திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரு தலைவர்களும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
‘தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆதாரமில்லாமல் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டு கூறி உள்ளீர்கள். ஊழல்வாதி, சினிமா துறையை சுரண்டிவிட்டார். தமிழகத்தை சுரண்டிவிட்டார் என தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்கிறீர்கள்,’ என்று உங்கள் மீது தி.மு.க. முக்கிய நிர்வாகி பொன் முத்துராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கான விளக்கத்தை இன்று மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது