மென்மையாக ஒரு ஊழல்.

You may also like...

14 Responses

  1. N. Deivasundaram says:

    Still I have faith with Mr. Sankar who fought against injustice and was victimised for this.

  2. 1960-70 “விஞ்ஞான ஊழல் புரிந்தவர்” என்னும் பட்டம் பெற்ற தன்னிகரில்லா தலைவர், அதன் பின் ஆறு முறை ஆட்சியில் இருந்தார் என்றால் தமிழ் மக்கள் எப்படி “பேச்சில் மயங்குபவர்கள்” என்பது புரிகிறது.
    முனைவர் பட்டம் பெற, மாணவர்கள் எப்படி எல்லாம் கொத்தடிமை களாக இருக்க வேண்டி உள்ளது ? நமது ஜனநாயக நாட்டில் குற்றவாளிகள் இருபது பேருடன் தொடர் போராட்டம் செய்தால் போதும், அவர்கள் ” குற்றவாளிகள் அல்ல” என கூறப்பட்டு வலம் வருவார்கள்–என இப்பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.

  3. ராம் says:

    தவறான தகவல் இது: இந்த மென்பொருள் என்னவென்றால், MS Word போலவே தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருள்.
    வலைப்பக்கத்திலிருந்து எடுத்தது, ஒழுங்காக படித்து தெரிந்து எழுதவும்.

    தமிழ்மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்குத் தற்போது எழுத்துருக்கள், விசைப்பலகைகள், எழுத்துரு மாற்றிகள் போன்ற தனித்தனி மென்மங்கள் கிடைக்கின்றன. தமிழில் பல வலைத்தளங்கள், வலைப்பூக்கள் நிலவுகின்றன. ஆனால், தமிழுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு போன்ற ஒரு முழுமையான சொற்செயலி அல்லது சொல்லாளர் என்றழைக்கப்படும் ஒரு மென்மம் உருவாக்கப்படாமல் இருந்தது. இதுபோன்ற மென்மத்தில். ஆவணத்தின் மொழிநடையில் எழுத்துப்பிழை உள்ள சொற்களைத் திருத்தித் தரும் வசதிகளும், அகராதிகள், சொல்லடைவு போன்றவையும் இடம்பெறும். இந்த வசதிகளைக் குறிப்பிட்ட மொழிசார்ந்த ஆய்வுகளின் அடிப்படையில்தான் உருவாக்கமுடியும். இக்குறையைத் தற்போது வெளிவந்துள்ள மென்தமிழ் மென்மம் நிறைவுசெய்கிறது.

