பாவம். இவள் ஒரு பாப்பாத்தி.

maxresdefault

தலைப்பை பார்த்ததும் கொதித்தெழும் பக்தாள் கவனத்துக்கு.  இந்த வாக்கியம் என்னுடையது அல்ல.   எழுத்துச் சிற்பி ஜெயகாந்தன் 1979ம் ஆண்டு எழுதிய நாவலின் தலைப்பே இது.  என்னை செதுக்கிய ஜெயகாந்தனின் தலைப்பை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

jeyaganthan-paavam-ival-oru-pappaththi

சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வெளியுறவுப் பணியான ஐஎஃப்எஸ் மற்றும் இதர சில பணிகளுக்கான தேர்வு. இதல் யாருக்கு ஐஏஎஸ் கிடைக்கும் என்பது ஒருவர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும். ஐஏஎஸ் பதவியைத்தான் அனைவரும் விரும்புவார்கள்.   ஏனென்றால் அந்த பதவியில்தான் மக்களோடு நேரடி தொடர்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் அரசின் கொள்கை முடிவுகளை அமல்படுத்த முடியும். ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வெற்றி பெற்ற பல கதைகளை நீங்கள் இணையத்தில் காணலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎஃப்எஸ் ஆகிய பதவிகள் அனைத்துக்கும் அடிப்படை பயிற்சி ஒன்றாகத்தான் நடக்கும்.    முசூரியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில்தான் இந்த பயிற்சி நடக்கும்.   முதல் கட்ட பயிற்சி மூன்று பிரிவுகளுக்கும் ஒன்றாக நடக்கும்.   இந்த முதல் கட்ட பயிற்சி முடிந்தவுடன், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐதராபாதில் உள்ள, வல்லபாய் பட்டேல் அகாடமிக்கு சென்று விடுவார்கள்.   ஐஎஃப்எஸ் அதிகாரிகள் நாக்பூரில் பயிற்சிக்கு சென்று விடுவார்கள்.  ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும், லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி மையத்துக்கு மீண்டும் திரும்புவார்கள்.

அந்த பயிற்சியின்போது முதல் வகுப்பில் தவறாமல், அனைத்து ஆசிரியர்களும் சொல்லும் வார்த்தை என்னவென்றால், The Scum is out.   We are the steel frame of the nation.   கழிவுகள் வெளியேறி விட்டன.  நாம்தான் இந்த தேசத்தின் இரும்பு அஸ்திவாரங்கள் என்பதே.   அது ஒரு வகையில் உண்மையும் கூட.  ஐஏஎஸ் அதிகாரிகள்தான் இந்த தேசத்தின் அஸ்திவாரங்கள்.   அவர்கள்தான் அரசாங்கத்தின் தூண்கள்.  அவர்கள்தான் தேசத்தின் கொள்கைகளை செயல்படுத்துகிறார்கள்.     இத்தகையதொரு பெருமை வாய்ந்த பதவிதான் ஐஏஎஸ் அதிகாரி பதவி என்பது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இத்தகையதொரு ஐஏஎஸ் அதிகாரி.    கிரிஜா வைத்தியநாதனை நான் லஞ்ச ஒழிப்புத் துறை பணியில் இருந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன்.   அப்போது நான் புள்ளி விபரங்களை கவனிக்கும் பணியை லஞ்ச ஒழிப்புத் துறையில் கவனித்துக் கொண்டிருந்தேன்.  விழிப்புப் பணி ஆணையராக இருக்கும் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆய்வு கூட்டம் நடத்துவார்.  அந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த காலாண்டில், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை முடிக்கப்பட்டுள்ளன, புதிய நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்வார்.

இந்த கூட்டம் ஒவ்வொரு காலாண்டின் துவக்கத்திலும் நடக்கும்.  லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து ஒரு அதிகாரி, அவரின் துணைப் பரிவாரங்கள், தலைமைச் செயலாளர் அல்லது அவரால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு துறைச் செயலாளர், மற்றும் விழிப்புப் பணி ஆணையர் ஆகியோர் பங்கேற்பர்.   அப்போது சத்ரசால் சிங் என்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி விழிப்புப் பணி ஆணையராக இருந்தார்.   அவருக்கு வேலையே, இதர ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து உட்கார வைத்து மொக்கை போடுவதுதான்.    இந்த மொக்கையை பல அதிகாரிகளால் தாங்கவே முடியாது என்றாலும், வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.    மூத்த ஐஏஎஸ் அதிகாரியாயிற்றே…  வேறு என்ன வழி ?

இது போல ஒரு நாள் ஒரு காலாண்டுக் கூட்டத்துக்கு புள்ளி விபரங்களை தயார் செய்த என்னையும் அழைத்துச் சென்றார்கள்.  அப்போது தற்போது டிஜிபியாக உள்ள கே.பி.மகேந்திரன் ஐஜியாக இருந்தார்.   முதன் முறையாக அதிகாரிகள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பதை அப்போதுதான் நேரில் பார்த்தேன்.   அந்த கூட்டத்துக்கு செல்கையில் எனக்கோ அடி வயிறு கலக்கும் அளவுக்கு பயம்.   ஏனென்றால், புள்ளி விபரங்களின் இறுதிக் கணக்கு சரியான முறையில் வராத காரணத்தால் பல எண்ணிக்கைகளை மாற்றி, இறுதிக் கணக்கு மிகச் சரியாக வரும் வகையில் தயார் செய்திருந்தேன்.   யாராவது ஒரு அதிகாரி  அந்த கணக்கை சரி பார்த்து கண்டு பிடித்தால், என் வாழ்க்கை என்ன ஆவது என்ற பயம் மட்டுமே எனக்கு.

கூட்டம் தொடங்கியது.  கூட்டத்துக்கு அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் கிரிஜா வைத்தியநாதன். கூட்டம் தொடங்கியது.  கூட்டத்தின் ஒவ்வொரு கணத்தையும் நான் கவனமாக கவனித்து வந்தேன்.  எப்போது புள்ளி விபரக் கணக்கை எடுப்பார்கள், நமது சீட்டுக் கிழியும் என்பது மட்டுமே எனது கவலை.    கூட்டத்தில் யாருமே பேசவில்லை.   சத்திரசால் சிங் என்ற விழிப்புப் பணி ஆணையர் மட்டுமே பேசத் தொடங்கினார்.   நரசிம்மராவ் அரசின் பல ஊழல்கள் அதற்கு முன்னால் சிபிஐ அமைப்பால் விசாரிக்கப்பட்டன.   அதில் ஒன்று உர இறக்குமதி ஊழல்.    அந்த சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த சத்திரசால் சிங், அந்த புலனாய்வுக் குழுவில் எப்படியெல்லாம் சிறப்பாக ஊழலை கண்டுபிடிக்க செயல்பட்டார் என்பதை விளக்கமாக விவரித்துக் கொண்டிருந்தார். 133 கோடியை இந்தியா வழங்கியுள்ளது.  ஒரே ஒரு துகள் உரம் கூட இந்தியாவுக்கு வந்து சேரவில்லை என்றார்.

அதிகாரிகள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.   என்னைப் போன்ற க்ளர்க்குகள் பென்ச்சில் அமர்ந்திருந்தனர்.   லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து நானும் எனது மேலாளரும் வந்திருந்தோம்.  பக்கதில் வேறொரு பென்ச் இருந்தது.  அதில் தலைமைச் செயலக பணியாளர்கள் அமர்ந்திருந்தனர்.    அவர்கள் எங்களை இழிபிறவிகள் போல் ஏளனமாக பார்த்தனர்.    தலைமைச் செயலக பணியாளர்கள் அல்லவா ?

அதிகாரிகள் அனைவருக்கும் டீயும், குட் டே பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.    நல்ல தரமான பிஸ்கட்.    அவர்கள் அனைவரும் சாப்பிடத் தொடங்கியதும்,  எங்கள் இணை இயக்குநர் என்னிடம் திரும்பி, “தம்பி ஃபிகர் எல்லாம் சரியா இருக்குல்ல” என்று கேட்டார்.    இயல்பான எனது குசும்பு, இந்த அறையில் ஒரு ஃபிகர் கூட இல்லையே… எந்த ஃபிகரை பற்றி பேசுகிறார் என்று முதலில் தோன்றினாலும், வேலை குறித்த பயம், “சார்.  எவ்ரிதிங் பர்ஃபெக்ட் சார்” என்று பதில் சொல்ல வைத்தது.   என்னமோ எல்லாவற்றையும் சரி பார்த்தது போல, அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அதிகாரிகள் தின்று முடிக்கும் தருவாயில்தான் எங்களுக்கு பிஸ்கட்டும் டீயும் வழங்கப்பட்டன.    சத்தியமாக சொல்கிறேன்.  நான் அது வரை குட் டே பிஸ்கட்டை சாப்பிட்டதேயில்லை.   அது பணக்காரர்களின் பிஸ்கட் என்று நானாக கற்பிதம் செய்து கொண்டு இருந்தேன்.  அந்த பிஸ்கட்டை எடுத்து வாயில் வைக்கப் போகும் போது, எனது அருகில் இருந்த அனுசுயா என்ற மேலாளர், வைப்பா என்று காதில் கத்தினார்.   முழுமையாக பயந்துபோய் அப்படியே பிஸ்கட்டை தட்டில் வைத்தேன்.

