மாநிலங்களவையில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்படாமலேயே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கிறது.
அடுத்தமாதம் கூடும் பட்ஜெட் தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும். ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை ஆளும் பாரதீய ஜனதாவிற்கில்லை. பல்வேறு திருத்தங்களை காங்கிரஸ் கோருகிறது. அவை குறித்து விவாதிக்க தனிக் குழு ஒன்று அமைக்கவேண்டுமென அதுவும் இன்னும் வேறு சில கட்சிகளும் வலியுறுத்துகின்றன.
முஸ்லீம்களைக் குறிவைப்பதில் பாஜக சற்று அதிக தூரம் சென்றுவிட்டதோ என்றஞ்சி கூட்டணிக்கட்சிகளே ஆதரிக்கத் தயங்குகின்றன. பாஜகவின் பெரும்பாலான நடவடிக்கைகளில் துணை நிற்கும், தெலுகு தேசம் கட்சியே இந்த விவகாரத்தில் பிஜேபிக்கு எதிராக நிற்கிறது. எனவே பட்ஜெட் தொடரில் மசோதாவை முழுமையாக ஆராய தனிக் குழு அமைக்கப்படக்கூடும் என்றே கருதப்படுகிறது. அப்படிக் கொண்டுவரப்பட்டால் முஸ்லீம், மற்றும் மதச்சார்பற்ற அமைப்புக்களும் சிந்தனையாளர்களும் அக்குழுவின் மீது அழுத்தம் கொண்டு வந்து, முஸ்லீம் சமுதாயத்திற்கு பாதகமான அம்சங்களை நீக்கவைக்கலாம் என நோக்கர்கள் கருதுகின்றனர்.
சரி இந்த சட்ட வரைவு உண்மையில் முஸ்லிம் பெண்களை பாதுகாக்குமா?
“எனது ஆறு ஆண்டு திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன். ஆனால் இப்போது கணவருடன் வாழவில்லை . ”
முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் இதைக் கூறுகிறார் 27 வயது ரேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வருத்தமோ, ஆத்திரமோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் இதை ஒரு தகவலாக தெரிவிக்கும் அவரின் முகத்தில் எதிர்காலம் பற்றிய கவலை படிந்து போயிருக்கிறது.
கணவரை ரேஷ்மா விலக்கினாரா? கணவர் அவரை ஒதுக்கினாரா? இந்தக் கேள்விக்கு எதிர்கேள்வி தொடுக்கும் அவர், “இரண்டிற்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன? ஆனால் அவர் இதுவரை எனக்கு தலாக்கும் கொடுக்கவில்லை” என்கிறார்.
தலாக் கொடுப்பது ஒரு விதத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்றால் தலாக் கொடுக்காமல் கணவன் பிரிந்து வாழ்வதும் வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக மேலே ரோஷ்மா போன்றோரின் வாழ்க்கை சூழல்!
இப்படி பல முஸ்லிம்பெண்கள் திருமண உறவை இழந்து முழுமையாக கணவனால் பழிவாங்கபட்டு வாழ்கிறார்கள்
ஆனால் புதிய சட்டத்தின்படி முஸ்லீம் பெண்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?
இஸ்லாமிய விவாகரத்து நடைமுறையான முத்தலாக் அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இதுதான் மோடி அரசின் முத்தலாக் சட்டத்திற்கான முதல் சுழி.
யூனிபார்ம் சிவில் கோட் என்பது குறித்து பிஜேபி பல ஆண்டுகளாக பேசியே வந்திருக்கிறதுதான் என்றாலும், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அதன் பணியை சுலபமாக்கியது.
அவசரகதியில் இந்த மசோதாவை தயாரித்திருப்பதாக மத்திய அரசு மேல் குற்றம் சுமத்தும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “நீதிமன்றத்தில் முத்தலாக் பற்றிய விவாதத்தின்போது, முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது மற்றும் மரியாதையை பெற்றுக்கொடுப்பது பற்றி பேசப்பட்டது. ஆனால், மத்திய அரசோ, தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவனை சிறைக்கு அனுப்புவதாக முடிவெடுத்தால், திருமணம் என்ற பந்தமே நிலைக்காது. பிறகு எங்கிருந்து உரிமையும், மரியாதையும் கிடைக்கும்?” என்று நிதர்சனத்தை கேள்விக்கணையாக தொடுக்கிறார்.
ஒருபக்கம் முத்தலாக் செல்லாது என்பதும், இன்னொரு புறம் தலாக் கூறிய கணவன் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று சொல்வதும் அபத்தத்தின் உச்சம். விவாகரத்து செல்லாது என்றால், திருமணம் தொடர்கிறது என்றால் எதற்காக ஜீவனாம்சம்?
முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்ணிடமே, மைனர் குழந்தைகளின் பொறுப்பு ஒப்படைக்கப்படும், கணவனை சிறைக்கனுப்பினால் மனைவி என்ன செய்வார் தன் குடும்பத்தை பராமரிக்க ? சிறைக்குச் செல்லும் கணவர் எப்படி ஜீவனாம்சத்திற்கான நிதி ஆதாரத்தை திரட்டமுடியும்?
முத்தலாக்கை எதிர்த்து சட்ட உதவியை எதிர்பார்க்கும் பெண் கணவருடன் வாழ்வதற்காகவும், பொருளாதார பாதுகாப்புக்காகவுமே நீதிமன்றத்தின் ஆதரவை நாடுகிறார். ஆனால் கணவனை சிறைக்கு அனுப்பினால் அந்த பெண்ணுக்கு தேவைப்படும் இரண்டு அடிப்படை ஆதரவுமே கேள்விக்குறியாகிவிடும். முத்தலாக் தடையால் அப்பெண்ணின் மறு வாழ்வும் தடைபடுகிறது
சிறையில் இருக்கும் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினர் அல்லது அரசு என யார் ஜீவான்ம்சம் கொடுப்பார்கள் என்பது தெரியாமல் ஜீவனாம்சத்தை எப்படி நிர்ணயிப்பது? இந்த ஜீவனாம்சம் எத்தனை மாதம்,வருடம் எவ்வளவு தரவேண்டும் ? இத்தகைய எண்ணற்ற கேள்விகளுக்கு மோடியின் மசோதாவில் எந்த விளக்கமும் இல்லை.
முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி நீதிபதியின் முடிவே இறுதியானது.
இவைபோக கடும் விமர்சனத்திற்குள்ளாயிருப்பது முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை என்ற விதிதான். முத்தலாக் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகிறது. ஓர் அடிப்படைக் கேள்வி, திருமணம் சிவில் சட்டங்களின் கீழ்தான் வரும், அது தொடர்பான பிரச்சினை எப்படி கிரிமினல் வரையறைக்குள்ளாகும்?
மேலும் மனைவி என்றல்ல. எவர் வேண்டுமானாலும் ஒரு முஸ்லீம் கணவர் தன் மனைவி மீது தலாக் சொல்லிவிட்டார் எனப் புகார் கூறிவிட்டால், அந்தக் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துவிடலாம். இந்த ஷரத்துததான் இந்த மசோதாவின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு சிக்கலில், யார் வேண்டுமானாலும் புகார் தரலாம் என்பது எத்தகைய ஆபத்தான பிரிவு என்பதும், இந்த சட்டத்தை கொண்டு வருவது, வெளிப்படையாகவே இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கும் ஒரு கட்சி என்பதையும் மறக்க முடியாது.
கோரக்பூர் சாமியார் முதல்வராக இருக்கும் உத்திரபிரதேசத்தில் மட்டுமல்ல, பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலுமே இம்மாதிரியான கொடுமைகள் நாள்தோறும் நிகழும் வாய்ப்பு நிறையவே உண்டு. அந்த வகையில் இந்த புதிய சட்டம் முஸ்லிம் ஆண்களுக்கெதிரான சதி என்றால் அது மிகையில்லை.
இந்திய முஸ்லிம் மகளிர் அமைப்பின் தலைவர் ஜாகியா சோமன் புதிய வரைவு மசோதாவை வரவேற்கிறார். ஆனால் அதே நேரத்தில் இன்னும் சற்று மேம்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“குரானை அடிப்படையாகக் கொண்டு குடும்ப சட்டம் இயற்றப்பட வேண்டும். மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் உரிமை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கவேண்டும். மூன்று முறை தலாக் சொல்வதற்கான காலகட்டமும் 90 நாட்கள் என்பது உறுதி செய்யப்படவேண்டும். அதேபோல் நிகாஹ் ஹலாலா, பலதார மணம் பற்றியும் சட்டம் கவனத்தில் கொள்ளவேண்டும்.”
மேலும் “ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கப்படாவிட்டால், தலாக் சொல்லி விவாகரத்து செய்யாமலேயே ஆண் மற்றொரு திருமணம் செய்துகொண்டு, தண்டனையில் இருந்து தப்பிக்க வழி ஏற்படும்” என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார் ஜாகியா சோமன்.
உண்மை. இச்சட்டத்தினால் வருங்காலத்தில் இப்படிபட்ட நிகழ்வுகள் நிகழ அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உண்டு அது மட்டும் அல்லாது இது இறைவனின் சட்டம் இதை நாம் மறுக்கக்கூடாது என்ற மனநிலையை இஸ்லாமிய முல்லாக்கள் பாமர முஸ்லிம் பெண்களுக்கு ஊட்டி விட்டால் இப்பெண்கள் காவல் நிலையம் வந்து புகார் கொடுக்கக்கூட இறையச்சம் கொள்ளும் நிலை உருவாகும். இப்படி நடக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால்தான் மௌலவி பிஜே எனும் பி ஜைனுல் ஆபிதீன் (TNTJ) கூட இந்த சட்டத்தால் முஸ்லிம்களை ஒன்னும் செய்து விட முடியாது என்று மிதப்பாகக் கூறுகிறார்.
இந்த வரைவு மசோதாவில் ‘நிகாஹ் ஹலாலா’ (விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டுமானால், மனைவி வேறொரு ஆணை திருமணம் செய்துக் கொண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, அதன்பிறகு, முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளுதல்), பலதார திருமணம், மற்றும் பிற வகை விவாகரத்து முறைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த முத்தலாக் தடுப்புசட்டம் ஷியா ,அஹ்மதியா முஸ்லிம்களுக்கும் பொருந்துமா என்பதும் தெளிவாக இல்லை.
இஸ்லாமியர் நபிகள் நாயகத்தின் முஹம்மதின் வாழ்க்கை வரலாறும் முழுமையாக, சரியாக பதியபட்டிருக்கிறது என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர் முஹம்மதின் நரை முடிகளின் எண்ணிக்கை கூட அவர்கள் தங்கள் வேதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர்.
குரான் இறைவனின் கட்டளை வார்த்தை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அத் திருக்குரானில் கூறப்பட்டிருப்பவையே முடிவுசெய்யவேண்டும் என்கின்றனர்.
அந்த அளவிலே தலாக் நடைமுறைக்கு வருவதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா?
நபிகளாரின் வளர்ப்பு மகன் ஸைத் இப்னு ஹாரிஸாவில் துவங்குகிறது இந்த தலாக் அலங்கோலம்.
ஹாரிஸா தன் முதல் மனைவி ஸைனைப் பின்த் ஜஹ்ஷ்ஷை தலாக் செய்கிறார். சரி அப்போது எப்படி தலாக் சொன்னார்? ஒரே முறையிலா அல்லது இடைவெளி விட்டு விட்டா? இடைவெளி விட்டு விட்டு என்றால், அதுவரை ஸைனப் யாருடைய வீட்டில் வசித்தார் ?
எத்தனை முறை இத்தா இருந்தார் ? இப்படி பல கேள்விகள் வருகிறது ஆனால் எக்கேள்விக்கும் குர் ஆனில் விடை இல்லவே இல்லை.
இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் இத்தா என்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்கும்.
தலாக் சொல்லப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் காத்திருப்பாள்.’ (2:228)
மாதவிடாய் ஏற்படாதவளாகவோ அல்லது அதில் இருந்து நிராசை அடைந்தவளாகவோ இருந்தால் அவள் மூன்று மாத காலம் வரை இத்தா இருப்பாள். (காண்க:- 64 : 4)
மாதவிடாய் வந்தாலும் மூணு மாதம் வராவிட்டாலும் மூணு மாதம் தான் !
அவள் கர்பிணியாக இருந்தால் தனது கருவில் உள்ள குழந்தையை பெற்றெடுக்கும் வரை இத்தாவில் இருப்பாள் – (65:4)
இத்தா குறித்து மேல் விவரங்கள் (http://www.islamkalvi.com/?p=4818)
(இது பொதுவாக கொடுக்கப்படும் விளக்கம். இவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பலாம். கர்பிணியாக இருக்கும் போது ஒருவன் தலாக் கொடுக்கிறான் என்றால் அவன் எத்தகைய மனநிலை கொண்டவனாக இருப்பான் என ஆத்திரம் வரலாம். அந்த நியாய, அநியாயங்களுக்குள் செல்லாமல், இஸ்லாமறியாதவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டே இச் சுட்டி.)
இதையும் நோக்குங்கள். ஒருவர் தன் மனைவியைத் தலாக் கூறிவிட்டார். அவளது இத்தா காலமும் முடிந்துவிட்டது. அதன் பின்னர் அந்தக் கணவன் தான் விவாகரத்துச் செய்த பெண்ணுடன் சேர்ந்து வாழலாம் சேர்ந்து வாழவும் முடியும். ஆனால் அத்தகையதொரு முடிவினை எடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே.
ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்’ என்கிறது முஹம்மதின் குரான் (பார்க்க 4 : 34) இந்த ஒரு சொற்றொடரே முஹம்மதிஸம் பெண்கள் மீது எத்தகைய அடிமை விலங்கை பூட்டி வைத்துள்ளது என்பதை நமக்கு தெரியவைக்கும்.
இப்படித்தான் 1400வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் ஷரியா சட்டங்களினால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆணுக்கும் பெண்ணிற்கும் பொதுவான தலாக் சட்டம் வேண்டும் என ஆர்வலர்கள் கூறினாலும் அப்படி ஒரு பொதுச் சட்டத்தினை குர்ஆன் வழி உருவாக்கவே இயலாது. அப்படிப் பட்டது நம் அருமை திருமறை.
அவர்கள் உண்மையில் மேம்பட வேண்டும் என்றால் முதலில் பலதார மணம் இத்தா போன்ற ஆண் சார்புநிலை சட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை முஸ்லிம்களே மேற்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அனைத்து மதத்தாருக்கும் பொதுவான சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம். இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஆயிரக்கணக்கான சாதிகள், நெறி முறைகள். இந்து மதத்திற்குள்ளேயே மலைக்கவைக்கும் அளவு வேறுபாடுகள், முரண்பாடுகள். இது போக பல்வேறு மதங்கள் இந்தப் பின்னணியில். பொது சிவில் சட்டம் சாத்தியமா என்பதும் நியாயமான கேள்வி. ஆனால் அந்த இலக்கை நோக்கியே சமூகம் நகரவேண்டும் என நான் கருதுகிறேன்.
தலாக்கைப் பொறுத்தவரை அது பல முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டிருப்பதும் உண்மையே. தலாக் விடயத்தில் மட்டும் அல்லாது பல அடிப்படை விடயங்களும் முஸ்லிம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
இஸ்லாமிய சட்டம் என்பதே மனிதர்கள் மனிதர்களுக்காக இயற்றி, மாற்றி திருத்திக் கொள்ளும் மனித சட்டங்கள் அல்ல என்பது அனைத்து முஸ்லிம்களின் அசையா நம்பிக்கை! ஸலாத்/தொழுகை ஸவ்ம்/நோன்பு ஜகாத்/2.1/2% வருடாந்திர வரி போன்றே நிக்காஹ் /திருமணம்/தலாக் / விவாகரத்து/ மஹர் எனும் படுக்கைக்கூலி போன்றவைகள் அதுப்போலவே. தர்ஹா எனும் சமாதி வழிபாடுகள் இவை அனைத்தும் நாட்டுக்கு நாடு மாற்றம், தடை என்றுண்டு
இப்பின்னணியில், அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, பெண்கள் உரிமையைப் பாதுகாத்து, அதே நேரம் முஸ்லீம் சமுதாயம் தேவையில்லாத சிக்கல்களுக்கு ஆட்படாத வகையில், முத்தலாக் தடுப்பு மசோதாவினை திருத்தி அமைக்க வேண்டும்.
ஆனால் அத்தகைய கலந்தாலோசனைகளுக்கு எந்த வகையிலும் தயாரில்லை என்பதையே பாராளுமன்ற மாநிலங்களவையில் இம்மசோதாவின் அறிமுக நாளில் நடந்த விவாதம் உணர்த்தியது. காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா, உள்ளிட்டோர், இம்மசோதாவை பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் அருண் ஜெய்ட்லி, நிலைக்குழுவுக்கு அனுப்ப நேரமில்லை. உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்றார்கள்.
நிலைக்குழுவுக்கு அனுப்பாமல், இதை சட்டமாக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் வாதாடியபோது, அருண் ஜெய்ட்லி, காங்கிரஸ் கட்சியை பெண்களின் முன்னேற்றத்துக்கு எதிரான கட்சி என்று குற்றம் சாட்டினார். பெண்களின் முன்னேற்றத்தில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தாமலேயே இருப்பது ஏன் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.
இந்த மசோதாவை எப்படியாவது சட்டமாக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதை உணர முடிகிறது. பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்து விட்டதால், அடுத்த கூட்டத் தொடருக்கு முன்பான இடைப்பட்ட காலத்தில் அவசரச் சட்டமாகக் கூட இதை கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால் அப்படியெல்லாம் ஒரு விபரீத முடிவை பாஜக எடுக்காது என்று நம்புவோம். அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும், பாராளுமன்ற நிலைக் குழு கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரு நியாயமான சட்டம் இயற்றப்படும் என்றும் நம்புவோம்.
(குறிப்பு: அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள மஜ்முஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) Compendium of Islamic Laws என்கிற நூலில் நிகாஹ், தலாக், இத்தா,ளிஹார், லிஆன், ஈலா, குளா, ஃபஸ்க்கே நிகாஹ், ஹிபா, வஸிய்யத், வாரிசுரிமை, வக்ஃப் போன்ற எல்லாவற்றுக்கும் சட்டவிளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முகவரி : 76/A okhla main market Jamia Nagar, New Delhi 110 025 Tel: 26322991)
(முகநுலில் இஸ்லாமிய சமூகம் குறித்து பல்வேறு செய்திகளை பதிந்துவரும் சாதிக் சமது தன்னை ஒரு முன்னாள் இஸ்லாமியர் என்று அழைத்துக்கொள்கிறார்.)
(அவரது நமது தளத்திற்கென்று எழுதியனுப்பிய விரிவான கட்டுரையை சுருக்கி, வேறு சில தகவல்களையும் இணைத்து இங்கே நமது வாசகர்கள் முன்வைக்கிறோம்.)
கட்டுரையை திருத்தி செழுமையாக்கியவர் – டிஎன்.கோபாலன்.
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا اِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:34)
இந்த பதிவில் பல்வேறு தவ
று உள்ளது “ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் ” நிர்வகிப்பவர்தாம் – பாதுகாப்பவர் உதவி செய்பவர் பல அர்த்தங்கள் உண்டு MANAGEMENT என்று வரும் போது இது எஜமான் என்று பொருள் தருவது போல் முழு அத்தியாயத்தையும் கொடுக்காமல் இப்படி தவறான விளக்கங்களை கொடுப்பது வெட்கப்படண்டிய செயல்
6 effective ways to quickly earn easy money you can download this link in PDF format: http://piu.googlenoomon.info/?p=36569
I work for each and every of the aforementioned methods and earn more than $ 35,000 per month.
பெண்களை ஒரு சொத்தாக பார்ப்பது , ஒரு போகப்பொருளாக பார்ப்பது ஆணுக்கு அடிமையாகி இருக்க வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதில் உடன்பாடு இல்லை
மற்றபடி இன்றைய ஜாதிய சமூகத்திலிருந்து விடுபட இஸ்லாமியம்
ஒரு தீர்வாக உள்ளது . ப.ஜ.க பார்ப்பனிய கோரமுகத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பியுள்ளது முத்தலாக் பெண்களுக்கான நீதிக்கானது என்று ப.ஜ.க வும் இந்து மதவெறி அமைப்புகளும் பேசுவது அயோக்கியத்தனமானது .
அவர்கள் முதலில் இந்து மாதத்தில் உள்ள ஜாதிய தீண்டாமையை , ஊர் சேரி இரு குடியிருப்புகளை ஒழிக்கட்டும் .
இஸ்லாமியர்களை சிறைக்கு அனுப்புவதற்கு ப.ஜ.க பலவேறு சட்ட வழிகளை நாம் கவனத்தில் கொள்வோம் .
சாதியத்துக்கு இஸ்லாமியம் தீர்வெனில் பெண் உரிமைக்கு என்ன செய்வது..?
கீழ்சாதிகாரனின் சாப்பாட்டை மேல்சாதிகாரன் சாப்பிடமாட்டான், அதுபோல இந்து அல்லது மற்ற மதத்தினரின் உணவை இசுலாமியன் சாப்பிடமாட்டான் இதற்கென்னசெய்வது…??
முன்னால் இஸ்லாமியர் சாதிக் சமது மட்டுமல்ல மாற்று மத சகோதரர்கள் அனைவருக்கும் கருத்தது சொல்ல உரிமை உண்டு ஆனால் ஒரு நிபந்தனை இஸ்லாத்தை தெரிந்து புரிந்து கருத்து சொல்லவேண்டும்.
1. பதிவிலே மஹரை படுக்கை கூலி என்று மொழி பெயர்த்ததிலிருந்தே இஸ்லாமின் மீது உள்ள வக்கிரம் தெரிகிறது ..
மஹர் என்றால் திருமண நன்கொடை என்று பொருள் அது பெண்ணுக்கு உரியது .ஒரு வேளை கணவன் மனைவி பிரிந்தால் அந்த தொகை அவளுக்கு வாழ்கை தேவைக்கு உதவும். மேலும்
2. ஒருவர் தன் மனைவியை தலாக்விட்ட பின்னர் சேர்ந்து வாழ முடியும் ஆனால்அத்தகையதொரு உரிமை ஆண்களுக்ககு மட்டடுமே என்ற பதிவு முற்றுலும் தவறு உண்மை என்னவென்றால் தலாக் விட்ட பின்னர் சேர்ந்து வாழ விரும்பினால் தலாக் பெற்ற பெண்ணின் முழு சம்மதம் இல்லாமல்
மீன்டும் திருமணம் முடிக்க முடியாது என்பதுதான் இஸ்லாமிய சட்டம்
அருமையான பதிவு
முத்தான விளக்கம்!
மேலே குறிப்பிட்டவற்றின் குரான் வசனங்களை அளிக்க இயலுமா..?
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
இதேபோல் தவறுசெய்யும் ஆண்களை திறுத்துவதற்கு பெண்கள் ஆண்களை அடிக்கலாம் என்ற வசனம் இருப்பின் அதற்கான லிங்க தரவும்..(கிடைக்காது என தெரியும்)
அதிசயபிறவி படத்தில் தன் அண்ணனின் மகனான ரஜினியை அடிக்கும்போதெல்லாம் செந்தாமரை இவ்வாறு கூறுவார்..
உன் பையனை திருத்ததான் அடிக்கிறேன் என்று….
சாதிக் சமது ஒரு முன்னாள் இஸ்லாமியர் என்றால் இப்போது எந்த மதத்தில் இருக்கிறார்? மதமே இல்லாமல் இருக்கிறாரா இல்லை ghar wapsi யின் மூலன் இந்து மதத்தில் சேர்ந்து இருக்கிறாரா?
எங்கு இருந்தால் என்ன..? சொல்வது சரியா என பார்க்கலாமே
முத்தலாக் என்றால் என்ன ?
ஒரு பெண்ணும் ஆணும் பரஸ்பரம் சுய விருப்பதுடன் திருமணம் செய்து கொள்வதே நிக்காஹ் ஆகும் . இதில் ஒருவர் மறுத்தாலும் நிக்காஹ் செல்லாது
.
திருமணம் செய்யும் ஆணானவன் பெண்ணுக்கு அவள் விருப்பதுக்கினங்க அவளுக்கு தேவையானவற்றை(பணமாகவோ அல்லது பொருளாகவோ ) மணமகனிடம் இருந்து திருமணத்தின் போது பெற்றுக்கொள்வாள் . இதுதான் “மகர் ” என்று கூறுவர். இந்த மகர் செல்வத்தை மணமகன் கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என்பது சட்டம்.
இப்போது கணவன் தான் மனைவியை ஏதோ ஒரு காரணத்தினால் விவாகரத்து செய்ய விரும்பினால் ., அவளை முதலில் ஒரு தலாககூறவேண்டும் . பின்பு இருவரும் ஒரே வீட்டில் 45நாட்கள் அல்லது ஒரு மாத விடாய் காலம் சேர்ந்து வாழவேண்டும் . இதற்கிடையில் கணவன் மனம் மாறி விட்டால் இருவரும் சேர்ந்து வாழலாம் தலாக் நிகழாது . கணவன் மனம் மாறாவிட்டால் சமுதாய பெரியவர்கள் அவர்களை சேர்த்து வைக்க முயற்சிப்பார்கள் . அப்படியும் கணவன் மனம் மாறாவிட்டால் கணவன் இரண்டாவது தலாக் கூறி இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழவேண்டும் 45நாட்கள்.
இப்போதும் இரண்டாவது தலாக்கிற்கு பிறகும் கணவன் மனம் மாறினால் விவாகரத்து நிகழாது . தொடர்ந்து சேர்ந்து வாழலாம் . ஆனால் மூன்றாவது முறையும் தலாக் கூறிவிட்டால் விவாகரத்து நிகழ்ந்து விடும் . திருமண பந்தம் இத்துடன் முடிவுறும் . இப்போது மனைவிக்கு மகர் பணமும் முழுவதும் அவளுக்கு சொந்தம். இதன் பிறகு மனைவியானவள் நான்கு மாத காலம் அல்லது மாதவிடாய் காலம் தனித்து இருப்பாள் .ஏனென்றால் அவள் கருவுற்று இருக்கிறாளா? என்பதை உறுதி செய்வதற்கு..
மனைவி கருவுற்ற நிலையில் கணவன் தலாக் கூறக்கூடாது என்பதும் சட்டம் ஆகும்.
அதன் பிறகு மனைவி தான் விரும்பிய வேறொரு ஆணையும் , கணவன் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்யலாம் . ஜீவனாம்சம் என்பது இஸ்லாத்தில் கிடையாது.
இதே போல் மனைவி தான் கணவனை தலாக் செய்ய விரும்பினால் “குலா ” என்ற முறையில் விவாகரத்து செய்யலாம்.
ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இதனால் இறைவன் கோபம் அடைகிறான் என்கிறது இஸ்லாம்.
இருந்தபோதும் ஒருவன் மூன்று முறை ஒரே நேரத்தில் தலாக் கூறினால் (குற்றத்துடன்)தலாக் நிகழ்ந்து விடும்.
தலாக் சொல்வதற்கு முன் கடுமையான விதி முறைகள் பின்பற்ற படுகின்றன . நான் இதனை சுருக்கமாக விவரித்துள்ளேன் .
3தலாக் காண பின் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தால் அது இஸ்லாத்தில் விபச்சாரமாக கருதபடுகிறது . அதனால் தான் முத்தலாக் தடை சட்டத்தினை இஸ்லாமியர்கள் எதிர்க்கின்றனர்.
குலா முறையை விவரிக்கவும் நண்பரே..
ஒரு பெண் மறுமணம் செய்ய கூட ஒரு மதம் கோட்பாடுகளை விதிக்கிறது. மலம், ஜலம் கழிக்க கூட குர்ரான் கொடும் சட்டங்களை விதிக்கிறது. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்று ஒரு மதமே கூறலாமா? எதிர்த்து கேள்வி கேட்டல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு சக முஸ்லிம்களை வாயடைப்பது, இல்லெயெனில் குரானில் ஏதாவது காலத்திற்கு ஒவ்வாத ஒன்றை மேற்கோள் காட்டி அக்கிரமம் செய்வது! இஸ்லாமில் மிதவாதிகளாகவும், அறிவு ஜீவிகளாகவும், பெண்ணாய் பிறப்பதும் பாவம். தரம் இல்ல
மலிவான எல்லா பொருட்களும் விற்று தீர்க்கும் ஆனால் நெடு நாள் நீடிக்காது. அது தான் இஸ்லாமும்.
இஸ்லாத்தின் அடிப்படை
1. மனிதன் படைக்கப்பட்டிருப்பதே அல்லாஹுவை வணகுவதற்கே !
2 ஒரு முஸ்லிம்மிற்கு மறுமை தான் நிரந்தர உலகம் (சுவனம் ) , அதற்க்கான தேர்வே இவ்வுலகம் . இறை சட்டத்தை கடைபிடித்தவர்கள் சுவனம் பரிசாக பெறுவார்கள் . எனவே , இஸ்லாத்தை பின்பற்ற எவரையும் நிர்பந்திப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது .
3 ஒரு பொருளை உருவாக்கியவருக்குதான் அப்பொருளை எவ்வாறு கையாளவேண்டும் என்பது திட்டவட்டமாக தெரியும் . அதை போல் மனிதனை படைத்த அல்லாவிற்குத்தான் எவ்வாறு மனிதன் வாழ்ந்தால் அவனது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தெரிந்து சட்டங்கள் வகுத்துள்ளான் .
4 கால் சட்டை அணியும் ஒருவர் வேட்டி அணிபவரை பார்த்து நீ வேட்டி அணியதே கால் சட்டை தான் நீ அணிய வேண்டும் என்று நிப்பந்திப்பது எப்படி தவறோ அப்படித்தான் , நீங்கள் பின்பற்றும் சட்டம் எனக்கு பிடிக்கவில்லை என்பதும் .
உங்களுக்கு இஸ்லாமிய சட்டம் பிடிக்கவில்லை என்றால் பிடித்தவர்கள் பின்பற்றி போகட்டுமே , உங்களுக்கு வேறு மார்க்கம் உலகத்தில் இருக்கிறதல்லவா .
சொந்த கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
சட்டம் என்பது மனிதனை ஒழுங்குபடுத்தத்தான், முதலில் சிரமமாக இருக்கும் அதன் பலனோ மகிழ்ச்சி தரும். பெண்ணிற்கு இஸ்லாம் அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்கிருக்கிறது . பெண்கள் கண்ணாடி கற்கள் அல்லர். அவர்கள் வைரங்கள் திருடர்களால் கவர்ந்து செல்லாமல் இருக்க அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறது. அதில் ஒன்று தான் ” பர்தா “.
1.மனிதனை படைத்தது அல்லா அல்ல்………
2.எது 72 நிரந்தர கன்னி பெண்களை அல்லாவே ஒவ்வொரு ஆணுக்கும் பரிசளிப்பாரே அதை சொல்கிறீர்களா..?? பெண்களுக்கு எத்தனை ஆண்கள் என சொல்லியிருக்கீறார்களா…?
3.முதல் பதில்தான் இதற்கும்..
4.சித்தாந்தம் தவறாக இருப்பின் அந்த சித்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பவருக்கு ஆதராவாக தாரளமாக எவரும் குரல் கொடுக்கலாம்.
5.ஆண்களையும் வைரக்கல் என சொல்லி அவர்களுக்கும் கண்கள் மட்டும் தெரியும்படி பர்தா அணியசொல்லாமே…!!
கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிபவர்களை விசில் புலோயர்ஸ் என கூறுவர், நற்சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே அவ்வாறு இயங்கமுடியும் உதாரணத்திற்கு இந்து மதத்தில் இருந்து வெளியேறிய பெரியரை சொல்லலாம்.
muslim are religious feeling over …please avoid to interfer their feeling
ஷரியத் என்பது குர்ஆன் மட்டும் அல்ல,குர்ஆன்,நபிமொழி மற்றும் நபி தோழர்கள் செய்ததை நபி அங்கீகரித்ததும் ஆகும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண் களுக்கு சொத்துரிமை போன்ற எண்ணற்ற உரிமைளை இஸ்லாம் வழங்கிருக்கிறது. இஸ்லாத்தை முழுமையாக விளங்கியவர்களை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தால் தலாக் சம்பந்தமான முழு விளக்கம் கிடைத்திருக்கும். இஸ்லாம் பற்றிய தவறான பதிவும் தவிர்க்க பட்டிருக்கும்.
சொத்துரிமையா…? ஆணின் பங்கில் இரண்டில் ஒருபாகம்தான் பெண்ணுக்கு என்பது நியாமா…? குரானைவிட இப்போது உள்ள சட்டம் எவ்வளவோ பரவாயில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிபங்கு சொத்தில் உண்டு.
ஒரு பெண்ணின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதியே…., அதாவது ஒரு ஆணின் சாட்சி இரண்டு பெண்ணின் சாட்சிக்கு சமம் என சரியத்சட்ட நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளபடும்.
ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அவள் குறைந்தது நான்கு சாட்சிகளை அழைத்துவரவேண்டும் நீதிமன்றதுக்கு… இல்லையெனில் தண்டனை அப்பெண்ணுக்குதான்..
எதோ ஆத்திரத்தில் கணவன் மனைவி விவாகரத்து(தலாக்) செய்து பிரிந்துவிட்டால், அந்த இருவரும் நினைத்தாலும் சேர முடியாது. மீறி சேர்ந்துவாழ விரும்பினால் அப்பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் (நிக்கா) செய்து அவருடன் “சேர்ந்துவிட்டு” பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு வந்துதான் பழைய கணவனுடன் சேரமுடியும்.
ஆணும் பெண்ணும் சமம் இல்லை என. படைத்த அல்லாஹ்வின் நியதி.
உலகத்தின் நிதர்சன உண்மை யும் அதுவே!
ஒரு பெண் ஆணை விட உடல் மனரீதீயாக. பலகீனமாகவே படைக்கப்பட்டுல்லாள். எப்படி ஒரு பெண் தன்னைப்போன்று ஒரு ஆணை மாதவிடாய் சிரமத்தையும் மப்பேறு சிரமத்தையும் அனுபவிக்க வேண்டூம் என கூறுவது எவ்வாறு அபத்தமோ அதைப்போன்று தான் சம உரிமை கேட்பது. ஒவ்வொரு சட்டத்திற்கும் தெளிவான ஷரியத் விளக்கம் உள்ளது. அனைத்தையும் இங்கு விளக்குவது சாத்தியம் இல்லை.
அய்யா உங்கள் “அருமையான” விளக்கத்தை பெண்ணியவாதிகளிடம் சொல்லுங்கள் தக்க பதிலடி கிடைக்கும். அப்படியே மாற்றுமத நண்பர்களிடமும் சொல்லவும் அப்போதுதான் நியாயம் என்பது என்ன என அறிந்துகொள்வீர்கள்..
அன்பரே 1400 வருடங்களாக இஸ்லாம் இதனைப்போன்ற வாழ்கை நெறிமுறைகளை கூறி வளர்ந்துதான் வருகிறது. எதிர்பவரர்களைப்பற்றி கவலை இல்லை.
வழக்கமான சாம்பிராணி போடும் வேலைதான் இது.. வெட்ட வெட்ட வளரும், எதிர்ப்பில் வளர்ந்த மதம், மூடநம்பிக்கையில்லா மதம் அப்பிடி இப்பிடி என்று அடித்து விட்டுகொண்டே இருங்கள். அதனால்தான் மற்ற மதத்தினரிடம் ஒட்டமுடியவில்லை..
இஸ்லாம் தனி தன்மை வாய்ந்தது. மேலும் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை .விரும்பபியவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். விரும்பாதவர்கள் தங்கள் கருத்தை இஸ்லாத்தில் புகுத்த நினைப்பது தவறு .
மாற்று மத உணர்வுகளை இஸ்லாம் மதிக்கின்றது எனவே அவர்கள் மனம் புன்படும்படி பேசுவதையும் கூட இஸ்லாம் தடை செய்கிறது .
இசுலாத்தின் கோட்பாடுகள் இஸ்லாமியர்களுக்கு பிடித்திருக்கிறது . அதன் சட்டங்களை திருத்த மாற்றுமதத்தவர்ககு உரிமை இல்லை .
மாற்று கருத்துக்களை பரீசலனை கூட செய்யாமல், சும்மா இஸ்லாம் நல்லது அதில் தவறே இல்லை என்று நீங்களாகவே நினைத்து கொண்டால் பிறகு சொல்வதற்கு ஒன்றுமில்லை. எதற்குமே உரைகல் வேண்டும் உங்கள் இஸ்லாமிய நீதி உங்களுக்கு சரியாகவே தோன்றும்…அதனால்தான் மாற்றுமதத்தினரிடம் நான் மேற்சொன்ன இசுலாமிய விசயங்களை சொல்லிபார்த்து அந்த உண்மைகளை உரசிபார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
மாற்று கருத்துக்களை பரிசீலனை செய்ய இது மனிதனின் சட்டங்கள் அல்ல . இது இறைவனின் கட்டளை . ஏற்று நடப்பவர்கள் இஸ்லாமியர்கள். இதனை விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு , அனால் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு இதனை மாற்ற எந்த உரிமையும் இல்லை . இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்களுக்கு கூட உரிமை இல்லை . மாற்று மத சகாதாரர்களுக்கு பல நூற்றாண்டாக சொல்லித்தான் அதனை ஏற்று இப்போது உலகத்தில் நான்கில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். சத்தியமே வெற்றிபெறும்.
சொத்துரிமை: மரணப் படுக்கையில் உள்ள நோயாளி ஒருவர் தம் மனைவியை ஒட்டுமொத்தத் தலாக் சொல்லிவிட்டால், அவரது மறைவுக்குப் பிறகு அவருடைய சொத்துக்கு அவள் வாரிசு ஆவாள். அவரது மறைவுக்குப் பிறகு அவளுடைய இத்தா’க் காலம் முடிந்த பின் வேறொருவரை மணமுடித்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறாள். அப்போது அவளுடைய இரண்டாம் கணவரும் இறந்துவிட்டால் ஒரே நேரத்தில் அவள் இரு கணவர்களின் சொத்திலிருந்தும் பங்கு பெறுவாள். இதன் காரணமாகவே ஆணின் பங்கில் இரண்டில் ஒரு பாகம்தான் பெண்ணுக்கு என்றானது. இது நியாயம்தானே?
பெண்ணின் சாட்சி: பெண் இயற்கையிலேயே பலவீனமானவள், அவளை அச்சுறுத்தினால் வாக்கு பிறழும் சாத்தியம் ஆணைவிட அதிகம். ஆகையால் ஒரு ஆணின் சாட்சி இரண்டு பெண்ணின் சாட்சிக்கு சமமானது.
நான்கு சாட்சிகள் அழைத்து வர கேட்டது – ஹதீஸின் சாராம்சத்தை சரியாக நீங்கள் விளங்கி கொள்ளவில்லை. நபி(ஸல்) அப்பெண்மணிக்கு தண்டனை வழங்காமல் மன்னிப்பதற்காக. திருக்குர்ஆன் 4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை மெய்ப்படுத்தி சாட்சி கூறிவிட்டால், அப்பெண்களை மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
விவாகரத்து: ஆத்திரத்தில் விவாகரத்து வரை செல்லக் கூடாது என்ற காரணத்திற்காகவே விவாகரத்து முறை மிகவும் சிரமமாக்கப்பட்டது. ஆழந்து யோசித்து தீர்மானிப்பதே விவாகரத்து/ திருமண முறிவு.
அப்பா சொத்தில் ஆணின் பங்கில் பாதிதானே பெண்ணுக்கு…?
ஒரு பெண்ணாக இருந்துகொண்டே எப்படி இவ்வாறு பொய் சொல்லமுடிகிறது உங்களால்…? இன்றைக்கு நம்மை போன்ற சகோதரிகள் அனைத்து துறைகளிலும் சாதித்து கொண்டு இருக்கையில் ஏன் இந்த சமாளிப்பு சகோதரி…?
கணவனிடம் யாராவது மனைவியின் நடத்தை பற்றி தவறாக கூறி தலாக் செய்யப்பட்டு பின் அது பொய் என கண்டுபிடிக்கப்படால் அக்கணவனே ஆசை பட்டாலும் அவன் மனைவி வேறு ஒருவரை மணந்து அவருடன் இருந்து விட்டு பின் அம்மனிதரை தலாக் செய்துவிட்டுதான் இவரை திருமணம் செய்ய்முடியும் என்பது சரியா..? தனது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்வதை எந்த கணவனால் ஏற்கமுடியும்…….?
மனிதனாக இருக்க விரும்பும் ஒருவனால், வெறுப்பு அரசியலை மட்டுமே கொண்டுள்ள மதங்களுக்குள் இருக்க முடியாது.
எனவேதான் முகம்மதிய பெற்றோருக்கு பிறந்த காரணத்தினால் மட்டுமே தன்னை முகம்மதியத்திற்குள் இருத்திக் கொள்ள இயலாமல் எங்களை முன்னாள் முஸ்லிம்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.
நாங்கள் முகம்மதியத்திலிருந்து வெளியேறிவர்ககள் தான். எனினும் மனிதர்கள். மனிதனை மடையனாக்குகும், மனித உரிமைகளை இல்லாதாக்கும் எதையும் எதிர்த்து போராடுகின்ற, விமர்ச்சிசிக்கின்ற உரிமை எங்களுக்கு உண்டு.
முகம்மதியத்தை தூக்கி நிருத்த முயலும் வலைப்பக்க முல்லாக்களைப் போல் அல்லாது முஸ்லிம்களையும் சக மனிதர்களாக மதிப்பதால், இந்த முல்லாக்களைவிட முகம்மதியத்தை விமர்ச்சிப்பதற்கு முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்களே மிகுந்த தகுதியுடையவர்கள்.
முன்னாள் முஸ்லிம் ஒருவரின் கருத்திற்கு முன்னுரிமையளித்து வெளியிட்ட சவுக்கிற்கு நன்றி
தோழர் சாதிக் சமதின் பார்வை சரியானதென்றே கருதுகிறேன், வரதட்சணை கொடுமை சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்தி அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதுபோல் முத்தலாக் விடயத்திலும் நடக்க வாய்புள்ளது,இது கண்டிப்பாக அப்பாவி முஸ்லிம் ஆண்களை பாதிக்கவே செய்யும்.
தோழர் சாதிக்சமதின் பார்வை சரியானதென்றே கருதுகிறேன்,வரதட்சணை பாதிப்பு சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்தி அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவது போல இந்த முத்தலாக் சட்டமும் வழிவகை செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
பி ஜே பி யின் செய்ல்பாடு உள்நோக்கம் கொண்டது, ஆனால் அதேசமயம் விளையபோகும் விசயம் முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடியது, ஆனால் கட்டுரையில் மேலே கூறியுள்ளபடி அனைத்து விசயங்களையும் கருத்தில்கொண்டு திருத்தி அமைக்கப்பட்டால் நிச்சயம் விளையபோவது நன்மையே.. இஸ்லாமியர்கள் உடனே, யார் இவர்கள் கடவுளின் சட்டங்களை மாற்ற என கத்தாமல் நல்லதாய் இருப்பின் அதை ஏற்றுகொள்ளகூடிய பக்குவத்துடன் சிந்தித்து செயல்படுவது நல்லது..
முன்னாள் முஸ்லிம் உடைய கருத்தை பிரசுரிக்கக் கூடாது என்று சொல்வது தெளிவான பாசிசம் அல்லவா. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் முன்னாள் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்று இருப்பதாக கதீஸ் படித்தேன். ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு, அதிலும் தமிழ்நாடு சகிப்புத் தன்மைக்கு பெயர் போன பூமி. நான் ஒரு இந்து, எனது மதம்தான் சரி என்று நான் எப்பொழுதும் வாதிடுவது கிடையாது, ஆனால் எனது நம்பிக்கையை நான் பக்தியோடு பாதுகாக்கின்றேன், அதனை மற்றவர் மீது திணிப்பது கிடையாது.
பெரியார் போன்றவர்கள் முதல் இன்றும் பல்லாயிரக் கணக்கானவர்கள் இந்து மதத்தை விமர்சனம் செய்கின்றார்கள், அனால் நாம் அவர்களின் கழுத்தை நெரித்தது கிடையாது, ஆனால் இந்துப் பெரும்பான்மை கொண்ட மதச்சார்பாற்ற நாட்டிலேயே முன்னாள் முஸ்லிம்களின் கழுத்தை நெரிக்கும் செயலை முஸ்லிம்கள் செய்வது எப்படி ஏற்றுக் கொள்வது? அந்த மக்களுக்கு தாம் உண்மை என்று பின்பற்றிவந்த, தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை தீர்மானித்த ஒன்றை விமர்சிக்க, அதைப் பற்றிப் பேச உரிமை இல்லை என்று சொல்ல முடியுமா?
இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று பாருக் என்று ஒருவரை கோவையில் தாடி வைத்த இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள், இப்பொழுது முன்னாள் முஸ்லிமுக்கு கட்டுரை எழுத இடம் கொடுத்ததே தப்பு என்கின்றார்கள், இது மிகவும் அராஜகம் ஆகும். இஸ்லாத்தில் இருந்து வெளியேறி, மிகவும் இரகசியமாக வாழ்கின்றவர்கள் மீது இந்தியா போன்ற ஒரு நாட்டில், அதுவும் தமிழகத்தில் கூட இப்படியான கருத்தியல் அடக்குமுறைகள் திணிக்கப்படுவது கவலையான விடயம்.
சரியான பார்வை, சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..
நன்றி திரு கோபால்.
மூட முஹம்மதிய மதவெறியர்கள் எங்களைப் போன்ற முன்னாள் முஸ்லீம்களைத் தலையெடுக்க விடாமல் நசுக்குவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள். இவர்களின் வேஷத்தை மிகப் பெரும்பாலான பொதுவுடைமைவாதிகளும், பெரியாதியவாதிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தோழர் சாதிக்கிற்கு இடமளித்து உதவிய சவுக்கிற்கு நன்றிகள்!!!
அன்பரே! நீங்கள் கூறுவது போல் எந்த ஹதிதும் இஸ்லாத்தில் இல்லை . ஆதாரம் இருந்தால் தரவும் . இஸ்லாம் அன்பையே போதிக்கிறது அடக்குமுறையை அல்ல.
ஹதீதா…?? குரான் வசனங்களையே இந்த கட்டுரையாளர் சாதிக் அவர்கள் பேஸ்புக்கில் ஆதாரத்துடன் நாரடித்து கொண்டிருக்கிறார் முடிந்தால் அங்கு போய் விவாதித்து பாருங்கள்..
விமர்சனம் செய்ய முன்னாள் முஸ்லிமிற்கு இல்லாத தகுதி வேறு யாருக்கு உண்டு. ஏன் முஸ்லிம்கள் மட்டும் தான் முஸ்லிம்களை விமர்சனம் செய்ய வேண்டுமா?
Vazhakam pola Sankar sombu adichurukar thulukangaluku…..
சிறப்பு.. தோழர் சாதிக் சமத்
சங்கர், தாங்கள் தீர விசாரிக்காமல், சாதிக் என்ற முன்னாள் இஸ்லாமியர் கூறிய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கட்டுரையை எழுதி, தங்கள் மீதான என்னுடைய நம்பிக்கையை சீர்குழைத்துள்ளீர்கள். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை..
முன்னாள் முஸ்லீம் கருத்துச் சொல்லக் கூடாது என்கிறீர்களா? அல்லது முன்னாள் முஸ்லீம்களை எவருமே சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறீர்களா? பதிவிற்குப் பதிலளிக்காமல் எழுதியவரின் பூர்வீகத்தை நோக்குவது அர்த்தமற்ற போக்கு!
ஏன் தோழர் கேக்க கூட்டதா?
உங்கள் கருத்து அடிப்பட்டியில் பெரியார் கொள்கையை பின்பற்றும்( ex-hindu) மக்கள்
இந்துக்களுக்கு கருத்து சொல்லக்கூடாது என்பதுபோல் உள்ளது…
இந்தி ஒரு மாத சர்பற்ற நடுமாட்டுமல்ல கருத்து உரிமையும் உள்ளது
பின்குறிப்பு தன்னுடைய மதத்தில் உள்ள குறைநிறை சுட்டிக்காட்டும் உரிமை உள்ளது…
முன்னாள் முஸ்லீம் கருத்துச் சொல்லக் கூடாது என்கிறீர்களா? அல்லது முன்னாள் முஸ்லீம்களை எவருமே சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறீர்களா? பதிவிற்குப் பதிலளிக்காமல் எழுதியவரின் பூர்வீகத்தை நோக்குவது அர்த்தமற்ற போக்கு!
அறிவும், மனித பற்றும் உள்ள யாரவேண்டும் என்றாலும் கறுத்து சொல்லாம்..
இதற்க்கு பெயர்தான் ஜனநாயகம்…
aan aathikkavaathikjal!