மாமா ஜி மற்றும் ஆமா ஜி இரண்டு முக்கிய பக்தாள். மாமா ஜி, மூத்த பக்தாள். பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். ஆமா ஜி இந்து சேனாவைச் சேர்ந்தவர். மூத்த பக்தரான மாமா ஜி, பல இளைய பக்தாளை வழி நடத்தி, ஆலோசனைகள் கூறி, அரசியல் அறிவைப் புகட்டி சங் பரிவாரை வளர்ப்பவர். மாமா ஜியின் அறிவுரையின்படி, ஆமா ஜி, கடற்கரையில் காதலர் தினத்தன்று இளம் ஜோடிகளை விரட்டியடித்திருக்கிறார். தலையில் காவிக் கொடியை கட்டிக் கொண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அன்று மது போதையில் மசூதியில் செருப்பை வீசியிருக்கிறார். ஆனாலும் போதுமான அறிவு ஞானம் பெற வேண்டும் என்பதால், எப்போதும் மாமா ஜியோடு சம கால அரசியலை வாரந்தோறும் உரையாடுவார். வாரந்தோறும் நீங்கள் மாமா ஜியையும், ஆமா ஜியையும் சந்திக்கலாம்.
ஆமா ஜி : வணக்கம் ஜி.
மாமா ஜி : வாங்க ஜி.
ஆமா ஜி : என்ன ஜி உபில இப்படி ஆயிடுச்சு ?
மாமா ஜி : வாக்கு இயந்திரத்துல தில்லு முல்லு பண்ணிட்டாங்க ஜி.
ஆமா ஜி : வழக்கமா நாமதானே ஜி பண்ணுவோம்.
மாமா ஜி : நம்மகிட்ட இருந்து கத்துக்கிட்டு பண்ணிட்டாங்க ஜி
ஆமா ஜி : ஆனா தேர்தல் கமிஷனே நம்மகிட்டதானே ஜி இருக்கு ?
மாமா ஜி : நம்பகிட்டதான் இருக்கு. இப்படி ஒன்னு ரெண்டு இடைத் தேர்தல்ல எதிர்க்கட்சிகளை ஜெயிக்க விட்டாதான் தேர்தல் ஆணையம் நடுநிலைன்ற நம்பிக்கை வரும். நம்பளை யாரும் குறை சொல்ல மாட்டாங்க. இதெல்லாம் மோடி ஜி யோட ராஜ தந்திரம்.
ஆமா ஜி : இருந்தாலும், நம் ஆதித்யநாத் ஜியோட தொகுதி இல்லையா ஜி. அதுல போயி இப்படி வெளையாடலாமா ?
மாமா ஜி : அதுலயும் மோடி ஜியோட ராஜதந்திரம் இருக்கு. ஆதித்யநாத் ஜியை அடுத்த பிரதமர்னு சில பேர் பேசிக்கிட்டு இருந்தாங்க கேள்விப் பட்டிருப்பியே. அந்த பேச்சையும் முளையிலயே கிள்ளிடணும்னு தான் மோடி ஜி திட்டமிட்டு ஆதித்யநாத் ஜியை தோக்கடிச்சாரு.
ஆமா ஜி : அப்போ தேர்தல் ஆணையம் தோக்கடிக்கலையா ?
மாமா ஜி : தேர்தல் ஆணையமும் மோடி ஜியும் வேற வேறயா ? என்ன ஜி நீங்க
ஆமா ஜி : புரிஞ்சுடுச்சு ஜி. ஆனாலும் நம்ப ஆதித்யநாத் ஜி தோத்தது…

UP CM Yogi AdityanatH during the rally in Mathura on sunday-Express Photo by Gajendra Yadav.19/11/2017
மாமா ஜி : ஜி. நீங்க ஒரு விஷயத்தை நுட்பமா பாக்கணும். எல்லா தொகுதியிலயும் காங்கிரஸ் கட்சி தோத்துச்சா ?
ஆமா ஜி : தோத்துச்சு ஜி.
மாமா ஜி : இதை விட நமக்கு வேற என்ன வெற்றி வேணும் ? சோனியா காந்தின்ற அந்நிய சக்தியை வீழ்த்துனோமா ?
ஆமா ஜி : ஆனா இப்போ ராகுல்தானே தலைவர் ?
மாமா ஜி : ராகுல் அம்மா யாரு ?
ஆமா ஜி : சோனியா காந்தி
மாமா ஜி : அவங்க எந்த நாட்டுல பொறந்தாங்க ?
ஆமா ஜி : இத்தாலி ஜி.
மாமா ஜி : அப்போ அவங்களுக்கு பிறந்த மகன் எப்படி இந்தியனாக முடியும் ? புடிச்சேனா பாயின்டை ?
ஆமா ஜி : பிரமாதம் ஜி. உங்களை மிஞ்சறதுக்கு ஆளே இல்ல ஜி.
மாமா ஜி : தமிழ்நாட்டுல பெரியாரையே பக்தாவா மாத்திட்டோம் பாத்தீங்களா ஜி ?
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. அது எப்படி ஜி சாத்தியம் ?
மாமா ஜி : பாக்கலயா ஜி நீங்க. நாமக்கல்ல பெரியார் சிலைக்கு நம்ப ஆளுங்க காவி ஆடை உடுத்துனதை நீங்க பாக்கலையா ? அத்தனை பெரியார் சிந்தனையும் ஒரே நாள்ல காலி பண்ணிட்டாங்க.
ஆமா ஜி : பெரியார் சிலைக்கு காவி ஆடை போத்துனா எப்படி ஜி பெரியார் காவியா மாறுவாரு ? எப்படி பெரியார் சிந்தனை ஒரே நாள்ல ஒழியும் ?
மாமா ஜி : திரிபுராவுல லெனின் சிலையை ஒடைச்சோமா ?
ஆமா ஜி : ஆமாம் ஜி. மூணு சிலையை உடைச்சோம்.
மாமா ஜி : கம்யூனிசம் ஒழிஞ்சுச்சா ?
ஆமா ஜி : அது வந்து ஜி….. ஒழிஞ்ச மாதிரியும் இருக்கு. ஒழியாத மாதிரியும் இருக்கு.
மாமா ஜி : அதே மாதிரிதான் இது. எல்லா பெரியார் சிலைக்கும் காவிக் கொடியை போத்தறோம். பெரியார் சிந்தனையை ஒழிக்கிறோம். அவ்வளவுதான்.
ஆமா ஜி : பிரமாதம் ஜி. எப்படி ஜி எல்லா பிரச்சினைக்கும் இவ்வளவு ஈசியா சொல்யூசன் வச்சிருக்கீங்க.
மாமா ஜி : நானே உங்களுக்கு பல முறை சொல்லிக் கொடுத்துருக்கேன். நம்ப இந்து மதத்தோட பாரம்பரியம் அந்த மாதிரி. வேதத்துல சொல்லியிருக்க மாதிரி நடந்துக்கிட்டே வந்தோம்னா, நம்பளை மிஞ்ச உலகத்துலயே ஆளு கிடையாது.
ஆமா ஜி : ஜி நெஜம்மாவே வேதத்துல கோமியம் குடிக்கணும்னு சொல்லியிருக்கா ஜி.
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க. ரிக் வேதம். யஜுர்வன வேதம், அதர்வன வேதம், அகண்ட வேதம் இது எல்லாத்துலயும் இதைப் பத்தி தெளிவா குறிப்பிட்டிருக்கு ஜி. உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. இல்லன்னா ஸ்லோகத்தை அப்படியே படிச்சி காட்டுவேன்.
ஆமா ஜி : அதெல்லாம் வேணாம் ஜி. நீங்களே சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன. மொதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்புறம் அப்படியே பழகிடுச்சு. இப்போல்லாம் சுட சுட குடிக்க ஆரம்பிச்சிட்டேன் ஜி.
மாமா ஜி : உங்களோட அறிவு நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டு வர்றதுலயே என்னால அதை தெரிஞ்சுக்க முடியுது.
ஆமா ஜி : ஜி. கோமியம் குடிச்சா நோயெல்லாம் போயிடும்னு நாம சொல்றோம். எல்லாரையும் குடிக்க சொல்றோம். ஆனா, நம்ப அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் எல்லாம் ஹாஸ்பிட்டல் போறாங்களே ஜி.
மாமா ஜி : அதுக்கு காரணம் இருக்கு ஜி. ஒரு பிள்ளை வளரும்போது 10 வயசுல இருந்தே கோமியம் குடிக்க ஆரம்பிச்சிடணும் ஜி. பிஜேபியில சேந்த பிறகு குடிக்க ஆரம்பிச்சா போதுமான எபெக்ட் இருக்காது. என்னதான் இயற்கை மருத்துவமா இருந்தாலும் அதுக்குன்னு ஒரு லிமிட் இருக்குல்ல ?
ஆமா ஜி : நம்ப மோடி ஜியும் குடிப்பாரா ஜி ?
மாமா ஜி : என்ன இப்படி கேட்டுட்டீங்க. ? சின்ன வயசுல, வதோதரா ரயில் நிலையத்துல டீ விக்க கௌம்பறதுக்கு முன்னாடி சூடா ரெண்டு டம்ளர் கோமியத்தை குடிச்சிட்டுத்தான் டீ வியாபாரத்துக்கே கிளம்புவார். அப்படி சின்ன வயசுல கோமியம் குடிச்சதுனாலதான் மோடி ஜி, இன்னைக்கு ஒரு தலை சிறந்த அரசியல்வாதியா மட்டும் இல்லாம, பொருளாதார நிபுணரா, வரலாற்று அறிஞராவும் ஒரு மருத்துவராவும் இருக்காரு.
ஆமா ஜி : மத்ததெல்லாம் ஓகே. ஆனா மோடி ஜியை மருத்துவர் னு சொல்றீங்க ?
மாமா ஜி : விநாயகர் சிலையில மனித உடலும் யானை தலையையும் இணைச்சு அந்த காலத்துலயே ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்துச்சுன்னு கண்டுபுடிச்சி உலயத்துக்கு சொன்னது யாரு ஜி ? நம்ப மோடி தானே ?
ஆமா ஜி : பிரமாதம் ஜி. ஒரே ஒரு சந்தேகம் ஜி. நம்ப மோடி ஜி டீ விக்க போகும்போது, அந்த டீயிலயே கோமியத்தை கலந்துருந்தாருன்னா எல்லாரும் மோடி யா ஆயிருப்பாங்கல்ல. இந்தியா வல்லரசா ஆயிரும் ல ?
மாமா ஜி : மோடி ஜி கோடியில ஒருத்தர் பா. எத்தனை லிட்டர் கோமியம் குடிச்சாலும் யாரும் ஒரு நாளும் மோடியா ஆயிட முடியாது.
ஆமா ஜி : நல்லா புரிஞ்சுடுச்சு ஜி. அப்புறம் இன்னொரு மேட்டர் ஜி. நம்ப எச்.ராஜா ஜி, பெரியார் சிலையை உடைக்கணும்னு தைரியமா பேசுனார். அதை நம்பி நம்ப ஆளுங்க ரெண்டு பேரு சிலையை உடைச்சிட்டாங்க. தைரியமா இருப்பாருன்னு பாத்தா, அதை நான் எழுதல. அட்மின் எழுதினாருன்னு சொல்லிட்டாரு ?
மாமா ஜி : இதுவும் மோடி ஜி கிட்ட இருந்து கத்துக்கிட்ட வித்தைதான்.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. அட்மின் போஸ்ட் போட்டுட்டார் னு சொல்றதுக்கும் மோடி ஜிக்கும் என்ன சம்பந்தம் ?
மாமா ஜி : நாம ஆட்சிக்கு வந்து நாலு வருசம் ஆச்சுல்ல. இப்போவும் நாட்டுல உள்ள எல்லா பிரச்சினைக்கும் காரணம் நேருதான்னு மோடி ஜி சொன்னாரா ?
ஆமா ஜி : சொன்னாரு ஜி.
மாமா ஜி : அதே டெக்னிக்தான் இது. மோடி ஜிக்கு நேரு. ராஜா ஜிக்கு அட்மின்.
ஆமா ஜி : மோடி ஜியை நினைச்சா உடம்பே புல்லரிக்குது ஜி.
மாமா ஜி : அதனாலதான் மோடி யை வீழ்த்த உலகத்தில் எந்த ஒரு சக்தியும் இது வரை பிறக்கவே இல்லைன்னு நாம தொடர்ந்து சொல்லிக்கிட்டு இருக்கோம்.
ஆமா ஜி : கரெக்டு ஜி. ஆனா எதிர்க்கட்சிக் காரங்க, குறிப்பா இந்த கம்யூனிஸ்டு பயலுக, மோடி ஜி நீரவ் மோடியை தப்பிக்க விட்டுட்டாருன்னு எப்போ பாத்தாலும் பேசிக்கிட்டு இருக்காங்க ஜி.
மாமா ஜி : நீரவ் மோடி தப்பிச்சு போனதுக்கும் காங்கிரஸ்தான் காரணம்.
ஆமா ஜி : எப்படி ஜி ?
மாமா ஜி : காங்கிரஸ் ஆட்சி காலத்துல, போபர்ஸ் ஊழல் வழக்குல சம்பந்தப்பட்ட ஒட்டாவியோ கொட்டரோச்சி தப்பிச்சு போனாரு ஞாபகம் இருக்கா ?
ஆமா ஜி : இருக்கு ஜி.
மாமா ஜி : அதே டெக்னிக்கை யூஸ் பண்ணித்தான் இப்போ நீரவ் மோடியும் தப்பிச்சி போயிருக்கார். அப்போ நீரவ் மோடி தப்பிச்சி போனதுக்கு யாரு காரணம் ?
ஆமா ஜி : காங்கிரஸ் தான் ஜி.
மாமா ஜி : இதைத்தான் நாம திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா, இந்தியாவின் தலைச் சிறந்த பத்திரிக்கையாளர்களான அர்நப் கோஸ்வாமி, நாவிகா குமார், ராகுல் சிவசங்கர் போன்ற சில பத்திரிக்கையாளர்களைத் தவிர, ஒரு முட்டாப் பயலும் இதை புரிஞ்சுக்காம, ஏதோ பிஜேபிதான் இதுக்கு காரணம்னு பேசிக்கிட்டு இருக்காங்க.
ஆமா ஜி : கரெக்டு ஜி. அதுலயும் இந்த என்டிடிவி ரொம்ப மோசம் ஜி. அதுல சீனிவாசன் ஜெயின் னு ஒரு பய. எப்போ பாத்தாலும், மோடி ஜியை கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கான் ஜி.
மாமா ஜி : அவனோட உண்மையான பேரு, சதக்கத்துல்லா ஹமீன். அவன் முன்னோர்கள் பாகிஸ்தான்ல ராவல்பிண்டியில பிறந்தவங்க. இங்க வந்து பேரை சீனிவாசன் ஜெயின்னு மாத்திக்கிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவா மோடி ஜியை திட்றதுதான் அவன் வேலை.
ஆமா ஜி :சரி ஜி. அப்போ மோடி ஜி நீரவ் மோடி மேல நடவடிக்கையே எடுக்க மாட்டாரா ?
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க. நீரவ் மோடிக்கு சொந்தமான 12 கோடி மதிப்புள்ள சொகுசு காரையெல்லாம் பறிமுதல் பண்ணச் சொல்லி மோடி ஜி உத்தரவு போட்ருக்கார் பாத்தீங்களா இல்லையா ?
ஆமா ஜி : அது சரி ஜி. ஆனா, அவரு காரெல்லாம் வேணாம்னுதானே வெளிநாட்டுக்கு ஓடி போயிட்டாரு.
மாமா ஜி : அங்கதான் தப்பு பண்றீங்க. நீரவ் மோடி இந்தியாவுக்கு வந்ததும் பயணம் பண்றதுக்கு சொந்த காரை இப்போ பயன்படுத்த முடியாது. அப்போ அவரு என்ன பண்ணுவாரு ? ஓலா இல்லன்னா ஊபர் புக் பண்ணுவாருல்ல ? அந்த ரெண்டு நிறுவனங்களையும், உளவுத் துறை அதிகாரிகள் கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்க. நீரவ் மோடி எப்போ ஓலா புக் பண்ணாலும் மாட்டிக்குவாரு.
ஆமா ஜி : பிரமாதம் ஜி. செம்ம ஐடியா.
மாமா ஜி : அது மட்டுமில்ல. நீரவ் மோடியோட ஆதார் கார்டையும் வீட்டுக்கான கேஸ் கனெக்சனையும் ரத்து பண்ணச் சொல்லி மோடி உத்தரவு போட்டுட்டார். அந்த ஆளு இந்தியா வந்தா எப்படி சமைச்சு சாப்புடுவான் ? பட்டினியா கிடந்து வேற வழியே இல்லாம சரணடைஞ்சுட மாட்டானா ? எப்படி மோடி ஜியோட மாஸ்டர் ப்ளான் ?
ஆமா ஜி : அய்யோ ஜி. செம்ம ஜி. செம்ம.
மாமா ஜி : இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இப்படியே இருக்காம பேஸ்புக்குல போய் எழுதணும். குறிப்பா சவுக்கு சங்கர்னு ஒருத்தன், பெரிய இவன் மாதிரி பேஸ் புக்குல மோடி ஜியை பத்தி எப்போ பாத்தாலும் தப்பாவே எழுதிக்கிட்டு இருக்கான். குறிப்பா அவன் பேஜ்ல போயி எழுதுங்க.
ஆமா ஜி : ஜி. ஆனா நாம எப்பவும், கெட்ட வார்த்தையில திட்டிதானே கமென்ட் போடுவோம். வீட்டுல உள்ளவங்களையெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தையில திட்றதுதானே நம்ப வழக்கம் ?
மாமா ஜி : அதெல்லாம் பழைய டெக்னிக். கெட்ட வார்த்தையில திட்டுனா இப்போல்லாம் ப்ளாக் பண்ணிட்றாங்க. அதனால நாம இனிமே புது டெக்னிக்கை யூஸ் பண்றோம். இப்போ உடனே போயி, பேஸ் புக்குல என்கிட்ட கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் அந்த சவுக்கு சங்கர் பேஜ்ல போயி எறக்குங்க ஜி. மோடி டா ன்னு கமென்ட் போடுங்க.
ஆமா ஜி : இதோ உடனே போறேன் ஜி.
மாமா ஜி : அடுத்த வாரம் வாங்க. சந்திச்சு பேசுவோம்.
you are justing abour komiyam, Tamil Siddhars hightly praised komiyam. you may be know or not. Already we are aware of that you are HIndu hater
First you need to dof BJP . They are ruling nealy 15 states in India. IN Tamil Nadu, party Head is waste. Also Party entangled in hand of Ponnar,Party Head and Vanthy. That’s why it is no progress. BJP not progress themselves only reason.
Tamil N.adu nothing but castes. That’s all. Already, Kovandars,Nadars and Brahmins with BJP Party. Now gradually, Devendarakula Vellars come to BJP. Except Mukulathoor Pariyars and Pillais If BJP try all other castes easily come to BJP.
caste wise TamilNadu Population
Vanniyar 11%
Pariyar 11%
Mukkualttor 9%
Nadars 7%
Kovandars 7% (Vellars and Gowdas)
Devendra Kula Vellars 5%
Konars 5%
Vellallars(Pillai,Mudaliyars) 5%
Nayudus(Kamma,kapu) 5%
Chettiyars 4%
Udiyars (Pargava kulam,Moopanars,Vettuavars) 4%
Muthariyars 3%
Brahmins 3%
sekunthars 3%
sakkaliyars 3%
others 2%
Total 87% of Populations of Tamil Nadu.
DMK Vote share – 13% Minority ,11%Pariyars, 3%sengkuthars, 5% Vellars. 32%
ADMK – Mainily Mukullathor and Kovandars 16% . Believe or Not After E.V.Ramasamy Nayudu, Jayalalitha is representative of other castes. No one refute E.V Ramasamy Nayudu is speaker of other castes. Always He claimed likewise. Jayalalitha Vote share 57% of Vote Share except Vanniyars. Even Vanniyars have also deep respect on Jayalalitha .. Here I am not talking about Jayalalitha is good or bad. Always Vanniyars and Thevars very close to Brahmins in North and South Part of Tamilnadu. Hence, both communities have respect on Jayalaitha. Even Thevars not ready to believe on Sasikala who belongs their own community.
In Tamilnadu , deprived castes are Vellalars(Pillai,Mudalis) 5%,Brahmins 3%,Nayudus 5% and Chettiyars 4%. They are high castes but still deprived community. No Government post for them. In Kamaraj period these castes only in government Jobs. Government is free of corruption in Kamarajar Period because of them .Except pity Pillais all other are aware of it.
Strong communities of Taminadu at present, Vanniyars,Pariyars, Mukulathoars ,Nadars and Devendrakula Vellalars then Christians. This is the Ground reality.. Kallar domination in Thevar Community felt by Agamudiyars and Maravars both are originally High castes.
Castes easily come to Circle of BJP,
Vanniyars 11%
Devendra Kula Vellalars 5%
Konars 5%
chettiyars 4%
Vellalars 2%
Nayudus 5%
Sakkaliyars 3%
Thevars (6%)
Nearly, 41% percentage of Population all are Jayalalitha Vote Share. If they try by blessing of Lord Muruga who is God of TN.
JI SEMMA JI SEMMA
செம ஜி
Super ji.. Super ji.
sir we want only in old style article this is not nice to read sir please consider don’t mistake me
ஜெய்…ஜி…..
நீங்க கலக்குங்க
super most
pattiniyil vaadum savukkiruku paayee niraiyaa piriyaaaNi poduukiRaakaL
எப்பா முடியல பா சவுக்கு… உங்க ஸ்டைல்ல சொல்லனுனா…
செம்ம ஜூ.. செம்ம
Nice.
Super ji , Super Ji !
Ji super ji, Your trade mark comedy!!!!!!!!!! laugh unlimited!!!!!!!!
//மோடி டா ன்னு கமென்ட் போடுங்க.//
மோடி டா
very good keep it up thank u
இப்படித்தான் காங்கிரஸ் அறுபது வருடங்கள் ஆட்சி செய்ததா…வாங்கின காசுக்கு மேலேயே கூவுறிங்களே ஜி..எப்படி ஜி…என்னமோ போங்கஜி….எல்லாப் புகழும் இறைவனுக்கே…Praise the Lord…
Sankar, you are responsible for my stomach pain because of the laughter. I am sending you my medical bill. Please pay else… 🙂
Simply awesome. Keep it up. We need such entertainment and non-stop comedy. Looking forward for the next encounter.
வயிறு புண்ணாயிருச்சுயா
Kalakkal jee 😋
Super
சிரிச்சே செத்துட்டேன்..😂😂
மிக அருமையான பதிவு சவுக்கு தளத்தின் தனித் தன்மையினை புலப்படுத்தும் வகையில் அமைந்த இப்பதிவிற்கு நன்றி
Mokka. EPS & OPS kitta irundhu thevaiyana silarai varradhalayum DMK aatharavu nilai yeduthathaleyum intha kuppaiyai kuvithu ullar Sankar.
Super
Modida🐩