இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவப் படத்தை ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் கட்டித் தொங்கவிடுங்கள் என்று, தோழர் புகழேந்தி தங்கராஜ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு இங்கே பிரசுரிக்கப் படுகிறது. சவுக்கு, தோழரின் வேண்டுகோளை முழுமையாக வழிமொழிகிறது.
ராஜபக்ஷே உருவத்தை விளக்குக் கம்பத்தில் கட்டித் தொங்க விடுவோம். தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள்.
ஒரு லட்சம் தமிழ் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத மத்திய அரசு. கற்பழித்துக் கொல்லப் பட்ட தமிழ்ச் சகோதரிகள், விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக் குண்டுகளால் செத்து மடிந்த குழந்தைச் செல்வங்கள், ஓட ஓட விரட்டிக் கொல்லப் பட்ட அப்பாவித் தமிழர்கள் என்று ராஜபக்ஷே கும்பலுக்கு போர் குற்றத்தின் கீழ் தண்டனை வழங்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.
காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனைக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது ? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்து கொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது.
பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக் காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனம் செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்தத் தமிழின விரோதப் போக்கு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உரிமைகளுக்காகப் போராடிய அப்பாவித் தமிழர்களைப் பேராயுதங்கள் மூலம் அழித்த ராஜபக்ஷேவின் வருகையை ஒவ்வொரு தமிழரும் கடுமையா எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்தில் வீதி தோறும் விளக்குக் கம்பளங்களில் கழுத்தில் சிவப்புத் துண்டு அணிந்த சிங்கள வெறியனின் உருவத்தை கயிற்றில் கட்டித் தொங்க விடும்படி தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், அந்த உருவத்தை தமிழகமெங்கும் விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் தமிழுணர்வுடன்
அறிவுமதி, இயக்குநர் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியை சரசுவதி, வழக்கறிஞர் அஜிதா.
தொடர்புக்கு புகழேந்தி தங்கராஜ் 9841906290
Olkoon menneeksi, Anahdus.Soitan kulmillanne ainakin Myrskyn sekä Mierolaismusiikkia. Setvin tässä vajaan kahden viikon aikana itseni kanssa, mistä lauluista olisi kysymys.
That’s way more clever than I was extcpeing. Thanks!