“ஏற்கனவே நான் அதிர்ச்சியிலேர்ந்து மீளல. அதுக்குள்ள ஃபினான்ஸ் மினிஸ்டர் லைன்ல வந்ததும் எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல.
அவர் லைன்ல வந்ததும் இந்த மாதிரி நெறய்ய சிடி இருக்கு. அதை நாங்க பயன்படுத்தணுமா, வேண்டாமா ன்னு எடுக்கப்போற முடிவு உங்க கையிலதான் இருக்கு. உங்களை அஸ்ஸாமுக்கு மாத்திட்டு, வேற மேனேஜரைப் போட்டு இந்த வேலையை நான் செஞ்சிருக்க முடியும்.
ஆனா ஏன் மாத்தனும் ? எனக்குக் கீழே வேலை செஞ்சிக்கிட்டு நான் சொல்றத செய்யாம மறுக்கறதை என்னால அனுமதிக்க முடியாது” ன்னு சொன்னாருப்பா.”
“அதுக்கப்புறம் நான் என்னப்பா செய்ய முடியும் ?” என்று கேட்டு விட்டு அமைதியானார்.
எப்படி இத்தனை அதிர்ச்சியையும் தாங்கிக்கிட்டு உயிரோட இருக்கார் ? பொதுவாக ஆரம்பிக்கலாம் என்று, “சார் உங்க டாட்டர் மேரேஜ் ?” என்று இழுத்தேன்.
“அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சுப்பா. இந்த விஷயம் உன்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. என் பொண்ணுக்கிட்ட தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை. வயசுக் கோளாறு… ஏதோ பேசிட்டா. அவன் பொறுக்கின்ற விஷயம் கடைசி வரைக்கும் அவளுக்கு தெரஞ்ச மாதிரியே இல்லை. அவகிட்ட இதைப் பத்திக் கேட்டு என்ன ஆகப்போகுது ? அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ எப்படி இதைத் தாங்கிக்குவா ? ஒன்னு கெடக்க ஒன்னு ஏதாவது செஞ்சுகிட்டான்னா ?“
“அப்பாவுக்கு எதுவுமே தெரியாதுன்னு நெனைச்சுகிட்டு சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா. கல்யாணத்துக்கு முன்னாடி, அவகிட்ட பழசு எல்லாத்தையும் மறந்துடும்மா ன்னு சொன்னேன். எல்லாத்தையும் அப்போவே மறந்துட்டேன்பா ன்னு சொன்னா. இப்போ நல்லா இருக்கா தம்பி. முழுகாம இருக்கா.
நான் வேற ஏதாவது செஞ்சுருந்தேன்னா என்னை இப்போ நீ உயிரோட பாத்துருக்க முடியாது தம்பி. நான் மறுத்துப் பேசியிருந்தா, என் குடும்பத்த நாசம் பண்றதோட நின்னுருக்க மாட்டாங்க. எனக்குப் பதிலா வேற ஆளப்போட்டு நிச்சயமா அந்த லோனை வாங்கிருப்பாங்க. அட் லீஸ்ட் நான் இப்போ உயிரோடவாவது இருக்கேன். என் பொண்ணும் சந்தோஷமா இருக்கா.“
அவருக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும் ? நீங்கள் செய்தது சரி என்று சொல்லவா ? இல்லை உங்கள் வாழ்க்கையே நாசமாகப் போனாலும் பரவாயில்லை என்று நீங்கள் 1200 கோடியைப் பாதுகாத்திருக்க வேண்டும் என்று சொல்லவா ?
உயிரே போனாலும் நீங்கள் லட்சியத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவா ? என்ன சொல்வது அவரிடம் ?
பேய்களல்லவா அரசாண்டு கொண்டிருக்கின்றன ? பெற்ற மகளின் அந்தரங்கத்தை தகப்பனிடம் வெளியிடும் மனிதன் என்ன மனிதனாக இருப்பான் ? கடவுள் இருந்தால் இதை எப்படி அவன் அனுமதிக்கிறான் ? எப்படிப் புழுங்கியிருப்பார் இந்த மனிதர். யாரிடம் இந்த விஷயத்தை விவாதிக்க முடியும் ? இப்படியும் கொடுமைக்கார மனிதர்கள் இருப்பார்களா உலகில் ?
“இது போக வேற ஏதாவது எவிடென்ஸ் இருக்கா சார் ?”
எல்லா எவிடென்ஸையும் அந்த பைல்லதான் வச்சுருந்தேன்பா. இவ்வளவு சுயநலத்தோட நடந்துக்கிட்டோமேன்னு என் மனசாட்சி உறுத்திச்சு. அதுக்காகத்தான் என்னைக்காச்சும் ஒரு நாள் விசாரணை நடந்துச்சுன்னா யூஸ் ஆகுமேன்னுதான் என் பர்சனல் லாக்கர்ல வச்சேன். நான் போன பிறகு எல்லாத்தையும் அழிச்சுடுவாங்கன்னு எனக்குத் தெரியும்.”
”அய்யா… நீங்க பண்ணது ரொம்ப ரொம்ப சரி. வேற யாராயிருந்தாலும் இதைத்தான் செஞ்சுருப்பாங்க. ஃபினான்ஸ் மினிஸ்டர் சொல்லியும், அவருக்கே லோன் தர முடியாதுன்னு பதில் எழுதறதுக்கே ரொம்ப ரொம்ப துணிச்சல் வேணும். அதுவும், சிங்காரவேலு மாதிரி ஒரு ஆளைப் பத்தி தெரிஞ்சும் அப்படி எழுதுனும்னா ஒரு அசாத்தியமான மனதைரியம் வேணும். நீங்க வேற எந்த முடிவும் எடுத்துருக்கவே முடியாது. சரியான முடிவைத்தான் எடுத்தீங்க.
நான் இங்க வந்து உங்களைப் பாக்குற வரைக்கும், இந்த விஷயத்தை அவ்வளவு தீவிரமா ஆராய்ச்சி பண்றதா இல்லை. ஆனா இப்போ நான் முடிவெடுத்துட்டேன் சார். சிங்காரவேலுவ அம்பலப்படுத்தாம விடமாட்டேன்.”
“என்னவோ பண்ணுங்க தம்பி. என்னால முடிஞ்சத நான் பண்ணிட்டேன்.”
பேசிக்கொண்டே திரும்பினோம். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
பேருந்து நிலையம் வந்தேன். சென்னைக்கான டிக்கெட் இருந்தது வாங்கிக் கொண்டு மணியைப் பார்த்தபோது பேருந்து கிளம்புவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தது.
பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே தஞ்சை பெரிய கோயில் இருந்தது. சென்று பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டேன். பேருந்து நிலையத்தின் அருகே பிரம்மாண்டமான கட்அவுட்டில் சிங்காரவேலு சிரித்துக் கொண்டிருந்தார். அருகே அவர் மகனும் சிரித்துக் கொண்டிருந்தான்.
பேனர்களில், தங்கள் தலைவரின் கரத்தை வலுப்படுத்தி, வலுவான இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மக்களை அழைப்பதற்கு உதவியாக ப்ளெக்ஸ் போர்டை வைத்தவர்கள், அந்த போர்டின் கீழே சிறியதாக சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சின்னதாக சிரிக்கவில்லை என்றால், சிங்காரவேலுவை தஞ்சை பேருந்து நிலையம் அருகே யார் சிரிக்க வைத்தது என்று தெரியாமல் போய் விடுமே ? அதற்காக அவர்களும் சிரித்தார்கள்.
என்னையறியாமல் ஆத்திரம் பீறிட்டது. ப்ளெக்ஸ் போர்டில் உயிரில்லாமல் அவன் சிரித்தாலும், என்னைப் பார்த்து நேரடியாக சிரித்தது போலவே பட்டது. குடும்பங்களை அழித்து நாட்டைக் கொள்ளையடித்து விட்டு என்னடா செய்து விடுவாய் என்னை என்று ஏளனமாகச் சிரிப்பது போலவே இருந்தது. ஒரு பஞ்ச மாபாதகத்தைச் செய்து விட்டு அதன் அறிகுறியே இல்லாமல் கள்ளம் கபடம் இல்லாமல் வசீகரிக்குமாறு சிரித்த அவன் முகத்தில் எனக்கு நஞ்சு தெரிந்தது. ஆனால் பாலகிருஷ்ணனுக்கு அவன் செய்த அநியாயங்களைத் தெரியாதவர்களுக்கு அந்த நஞ்சு எப்படித் தெரியும் ?
சிங்காரவேலுவை சும்மா விடக்கூடாது என்று கருவினேன். பாலகிருஷ்ணன் போன்ற நல்ல மனிதருக்காகவாவது சிங்காரவேலுவை சும்மா விடக்கூடாது. சிங்காரவேலு என்ன கடவுளா ? கடவுளை மகிமைப்படுத்தும் இதிகாசங்களிலேயே கடவுளைக் கேள்வி கேட்ட வரலாறு உண்டே.. அதிகபட்சம் என்ன உயிர் போகுமா ? உயிரையே இழக்கத் துணிந்தவனை என்ன செய்துவிடுவார் சிங்காரவேலு ? அரசியலில் ஊறி அரசியலையே சுவாசிக்கும் திராவிடக் கட்சியின் தலைவர்களே பல முறை அம்பலப்படுத்தப் பட்டுள்ளார்கள். சிங்காரவேலு மட்டும் என்ன விதிவிலக்கா ?
சாமர்த்தியமாக செயல்பட்டால் நிச்சயமாக சிங்காரவேலுவை ஒரு வழி பண்ண முடியும் என்றே தோன்றியது.
பிரம்மாண்டமான அந்த தஞ்சை பெரிய கோவிலின் நுழைவாயிலுக்குள் நுழைந்து இடது புறமாக இருந்த புல்வெளியில் அமர்ந்தேன். குடும்பம் குடும்பமாக அமர்ந்து குழந்தைகளை விளையாட விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவ்வித கவலையும் இன்றி, அந்தப் புல்வெளியில் குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. கள்ளம் கபடம் இன்றி இப்படி இருக்கும் குழந்தைகள்தானே பின்னாளில் சிங்காரவேலுவாகவும் மாறுகிறார்கள் ? பாலகிருஷ்ணன் போன்ற ஒரு தந்தையை இப்படி ஒரு துர்பாக்கியமான நிலைக்கு ஆளாக்குவதும் ஒரு காலத்தில் இப்படி இருந்த குழந்தைதானே ? சமூகம் இந்தக் குழந்தைகளை எப்படி மாற்றி விடுகிறது ? கொடுமைக்காரர்களாக, பாலியல் வன்முறையாளர்களாக, திருடர்களாக, கொலைகாரர்களாக, சிங்காரவேலுகளாக…
மனிதன் வளராமல் குழந்தையாகவே இருந்துவிட்டால் இத்தனை சிக்கல்களுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுமோ ?
இரண்டு நாட்கள் விடுமுறையில் ஒரு நாள் பாக்கி இருந்தது. இரவு முழுவதும் பேருந்துப் பயணத்தில் பல்வேறு யோசனைகள். எப்படி இந்த விஷயத்தைக் கையாளலாம் என்று. எல்லா யோசனைகளுமே முதலில் அற்புதமான யோசனைகளாகத் தோன்றினாலும், சிறிது நேரம் கழித்து, குழந்தைத்தனமாகத் தெரிந்தது.
மாலையில் கல்யாண சுந்தரத்தை பார்க்கலாம் என்று முடிவெடுத்து, காலையில் உணவருந்திவிட்டு படுத்து நன்றாக உறங்கினேன்.
மாலை நாலு மணிக்கு பைக்கை எடுத்துக்கொண்டு சங்க அலுவலகம் சென்றேன்.
கல்யாண சுந்தரம் அறையில் யாரோ இருவர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினார். வெளியே வந்து பேப்பரை படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து அவர் அறையில் இருந்த இருவரும் வெளியேறினார்கள். என்னை அழைத்தார்.
“வாப்பா வெங்கட். என்ன சொன்னார் பாலகிருஷ்ணன் ? “
“தோழர் அவர் ரொம்பப் பாவம் தோழர்“ என்று தொடங்கி நடந்த அத்தனையையும் விவரித்தேன். தலையாட்டியவாறே அனைத்தையும் கேட்டார்.
“அந்த பைல் காப்பியை எங்க வச்சுருக்க ?“
“வீட்லதான் தோழர் இருக்கு“
“அதை எடுத்து ரெண்டு காப்பி போடு. ஒரு காப்பியை என்கிட்ட குடு. இன்னொரு காப்பியை பத்திரமான ஒரு இடத்துல வை. எங்க வைக்கிறன்னு என்கிட்ட சொல்லு.
என் நண்பர் லிங்கேஸ்வரன்னு ஒரு பத்திரிக்கை ஆசிரியர் இருக்கார். கதிரொளி பத்திரிக்கையோட ஆசிரியர். நீ வருவன்னு அவர்கிட்ட சொல்றேன். நேரா அவரப்போய் பாரு. நாளைக்கு சாயங்காலம் போயிப் பாரு. நான் இன்னைக்கு அவரைப் போயிப் பாத்துட்டு விஷயத்தை சொல்லிட்டு வந்துட்றேன். நீ அவர்கிட்ட இதப்பத்தி பேசு. இதுல ஏதாவது மாற்றம் இருந்தா நான் உன்னை வரச்சொல்றேன்.“
லிங்கேஸ்வரனைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு செய்தி ஏஜென்சி வைத்து நடத்திக் கொண்டிருந்தவர். டெல்லியில் பல காலம் பணியாற்றியவர். டெல்லியில் பணியாற்றியதால், பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு. நல்ல எழுத்தாளர். நேர்மையான மனிதர். பத்திரிக்கைத் துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நஷ்டத்துக்குள்ளாக்கி, அவற்றை தனியார் மயப்படுத்துவது குறித்து நான் எழுதிய கட்டுரை கதிரொளியில் பிரசுரமாகியிருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் ஒரு தொழிலதிபர், பத்திரிக்கை ஆர்வத்தின் காரணமாக கதிரொளி பத்திரிக்கையை தொடங்கினார். எந்தக் காரணத்தைக் கொண்டும், பத்திரிக்கை சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக் கொண்ட பிறகே லிங்கேஸ்வரன் கதிரொளியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கல்யாண சுந்தரத்திடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
நேராக வீட்டுக்குக் சென்று அந்த பைலை எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்று இரண்டு நகல்கள் எடுத்தேன். பக்கத்தில் இருந்த ப்ரவுசிங் சென்டருக்குச் சென்று, மொத்தக் கோப்பினையும் ஸ்கேன் செய்தேன். ஸ்கேன் செய்த கோப்புகளை, ஒரு பென் ட்ரைவில் காப்பி செய்து, அத்தனை நகல்களையும் ஒரு புதிய மெயில் ஐ.டி ஓபன் செய்து, ட்ராப்டாக சேமித்து வைத்தேன்.
ஒரு கவர் வாங்கி, அதில் கோப்பின் ஒரு நகலை வைத்து, பெங்களுரில் உள்ள எனது நண்பனுக்கு கொரியர் அனுப்பினேன். பொதுத் தொலைபேசியில் இருந்து நண்பனை அழைத்து அவன் பெயருக்கு கொரியர் வரும், அதை வாங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவன் ஏதோ ஒரு வேலையாக இருந்தான் போலிருக்கிறது. உடனே சரி என்று கூறி விட்டு அழைப்பினை துண்டித்தான்.
எத்தனையோ முறை ஜெராக்ஸ் எடுத்திருந்தாலும், இந்தக் கோப்பை ஜெராக்ஸ் எடுக்கும்போது, என்னையறியாமலேயே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. சாதாரணமாக ஜெராக்ஸ் எடுக்கும் ஒரு வேலை, ஏதோ ஒரு ஹீரோ செய்யும் சாகசச் செயலாகப் பட்டது. ‘இது சாகச் செயல்தான். அதிலென்ன சந்தேகம் ? சிங்காரவேலுவுக்கு நான் செய்து கொண்டிருக்கும் காரியம் தெரிந்தால் சும்மாவா விடுவார் ? லாரி ஏற்றிக் கொல்லக் கூடத் தயங்கமாட்டோனே… இத்தனை ரிஸ்க்கோடு ஜெராக்ஸ் எடுப்பதே ஒரு சாகச் செயல்தானே….’ என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
ஜெராக்ஸ் எடுத்து முடித்த கையோடு கல்யாண சுந்தரத்தை சந்தித்து, அவரிடம் ஒரு நகலை ஒப்படைத்தேன். ஒரு பெரிய வேலையை முடித்த திருப்தி இருந்தது. லிங்கேஸ்வரனைச் சந்தித்து விபரங்களைக் சொல்லி விட்டதாகவும், நாளை மாலை அவரைச் சந்திக்குமாறும் கூறினார்.
காலை அலுவலகம் சென்றதும், இரண்டு நாட்களாக தேங்கிக் கிடந்த வேலைகளை முடித்தேன். மதியம் உணவு முடித்து விட்டு ஒரு தம் அடித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தபோது, கல்யாண சுந்தரம் லாக்கரில் வைத்திருந்த பைலில் இருந்த சிடி நினைவுக்கு வந்தது.
‘அடடா… அதைப்பற்றி அவரிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…’ உடனடியாக எனது அறைக்குச் சென்று அந்த சிடியை ட்ரைவில் சொருகி என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ஏற்கனவே பார்த்த புதிய படங்களின் எம்.பி.3 பாடல்கள்தான் எல்லா போல்டர்களிலும் இருந்தது.
ஒவ்வொரு போல்டராக திறந்து பார்த்தாலும் பாடல்கள் மட்டுமே இருந்தன. இந்த சிடியை தவறுதலாக இவர் லாக்கரில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை. “எல்லா எவிடென்ஸையும் அந்த பைல்லதான் வச்சுருந்தேன்பா” என்று அவர் சொல்லியது நினைவுக்கு வந்தது. எல்லா எவிடென்சும் என்று தெளிவாகச் சொல்பவர், இந்த சிடியை ஏன் அந்த பைலில் வைக்க வேண்டும் ?
கன்ட்ரோல் ஏவை அழுத்தி சிடியில் மொத்தம் எத்தனை பைல்கள் இருக்கிறது என்று பார்த்தேன். 168 பைல்கள் இருந்தன. மறைத்து வைக்கப்பட்ட பைல்களைப் பார்க்க, ஷோ ஹிட்டன் பைல்ஸ் (Show hidden files) என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து, மீண்டும் எத்தனை பைல்கள் இருந்தன என்று பார்த்தேன்.
172 பைல்கள் இருந்தன.
தொடரும்.
you can link this story to the Indian bank scam written on this link 🙂
https://swarajyamag.com/economy/another-day-another-bank-scam
Looks like this story is based on Indian bank scam happened in 90’s when Mr.gobalakrishnan was chairman of Indian bank. GK.moopanar’s brother got arrested as well if i remember right. PC has his hands behind this scan i think. here is the excerpt of a online article.
———
The issue came to limelight after the 110-odd-year-old bank reported Rs 1,727 crore loss in the 1995-96 fiscal. Then, it was the biggest loss in the banking industry and the bank’s entire capital was wiped out. The Central Bureau of Investigation (CBI) initiated a probe into the scandal. But in November 1996, Deve Gowda called up the then CBI chief Joginder Singh to tell him that the then finance minister P Chidambaram was unhappy with the agency’s action against Indian Bank executive director T P Karunandan. Deve Gowda pulled up Singh for violating rules that prohibited CBI from taking action against any official above the joint secretary level.
More details started pouring in subsequently with the bank’s chairman-cum-managing director (CMD) M Gopalakrishnan seen as the nerve-centre of the whole scam. (During the mid-1990s those who watched Doordarshan news in Chennai can tell you how Gopalakrishnan events got more coverage than any politician in Tamil Nadu! People would whisper that the many at the Chennai Doordarshan Kendra were beneficiaries of Gopalakrishnan’s largesse. Indian Bank also extended loans to journalists for constructing their flats/homes near Thiruvanmiyur and some of them are yet to repay.)
Later, Reserve Bank of India (RBI) revealed that Gopalakrishnan got seven extensions during his 1988-1995 tenure as the CMD – unprecedented in banking history. In December 1994, the then prime minister P V Narasimha Rao sent a note to the Finance Ministry asking the appointments committee to let Gopalakrishnan “continue as CMD until further orders”. (Manmohan Singh was the finance minister at that point of time. )
Gopalakrishnan was very close to G K Moopanar, once a Congress stalwart in Tamil Nadu and then TMC founder. Investigations showed that Indian Bank randomly extended loans to most people connected with Moopanar-Gopalakrishnan duo. The CMD was close to P Chidambaram too. There was one clinching evidence against Moopanar – that of Bank of Thanjavur giving Rs 2 crore loan to his brother-in-law Soundaraja Moopanar to start a chemical factory near Karaikudi in 1988. Four years later, Bank of Thanjavur in which Moopanar’s brothers were directors merged with Indian Bank. Bank of Thanjavur’s Rs 50 crore loss then was transferred to the merged Indian Bank.
——–
PNB வங்கியில் நடந்ததைப் போலவே இருக்கிறது இந்தத் தொடர்.
It is impossible to touch the political leader.
சீக்கிரம் எல்லாத்தையும் போடுங்க.. ஏன்னா 2 காரணம் இருக்கு 1) ஒரே படபடப்பாக இருக்கு.. 2) இப்ப நடக்குற சம்பவங்களை(Panjang bank.. ext…) பார்த்து பார்த்து எழுதுற மாதிரி ஒரு co incident …, நீங்க என்ன சொன்னாலும் இது ஒரு கற்பனை கதை இல்லை என்பது மட்டும் நிச்சயம்.. ROAD TO PERDITION படம் பார்த்துக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கு…
Interesting…