மீண்டும் சத்திரசால் சிங் பேசத் தொடங்கினார்.    சுகாதாரத் துறை செயலாளர் இங்கே இருப்பதால் நாம் சுகாதாரத் துறையின் வழக்குகளை முதலில் எடுத்துக் கொள்வோம் என்றார்.   எனக்கு செம்ம சந்தோஷம்.   ஏனென்றால், சுகாதாரத் துறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை.  அதனால் அதன் புள்ளி விபரத்தில் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லை.

அந்த புள்ளி விபரத்தை எடுத்தவுடன், கிரிஜா வைத்தியநாதன், படபடப்படைந்தார். பரபரப்பான ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.  அப்போது எனக்கு அவ்வளவு ஆங்கில அறிவு கிடையாது.  (இப்போதும் கிடையாது).   எனது உறவினர் ஜிஎச்சுக்கு போனாங்க.  அங்க ஸ்ட்ரெச்சர் தள்ற ஆளு 10 ரூபா ப்ரைப் வாங்கினான்.  என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்க டிப்பார்ட்மென்ட் ? இது ஒன் டைம் இன்சிடென்ட் இல்ல.  தொடர்ந்து நடக்குது. என்று பொறிந்து தள்ளினார்.

கிரிஜா வைத்தியநாதன் இவ்வாறு பேசியதும், விழிப்புப் பணி ஆணையர் சத்திரசால் சிங், எங்கள் துறை சார்பாக வந்திருந்த கேபி.மகேந்திரனை பார்த்து “வாட் ஆர் யூ பீப்பிள் டூயுங்”  என்றார்.   “சார். வி வில், இம்மிடீயட்லி டேக் ஆக்சன்” என்று கேபி.மகேந்திரன் பதில் கூறினார்.    சிறிது நேரத்தில் மீட்டிங் முடிந்தது.

அதிகாரிகள் தனித்தனி காரிலும், அல்லு சில்லுகள் தனி காரிலும் கிளம்பினோம்.   அலுவலகம் சென்றதும், கேபி.மகேந்திரன் என்னை அழைத்து புள்ளி விபரங்கள் குறித்த விபரங்களை கேட்பார் என்றே மிகவும் பயந்து கொண்டிருந்தேன்.    ஆனால் அவர் கடைசி வரை கேட்கவேயில்லை.

இவ்வளவு நேரம் உங்களுக்கு மொக்கையான கதையை சொல்லிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன ?   கிரிஜா வைத்தியநாதன்.  குறைந்தது 15 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை ஜிஎச்சில் ஸ்ட்ரெச்சர் தள்ளுபவன் 10 ரூபாய் வாங்கியதற்கு கொதித்தெழுந்தவர்தான் இந்த கிரிஜா வைத்தியநாதன்.    தலைமைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட வரை, அவர் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது.

ஆனால் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட சூழலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஜெயலலிதாவின் அனைத்து ஊழல் நடவடிக்கைகளுக்கும் துணையாக இருந்த ராம் மோகன ராவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைகளை அடுத்தே கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது நடைபெறும் புளிமூட்டை பழனிச்சாமியின் அரசு எத்தகைய அரசு என்பது நம் அனைவருக்குமே தெரியும்.  ஊழலின் மேடையில் நடைபெற்று வரும் அரசுதான் இந்த அரசு.   இப்படிப்பட்ட ஒரு அரசின் தலைமைச் செயலாளராக ஒரு நேர்மையான அதிகாரியால் எப்படி மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட முடியும் ?

கிரிஜா வைத்தியநாதனின் அயோக்கியத்தனம் முழுமையாக வெளிப்பட்டது குட்கா விவகாரத்தில்தான்.    சட்டவிரோதமாக தமிழகம் முழுக்க குட்கா வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவது வெளிப்பைடையான உண்மை.    அந்த வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதற்காக, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாமூல் வசூலித்தது ஆதாரத்தோடு ஊடகங்களில் அம்பலமானது.   அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தள்ளும் கடைநிலை ஊழியன் 10 ரூபாய் வாங்கியதற்காக கொதித்த கிரிஜா வைத்தியநாதன், பல கோடி ரூபாய் ஊழலில் தொடர்புள்ள அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் அளவுக்கு வீழ்ந்தார்.

83066a39-5a00-4905-bb37-f08f95cc7e57

அரசு அதிகாரம் என்பது பிரமிட் கோபுரம் போல.  தொடக்க காலத்தில் நேர்மையாக பணியைத் தொடங்கும் அதிகாரிகள் பிரமிட்டின் உயரத்துக்கு செல்லச் செல்ல, எந்த சமரசத்துக்கும் தயாராவார்கள்.  பிரமிட்டின் உயரத்தில் பதவிகள் மிகவும் குறைவு என்பதால், போட்டி கடுமையாக இருக்கும். அந்த பிரமிட் கோபுரத்தின் உச்சத்தில்தான் கிரிஜா வைத்தியநாதன் தற்போது அமர்ந்திருக்கிறார்.   இது நாள் வரை, எவ்விதமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத கிரிஜா, தன் தலைமைச் செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, மிக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கி விட்டார் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது.

குட்கா விவகாரம் தொடர்பாக 9 ஜுலை 2016 தேதியிட்ட வருமான வரித்துறையின் கடிதம், தன் அலுவலகத்துக்கு வரவில்லை என்று ஒரு பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கிரிஜா தாக்கல் செய்தார்.   குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையின் உயர் அதிகாரி, முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன ராவிடம் நேரில் அளித்த விபரம் ஊடகத்துக்கே தெரிகையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.  இணைப்பு.  அப்படி இருக்கையில் பொய்யான ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கிரிஜா துணிந்தார் என்றால் அவரது தலைமைச் செயலர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ? அவர் உண்மையை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தால், அதிகபட்சம், அவர் தனது தலைமைச் செயலர் பதவியை இழந்திருப்பார்.   வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பார்.   இதைத் தவிர ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை எந்த அரசும் எதுவும் செய்து விட முடியாது.

2015-16ல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஒரு ஆய்வில், குட்கா வகை புகையிலையை பயன்படுத்துபவர்களில் 90 சதவகிதத்தினருக்கு அவற்றை பெறுவதில் எந்த சிரமமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.   குட்கா போன்ற புகையிலை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை.

தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக நீதிமன்றத்தில் ஒரு முழு பொய்யை வாக்குமூலமாக தாக்கல் செய்த கிரிஜா வைத்தியநாதனை விட, ஸ்ட்ரேச்சரை தள்ளுவதற்காக 10 ரூபாய் வாங்கிய அந்த கடை நிலை ஊழியன் பல மடங்கு நேர்மையானவனே.

கிரிஜா வைத்தியநாதன் எப்படிப்பட்ட அதிகாரி என்பதை வள்ளுவர் மிக எளிமையாக விவரித்துள்ளார்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

உரை:

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

You may also like...

32 Responses

 1. வெங்கடேசன் says:

  நலமா சங்கர்? கட்டுரையை விட விமர்சனங்கள் காட்டமாக உள்ளன….தலைமைச் செயலக ஊழியர்கள் 2003க்குப் பிறகு மற்ற அரசு ஊழியர்களை குறைவாக நடத்துவது மறைந்துவிட்டது. – வெங்கட், தீம்தரிகிட

 2. Anonymous says:

  Good article withproof

 3. Raman says:

  @perumal டேய் சூத்ர நாயே, அது தாண்ட நானும் சொல்றேன் , அவங்க பண்ணுன தப்ப மட்டும் சொல்லாம சாதி எதுக்கு தேவ இல்லமே இழுக்கனும் ? எடப்பாடி பழனிச்சாமியை “சூத்ர குடியானவன் பழனிச்சாமி”னா சவுக்கு எழுதி இருக்கான்? காட்டு நாயே, நீ இங்க internet ல comment போட்டுட்டு இரு , ஊர்ல உன் அப்பன் எந்த தலித் பொண்ண கொடுமை படுத்திட்டு இருக்கானா. சூத்ர பொருக்கி, 100 % இடஒதிக்கீடு குடுத்தாலும் உனக்குள்ள இருக்குற காட்டான் புத்தி போகாது, பொறாமையில் வெந்து சாகுங்கடா காட்டானுகளா.

 4. Raman says:

  @perumal டேய் சூத்ர நாயே, அது தாண்ட நானும் சொல்றேன் , அவங்க பண்ணுன தப்ப மட்டும் சொல்லாம சாதி எதுக்கு தேவ இல்லமே இல்லுக்கும். எடப்பாடி பழனிச்சாமியை “சூத்ர குடியானவன் பழனிச்சாமி”னா சவுக்கு எழுதி இருக்கான்? காட்டு நாயே, நீ இங்க internet ல comment போட்டுட்டு இரு , ஊர்ல உன் அப்பன் எந்த தலித் பொண்ண கொடுமை படுத்திட்டு இருக்கானா. சூத்ர பொருக்கி, 100 % இடஒதிக்கீடு குடுத்தாலும் உனக்குள்ள இருக்குற காட்டான் புத்தி போகாது, பொறாமையில் வெந்து சாகுங்கடா காட்டானுகளா.

 5. sampath says:

  The Controversial title could be avoided which is diverting the issue and make sympathy and building the image that savukku is against the brahmins

 6. Vasudevan says:

  அருமையான, ஆழமான பதிவு… பிரமிட் உயரம் மிகச் சரியான உவமை

 7. rajapart says:

  antha aatharathaiyum appade yetrukonda nithipathakalai ennavendru solvathu

 8. avudaiappan says:

  all are one for attacking brabhin whose are helpless ….iam not brabhin

 9. Prabhu says:

  சவுக்கூவின் தலைப்பில் மற்றும் உரையில் தவறு இருக்கின்றது…
  மருத்துவமனை கடைநிலை ஊழியர் 10 ரூபாய் வாங்குவதும், மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள் கோடிகோடியாக லஞ்சம் வாங்குவதும் சமமே… ஏனென்றால் அவனால் வாங்கமுடிந்ததோ 10 ரூபாய் தான்.
  லஞ்சம் மற்றும் அதை ஆதரிப்பது என்பது இந்த சமூகதிர்கூ செய்யும் சீர்க்கீடு இதற்கு ஏன் சாதியின் தலைப்பு.

 10. ramachandran mohan says:

  முதலில் ஒன்றை கூறுகிறேன் .இந்த குட்கா போதை பொருள் இல்லை .புகையிலை .பாக்கு ,மற்றும் காத்தா என்கிற இயற்கை சிகப்பு வர்ணம் கலந்து .இது நமது உடலுக்கு கேடு .இதில் மாற்றுக் கருத்து இல்லை .ஆனால் போதை பொருள் அல்ல .தமிழ் நாட்டில் பன்னீர் புகையிலை ,ரசிக்கலால் பாக்கு போன்றவை தடையில்லாமல் கிடைக்கிறது .ஆனால் இவை சேந்த கலவை (குட்காவுக்கு )தடை என்ன சட்டமோ என்ன இழவோ ?!

 11. Shankar says:

  Savukku Shankar, I trust and believe you have written this article as it is directly involves your past positions which absorbs your passion.
  Shankar, To be honest, your investigative unbiased unprejudiced articles have certainly mellowed down off late, which I think every one of your reader shall endorse. SEcondly, this lady has been appointed by Central Regime and certainly all these are happening under the instructions of Central only.

  Forget about Girija, the High Court has given a ruling that T.K.Rajendran extension is valid. Where is Judiciary ? Why Vijaybhaskar is still not arrested or dismissed from the ministry. For a Ramjanmabhoomi Advani, the Iron man and the Dy.Prime Minister Rank, the Home Minister Resigned. The Chief minister has not asked Vijaybhaskar to resign nor he has been dismissed. WE cannot name anyone except Vijaybhaskar and his team who would wish to continue at the sanctity of Tamilnadu Government [There is no basic sanctity or integrity, which is in anyway known ].

  Right from Ramanujam, Nataraj, George, T.K.Rajendran, Jaffer Sait everyone has been proven by you with documentary evidence and the Court with the documentary submission have only gone to release which has made people lose faith and it is only the arm o the Government.

  I feel bad and sad, that that law, legislation, legal, judiciary have all become a TV serial sought of where there is no constitutional framework to punish or even go near to keep the tainted and corrupt ministers away to rule the people. Unfortunate, Sad and even God cannot reform Tamilnadu.

 12. perumal says:

  ஹல்லோ ராமன் மற்றும் கல்யாண ராமன், இது வெறும் தலைப்பு தான். சவுக்கு போட்ட இந்த சப்ஜெக்ட்ல ஏதாச்சும் தப்பு இருக்கா ? அதை சொல்லும். அதை விட்டுட்டு ஏன் சவுக்கு மேல பாயிர? நீ ஒரு பாப்பான் போல ! இந்த பாப்பாத்தி மூலம் ஏதாச்சும் காரியம் சாதிச்சுக்குணம் என்று திட்டம் வைத்திருக்கே போல. உனக்கு அசிங்கமா இல்ல? குட்கா மூலம் எத்தனை இளைஞர்கள் உடலை கேட்டுகிட்டு இருக்காங்க தெரியுமா? அத தடுக்க அவளுக்கு பொறுப்பு இருந்தும் ஏன் கோர்ட்ல பொய் சொல்லுனம்? இந்த மானங்கெட்ட பொழப்புக்கு …….. அந்த லைன் ல போலாம்.

