பொம்பளைன்னா பொறுமை வேணும்
அவசரப் படக் கூடாது
அமைதி வேணும்.
அதிகாரம் பண்ணக் கூடாது
கட்டுப்பாடு வேணும்
இப்படி கத்தக் கூடாது
பயபக்தியா இருக்கணும்
இப்படி பஜாரித்தனம் பண்ணக் கூடாது
மொத்தத்துல பொம்பளை பொம்பளையா இருக்கணும்
என்ற வசனத்தை ரஜினி படையப்பா படத்தில் பேசும்போது, தியேட்டரில் விசில் பறக்கும். ரசிகர்கள் ஏகாந்தத்தை தொட்ட உச்சியில் எழுந்து ஆர்ப்பரிப்பார்கள்.
படத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்படும் மற்றொரு வசனம்,
அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்,
அதிகமா கோவப்படுற பொம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.
இந்த வசனங்களை, மிகவும் அதிகமாக திமிரும், ஆணவமும் கொண்ட ரம்யா கிருஷ்ணன் என்ற நீலாம்பரியைப் பார்த்து ரஜினி பேசுவார்.
இந்த வசனத்துக்கும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தியேட்டர் நாற்காலிகளின் மேலேயே ஏறி குதித்தார்கள். படையப்பா, ரஜினியின் திரை வாழ்க்கையில், ஒரு பெரிய வெற்றி மகுடம். பிரம்மாண்டமான வெற்றியை அடைந்த படம்.
1999ல் இந்தத் திரைப்படம் வெளியாகி திரையில் பார்த்தபோது, அது வரை, ரஜினி ரசிகராக இருந்த எனக்கு ஒரு வித அசூயையை இது உருவாக்கியது. மனதை சங்கடப்பட வைத்தது. என்னைச் சுற்றி ரசிகர்கள் உற்சாக மிகுதியில் பீறிட்டு உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாலும் நான் ‘என்ன மாதிரியான வசனம் இது’ என்று முகம் சுளித்ததை என்னால் இன்றும் நினைவு கூற முடிகிறது.
அந்தக் கோபம் கூட, ஒரு திரைப்படம், அதில் வரும் வசனம் என்று நாளடைவில், சுரத்து குறைந்து போனது.
அன்று படையப்பா படத்தை பார்த்தபோது எனக்கு ஏற்பட்டடு ஒரு வித அசூயை உணர்வு. சங்கடம். எரிச்சல். போன்ற உணர்வுகளே. ஆனால் இதை எழுதும்போது, கடுமையான கோபத்தில் எழுதுகிறேன். நம்மை ஆள்பவர்களும், ஆள வேண்டும் என்று நினைக்கும் நடிகர்களும், ஒரே மனோபாவத்தில் இருக்கிறார்களே என்ற கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வியாழனன்று மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து பொய்யையும் புரட்டையுமே பேசி வரும் நரேந்திர மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நரேந்திர மோடி பேசத் தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் போட்டார்கள். மோடியின் உரை முடியும் வரையில் கோஷங்கள் போடப்பட்டுக் கொண்டு இருந்தன. அந்த கோஷங்கள் மோடியை உச்சபட்ச கோபத்துக்கு கொண்டு சென்றாலும், ஒரு கைதேர்ந்த நடிகரான மோடி, அதை கண்டு கொள்ளாத வகையில் தனது பொய்களை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். அவ்வாறு ஒரு பொய்யை மோடி கூறுகையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ரேணுகா சவுத்ரி, சிரிக்கத் தொடங்கினார்.
அதைக் கண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உங்களுக்கு என்ன பிரச்சினை. ஏதாவது பிரச்சினை என்றால் மருத்துவரைச் சென்று பாருங்கள் என்றார். உடனே பெருந்தன்மையாக பேசுவது போல குறுக்கிட்ட மோடி, சபாநாயகர் அவர்களே. அவரை எதுவும் சொல்லாதீர்கள். ராமாயண சீரியலுக்கு பிறகு ஒரு பெண் இப்படி சிரிப்பதை இப்போதுதான் நாம் காண்கிறோம் என்று கூறினார்.
உலகத்திலேயே அப்படியொரு நகைச்சுவையை கேட்டதே இல்லாதது போல, பிஜேபியின் அமைச்சர்களும், எம்பிக்களும், மேசையை உரக்கத் தட்டியதோடு உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தனர். அதிலும் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சிரித்த சிரிப்பு இருக்கிறதே. அதைக் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏற்பட்ட கோபம் இப்போதும் தணியவில்லை. அந்த கணத்தை ஆனந்தமாக அனுபவித்த மோடி அப்போது சிரித்த சிரிப்பு எப்படி இருந்தது தெரியுமா ?
கமல் நடித்த விக்ரம் படத்தில், பெண் விஞ்ஞானியாக வரும் லிஸி, திமிராக பேசி, இந்த காலத்துல ஆணும் பெண்ணும் சமம் என்று கூற உடனே கமல், நாங்க வெயில் காலத்துல சட்டையே இல்லாம சுத்துவோம், நீ சுத்துவியா என்று கேட்பார். லிஸியால் பதில் சொல்ல முடியாமல் விழிப்பார். அந்தக் கதையை குமுதத்தில் தொடராக எழுதிய சுஜாதா, குமுதத்தில் எழுதியது இன்னமும் மோசமான ஆபாச ரகம். அப்படி ஒரு கேள்வியை கேட்டு, ஒரு பெரும் வெற்றியை பெற்றதைப் போல சிரிக்கும் ஒரு ஆணின் ஆபாச சிரிப்பாகத்தான் மோடியின் சிரிப்பு இருந்தது.
பெண் என்பவள், ஆணுக்கு எப்போதும் அடிமையானவள், அடக்கம் என்பது அவளுக்கு மட்டுமே உரியது என்ற மனோபாவம் நம்மை ஆளும் இவர்களிடம் ஊறிப்போய் இருப்பதைக் கண்டு குமுறுவதா, கதறுவதா என்று எனக்குப் புரியவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் நம்மை ஆளுகிறார்கள் என்பதும், இவர்கள் பெண்ணுரிமை குறித்து வாய் கிழிய பேசுபவர்கள் என்பதும் இன்னும் வேதனையானது.
குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும், ஒரு கண்ணியமிக்க பதவியில் உள்ள வெங்கையா நாயுடு, ரேணுகாவைப் பார்த்து, அவர் சிரிப்பதை குறிப்பிட்டு, உங்களுக்கு பிரச்சினை என்றால் மருத்துவரைப் பாருங்கள் என்கிறார். ரேணுகா மருத்துவரை பார்க்க வேண்டுமென்றால் மோடி உதிர்த்த கேவலமான ஜோக்குக்கு சிரித்த ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்களும், எம்பிக்களும், இதை விட தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா ?
“பொம்பளை சிரிச்சா போச்சு. பொகையிலையை விரிச்சா போச்சு” என்பது கிராமப்புறங்களில் சகஜமாக உலவும் பழமொழி. நான் வளர்ந்த கிராமப் பகுதியில் இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. என் வீட்டிலேயே இதைக் கேட்டுத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். அப்போதே எனக்கு மிகுந்த எரிச்சல் ஏற்படும். ஏன் பெண் சிரிக்கக் கூட கூடாதா ? நகைச்சுவை உணர்வு கூடவா ஆண்களுக்கே உரித்தானது என்று எனக்கு தோன்றும். ஆனால் புராதன காலத்திலிருந்து வெளிவராத என் குடும்பத்தில் என்னால் என்றுமே எதிர்த்துப் பேச முடிந்ததில்லை.
பள்ளியில், “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினின் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை என்று கும்மியடி” என்று பாரதியார் பாடலை படித்து விட்டு வீட்டுக்கு வந்தால் நிலைமை தலைகீழாக இருக்கும். இப்போதே இப்படி இருக்கிறதென்றால், பாரதியார் அந்தப் பாடலை பாடிய காலத்தில் பெண்களில் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
சிரித்தால் மருத்துவரைப் பார் என்ற குடியரசுத் துணைத் தலைவரின் அறிவுரையும், பிரதமரின் ஏளனக் கருத்தும், அதைத் தொடர்ந்த எக்காளச் சிரிப்பும் ஒரு மாமன்னரின் அவையில், தவறிழைத்த ஒரு பெண்ணைப் பார்த்து சிரிக்கும் 13ம் நூற்றாண்டுக் காட்சியை நினைவு படுத்தின.
இந்தியாவை கட்டமைத்த சிற்பி என்று இன்றளவிலும் பெரும்பாலானோரால் ஒப்புக் கொள்ளப்படுபவர் நேரு. அந்த நேருவை 50 ஆண்டுகள் கழித்து இழித்துப் பேசுகிறார் ஒரு பிரதமர். அதை கைகொட்டி வரவேற்று மேசையை தட்டுகிறார்கள். ராமாயணம் சீரியலில் வரும் சூர்ப்பனகையை ஒப்பிட்டு, தங்கள் சக எம்பியான ஒரு பெண்ணை இழித்துப் பேசுகிறார். இடி விழுந்தது போல சிரிக்கிறார்கள்.
ரேணுகா சிரித்தது, காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய ஆதார் திட்டத்தை உருவாக்கியதே பிஜேபி அரசு என்பது போல கூசாமல் ஒரு பொய்யை மோடி உரைத்தபோதுதான். அவர் சிரித்தது, அவை விதிகளை மீறிய ஒரு செயலாகவே இருக்கட்டுமே. ஆளுங்கட்சியான பிஜேபி ரேணுகா சவுத்ரி மீது மிக எளிதாக உரிமை மீறல் நடவடிக்கை கொண்டு வந்திருக்க முடியும். அவர் மீது ஒரு கண்டனத்தை பதிவு செய்திருக்க முடியும். ஆனால் சூர்ப்பனகையோடு ஒப்பிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பகடி செய்வது என்ன விதமான ஒரு இழி செயல் ?
காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருந்த காலத்தில், மாநிலங்களவையிலும் மக்களவையிலும் பிஜேபி உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசியதில்லையா ? வேறு யாரையும் பேச விடாமல் அராஜகம் செய்தது இல்லையா ? அப்போதெல்லாம் எந்த சபாநாயகரும் அப்படி செய்த பிஜேபி உறுப்பினர்களைப் பார்த்து மருத்துவரைப் பாருங்கள் என்று சொன்னது கிடையாது. எந்த பிரதமரும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சீரியலை சுட்டிக் காட்டி இழிவாக பேசியது கிடையாது.
ஒரு பெண் சிரித்த உடனேயே ராமாயணத்தை உதாரணத்துக்கு எடுத்து, அவரை சூர்ப்பனகையோடு ஒப்பிடும் ஒரு நபருக்கும், என்னைப் பார்த்து சிரித்து விட்டாள் என்பதற்காக அவள் புடவையை உருவுகிறேன் என்று உருவிய துச்சாதனனுக்கும் என்ன வேறுபாடு ? அது புனைவாக இருந்தாலும், அந்த புனைவை உண்மையெனக் கொண்டாடும் நபரின் மனநிலை இத்தனை கேவலமாக இருப்பதும், அந்த நபர், நாட்டை ஆளுவதும் எத்தனை வருத்தத்திற்குரிய விஷயம் ?
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை அவர் ஆழ் மனதில், பிற்போக்கு எண்ணங்களும், அடிமை சிந்தனைகளும் எப்படி ஊறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. விநாயகரின் தலையில் யானையின் தலையை பொருத்தி அந்த காலத்திலேயே ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜன் அறுவை சிக்சை செய்துள்ளார் என்று பேசும் ஒரு நபரை பிரதமராக்கினால் அவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.
சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தலைமையில் 10 ஆண்டுகள் ஆட்சி நடந்தும் கூட, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியவில்லை என்பதன் காரணம் இப்போது புரிகிறதா ? சிரிக்கும் பெண்களை சூர்ப்பனகைகளாக வர்ணிக்கும் ஒரு நபருக்கு ஆரவாரம் செய்து உற்சாகமூட்டும் கட்சியினர் பாராளுமன்றத்தை நிறைத்திருக்கையில் இது எப்படி நிறைவேறும் ?
சில ஆண்டுகளுக்கு முன்னால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பெண்கள் எப்படி உடையணிய வேண்டும் என்றும், அவர்கள் படி தாண்டக் கூடாது என்றும் பேசியிருந்தார். அதிலிருந்து வந்தவர்தானே இன்றைய பிரதமர் ?
ராமாயணத்தில், ராவணனின் தங்கை சூர்ப்பனகை, லட்சுமணனைப் பார்த்து சிரித்ததால், அவள் மூக்கை அறுத்தார் ராமன். திருதிராஷ்டிரரின் மனைவி கைகேயி சிரித்து சாம்ராஜ்யத்துக்கே அழிவை தேடித் தந்தாள். துரியோதனைப் பார்த்து பாஞ்சாலி சிரித்ததால், அவள் புடவையை உரிந்தான். இவையெல்லாம் புராணக் கதைகள். இந்தக் கதைகளை இப்போதும் நாம் படிக்கலாம். அந்த காலத்தில் நிலவிய நம்பிக்கைகள், சூழல்களை வைத்து எழுதப்பட்ட கதைகள் இவை.
இந்த பாத்திரங்களை கடவுளாக கும்பிடுபவர்களும், இதை உண்மை என்று நம்புபவர்களும் எப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பார்கள் ? சிரிக்கும் பெண்களை எந்த வார்த்தையை பயன்படுத்தியும் இழிவு செய்ய தயங்க மாட்டார்கள்தானே ?
இப்படிப்பட்டவர்கள், நாடெங்கும் வியாபித்திருக்கும் இச்சூழலில், பொம்பளைக்கு அடக்கம் வேணும் என்று பேசும் மற்றொரு நபர் தமிழகத்தை ஆள நினைப்பது எத்தகைய சாபக்கேடு ?
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத்தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ
என்ற பாரதியின் வரிகளைத்தான் இவர்களுக்கு மேற்கொள் காட்ட விரும்புகிறேன்.
கண்ணுக்குத் தெரியாத, யாருமே பார்த்திராத ஆண்டாளை வைரமுத்து இழித்துப் பேசிவிட்டார் என்று கச்சை கட்டிக் கொண்டு 25 நாட்களாக போராடினர் பிஜேபியினர். ஆண்டாள் என்ற பெண் ஆழ்வாரின் மானங்காக்க வரிந்து கட்டியவர்கள், உயிரோடிருக்கும் ஒரு பெண்ணை ஒரு பிரதமர் சூர்ப்பனகையோடு ஒப்பிடுகையில் சிரிப்பதன் பின்னணி புரிகிறதா ? கண்ணுக்கு தெரியாத பெண் தெய்வங்களின் மானத்தை காப்பார்கள். உயிரோடு இருக்கும் ஒரு கவிஞரின் தாயை தாசி என்று மேடை போட்டு பேசுவார்கள். பாராளுமன்றத்தில் சிரித்த ஒரு பெண்ணை சூர்ப்பனகை என்று இழித்துப் பேசும் பிரதமரையும் கொண்டாடுவார்கள்.
இவர்கள் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கான மூலம் மனுதர்மத்திலிருந்துதான் வருகிறது என்பதை பெண்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
என் மனதில் இன்னமும் ஆத்திரம் கனன்று கொண்டுதான் இருக்கிறது. மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று என் மனது சொல்கிறது. ஆனால் நான் கற்ற கல்வி என்னை பண்படுத்தி உள்ளது.
இவர்களை புரிந்து கொள்ளுங்கள்.
என் மனதில் உள்ள கோபத்துக்கு வடிகால் அமைத்துக் கொடுத்த சவுக்கு தளத்துக்கு என் நன்றிகள்.
நாச்சியார்.
SAVUKKU WAS (!) REAL SAVUKKU BEFORE. IT LOST IT’S CREDIBILITY AND TRUEST WORTHY. NO NEUTRALITY AND TOTAL BIASED
How Jayalalitha was handled in Assembly when she was opposition, by Karunanithi gang. Forgot? Also you have forgotten about Satyavaani muthu episode, when she asked ” where is Dravida naadu?” Annadurai said “Paavadaiyai avizhthu paarungal, Dravida naadu therium” Forgot? The rogue party DMK brought down the respect of woman. Leaders, who have One Manaivi, One Thunaivi, One Inaivi, no respect they give to women. Forgot?
Youth team leader’s episodes on women can run for few years, if written as Thodarkathai in a weekly.
அதுக்கு இந்த மீடியாவும் எப்படி தலைப்பு போட்டு இருக்கான் பாருங்க… “Modi’s amasing sense of humour”.. இவர் எல்லாம் தாயை மதிக்கிறார்னு சொல்றான்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்ககேடானவர்கள் என உளறிய காஞ்சி சங்கரனை ஆராதிக்கும் சங்கிகளின் முன்பு சத்தமிட்டு ஒரு பெண் சிரித்தால் சூர்ப்பனகை என்று மட்டுமல்ல வேறு பட்டமும் கட்டுவார்கள்,சனநாயகத்தின் கோயிலான பாராளுமன்றத்திலேயே நாகரீகமற்று பெண்களை இவ்வளவு தரம்தாழ்ந்து விமர்சிக்கும் பிரதமரை பெற்றதற்கு இந்திய தேசம் வெட்கி தலைகுனியவேண்டும்.
This matter is unnecessary one
unnessary article
பாரதியே முரண்பாடு உள்ள கவிஞர்தான் அவர் மனைவி செல்லம்மாவை அடிமையாக நடத்தியவர்தான் பெண்களுக்கான உரிமை ஆண்களிடம் எந்த காலத்திலும் கிடைக்கும் என்பதும் ஒருவித மூடநம்பிக்கையே.
Who said Bharathi treated his wife as a slave.If you do not know about Bharati through his poetry,at least see the film “Bharathi”:where Bharathi places his hands on his wife’s shoulders and walks amidst the scornful look of his neighbours.In his days,wives would walk at least 5 feet behind their husbands in public.
Ms. Nachiar, Where did you go when the same Renuka Chaudry made a 10 year old girl stand and watch what they eat? Whats your opinion about the Dravidian leaders who are against manudharma but married 3 wives?
ராமாயணத்தில், ராவணனின் தங்கை சூர்ப்பனகை, லட்சுமணனைப் பார்த்து சிரித்ததால், அவள் மூக்கை அறுத்தார் ராமன். திருதிராஷ்டிரரின் மனைவி கைகேயி சிரித்து சாம்ராஜ்யத்துக்கே அழிவை தேடித் தந்தாள். ????????? Please read Ramayana and quote from that…. Don’t know whether I have made a comment against a woman 🙂
இந்த விசயத்தில் எனக்கு ரேனுகா சவுத்ரி மீதே கோபம் தான். மோடியின் பேச்சை இடை மறித்து ” உங்களுக்கு பெண் என்றாலே பயம் தான், அது சூர்ப்பனகையாயினும் சரி அல்லது சீதையாயினும் சரி ” என்று கூறி அசிங்கபடுத்தியிருக்க வேண்டும். எவ்வளவு திமிர் பேச்சு. ஆணாதிக்க மனப்பான்மை ஒழிய வேண்டும் எனில் இப்படி பட்ட பொது இடத்திலேயே பதிலடி கொடுக்க வேண்டும். நடிகர் ரஜினிக்கும் இதே பதில் தர வேண்டும்.
very good and sensible article.
`WHAT MODI said is correct on AADHAR and I’m opposing it since then. That time the Deputy PM Shri Advaniji proposed some kind of citizen identity card for all as in US the social Security Number type.
Mathapadi rendu peru siriccathaiyum NAN parkkalai…. aanaa renuka siricca oruvelai soorppanakai maathiri irundhalum irukkalam…..appo ravi shankar prasad thaan mookkarukkum lakshmananaaaaa…. adhu konjam over….
then why did BJP opposed it when congress brought AADHAR ??
vanmam koppalikkum pathivu.Renukavirku kaasu vaankaatha vakilkal niraiya iruppathu thelivaakirathu.
ஓ…பெண்ணைப்பற்றி. …அதுவும் ரேணுகா போன்ற நாடறிந்த மக்களவை உறுப்பினரின் பாதுகாவலர்கள், புனிதர்கள் பிரதமரை மட்டும் தரக்குறைவாக விமர்சிப்பதேன்?!
The ruling government has proved once again that they have NO TOLERANCE, good Article Mr.Shankar.
ராமாயணத்தில், ராவணனின் தங்கை சூர்ப்பனகை, லட்சுமணனைப் பார்த்து சிரித்ததால், அவள் மூக்கை அறுத்தார் ராமன். திருதிராஷ்டிரரின் மனைவி கைகேயி சிரித்து சாம்ராஜ்யத்துக்கே அழிவை தேடித் தந்தாள். ????????? Please read Ramayana and quote from that….
மனைவி வாடகை பாக்கி வைத்தால் கணவனை குறை கூறும் சமூகம் தான் நமது சமூகம். இதில் பெண்களுக்கு எங்கே தனித்துவம் உள்ளது ?
I loose my trust by savuku blog. Bcaz of this type of articles published and what is the motive of it. Everyone know what’s happened at parliment then why justifying
A Prime Minister shall maintain a minimum dignity for the position. He is not speaking as MODI. He speaks as a PM. So, no one can justify that he can speak anything as he likes. The reaction of opposition MP may be questionable. But, it does not mean that what the Vice president told is right. In general both of them are not fit to be in their respective positions.
Modi’s comment apart, was Renuka justified in her [disruptive] activity?
That she aims at cornoring rahul’s attention to get nominated to RS again
is a justified doubt.
If Renuka can act so to irritate Modi, the rebuttal is but natural.
நாச்சியாரின் கோபமும், குமுறள்களும் நியாயமனவையே !
சவுக்கு இந்த கட்டுரையை பிரசுரிக்கும் அதே நேரத்தில் அவருடைய கட்டுரையை சாதாரணமாக விமர்சித்து (என்னை போன்று) கருத்திட்டவர்களுக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தன என்பதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் தனது இணையத்தில் வரும் கருத்துக்களையே ஒரு தர பரிசோதனைக்கு உட்படுத்த விருப்பம் இல்லாதவர் மற்றவர்களுக்கு அதை போதிப்பது சற்று வியப்பாக உள்ளது. எனது இந்த கருத்தை நம்பாதவர்கள், சவுக்கு எழுதிய “பாவம் இவள் ஒரு பாப்பாத்தி…..” என்ற தலைப்பில் வந்த கட்டுரையை தயை கூர்ந்து படிக்கவும்! இந்த கடைசி வேண்டுகோள், இந்த பதிவை இட்ட நாச்சியார் அவர்களுக்கும் சேர்த்துதான்.
What would be Ms. Naachiyar’s reaction that blog by Savukku?
Labelling a woman by her caste is, in no way, different from comparing another one with a mythical character!!
இந்திய இறையாண்மையை, இந்துக்களின் மனதை புண்படுத்தும் ஒரு கீழ்த் தரமான, அவசியமில்லாத கட்டுரை. இது உங்களுக்கு ஒரு இந்து நாட்டை ஆள்கிறானே என்ற வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் அக்னி வராத்தைகள்
அப்ப பெண்ணின் இறையாண்மைக்கு எதிராக தெரியவில்லையா?
“ராமன். திருதிராஷ்டிரரின் மனைவி கைகேயி சிரித்து சாம்ராஜ்யத்துக்கே அழிவை தேடித் தந்தாள். ..” – ????????????????
Don’t take life so seriously, not good for health. Just laugh out and ignore. This is after all politics.
இயேசும், அல்லாவும் மட்டும் உங்கள் கண்களுக்கு தெரிந்தனரா?!
ஏசு, அல்லா தெரிந்த கண்களுக்கு பெண் என்பவள் யாரென்று தெரியாமல் போனது ஏன்?
You are blindly supporting congress and blindly opposing BJP. This article is written to soothing the congress and other religion people…good work. Thatstamil and you are getting money from missionaries to run your life…
Wonderful. I respect your feelings and admire the way your thoughts are penned.
nee oru mafaia
அருமையான பதிவு
இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரதமர் பொய் தான் சொல்லுகிறார். எல்லோருக்கும் தெரியும். அது என்ன க்கெக்கேபிக்கேவென்று சிரிப்பு? தேவை இல்லை. இந்த கட்டுரையும் தேவை இல்லை. நான் பா.ஜா.பாவும் இல்லை.