ரத்தன் டாடா, ஆ.ராசாவை பாராட்டி, கருணாநிதிக்கு ஒரு கடிதத்தை எழுதி, அதை நீரா ராடியாவிடம் சீலிடப்பட்ட உறையில் வழங்கியதாக ஊடகங்களில் பிப்ரவரி மாதத்தில் செய்தி வெளி வந்தது. இச்செய்தியை ஒட்டி கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார், அந்த அறிக்கையில், “ரத்தன் டாடா எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் தமக்கு வரவில்லை என்றும், யாரும் அப்படியொரு கடிதத்தை தம்மிடம் நேராக அளிக்கவும் இல்லை” என்று கூறியிருந்தார் கருணாநிதி. இந்நிலையில், நேற்று பாராளுமன்ற நிலைக் குழு முன்பாக சாட்சியம் அளித்த ரத்தன் டாடா, அந்தக் கடிதத்தை தான் எழுதியது உண்மை என்றும், சீலிடப்பட்ட உறையில், நீரா ராடியாவிடம் கொடுத்தனுப்பியது தான்தான் என்றும், சீலிடப்பட்ட உறையில் அளித்த கடிதம், எப்படி வெளியானது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ரத்தன் டாடாவின் கடிதம் வரவேயில்லை என்று கருணாநிதி கூறிய பச்சைப் பொய் இப்போது அம்பலமாகி விட்டது.