பூதலூர். தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இறங்கி வேறு பேருந்துக்கு மாறி பூதலூர் அடைய வேண்டும். விவசாயம் செழித்த ஊர் அது. சோழ மண்டலத்தில் இருந்த ஊர். ஒரு புறம் ஆனந்தக் காவிரியும், மற்றொரு புறம் வெண்ணாறும், மற்றொரு புறம் புத்தாறும் பாய்ந்து அந்த மண்ணையும் மக்களையும் செழிப்பாக்கியிருந்தன. 140 வருடங்களுக்கு முன்பே, பிரிட்டிஷார் ரயில் நிலையம் கட்டியதால் தனக்கென வரலாற்றில் அந்த ஊர் ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தது. தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையில் அமைந்திருந்தது.
பாலகிருஷ்ணன் விடு எங்கே இருக்கிறது என்று கேட்டதும், பேங்கில வேல செஞ்சி ஓய்வாயிட்டாரே அவரா என்று கேட்டு, கூடவே வந்து பாலகிருஷ்ணன் வீட்டில் விட்டார் ஒரு முதியவர். பாலகிருஷ்ணன் வீடு போய்ச் சேர்வதற்குள், நீங்கள் யார், எதற்காக அவரைப் பார்க்க வந்துள்ளீர்கள், உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்று ஏகப்பட்ட விசாரணைகள். நகரத்துக்கும் கிராமத்துக்கும் இதுதான் வேறுபாடு. சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து, ஒருவரின் வீட்டு முகவரியை கேட்டால், ஒன்று தெரியாது என்று சொல்லுவார்கள். இல்லையென்றால், அந்த கட்டிடம் என்று கையை காண்பித்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால் கிராமங்களில் இப்படியல்ல. குலம் கோத்திரம் வரை கேட்பார்கள். அது அடுத்தவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் நடவடிக்கை என்றும் பார்க்கலாம். நம்ம ஊர்காரரை தேடி வந்திருக்கிறாரே. என்ன ஏது என்று விசாரித்து தெரிந்து கொள்வோம் என்பதாகவும் இருக்கலாம். அவர் ஒரு கிராமத்து மனிதருக்கே உரிய இயல்போடுதான் விசாரித்தார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
பாலகிருஷ்ணனின் வீடு பாதி தளமாகவும், பாதி ஓடாகவும் இருந்தது. வாசலில் பாலகிருஷ்ணன், சியாமளா என்று இரண்டு பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காம்பவுன்ட் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. கிராமத்தினருக்கே உரிய கலரில், சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. வந்தவர்களை அமரவைத்துப் பேச திண்ணை இருந்தது. ஒரு காலத்தில் பச்சை நிற பெயின்ட்டோடு இருந்த கதவு, தன் நிறத்தை இழந்து வெளுத்துப் போயிருந்தது.
“இதுதாம்பா வீடு” என்று காண்பித்து விட்டு அந்தப் பெரியவர் சென்று விட்டார். கதவு லேசாகத் திறந்திருந்தது. கதவை ஒரு முறை தட்டி விட்டு “சார்“ என்று அழைத்தேன்.
வேட்டி கட்டியபடி ஒரு உருவம் வந்தது. அவர்தான் பாலகிருஷ்ணனாயிருக்க வேண்டும். வங்கியில் ஃபேர்வெல் பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தில் இருந்ததை விட முதுமையடைந்திருந்தார். ‘ஓய்வு பெற்று ஒரு வருடம் கூட ஆகியிருக்காதே. அதற்குள் ஏன் இத்தனை தொய்வு இவரிடம்’
“சார் வணக்கம்“
“வணக்கம் தம்பி. உக்காருங்க”
“சார் என் பேரு வெங்கட். உங்களுக்குப் பிறகு அந்த ப்ரான்ச்சில மேனேஜரா ஜாயின் பண்ணிருக்கேன்.
“ரொம்ப சந்தோஷம் தம்பி. நான் ரிட்டயர் ஆயி ரெண்டு வருஷம் ஆகுது. அவ்ளோ நாளாவா இருக்கீங்க ?
“ஆமாம் சார். ரொம்ப நாளா வேகன்ட்டாவே வச்சுருந்தாங்க. அப்புறம்தான் நான் ஜாயின் பண்ணேன்.
“என்ன சாப்ட்றீங்க தம்பி… இருங்க வர்றேன்“ என்று என் பதிலுக்குக் காத்திராமலேயே உள்ளே எழுந்து சென்றார். இரண்டு நிமிடங்களில் வெளியே வந்தார்“
“சொல்லுங்க தம்பி. என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க.. நான் ரிட்டயர் ஆகும்போதே எல்லா பேப்பர்ஸையும் ஒப்படைச்சுட்டேனே. ஏதாவது மிஸ் ஆகுதா ?
இது அரசு ஊழியர்களுக்கே உரிய இயல்பான குணம். ஓய்வு பெற்றபிறகு, அனைவரும் மறந்து விடுவார்கள் என்ற எண்ணம் மனதிலேயே பதிந்திருக்கும். அப்படி தேடி வந்தால், அய்யய்யோ, ஏதோ தப்பு செய்து விட்டோம். நமது பென்ஷனுக்கு ஆபத்து என்றுதான் உடனடியாக தோன்றும்.
“அய்யய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.”
“முதல்ல உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் சார். உங்க அனுமதி இல்லாம உங்க பெர்சனல் லாக்கரை திறக்க வேண்டியதாப் போச்சு.”
லாக்கர் என்றதுமே அவர் முகத்தில் இருள் கப்பியது. சற்றே மருண்டு என்னைப் பார்த்தார்.
நானே தொடர்ந்தேன். “திடீர்னு ஆர்.கே என்டர்பிரைசஸ் லோன் பைல் வேணும்னு விஜிலென்ஸ் ஆபீஸ்லேர்ந்து கேட்டாங்க சார். எல்லா இடத்துலையும் தேடிப்பாத்தேன். கிடைக்கலை. அப்புறம்தான் உங்களுக்கு ஒரு பர்சனல் லாக்கர் இருக்குதுன்னு சொன்னாங்க. வேற வழியே இல்லாம அதை ஓப்பன் பண்ண வேண்டியதாப் போச்சு. அதுல அந்த பைல் தவிர வேற எதுவுமே இல்லை சார்“
எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். “அதான் உங்களுக்கு வேற ஏதாவது டீடெயில்ஸ் தெரியுமான்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன் சார்“
“அதான் பைல் கிடைச்சுடுச்சுல்ல. அப்புறம் ஏன்பா என்னைத் தேடி வந்த ? நான் ரிட்டையர் ஆயித்தான் ரெண்டு வருஷம் ஆயிடுச்சே“
“அய்யா அந்த பைல்ல நீங்க எடுத்துருக்கற நடவடிக்கைகள் எல்லாமே நியாயமாத்தான் இருக்கு. ஆனா, அப்ஜெக்ஷன் தெரிவிச்சுட்டு திடீர்னு நீங்களே லோன் சாங்ஷன் பண்ணிருக்கீங்க. அதுல பினான்ஸ் மினிஸ்டர் லெட்டரையும் பாத்தேன். அப்புறம் உங்க அப்ஜெக்ஷனையும் பார்த்தேன். ஏன் திடீர்னு மனசு மாறினீங்கன்னு புரியலைங்க. யாராவது உங்களை மிரட்டினாங்களான்னு தெரிஞ்சுக்கிட்டுப் போகலாம்னுதான் 0 வந்தேன்”
“எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா. எல்லாம் அந்த பைல்ல இருக்கு. பாத்துக்கோ. ரிட்டையர் ஆன பின்னாடியும் ஏம்ப்பா பழைய கதையெல்லாம் விசாரிச்சு தொந்தரவு பண்ற ?”
“அய்யா உங்களை தொந்தரவு பண்ணணுங்கறது என் நோக்கம் இல்லை. இந்த விஷயத்துல என்ன நடந்துச்சு, என்ன உண்மைன்றது தெரியனும். 1200 கோடின்றது சின்ன தொகை இல்லிங்கய்யா. மக்களோட வரிப்பணம். அந்த ஆர்கே என்டர்பிரைசஸ் காரன், ஒரு தவணை கூட கட்டலை. இதை எப்படி சும்மா விட்றதுன்னு நீங்களே சொல்லுங்கையா ?”
“நீ என்னப்பா சங்கத்துல இருக்கியா ?
“ஆமாங்கய்யா. இப்போ வட சென்னை மாவட்டத் தலைவரா இருக்கேன்.”
“அப்போ உனக்கு கல்யாணசுந்தரத்தை தெரியுமா ?”
கல்யாண சுந்தரம் என்ற பெயரைக் கேட்டதும் என்னை அறியாமல் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
“அவருதாங்க உங்களப் பாக்கச் சொல்லி அனுப்புனாரு. கல்யாண சுந்தரம் எனக்கு குரு. எனக்கு இந்த அளவுக்கு விஷயம் தெரிஞ்சுருக்குன்னா, அதுக்கு கல்யாண சுந்தரம்தான் காரணம். ரொம்ப நல்ல தோழர்யா அவரு.”
கல்யாண சுந்தரத்தோடு நான் இத்தனை நெருக்கம் என்பதை அறிந்ததும் அவர் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஏதோ ஒரு நம்பிக்கை வந்ததற்கான அறிகுறி தெரிந்தது. கொஞ்சம் இருப்பா வர்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல அவர் கிளம்புகையில் அவர் மனைவி காப்பி தம்ளர்களோடு வந்தார்.
“காப்பி குடிச்சுட்டு இருப்பா. வந்துட்றேன்“ என்று உள்ளே சென்றார். அவர் வர ஆகிய ஐந்து நிமிடத் தாமதத்தில் காபியைக் குடித்து முடித்தேன்.
“வாப்பா.. ஒரு நடை போயிட்டு வரலாம்.” என்று அழைத்து என் பதிலுக்கு காத்திராமல், நடக்கத் தொடங்கினார். நானும் இறங்கி அவரோடு நடந்தேன்.
அவர் பேசுவது என்ற தீர்மானத்தோடு வந்திருக்கிறார் என்று தோன்றியது. அவராகவே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன்.
சாலையைக் கடந்ததும் பிரிந்த சிறிய மண் சாலையில் நடக்கத் தொடங்கினார். சிறிது தூரத்தில் வெண்ணாறு ஓடிக் கொண்டிருந்தது. ஆர்.கே என்டர்பிரைசஸைப் பற்றியோ, எங்களைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் தன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது. மரணத்தை நோக்கி வேக வேகமாக பயணிக்கும் மனிதர்களைப் போலவே, கடலில் கலந்து மரணத்தைத் தழுவ அந்த நதியும் வேகவேகமாக ஓடுவதாகவே தோன்றியது. சில இடங்களில் குறுகியும், சில இடங்களில் அகன்றும் ஓடினாலும் அதன் வேகம் மட்டும் குறையாமலேயே ஓடியது.
மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு தடைகளைப் போல, தடையேதும் இல்லாமல் நதி மட்டும் ஓடுகிறதே என்ற பொறாமை உணர்வு காரணமாக மனிதன் அணைகளைக் கட்டி நதியை சிறைப்பிடித்திருப்பானோ ?
“கல்யாண சுந்தரத்தை எனக்கு 20 வருஷமா தெரியும்பா. நான் பேங்குல வேலைக்கு சேந்தபோது அவர் நான் வொர்க் பண்ற ப்ரான்சிலதான் வேலை பார்த்தார். அப்போல்லாம் அவர் வளந்து வர்ற தொழிற்சங்கத்தலைவர். பேங்குல எல்லா ஸ்டாஃபும் மெடிக்கல் க்ளெய்ம் போடும்போது, அதக்கூட அவர் போடமாட்டார். எப்போப் பாத்தாலும் சங்கம் சங்கம்னே இருப்பார். யாருக்கு என்ன கஷ்டம்னாலும் முதல் ஆளா வந்து நிப்பார். நான் அவரைப் பாத்தே பல வருஷம் ஆச்சு. அவருக்கு என் பேர் கூட நியாபகம் இருக்காது. ரொம்ப நேர்மையான ஆளு. இந்தக் காலத்துல அவர மாதிரி ஆளுங்கள பாக்கறது ரொம்ப அபூர்வம்பா.
”எவ்வளவோ ப்ரான்ச் இருக்கும்போது நம்ப ப்ரான்ச்சை எதுக்காக லோன் வாங்கறதுக்கு தேர்ந்தெடுத்தாங்கன்னு எனக்கு புரியவேயில்லைப்பா” என்று தொடங்கினார்.
சிட்டியில மட்டும் இல்லாம இந்தியா முழுக்கவே ஆயிரக்கணக்கான ப்ரான்ச்சஸ் இருக்கு.. ஆனா நம்ப ப்ரான்ச்லதான் லோன் கேக்கணும்னு ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னு எனக்குத் தெரியல. மத்த ப்ரான்ச்சஸை கம்ப்பேர் பண்ணும்போது நம்ப ப்ரான்ச்சுல நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ் பர்சென்டேஜ் ரொம்ப குறைவு. நல்லா பெர்பார்ம் பண்ற ப்ரான்ச்சஸ் லிஸ்ட்டுல ஐஞ்சு வருஷமா முதல் பத்து இடத்துக்குள்ள வர்றோம். அதனாலயான்னு தெரியல.
நான் ரிட்டயர் ஆகறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி ரெண்டு பேர் வந்தாங்க. நாங்க ஃபினான்ஸ் மினிஸ்டரோட ரிலேட்டீவ்ஸ்னு சொன்னாங்க. புது வென்ச்சர் ஸ்டார்ட் பண்ணப்போறோம், அதுக்காக 1200 க்ரோர்ஸ் லோன் வேணும்னு சொன்னங்க. லோன் சாங்ஷன் பண்றதுல எந்தக் கஷ்டமும் இல்லை. எல்லா டாக்குமென்ட்ஸையும் கரெக்டா சப்மிட் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துல சாங்ஷன் ஆயிடும்னு சொன்னேன். உடனே, இதுல ஃபினான்ஸ் மினிஸ்டர் இன்ட்ரஸ்டட்னு சொன்னாங்க.
சார் டாக்குமென்ட்ஸ் கரெக்டா இருந்துச்சுன்னா, எதுக்கு சார் ஃபினான்ஸ் மினிஸ்டர்னு சொன்னேன்.
ரெண்டு நாள் கழிச்சு அவங்க அப்ளிகேஷன் வந்துச்சு. அதப் பாத்ததுமே இது தேறாதுன்னு எனக்கு புரிஞ்சு போச்சு. 1200 க்ரோர்ஸ் லோனுக்கு வெறும் 50 கோடி பெறுமானமுள்ள ப்ராப்பர்டிய கொலாட்டரலா (collateral) கொடுத்துருந்தாங்க. நான் உடனே அப்ளிகேஷனை லீகல் ஒபினியனுக்கு அனுப்பிட்டேன்.
மறுநாளே என்னை அதே ரெண்டு பேர் வந்து பாத்தாங்க. எதுக்கு லீகல் ஒபினியனுக்கு அனுப்புனீங்க. உங்களுக்கே பவர்ஸ் இருக்கேனு சொன்னாங்க. இது ஹை வேல்யூ லோன். லீகல் ஒபினியன் இல்லாம எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னேன். அவங்களுக்கு சாதகமா, லீகல் ஒபினியன் வரும்னுதான் நெனைச்சேன். ஆனா, லீகல் செல்லுலையும் நியாயமான ஆளுங்க இருந்தாங்க. இன்எலிஜிபிள்னு (ineligible) ஒபினியன் குடுத்துட்டாங்க.
ரொம்ப சந்தோஷமாப்போச்சுன்னு, லோன் ரிஜெக்டட்னு போட்டு பைலை க்ளோஸ் பண்ணிட்டேன். அதுக்கப்பறம் கொஞ்ச நாளைக்கு ஒரு டெவலப்மென்டும் இல்லை.
கொஞ்ச நாள் கழிச்சு, ஃபினான்ஸ் மினிஸ்டர் சிங்காரவேலுவோட லெட்டரோட வந்தாங்க. அதுல அவர் லோன் அப்ளிகேஷனை கன்சிடர் பண்ணி சாங்ஷன் பண்ணச் சொல்லி எழுதியிருந்தார். இதுக்கு மேல என்னங்க வேணும் ? ரெண்டு நாள்ல சாங்ஷன் பண்ணுங்கன்னு சொன்னாங்க. இந்த வாட்டி அவங்க பேசுனதுல பெரிய வித்யாசம் தெரிஞ்சுச்சு. அது வரை பவ்யமா பேசிக்கிட்டிருந்தவங்க டோனே (tone) மாறிப்போச்சு.
நான் லோன் தர முடியாதுன்னு மினிஸ்டர்கே பதில் அனுப்பிட்டேன்” என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியானார்.
அவராகப் பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன்.
”எனக்கு ரெண்டு பொண்ணுங்க தம்பி. பெரிய பொண்ணுக்கு ஐஞ்சு வருஷம் முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சு. அவ ரொம்ப சாதுவான பொண்ணு. ஆனா சின்னவ ரொம்ப வாலுப்பா. மெட்ராஸ்லதான் படிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னு காலேஜும், பிஜியும் அங்கதான் படிச்சா.
காலேஜ் முடிச்சுட்டு வந்ததும் யாரோ ஒருத்தனை லவ் பண்றேன்பான்னு வந்து சொன்னா. அவன் ரயில்வேஸ்ல வேலை பாக்கறான். அவன் ஊரு லால்குடி. அங்க எங்களுக்கு இருக்க சொந்தக்காரங்க மூலமா விசாரிச்சேன். அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவேர்ஸ் ஆயிருக்கு. ரெண்டாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணி, அது அவங்க வீட்டுத் தண்ணித் தொட்டியில விழுந்து செத்துப்போச்சாம். மூணாவதா அவனைக் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு சொல்றா. முடியவே முடியாதுன்னுட்டேன். ரெண்டு நாள் அழுதா. சாப்டாம இருந்தா. அப்புறம் நீங்களே பாத்து கல்யாணம் பண்ணி வையுங்கப்பான்னு சொல்லிட்டா.
சென்னையிலேயே காலேஜ்ல லெக்சரரா இருக்க ஒரு மாப்பிள்ளையப் பாத்து பேசி முடிச்சுட்டேன் தம்பி. இவளுக்கும் அந்த மாப்பிள்ளைய புடிச்சுப் போச்சு. சந்தோஷமாத்தான் இருந்தா. கல்யாணத்துக்கு 25 நாள் இருக்கறப்போ, அந்த லோன் கேட்டு வந்த ரெண்டு பேரு திரும்பி வந்தாங்க தம்பி” என்று நிறுத்தினார்.
திடீரென்று அவர் மூச்சு விடும் வேகம் அதிகரித்தது. நன்றாக ஒரு முறை மூச்சை இழுத்தவர், “அவனுங்க ரெண்டு பேரும் வந்து ஒரு சிடியைக் கொடுத்தாங்க. லோன் என்ன சார் ஆச்சுன்னாங்க. நான் மினிஸ்டர்க்கு ரிப்ளை அனுப்பிட்டேன். என்னால எதுவும் செய்ய முடியாதுன்னேன்”
“லோன் சம்பந்தமா இதுல இம்பார்ட்டன்ட் டாக்குமென்ட்ஸ் இருக்குன்னு ஒரு சிடிய குடுத்துட்டு போயிட்டாங்க. நான் அந்த சிடியை ஓபன் பண்ணிப் பாத்தா ஒரே ஒரு ஆடியோ பைல் இருந்துச்சு.
ப்ளே பண்னேன். என் பொண்ணோட குரல்பா. ஒரு பொறுக்கியை லவ் பண்ணாளே. அவன் கூட பேசிக்கிட்டிருந்தா. ஒரு தகப்பன் என்னவெல்லாம் கேக்கக் கூடாதோ அதெல்லாம் கேட்டேன். என் மகள் இதை யாருக்கிட்டயும் சொல்லி பொலம்பக் கூட என்னால முடியல. நிச்சயதார்த்தம் முடிஞ்சு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். வேற ஒருத்தன் கூட இப்படி பேசிக்கிட்டு இருக்கறது மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சா என்னப்பா ஆகும் ? நகை நட்டு, துணி மணி, எல்லாம் வாங்கியாச்சு. மண்டபம், தவிசுப் புள்ளை (சமையல் செய்பவர்) எல்லாருக்கும் அட்வான்ஸ் குடுத்தாச்சு. என் ரிட்டயர்மென்ட் பணம் மொத்தத்தையும் முதலீடு பண்ணிட்டேன் பா. இந்த நேரத்துல கல்யாணம் நின்னா என்னய்யா பண்ண முடியும் என்னால ? என் பொண்டாட்டி கண்டிப்பா தூக்குல தொங்கிடுவா.
அவ செத்த பிறகு நான் மட்டும் இருந்து என்ன பண்றது ? என் பொண்ணா இதுன்னு என்னால நம்பவே முடியலப்பா. அது அவ குரல்தான்றதும் எனக்கு உறைக்குது.
என் பொண்ணா இப்படின்னு நம்பவே முடியலை. அதைக் கேட்டப்போ என்னால அருவருப்பு தாங்க முடியலப்பா. குமட்டிக்கிட்டு வந்துச்சு கொஞ்ச நேரம் கேட்டுட்டு நிறுத்திட்டேன்.
அரை மணிநேரத்துல ஃபினான்ஸ் மினிஸ்டர் சிங்காரவேலு போன்ல வந்தாரு.
தொடரும்.
அருமை விறு விறுப்பு கூடுது..புக்கா போட்டு படிக்க வைக்ககூடாதா ஓவர் நைட்டுல பசிச்சிடுவோம்…வீ ஆர் வெயிட்டிங்…
I agree with Mr Rajan completely.Such a big amt cannot be sanctioned by a BM.Story is good.Pl try to familiarise with banking formalities before venturing with this type of stories.As a retired BM we know how this are all happening.PRESSURE from politicians ministers higher officials are all there.No doubt about it.But weak links are there in all levels and concerned people will exploit these weaknesses and will get their work done by any methods.In these cases paper work will be pucca.Later on when things go wrong innocent people also along with real culprits will be caught and punished. Anyhow pl continue the story.Best wishes
Savukku’s serial story goes well. But,as a former bank employee,I would like to point out certain factual errors in bank procedures described by Savukku.Loan for Rs1200 crore cannot be sanctioned by any Branch Manager on his own.In most banks this big loan can be sanctioned by the Board of Directors only.There is a limit for exposure of a bank in a sole-proprietorship firm,partnership firm,limited company etc.Instead of exposing one particular bank,a bunch of banks would join together as a consortium to finance such a big loan.Savukku says that full details of the partners/directors of R.K.Enterprises were not provided.Not only the names and addresses of the promoters but also assets owned by them /by the company should be furnished.If the loan is sanctioned at the bank’s head office/zonal office/regional office,the credit department in such offices will scrutinize the file/documents etc before according sanction.If collateral security is provided,then legal opinion as to the marketable title of the borrower over the property pledged has to be obtained from the legal department irrespective of the value of the property offered.Any sanctioning authority below the head office must report the sanction details to the next senior authority.Branches are inspected at least once in 15 months.Besides many branches would be under concurrent audit.Any wrong sanction that too without observing the norms would be detected within a month thanks to fast management information system currently available in all banks.A credit file,that too pertaining to a loan of Rs 1200 crore cannot be kept by a branch manager in his personal locker.The banking activities are very transparent nowadays.Savukku could have consulted a serving bank manager before venturing to write a story like this.No finance minister will write a letter to a branch manager recommending a loan.A file pertaining to such a big loan cannot be kept in a locker.Branch has to send lot of periodical reports to higher authorities and hence the file would be available in the credit department all the time.Savukku’s story telling is good.But like great writers like Balakumaran and PVR who wrote novels about automobile sales,high court etc studied the particular industry/office for several weeks before writing such novels(Balakumaran’s IRUMBUKUDIRAIGAL and PVR’s HIGHCOURT and the famous English novel LAST DIAGNOSIS which dealt about hospital and RH Posiitive/negative blood groups.
Sir, Then what about the loans that are not coming back from big fishes like, Mallaiah and Ambani. What happened to the news on 15.02.2018 for an amount of 11000 crores from PNB bank and the stock market also crashed because of this. They have not followed all these rules as you pointed out?. This is not to accuse you or your system, just to know, how they could have escaped all the checks you mentioned and still got big loans and escaping without paying.
PNB and RBI failed to detect the fraud earlier.If you have read newspaper reports,you would find that the culprit(now retired bank officer)has fraudulently issued the LOUs through SWIFT and the issue of such LOUs never got revealed in the CBS(core banking system).Reports state that this particular lower level officer was allowed to continue in the same seat for several years which is against the transfer policy of the bank.Normally such LOUs issued on behalf of jewelers would be for 90 days.But the culprit has issued LOUs for 365 days.Other banks which dealt with such LOUs should have suspected the genuineness of the LOUs just by seeing the tenor of the LOUs. When I was in service (prior to 2007)there was a system where the bank which act upon such LOUs would verify the genuineness of the LOU with the issuing bank before acting upon it.What I mean to say is that there are systems and procedures in banks.The fraud was perpetrated due to system failure and lack of follow up procedure.
I shocked . politician are doing murders for eg. Devakottai .Russo murder case.
சிதம்பரத்தின் அட்ராசிட்டிகள படிக்கிறப்ப கோபத்த கட்டுப்படுத்த முடியல. அடுத்த அத்தியாயங்கள சீக்கிரமா போடுங்க சவுக்கு ஷங்கர் சார்.
Excitement and interesting to read
Looks like a mega serial trend,keeping the suspense part carried forward on regular basis
Excellent written by savukku. Keep it up
சுஜாதா வே தேவலாம் போல இருக்கு… இப்படியா கொண்டு வந்து நிறுத்ததறுது?தக்க டக்குனு எழுதி புப்லிஷ் பண்ணுப்பா . டென்ஷன் தான்களை..super super
sir, antha ponnu pesuna audio?
Romba mukkiyam !!