  • nallasollu says:

   டே பெருமாளு என்ன வேணாலும் பேசலாம் எழுதலாம். கோர்ட்டில் பதிவு பண்ணும் போது புரட்டு பண்ணமுடியாது . “குட்கா விவகாரம் தொடர்பாக 9 ஜுலை 2016 தேதியிட்ட வருமான வரித்துறையின் கடிதம், தன் அலுவலகத்துக்கு வரவில்லை என்று ஒரு பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கிரிஜா தாக்கல் செய்தார்”. கொடுத்த கடிதத்துக்கு ரசீது இருக்கும் இல்லையா . அதை காண்பித்து கிரிஜா வைத்தியநாதன்கோர்ட்டில் பொய் சொன்னதை நிரூபித்து வேலை விட்டு விரட்டலாம். அதை விட்டு விட்டு ஏன்டா கீழே கையை வைத்து குலுக்கி கொண்டு இருக்கீர்கள்

   • perumal says:

    டே உன் பழக்கத்தையெல்லாம் ஏன்டா நாயே இங்கு சொல்லறே? எங்களுக்கு அங்க விடுறதுதான் பழக்கம். உன்னால் முடியேல போல. அதனாலதான் இந்த மாதிரி செய்யரே போலெ !!! நல்லா செய்யடா.
    குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையின் உயர் அதிகாரி, முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன ராவிடம் நேரில் அளித்த விபரம் ஊடகத்துக்கே தெரிகையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
    அப்படி இருக்கையில் பொய்யான ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கிரிஜா துணிந்தார் என்றால் அவரது தலைமைச் செயலர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?
    அவ்வளவு ஏன்டா ? ஊரெங்கும் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா கிடைக்குது நாயே. இதுக்கு ஏன்டா தனியே ஆராய்ச்சிம் அறிவு கேட்ட பாப்பார நாயே? உனக்கு வெட்கமாக இல்ல?

    • Raman says:

     காட்டுமிராண்டி சூத்ரன் என்பது நல்லாவே தெரியுது . என்ன படுச்சு computer use பண்ணுலாம் உள்ள இருக்குற காட்டுமிராண்டித்தனம் உனக்கு போகல . கிரிஜா வைத்தியநாதன் செஞ்சதது தப்பு தான் , அதுக்கு நீயும் இந்த சாவுக்கும் சாதியை ஏன்டா சொல்றீங்க ? எல்லா வன்னியனும் காடுவெட்டி குரு மாதிரி காட்டானா ? எல்லா கவுண்டனும் யுவராஜ் மாதிரி கொலை காரணங் ?சூத்ர பயலே .உனக்கு இருக்கவராது தாழ்வு மனப்பான்மை ,காழ்ப்புணர்ச்சி வெறி , சாதி ஒழிப்பு எண்ணம் எல்லாம் இல்ல. நீ இங்க பார்ப்பணி திட்டிட்டு கிராமத்துல பொய் தலித் பெண்ணை கொடுமை படுத்துபவன் தாண்டா பெரியாரிஸ்ட் தமிழன்.

  • Raman says:

   டேய் சூத்ர நாயே, அது தாண்ட நானும் சொல்றேன் , அவங்க பண்ணுன தப்ப மட்டும் சொல்லாம சாதி எதுக்கு தேவ இல்லமே இல்லுக்கும். எடப்பாடி பழனிச்சாமியை “சூத்ர குடியானவன் பழனிச்சாமி”னா சவுக்கு எழுதி இருக்கான்? காட்டு நாயே, நீ இங்க internet ல comment போட்டுட்டு இரு , ஊர்ல உன் அப்பன் எந்த தலித் பொண்ண கொடுமை படுத்திட்டு இருக்கானா. சூத்ர பொருக்கி, 100 % இடஒதிக்கீடு குடுத்தாலும் உனக்குள்ள இருக்குற காட்டான் புத்தி போகாது, பொறாமையில் வெந்து சாகுங்கடா காட்டானுகளா.

  • kalyanaraman Subramaniam says:

   @பெருமாள், தங்களின் தரம் என்ன என்பது தங்களது பதிப்பில் இருந்து தெளிவாக தெரிகிறது! ஆகவே, அதற்கு பதிலளித்து தங்களை மேலும் கோபமூட்டவும், என்னை தங்கள் லெவெலுக்கு கொண்டு வரவும் எனக்கு விருப்பமில்லை! மன்னித்துக்கொள்ளுங்கள்!!

   • perumal says:

    இந்தா ரொம்ப நடிக்காதே. ஊரெல்லாம் தடை செய்யப்பட்ட குட்கா கிடைக்குது. இதுக்கு ஏன்டா தனிப்பட்ட ஆராய்ச்சி? உண்மையை சொன்னா உடம்பு எல்லாம் எரியுதா ? முதலில் சவுக்கு போஸ்டில் என்ன தவறு இருக்கு? அத சொல்ல முடியுமா? அப்புறம் தரத்தை பற்றி யோசிக்கலாம் !!

    • Raman says:

     // முதலில் சவுக்கு போஸ்டில் என்ன தவறு இருக்கு//

     காட்டானா நீ? சூத்ர காட்டானுக்கு புத்தி வேலை செய்யாதா ? இந்த கிரிஜா ஊழலை மட்டும் சுட்டி காட்ட வேண்டியது தானே தேவ இல்லாமே சாதியை இழுக்க என்ன அவசியம் ? பழனிச்சாமிக்கு “சூத்ர குடியானவன் ” பழனிச்சாமினா எழுதுறானா சவுக்கு ? வெறி ஏறுன உன் மண்டைக்கு இது எல்லாம் தப்பாவே தெரியாது போல. உன் சாதியில் ஒருத்தன் தலித் பொண்ணை rape பண்ணுனான உன் மொத்த சாதியையும் சூத்ர rapist சாதினா சொல்றாங்க? வந்துட்டான் இதுல “என்ன தப்புனு” விளக்கம் கேட்டுட்டு. வெறி புடுச்ச மிருக பயலே .

 13. scorpio says:

  Thambi…. idha pombalai S V sekarukku macciniccinnu sonnangale..idile irukira BJP connection….yosikkanum…. GR SWAMINATHAN bench CBI vendamnum DGPkku ellam MURAIPPADI appointment nadandhirukkunnum oru mokkai judgment appoinment clear pannathu BJPyoda UPSCngrathaaleyaa…. GRS um romba nalla payyan… nan indha judgmentle avarode sirappu velippadumnu neneiccen. SIRIPPUthaan vanduduccu……. Ppaappathiya ppaappathinnisolarthile enna thappu…kalyanamum, ramanum yosicci sollattum

 14. Joshua says:

  இவ்வளவு கேடு கெட்ட Chief Secretary யா …. தமிழ்நாடு விளங்கிடும்

 15. Pamaran says:

  Each and every sentence is absolutely true

 16. srnadar says:

  outstanding

 17. Raman says:

  ஜெயகாந்தன் தலைப்பு எல்லாம் இருக்கட்டும், இந்த இடத்துல சாதியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ? ஏன் இந்த வக்கிர புத்தி? தமிழ்நாட்டில் இந்த பார்ப்பனர் மற்றும் தலித் அல்லாத சாதிகளின் தாழ்வு மனப்பான்மை கடலை விட ஆழமானது . ஊர்ல சாதி பெருமை பேசிட்டு, தனக்கு கீழ இருக்குறவன அடிமை படுத்திட்டு சுத்த வேண்டியது. நகரம் வந்து இங்க தன் ஆதிக்க சாதி ஜம்பம் எல்லாம் பலிக்காதுனு தெரிஞ்ச பிறகு தனக்கு மேல இருக்கறவன் சாதி (குறிப்பாக பார்ப்பனர்) சொல்லி “அவன் அப்டி பன்றான்.. இப்டி பன்றான் ..பயங்கரமானவன் ..அன்றே பெரியார் சொன்னார்” அப்டினு சொல்ல வேண்டியது.ஆனா இவனுக இங்க இன்டர்நெட்ல type பண்ற நேரத்துல ஊர்ல அவங்க அப்பன் ஆத்தா தலித்தை கொடுமை படுத்திட்டுஇருப்பாங்க, அது எல்லாம் இவனுக கண்ணுக்கு ஒரு மேட்டரே கிடையாது .அப்டி தான சவுக்கு? உலகமே பார்ப்பான் சூழ்ச்சில தான் சுழலுது. தன் இயலாமைக்கு, கையாளாக தனத்திற்கும் , தாழ்வு மனப்பமைக்கும் இப்டி சாதி சொல்லி திட்டு மனச தேதிக்கு வேண்டியது இதுவே ஒரு ஆதிக்க மனப்பான்மை தான் , ஊர்ல ஆதிக்கம் பண்ணி வளர்ந்த காட்டான் மனப்பான்மை.இந்த மாதிரி றெடுக்கிட்டான் இடைநிலை சாதி வெறி நாய்களால்தான் இன்னும் ௫௦௦ வருடம் ஆனாலும் சாதி ஒழியாம இருக்கும்.

  • Kalyanaraman Subramaniam says:

   @ராமன், நீங்கள் இதற்கும் மேலான தரத்தை சவுக்கிடம் எதிர்பார்ப்பது தவறென்று எனக்கி தோன்றுகிறது. சவுக்கின் முந்தைய கட்டுரைகளை பார்த்தீர்களானால், சாதி வெறி அவற்றில் உழையூடி இருப்பது அப்பட்டமாகவே தெரியும். வேறு எவரைப்பற்றி எழுதும்போதும் வராத சாதிக்குறிப்பீடு, பார்ப்பனர்கள் என்றால் உடனே வந்துவிடும். அதுதான் சவுக்கின் அடையாளம். அது இல்லையேல் சவுக்கு இல்லை. சவுக்கிற்கு நிகழ்வுகள் முக்கியமில்லை, அதில் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை புகுத்திடுவதற்கு இடம் இருந்தால் போதும். ஆனால் இந்தமாதிரியான எழுத்துக்களைத்தான் சவுக்கின் விசிறிகள் விரும்புகிறார்கள். தான் மற்றும் தன்னை சார்ந்தவர்கள் தவறு செய்யும்போதும் அதை சுட்டிக்காட்ட தைரியம் வேண்டும். அது சவுக்கிடம் கிடையாது என்பது முந்தைய கட்டுரைகளில் நன்றாகவே வெளிப்பட்டுவிட்டது. புதிய ஆதாரம் தேவையில்லை.

