ஆண்டவர் காப்பாற்றாவிட்டால் பரவாயில்லை.

You may also like...

67 Responses

  1. அகரன் says:

    ரசினி போன்ற அந்நியனை இன ரீதியாக விமர்ச்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் தமிழர்களுக்கு முழு உரிமை உள்ளது. முற்போக்கு முகமூடிகள் வழக்க்கம் போல் தமிழர்களுக்கு எதிராகவே பேசுவர்.
    நல்லவன் ஆள வேண்டும். ஏன் தமிழன் தான் ஆள வேண்டுமா என்று ?

    தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அள்ளலாம் என்பதுதான் இன வெறி.
    தமிழன் ஆள வேண்டும் என்பது இன உரிமை.,

    தமிழ்நாட்டு ஏற்கெனவே 800 வருடமாக அடிமைப்பட்டிருக்கிறது. தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பில் 90% தமிழர்களுக்கு வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்கிறோம்.
    தமிழ்நாட்டை ஆள்வதற்கே யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சொல்லும் முகமூடிகள் நாளைக்கே இந்த கோரிக்கை யையும் கடுமையாக எதிர்ப்பர்

  2. chinna says:

    PERIYAR was also Kannadiga and infact ANTI-Tamil and supported English language and British. These Dravidian parties and authors are Wolves in sheep clothing and they will use Tamil and Dravidian talk to cheat people and divide us.

  3. Ang Pak says:

    #படித்ததில் #பிடித்தது

    ஒரு நடிகன் தன் துறையில் சம்பாதித்து வயதானவுடன் நாட்டை காப்பாத்த முதலமைச்சர்
    ஆகுறேன்னு அரசியலுக்கு வந்திடும்..
    இந்த தேசத்தில்..

    நாட்டை காப்பாத்துன இராணுவ வீரர் வயதாகி
    தனது குடும்பத்தை காக்க வாட்ச்மேனா வாசலில் நிற்க வேண்டிய நிலைமை…..!

    என்(ன) தேசமிது..

  4. sikkandar says:

    மனோ,

    உங்களின் பதிலில் சில நடந்தவற்றுக்கு புறம்பான் தகவல்கள் இருக்கின்றன.

    1980 மட்டும் இல்லை 1967 கல்லூரி கால அரசியலலிருந்து தெரிந்த உண்மைகள்:

    1) சுப்ரமணிசாமி மாறு வேஷத்தில் ஒளிந்து திரிந்தது. ஜெயா காலத்தில் இல்லை. 1975-76 ல் எமெர்ஜென்சி பீரியட் சமயத்தில் இந்திரா காந்திக்கு பயந்து மாறு வேஷத்தில் திரிந்தார். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரை காப்பாற்றியது அப்போது தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி.

    2) 1996ல் ரஜினிக்கும் ஜெயாவுக்கும் இடையே தகராறு வர காரணம் ஜெயாவுக்கு பாதுகாப்பு என்கிற பந்தாவில் போலிஸ் பல முறை போயஸ் கார்டன் ரோடை அடைத்து ரஜினியையும் அவர் வீட்டுக்கு போக விடாமல் ஸ்டெல்லா மாரிஸ் பக்கமே காரில் காக்க வைத்தனர். இப்போது போலில்லாமல் அப்போது கொஞ்சம் விரைப்பான சுபாவத்துடன் இருந்த ரஜினி ஒரு முறை ரோடில் தனது காரின் மேல் ஏறி உட்காந்து கொண்டு மக்கள் வேடிக்கை பார்க்க மௌன போராட்டம் நடத்தினார்

    3) ரஜினியால்தான் மூப்பனார் த.மூ.க.ஆரம்பித்தார் என்பது மூப்பனாரை அவமதிப்பது. 1989 சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வியைடந்து அரசியலே வேணாம் என்று ஹைதரபாத் ஒடி போனவர் ஜெயலலிதா. அப்போது கருணநிதிக்கும் ப சிதம்பரத்துக்கும் கடும் பகை. கருணாநிதியை பழி வாங்க ஹைதராபத்திலிருந்து ஜெயாவை வரவழைத்து ராஜீவ் காந்தியுடன் கூட்டணி ஏற்படுத்தி, முடங்கிகிடந்த இரட்டை இலை சின்னத்தை வாங்கி கொடுத்து, பின் 1991ல் ராஜீவின் மறைவுக்கு பிறகு நடந்த சட்ட மன்ற தேர்தலில் செத்த ராஜீவின் பிணத்தை காட்டியே ஜெயாவை அரசு கட்டிலில் ஏற்றியவர் ப சிதம்பரம். ஆனால் பதிவியில் அமர்ந்தவுடன் ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல “Chidambaram is after all a small town lawyer” என்று ஏக வசனத்தில் ஜெயா பேசவும் லடாய் ஆரம்பித்தது. அப்படிபட்ட ஜெயாவுடன் 1996ல் நரசிம்மராவ் (அவருக்கு அவரது மகனின் மூலம் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக) கூட்டணி வைத்தது பிடிக்காததால்தான் சிதம்பரமும். மூப்பனாரும் காங்கிரசை விட்டு வெளியே வந்து தமாக ஆரம்பித்தார்கள். திமுக ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று அவர்களுக்கு அப்போது முழு மூச்சில் ஊற்சாகமூட்டி, பின் திமுகவுடன் பேசி கூட்டணி ஏற்படுத்தி குடுத்ததெல்லாம் “சோ’ தான். திமுக வெற்றி பெற்றபின் அதன் பின்னனியில் இருந்த தனது முயற்சி, ஆதரவு, இவற்றை பற்றி கருணநிதி ஒன்றும் சொல்லாமல் மறைத்து விட்டார் என்றுதான் சோ வுக்கு கருணாநிதி மிகுந்த கோபம்.

    ஆகவே த.மா,க தோற்றத்தில் ரஜினியின் பங்கொன்றுமில்லை. ரஜினியால்தான் திமுக அணி வெற்றி பெற்றதென்பது அவரவர் விருப்பத்தேற்க சொல்லி கோள்ளலாம். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது.

    நீங்கள் ரஜினிக்கு இருப்பதாக உள்ள அனைத்து தகுதிகளும் அதற்கு மேலும் மற்றவர்களுக்கும் உள்ளது.

    எதை கேட்டாலும் மற்றவர்கள் மட்டும் என்ன செய்து விட்டார்கள் என்று கேட்கும் ரஜினியின் ரசிகரே, அதற்கு அவர்களுக்கே ஒட்டு போடுகிறோம், அல்லது மற்றவர்களுக்கு போடுகிறோம். உனக்கு என்ன தனி தகுதியிருக்கிறது. என்னை முதலமைச்சாராக்குங்கள் பிறகு என் கொள்கையை சொல்கிறேன், பிறகு சேவை செய்கிறேன் என்று புலம்பும் ரஜினியின் ரசிகரே உங்கள் ரஜினியை விட ராகவா லாரன்ஸ் இங்கு சேவை செய்கிறார், தனது ”அகரம்” அறகட்டளை மூலம் பல மாணவர்களை படிக்க வைக்கிறாரே நடிகர் சூரியா வுக்கு எங்களிடம் ஒட்டு கேட்கும் தகுதியுள்ளது.

  5. Mano says:

    ரஜினியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் :

    ஒரு தமிழந்தான் முதல்வராக வேண்டும். ரஜினி வரக்கூடாது…
    சினிமாகாரன் ஆண்டது போதும்.
    இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி ?
    எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை ?
    கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார்.
    படம் வெளிவரும்போது ஓடுவதற்க்காக மட்டும் அரசியல் பேசுவார்…

    தில் இருப்பவர்கள் இந்த பதில்களை எதிர்கொள்ளலாம்.

    ஏப்பா..என்னமோ வேற்று மொழிக்காரன் படையெடுத்து வந்து தமிழ்நாட்டை பிடித்து ஆள்கிறமாதிரி பேசறீங்க ? நீங்க ஓட்டு போட்டுத்தான தேர்ந்தெடுக்கறீங்க ?
    ஒரு நல்ல தமிழனை முதல்வராக தேர்ந்தெடுக்க எதுப்பா உங்கள தடுக்குது ? தமிழன், தமிழன்னு கூப்பாடு போடற நீதான பெருந்தலைவர் காமராசரை தோற்கடிச்சே ?
    நல்லக்கண்ணு மாதிரி அப்பளுக்கற்ற தமிழனை கோயமுத்தூர்ல தோற்கடிச்சவர்கள்தான நீங்க ?
    முதல்ல தமிழன்னா யாருன்னு தெரிஞ்சுட்டு பேசுங்க……உணர்வாலும்,சிந்தனையாலும் தமிழ் மொழியை நேசிப்பவனும், தமிழ் மொழி பேசும் நாட்டில், தமிழ் மொழி பேசும் மனிதனாகவே எவன் வாழ்கிறானோ அவனே உண்மையான தமிழன்.

    ரஜினியை மராட்டி என்றும், கன்னடன் என்றும் மொழிச் சாயம் பூசும் அப்ரண்டீஸ்களே…ஒருவனுடைய மொழி வெறியும், சாதி வெறியும் வெளிபடுவது அவன் எங்கு வாழ்கிறான் என்பதிலோ, எங்கு சொத்து சேர்க்கிறான் என்பதிலோ, அவன் யாருடன் வேலை செய்கிறான், யாரை வேலைக்கு வைத்துக் கொள்கிறான் என்பதிலோ அல்ல….ஒருவனுடைய மொழி வெறியும், சாதி வெறியும் அப்பட்டமாக வெளிபடும் இடம் அவன் தன் மகனையோ, மகளையோ யாருக்கு மணம் முடித்து வைக்கிறான் என்பதில்தான். அதில் மட்டுமே ஒருவனுடைய உண்மையான முகம் வெளிபடும். ரஜினி நினைத்திருத்தால் , அவருக்கு மொழி வெறி இருந்திருந்தால், அவரால் ஒரு மராட்டிக்கு தன் மகள்களை திருமணம் செய்து வைத்திருக்க முடியாதா ? ரஜினி பிறப்பால் மராட்டியராக இருந்தாலும் தான் வாழும் தமிழ்நாட்டிற்க்கு எப்படி உண்மையாக இருக்கிறார் என்பதை பார்த்து பாலிவுட் நடிகர்கள் பாடம் கற்கவேண்டும் என்று பால் தாக்கரே சொல்கிறார் ..ஆனால் உங்களுக்கு புரியவில்லை …

    ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, எப்பேற்பட்ட எதிர்மறை சூழ்நிலைகள் வந்தபோதும், தன் தமிழ் அடையாளம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டை விட்டு போகிறேன் என்று கூவாமல், இது என்னுடைய ஊர், இதைவிட்டு நான் எங்கே போவேன் என்று கேட்டவரை, தன் இரு மகள்களையும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பையன்களுக்கு மணம் முடித்து கொடுத்து, தமிழ் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டு, தன் வருங்கால சந்ததியை முழுக்க முழுக்க தமிழ் சந்ததியாகவே மாற்றிவிட்ட ரஜினியை பார்த்து நீ தமிழனா என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அடுத்த தலைமுறையில் இருந்து ரஜினியின் சந்ததியினர் யார் என்றால் தமிழன் என்று சொல்வதை எவனாவது தடுக்கமுடியுமா அல்லது மறுக்கமுடியுமா ? தமிழன் தமிழன்னு கத்துகிறவர்கள் எல்லாம் என்னத்த சாதிச்சிங்க ? ஒரு கவுன்சிலர் சீட்டு ஜெயிக்க வக்கில்லாதவன் எல்லாம் நாம் தமிழர்னு கூவுறான் ….

    அடுத்து என்ன ? சினிமாகாரன் முதல்வராக வேண்டாமா ? ஒத்துக்கறோம்…சினிமாகாரன் முதல்வராக வேண்டாம் …சினிமாகாரன் மட்டும் அல்ல …டாக்டர்,இஞ்சினியர், வக்கில், போலிஸ் இப்படி யாரும் முதல்வராக வரவேண்டாம்…ஒரு நேர்மையான மனிதன் முதல்வராக வரட்டும். ரஜினி என்கிற நடிகன் என்றைக்கும் அரசியலுக்கு வரப்போவதில்லை, ஆனால் ரஜினி என்னும், நேர்மையான, யோக்கியமான மனிதன் வருவான் …யாரும் தடுக்க முடியாது .

    ஒரு பத்து பேரை வைத்துக் கொண்டு ஒரு சிறு நிறுவனம் நடத்துபவர் கூட அவருடைய காசாளர் அல்லது கல்லாவில் இருப்பவர் நேர்மையாக இருக்கவேண்டும் என்றுதான் பார்க்கிறார். தன் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு நேர்மையான, தூய்மையான மனிதனிடம்தான் கொடுப்பாரே தவிர, திருடனானாலும் பரவாயில்லை என்று தன் சாதிக்காரனுக்கோ, தன் மொழிக்காரனுக்கோ கொடுக்கமாட்டார். அரசாங்கம் என்பது என்ன ? முதல்வர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் யார் ? நம் பணத்தை, நாம் வரியாக செலுத்தும் பணத்தை நிர்வாகிக்க நம்மால் நியமிக்கப்படும் வேலைக்காரர்கள்…அவர்களின் அடிப்படை தகுதி என்னவாக இருக்கவேண்டும் ? நேர்மை, நாணயம், தூய்மை … ஒரு சிறு நிறுவனத்துக்கு காசாளரை நியமிக்கக் கூட அடிப்படை தகுதியாக நேர்மையை பார்க்கும் நமக்கு, நாம் உழைத்து சம்பாதித்து வரியாக செலுத்தும் ஆயிரக்கணக்கான கோடிகளை நிர்வாகிக்க அடிப்படை தகுதியாக எதை பார்க்க தெரிந்திருக்க வேண்டும் ? சாதியையா, மொழியையா ? இனத்தையா ? இல்லை நேர்மையையா ?

    தன் பாபா படம் சரியாக போகவில்லை என்று தெரிந்ததும், அதனுடன் தொடர்புடையவர்கள் எவரும் பணம் இழக்கக்கூடாது என்பதற்காக வலிய வந்து பணத்தை திருப்பிக் கொடுத்தவர் ரஜினிகாந்த். ஒரு தொழிலில் லாப, நஷ்டங்கள் சகஜம். நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லாத போதே அதை வலிய வந்து செய்கிற ஒருவன் அடுத்தவன் பணத்தை எந்த அளவுக்கு பாதுகாப்பான் என்பதை புத்தியுள்ள எவனும் புரிந்து கொள்வான். என் பணத்தை நிர்வகிக்க எனக்கு நாணயமானவன் வேண்டும், அவன் மொழி,சாதி,மதம் பற்றி எனக்கு கவலையில்லை.

    உன் சாதிக்காரனை உன் சொந்த வீட்டு விசேசங்களுக்கு வைத்துக் கொள். உன் மதத்தை சார்ந்தவனை உன் வழிபாட்டு தலங்களுக்குள் வைத்துக் கொள். ஆனால் ஒரு நேர்மையானவனை உன் பணத்தை நிர்வகிக்க வைத்துக் கொள்…இல்லைனா உன்னை ஆள ஆண்டவனா வருவான் ? திருடந்தான் வருவான்…

    அடுத்து என்ன ? ரஜினி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் ? இப்படி கேட்க வெட்கமாயில்லை ? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்க, உங்கள் பிரதிநிதிகள் இருக்க, உங்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவன் இருக்க, தன் கடும் உழைப்பால் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து முன்னேறி சம்பாதித்து சுயமாக தன் பணத்தில் மிக எளிமையாக எந்த ஆடம்பரமும் இன்றி வாழும் ஒருவனை பார்த்து அதிகாரமாக பிச்சை கேட்க வெட்கமாயில்லை ? நீங்க ஓட்டு போட்ட MLA,MP,Councilor இவங்க என்ன செஞ்சாங்கன்னு கேட்க துப்பில்லாதவர்கள் ஒருவன் சம்பாதித்த பணத்தை கேட்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து போனதேன் ?

    அடுத்து என்ன ?எந்த பிரச்சனைக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை…

    யப்பா சாமிகளா…என்னப்பா குரல் கொடுக்கனும் ? குரல் கொடுத்தவனெல்லாம் என்னத்த சாதித்தான் ? நெய்வேலில கரண்ட புடிங்கிட்டானா ? கேரளாவுக்கு போற காய்கறிகளை நிறுத்திட்டானா ? கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் கடத்தப்படும் மணலை தடுத்துட்டானா, மீனவர் கொலைகளை தடுத்துட்டானா ? காவிரி டெல்டாவை பாலைவனமாக்கியதை தடுத்துட்டானா, விவசாயிகளுக்கு வாழ்வளித்துவிட்டானா ? இனப்படுகொலையை தடுத்துட்டானா ? வீட்டுல உட்கார்ந்துட்டு, மேனேஜரை வைத்து எவன் வேனாலும் அறிக்கை கொடுக்கலாம்பா …காலைல வீட்டுல நல்லா சாப்பிட்டு வந்துட்டு, சாயந்திரம் வரைக்கும் உண்ணாவிரதம் உட்கார்ந்துட்டு வீரவேசமாக எவன் வேணாலும் சவுண்டு கொடுக்கலாம் ..அதனால் வந்த பலன் என்ன ? உனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டுமா அல்லது சவுண்டு விடவேண்டுமா ?

    ரஜினிகாந்த் என்ன செஞ்சார்னு கேட்கறே ? அவருக்கா நீ ஓட்டு போட்டே ? ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவனை கேட்க தில் இல்லாத பேடிப் பசங்க ரஜினியை பார்த்து கேள்வி கேட்கறீங்க ….

    அடுத்து ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார் …
    அட பாவிகளா, தான் சுயமாக சம்பாதித்த பணத்தை உலகின் எந்த மூலையிலும் முதலீடு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அது அவர் சம்பாதித்த பணம் ..அவர் எங்க வேணாலும் சொத்து வாங்குவார் …உனக்கென்ன நோகுது ? ஏன், பெங்களூரில் சொத்து வைத்திருப்பவர்களில் நம்ம தானை தலைவர்கள்தான் அதிகம் என்கிற அடிப்படை உண்மை கூட உனக்கு தெரியாதா ? ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்ததை நீ பாத்தியா ? யாரோ வாந்தி எடுத்ததை உண்டுவிட்டு வந்து மறுபடியும் இங்க வந்து எதுக்க்குப்பா வாந்தி எடுக்கறீங்க ?

    வடநாட்டு அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இலவசம்னா காலைல 4 மணிக்கு போய் வரிசைல நின்னு வாங்குற நீ ரஜினியின் முதலீட்டை பற்றி பேசறியா ? அம்பானி என்ன உன்னோட சாதிக்காரனா, மொழிக்காரனா இல்ல மச்சானா ? அத ஓசியில வாங்கி அனுபவிக்க தெரியுதில்ல, அப்ப எங்க போச்சு புத்தி ?

    அடுத்து, படம் ஓடுவதற்க்காக அரசியல் பேசுகிறார்…
    அட தற்குறிகளா ..ரஜினி முதன் முதலில் அரசியல் பேசியது பாட்ஷா வெற்றி விழாவில் , அதற்கு பின் அவர் நடித்த படங்கள் 11, அதற்கு முன்னர் 145க்கும் மேல் ..அந்த 145ல் 90% வெற்றி படங்கள். அப்ப அவர் என்ன அரசியல் பேசினாரு ?பாட்ஷா படம் 378 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றி படம் . இதுவரை முறியடிக்கபடாத சாதனை அது . அந்த பட துவக்கத்தில் ரஜினி அரசியல் பேசவில்லை, அதன் வெற்றி விழாவில பேசினார். அது கிடக்கட்டும், அவர் அரசியல் பேசுனா நீ போய் படம் பாத்துடுவியா ? 50 ரூபா கொடுத்து திருட்டு விசிடில படம் பார்க்கிறவந்தான நீ ? சந்திரமுகி, கபாலி, சிவாஜி படங்கள் வெளியானபோது அவர் என்னப்பா அரசியல் பேசினார் ? அந்த படங்கள் மெகா ஹிட் ஆகலையா ? ஆமா ரஜினி, படம் ஓடுவதற்க்காக அரசியல் பேசறார்னு சொல்றியே அவர் கதை வசனம் எழுதி, முழுக்க, முழுக்க அரசியல் பேசி நேரடியாக நடித்த பாபா ஏன் சிவாஜி,எந்திரன் அளவுக்கு வெற்றி பெறவில்லை ? சும்மா பேசினாலே படம் ஓடும்னா , படத்திலயே பேசினா படம் பிச்சுக்கிட்டு ஓடனும்ல ? ஏன் ஓடலை ? இதெல்லாம் யோசிக்க மாட்டிங்களே….

    இப்படி எந்த கேள்விக்கும் உங்ககிட்ட பதில் இல்லை . ஏன்னா ரஜினியை தமிழன் இல்லை, சினிமா நடிகன் என்று மட்டுமே உங்களால் விமர்சிக்கமுடியுமே தவிர அவரை நேர்மையற்றவராகவோ, பொய் பேசுபரவாகவோ, மத்தவன் பணத்தை ஆட்டையை போட்டவராகவோ உங்களால் விமர்சிக்க முடியாது …

    மற்ற மொழிக்காரன் வேண்டாம், சினிமா நடிகன் வேண்டாம்னு கத்தற நீங்க என்னைக்காவது ஊழல்வாதி வேண்டாம், திருடன் வேண்டாம்னு கத்தியிருக்கிங்களா ? அப்படி கத்தியிருந்திங்கன்னா என்னைக்கோ நீங்க உருப்படிருப்பிங்க, நம்ம நாடும் உருப்பட்டிருக்குமே …

    இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை ..ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருக்கோ, அவரை எதிர்த்து நிற்பவருக்கோ ஓட்டுப் போட செவ்வாய் கிரகத்திலிருந்து யாரும் வரப்போவதில்லை..நீயும் நானும்தான் ஒட்டு போடப் போகிறோம்…அங்க காட்டு உன்னோட எதிர்ப்பை …ரஜினி வேண்டாம்னா போ..போய் ஊழல்வாதிக்கும், திருடனுக்கும், சாதி வெறிக்காரனுக்கும் ஓட்டு போடு..யார் வேண்டாம்னா ..அத விட்டுட்டு இப்படி உளறி கொட்டி தமிழன்ங்கற பெயரை கெடுக்காதிங்க….500 ரூபாய்க்கும், குவார்டருக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்க்கும் யாருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் பெயரை சொல்லக் கூட யோக்கியதை இல்லை….

    ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்றவன் சரியான யோக்கியனா இருந்தா அவரை எதிர்த்து நின்னு ஜெயிச்சு காட்டுங்க பார்ப்போம் …அப்ப ஒத்துக்கரேன்…அதுவரைக்கும் ….

    • Rana says:

      Well said Mano. Problem with our Tamilians is our groupisms. we have language groups, caste groups, Sri lanka groups and religious groups everywhere. First they will raise language slogan, then if someone passes it, raise the caste slogan again him and then switch to unrelated Sri lanka slogan. Then at last will come religious slogan. You can very well group BJP and Muslim parties into religious groups. Language groups – seeman, and other letter pad parties, Caste parties is 90%. Ellam kinathu aamaigal, ivanungalum munnera mattanungha, mathavanayum munnera vida mattanunga.

      • Ang Pak says:

        அந்த முன்னேற்றம் நிச்சயம் இந்த ரஜினியால் வராது. கொள்கை என்னவென்று கேட்டடதற்கே தலையை சுற்றுது சொல்லர ஆளால என்ன கிழிக்க முடியும்?

        கிணத்தில் ஆமைகள் இருப்பதாக முதன் முதலாக ரஜினி ரசிகர் சொல்லிதான் கேள்வி படுகிறேன். என்ன செய்வது அவர்கள் தலைவன் அப்படி.

        ரஜினி தலமையில் முன்னேற போகும் அந்த மத்தவா யாரு? பத்மா சேஷாத்ரி கும்பலா?

        இந்த யூ டுயுப் வீடியோவை பார்க்கவும்
        https://youtu.be/3sbo8636pf8

        • Rana says:

          thavalayo aamayo ethukku bayappaduringha ? Ippo unakku kolghai sollitta unakku purinchu notes elutha poriya ? Ithana varusam kolgai, Tamil aa vechi vyabaram senjey kollai adichittangha, athai keka vai illa. Nee Rajini aa enna vennu sollu enakku kavalaye illa. His success is he created fear across all political spectrum. They are all worried on their future now and will trigger all vidalais with Tamil, Sri Lanka , Religions, Kolgai, punaskaram, avarukku mudi illa, mannangatti to suit their agenda. Tamil paatu eluthi 4 National Award vanghina vairamuthu viye pottu midicha payalungha, tamil aa kappathuranunghalam. Stop talking old Agenda politics, and lets get real.

          • Ang Pak says:

            பயமில்லை தம்பி, தமிழ் நாட்டு ரசிகர்களின் பணத்தில் கோடீஸ்வரன் ஆகிவிட்டு, தமிழ் நாட்டுக்காக இதுவரை ஒரு மயிரும் புடுங்காத இந்த கோமாளி இப்ப என்னமோ லாக்கின்வார் போல வந்து தமிழ் நாட்டை காப்பாற்ற போறன்னு சொல்லறப்ப வர சினம்.

            சும்மா டிவிட்டர்லயும்,facebook லயும், blogலயும் மட்டும் இல்ல ஓட்டு. எங்களை மாதிரி கிராமத்தல இருக்கு ஓட்டு, அங்க ரஜினி பருப்பு ஒன்னும் வேகாது., வந்து பாக்க சொல்லு. உண்மை நிலை தெரியும்.

          • Rana says:

            Oh, so nee kaasu kodutha athula avaru kodeeswaran ayittar. Pulugathingada. He worked day and night to come to this level. He entertained everyone. You paid for your entertainment. avvlo thaan. Nee hotel la poi kasu koduthu, thinnuttu kusu vittathunala hotel karan panakkaran agala, he fed you and got paid and you got your tummy full. avvlo thaan. You didnt do any charity to Rajini. He is kind enough to say vazha veikkum tamil makkal, atha parthuttu nee etho chumma poi avarukku kasu kodutha madiri ninachukkittu ingha scene podara.
            He is very well known in all villages also, unnai theriyuma unn kramathula ellarukkum ? chumma vettiya evan vena comment potalam, poi uzhaichu munnerunghada.

    • Basava Isha says:

      நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் ராஜியிடன் அரசியல் புரிதல் சற்றும் கிடையாது… அவர் நல்லவராக இருக்கலாம்…. ஆனால் அவரால் எந்த மாற்றமும் வராது… நமக்கு தேவை நல்லவன் + வல்லவன்…
      பல வல்லவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் நல்லவர்கள் இல்லை. ரஜினி நல்லவர்தான் ஆனால் வல்லவர் இல்லை…

  6. Mano says:

    அரசியலை பற்றி பேசும்போதும் சில வரலாறு முக்கியம். 1991-96 ஜெயலலிதா ஆட்சி பற்றி இன்றைய Twitter,Facebook,Whats app வீரர்கள் எத்தனை பேருக்கு தெரியும் ? 1980க்கு பின் பிறந்த எவருக்கும் அன்றைய ஜெயலலிதாவை பற்றிய முழு அனுபவம் கிடையாது . இன்று ஜெயலலிதாவை தைரியம் மிக்கவர் என்று பாராட்டுவோர் அன்றைக்கு இருந்திருத்தால் ??? IAS அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்டது தெரியுமா ? இன்று அறிவாளி என்று சில புத்திசாலிகளால் பாராட்டப்படும் சுப்பிரமணிய சாமி அன்று ஜெயலலிதாவுக்கு பயந்து கொண்டு மாறு வேடத்தில் சுற்றினார் என்பது தெரியுமா ? தராசு பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி 3 பேர் கொலை செய்யப்பட்டது தெரியுமா ? வக்கீல் விஜயன் தாக்கப்பட்டது தெரியுமா ? டெரர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாக ஜெயலலிதா இருந்த காலம் அது. அவரை எதிர்த்து திரையுலகில் மூச்சு விடக்கூட யாருக்கும் தைரியமில்லை.

    1995ல் பாட்ஷா பட வெள்ளிவிழாவின்போது அன்றைய அதிமுக அமைச்சர், பாட்ஷா படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டே , தமிழகத்தில் குண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்றார் ரஜினிகாந்த். அன்று ஜெயலலிதா இருந்த நிலையில் இப்படி பேச அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால் பேசினார் ரஜினி. ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று பேட்டி கொடுத்தார் ரஜினி. பின் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் ஆட்சியை கிழித்து தொங்கப் போட்டார். அந்த தைரியம் ஜெயலலிதா இருந்தவரை மீண்டும் எவனுக்கும் வரவில்லை. இத்தனைக்கும் அடுத்த 3 ஆட்சிகளில் ஜெயலலிதா மாறி இருந்தார். அதற்கே எவனும் வாய் திறக்கவில்லை. ஆனால் எதையும் செய்யும் மனநிலையில் ஜெயலலிதா இருந்தபோது கடுமையாக அவரை விமர்சித்தார் ரஜினி. ஜெ எதுவும் பேசவில்லை. காரணம் ரஜினியின் மீது கை வைப்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது என நினைத்தார். இன்னொரு காரணம் யாரையும் சரிக்கு சமமான எதிரியாக பாவித்து அவர்களை வளர்த்துவிடுவதை என்றுமே விரும்பாதவர் ஜெயலலிதா.

    அன்று தேர்தலில் நின்றால் உறுதியாக முதல்வராகும் நிலையில் இருந்தார் ரஜினி. அவரை நிற்கச் சொல்லி மூப்பனார் முதல் சோ வரை பலரும் நிபந்தித்தனர். மூப்பனார் தன் கட்சி தலைமை பதவியே ரஜினிக்காக காலியாக வைத்திருப்பதாக சொன்னார். ரஜினி இடத்தில் அன்று எவர் இருந்திருந்தாலும் அரசியலில் அடியெடுத்து வைத்திருப்பர். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை. காரணம் அப்படி ஒரு எண்ணமே அன்று அவரிடம் இல்லை. ஜெயலலிதாவை விமர்சிக்கப்போய் அது அவரை அரசியலுக்கு வரவைக்கும் சூழ்நிலையை கொண்டுவந்துவிட்டது. அந்த எண்ணமே இல்லாத போது அவர் எந்த முன்னேற்பாடுகளுடன் இருந்திருக்கமுடியும் ? அரசியலில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ரஜினி வந்திருத்தால் நிச்சயம் முதல்வராக ஆகியிருக்க முடியும். ஆனால் நல்ல ஆட்சியை கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அடுத்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து அவர் பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆகையால் தங்கத தட்டில் முதல்வர் பதவி தேடி வந்த சூழ்நிலையிலும் அதை உறுதியாக மறுத்தார் ரஜினி. எவனும் இதை செய்திருக்கமாட்டான். ஆனால் அன்று முதல் அரசியலை கவனிக்கவும், கற்றுக் கொள்ளவும் தவறியதே இல்லை ரஜினி. மூப்பனாரை தமாகா தொடங்க வைத்து, திமுகவுடன் கூட்டணி எற்படுத்தி ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு இறக்கினார். சட்டமன்றத்தில் 224 இடங்கள், பாராளுமன்றத்தில் அனைத்து 39 இடங்களையும் வென்று சாதனை படைத்தது திமுக-தமாக கூட்டணி. புதிதாக கட்சி ஆரம்பித்த மூப்பனாருக்கு 40 சட்டமன்ற தொகுதிகளும்,, 20 பாராளுமன்ற தொகுதிகளும் கொடுத்தார் கருணாநிதி என்றால் அன்று அவர் இருந்த நிலையை எண்ணிப் பாருங்கள். திமுக 17 பாராளுமன்ற இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.

    ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து எதிரியாக்கிக் கொண்டு, கருணாநிதி மற்றும் மூப்பனாரை நண்பர்களாக்கிக் கொண்ட ரஜினிக்கு அரசியல்வாதிகளின் உண்மை முகம் அதற்கு பின்தான் புலப்பட ஆரம்பித்தது. 1998ல் கோவை குண்டுவெடிப்பு நடந்தபோது ஹாங்காங்கில் இருந்தார் ரஜினி. அடுத்தநாள் சென்னை வந்தார். குண்டுவெடிப்பு காரணமாக, திமுக ஆட்சி மீது கடும் கொந்தளிப்பு எழுந்தது. இந்த சூழலில் வந்த ரஜினியை தமாகவினர் விமானநிலையத்திலேயே போய் சந்தித்து தவறான தகவல்களை தந்தனர். நண்பர்கள் என்பதால் அவர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில் ரஜினி சொன்ன கருத்துக்கள் அன்றைய மக்கள் மனநிலைக்கு எதிராகவும் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவும் இருந்ததால் கடும் எதிர்ப்பை சந்தித்தார் ரஜினி. தன் நண்பர்களாலேயே தான் தவறாக வழிநடத்தப்பட்டதை உணர்ந்தார். பின் அத்வானியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் நிலையை தெரிவித்தார். அதே மாதத்தில் வந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணி 30 இடங்களை வென்றது. எந்த ஜெயலலிதா வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பிரச்சாரம் செய்தாரோ, எந்த ஜெயலலிதா வேண்டாம் என்று மக்கள் சுத்தமாக துடைத்து எறிந்தார்களோ அதே மக்கள் வெறும் 21 மாதங்களில் அவரை பெரும்பான்மையாக ஜெயிக்கவைத்தனர்.

    அரசியலும்,மக்களும் தான் நினைத்தது போல இல்லை என்பதை ரஜினி தெளிவாக உணர்ந்த காலகட்டம் அது. மீண்டும் தன் வேலையை காட்டினார் ஜெயலலிதா. 13 மாதங்களில் சுப்பிரமணியசாமியுடன் சேர்ந்துகொண்டு பெட்டி படுக்கையுடன் டெல்லி சென்று வாஜ்பாயியின் ஆட்சியை கலைத்துவிட்டுத்தான் திரும்பி வந்தார். அன்று மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதை அவரது நண்பரே விரும்பாமல் அந்த வாய்ப்பு மூப்பனாரை விட்டு போயிற்று. பிறகு என்ன ? கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானார் மூப்பனார். அதுவும் ஜெயலலிதாவுடன் கூட்டணி. இந்த கருமத்தை என்னவென்று சொல்ல ? மீண்டும் 1999ல் தேர்தல். இம்முறை பாஜக கூட்டணியில் பகுத்தறிவு திமுக -பாமக-மதிமுக. நம மக்கள் வழக்கம்போல் மீண்டும் ஒரு “U” Turn அடித்து திமுக கூட்டணிக்கு 26 இடங்களை வழங்கினர். ஜெயலலிதாவுக்கு வெறும் 9. நிச்சயமாக ரஜினிக்கு தலை சுற்றி இருக்கும். ஆனால் அதை விட பெரிய அதிர்ச்சி அடுத்து வந்தது. 2001 தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா.பின் 2002ல் பாபா படத்தின் போது பாமகவினரால் பிரச்சனை வந்தபோது ரஜினியின் நண்பர்கள் என சொல்லப்பட்டவர்களும் வரவில்லை, ரஜினியின் எதிரி என சொல்லப்பட்டவரும் வரவில்லை. ரஜினி சார்ந்த திரையுலகமும் வரவில்லை கமல் உட்பட. ரஜினி தன் பிரச்சனையை தானே எதிர்கொண்டார்.

    ரஜினியின் நிலையை நினைத்து பாருங்கள். 1996ல் ஜெயலலிதா வாஷ் அவுட். 5 வருடங்களில் எதிர்கட்சியாக கூட இல்லாத ஜெ என்ன நல்லது செய்தார் என மக்கள் அவரை ஆட்சியில் அமர்த்தினர் என ரஜினிக்கு நிச்சயம் புரிந்திருக்காது. ஆனால் அதில் அவர் கற்றுக் கொண்ட அரசியல் பாடம் மிக அதிகம். இங்கு அரசியல்வாதிகளும் சரி,மக்களும் சரி, இருவருமே நிலையானவர்கள் இல்லை. இங்கு நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. இந்த மக்களுக்காக நாம் ஒருவரை கடுமையாக எதிர்த்து எதிரியாக்கிக் கொண்டுவிட்டோம். இப்போது அதே மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். நாம் யாரை எதிரியாக நினைத்தோமோ, அவர் நம்மை எதிர்த்து ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் நம் நண்பர்கள் நம்மையும் தவறாக வழிநடத்தி, அவர்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர். அதில் ஒருவர் எதிரி கூடாரத்திலேயே போய் சேர்ந்துவிட்டார். இதில் நான் எங்கே நிற்கிறேன் என்ற கேள்வி நிச்சயம் ரஜினிக்கு வந்திருக்கும்.

    அன்று அவர் எண்ண ஓட்டம் என்னவாக இருந்திருக்கும் ? இங்கு அரசியல்வாதிகள் அணி மாறினால், கட்சி மாறி கூட்டணி வைத்தால் அவர்களை கேவலமாக இந்த மக்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு தேர்தல் இவர்களும் அதைத்தானே செய்கிறார்கள். இவர்கள் கட்சி மாறி வாக்களித்தால் அதை பற்றி அரசியல்வாதிகள் ஒன்றும் சொல்லக் கூடாது. ஆனால் அரசியல்வாதிகள் கட்சி மாறி கூட்டணி வைத்தால் அது கேவலம். எந்த ஊர் நியாயம் இது ? நான் ஒருவேளை இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்திருந்தால் இந்த மக்கள் தன்னை என்ன சொல்லி விமர்சித்திருப்பார்கள் ? சந்தர்ப்பவாதி,பச்சோந்தி,நிலையான கொள்கை இல்லாதவன்,இவனை நம்பினால் அவ்வளவுதான் என்று எத்தனை எத்தனை விமர்சனங்கள் வந்திருக்கும் ? ஆனால் அதை இன்று எந்த கூச்ச,நாச்சமும் இல்லாமல் இதே மக்கள் செய்கிறார்கள். அப்ப யார் பச்சோந்தி ? அரசியல்வாதிகளா அல்லது இந்த மக்களா ? ஆக ஒன்று மட்டும் நிச்சயம். இந்த அரசியல்வாதிகளை நண்பர்கள் என்றும், எதிரிகள் என்றும் பிரித்து பார்ப்பதும், இந்த மக்களை நம்பி ஒருவரை எதிரியாக்கிக் கொள்வதும் நம்மை நாமே படுகுழியில் தள்ளுவதற்கு சமம். அதனால் இனி யாரையும் எதிர்க்கவும் வேண்டாம், யாரையும் ஆதரிக்கவும் வேண்டாம். நம் வேலையை மட்டும் பார்ப்போம் என்ற முடிவை ரஜினி அன்றுதான் எடுத்திருக்கக் கூடும்.

    ஆனால் ரஜினியின் அரசியல் பாடம் அத்தோடு முடிந்துவிடவில்லை. 2004 பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு பேட்டியளித்தார். நான் இந்தியா முழுவதும் சுற்றி வந்தேன், எல்லா இடங்களிலும் வாஜ்பாயி தலைமையிலான பாஜகவுக்கு அமோக ஆதரவு உள்ளது. ஆகவே மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என்றார். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. தமிழ்நாட்டில் வழக்கம்போல் அரசியல் கூட்டணிகளும் மாறின, மக்களும் மாற்றி வாக்களித்தனர். அதுவும் எப்படி? 39 இடங்களும் திமுக கூட்டணிக்கு போனது. ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி. சுத்தமாகவே அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டார் ரஜினி.

    பின் அனைத்து கட்சிகளுடனும் நல்ல உறவை வளர்த்துக் கொண்டார். வாஜ்பாயி, அத்வானி,சிதம்பரம்,ஜெயலலிதா,கருணாநிதி, சந்திரபாபு நாயுடு,பால் தாக்கரே, எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் நரேந்திர மோடி, வைகோ, திருமாவாவன்,அன்புமணி ராமதாஸ் என ரஜினியின் நட்பு வட்டம் எல்லா கட்சியிலும், எல்லா மட்டத்திலும் இருந்தது. அதுமட்டுமல்லாமல், அமிதாப், ஷாருக்கான், அமிர்கான், சல்மான்கான், சிரஞ்சீவி,சச்சின் டெண்டுல்கர்,மகேந்திரசிங் தோணி என அனைத்து துறைகளிலும் உள்ளவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் மனிதராக ரஜினிகாந்த் உருவானார். கடல்தாண்டி சொல்வதானால் மலேசிய பிரதமர் ரஜினியின் வீட்டுக்கு வரும் அளவுக்கு அவர் செல்வாக்கு இருந்தது. தாய்லாந்து இளவரசி விமானநிலையத்துக்கு வந்து ரஜினியை வழியனுப்பினார்.

    ஆனால் அரசியல் மட்டும் பேசவேயில்லை ரஜினி. ஊடகங்கள் இவர்களாகவே ரஜினியின் ஆதரவு யாருக்கு என ஜோசியம் சொல்லி , பின் வலிய போய் இவர்களாகவே கேட்டு,யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி சொன்னபோதெல்லாம் ரஜினி பல்டி என்று இவர்களாகவே செய்தி போட்டனர். 1996 முதல் ரஜினியின் பெயரை இழுக்காமல் எந்த தேர்தலும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. ஆனால் ரஜினி மிகத் தெளிவாக இருந்தார். வீட்டிற்கே போய் மோடி ரஜினியை சந்தித்தபோதும் பாஜகவுக்கு ஆதரவளிக்கவில்லை ரஜினி. அதே போல் தன் மனதுக்கு பட்டதை யாருக்கும் பயப்படாமல் சொன்னவரும் ரஜினி மட்டுமே. ஊழல் வழக்கில் 2 மாதம் சிறை சென்று ஜெயலலிதா திரும்பியபோது மனிதாபிமான ரீதியில் கூட எந்த அரசியல் கட்சியும், ஜெயலலிதாவின் நண்பர்கள் உட்பட எவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் ரஜினி ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருக்க பிராத்திப்பதாகவும், தீபாவளி வாழ்த்தும் தெரிவித்தார். இது அதிமுகவினரால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.அவ்வளவு சீக்கிரம் ஜெயலலிதா இதை செய்யமாட்டார். ஆனால் அன்று அவர் இருந்த மனநிலையில் ரஜினியின் இந்த் அறிக்கை அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்கும். அதனால்தான் பதவி ஏற்பு விழாவுக்கு ரஜினி மட்டுமே அழைக்கப்பட்டார். அந்த விழாவில் அதிமுக பிரமுகர்கள் ரஜினியுடன் செல்பி எடுத்துக் கொண்டபோதும் ஜெயலலிதா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    பின் விதி வசத்தால் ஜெயலலிதா நம்மிடையே இன்று இல்லை, கருணாநிதி முதலில் தன் உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்ளும் சூழலில் அரசியலில் இருந்து தள்ளி இருக்கிறார். தமிழகம் ஒரே நேரத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தலைமையற்று இருக்கிறது. மக்கள் மாற்று சக்தியை தேடுகிறார்கள், புதிதாக ஒருவரை விரும்புகிறார்கள. 22 வருடங்கள் பல அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டுவிட்ட ரஜினி இது தனக்கான சமயம் என்று நினைக்கிறார். 1996 போன்ற சூழல் அதற்கு பின் வரவேயில்லை. இன்று அதைவிட நல்ல சூழல் உள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்து முதல்வராகும் எண்ணம் ரஜினிக்கு சுத்தமாக இல்லை. தன் அனுபவத்தை வைத்து, மக்களுக்கு தன்னால் உண்மையாகவே நல்லது செய்ய முடியுமா என தீர ஆலோசித்து, அப்படி வந்தால் தன் திட்டம் என்ன? தன் கொள்கை என்ன ? தன்னுடன் யார் இருக்கவேண்டும், எப்படிப்பட்டவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என அனைத்தையும் தீர்மானித்து, அதற்க்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்பது Part Time Job அல்ல, அதற்கு முழுநேர அர்ப்பணிப்பு வேண்டும். ஆக இப்போது, தான் செய்யும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்து வெற்றியை குவிக்கிறாரோ அந்த வேலையை முழுவதும் முடித்துவிட்டு மக்கள் சேவைக்கு வரவேண்டும் என நினைக்கிறார்.

    இந்த அரசாங்கத்தை குறை சொல்லவும், விமர்சிக்கவும், ஊடகங்கள்,எதிர் கட்சிகள்,வருங்கால முதல்வர் கனவில் இருப்பவர்கள் என ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் அதை மட்டுமே செய்யமுடியும். அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது. அதாவது பேசும் நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியை அகற்றிவிட்டு,மக்கள் ஆட்சியை கொடுக்கும் நிலையில் ரஜினி இருக்கிறார். மற்றவர்கள் பேசுகிறார்கள். ரஜினி செயலில் இருக்கிறார். பத்தோடு பதினொன்னாக அறிக்கை கொடுக்கவும், தினமும் டிவிட்டரில் குரல் கொடுக்கவும் ரஜினி விரும்பவில்லை, அதனால் மக்களுக்கு என்ன நல்லது நடந்துவிடப் போகிறது என நினைக்கிறார். அதற்கு பதில் தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்கிற தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, நதிநீர் இணைப்பு என தன் அடிப்படை கொள்கையை தெரியப்படுத்தியும் விட்டார். . அவர் கட்சி ஆரம்பிக்கும்போது வரும்போது தமிழக மக்கள் மேம்பாட்டுக்கான அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். ஓளிவு, மறைவு இல்லாமல் அனைத்தையும் சொல்வார் ரஜினி. இதுவரை அவர்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் வரும்.

  7. Mano says:

    அரசியலை பற்றி பேசும்போதும் சில வரலாறு முக்கியம். 1991-96 ஜெயலலிதா ஆட்சி பற்றி இன்றைய Twitter,Facebook,Whats app வீரர்கள் எத்தனை பேருக்கு தெரியும் ? 1980க்கு பின் பிறந்த எவருக்கும் அன்றைய ஜெயலலிதாவை பற்றிய முழு அனுபவம் கிடையாது . இன்று ஜெயலலிதாவை தைரியம் மிக்கவர் என்று பாராட்டுவோர் அன்றைக்கு இருந்திருத்தால் ??? IAS அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்டது தெரியுமா ? இன்று அறிவாளி என்று சில புத்திசாலிகளால் பாராட்டப்படும் சுப்பிரமணிய சாமி அன்று ஜெயலலிதாவுக்கு பயந்து கொண்டு மாறு வேடத்தில் சுற்றினார் என்பது தெரியுமா ? தராசு பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி 3 பேர் கொலை செய்யப்பட்டது தெரியுமா ? வக்கீல் விஜயன் தாக்கப்பட்டது தெரியுமா ? டெரர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாக ஜெயலலிதா இருந்த காலம் அது. அவரை எதிர்த்து திரையுலகில் மூச்சு விடக்கூட யாருக்கும் தைரியமில்லை.

    1995ல் பாட்ஷா பட வெள்ளிவிழாவின்போது அன்றைய அதிமுக அமைச்சர், பாட்ஷா படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டே , தமிழகத்தில் குண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்றார் ரஜினிகாந்த். அன்று ஜெயலலிதா இருந்த நிலையில் இப்படி பேச அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால் பேசினார் ரஜினி. ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று பேட்டி கொடுத்தார் ரஜினி. பின் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் ஆட்சியை கிழித்து தொங்கப் போட்டார். அந்த தைரியம் ஜெயலலிதா இருந்தவரை மீண்டும் எவனுக்கும் வரவில்லை. இத்தனைக்கும் அடுத்த 3 ஆட்சிகளில் ஜெயலலிதா மாறி இருந்தார். அதற்கே எவனும் வாய் திறக்கவில்லை. ஆனால் எதையும் செய்யும் மனநிலையில் ஜெயலலிதா இருந்தபோது கடுமையாக அவரை விமர்சித்தார் ரஜினி. ஜெ எதுவும் பேசவில்லை. காரணம் ரஜினியின் மீது கை வைப்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது என நினைத்தார். இன்னொரு காரணம் யாரையும் சரிக்கு சமமான எதிரியாக பாவித்து அவர்களை வளர்த்துவிடுவதை என்றுமே விரும்பாதவர் ஜெயலலிதா.

    அன்று தேர்தலில் நின்றால் உறுதியாக முதல்வராகும் நிலையில் இருந்தார் ரஜினி. அவரை நிற்கச் சொல்லி மூப்பனார் முதல் சோ வரை பலரும் நிபந்தித்தனர். மூப்பனார் தன் கட்சி தலைமை பதவியே ரஜினிக்காக காலியாக வைத்திருப்பதாக சொன்னார். ரஜினி இடத்தில் அன்று எவர் இருந்திருந்தாலும் அரசியலில் அடியெடுத்து வைத்திருப்பர். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை. காரணம் அப்படி ஒரு எண்ணமே அன்று அவரிடம் இல்லை. ஜெயலலிதாவை விமர்சிக்கப்போய் அது அவரை அரசியலுக்கு வரவைக்கும் சூழ்நிலையை கொண்டுவந்துவிட்டது. அந்த எண்ணமே இல்லாத போது அவர் எந்த முன்னேற்பாடுகளுடன் இருந்திருக்கமுடியும் ? அரசியலில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ரஜினி வந்திருத்தால் நிச்சயம் முதல்வராக ஆகியிருக்க முடியும். ஆனால் நல்ல ஆட்சியை கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அடுத்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து அவர் பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆகையால் தங்கத தட்டில் முதல்வர் பதவி தேடி வந்த சூழ்நிலையிலும் அதை உறுதியாக மறுத்தார் ரஜினி. எவனும் இதை செய்திருக்கமாட்டான். ஆனால் அன்று முதல் அரசியலை கவனிக்கவும், கற்றுக் கொள்ளவும் தவறியதே இல்லை ரஜினி. மூப்பனாரை தமாகா தொடங்க வைத்து, திமுகவுடன் கூட்டணி எற்படுத்தி ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு இறக்கினார். சட்டமன்றத்தில் 224 இடங்கள், பாராளுமன்றத்தில் அனைத்து 39 இடங்களையும் வென்று சாதனை படைத்தது திமுக-தமாக கூட்டணி. புதிதாக கட்சி ஆரம்பித்த மூப்பனாருக்கு 40 சட்டமன்ற தொகுதிகளும்,, 20 பாராளுமன்ற தொகுதிகளும் கொடுத்தார் கருணாநிதி என்றால் அன்று அவர் இருந்த நிலையை எண்ணிப் பாருங்கள்.

  8. Prem says:

    Honestly it is Seeman who made this Rajini a comedy piece in Tamil Nadu…

  9. sikkandar says:

    ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் ஒரு வேளை ஆ(ண்)மீக அரசியலாக இருக்குமோ? ஏனென்றால் ரஜினியை ஏவி விடும் குருமூர்த்தி சமீபமாகத்தான் தமிழ் நாட்டு அரசு impotent என்று சொன்னார்.

  10. Selvarajan says:

    ஆன்மீகம் புனிதமானது என்கிறார் …! அரசியல் சாக்கடை என்று தெரிந்தும் இரண்டையும் கலந்துக்கட்டி அடிக்க நினைக்கிறார் … காமெடியா இருக்கு இவரது உளறல் … ஆஸ்ரம பள்ளிக்கட்டட பாக்கியை செலுத்த இழுத்தடிக்கும் மனைவி…. ராகவேந்திரா மடத்துக்கு பத்துக்காேடி நன் காெடை வழங்கும் கணவர் … இதுதான் ஆன்மீக அரசியல் இவர்களைப் பாெறுத்தவரையில் … கிடா விருந்து என்று நாக்கை சப்புக் காெட்டவைத்த ஒரே தலீவரு இவர்தான் … இவர் விருந்துவைக்க மாட்டார் என்பதை தெரிந்த ரசிகமணிகள் … நாமே விருந்துவைத்து நல்லி எலும்ப கடிக்கலாம் .. கடிச்சிகினே ஆன்மீக அரசியல்பேசலாம் என்று நினைத்ததற்கும் ஆப்பு அடிச்சிட்டாங்க பீட்டா … கடிதத்தை பெற்ற தலீவரு ஆன்மீக மெளனத்தில் ஆழ்ந்து என்ன செய்வது என்று புரியாமல் டிரேட் மார்க் முத்திரை காட்டிக்கினு … கப்… சிப்…? பாவம் தமிழக மக்கள் … டிசைன் .. டிசைனான அரசியல் பார்த்து அலுத்துப் பாேய் ஓட்டை விற்கும் அரசியலில் மூழ்கி கிடக்கிறார்கள் … ஆன்மீக அரசியலை வெயிட்டா கவனிக்க பல சக்திகள் வரிசைக்கட்டுவதை பார்த்தால் …வேறுவித அரசியல்தான் இதுவும் …. அப்படித்தானே ….!!!

  11. Raj says:

    If EPS, OPS and TTV kind of people can become as people representative then why can’t Rajini. Hatred towards Rajini is too much in this article. Nowadays Sankar is becoming seasonal critique.

    • sikkandar says:

      If Rajini can aspire for CM post, why not Vadivelu? At least he speaks better Thamizh

  12. Victro says:

    அருமையான vithiyasamana பார்வை சங்கர்

  13. ADVOCATE RANGARAJAN says:

    மககளாட்சியில் யார் வேண்டமானாலும் அரசியலுக்கு வரலாம், இனவாதம், பிரிவினை வாதம், சர்வதேசீய மதவெறிவாதம், சாதிவெறிவாதம், போன்ற கருத்துகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வேறுவழியில்லாமல் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் தலைமையை ஏற்க விரும்புகின்றனர். மிக சிறந்த தலைமை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் தெரியாவிட்டாலும் தீமைபயக்காத தலைமையான ரஜனியை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்களே என்ற பயம், தேச எதிர்ப்பு உணர்வு காரணமாகவே இத்தனை இழிச்சொல் மற்றும் வெறிக்கூச்சல் தற்போது இணைய எழத்தாளர்களுக்கு R. K பாபாவை விட R.K ரூபாவைதான் பிடிக்கிறதோ என்னமோ?..

    • கார்த்திக் says:

      தமிழ் நாட்டில் தமிழர் உரிமைகள் பற்றி பேசினால் எப்படி இனவாதம் ஆகும்? யோவ் வக்கிலே…பிஜிபி 2.0 நோ நோ….

      • ADVOCATE RANGARAJAN says:

        தமிழன காப்பாத்துரேன்னு பொய் பொய் சொல்லி இன்னும் ஏத்தனை கும்பல் வரப்போவுதோ , நீங்க காப்பாத்துரேன்னு சொல்லி சொல்லி தான் தமிழன நாத்தீகனா, அவநம்பிக்கைவாதியா, மது அடிமையா, இலவச தாசனா, ஓட்டுக்கு பணம் பெறுபவனா இருக்கான், ரஜினி வந்தால் ஆட்சி மாறும் காட்சியும் மாறும்..

        • sikkandar says:

          அதுக்கு ரஜினிதான் வரனுமா என்ன? கொள்கை என்ன என்று கேட்டாலே தலை சுத்துதுன்ன சொல்ற ஆளுதான் தமிழ் நாட்டை ஆளனுமா? உறுதியான திட்டங்களுடனும், பலராலும் அங்கீகரிக்கபட்ட நிர்வாக திறமையுடனுள்ள அன்புமணி ராமதாஸ் இல்லையா?

  14. Thangaraj says:

    Good analysis

  15. Rana says:

    savukku is anti-hindu why ? There is no substance in article other than linking him to BJP. No one wants BJP in TN but we need a strong leader in TN. Don’t project Stalin as he hasnt done anything too.

    • sikkandar says:

      ரஜினிக்கு ராஜபக்சேயின் மகன் நிமில் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்திருக்கிறாரே, ஏன் என்று சொல்ல முடியுமா? எந்திரன் 2.0 கூலியா? ராஜபக்சே குடும்பத்திடம் கோடி, கோடியாய் சம்பளம் வாங்கும் இந்த ஆஷாடபூபதி தமிழ்நாட்டை காப்பாற்ற போறாராம்.

      “என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு இப்போது நான் ஏதாவது செய்யாவிட்டால் சாகும் வரை என் மனது என்னை உறுத்தும்” என்று சொல்லும் உத்தமர் முதலில் தனது மனைவி லதா நடத்து பள்ளிகளில் இலவச கல்வி அளிப்பதுதானே. டிவி நிருபர்கள் கேட்டதுக்கு “வாத்தியார்கள் சம்பளம் வாங்காமலிருந்தால் நாங்களும் இலவச கல்வி கொடுக்கலாம்” என்று சொன்னாரே. அந்த வாத்தியார்களா உங்கள் ரஜினி மாதிரி கோடி கோடியாய் தமிழர்களிடம் சம்பாதித்தார்கள்?

      இது மாதிரி ஒரு தமிழன் கர்நாடாகாவில் அரசியலில் பேச கன்னடன் விடுவானா, இல்லை மஹராஷ்ட்ராவில் பேச சிவா சேனா விடுமா? இங்கே தமிழன் இளிச்சவாயனா??
      தேர்தல வரட்டும், இந்த டூபாக்குரு பொயக்கால் குதிரை ராஜாவின் முகத்திரை இன்னமும் கிழியும்.

      • Shankar says:

        Well Said Sir. ரஜினியின் குடும்பத்தாரின் மேல் வாங்கி கடன் வழக்கு , லதாவின் மேல் நிலா அபகரிப்பு வழக்கு , மகளின் மேல் காசோலை வழக்கு , லதாவின் மேல் வாடகை பாக்கி வழக்கு இவை எல்லாம் பொய் என்று சொல்ல போகிறாரா. அல்லது அரசியல் கட்சி மூலம் இவைகளை சரி கட்ட போகிறாரா. மக்களுக்காக இதுவரை என்ன செய்தார் என்ற கணக்கில்லாத முடியுமா. இதுவரை இவர் வருமான வரி எவ்வளுவு காட்டினார் என்று கூற முடியுமா. தமிழ் நாட்டில் எதனை மாவட்டம் என்று இவருக்கு தெரியுமா. எதனை விதமான தமிழ் மொழி பேச படுகிறது என்று தெரியுமா. முதலில் இவர் வாங்கிய கடன்களையும் அடைக்கட்டும். பிறகு தமிழ் மக்களுக்கு சேவை செய்யட்டும். தமிழன் கர்நாடகாவிலே கொல்லப்பட்டும் துன்புறுத்த பட்ட பொது எங்கேய போய் இருந்தார் இவர். இவருடைய ரசிக மன்ற தலைமை கூட ஒரு கன்னடத்தான் தளபதி சத்யநாராயணா. ஜாதியை வைத்து தமிழ் இனத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் வரிசையிலே இப்போது ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய புறப்பட்டு விட்டார் , இவருக்கு காமராஜர் பெயரை சொல்லவோ எம்ஜீயரின் பெயரை சொல்லவோ என்ன அருகதை தகுதி இருக்கிறது. காசுக்காக எதையும் செய்யும் இவர் எளிமையானவர் என்ற போர்வையில் பணம் சம்பாதித்து கொண்டு நரசிம்ம ராவையும் மோடியையும் மூப்பனாரையும் ஒப்பிட்டு அரசியல் செய்ய விரும்புகிறார். .

      • Rana says:

        What sort of absurd logic is this. Will you do Free education in your school ? Free education can only be done by Govt. that’s why we pay tax. Don’t link Sri Lanka Tamils to Tamilnadu. It serves no purpose. If you have problem with Rajapakshe go to Sri lanka and convey. India has got nothing to do there.
        Sri lanka Tamils doesn’t like Tamilnadu people, they have very well used us and gained from us and you can very well see how they steal Tamil movies and release in internet and make money. Tamil is being used as a medium to do business by political parties for the last 5 decades by kindling emotions. Its sad to see even the new millennial Tamil populations fall for it. Am a Tamilian , you are a Tamilian, Lets take Sri lanka, religion or caste out of this discussions.

        • கார்த்திக் says:

          You asshat Tamil is not used for business. We Tamils lost all our rights to neighbouring states . Dai i know you Rana A.. otha nee mallu…Release mullai periyar water then we will talk.

        • sikkandar says:

          டேய் ரானா, தமிழனை கொன்ற ராஜபக்சேயிடுன் என்ன உறவு என்று கேட்டால், இலங்கை தமிழர்கள் தமிழ் படங்களை வீடியோ பைரசி செய்கிறார்கள், ஆகவே அவர்கள் தமிழ் எதிரி என்கிறாயே, இதிலிருந்தே தெரிகிறது ரஜினிக்கும் அவன் ரசிகர்களுக்கும் எது முக்கியம் என்று. தன் படத்தை விலை கொடுத்து வாங்குபவன், காசு கொடுத்து பார்ப்பவன் மட்டும்தான் இவனது மக்கள், சொந்தம் எல்லாம். அங்கு செத்து மடிந்த தொப்புள் கொடி தமிழ் உறவுகளை விட எந்திரன் 2.0 க்கு கோடி கோடியாய் சம்பளம் குடுப்பதால் உனக்கு நிமில் ராஜபக்சே வேண்டியவானாகிவிட்டான்.

          தமிழனை கொன்ற பாவியுடன் உறவு வைத்துகொண்டுள்ள நீ எப்படி தமிழனை காப்பாற்ற போகிறாய் என்று கேட்டால் இலங்கைக்கு போ, அங்கு போய் ராஜபக்சாவை கேள் என்று சொல்லும் முட்டாளே, நீதானே எங்களை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லி இங்கு ஓட்டு கேட்க போகிறாய், நீதான் இலங்கையில் போய் அரசியல் செய்ய வேண்டும்.

          அரசாங்கம்தான் இலவச கல்வி அளிக்க வேண்டுமென்றால், நீ என்ன புதுசா வந்து புடுங்க போற? இங்க கொள்ளை அடிச்ச கோடிகளை எங்க கொண்டு வைச்சிருக்க.

          கொள்கைன்னு கேட்டாலே தலையை சுத்துதுன்ன சொன்ன இவன் தலைவனெல்லாம் இங்க முதலமைச்சராம். அடுத்த 50 வருடங்களுக்கு வேண்டிய திட்டங்களோடும், அரசியல் அனுபவத்தோடும் இருக்கும் அன்புமணி போன்றவர்களெல்லம் வேடிக்கை பார்க்கனுமாம். Rajini’s fans like you think that Tamil Nadu ows him the Chief Ministership. Up your a…

          Rajini is a sly, crafty trojan horse being pushed into TN politics by BJP

          Rana, if you think this kind of questioning your leader is absurd, you can expect more of such absurdities when you guys enter into active politics. This is only a beginning
          .

          • Rana says:

            so you are famous Medical college looter Anbumani group ? Over aa makkal TV parthaa ippdi thaan kulambum. Sri lanka pathi India la endaa pesuringa ? Am not Rajini supporter. Nee yara pathi pesinalum enakku kavalaye illa. Oru kelvi kettal unakku online ethics kooda theriyula, unakku ethukku karuthu.Nee parkira mokkai channel makkal TV aa poi paaru po.

          • SK says:

            Well said

  16. P.R.NAGARAJ says:

    உண்மையை எழுதியுள்ளீர்கள்.தவறு மக்களிடம் மட்டுமல்ல உங்களை போன்று ஊடகங்கள் மீதும் உள்ளது.ஒன்றுமே இல்லாதவர்களை பத்திரிக்கை மற்றும் டி வி மீடியாகாகள் அவர்களை பில்லடப் பண்ணி ஏதோ அவர்கள் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற போவதாக காட்சிகள் அரங்கேற்றுகிறார்கள்.மீடியாக்கள் அவர்களை ஏதோ ஒருவரி செய்தியாக கூறி விட்டு செல்லுங்கள்.நாட்டில் முக்கியமான செய்திகள் எத்தனையோ இருந்தும் மீடியாக்கள் இவர்கள் பின்னே சென்று ஒன்றுமில்லாதவரை தூக்கிநிறுத்தபோவதாக கனவு காணாதீர்கள்.இதில் தற்போது வருத்தப்படவேண்டிய விஷயம் ராகவா லாரன்ஸ் ஏன் இவர் பின்னால் செல்கிறார்.தமிழ் மக்களிடம் அவருக்கென ஒரு மரியாதை உள்ளது.அதனை அவர் கெடுத்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவர் கடமை.தமிழ்நாட்டை எப்படி யார் ஆள வேண்டும் என்பதை தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

    • Shankar says:

      True and Well Said. Media Hype makes Rajini . Let him first resolve his family financial fraud charges, Land grab charges, Rental due cases , show his IT returns, show his proper income, show his all india property and get into national politics and not into Tamilnadu politics. We Tamil people know whom to select and whom not to select.

      • அப்துல் வாஹித் says:

        சங்கர்ஜீ அதெல்லாம் சரிதான்
        ஆனால் அவர் எவ்வளவு வரி கட்டுகிறார் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதெல்லாம் தேவையில்லாத விசயங்கள் என்று கம்பு சுத்த ஒரு படையே உங்களை முற்றுகையிடப்போகுது ஜாக்கிரதை

  17. prasad says:

    neaty weaved article…

  18. thennavan says:

    totally agree with the article.

  19. Mohan says:

    Agree with your points. Hes an actor and not a leader who can bring changes to common man. But why this crtics are not blaming DMK or AIADMK who has ruled TN for 4 decades… Are they not accountable..? It is better, Let Kamal or BJP or Rajini can come to Power instead of EPS/OPS/TTV/STALIN (who has alliance with all communal parties).. We need change and we dont want the people who were corrupting us for decades

  20. Jaffy says:

    Well crafted article detailing about the so called superstar.

  21. Karthick says:

    Excellent article. Tamil Nadu does not a need a savoir from other state. At fragile age of 68 what change will he bring to the state?

  22. ஸ்ரீகுமார் says:

    ஒவ்வொரு வார்த்தையும் செருப்படி போல் உள்ளது. தமிழக மக்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. இனிமேலும் ரசினி போன்ற நிலைபாடில்லாத சினிமா நடிகர்களை தமிழ் மக்கள் அரசியலில் அனுமதிக்க கூடாது.

  23. கார்த்திக் says:

    சவுக்கு அண்ணா உங்கள் கட்டுரை அருமை. இப்போ தெரிகிறது எதற்கு தமிழிசை மேடம் ஆர்வமா இருக்கறாங்க….

  24. Newtonpaulsingh says:

    Very good Article

  25. raju says:

    Dei thevdiyaa payyaa… Kadhariyae saavu… Ne DMK sombu nu ellaarukum theriyum… Moodittu podaa baadu… Rajini thaan next CM… Mark this!

    • கார்த்திக் says:

      TTV = பணம் = தேர்தல்……
      ரஜினி = தானம் = தேர்தல். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ரெண்டுமே மானக்கேட்ட பொழப்பு தான்… தூ….

    • sikkandar says:

      இந்த ராஜு போன்றவர்கள்தான் ரஜினியின் விசிலடச்சான் குஞ்சுகள். இவன் தலைவனும் இவன் போலதான் இருப்பான்

  26. வைரமணீ says:

    அருமை

  27. Chellathurai says:

    ஐ யா இதுக்கு தினகரன் தேவலாம். நம்மளை எப்பிடி யோசிக்க வைகிரணங்க

  28. Chellathurai says:

    தமிழ் நாடு மற்றும் ஆந்திரா இரண்டு மாநில இங் களில் மட்டுமே நடிகர்களை அரசியலுக்கு வந்து மாநிலத்தை சீரழிக்கும் கொடுமை நடக்கிறது

  29. இமய வரம்பன் says:

    அருமையான பார்வை சங்கர்

  30. Thiyagu N says:

    ￰அடுத்தது கமலும் ரெடியாயிட்டார் ! மக்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான் !! எந்த புத்தில் என்ன பாம்போ ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் ? ஆன்மீகமா அல்லது நாத்தீகமா என்று!?

  31. அருமையான கட்டுரை சவுக்கு !

  32. Lokeshkumaar says:

    Honest, straight forward and informative. Typical savukku article. Every word was like a savukku adi to Rajini. Well written. I believe this article should be shared to maximum number of people

  33. Elankumar Vasagar says:

    மண் குதிரை (பிஜேபி) நம்பி ஆற்றில் (அரசியல்) இறங்க ரஜினி நெனச்சேன்டா , இந்த மாமன் (சவுக்கு சங்கர்) தடுத்தேன்டா .. வார்த்தை மீறி போனான் பாரு.. மானம் கெட்டு நின்னான் பாரு .. மனசு பொறுக்கலடா ..

  34. Anonymous says:

    I am delight to see this article. I have been waiting to see your response to his hasty announcement. Rightly said and well drafted.
    He is planning for after retirement life thinking all us are fool. He will be fooled if he does….

  35. Anonymous says:

    Who is that Baba ? Why is that he has not appeared before anyone else ?

  36. Anonymous says:

    Rightly said, kudos for the article. But, my guess is even Rajini knows he can’t win. All that he can do is split the votes of the existing parties. That might happen considering the hulla bulla that’s going on now.

  37. Venkateswarn says:

    கற்றவன் கல்லாமல் களவுண்டு பாப்பான் முள்ளமாரி முடிச்சவிக்கி ரஜினி

  38. Praveen gobi says:

    நான்கு நாட்களாக உங்களைத்தான் தேடினேன் இப்ப இதை படித்த பிறகுதான் நிம்மதியாக உள்ளது .

  39. அருமையாக எழுதியுள்ளீர்கள். எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று என்று தேர்தல் சமயத்தில் சொன்னார். அது தான் தற்போதும் ஞாபகம் வருகிறது. அரசியலை ஆண்டவர் காப்பாற்றுவார். ஆனால், ரஜினியின் தற்போதய அரசியலிலிருந்து நாம் தாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இதிலிருந்து தப்பவில்லையென்றால் பல “ஆத்மா”ர்த்தமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

  40. m.kalaimani says:

    இது ஒரு நல்லா பதிவு சிந்திக்க வேண்டியபதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress