“The unintended consequence of the Modi economy is that the weak are being culled, and the strong given space to grow to their true potential.- Modinomics”
ஸ்வராஜ்யா என்ற வலது சாரி பாஜக ஆதரவு இணையத்தளம் சமீபத்தில் மோடினோமிக்ஸ் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது இணைப்பு. அதன் சாரம் GST, Demonitisation (பணமதிப்பிழப்பு) போன்றவை நலிவுற்றவர்களை அழித்து வலுவானவர்களை வளர்ந்து இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு இட்டு செல்லும் என்பதே. அதற்கு அவர்கள் மேற்கோள் காட்டுவது டார்வின் தர்கமான “Survival of the fittest”, ஒரு பாசிச தத்துவத்தில் ஊறியவர்களால் மட்டுமே இப்படி சிந்திக்க இயலும். அந்த கட்டுரையில் வரும் ஒரு பகுதியை பார்ப்போம்
“In the political brouhaha over demonetisation and the implementation of the goods and services tax (GST), the attack on the government has been postulated on this same premise – that the weak are in pain. The informal sector is in trouble, small businesses are going bust, small-scale farmers are committing suicide.
While there is no question that human beings must be protected from the vagaries of nature’s furies or governmental follies, society as a whole is not benefited by allowing weak and unprofitable entities and sub-optimal businesses to survive.”
GST, பணமதிப்பிழைப்பு போன்றவற்றல் சிறு தொழில் செய்வோர், அமைப்புசாரா தொழில் செய்வோர் பெருமளவு பாதிக்க படுகின்றனர், குரு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவை வருந்தத்தக்கதே ஆகும் எனினும் சமுதாயம் முன்னர் இது அவசியமே.
ஹிட்லரின் அடிப்படை தத்துவத்திற்கு ஒத்த தத்துவம் இது.
Eugenics (இனமேம்பாட்டியல்) என்ற தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஹிட்லர், “மிகவும் பலவீனமானவர்கள் தங்கள் வம்சத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட கூடாது. அப்படி நாம் செய்ய முற்படும் பொழுது அதன் விளைவாக மிகவும் குன்றிய ஒரு சந்ததியை நாம் உருவாக்கி விடுவோம். அதன் விளைவாக ஆரோக்கியமுடன் இருக்கும் சந்ததி அவர்களின் உழைப்பின் பெரும்பகுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் நலிவுற்றவர்களை பேணிக்காப்பதற்கு செலவிட நேரிடும், இதன் காரணமாக இந்த இனம் மிகவும் பின்தங்கிவிடும்”
ஆரிய வம்சம் தழைக்க உடல் ஊனமுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோரை கொன்று ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தை கொண்டிருந்தார். 1939 ஆம் ஆண்டு T4 என்ற ரகசிய அமைப்பை ஹிட்லர் தொடங்கினர், இந்த அமைப்பு சுமார் 375000 குறையுள்ள ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கிறது. இன படுகொலையின் போது யூதர்களுக்கு முன் ஆரிய வம்சத்தில் உள்ள குறைபாடுள்ள ஆட்களையே முதலில் கொன்றனர். மிகுந்த விமர்சனங்களுக்கு பிறகு 1941ஆம் ஆண்டு இந்த அமைப்பை ஹிட்லர் மூடும் பொழுது சுமார் 275000 குறைபாடு உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று முடித்திருந்தது இந்த அமைப்பு.
மனநலிவு நோய் , கை கால் ஊனம், முடக்குவாதம் போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு கெமிக்கல் மருந்து பாய்ச்சி கொன்று குவித்தனர், சாவிற்கான கரணம் நிமோனியா என்று பதிவு செய்து உடலை அடக்கம் செய்தனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாதிக்க படுவது எதிரியான யூதர்கள் மட்டும் இல்லை, அவர்கள் இனத்தை சேர்ந்த ஆரியர்களுமே. தேச நலனை காரணம் காட்டி தங்கள் இனத்தை வைத்தே அவர்களில் உள்ள நலிவுற்றவர்களை அழித்தனர்.
சமீபத்தில் ப்ளூ வேல் என்ற இணைய விளையாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, Philipp Budeikin என்ற நபர் இதை உருவாக்கிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் கூறுகையில் இந்த விளையாட்டின் மூலம் இந்த உலகத்தில் வாழ தகுதியுற்றவர்களை அழித்து தூய்மை படுத்துவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்று தெரிவித்தார்.
500 ரூபாய் 5 வட்டிக்கு கடன் வாங்கி அதனை வைத்து பொருள் வாங்கி விற்று இரவு அந்த கடனை அடைத்து மீண்டும் அடுத்தநாள் கடன் வாங்கி உழைக்கும் எண்ணற்ற வியாபாரிகள் இருக்கின்றனர், அவர்கள் வியாபாரம் ஒரு நாள் தடைபட்டாலே அவர்கள் பலமடங்கு வட்டி மட்டும் கட்ட நேரிடும். பணமதிப்பிழைப்பு போன்ற நடவடிக்கையின் போது பணத்தட்டுப்பாடால் நிச்சயம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பர். திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் பல சிறிய வியாபாரம் திரும்பி எழ முடியாத அளவு வீழ்ச்சி அடைந்தது. பொருளாதாரம் சீரடையும் போது கிடைத்தது போதும் என்று தங்கள் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டு ஓடியவர்கள் பலர். இதை தான் இந்த அரசாங்கம் எதிர்பார்கிறதா?
ஒரு பத்திரிகையின் கருத்திற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாகும் என்று கேட்கலாம்? ஆனால் பாஜக அரசு அப்படி பட்ட அரசல்ல. தங்களை சுற்றி எப்பொழுதும் உதிரி அமைப்புகளை (Fringe Elements ) வைத்து கொண்டு அரசியல் செய்யும் கட்சி. அவர்கள் தான் RSS கொள்கைகளை முதலில் சிறிய அளவு பரப்பி ஆழம் பார்ப்பார்கள், அது எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்ன மாதிரியான எதிர்வினை வருகிறது என்று ஆராய்ந்த பின் அதனை அரசு செயல்படுத்தும். பெரும்வாரியான எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி கொள்ள ஏதுவான ஓர் ஏற்பாடு .
இதை ஒத்த மற்றொரு மிக முக்கிய நிகழ்வு அதே சமயத்தில் நடக்கிறது இந்த இரண்டு நிகழ்வுகளையும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் அரசாங்கத்தின் கொள்கையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அக்டோபர் 5ஆம் தேதி இந்திய பொருளாதார மாநாட்டில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் பாரதி என்டர்ப்ரைஸ் தலைவர் சுனில் மிட்டல் ஒரு மிக முக்கியமான புள்ளி விபரத்தை அளிக்கிறார், அதாவது கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் 200 முன்னணி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றும் வரும் வருடங்களில் தேவையான வேலை வாய்ப்பினை உருவாக்க முடிய வில்லை எனில் இந்த சமூகம் பின் தங்கிவிடும் என்று கூறுகிறார். அப்பொழுது குறுக்கிட்டு பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஒரு முத்தான கருத்தை உதிர்கிறார், பணிஇடைநீக்கம் மற்றும் வேலையின்மை நல்லது. பணி இழந்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருமாறி வேலை வாய்ப்பினை உருவாக்குவார்கள் என்று கூறுகிறார். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு இருக்கும் பொறுப்பு உணர்ச்சி கூட சற்றும் இல்லாத பேச்சு இந்த மத்திய அமைச்சருடையது.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 2013-14, 2015-16 ஆண்டுகளில் negative job growth உருவாகி உள்ளது இணைப்பு . 2020ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேர் படிப்பு முடித்து வேலைக்கு தயாராக இருப்பார்கள் என்றும், வேலைக்காக காத்திருப்போரின் சராசரி வயது 29 ஆக இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இன்னும் மூன்று வருடங்களே இருக்கும் நிலையில் அதற்கு அரசாங்கம் எவ்வளவு முனைப்புடன் செயல்பட வேண்டும்? அதற்கு முதல்படி வேலை இன்மை என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தீர்வை விவாதிப்பது. அதை விடுத்து தலையை மணலில் புதைத்து கொண்டு, வேலை இல்லாவிட்டால் நல்லது என்று சொல்வது எவ்ளவு அயோக்கியத்தனம்? இதற்கும் மேல் சொன்ன கட்டுரையின் சரத்திற்கும் பெரிய வேறுபாடு என்ன?
சரி வேலை இல்லாதோர் தொழில் முனைவோர் ஆகுங்கள் என்று சொல்கிறார், தொழில் முனைவோரின் நிலைமை என்ன? 2015 ஆம் ஆண்டு 110 ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது, 2016ஆம் ஆண்டு அது 212 ஆக உயர்ந்துள்ளது . அந்நிய முதலீட்டின் உதவியுடன் ஆரம்பிக்க படும் இந்த நிறுவனங்களுக்கே இந்த நிலைமை இதில் வேலை இழந்த அனைவரும் தொழில் முனைவதாம். 29 வயதடைந்து வேலை இல்லாத சமூகத்தை நினைத்து பாருங்கள் அது எவ்வளவு ஆபத்து விளைவிக்கக்கூடியது, எவ்வகையான குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இதை பற்றி துளியும் சிந்திக்காமல் பிரெச்சனையை மறைத்து என்ன பயன்? ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்டப் இந்தியா, மேக் இன் இந்தியா என பழைய திட்டங்களுக்கு புது புது பேரை வைப்பதை விட்டு புதிய சிந்தனைகளை பாய்ச்ச வேண்டும் ஆனால் நடப்பது என்ன ?
வேலையின்மை, பொருளாதார மந்த நிலை இப்படி பல பிரச்னைகள் இருக்கிறது ஆனால் பிரதமருக்கு இது குறித்து கூற கருத்து ஒன்றும் இல்லை. சுப்ரமணிய சாமிக்கு பொருளாதார அமைச்சர் ஆக ஆசை. ஆடிட்டருக்கு அதிகாரம் வேண்டும் ஆனால் பொறுப்பு வேண்டாம் இவர்கள் இரண்டு பேரும் சேர்த்து கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அருண் ஜைட்லீயை தாக்கி கொண்டிருக்கிறார்கள். அவரோ பணமதிப்பிழப்பின் போது தன்னை ஆலோசிக்காமல் தன் கருத்திற்கு மதிப்பளிக்காமல் அவராகவே முடிவெடுத்துவிட்டார் என்று மோடி மீது கோபம். இப்படி ஆயிரம் பிரச்சினையை வைத்து கொண்டு பாஜக கவலை படாமல் இருப்பதற்கு காரணம் வேலைவாய்ப்போ, பொருளாதாரமோ அவர்களை அடுத்த தேர்தலில் கரையேற்ற போவது இல்லை ராமர் கோவிலும், ஹிந்துத்துவ தூண்டுதலும் தான்.
மோடி என்ற மகுடியை வைத்து ஹிந்துத்துவ இசையை வாசித்து ஆதி பொடிகளை வசியம் செய்து வைத்திருக்கிறார்கள், வேறு இசையை மாற்ற முயன்றால் அந்த பாம்பு வசிப்பவனை போட்டு தள்ளிவிடும். சமீபத்தில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது, இதை வரவேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் ட்வீட் செய்கிறார்
அதை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் அவரை கடுமையாக எதிர்க்க தொடங்கினர் அதன் பின் அவர் அந்த பதிவை நீக்கி விடுகிறார், இந்த அளவு வெறி ஏற்றி விட்டு செய்வது அறியாது துடிக்கிறார்கள். உண்மையில் ஹர்ஷ் வரதன் தீபாவளியால் ஏற்படும் மாசு பற்றி தீர்ப்பு வருவதற்கு முன்பே பிரச்சாரம் செய்கிறார், பள்ளி குழந்தைகளை சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார்
அனால் தற்போது தங்கள் தொண்டர் படையில் இருந்தே வந்த வெறுப்பின் காரணமாக சத்தமில்லாமல் தன் முயற்சியை கைவிட்டு போட்ட டிவீட்களை நீக்கி விட்டார்.
ஆகையால் தான் என்னவோ தொடர்ந்து பிள்ளைகள் மடிந்த போதிலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத யோகி ஆதித்யநாத், இது வருடத்திற்கு வருடம் நடப்பது தான் என்று சொன்னதும் இல்லாமல் கேரளா முதல்வரை தன் மாநிலத்திற்கு வந்து அரசு மருத்துவமனை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
அவருக்கு நன்கு தெரியும் மோடி பலூன் வெடித்தால் அடுத்த பலூன் தான் தான் என்று, அதனால் தான் ராமருக்கு 100அடி சிலை எழுப்ப கிளம்பிவிட்டார்.
2014ம் ஆண்டு வளர்ச்சி, என்ற முழக்கத்தை மட்டுமே வைத்து தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற்ற பிஜேபிக்கு, அவர்களின் வளர்ச்சி முழக்கம் வெற்று கோஷங்களாகி விட்டது என்பதும், 2019ல் இவர்களின் பல்லிளித்த வாக்குறுதிகள் வெற்றியை பெற்றுத் தராது என்பதும் நன்றாக புரிந்து விட்டது. இவர்கள் மீண்டும் மதவாதத்தை கையில் எடுத்துதான் 2019 தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள் என்பதே கண்கூடாக தெரிவது.
வேலைவாய்ப்பின்மையின் தீவிரம் தெரியாமல் ,செயல்படுகிறது மோசடியின் மூலம் ஆட்சிக்கு வந்த மோடிக்கு தெரியாது
Related information are welcome
Good
I dont think you have done a justice to the article. I’m also fed up with the present happenings. Instead of making a proper analysis you have tried some sentimentalization with usual rhetoric. 2013 -2014 Congress was in rule 2014-2015 BJP just came into power. So you cannot should not twist. But I dont see much employment opportunities even after that. Even if it turned positive, as per your article , growth after that WE DONT SEE MUCH ON GROUND is also a truth. Demonetization per se was not wrong. It was/is a correct attempt. But I dont see the honest efforts to catch the thieves who were able to get money from RBI/BANK chests directly and those RBI and BANK OFFICERS were NOT GOT CAUGHT and PUNISHED. JAITLY is a culprit on that by being a NON PERFORMER ,it seems as this is directly comes under him/ his ministry. Dr swamy says CBI officers on their own decided NOT TO PURSUE some 7 cases against PC family . MY hope on MODI is diminishing. BUT he was not able to bring these corrupt top level officers to their knees and to make them perform for the NATION.It needs time as Dr. SWAMY says. BUT My present doubt is whether MODI is interested in that or simply tries to ride on this for the sake of power or WAITING for HIS time to take action?
பண மதிப்பு இழப்பு நல்லது என சொல்லியாயிற்று.பின்னர், எதற்கு CBI-economic offenses wing,Income Tax dept.,Directorate of Revenue Intelligence, SEBI,Serious Fraud Investigation Office, State Police Econ.Offense Wing மற்றும் இன்ன பிற அமைப்புகளெல்லாம்..அவற்றை எல்லாம் இழுத்து மூடிவிட வேண்டியதுதானே.தண்டச்சம்பளம் கொடுப்பதை நிறுத்தலாம்.பணமும் மிச்சமாகும்.பேசாமல் Demonetisation ஐ ஒரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டு வந்து ஊழலை ஒழிக்கலாம்.