   • Raman says:

    உண்மைதான் சார்.இவனுக தாழ்வுமனப்பான்மைக்கு யாரும் ஒன்னும் பண்ண முடியாது, சரி என்னமோ பேசிட்டு போறானுக ஆனா என்னமோ இவனுக சாதி ஒழிக்க புறப்பட்டு வந்த மாதிரி காட்டிப்பானுக பாருங்க அது தான் சகிக்கல. இவனுக உண்மையிலேயே சாதியை ஒழிக்கணும்னா இவனுக ஊர்ல இருந்து தான் தொடங்கணும் , ஏன்னா அங்க இவனுக அப்பன் ஆத்தா தலித்தை கொத்தடிமை மாதிரி நடித்திட்டு இருக்குங்க. தன் சாதி மேலயும் பாசம், அதே சமயத்துல ஒரு தாழ்வுமனப்பான்மை , பொறாமையைக்கு வடிகால் தான் இப்படி பார்ப்பானை திட்டிட்டு இருக்க வேண்டியது. ஆனா பார்ப்பான் உயர்ந்துட்டேதான் இருக்கான், வேற எந்த தென் மாநிலங்களிலும் இது இருக்காது.காரணம் அங்க பார்ப்பனர் அல்லாத மேல் சாதிகள் பார்ப்பனரை விட வெற்றி கண்டவர்கள் அதனால் அவர்களுக்கு பொறாமை இல்லை, ஆனா இங்க பொறாமைல புழுங்கி புழுங்கி பொலம்பிட்டு இருக்கானுங்க.

 18. Raman says:

  ஜெயகாந்தன் தைப்பு எல்லாம் இருக்கட்டும், இந்த இடத்துல சாதியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ? என் இந்த வக்கிர புத்தி? தமிழ்நாட்டில் இந்த பார்ப்பனர் மற்றும் தலித் அல்லாத சாதிகளின் தாழ்வு மனப்பான்மை காதலி விட ஆழமானது . ஊர்ல சாதி பெருமை பேசிட்டு, தனக்கு கீழ இருக்குறவன அடிமை படுத்திட்டு சுத்த வேண்டியது, நகரம் வந்து இங்க தன ஆதிக்க சாதி ஜம்பம் ஏலம் பலிக்காதுனு தெரிஞ்ச பிரகள தனக்கு மேல இருக்கறவன் சாதி (குறிப்பாக பார்ப்பனர்) சொல்லி “அவன் அப்டி பன்றான்.. இப்டி பன்றான் ..பயங்கரமானவன் ..அன்றே பெரியார் சொன்னார்” அப்டினு சொல்ல வேண்டியது.ஆனா இவனுக இங்க இன்டர்நெட்ல டிபே பண்ற நேரத்துல ஊர்ல அவங்க அப்பன் ஆத்தா தலித்தை கொடுமை படுத்திட்டுஇருப்பாங்க, அது எல்லாம் இவனுக கண்ணுக்கு ஒரு மேட்டரே கிடையாது அப்டி தான சவுக்கு? உலகம் பார்ப்பான் சூழ்ச்சில தான் சுழலுது. தன இயலாமைக்கு, கையாளாக தனத்திற்கும் , தாழ்வு மனப்பமைக்கும் இப்டி சாதி சொல்லி திட்டு மனச தேதிக்கு வேண்டியது இதுவே ரூ ஆதிக்க மனப்பான்மை தான் ஊர்ல ஆதிக்கம் பண்ணி வளர்ந்த காட்டான் மனப்பான்மை.

 19. Ganesh says:

  செம்ம

 20. suresh guruboy says:

  I like very much anna

 21. Chellathurai says:

  At least we would have born in the neighbouring Andra. When everybody including edappadi try to save their seat, where is the question of Chief secretary. Girija is not Rupa (DIG) Of Karnataka.Even Brutish once again invade our country it will be better than this.

 22. I am not going into the merits of the article.But I have been associated with the judiciary in the past 4o years.All along I have commented that many deponents do not know their age. This is again confirmed by this affidavit also.The chief secretary of a State does not know her own correct age.That is why she has given her age as “about 58 years”

Leave a Reply

Your email address will not be published.