இந்த கட்டுரை விகடன் இணையதளத்தில் வந்திருந்தது. என்ன காரணமென்றே தெரியாமல், திடீரென்று அந்த கட்டுரை விகடன் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜக்கி என்ற திருட்டுப் பயலின் நீண்ட ஆக்டோபஸ் கரங்கள் விகடன் வரை நீளக் கூடியதுதான். ஜக்கியை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே விகடன்தானே. அந்த கட்டுரையை வாசகர்களுக்காக சவுக்கில் பதிப்பிக்கிறேன்.
லிட்டருக்கு 5 கி.மீ மைலேஜ் தரும் காரில், நதிகளை மீட்க பயணிக்கும் ஜக்கி வாசுதேவ்!
‛ரமணா’ படத்தில் ஒரு காட்சி. ஆபாச சுவரொட்டிகளை அழிக்கும் இளம்பெண்களைக் கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இது தெரியாமல் முழிக்கும் அந்தப் பெண்களுக்கு விஜயகாந்த் விளக்கம் சொல்வார், ‛‛அந்த போஸ்டர்ல இருக்குற ஆபாசத்தை விட, நீங்க போட்டிருக்கிற டிரஸ்தான் ஆபாசமா இருக்கு!’’. அப்படித்தான் இருக்கிறது, ‛நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்’ என்ற பெயரில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் விழிப்புஉணர்வு பயணம். ஆம், நதிகளை மீட்கக் கோரி, கோவை – டெல்லி வரை சாலை மார்க்கமாக, 7,000 கி.மீ தூரம் பயணித்து விழிப்புஉணர்வு பிரசாரம் செய்கிறார் ஜக்கி வாசுதேவ். அவர் பிரசாரம் செய்வதில் பிரச்னை இல்லை. அவர் செல்லும் கார்தான் மேட்டர்.
W463 என்ற அடையாள எண்ணைக் கொண்ட G-க்ளாஸ் எஸ்யூவியின் AMG வெர்ஷன்தான் G63. 1980-களில் அறிமுகமான இந்த ஆஃப்ரோடிங் பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி, 37 வருடங்களாகத் தயாரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. எனவே ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தும் இந்த எஸ்யூவியின் அடிப்படை டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லாவிட்டாலும், தொழில்நுட்ப ரீதியில் அதிரடியான முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் வழக்கமான G-க்ளாஸ் மாடலில் இருந்து AMG மாடலை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக, மெர்சிடீஸ் லோகோவுடன் கூடிய அகலமான க்ரில், Bi-Xenon ஹெட்லைட், பெரிய ஏர் இன்டேக் உடன் கூடிய முன்பக்க பம்பர், சிவப்பு நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், 20 இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் Quad எக்ஸாஸ்ட் பைப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டீல்லால் ஆன ஸ்பேர் வீல் கவர் மற்றும் ரன்னிங் போர்டு எனச்சில தனித்தன்மையான டிசைன் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
Nappa லெதரால் சூழப்பட்டிருக்கும் கேபினிலும், AMG ஸ்பெஷல் கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகள் – AMG ஸ்போர்ட் ஸ்ட்ரிப் – ஸ்டீல்லால் ஆன AMG Door Sill – AMG ஸ்பெஷல் ஸ்டீயரிங் வீல் – THERMATIC கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி மற்றும் சீட்கள் – Harman Kardon ஆடியோ சிஸ்டம் – COMAND இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இன்டீரியரிலும் இது தொடர்கிறது. இப்படி சிறப்பான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருக்கும் G63 எஸ்யூவியில் இருப்பது, 572bhp பவர் – 76kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 5.5 லிட்டர் V8 Bi-Turbo பெட்ரோல் இன்ஜின். இவ்வளவு பவர் இருப்பதால், 2.5 டன் எடை கொண்ட G63 எஸ்யூவி, 0 – 100 கிமீ வேகத்தை வெறும் 5.4 விநாடிகளிலேயே எட்டிப்பிடித்து, அதிகபட்சமாக 210கிமீ வேகம் வரை (Electronically Limited) செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறது. இந்த இன்ஜின், இதற்கென ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட AMG Speedshift-Plus 7G-Tronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஆக இன்ஜினின் அதிரடியான செயல்திறனை, நான்கு வீல்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வேலையை, இது கச்சிதமாகச் செய்கிறது. எக்ஸாஸ்ட் சத்தமும், காரின் பெர்ஃபாமென்ஸைப் போல படுமிரட்டலாக இருக்கிறது. Body On Frame, அதாவது லேடர் ஃப்ரேம் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் G63 எஸ்யூவி, 4 வீல் டிரைவ் – 3 Differential Lock (Front,Center,Rear) – ஆஃப் ரோடு Reduction கியர் – 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற ஆஃப்ரோடு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பவர்ஃபுல்லான எஸ்யூவியில் மைலேஜ் முக்கியம் இல்லை என்றாலும், அதனை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்டார்ட் – ஸ்டாப் சிஸ்டம், Brake Energy Recuperation போன்ற வசதிகள் இடம்பெற்றிருப்பது ப்ளஸ். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, ரேடாரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் – Blind Spot Assist – ரிவர்ஸ் கேமரா உடனான Partktronic சிஸ்டம், Hill Hold அசிஸ்ட், Tyre Pressure Monitoring சிஸ்டம், NECK-PRO ஹெட்ரெஸ்ட் – பல காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (4ETS), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் (ESP) எனப் பட்டியல் நீள்கிறது.
ஆனால் இந்த G63 AMG எஸ்யூவியை ஒருவர் வாங்க விரும்பினால், அதற்கு 2.17 கோடி ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) செலவழிக்க வேண்டும் என்பதுதான் மயக்கத்தை வரவழைக்கிறது. சாலை வரி, இன்சூரன்ஸ், பதிவுத்தொகை தனி. இந்த எஸ்யூவி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 கி.மீ மைலேஜ் மட்டுமே தரவல்லது. மேலும், ஒரு கிமீ தூரம் செல்லும்போது, 322 கிராம் கரிம வாயுவை (CO2) இது உமிழ்கிறது. அப்படியெனில், அவரது பயணத்தின்போது இந்தக் கார் வெளியிடும் புகை சுற்றுச்சூழலை எந்தளவு மாசுபடுத்தும் என்பதையும் இது எவ்வளவு லிட்டர் பெட்ரோலை எரியூட்டும் என்பதையும் உங்கள் கணக்குக்கே விட்டுவிடுகிறோம். அவரது பயணத்துக்கு உதவியாக வரும் கார்கள் வெளியிடும் மாசு மற்றும் அவை எரியூட்டும் டீசல் (லிட்டர்கள்) கணக்கு தனி. ஆக, இப்படித்தான், ஜக்கி வாசுதேவ், ”நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன், 7,000 கிமீ தூரம் பயணம் விழிப்புஉணர்வு மேற்கொண்டுள்ளார்.
வாழ்க ஜனநாயகம்!
நன்றி விகடன் இணையதளம்.
சத்குரு அல்ல சத்துரு
Billionaire Jaggi vasudev is a con Artist. Daily his paid coolies are uploading around 100+ nonsense videos in youtube so that he can enrich his daughter and grand children. Criminal Jaggi mission is swindle the lands
Savukku, How much every you write about Jaggi Vasudev, nothing will happen. Modi and BJP is backing him up. Also, his mission is swindle the lands and grab important heritage places for Yoga Center and become Centre ambassador of Yoga. He is a fraud, criminal with crooked thinking. He is non political Politicians in the name of Isha. Few of IAS, IPS, I?S officers support follow and motivate and encourage his activities, saving protecting and prevent from Judiciary.
சவுக்கு …. எப்போவாச்சும் fake நியூஸ் போட்டா பரவால்ல … எப்போவுமே fake நியூஸ்னா எப்படி ???
https://www.facebook.com/ipcitsupport/posts/224147018114650
Jaggi adimai vantan ba
U too Vikadan?
என்ன சார் நீங்க …! அவர்.எவ்வளவு பெரிய ஆளு … அவர் கூப்பிட்ட குரலுக்கு பறந்தாேடி வர ஆளும் அரசியல்வாதிகள் நாயாய் காத்துக்கிடக்கும் பாேது .. அவர் சாதாரண காரில் செல்வாரா .?சென்றால் அவருடைய மரியாதை என்னாவது .? ஒரு கெத்து இருந்தால் தானே நாலுபேர் மருவாதைக் காட்டுவான் .. பாெழப்பும் விரிடையும்…
அடேங்கப்பா … நம்ம சாமியார் என்னமா பல காேடி ரூபா கார்ல அவரே ஓட்டிக்கிட்டு ஊர்..ஊரா பாேறார் .. நதிகளை காப்பாற்றி தண்ணீ வரவழைக்க என்னமா ஒழைக்கறாறு … அவரது மையத்ததை பார்க்கனுமே . . எம்மாம் பெரிசு .. எண்ணூரு ஏக்கராமே ..வெளையங்கிரி மலையே … கண்ணுக்கு தெரியலை எனும் பாேது சாதாரண ஆளா அவரு .? அவரைப்பாேயி தப்பு…தப்பா பேசிக்கிட்டு …! மலைக்கு அருகில இருந்த நதியின் நீர்வழி தடத்தையே காணாமல் ஆக்கித்தானே இப்ப.” ஆதி யாேகி ” சிலையை அமைச்சி … நம்ம பிரதமர் அய்யா கூட வந்து கலந்துக்கிட்டு .. விழாவை ரசிச்சாங்களே … மத்த விஷயத்துக்கெல்லாம் வராத நம்ம பிரதமர் … இந்த விழாவுககு வந்தார்ன்னா .. தாடிக்காரர் சாமானிய ஆளா …. ஆயிரம் காெறை சாென்னாலும் வசதி மற்றும் அரசியல் சப்பாேர்ட்டும் நிறைந்துள்ள சாமியார் … கண்டிப்பா நதிகளை மீட்காம அந்த ஜீப்பை விட்டு எறங்கமாட்டாரு .. நீங்களும் பாக்கத்தானே பாே றிங்க… அவரை நக்கல் பண்ணுவதை விடுங்க …!!!
Stupid post
Siddhars are one with conscious and to feel it that they empty them on the process so they go to forest and such and do penace to burn clear the mind and all patterns and soul. Then feel one with heart and nature which is Almighty. . sadhguru is a wise soul with wisdom, .he may not be perfect or did things up to his maximum power but he is doing best and he dint clear forest he has planted much trees there.. so stop blind hate. Without really knowing any.
சித்தர்கள் மனசுக்குள் இருக்கிற அழுக்கை எரிக்க காட்டுக்குப் போகிறார்களா?ஆனால் இந்த அத்தனைக்கும் ஆசைப்படுபவர் காட்டில் 500 ஏக்கருக்கும் மேல் கட்டியதேன்?காட்டை எரிக்காமலா இதையெல்லாம் கட்டியிருப்பார்.சரி போகட்டும்,காட்டில் இவர் போய் மரம் நட வேண்டிய அவசியம் என்ன?அங்கு தானாக மரங்கள் வளராதா?
On Sivarathri every year thousands of cars reach Velliangiri and create lot of noise and pollution making the life difficult for elephants and other wild animals in the nearby forest.He has built his vast empire there without getting the plan approved by the concerned authorities including the forest department.TN govt deptts served stop construction notices to him.But the CM participated in the function in which “Adhiyogi”statue was unveiled.Today also CM and DY CM are participating in the Chennai function.In our country,rich and powerful need not worry about environment or rules meant for protection of environment.
first learn english. Then start supporting con Artists
He is the intelligent sane person with wisdom and he is doing what h likes to on life. Unlike jealous burning few countable people.. spirituality is living life to the fullest .and siddhars or those who practice yoga wanted to reach nothingness for samadhi and to be into nature which is Almighty that’s different. And some souls they have seen all and here for dancing life enjoying with conscious heart. So don’t confuse..all..
He is doing the exact opposite of what he says he is doing. If he was really environmentally conscious as he claims to be, he wouldn’t use a luxury vehicle which contributes more to pollution than average. Please don’t bring spirituality into this.
யோக்கியன் வர்றான் இல்ல… ஒண்ணாம் நெம்பர் அயோக்கியன் வர்றான் .. உலகமே பத்திரம் ! காடுகளே கவனம்
பெண்களே இளைஞர்களே உங்கள் எதிர்காலத்தை களவாட ஒருவன் காரில் வருகிறான்.
Actually what u expect?? To cross 7000km by a cycle ???u stupid and moreover the car was presented by sundaram motors to sadhguru its not his own vehicle
Dude, not cross 7000 km by cycle….. you please dont be stupid enough to understand what he is trying to say…the cause for the rally is entirely ravished by the car he is using
Did someone asked to go by cycle? This shows your stupidity. Oh yes this vehicle may be given by TVS but shouldn’t he rejected this vehicle by outlining pollution?
Hello savuku its crct but you dont write your own write???
This model is $154k only in USA. Which is equivalent to ~98 lakhs only, then why it is marketed at 2.17 crores, almost 250% increase in profit in India?
Helo its imported car and he handled own style
Almost all imported cars are customs taxed 120%
Nissan patrol is AED 250000 UAE , which is equivalent to 4,350,000.00 ….. do you know the rate in India ; its not double & approximately more than 25 Laks
All political party leaders supported this Rascal
சகலத்தையும் துறந்தவர் தான் “சத்குரு” ஆனா இவர்?
இவர் “சன்னியாசி” போர்வையில் வாழும் “சுகவாசி”
இவன புடுச்சி என்னைக்கு ஜெயில்ல போடபோறாங்களோ.. எல்லா கேமராவுக்கும் டிமிக்கி கொடுக்குறான் கில்லாடி..
விகடன் நல்லா வேசம் போடுறான்,அததனைக்இஉம் ஆசைப்படும் இந்த ஈனநாய் ஜக்கியின் எண்ணத்தில் கடுளவு கூட பொதுநலம் இருககாது ,என்பதே உண்மை…இவன் பின்னால் நிற்கும் கற்றறிந்த மூயர் கூடமே அவனின் இந்த அசுர அயோக்கியத்தனமான வளர்ச்சிக்குக் காரணம்..
முற்றிலும் உண்மை
savvukku should write more about this fraud