூறுகின்றனர் மக்கள்.
500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வணிகர்கள் கூட, அதனாலென்ன, கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவரவேண்டுமய்யா, மோடி சரியாகத்தான் செய்வார் என்கின்றனர்.
முஸ்லீம்கள் மட்டுமே பாஜகவை விட்டு தள்ளியிருந்திருக்கின்றனர். இந்திய மக்கட் தொகையில் அவர்கள் 14 சதம் என்றால் உ.பி.யில் அவர்கள் 19 சதம். 73 தொகுதிகளில் 30 சதமும் இன்னும் 70 வேறு தொகுதிகளில் 20 சதத்திற்கு அதிகமாகவும் இருக்கின்றனர். ஆனாலும் உங்கள் வாக்குக்கள் எங்களுக்குத் தேவையில்லை எனக் கூறும் வகையில் பாஜக ஒரு முஸ்லீமைக்கூட நிறுத்தவில்லை.
40க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை காவு வாங்கிய, 50,000க்கும் மேற்பட்டோரை இடம் பெயரச்செய்த 2013 முசாஃபர்பூர் கலவரங்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கருதப்பட்டவர்களையெல்லாம் பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியது.
பிரச்சாரத்தின்போது கப்ரிஸ்தானிருந்தால் சுடுகாடும் வேண்டும் என்று மோடி பேசினார். அதாவது ஏதோ இந்துக்களுக்கு மயானபூமியே இல்லாததுபோன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றார். மின் இணைப்பில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். அமித் ஷா எதிர்க்கட்சிகளை கசாப் என வர்ணித்தார்.
இத்தனைக்குப் பிறகும் பாஜகவிற்கு அமோக வெற்றி, முஸ்லீம்கள் 30 சதத்திற்கும் மேலாக இருக்கும் 42ல் அக் கட்சி 31ஐக் கைப்பற்றியிருக்கிறது.. 97 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்திய பகுஜன் சமாஜ் படுதோல்வி அடைந்திருக்கிறது.
முஸ்லீம்களின் வாக்குக்கள் பிரிந்தது, முத்தலாக் பிரச்சினையினால் பாஜகவிற்கு ஆதரவாக முஸ்லீம் பெண்டிர் திரும்பியது எனப் பல காரணங்கள் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் முற்று முழுதாக முஸ்லீம்களை நிராகரித்தும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது பாஜக என்பதைத்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்துத்துவ வெறியர்கள் பலர் வென்றிருக்கும் நிலையில் அவர்களில் சிலரேனும் அமைச்சர்களாகக் கூடும்.
ஆனாலும் அடுத்த இரண்டாண்டுகளில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருப்பதால் உடனடியாக ராமருக்கு அயோத்தியில் ஆலயம் எழுப்பும் பணியில் இறங்கமாட்டார்கள். அதே நேரம் உ.பியின் பாஜக அரசு பல்வேறு முஸ்லீம் விரோத அணுகுமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கடைபிடிக்கப்போவது உறுதி.
இதை மோடி தலைமையில் குஜராத்தில் பார்க்கமுடிந்தது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் அந்தந்த பகுதி நிலவரத்தைப் பொறுத்து முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர், ஒடுக்கப்படுகின்றனர். அத்தகைய போக்கு உத்திரபிரதேசத்தில் தீவிரமாகும்.
மோடியைக் குறித்த பிரமை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. வேறொன்றுமில்லை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாளொரு மேனியும் பொழுதொரு ஊழலுமாகவே காலத்தை செலவழித்துவிட்ட நிலையில், தன்னளவில் எவ்வித புகாருக்கும் ஆளாகாத மோடி மாமனிதராகத் தென்படுகிறார். அவரது மேடைப் பேச்சு திறனால் மக்களைக் கவரமுடிகிறது.
உங்கள் பிள்ளைகளில் யார் நல்லவனென்றால் கூரையில் கொள்ளிவைப்பவன் தான் என தந்தை சொல்லும் கதைதான். நொந்து போய் கைத்துப் போய், இவர்களுக்கு மோடி எவ்வளவோ மேல் என்று கருதுகின்றனர் மக்கள்.
அவரும் 2014ல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கிறார் என்றானதிலிருந்தே, தான் ரொம்ப யோக்கியர் போலவும் எல்லா பகுதியினரையும் அரவணைத்துச் செல்பவர் போலவும் நாடகமாடிவருகிறார். உ.பி வெற்றிக்குப் பிறகு கூட எவரும் இது இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி எனச் சொல்லவில்லை. உண்மையும் அதுதானே.
மேலே குறிப்பிடதைப் போன்று முஸ்லீம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை, வெறியர்கள் ஜாடைமாடையாக அவர்களை சாடினர், இந்து சமுதாயம் ஒன்றுதான், சாதிப் பிரிவினை வேண்டாம், முஸ்லீம்களுக்கெதிராக அணி திரளவேண்டும் என்ற ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்பினாலும், பொதுவாக பிரச்சாரம் சமாஜ்வாடி அரசு வெறும் ரௌடிகள் ராஜ்ஜியம், யாதவர்கள் மட்டுமே பயன்பெற்றிருக்கின்றனர் என்ற ரீதியில்தான் அமைந்திருந்தது. யதார்த்தமும் அப்படியே இருந்ததால் எப்படியாவது தங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாதா என ஏங்கும் மக்கள் பெருவாரியாக பா ஜ கவிற்கு வாக்களித்திருக்கின்றனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாய் என்ன செய்து கிழித்துவிட்டார் மோடியார்? எங்கே முன்னேற்றம்? எதிலே முன்னேற்றம்? வரும், வரும் கொஞ்ச கால அவகாசம் கொடுங்கள் அவருக்கு என மக்களே வாதிடுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் அலகாபாத்திலுள்ள ஆனந்த பவனுக்கு சென்று அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தைப் பார்த்து மெய் மறந்திருந்தேன். ஆனாலும் மூன்று நான்கு பிரதமர்களை அளித்த மாநிலம், காலங்காலமாக நேரு குடும்பத்திற்கே வாக்களித்து வரும் பகுதிகள் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது, சாலை, மின்சாரம், மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் எவ்வளவு அவதியுறுகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்கமுடிந்தது.
நேரு தொடங்கி ஒருவருமே தங்கள் தொகுதிகளை வளப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிந்தபோது கோபம் கோபமாய் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்கவேண்டும், முதலில் இந்த நேரு குடும்பம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இந்தியர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. இந்தியாவைப் பல நூறாண்டுகளுக்குப் பின்னால் தள்ள நினைக்கும் சனாதிகளின் தலைவன் நூறு கோடி மக்களின் இதய நாயகனாக வரிக்கப்படுகிறான். அவன் பின்னாலிருக்கும் விஷச் சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் பக்கம் தான் திரும்பவேண்டியிருக்கிறது.
பாஜக டி என் ஏவில் எப்படி மதவாதம் இருக்கிறதோ அதே போல சீரழிந்த நிலையிலும், காங்கிரசின் அடிப்படை நல்லிணக்கக் கூறுகளை நம்மால் காணமுடியும். அவர்கள் முஸ்லீம் எதிர்ப்பு போக்கிற்கு பலியாகலாம்தான், மென்று விழுங்கலாம்தான், ஆயினும் அவர்கள் நேரடியாக முஸ்லீம் விரோத நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்கள்.
எனவேயே காங்கிரஸ் மேலும் வலுவிழக்கக்கூடாது, தவிர நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அக்கட்சி மேலும் சிதறுண்டு போகாமல் நேரு குடும்பம்தான் இருப்பதை காக்கமுடியும்.
நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப் போன்று பாஜக ஆட்சியிலும் சரி காங்கிரஸ் ஆட்சியிலும் சரி அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பட்டுவிடாது, ஊழலும், வெற்று வாக்குறுதிகளுமே மலிந்து நிற்கும்.
ஆனால் காங்கிரஸ் வெறுப்பரசியலை ஊக்குவிக்காது. பாஜகவோ கண்ணில்படும் சிறுபான்மையினரை, இடதுசாரியினரை வெட்டித்தள்ளவேண்டும், இந்து மேலாதிக்கம் அவசியம் என்ற சிந்தனையை பலமுனைகளிலும் வளர்க்கும். அது நம்மை எதிர்நோக்கும் ஆகப் பெரிய அபாயம்.
ட்ரம்ப் வெற்றி எப்படி மக்கள் தங்கள் நலனுக்கெதிராக வாக்களிக்க முன்வரமுடியும் என்பதை எடுத்துக்காட்டுவதாக கருதப்படுகிறது. நம் மோடி இன்னமும் ஒரேயடியாக அடாவடிப்போக்கில் இறங்காமலிருப்பதன் காரணம் அவர் நல்லவரென்பதால் அல்ல, மாறாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் குப்பையில் போட்டு, சிறுபான்மையினரை வேட்டையாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார் என்பதால்தான்.
ஆனால் மெல்ல மெல்ல தங்கள் சுயரூபத்தை பரிவாரத்தினர் காட்டுவர். தாழ்ந்து கிடந்த ஜெர்மனியை வளர்ச்சிப் பாதையில் செலுத்திவிடுவார் என்று நம்பித்தானே மக்கள் ஹிட்லருக்கு பேராதரவு தெரிவித்தனர். ஆனால் வந்தவரை லாபம் என அவரால் இருக்க முடிந்ததா?
மோடிக்கு ஒன்றும் பெரிய உள்நோக்கமிருக்க முடியாது, பதவி ஆசையிருக்கலாம், கூட இருப்பவர்கள் கொள்ளையடிக்கலாம், ஆனால் பெரிதாக நாசமேதும் செய்துவிடமுடியாது அவரே 2002க்குப் பிறகு திருந்திதானேயிருக்கிறார் என தங்களை ஏமாற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கத்தினருக்கு ஒரு வார்த்தை. காங்கிரஸ், மற்ற கட்சிகள் அனைத்துமே கொள்ளையர் கூடாரமென்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஆட்சிக்கு வரவிரும்புவது தங்களை வளப்படுத்திக்கொள்ள, மக்கள் நலனில் அக்கறை ஏதுமில்லை என்பதும் சரியே.
ஆனால் அதைத்தாண்டி, எந்த ஒரு சாதி/மத மேலாதிக்கத்திற்காகவும் அரசியலுக்கு வருபவர்களல்ல அவர்கள். இந்த சனாதனிக்கூட்டம் ஆட்சிக்கு வருவதோ இந்து மேலாதிக்கத்தை நிறுவ மட்டுமே. தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, எந்த கொலை பாதகத்திற்கும் அஞ்சமாட்டார்கள்.
இதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. கையறுநிலைதான். வெளிப்படையாக மதவாதத்தை ஊக்குவிக்காத அனைத்து கட்சிகளும் ஒன்றிணையாதா என பெருமூச்சுவிடலாம், வேறென்ன செய்ய?.
டி.என்.கோபாலன்.
What kind of attitude growing here in TN. Congress not obeying court order in KA. Communist construct check dam in kerala. Nobody talking about the two parties here. But all are blaming Modi and BJP. You can criticise the rule of a govt but nowadays people assaulting in person. Change is the progress. We need change.
In 70 years, muslims have grown from 7% to 17%. Imaging with blessing from Congress, what % they will be in another 70 years. They will be 40% to 50%. Hindus will be reduced to below 50%. India will be a Muslim Country and thats what T.N.Gopalan wants.
பாஜக மற்றுோடி பற்றிய உங்களின் கருதை முழுவதுமாக நிராகரிக்கிறேன். பாஜக ஆளுகின்ற பல மாநிலங்களில் மத நல்லினக்கம் நன்கு உள்ளது. ோயை தாக்குவது என்பது தமிழக பத்திரிகையாளர்களின் சமூகக் கமையாகிவிட்டது.
How come you call Congress Secular When Nehru cant accept a minority as Son in law even before independence and history were re-written to hide this story…
Friend’s,
As per recent news in 2050 India is the highest percentage of Muslim community living in the world.
@ the time all the other religions including Hindu will be minority.
Today who are supporting other religions they will not raise their voice against Muslims.
So don’t support and oppose blindly.
Time will deliver everything.
எந்த ஒரு கொள்கையும் இல்லாத, இன்னமும் காந்தி, நேரு என்ற முகமூடியையே மாட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் காங்கிரஸை எப்படி முன்வைக்கிறீர்கள் என்றே புரியவில்லை. இன்றைக்கு நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்கள் என்று முதலில் சொல்லுங்கள். இத்தாலிய குடியுரிமை வைத்திருப்பவர்களின் குடும்பம்தான் இருக்கிறது. எப்படி தமிழ் நாட்டில் இன்னமும் இருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு கொள்ளையடிக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அதுபோல நாட்டை கொள்ளை யடிக்க ஒரு பொதுவான தலைமை வேண்டும் என்பதற்காக வேண்டுமானால் இத்தாலிய குடும்பத்தின் தலைமையை எற்றுக்கொள்ளலாம்
Rajiv gandhi is ours man..
Rajiv Gandhi is no more. Rahul, Sonia & Priyanka are all Italian citizens.
பிஜேபி ஆட்சிக்கு வர ஒரு வகையில், இடதுசாரிகளும் காரணம். காங்கிரஸை அவர்கள் எதற்காக எதிர்த்தார்களோ, அதை விட அதி மோசமான கட்சியை ஆட்சிக்கு வர மறைமுகமாய் உதவி விட்டார்கள்.. குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தாகி விட்டது. இனி அதை மாலையாக அல்ல நாராகத்தான் பெற முடியும்.
Any remedy for this?? If we vote for any Muslim or Christian party ,all will remain happy
This article is a trash. As ‘Savukku’ is biased, I’m going to avoid receiving anymore posts. Good bye.
Any remedy for this??If we vote for any Muslim or Christian parties all can remain happy in India
Remedy for this????We can vote for any Muslim or Christian parties.
Remedy for this????We can vote for any Muslim or Christian parties.
In Today’s India, If anyone could say anything against Central Government, it would mean against Mr.Modiji, which would be interpreted as Anti-national in thinking. So one should not even think against Modiji, Modiji is next to God as per the present BJP members and Modiji cannot be wrong and he is always right. So discussiong, debating and writing are all waste of time.
Congress does not have an able Leader today whom People can rely upon. Congress means Corrupt and Dynasty with Old people or Immatured people is the projection given by BJP.
But BJP band contains all people rejected leaders like Smriti Irani, Arun Jaitley who are ministers with plum portfolio. Where is National Security, Where is Growth, Where is Development, Where are People seeing industrialization, urbanization, rural development, increase in employment, steps to remove poverty, reducing farmers death. All these Jalras like Arun Jaitley, Pon Radhakrishnan, Smriti Irani, Prakash Javadekar holding the important portfolios doing nothing.
kamalaikaranukku kandathellam manjala irukkum.
அய்யா.. தங்களுக்கு தெரியாத அரசியல் ஒன்றும் இல்லை.. தங்களுக்கு தெரிந்த மோடியின் சாதனைகளை கொஞ்சம் விளக்குங்களேன்??(வடிவேல் சொன்ன மாதிரி னேனுச்சுக்கங்க). பெரிய ஊழல்கள் வெளிவரலைங்கறதா விட பெருசா நான் ஒன்னும் பீல் பண்ணல.. நேரிய விளம்பரம் அப்புறம் மக்களை வறுத்தெடுக்கறது.. ஆமாம் இந்த சுவச்சுபராத் நா என்னங்க??
பொதுவாக மத்திய அரசு திட்டங்கள் எதுவும் நமக்கு தெரியாது. இங்கு இருக்கும் அரசியல் தான் காரணம். திராவிட கட்சிகள் வேறு யாரும் இங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக இவை மறைக்கப்படுகிறது. மோடி எதிர்ப்பு இவ்வகை தான்.
Shankar.. Congress had a Prime Minister who lost election and was rejected by people – Man Mohan Singh.. where were you then?
Are you comparing Manmohan singh with Modi?? Really man??
May be Manmohan was with wrong party but you cannot compare Manmohan’s skill with Modi. You are literally comparing Action with Advertisement. You have to take a note at India’s foreign policy for the past 20 years. And the impact that made in Indian economy. He played a very important role. Again Im not an congress supporter.
//But BJP band contains all people rejected leaders like Smriti Irani, Arun Jaitley who are ministers with plum portfolio.//
My answer was in context – of above statement of people rejected leaders…. If Man Mohan Singh who lost election – rather was never elected in Lok Sabha election can become PM and get backdoor entry through Rajya Sabha – what is wrong in BJP nominating leaders like Smriti and Jaitley as Ministers?
Please read in that context… I have been living in Delhi and have been working closely in IT projects of few ministries.. I have observed a lot while coordinating with senior officers.. India’s foreign policy shift needs to be credited to Narasimha Rao.. and then Vajpayee.. MMS continued their policies and built further working relationship.. and Modi is taking it to next level. Don’t narrow down foreign policy to Pakistan.. Modi has done a global outreach…
Irritating . like many I too thought could be from you with your half baked idea about hindutva organizations….When saw it was from Gopalan…it is still half baked….My father used to say ….alvathum nangale … edhirpathu nangalennu HINDU N ram’s articles against BJP… NO SPACE for others …. kittathatta andha maathri katturai idhu from GOPALAN IYER….aana sarakku romaba kammi… edho convert aana muslim maathri pinathi irukkar…PAAVAMAA irukku….vayasu aakaa aaka moolaiyum mazhungum illaiyaa…pooittu pokuthu…. Local politics pathi ezhuthungaaaa… all indiaa ellam ippo venaam…vayasukku vnadhappuram paarkalaam
திரு சங்கர் அவர்களே உங்கள் கட்டுரை இது இல்லை என படிக்கும்போதே தெரிந்துவிட்டது இந்த கருத்துக்கள் புரிவது சிறு சிரமம்தான் திரு கோபாலனை குறை சொல்ல மனம் வரவில்லை மோடிக்கு ஆதரவாகவும் சிறு குறைகள் காட்டி கட்டுரையை வளர்த்திருக்கிறார் அவ்வளவுதான்
I accept with mr. Gopalan fully except the mention about congress is the only party filled with corrupt politicians whereas bjp’s also nowhere a lesser evil.l feel they run their show with the backing of media and corporate houses.disasterus to the country to allow this racist attitude party to continue in govt any further.
you cant show your presence in anywhere …communism died longback….only you people can cry or create confusion.. nothing else can do
Thennavan, India is producing another Hitler called Modi who has to be accepted because he is God as per BJP and nobody has freedom of speech to even utter anything critical about him. They are branded Anti-national. Communism is non-existent and people like Akilesh is gone, Mamta may Go, only Andhra and Telengana has regional party now with strength, with congress losing everywhere under Rahul Captaincy.
THE LEFT ORIENTED JOURNALIST MAXIMUM WHAT WAY HE CAN SPIT THE UNTRUTH.. HERE SPIT….. NOTHING MORE NOT WORTHY ANALYTICAL ONE.
Peace be upon you brother, great job
உங்கள் இருவரையும் இருவரின் நட்பையும் வெகுவாக பாராட்ட தோன்றினாலும், நம்பிவரும் வாசகர்களுக்கு ஒரு கண்மூடித்தனமான பதிவைப் போடவேண்டாம் என சொல்லத் தோன்றுகிறது. அதே சமையம், வாசகர்கள் யாரும் திரு கோபாலன் அவர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சிக்க வேன்ஆம் என சொல்ல தோன்றுகிறது.
படிக்க தொடங்கிய சில வினாடிகளிலேயே தெரிந்துவிட்டது. இது சவுக்காரின் கட்டுரையாக இருக்காது என்று. இருந்தாலும் எழுத்துநடை, ஆங்காங்கே அப்பட்டமாக தெரிந்த பிழைகள், கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. ஷங்கர் அவர்களின் கட்டுரையாக இருப்பின் அவசர அவசரமாக அடித்து அனுப்பியதுபோல இருக்கிறது என்று பின்னூட்டம் எழுதலாம் என நினைத்திருந்தேன். நல்ல வேளை, சவுக்காரின் கட்டுரையல்ல. இருப்பினும் இது ஏதோ யோசிக்காமல் எழுதியதுபோல இருக்கிறது. அதே சமையம் கற்பனையாகவும் இருப்பது போல தோன்றுகிறது. திரு கோபாலன் கொஞ்சம் யோசித்து இருக்கலாம். மதிப்பிற்குரிய சவுக்கிற்கு, முடிந்தலவு உங்கள் பதிவை மட்டும் போடுவது நல்லது என்று தோன்றுகிறது. திரு கோபாலன் அவர்களின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதி இருக்கலாம். அல்லது, அவர் எழுதியதற்குபின் நீங்கள் ஏதாவது சேர்த்து பதிவிட்டு இருக்கலாம்.
Nonthu Noodles aana congresskarar ivar.. He is a spokesperson of congress. What else can be expected from him? What happened to “Boot-Suit ke Sarkar” Jibe? Why did not people listen to their leader’s voice. Better be graceful Mr. Gopalan. See what is the problem in your party. Then act. That’s what people with some brains will do. Well I dont know about Congress….
Waste of following your blog, there is no meaning in the post. Please ensure there are few people believe your blogs have the right information and news but now we totally lost.
In last 30 years.. there have been more than 30 + riots and thousands of muslims have been killed.. which country was in power in assam massacre in 80s.. Gujrat used to see riot every year since late 70s.. Meerut – muslims were shot dead.. in Congress rule..
What is this Mr.Gopalan writing.. RSS/BJP workers are killed every week in Kerala and Karnataka.. Nothing mentioned about it..
Mr.Gopalan seems to have become senile
Let us see if can write about Kannur killings of BJP cadres by Marxist. He has no guts. He is a Congi and he does his job well. Congress ruled India for 60 years and they gave full of shit for Indians. He expects Modi to wonders in 3 years and wants to bring back Congi with Nehru family ( Sonia + Rahul). God save India if Congress comes back.
well said ji.. unmaiyum kooda
99% Imagination…..
it is not even worth responding to this meaningless diatribe, couched in the “so-called” political journalism! if you do ask me then why did I post a comment, it was to highlight that I have read it!!