    தட்டச்சு செய்யும்போது தவறான விசைகளை அழுத்துவதாலும் மொழிநடையில் தவறு ஏற்படலாம். தமிழ் இலக்கணவிதிகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாததாலும் பிழைகள் ஏற்படலாம். இதனால் தட்டச்சு செய்யப்படுகிற ஆவணங்களில் சொற்களில் எழுத்துப்பிழைகள், சொற்களுக்கிடையே ஒற்றுப் பிழைகள், ள,ல,ழ, ண,ன,ந, ர,ற ஆகிய எழுத்துகளில் மயக்கங்கள் அல்லது குழப்பங்கள் ஆகியவை ஏற்படலாம். இப் பிழைகளையெல்லாம் தவிர்த்து, நல்ல தமிழில் ஆவணம் அமைய உதவும் மொழிக்கருவிகள் தமிழுக்குத் தேவை. மேற்கூறிய வகையில் தமிழுக்கு உருவாக்கப்படவேண்டுமென்றால், தமிழுக்கே உரிய மொழியமைப்பை – இலக்கணத்தை – கணினிக்கு ஏற்ற வகையில் கற்றுக்கொடுக்கவேண்டும். இன்றைய தமிழ்ச்சொற்களுக்கான அகராதி, தமிழ் இலக்கணம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு, கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் நோக்கில் கணினியில் தமிழைக் கையாளுவதில் மென்தமிழ் மென்மம் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
    விசைப்பலகைகள் : தமிழை உள்ளீடு செய்யத் தமிழ் 99, தமிழ்த் தட்டச்சு, புதிய தட்டச்சு, ரோமன். பாமினி உட்பட 11 வகை விசைப்பலகைகளும் ஒருங்குறி அடிப்படையில் 20 தமிழ் எழுத்துருக்களும் மென்தமிழில் இடம்பெற்றுள்ளன.
    எழுத்துக் குறியீடு மாற்றி : எந்த வகைத் தமிழ் எழுத்துக் குறியீட்டையும் வடிவமைப்பு மாறாமல் வேறு எந்த வகைக் குறியீட்டிற்கும் மாற்றலாம். ஒருங்குறிக் குறியீட்டில் இல்லாமல் பிற குறியீடுகளில் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களை வடிவமைப்பு மாறாமல் வேறு எந்தக் குறியீட்டிலிருந்தும் வேறு எந்தக் குறியீட்டிற்கும் மாற்றித் தரும்.
    சொற்பிழை திருத்தி: அகராதிச் சொற்கள் மட்டுமல்லாமல் விகுதிகள் ஏற்ற சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் திருத்தித்தரும். கணினியில் தட்டச்சு செய்யப்படுகிற தமிழ் ஆவணங்களில் அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்யப்பெற்ற ஆவணங்களில் சொற்பிழைகள் காணப்பட்டால், அவற்றைத் தவறு என்று இனங்கண்டு, திருத்தித் தரும். சொற்களைச் சேர்த்து எழுதும்போது ஏற்படும் இலக்கணப் பிழைகளையும் திருத்தித் தரும். இப்படியொரு மென்மம் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக தமிழ் மொழிக்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
    சந்திப்பிழை திருத்தி : ஒற்று(சந்தி) இடப்படாத இடங்களில் இட்டும், தேவையில்லாத இடங்களில் இட்ட ஒற்றினை நீக்கியும் தரும். படித்து பார் என்ற தொடரில் ஒற்று போடாமல் இருக்கிறபோது, அதைக் கண்டறிந்து படித்துப் பார் என்று திருத்தித் தரும். வந்துப் பார் என்ற தொடரில் ப் என்ற ஒற்று வரக்கூடாது. அதையும் கண்டறிந்து, வந்து பார் என்று திருத்தித் தரும்.
    தமிழ்ச்சொல் சுட்டி : ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதினாலும் அவற்றுக்கு நிகரான தமிழ்ச் சொற்களாக மாற்றித்தரும். ‘நான் காலேஜில் டீச்சரைப் பார்த்தேன்’ என்று தட்டச்சு செய்தால், ‘நான் கல்லூரியில் ஆசிரியரைப் பார்த்தேன்’ என்று ‘காலேஜ்’ ‘டீச்சர்’ இரண்டையும் விகுதிகளோடு மாற்றித் தரும்.
    அகராதிகள் : தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் : 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி.
    இணைச்சொல் அகராதி : ஒரு சொல்லுக்கு இணையான பல சொற்களை வழங்கும். வெட்கம் என்ற சொல்லுக்கு இணையான சொல்லைத் தேடினால் கூச்சம், நாணம், தயக்கம் போன்ற இணைச்சொற்களை வழங்கும்.
    எதிர்ச்சொல் அகராதி : ஒரு சொல்லுக்குரிய எதிர்ச்சொற்களை வழங்கும். வெறுப்பு என்ற சொல்லுக்கு எதிரான சொல்லைத் தேடினால் விருப்பு, அவா, அன்பு, பாசம், நாட்டம், பிரேமை, பிரேமம், விருப்பம் போன்ற எதிர்ச்சொற்களை வழங்கும்.
    மயங்கொலிச்சொல் அகராதி : தமிழில் ஏற்படும் ல, ள, ழ – ந, ண, ன – ர, ற மயக்கங்களைத் தவிர்க்கப் பயன்படும் பொருள் வேறுபாட்டுக் குறிப்புகள். Fruit என்ற சொல்லுக்கு இணையான பழம் என்ற தமிழ்ச்சொல்லில் ழ எழுத்தா அல்லது ள, ல எழுத்தா என்ற ஐயம் ஏற்பட்டால் அந்தக் குழப்பத்தைத் தீர்க்க உதவும் ஒர் அகராதி இடம்பெற்றுள்ளது.
    தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி : தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல் அகராதியும் இடம்பெற்றுள்ளது.
    அகரவரிசைப்படுத்தி : ஆவணத்தில் இடம்பெற்றுள்ள சொற்களைத் தமிழ் நெடுங்கணக்கின் அடிப்படையில் அகரவரிசைப்படுத்தித் தரும்.
    சொல்லடைவு : சொற்பட்டியலுடன் சொல் வரும் பக்கங்களை வழங்கும்.
    எண் – எழுத்து மாற்றி : பயன்பாட்டில் இருக்கும் எத்தகைய எண்களையும் தமிழ்ப் புணர்ச்சி விதிப்படி தமிழ்ச் சொற்களாக மாற்றித்தரும். ஆவணங்களின் இடையில் 56894 போன்ற ரோமன் எண்கள் இடம்பெற்றால், அவற்றை ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றுநான்கு என எழுதித் தரும்.
    Pdf கோப்பு மாற்றி : ஆவணக் கோப்புகளை Pdf கோப்புகளாக மாற்றும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
    துணைநூற்பட்டியல் : ஆய்வாளர்களுக்குப் பயன்படும்வகையில் துணைநூற்பட்டியல் தயாரிப்புக் கருவி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. MLA, API, Chicago போன்ற பலவகை ஆய்வுநடைகளில் துணைநூற்பட்டியலை எளிதாகத் தயாரிக்க உதவும் இக் கருவியானது, தமிழ் மென்மத்தில் முதன்முதலாக இடம்பெறுகிறது.
    மேற்குறிப்பிட்ட பல தமிழ்க்கருவிகளோடு, தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களைப் பதிப்பிக்க உதவும் கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலைநாட்டு மொழிகளுக்கான சொல்லாளர் அல்லது சொற்செயலி மென்மங்களுக்கு இணையாக, கணினித் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி இம்மென்மம் உருவாக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு பல வசதிகளை உள்ளடக்கிய ஒரு தமிழ் மென்பொருள் இது. 2011 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டு, அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
    இத்தகைய தமிழ்மொழிப் பயன்பாட்டு வசதிகள் தமிழ்ப் பயன்படுத்தத்தைப் பெருக்க உதவிசெய்யும். இம் மென்மத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவரும் இந்நாள் தமிழ்ப்பேராயச் சிறப்புநிலைப் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் தனது வல்லுநர் குழுவுடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து உருவாக்கியிருக்கிறார்.

  4. காவியன் says:

    எத்தனை பேருயா பல ஆயிரம் கொடுத்து மைக்ரோசாப்ட் ஆபீஸ் வாங்க முடியும்? இந்த மென்பொருள் சிறந்த தமிழ் மென்பொருளாக 2013-ல் தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் விருது பெற்ற மென்பொருள். தமிழன் ஒருவன் ஒரு சிறப்பான பொருளை உருவாக்கி சந்தை படுத்தினால் உனக்கு ஏன்டா எரியுது?

  5. Kabilan says:

    இந்த கட்டுரை முற்றிலும் சுத்த வடி கட்டின பொய். நான் இந்த மென்பொருளை வாங்கியுள்ளேன். இதில் ஏற்கனவே MS-Office Add-In வசதியும் உள்ளது. தமிழ் இணைய பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு மென்பொருளும் உருப்படியாக வெளியில் வரவில்லை, பல கொடிகள் செலவு செய்தும். இது அவர் பல ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு உருவாக்கியது. அவரையும் எனக்கு நன்றாக தெரியும். மென்பொருள் பணியாளர்கள், அது அவரது முன்னாள் மாணவர்களோ அல்லது வேறு நபர்களோ, சம்பளம் வாங்கித்தான் பணி செய்கிறார்கள். முற்றிலும் தவறான தகவல்கள்.

  6. Shankar says:

    Savukku, Hindu Religious and Charitable Endowments ministry was created by MGR with a noble intention in Tamilnadu/ There is no such ministry anywhere but this will be operating under Ministry of Culture as none of the Government want to separate religion. But in Tamilnadu it is certainly necessary and hnece MGR created.

    It is not easy to get a project without an insider in HRCE. However Genuine and authentic with the spiritual and religious intention the project is , it is very very difficult to get awarded except people like deivasundaram can get a project.
    In Tamil Culture and Development, Ministry of Toursm, Ministry of HRCE, Ministry of Sports, huge money is being swallowed and corruption are evey day incident success stories.

    Does anyone know the Gold and Gold related STocks in Temples
    Does anyone know about the services collection status on Hundi, Sales of Pasaddms, Sale of Tickets, Sale of Accomodation. You will be surprised

    Hence these articles does not reform or transform or threaten for justice for indiivudal or companies.

  7. Anonymous says:

    நடிகா்கள் தமிழ் நாட்டை ஆண்டு குட்டி சுவா் ஆக்கிவிட்டு போய்விட்டாா்கள். இவா்களால் கிராமபுற மாணவா்கள் மருத்துவா்களாக வர முடியாத நிலை ஏற்பட்டு வி்ட்டது. தற்போது வட மாநில மாணவா்கள் தமிழ்நாட்டு மருத்துவ கல்லுாிகளில் புகுவதற்கு இப்போது உள்ள அரசு வழிவகை செய்து விட்டது. இது போதாது என்று யோக உடல் பயிற்சி வகுப்புகளை கட்டாய பாடமாக வைக்க இன்னொரு புறம் முயற்சி. பிஜேபிக்கு பயந்து தமிழ்நாட்டை எப்படி எல்லாம் குட்டி சுவா் ஆக்க வைக்க வேண்டுமோ அதற்காக அதிமுக இரண்டு அணிகளும் போட்டி போட்டு கொண்டு மத்திய அரசுக்கு ஆலவட்டம் சுழற்றி கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அவாள்கள் ரஜினியை எப்படியாவது தமிழக அரசியலில் கொண்டு வந்து ஏற்கனவே நாட்டை மறைந்த இரண்டு முதல்வா்கள் நாட்டை குட்டி சுவா் ஆக்கியது போல இவரை தமிழகத்தில் கொண்டு வந்து இன்னும் குட்டி சுவா் செய்ய முயற்சி. இப்படி தாலி அறுத்த குடும்பத்தில தலைக்கு தலை பெருதனம் என்று ஒரு பழமொழிக்கு ஏற்றாா் போல் ஒருவா் வைகை அணையில் தொ்மோ கூலை வைத்து தமிழகத்தின் மானத்தை வாங்கி விட்டாா். அரசு பணிகளில் தமிழ் தட்டச்சு எல்லாமே வானவில்தான். ஆனால் அதிகாாிகள் அமைச்சா் நிலையில் கூட்டு சதி செய்து இந்த அக்க போா் செய்து வருகின்றாா்கள். எத்தனை காலம் தான் ஏமாற்றுவாா்கள் இந்த தமிழ்நாட்டினிலே விரைவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் ஏற்படுத்தும் போது தான் இந்த பன்னாடைகள் ஓடப் போகின்றாா்கள்

  8. Dr.Padmamala says:

    Such anonymous post doesn’t have any merits. If you’re bold enough, reveal your identity. That would make​this post more authentic​

  9. சுரேஷ் says:

    அதிகாரிகள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறார்களென்று தவறாகக் கணித்து விடாதீர்கள். அவர்கள் பங்குக்கு எப்படி ஆட்டயைப் போடலாம் என்ற கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

  10. Venkatesan.k says:

    Please check 10000 cd are in data or just empty one.bcs they can do all type frauds.

  11. vsankar says:

    yaar appan veettu soththu?

  12. Mallappan says:

    திருடங்க எப்படியெல்லாம் இருக்காங்க. இதுக்கு வேற தொழில் செய்யலாமே.

  13. ராமசாமி says:

    திருட்டு பயல்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.
    thermacool மிதக்கவிட்டு 10லட்சம் போச்சு , இப்போ இந்த cd யா குடுத்து 30லட்சம் போச்சு.

  14. santhosh says:

    இதனை தடுக்க என்ன வழி! சட்டத்தின் மூலம் உதவுது தடை வாங்கமுடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress