இன்று காலை, சென்னை லயோலா கல்லூரி எதிரே அமைந்துள்ள காயிதே மில்லத், ஊடக பயிற்சி மையத்தின் வளாகத்துக்குள், குஜராத் மாநிலம் வட்காம் தொகுதியின் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பத்திரிக்கையாளர்கள், பேட்டியளிக்குமாறு மேவானியை கேட்டுக் கொண்டனர்.
பேட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜிக்னேஷ் மேவானி, ரிபக்ளிக் டிவியின் மைக்கைப் பார்த்ததும், அதை எடுத்தால்தான் பேட்டி தருவேன் என்று கூறினார். உடன் இருந்த பத்திரிக்கையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிக்னேஷ் தீர்மானமாக, ரிபக்ளிக் டிவி மைக்கை எடுக்காவிட்டால் பேட்டியளிக்க முடியாது என்றார். மைக்கை எடுக்க முடியாது. உங்கள் பேட்டியை புறக்கணிக்கிறோம் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர். மேவானியும் கிளம்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் சர்ச்சையை உருவாக்கியது. ட்விட்டரில் ஒரு பிரளயத்தையே உருவாக்கியது.
மேவானிக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. பத்திரிக்கையாளர்களை அவமதித்து விட்டார் என்றும் குரல்கள் எழுந்தன. வழக்கம் போல, மோடி பக்தர்கள், மேவானியை தீவிரவாதி, நாட்டை துண்டாட நினைக்கும் பயங்கரவாதி என்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இணைய இதழ்களான, நியூஸ் மினிட், க்வின்ட் மற்றும் ஸ்க்ரோல் ஆகியவற்றில் இது குறித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த அளவுக்கு இது செய்தியானதால், அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டவன் என்ற முறையில் எனது கருத்தையும் பதிவு செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
பத்திரிக்கையாளர்கள் தரப்பு நியாயம் என்னவென்றால், மேவானி ரிபப்ளிக் டிவியின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம். ஆனால் ரிபப்ளிக் டிவி மைக்கை எடுக்கச் சொல்ல உரிமை இல்லை என்று சொல்கிறார்கள். இன்று ரிபப்ளிக் டிவிக்கு நடந்தது நாளை வேறு எந்த ஊடகத்துக்கும் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.
வேறு ஊடகத்துக்கும் இது நடக்குமா என்றால் நடக்கும். ஊடகம் ஊடகமாக இருக்கும் வரை இது நடக்காது. ஆளுங்கட்சியின் கூலிப்படையாக செயல்பட்டால் இது நடக்கவே செய்யும்.
ரிபப்ளிக் டிவிக்கும், ஜிக்னேஷ் மேவானிக்கும் சொத்துத் தகராறா ? இல்லை. பரம்பரை பகையா ? இல்லை. கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா ? இல்லை. பின்னர் ஏன் ரிபப்ளிக் டிவியின் மைக்கை அகற்றச் சொல்கிறார் மேவானி ?
இதை மேவானி மட்டும் செய்யவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீதும் ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொன்னார். காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயரும், ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொன்னார். சசி தரூரும் வெளியேறச் சொன்னார். இவர்களுக்கெல்லாம் ரிபப்ளிக் டிவியோடு பெரும் தகராறு இருக்கிறதா என்ன ?
ரிபப்ளிக் டிவியின் விவாதங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒருவரும் பங்கேற்பதில்லை. அர்னப் கோஸ்வாமிக்கு பேட்டியளிப்பதில்லை. ஏறக்குறைய தலைநகர் டெல்லியில் இந்த தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஏன் இத்தனை பேர் ரிபப்ளிக் டிவியை புறக்கணிக்கிறார்கள் ? இப்படி ரிபப்ளிக் டிவி மீது வெறுப்பை கக்குபவர்கள் ஏன் இதர சேனல்களை இப்படி ஒதுக்குவதில்லை ?
பொதுவாழ்வில் இருப்பவர்கள் அனைத்து வகையான விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றையும் தாங்கிக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டவர்கள், இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள இயலாதவர்கள் அல்ல.
ஒருவரின் கொள்கைகளையோ, அவரது அரசியலையோ, அவரது நடவடிக்கைகளையோ விமர்சிப்பது என்பது வேறு. ஆனால், ஒருவர் மீது வன்மைத்தை மட்டுமே கக்குவது என்பது வேறு. அதை விமர்சனமாக பார்க்கவே முடியாது. அது வெறும் விஷம்.
ரிபப்ளிக் டிவியில் முதலீடு செய்துள்ளவர் யார் ? அதை நடத்தும் தலைமைச் செயல் அதிகாரி அர்நப் கோஸ்வாமியின் பின்புலம் என்ன என்பதை அறிந்தவர்களுக்கு இது வியப்பை தராது. பிஜேபி கூட்டணியின் கேரள கன்வீனராக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்ராஜீவ் சந்திரசேகரின் முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான். முதலீடு செய்த பிஜேபி சார்பு எம்பிக்கு விசுசாசமாக, 24 மணி நேரமும், மோடியின் புகழ் பாடுவதும், அதை விட முக்கியமாக, மோடியை எதிர்ப்பவர்களை தீவிரவாதிகளாகவும், சமுதாய விரோதிகளாகவும் சித்தரிப்பதை தனது முழுநேர பணியாக செய்து வருகிறது ரிபப்ளிக் டிவி.
இப்படி பச்சையாக, மோடி எதிர்ப்பாளர்களை மட்டுமே விமர்சிப்பது குறித்து அர்நப் கோஸ்வாமிக்கோ, ரிபப்ளிக் டிவி நிர்வாகத்துக்கோ எவ்விதமான அசூயையும் இல்லை. மோடியின் புகழைப் பாடுவது மட்டுமே எங்கள் வேலை என்பதை ஏறக்குறைய அறிவிக்காத வகையில் செயல்பட்டு வருகிறது.
ஜிக்னேஷ் மேவானி அரசியலில் இறங்கியது முதலே, அவரை இழிவுபடுத்தி அவரைப் பற்றி மோசமான செய்திகளை வெளியிடுவதை முழுநேர வேலையாக வைத்திருக்கிறது ரிபப்ளிக் டிவி. இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் மட்டும், ஜிக்னேஷ் மேவானி குறித்து ரிப்பப்ளிக் டிவி வெளியிட்ட தலைப்புச் செய்திகள்….
Jignesh Mevani’s ‘Yuva Hunkar Rally’ Turns Out To Be A Flop Show
After Mevani-Cong Link Exposé, Mevani Turns Violent
Alpesh Thakor Says Jignesh Mevani Should Control His Language; Takes Him On Over ‘street War’ Speech
Massive Protests Break Out In Mumbai After Police Cancels Jignesh Mevani’s Event
Video Captures Jignesh Mevani Demanding A ‘street War’ To Settle Caste Disputes
இது போன்ற தலைப்புச் செய்திகளை போடுவதற்கு ரிபப்ளிக் டிவிக்கு உரிமை உள்ளதா என்றால் நிச்சயம் உள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில், மேவானி சம்பந்தப்பட்ட வேறு செய்திகளே இல்லையா ? மேவானி, டெல்லி பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அதில் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் சந்திப்பை பெரும்பாலான ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. மறுநாள் அச்சு ஊடகங்களிலும் விரிவான செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததே காங்கிரஸ் கட்சி என்றும், அதற்கு பணம் செலுத்தியது ராகுல் காந்தியின் உதவியாளர் என்றும் செய்தி வெளியிட்டது ரிபப்ளிக். அந்த செய்தி முழுமையான பொய் என்பதை, அல்ட்நியூஸ் இணையதளம் அம்பலப்படுத்தியது. இணைப்பு.
இப்படி வன்மத்தோடு பொய்ச் செய்திகளை வெளியிடும் ஒரு ஊடகத்துக்கு ஜிக்னேஷ் மேவானி எதற்காக பேட்டியளிக்க வேண்டும் ? ரிப்பப்ளிக் டிவியின் மைக்கை அகற்றுங்கள் என்று அவர் சொன்னதில் என்ன தவறு ?
பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், தன்னைப் பற்றி வன்மத்தோடு பொய்ச் செய்தியை வெளியிடும் ஒரு தொலைக்காட்சி சேனலின் மைக்கை அகற்றுங்கள் என்று சொல்வதற்கு மேவானிக்கும் இருக்கிறதுதானே ?
கூடங்குள அணு உலை போராளி எஸ்பி.உதயக்குமார் வீட்டுக்கு ஒரு பத்திரிக்கையாளரை அனுப்பி, அவருக்கு தெரியாமல் ரகசிய கேமராவை வைத்து, அவர் வீட்டிலேயே உணவருந்தி, அவர் குடும்பத்தினரோடு உரையாடி, அப்போது அவர் பேசிய ஓரிரு வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு, கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் மிஷனரிகள் என்று செய்தி போடுவதற்கு பெயர் ஊடகமா ? கூலிப்படையா ?
அக்டோபர் மூன்றாவது வாரம் முதல், குஜராத் தேர்தல் பரபரப்பு ஊடகங்களையும் தொற்றிக் கொண்டது. அந்த நாள் முதல், ரிபப்ளிக் டிவி, தேர்தல் கவரேஜ் தொடர்பாக உருவாக்கி தொலைக்காட்சியில் வெளியிட்ட ஹேஷ் டேகுகளை பாருங்கள்.
#RahulHinduOrCatholic
#RahulMughalEmperor
#GujaratGaaliPolitics
#CongNeechPolitics
#PakCongMeeting
#RahulHinduTerrorCable
#SoldChaiNotNation
#HardikTapeTrouble
#ChurchVsNationalists
#CongChaiwalaAttack
#MoodysBacksModi
#HardikTapes
#GujaratSexScandal
#CongSlamsIndiaRise
#CongIgnoresPatel
#BJPVsPadmavati
#AnthemFirstNoCompromise
#PakHawalaUnderCongress
#BJPISISCharge
#ISISGujaratPlot
#GujaratTemplePolitics
#CongMandirLie
#BJPGujaratBlitzkrieg
#ModiMillionRally
#RahulTaxScam
#RahulBreaksCode
ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், அதில் போட்டியிடும் முக்கியமான எதிர்க்கட்சியை எதிர்த்து மட்டும் செய்திகளை வெளியிடும் நிறுவனத்துக்கு பெயர் ஊடகமா ? ஆளுங்கட்சியின் கைக்கூலியா ?
எதிர்கட்சிகள் மட்டுமல்ல. சிறுபான்மையினர், இடதுசாரிகள் என்று மோடியை எதிர்க்கும் அனைத்துத் தரப்பினரையும் சிறுமைப்படுத்தி பொய்ச் செய்திகளை வெளியிடுவதற்கு ரிபப்ளிக் டிவி தயங்கியதே இல்லை. இது குறித்த சில இணைப்புகள் இணைப்பு 1, இணைப்பு 2 இணைப்பு 3.
இப்படிப்பட்ட ஒரு பிஜேபியின் கூலிப்படையை வெளியேறு என்று மேவானி சொன்னதில் என்ன தவறு ?
அர்நப் கோஸ்வாமி செய்யும் தவறுக்கு, சென்னையில் உள்ள அதன் செய்தியாளர் எப்படி பொறுப்பாக முடியும். அவர் என்ன தவறு செய்தார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. மேவானி மைக்கை எடுக்கச் சொன்னது அர்நப்பை மனதில் வைத்துத்தான். அந்த தொலைக்காட்சியின் செய்தியாளரின் பெயர் கூட மேவானிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர் குப்புசாமியோ, ராமசாமியோ. அது பற்றி மேவானிக்கு கவலையில்லை. ரிபப்ளிக் டிவியின் மைக்தான் அவர் பிரச்சினை.
ரிபப்ளிக் டிவியின் அந்த இளம் செய்தியாளர் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது அவர்தான். ரிபப்ளிக் டிவி எத்தகைய செய்திகளை வெளியிடுகிறது, அதன் மீதான விமர்சனங்கள் என்ன என்பது அவர் அறியாதது இல்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட பணியே, எதையாவது செய்து சர்ச்சையை உருவாக்கு என்பது மட்டுமே என்பதை அவரே நன்றாக அறிவார்.
ரிபப்ளிக் டிவியில் செய்தியாளராக பணியாற்றினால், இத்தகைய அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். ரிபப்ளிக் டிவியின் மைக்குகளுக்கு பதில்கள் வழங்கப்படாது. கதவுகள் அடைக்கப்படும் என்பதை அந்த இளம் செய்தியாளர்தான் உணர வேண்டும்.
சென்னையில் தந்தி டிவியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஹரிஹரன் ரிபப்ளிக் டிவியில் பணியில் சேர்கிறார். அவர் அந்த வேலை பிடிக்காமல் ராஜினாமா செய்கிறார். அவர் ராஜினாமா என்று சொன்னதும், ராஜினாமாவை வாபஸ் பெறாவிட்டால், உன் பெற்றோரை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டும் நபர்தான் அர்நப் கோஸ்வாமி. இணைப்பு
ரிபப்ளிக் டிவி என்ற பிஜேபியின் கூலிப்படையை இன்று ஜிக்னேஷ் மேவானி வெளியேறச் சொன்னது முழுக்க முழுக்க நியாயமான செயலே. அதற்கான எல்லா உரிமையும் மேவானிக்கு உண்டு. அவரின் பேட்டியை புறக்கணித்து, பத்திரிக்கையாளர் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்ததாக கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள். இது பத்திரிக்கையாளர் ஒற்றுமையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் உயர்த்திப் பிடித்ததல்ல. ஒரு கூலிப்படையின் அராஜகத்தை உயர்த்திப் பிடித்த செயலே ஆகும்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து “நான் பல பத்திரிக்கை சந்திப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ரிபப்ளிக் டிவி செய்தியாளர்கள், யாரையுமே பேச விடாமல், உரத்த குரலில் கத்துவார்கள். இது போல உரக்க கத்தி, சம்பந்தப்பட்டவரை கோபப்படச் செய்து, அதன் மூலம் தங்கள் சேனலின் டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு விடப்பட்ட பணி. சென்னையில் தங்கள் ஒற்றுமையை காண்பித்த பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பையே ஹைஜாக் செய்யும் ரிப்பப்ளிக் டிவியையும் வெளியேறச் சொல்ல வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் இது எங்கேயும் நடந்ததை நான் பார்க்கவில்லை. இங்கேதான் பிரச்சினை இருக்கிறது. ரிபப்ளிக் டிவிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள் ஊடக அறம் கொன்றழிக்கப்படுவதற்கும் ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். இதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்றார்.
சத்தியமான வார்த்தைகள். ரிபப்ளிக் டிவிக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல், ஊடக அறத்தை கொன்றழிப்பதற்கு ஆதரவாக கொடுக்கப்படும் குரலேயன்றி வேறல்ல.
தொலைக்காட்சிப் பத்திரிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். குஜராத்தின் வட்காம் தொகுதியிலோ, அல்லது இந்தியாவின் எந்தப் பகுதியிலுமோ, எந்த வாக்காளரும் ரிபப்ளிக் டிவியைப் பார்த்து வாக்குகளை முடிவு செய்வதில்லை.
உங்களுக்குத்தான், உங்கள் டிஆர்பிக்குத்தான் மேவானி தேவை.
dinamalar
mevaani is not national leader ..he is only m l a …..why do worry
i think 90% of media control by rss and bjp allies so total india going on…….as per suprem court judges result
mutta payale most of the media controlled by anti hindus only. not by rss and bjp.
Savukku-I really appreciate yr work.I had stopped watching RTV days after its inception. Yr analysis cent percent correct. My moral support is fully with you. God bless you.
Republic TV playing dirtiest politics. A. GOSWAMI biggest liar of the century. No one can bell this dirty cat. This man spit venom on Zakir naik, he could not even attend his father’s funeral. Now every thing turns out to be false propaganda. This dirty Arnab is the fit case to be banned from Indian media. People should shun Republic TV and no one participate his dog shows
Well said..
unbiased detail analysis, well said savukku ! Inshort, Republic TV shoud be renamed as Unrepublic !
Hahaha .. What about you man? You are supporting only Congress, DMK and Commies only. You change sides often. What integrity do you have? Do you and Modi have any personal issues. No. You will say that you are doing your job. Why should Republic TV not do its job. When channels like NDTV and India Today openly criticize Modi, that is Pathrikkai Sudandiram for you.. When SUN TV did a fake video on Karunanithi’s arrest it is pathrikkai suthantiram for you .. When all parties in TN have their own channels, SUN, Jaya, Kalaingar, Makkal, Vaanavil, Vasanth, Mega all have political affiliations .. That’s all fine for you .. only Republic TV is not fine because they support BJP .. Nalla Nyaamanna … Ungallukku vantha ratham … mathavangallku vantha thakalli chatney .. Intha mathri Jigneshuku aakumnu ethirparkaley .. Shock for you .. So venting out .. BTW, your north indian journalists and friends are appreciating the tamil journalists for this .. hahahaha .. Paavam avarey conpuse ayitaru ..
நிகழ்வின் முழுமையான பதிவாக அமைந்து.. இரு தரப்புக்கும் ஆராய்ந்துள்ள பதிவு.
“இது பத்திரிகையாளர் ஒற்றுமையல்ல.. ஊடக அறம் கொன்றொழிக்கப்படுவதன் அடையாளம்!” எனும் வார்த்தை சிந்திக்கத்தக்கது.
ஊடகமா ? கூலிப்படையா ?
ஊடகமா ? ஆளுங்கட்சியின் கைக்கூலியா ?
அந்த தொலைக்காட்சியின் செய்தியாளரின் பெயர் கூட மேவானிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
Note :-
Not only Republic , most of the national medias is controlled by Raid hai … Hide hai and Co.
90 percent of the National media is directly and indirectly controlled by Raid hai … Hide hai and co.
The top media management heads are directly contacted and some paid too in many ways.
( bone thrown to dog )
Most medias are in a race now how to catch the bone.
Some of Chota medias has no other way to bend themselves towards the strong demand and power controlled mussels.
Also copy cat journalism have increased like cancer. “What they do is what we do” is the mantra for many third line medias since they don’t have brain and even don’t care for their own stuffs and individuality. They don’t know where they are and they simply run shows what mainstream or first two channels do.
Rather than human interest stories And news stuffs ….. Many medias have now started to do creative way stories just to impress the raid hai … hide hai and co. In fact now it has been made as a competition to impress that Co…!
Those who go neutral face financial problem due to muscle and top power. Revenue will be made to cut from many directions so that they will face recession ( artificial ). Despite of those suffocation still very very few breath air in neutral way.
Raid Haiii …. Hide Haiiii !!!!!
(Think this should be made as a film)
மேவானி மாதிரி மாற்றவர்களும் Republic TV க்கு செருப்படி கொடுக்க வேண்டும்
Nakkeeran ?