காவி இந்தியா

PTI3_11_2017_000139B

உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகள், பிஜேபியினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.   இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள்.  இந்துக்கள் பெரும்பாலாக இருக்கும் ஒரு நாட்டில், சாதி வேறுபாடுகளை கடந்து, இந்து என்ற ஒரு உணர்வை தட்டி எழுப்பி அவர்களை ஒரு நூலில் இணைக்கும் பணியில் பிஜேபி வெற்றி பெற்றிருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளை பார்க்க முடியும்.

இந்திரா மற்றும் ராஜீவ் மறைவுக்குப் பிறகு, சாதி மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்து அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடைய ஒரு தலைவர் இந்தியாவில் உருவாகவில்லை.   இதன் காரணமாகவே 1996க்கு பிறகு எந்த ஒரு கட்சிக்கும் மத்தியில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை நீடித்து வந்தது.    2014 பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை பிடித்ததன் மூலம், அந்த வெற்றிடத்தை மோடி நிறைவு செய்திருக்கிறார்.     இத்தகைய இந்த மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலமே என்றால் அது மிகையாகாது.   ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தி இருந்தாலும், மக்கள் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஊழல். அந்த ஊழலை மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றவை பெரிய அளவில் அதிருப்தியை உண்டு செய்தது.    இது நகர்ப்புறங்களில் காங்கிரஸ் அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தால், காங்கிரஸின்  கூட்டணிக் கட்சிகள் மாநிலங்களில் செய்த அராஜகங்களும், காங்கிரஸின் மீது மேலும் வெறுப்பை அதிகரித்தது.

கடந்த அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சிகள் நடத்தி வந்த அரசியலின் தன்மையே வேறு.  சிறுபான்மையினர் பாதுகாப்பு. தலித்துகள் பாதுகாப்பு.   சிறுபான்மையினருக்கு தொடர்ந்து ஆதரவு என்று சுதந்திர போராட்ட காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பல்வேறு கொள்கைகளை பின்பற்றி வந்துள்ளனர்.    சிறுபான்மையினர் ஆதரவு, குறிப்பாக இஸ்லாமியர் ஆதரவு என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.   சிறுபான்மையினர் இந்தியாவில் இருந்து விட்டுப் போகட்டும்.  ஆனால் அவர்கள் நாங்கள் சொல்லும்படி, சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெரும்பாலான இளைஞர்களிடம் காண முடிகிறது.    நன்கு படித்து, பெரும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்பை கக்குகிறார்கள்.   இது வியப்பானதொன்றும் இல்லை.   காந்தி உயிரோடு இருந்தபோது, நாடு முழுக்க அவருக்கு ஏகோபித்த ஆதரவு இருந்தபோதும் கூட, இந்து அடிப்படைவாதிகள் காந்தி கொல்லப்பட வேண்டியவர் என்றுதானே கருதினார்கள் ?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.    இந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் விழுமியங்களோ, காந்தியின் இஸ்லாமிய ஆதரவு நிலைபாடோ, இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதோ புரியவில்லை.  அது குறித்து விவாதிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.   இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு தேவைக்கு அதிகமான சலுகை அளிக்கப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறார்கள்.    இந்தியா இந்துக்களின் நாடு மற்றவர்கள் அனைவரும் இரண்டாம்தர குடிமக்கள் என்பதை வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம், மத்திய பாடநூல் நிறுவனம், ஐஐடிக்கள், சென்சார் போர்டுகள், திரைப்பட பயிற்சி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், போன்றவற்றில் இருந்து வந்த கல்வியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் மற்றும் காவி பின்புலத்தோடு உள்ள, தகுதியற்றவர்களை நியமிப்பதைக் கூட இத்தகைய இளைஞர்கள் வரவேற்கிறார்கள்.  அதற்கு ஆதரவாக விவாதம் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட செழுமையான கல்வி நிலையங்கள் காவிமயப்படுத்தப்படுவதை இந்த இளைஞர்கள் முழு மனதோடு கொண்டாடுகிறார்கள்.  இதில் என்ன தவறு என்று வாதிடுகிறார்கள். இந்தியாவில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களும், கலைஞர்களும் மை வீசி தாக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும், ஏன் சில இடங்களில் கொலை கூட செய்யப்படுவதையும் இந்த இளைஞர்கள் ‘இது நடந்துதான் தீரும்’ என்ற மனநிலையோடுதான் பார்க்கிறார்கள்.

மாட்டுக்கறி உண்டதற்காக ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க மறுக்கிறார்கள்.   மாடு தெய்வம்.  அதை உண்ணும் மனிதனை கொன்றால் என்ன தவறு என்று கூறுகிறார்கள். சாதீய ஒடுக்குமுறையால், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டால் அவன் தலித்தே அல்ல என்று உறுதிபட உரைக்கிறார்கள்.

இதுதான் இன்றைய இளைஞர்களின் மனநிலை.    இத்தகைய மனநிலை இந்தியா முழுக்க பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.  திராவிட அரசியலின் தாக்கம் பரவியுள்ள தமிழகத்தில் கூட இத்தகைய குரல்களை காண முடிகிறது. இத்தனை ஆண்டுகாலமாக மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த இந்து என்ற பெருமைக்கு உருவகம் கொடுக்க வந்த மாமனிதராக மோடி இத்தகைய இளைஞர்களால் பார்க்கப்படுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தரப் பிரதேசத்தின் எடாவா மாவட்டத்துக்கு சென்று தங்கியிருக்க நேரிட்டது.  அப்போது அந்த மாவட்டம் முழுக்க இந்துக்களும், இஸ்லாமியர்களும் நேரடி எதிரிகளாகவே இருந்ததை காண முடிந்தது.  ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும், இஸ்லாமியர்கள் பிரச்சினை செய்வார்களோ என்ற பதற்றமும், ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையின்போதும் இந்துக்கள் பிரச்சினைகள் செய்வார்களோ என்ற அச்சத்தையும் காண முடிந்தது.  ஒவ்வொரு பண்டிகையின்போதும், மாவட்ட நிர்வாகம் இரு தரப்பையும் அழைத்து பேசி பிரச்சினை இல்லாமல் விழாவை முடிக்க பெரும்பாடு பட்டதை காண முடிந்தது.

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே உள்ள வெறுப்புணர்வை கூர்மைப்படுத்தும் பணிகளைத்தான் பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள் 2014ல் பிஜேபி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் செய்து வருகின்றன.    இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே காதல் திருமணம் நடந்தால் அதை எப்படி கலவரமாக்குவது என்பதில் இரு தரப்புகளும் முனைந்து பணியாற்றி வருகின்றன.  இதன் ஒரு பகுதிதான் கர்வாப்சி, கவ்ரக்சக் போன்ற திட்டங்கள்.     நாடெங்கும், பசுவின் பெயராலும், கர்வாப்சி என்ற பெயராலும் நடக்கும் கலவரங்கள் அனைத்தையும் மோடி அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிவ சேனாவைச் சேர்ந்த ஒரு தலைவர், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.  பிஜேபி எம்பி சாக்சி மகராஜ் ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.   காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பெரும் போராளி என்றார்.  பிஜேபி அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி வெளிப்படையாகவே “ராம்ஸாதே” (ராமனின் பிள்ளைகள்), மற்றும் “ஆராம்ஸாதே” (தவறான வழியில் பிறந்த பிள்ளைகள்).  இத்தகைய அருவருப்பான வார்த்தைகளுக்கு பிறகும் இவர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார்.   மற்றொரு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால், அவருக்கு வெள்ளை தோல் இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸார் அந்தப் பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்றார்.  இவரும் இன்னும் அமைச்சராக இருக்கிறார்.   இது போன்ற அருவருப்பான பேச்சுக்களை மோடி அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.

இது போன்ற பேச்சுக்கள், இந்துக்கள் இடையே பிஜேபிக்கு செல்வாக்கை வளர்க்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.   மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற சட்டத்தையெல்லாம் மதிப்பவரா மோடி ? வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள், தேர்தல் சின்னத்தை காண்பிக்கக் கூடாது என்று தெளிவான விதிகள் இருந்தும், தேர்தல் நடந்த தினத்தன்று, வாக்களித்து விட்டு தாமரைச் சின்னத்தை வெளிப்படையாக காண்பித்து செல்பி எடுத்துக் கொண்ட நபர்தான் மோடி என்பதை மறந்து விடக்கூடாது.   வெற்றி என்பது எல்லா விதிமீறல்களையும் மறந்து போகச் செய்யும் என்பதை மோடி அறியாதவர் அல்ல.  ஒரு பெரும் கலவரத்தின் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட தலைவராக உருவானவர்தான் மோடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

2014430102313802734_20

இது போன்ற இஸ்லாமிய வெறுப்பு உணர்வின் ஒரு பகுதியே உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட இஸ்லாமியரை நிறுத்தாத பிஜேபியின் தேர்தல் தந்திரம்.  இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடிய ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு இஸ்லாமியரைக் கூட வேட்பாளராக நிறுத்ததாதன் மூலம், பிஜேபி யாருக்கான கட்சி, யாருடைய கட்சி என்பதை வெளிப்படையாக அறிவித்தார் மோடி.  இதர கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், இஸ்லாமியரின் ஒரு வாக்கு கூட அவசியமில்லை என்பதை மறைமுகமாக அறிவித்தது பிஜேபி.

“ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்களுக்கான புதைக்குமிடம் உருவாக்கப்பட்டால், இந்துக்களுக்கான இடமும் உருவாக்கப்பட வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது பேசினார் மோடி.  இந்துக்கள் புதைக்கவோ, எரிக்கவோ இடமில்லாமல் பிணங்களை வீதியிலா வீசிக்    கொண்டிருக்கிறார்கள் ?   இது மோடிக்கு தெரியாதா ?  நன்றாகத் தெரியும்.   ஆனால் இது பெரும்பான்மை இந்துக்கள் மனதில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மோடி நன்கு உணர்ந்திருந்தார்.   சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு இஸ்லாமியர்களை தாஜா செய்து கொண்டிருந்தபோது, இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக பிஜேபியை மக்கள் பார்த்தார்கள்.  சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஆஸாம் கானின் செல்வாக்கால், இஸ்லாமியர்கள் இந்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்தியதும் கடந்த ஐந்தாண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் நடந்தது.   இவை அனைத்தும் சேர்ந்து இந்துக்களின் பெருமையை காக்கும் ஒரே ஆபத்பாந்தவனாக மோடியை உருவாக்கியது.

கொல்கத்தா நகரம் இந்து இஸ்லாமியர்களிடையே நடைபெற்ற கலவரத்தின் காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தார் காந்தி.    இஸ்லாமியர்களின் மீது எத்தனையோ வெறுப்புகள் இருந்தாலும் காந்தியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கலவரம் நின்றது.   ஆனால் அத்தகைய ஒரு சகிப்புத்தன்மை இன்றைய இந்துக்களிடம் மறைந்து போனது ஏன் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் தீவிரவாதம் கிடையாது.   குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் வழக்கம் கிடையாது.    ரயில்வே நிலையங்கள், பொது இடங்களில் நம்மை சோதனையிடும் வழக்கம் கிடையாது.    அச்சமின்றி, எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலையே இருந்தது.

ஆனால் 1992 பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தை குண்டு வெடிப்புக்கு பிறகு, இந்தியா பல தீவிரவாத குண்டு வெடிப்புச் சம்பவங்களை சந்தித்து வந்துள்ளது.     இன்று 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த தீவிரவாத சம்பவங்கள் மட்டுமே கண் முன்னால் நிற்கின்றன.    இந்த தீவிரவாதச்  சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பது முகத்தில் அறையும் உண்மை.   பாப்ரி மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த மும்பை கலவரங்கள் மற்றும் குஜராத் கலவரங்கள் ஆகியவை, இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திரும்ப வைத்தன.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது இடங்களுக்கு செல்லுகையில் நடத்தப்படும் முழுமையான சோதனை, டிசம்பர் 6 போன்ற தினங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கடுமையான சோதனை, தீபாவளி, ஹோலி, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நாடெங்கும் நடத்தப்படும் பல்வேறு பதற்றம் அளிக்கக் கூடிய சோதனைகள் அனைத்தும், நாம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம் என்றே பெரும்பாலான இந்துக்களை உணர வைத்துள்ளது.   இத்தகைய பாதுகாப்பற்ற, பதற்றமான சூழலுக்கு காரணமே இஸ்லாமியர்கள்தான் என்று பெரும்பான்மையோரை கருத வைக்கும் வகையில், பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடர்ந்து கருத்தூட்டங்களை செய்து வருகின்றன. அது மக்களிடம் நன்றாகவே எடுபடுகிறது.

இத்தகைய பாதுகாப்பற்ற உணர்வுகளையெல்லாம் அகற்றக் கூடிய ஒரே தலைவன் நான்தான் என்று மோடி செய்யும் பிரச்சாரம் பெரும்பாலான மக்களை சென்றடைந்திருக்கிறது.     இந்தியாவின் சர்வ ரோகங்களையும் தீர்க்கும் ஒரே நிவாரணி, மோடி என்ற பிரச்சாரம் வலுவாக எடுபட்டிருக்கிறது.  பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த 1996 தேர்தலில் கூட பிஜேபி 161 இடங்களை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.    ஆனால் 1996க்கு பிறகு புதிதாக வாக்களிக்க தகுதியான இள வயதினர், மற்றும் அதன் பிறகு நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் ஆகியவை ஒரு ஆதர்ஷ புருஷனுக்கான தேவையை உருவாக்கியது.    அப்படியொரு ஆபத்பந்தவனாக மோடி உருவானார்.

இந்தியாவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் நடக்கும் சம்பவங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.   உலக செய்திகள் அனைத்தையும் கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலமாக வீடியோவோடு அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ள இளவயதினர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிடும் கொடூரமான வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.     உலகின் பல மூலைகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்தும் தீவிரவாத சம்பவங்களை அவர்களால் காண முடிகிறது. கொடூரமாக கழுத்தை அறுக்கும் வீடியோக்கள் வெளியாகின்றன. இப்படிப்பட்ட தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றும் மனித இனத்துக்கே விரோதிகளான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் சில இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருப்பதை பார்க்கும் ஒரு சாதாரண இந்து இளைஞனின் மனதில் என்ன விதமான உணர்வு ஏற்படும் ?  ஓவைசி போன்ற இஸ்லாமிய தலைவர்கள், இந்த வெறுப்புணர்வை மேலும் வளர்த்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் டீசர்ட் அணிந்து அவர்களுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் டீசர்ட் அணிந்து அவர்களுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்

மேலும் இன்று பிஜேபிக்கும், மோடிக்கும் மாற்றாக மக்கள் முன்பாக இருக்கும் அடுத்த ஆப்ஷன் என்ன ?    நிச்சயமாக ராகுல் காந்தியோ காங்கிரஸோ இல்லை.   இடது சாரி இயக்கங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து மிக பலவீனமான நிலையில் இருக்கின்றன.  இடது சாரி தத்துவங்கள் இன்றைய இளைஞர்களிடம் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.   ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற ஒரு சில கல்வி நிலையங்கள் தவிர்த்து, இன்று இடது சாரி இயக்கங்கள், தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.   எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இருந்த இடதுசாரிகளின் தாக்கம் இன்று சமூகத்தின் எந்த பிரிவிலும் இல்லை.   இந்துத்துவா தத்துவத்துக்கு மாற்றாக இன்று வலுவாக எடுத்து வைக்க எந்த கட்சியிடமும் எந்த விதமான தர்க்கமும், விழுமியமும் இல்லை.   இடது சாரிகளுக்கும், இதர கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்துள்ளார் என்று நம்பிக்கை அளித்த அரவிந்த் கேஜ்ரிவால், இதர தலைவர்களுக்கும் அவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.   இப்படி மாற்று அரசியல்கள் அனைத்தும் பொய்த்துப் போயுள்ளன. எந்த விதமான மாற்று அரசியலும் இல்லை.   இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்பற்று உணரும் ஒரு சாதாரண இந்தியனால் யாரைத் தேர்ந்தெடுக்க முடியும் ?

இதே போன்றதொரு அச்சமூட்டும் சூழலில், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தே அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் மறந்து விடக்கூடாது.

பிஜேபியின் பொருளாதார கொள்கைகள் சோசலிசக் கொள்கைகள் அல்ல.  காங்கிரஸின் பொருளாதார கொள்கைகளில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டது பிஜேபியின் கொள்கைகள் அல்ல.   பிஜேபி அரசு வந்த பிறகு இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வந்துள்ளதா என்ன ?  இன்னமும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.    கூடங்குளம் அணு உலை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ன ?   ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயுக்கள் எடுப்பதில்லையா என்ன ? நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்ன ?    எதுவும் இல்லை.  ஆனால் மோடி அமோக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணங்களே மேலே கூறியவை.

அடுத்த பத்தாண்டுகளுக்கு பிஜேபியை முறியடிக்கும் வகையிலான மாற்று சக்தி உருவாகுவதற்கான வாய்பே இல்லை.    ஏகபோகம்தான்.    இதே போன்ற ஏகபோகம் அறுபதுகளில் இருந்தது.   இந்திராதான் எல்லாம்.    அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தேவகாந்தா பரூவா, “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்றார்.   அதை இந்திரா உண்மை என்று நம்பினார்.  அதனால்தான் ஆட்சி கைவிட்டுப் போகும் ஒரு சூழல் ஏற்பட்டபோது நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.

நேரு, இந்திரா காந்தியைப் போன்றே ஒரு பிரம்மாண்டமான தலைவராக உருவெடுக்க வேண்டுமென்ற கனவு மோடிக்கு உண்டு.   வரலாற்றில் மிகப்பெரிய தலைவராக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கனவு மோடிக்கு உண்டு.  இதற்காகத்தான் உலகத்தின் ஒரு நாடு விடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்தகைய தலைவராக அவர் வரலாற்றில் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

இன்று இந்தியாவின் ஒரே தேசிய கட்சி என்ற நிலையை பிஜேபி அடைந்துள்ளது.   வரும் 2019 பொதுத் தேர்தலிலும் இதே பெரும்பான்மையோடு பிஜேபி வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.    போட்டியே இல்லாத நிலை இன்று உருவாகியுள்ளது.   மோடியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்க பிஜேபியில் ஒருவரும் கிளம்பும் சூழல் எழவே போவதில்லை.   இப்படிப்பட்ட ஒரு சூழலில், மோடி ஒரு ஸ்டேட்ஸ்மேனாக, பெருந்தன்மையாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணரும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.   403 இடங்களில் ஒரு இடத்துக்கு கூட இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தாத அவரின் நடவடிக்கையின் மூலமாக இஸ்லாமியர்களை மேலும் அந்நியப்படுத்தியிருக்கிறார் மோடி.

அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள “அனைவருக்கும் சமமான வாய்ப்பு” என்பதை மோடி உறுதி செய்ய வேண்டும்.   தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சமமான வாய்ப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.    கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் காவிமயப்படுத்துவதை தடுக்க வேண்டும்.   இப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டு இந்துக்களுக்கான தலைவராக இல்லாமல் அனைத்துத் தரப்புக்கான தலைவராக மோடி உருவாக முயற்சி எடுத்தால் அவர் வரலாற்றில் ஆகப்பெரிய தலைவராக பதிவு செய்யப்படுவார்.

இல்லையென்றால், இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தி, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளைப் போல, இந்துக்களுக்கான காவி இந்தியாவை உருவாக்கினார் என்றே பதிவு செய்யப்படுவார்.

You may also like...

45 Responses

 1. sriram says:

  At last India and Hindus had a good leader to take them forward

 2. Henrietta says:

  Deep thought! Thanks for corbnituting.

 3. Tisha says:

  Short, sweet, to the point, FRalEexEct-y as information should be!

 4. Kacy says:

  Weeeee, what a quick and easy solioutn.

 5. Constance says:

  Sempre più convinto di aver fatto bene a leggerlo direttamente in inglese. D’altronde già ne&p8#l217;incilit del primissimo libro si dice che i tre cavalieri vanno a Nordest quando in originale è NorthWest, quindi perchè stupirsi?La cosa che fa molto ridere è che per questo libro oltre al traduttore storico (Altieri) ne viene indicato un secondo.

 6. Lore says:

  Short, sweet, to the point, FRE-eExactly as information should be!

 7. Suresh says:

  So called secular parties only responsible for BJP rule and its growth. What is wrong in common civil code? Why only temples are under the control of Government and not Church, dargahs

 8. srikanth says:

  Mr. Shankar,
  Once again a biased article from you. You say in one stroke hindus should notlord over muslims and you also write because of people like azam khan muslims lorded over hindus in MP. Did you condemn it?
  You say hindus because of respect for Gandhi displayed tolerance when they were attacked by muslims in Calcutta and has lamented where that tolerance has gone. Instead of condemning violence by muslims you are saying tolerance is needed.. Is it fair Mr. Shankar

  Mr.Shankar you are want Modi to be a leader for all communities, but whether you have ever said so for any earlier prime ministers or leaders?

  You have once again shown your true colours.

 9. azuquarks says:

  After reading this article , as understand clearly clouds on India and western countries , we has to separate India and rest of the world .

  As long as concern in India , yes , BJP become almost monopoly on politics , its using power both underground and as well political dominations . If you clearly watch their statements nothing is truth , if i say in correct words lies are kept inside every truth .Only Kerla and Tamilnadu understand escalates their double standard but we cant ensure how many years it will be like this in these states too.

  If you see , why Islam is targeted all over the world followings are main reason.
  1.Oil resources on Islamic countries .
  2. Islam basically hates alcohol , Gambling , interest banking and other underground business ( Naturally whoever say this , they will be targeted )

  Apart Muslims will not worry this kind of act all over the world , because Muslims are waiting to face real tajjal , so they never fail to face this kind of mini tajjals in life .

  Life is short , let us live with humanity .

 10. test says:

  It is very evident that indian hindus are on a polarising stage and fortunately/unfortunately BJP is in power. last rule oppositions have bullied the majority by placing fake secular thoughts and dalit vote bank politics. BJP is doing a reverse engineering on the exisiting model and its working out well for them.
  If you want to understand my words, just analyse the words from a dalit/muslim/christian nowadays. they are tagetting hindutva/hinduism diretcly which shows their insercurity!

  • R.S.Raj says:

   Insecurity of the minorities question is raised only by the vote bank politics played by some individuals/institutions wearing secular masks not by the real minorities. You can see all communities living together till some selfish persons wrong propaganda.

 11. seetha says:

  Yes agreed.Everyone should get equal opportunity.
  But the Islamic community has to do some soul searching regarding poverty of other muslims.The madrsassas can easily bring out some change but unfortunately they are controlled by rich people. A fatwa against a young girl for singing songs but is there any fatwa against Saif ali khan ,or his sister Soha ali khan ?Because they are royalty and control significant properties related to their religious organisations.
  I say this because i am in public service and deal with poor muslims .

 12. R.S.Raj says:

  First of all every Indian should know that before the law of the land all are equal as a human being. But in the name of religion if one’s right as human is denied how could we accept it.

 13. Guna says:

  Jai Hindu, unkalal advise I afgan,Pak Bangladesh L ullavarkku sollungal ankull sirupanmaiearai paathukakka

 14. Arun says:

  Good article and somewhat balanced. All the Muslim brothers should accept the fact that BJP & Modi are real and Modi is going to be the PM at least until 2024. Also they should accept that this spectacular rise is due to “one-eyed” policies of our pseduo secular parties. I have two kids. For me both are same. When my elder kids was like 4 year old, my younger kids was around 2 and we had to remind our elder one to go easy on younger one every time. Younger one gets away everytime when he hit the elder one. The elder one always comes to us running as he couldn’t hit back as well. During this time the younger one started enjoying he pseudo-power and so abuses went beyond control. At that point of time we stopped curbing the elder one when he hits back at the younger. After few months things became normal. Younger one knows his place and power. If you look at this real life story, as a parent we loved/loving both equally.. in fact the younger one touch more just bcos he was young. But had we not changed our stance in time, our elder one would have turned more violent as he was constantly bullied by younger one and had parent support. Younger one would have become more rowdy thinking he got more power than what he actually got. 10 years passed since that correction and we are happy to have raised two wonderful kids who love each other a lot as well. So what is happening in India is correction. All these political parties are treating muslims like monolithic vote bank and continue to pamper them and now they have to stop. Soon the minorities will understand and choose the leader purely based on present and future and not in the name of religion. The correction must go on. The text books glorifies Babars, Ghajinis and Akbars. I will accept my friend here in Tamilnadu by the name of Akbar as my leader. I don’t mind standing by him to push him to next level as long as he loves the country the same way as mine. But no where in this world, the aggressors are glorified in text books. It made sense in 1947 when the country just got out of pains of partitions. Then the leaders would have thought (bad decision, may be) it would be hard to differentiate aggressor Akbar and next door neighbor Akbar by the common man of 1940s. Now the situation is different. The current generation can differentiate between Marxism and China, Hinduism and Bajrang Dal, Tamilism and Seeman.. These lot can take the best of Marxism and Chinese modelof development.. Same way, good things both from Tamil identity and Seeman’s lectures. If Modi and BJP during the course of correction, failed as a good parent whereas they support elder kid at the expense of younger kid, these level headed uncles and aunties will rise and bring in the new parent for a New India!!

 15. Janarthanan says:

  I don’t agree why savukku has taken such a standFirst BJP vote share is around 40%other parties 60% Due to our election system the no of seats are disproportionate and and you are telling modi wave kavi wave etc Even if you take % of votes polled (80% or so)BJP share is just 32%. It is less than 1/3of people mandate so can you assume all UP people supports BJP No. It is electoral system that is not reflecting the true aspirations of people. This not only for BJP for all the parties and all the ruling parties So don’t say landslide victory for that matter in India no party has crossed the mark of 50% or majority in any election This is our system weaknessIf we change it we will get different results Till then saying that people voted wholeheartedly to this party or that party is not reflecting the true position why savukku famous for its in I
  Unbiased analysis has come to such a decision Could not understand Don’t get panic Things will change for good and please don’t mislead the people

  • Johnette says:

   Thanks so much for posting the video and words here from Jackie`s cebiorateln of life. I really wished I could`ve been there in person. The video slide show was especially moving for me seeing old pictures form when we first met- it allowed me to grieve for your mum, as I loved her so, truly.

 16. Shankar says:

  Terrorism and Islam should be thought separately. The third world countries have given an impression that terrorism is simply Islamic and Muslim. What is happening in syria, Yemen are all Islamic Philosophy oriented Wars and not against any race or religion. America branded Islam with Terrorism. If one would recapitulate, during the WTC attack, CNN had put WAR AGAINST ISLAM and then upon Pope’s advice changed WAR AGAINST TERRORISM.
  In UP, the votes polled are votes due to break in Samajwadi – father and son. Above all, Rahul and Akilesh did not have anything to offer to people or give a conviction to the People. Certainly UP has never been on an high terrorism unlike Mumbai , Chennai [Rajiv Gandhi attack], Kolkatta and United Andhra [When Mr.Chandra Babu Naidu was attacked]. It is certainly not because of Muslim or Religion. It is purely on the trust of Politicians, even without a CM candidate people had voted, which only shows that they had a hatred towards the other parties when they had seen Mayavati, Akilesh etc. Media Terrorism is motivating the interpretation with a negative impulse.

 17. Jay says:

  If every muslem contribute to the country like our APJ, people may not have created this kind of aversion on muslem like this. Underlying disciplines in the religion is spreading the religion *at all cost*. People are getting aware of this negative things in the religion. Muslem bros should give up hard and barberic rules and return civilization. More they go barberic, it will lead to many evolutions of many into Modi

 18. Halith says:

  ”’தீவிரவாதச் சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் ” இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை விட சம்பந்தப்படுத்தபட்டார்கள் என்பது தான் உன்மை

 19. Halitj says:

  ”’தீவிரவாதச் சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் ” இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை விட சம்பந்தப்படுத்தபட்டார்கள் என்பது தான் உன்மை

  • Raj says:

   You live in the bubble where you are made to believe that. When I hear people say 9/11 was insider job, ISIS is CIA’s secret force etc, I can only pity for you.

   There is no difference between you and people who still say earth is flat or moon landing is fake. No amount of evidence is going to convince you. You have to think critical on your own.

 20. Raj says:

  @nota

  I think there is a truth in color of the skin. Do you know how many people admired Rajeev, MGR and Jayalalitha because of their color?

  Dont know how that message was delivered by Giriraj, but the topic he raised whether Congress would have accepted a Nigerian instead of Itialian is something to think about seriously.

 21. nota says:

  மற்றொரு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால், அவருக்கு வெள்ளை தோல் இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸார் அந்தப் பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்றார். இவரும் இன்னும் அமைச்சராக இருக்கிறார். இது போன்ற அருவருப்பான பேச்சுக்களை மோடி அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.

  நீங்கள் ஒரு உதாரணம் கொடுத்து இது தவறு என்று காண்பிக்க வேண்டியதுதானே .
  நல்லவன் மாதிரி பொய் சொல்லுவது நிக்காது

  • Raj says:

   I think there is a truth in color of the skin. Do you know how many people admired Rajeev, MGR and Jayalalitha because of their color?

   Dont know how that message was delivered by Giriraj, but the topic he raised whether Congress would have accepted a Nigerian instead of Itialian is something to think about seriously.

 22. Meganathan says:

  இந்தியா சமத்துவமான நாடாகும் என்று நினைத்திருந்தேன் சாமியார்களின் நாடாகிப் போனதே.. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சங்க தலைவர் தேர்தல்களை தடை செய்ய வேண்டும் மாணவர்கள் அரசியலை பொது வெளியில் கற்றுக் கொள்ளட்டும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை எல்லாம் முடித்து முனைவர் பட்டம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த நடுத்தர தாய், தகப்பனின் உழைப்பும் சேர்த்து கொலை செய்யப்படுகிறது மாணவனாய் அனுப்பிய மகன் பிணமாக திரும்பினால் அவனால் தான் தலை நிமிர காத்திருக்கும் ஒரு குடும்பம் நிர்கதியாக நிற்கிறது அப்படி தேர்தல் நடந்தாலும் இந்த அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி சார்ந்தவர்களை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க கூடாது # இனியொரு ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன் உயிரையிழந்து விட கூடாது

 23. Raj says:

  Its nice to fit a story on how BJP won after the fact. It was not all BJPs work. They got a lot of help from Congress and Communists.

  BJP did create disturbances, but overall people were fed up with this pseudo-secularism as its practiced in India. Secularism is about separation of religion from the government, but what we see is mostly minority appeasement. I see you quote “Sakshi Maharaj” or “Mohan Bhagvat”, not many people know who they are and dont even care. Its like Seeman saying TN is for tamils. But when Jaya or Karunanidhi says the same things, it has much more added weight. Likewise people note when Rahul says Saffron terrorism is what worries him.

  Size matters:

  Yes, there are so called terror incidents incited on RSS and Shivsena side, but nothing in comparison to the ones unleashed by Islamic Fundamentalists. When you falsely equate these, you are just alienating more people who can see through. There is nothing in comparison to the scale of terrorism by Islamic Fundamentalists in any other religion or sect in 21st century. No one has fatwa issued when they draw lakshmi in underwear. Try drawing a cartoon of Mohammed and see what happens.

  All I believe is BJP just used the situation that was created by Congress and Communists. I hope Congress does introspect and change its minority vote bank politics.

 24. suresh says:

  speaking about tolerance, Hindus lost many things.Pakistan and Bangaladesh become muslim countries. In 1947 20% population of Pakistan and 23% of population is Hindus. Now HIndus reduced to 2% in Pakistan and 9% in Bangaladesh. Nearly 2 to 5 crore HIndus Population missing in both countries. Nobody talk about it. But, still speaking India is secular country then it is multireligion bla,bla. Secularism is pushed towards only Hindus by you like guys.. Ambedkar clearly told when any problem come externally, Dalits joining with other caste groups and standup together.
  Dalits is not caste . It contains many castes . Total 20% of UP Population is Dalits . 12% population is Jatav community which Mayavatahi belongs. Mayawathi gave only important to Jatav community in the name of Dalits. 40% of Population of UP is OBCs. Yadavs are 9% of OBC Population . Mulayam gave only important to Yadav community. So, 8% of Dalits votes and 31% of OBC votes apart from their traditional support of 13% Brahmins and 8% of other High castes votes what BJP got.

  Islam is just religion only. It has many sects Baralevi, Shia, Ahamadiya ,sufi total 72 sects there. Here people talking about multi religious bla bla, but, hard liners of Islam not even ready to accommodate Ahamadiyas. Apart from sects, many caste groups also in Islam. you might be heard Pasmanda Muslim Groups they comprised 85% of
  Muslim population those opposing high caste Muslims asrafs. All Madarsas, wahf Boards and other Muslim Institution controlled by Asraf high caste muslim groups. Syeds, pathens,sheikh are high caste Muslim groups. Asam khan what u talk is pathan i.e high caste Muslim.
  https://en.wikipedia.org/wiki/Caste_system_among_South_Asian_Muslims .

  you believe or not Shias are traditional BJP supporters. They are 25% of Muslim population of India. Shias feel comfort with Hindus than Sunnis. Shia Leader clearly told if we go the route against what Sunnai goes. Sufi sect of Islam is nearly 50% of Muslim population. They are common and poor people who are real affected of HIndu-Muslim riots. They are Dharga worshipers did not accepted by Deobandi and Wahabhi sects of Islam. Sufis embraced Indian Culture and live like HIndus. BJP actually promote Sufi sect of Islam it is good for India.
  Hence conclusion BJP not total against Muslims and Dalits. Donot fear on raise of BJP in India.

 25. விஜய் says:

  ஹிந்துத்துவம் என்றல் என்ன என்று தெரியாமல் இருந்த என்னை ஹிந்து என்று உணர வைத்தது இங்குள்ள திராவிட கட்சிகளும் ,நடுநிலை பேசுகிறோம் என்று ஒரு சர்பகவே பேசி வருபவர்களும் தான் .. கடவுள் இல்லை என்று கூறும் வீரமணி ,இஸ்லாமியர்களை ,கிறிஸ்துவர்களையும் கூடவே வைத்துக்கொள்வர் .. நாத்திகத்தை அறவே ஏற்காத இஸ்லாம் வீரமணி,கருணா, கம்யூனிஸ்ட் போன்றோர்களை ஏற்றுக்கொள்கிறது ..இதற்கு ஒரே காரணம் அவர்கள் இந்துகளையும், அவர்கள் தெய்வத்தை மட்டும் கொச்சை படுத்துவதினால் தான் .. அதில் அவர்களுக்கு மனம் குளிர்ச்சி அடைகிறது .. வெளிப்படையில் ஹிந்துகளை சகோதரர்,சகோதரி என கூறும் இஸ்லாமியர்கள் உண்மையில் அப்படி இல்லை என்று தெளிவாகிறது .. நடுநிலை பேசுகிறோம் என்று என்னை போன்றோரை வளர்த்து விட்டு நாங்கள் பிஜேபி போன்ற பரிவார காட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு முழு முதல் காரணம் ஒரு சார்பு பேசும் நடுநிலை என்று கூறி கொள்பவர்கள் தான் ..

 26. Eesan says:

  Losers talk. Rubbish. Still people like you fail to accept defeat. It is because of your own policies you have lost. You and what ever party you support have been polarizing the country for years. It worked for many years as people did not have this much information in hand. People believed what they saw in print media which was controlled by Congress/DMK and Communists. In the era of social media your lies get exposed. Unga paruppu vegala. As simple as that. You are blaming the voters. That shows your desperation. Not different from what Karunanidhi did some years back. He blamed the voters when he lost the election. People do not like that type of politicians. You have done the same thing now. Makkalin Theerpay Magasan Theerpunu sonnavanga neega. Ungallaku vote podalayna avan kettavan, muttal? Grow up man.

 27. Mohamed Rafik says:

  அருமையான கட்டுரை, ஆழ்ந்த கருத்தியல்கள்.. பாராட்டுக்கள்..! 

  பாராட்டுக்களோடு மேலும் சில தகவல்களை சொல்லிக் கொள்கிறேன்.

  உபியில் புதைக்குமிடம் அரசியலோடு இன்னொன்றையும் தரம் தாழ்ந்து சொன்னார் நம் பிரதமர். “ரம்ஜானுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினால்.. தீபாவளிக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கூறினார். அது உண்மையா என்று கண்டறிய ஒரு நிறுவனம் RTI போட்டபோது.. ரம்ஜானை விட தீபாவளிக்குத்தான் ஐந்து நாட்கள் தடையில்லாத, அதிக அளவிலான வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளடு என்ற உண்மை வெளியானது.

  இது போன்ற போலரிசைசேசன் பேசி பேசியே உபி இந்துக்கள் மனதில் ஒரு இன்செக்யூரிட்டி உணர்வை உருவாக்கி வெற்றியும் பெற்று விட்டார் உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு பிரதமர். ஆனால் இவ்வளவு பெரிய பிரிவினைவாத பிரசாரங்களை ஒரு பிரதமர் செய்திறந்த போதும் காங்கிரஸ் என்ற கையாலாகாத எதிர்க்கட்சி இதனை தேர்தல் கமிசனிடம் கொண்டு செல்லவில்லை. அவர்களே சூடோ மோட்டோ போடட்டும் என்று காத்து இருந்தனர்.

  //ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் சில இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருப்பதை பார்க்கும் ஒரு சாதாரண இந்து இளைஞனின் மனதில் என்ன விதமான உணர்வு ஏற்படும் ?//

  நீங்கள் பதிவில் போட்டுள்ள படம் வந்த சமயத்தில் எல்லாம் உலகில் ஐஎஸ்ஐஎஸ் பெரிய அட்டூழியங்கள் செய்திருக்கவில்லை. மேலும் அப்ப்போதுதான் ஐஎஸ்ஐஎஸ் இந்திய நர்சுகளை ஒரு சிறிய கீறல் கூட இல்லாமல் விடுதலை செய்த நிகழ்வும் நடந்தேறி இருந்தது. அந்த சமயத்தில்தான் சில ஆர்வக் கோளாறுகள் அத்தவறை செய்திருந்தனர்.

  இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம் நீங்கள் சொன்னதுபோல் ஒரு நாட்டின் அனைத்து சமூகத்தினர்களையும் அரவனைத்து அனைவரோடு வளரும் நாடே உலகில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்கிறது. அதை தவிர்த்து பிரிவினை வாதங்களும், குறிப்பிட்ட சமூகங்களை புறந்தள்ளிவிட்டு செய்யும் அனைது முயற்சிகளும் அந்நாட்டை பின்னோக்கியோ அல்லது மேலும் பிரிவினைகளுக்கு தள்ளுமே தவிர முன்னேற்றாது.

 28. suresh says:

  Dear Shankar,
  Religious conversions all Muslim organisations and chirstian orgainsation doing. then why not Hindu groups. this is your biased view. u are not understanding Islam . goto alisina.org, or iriiallaIslam then come to what about real Islam. If you enjoy because Hindus are majority. when Taliban come to power first they hang atheist prime minister mind it.

 29. எல்லாம் உண்மைதான். ஆனால் மார்க்கமே இல்லை என்றெண்ணலாமா? தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் மார்க்கமே இல்லை என்று தான் நினைத்தோம். ஏதோ ஒரு வழி பிறந்திருக்கிறது? அது வழியா என்பது சந்தேகமே, ஆனால் ஏதாவது ஒன்று நடந்தே தீரும் என்பது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு அமைச்சரும் தன்னிச்சையாக அறிக்கை வெளியிடும் “சுதந்திரத்தை” யாவது தற்பொழுது அனுபவிக்கிறார்கள். ஆந்திரா/ தெலுங்கானாவில் கூட எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் இருக்கிறது. I am an incorrigible optimist. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு விடியல் காத்திருக்கிறது நமக்காக. நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு அஸ்திவாரமே! உங்களுக்குத் தெரியாததில்லை!

 30. அழகான பதிவு. அலசலுடன். சாலச் சிறந்த விமர்சனம். உதரித் தள்ள முடியாத உதாரனங்கள். ஆனால் இச்லாமியர்க்கு எதிராகத் தான் வாக்களித்திருப்பார்கள் என தோன்றுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக என எடுத்துக் கொள்ளலாமா? அப்பாவிற்கும் மகனுக்கும் இருந்த சண்டை ஒரு பெரிய காரனமாக இருக்குமா? எது எப்படியோ, 2019 மோடிக்குதான். ஆங்கிலத்திலும் பதிவிடுங்கள் முடிந்தால்? தேசிய அளவிலான பிரச்சினை என்பதால்.

  • Senthil kumar says:

   விடியல் நிச்சயம் உண்டு.காலம் பதில் சொல்லும்

 31. nowfel says:

  மலேகான், சம்ஜோதா போன்ற குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் காவிகள் என்பதை கட்டுரையாளர் திட்டமிட்டு மறைத்துவிட்டா

 32. sakthi says:

  This is not the fault of B.J.P. But the divide and rule policy of the parties who targetted minorities just to raise their vote bank.

 33. CHANDRAN says:

  kakkiyathu visam idhil advice enna vendi kidakku….kaiyaru nilaikku thallappattu vittanar

Leave a Reply

Your email address will not be published.