அன்புள்ள உடன்பிறப்பான உதயநிதி ஸ்டாலினுக்கு,
“எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என்று வடிவேல் பல்கலைக்கழகத்தில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய ஒரு பரிதாபத்துக்குரிய பாமர திமுக தொண்டன் எழுதிக் கொள்ளும் மடல், கடுதாசி, கடிதம்னே வச்சுக்கங்க. நடுவுல நடுவுல கெட்ட வார்த்தை வருது. ஆனால், அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த பண்பு அதை தடுக்கிறது.
நலம், நலமறிய ஆவல்.
பெரியார், அறிஞர், கலைஞர் போன்றோரெல்லாம் அரசியலுக்கு வந்ததை பார்த்திருக்கும் தமிழகம், உங்களையும் அரசியலில் பார்க்க எவ்வளவு பெருமைபட்டுக் கொள்ளவேண்டும். அதுவும் காலை வைத்த உடனேயே “மூன்றாம் கலைஞர்” என்று மகுடத்தை பார்க்கும்போது, பிறவிப் பயனையே எடுத்தாற்போல உள்ளது. அடுத்த பிறவியே வேண்டாம். உங்கள் மகன் இன்பநிதியை நான்காம் கலைஞரே என்று எவனாவது சொல்வான். அதையும் கேட்க வேண்டி வரலாம். எதுக்கு வம்பு ?
கட்சி என்றால் தலைவர்கள் கொள்கைகளை பேசுவார்கள். அவர்களை உயிருக்குயிராய் பின்பற்றுகிற கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கொள்கைகளோடு சேர்ந்து தலைவர்களையும் தாங்கிப் பிடிப்பார்கள். தலைமையும் கொள்கையும் தவறான பாதையில் பயணித்தாலும் அம்போவென்று விட்டுவிடாமல் அநியாயத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டிவரும். அதை கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு தவறாமல் நாங்கள் செய்வோம்.
எல்லா கட்சியிலும் இதுதான் உலக வழக்கம் என்றாலும் நம் திராவிட முன்னேற்ற கழகம் என்ன சாதாரணமானதா? எப்பேர்பட்ட ஆற்றல் மறவர்களை பார்த்த கட்சி. எந்த இடி மின்னல் வந்தாலும் இமயம்போல் நிற்கும் கழகமல்லவா?.
வீட்டில் மூணு வேளை சோறு கியாரண்டி இல்லையென்றாலும், முட்டுச்சந்து மன்றங்கள் மூலம் முரசொலி பேப்பர் படித்துவிட்டு ஆறுமணி நேரம் தொடர்ந்து திராவிட இயக்க வரலாற்றின் மகிமை பேசி வாயடைக்க வைத்த எஸ்டிடியெல்லாம் உங்களுக்கு தெரியாது உதயநிதி. வாதத் திறமையில் உடன்பிறப்புகளை விஞ்ச ஒருவன் பிறந்துதான் வர வேண்டும். பேசியே வளர்ந்து ஆட்சியைப் பிடித்த கழகத்தின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
அண்ணாவை எதிர்த்து ஈவிகே சம்பத் தனிக்கடை கண்டபோதும், கலைஞருக்கு எதிரே வாள்வீச்சு வீரர் எம்ஜிஆர் தறிகெட்டு சண்டைபோட்டபோதும், 18 ஆண்டு காலம் எம்பி பதவி கொடுத்த நன்றிக்காக இன்னொரு போர்வாள் என்கிற கறுப்பு சால்வை சார்வாள், கூர்தீட்டிய மரத்திலேயே சொருகிச் சொருகி புளங்காகிதப்பட்டுக் கொண்டபோதும், கொண்ட கொள்கைக்காக அவர்களை ஆதி முதல் அந்தம் வரை அங்குலம் அங்குலமாக வறுத்தெடுத்தோம். அப்படியே தன்நிலை தாழாமல் தலைமைகளையும் பேசிப்பேசி பொற்கரங்களால் தாங்கிப்பிடித்தோம். இதெல்லாம் கட்சி மீது கொண்ட அளவற்ற விசுவாசத்தால்தானே.
நண்பர்கள் எதிரிகளாவும் துரோகிகளாவும் மாறியபோது அவற்றை எதிர்கொள்ள எவன் தயவும் தேவையில்லாமல் சொற்களாலேயே அவர்களை துவைத்து துவைத்து எடுத்ததும் ஏற்கனவே கற்ற வித்தையால்தானே.. அதெல்லாம் தன்மானத்தை சீண்டியதற்காக அக்மார்க் கட்சிக்காரன் என்ற அர்ப்பணிப்புடனுடன் செய்த அற்புதமான பணிகளின்றி வேறென்ன?
ஆனால் அதனினும் இன்னொரு வகையான அற்புதமான பணி என்போன்ற கடைக்கோடி தொண்டனுக்கு வரும் என்றும் அதுவே நிரந்தர பணியாக நாற்காலி போட்டு அமர்ந்துகொள்ளும் என்றும் ஒரு நாளும் நினைத்துப் பார்க்கவேயில்லை. திமுக தொண்டனுக்கு, இப்படியொரு நெருக்கடி வரும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
பொழுதுவிடிந்து பொழுதுபோகும் வரை தினமும் கண்ணில் தென்படும் சாமன்ய மக்களிடம் பேசி, கட்சியை வளர்த்து வாக்குச்சாவடிக்கு அவர்களை கொண்டுவந்து உதயசூரியனில் முத்திரை பதிக்கச்செய்த இந்த கடைக்கோடி தொண்டனுக்கு, எந்த நேரத்தில் எப்படி காட்சியை மாற்றுவார்கள் என்ற மேலிடத்து விளையாட்டு, புரியவே மாட்டேன் என்கிறது.
உலகம் சொன்னது மாதிரி கலைஞரின் மகன் மு.க. ஸ்டாலினின் வருகை அப்பட்டமான வாரிசு அரசியல்தான். என்றாலும், 13 வயதிலேயே மாணவர் அணி, 22 வயதில் மிசா சட்டத்தின் சிறைக் கொடுமை, இளைஞர் அணி உருவாக்கம் போன்ற வரலாற்றால், ஏற்றுக்கொள்வதில்தான் என்ன தவறு என்று சமரசத்திற்கு சாசனம் எழுதிக்கொடுத்தோம். துணை முதலமைச்சர் என்ற அந்தஸ்த்து வரை உயர்ந்த ஒரு 52 ஆண்டுகால அரசியல் களப்போராட்டசாலிக்கே இன்னும் தலைமை முழுதாக விட்டுக்கொடுக்கவில்லை என்று மாற்றுக்கட்சிக்காரர்களே உச் கொட்டுவதால், எங்களின் மனச்சுமையை அவர்களுக்கு பரிசாக கொடுத்துவிட்டோம். பாரம் இறங்கியது.
ஆனாலும்,மீண்டும் வடிவேலு காமெடி சீன்தான். “ஒரு டீயின்னு சொன்னே. இப்போ ஊரே உக்காந்து சாப்பிடுது” என்று டீக்கடை முதலாளி விஜய் கேட்டு டீ மாஸ்டர் வடிவேலு முழிப்பதை போல நாங்களும் இப்போது முழிக்கிறோம்.
கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்த மாறனின் பிள்ளையாயிற்றே என்று தயாநிதி கொண்டு வரப்பட்டார். தந்திர பூமியான டெல்லியில் பல்லாண்டு காலம் பார்லிமெண்ட் அரசியலை கரைத்துகுடித்த கழகத்தின் அனுபவசாலிகள் பலர் இருக்கும்போது, தயாநிதி ஒரு இணையோ துணையோகூட இல்லாமல் மத்தியில் காபினெட் அமைச்சராகவே ஆக்கப்பட்டார்.
தயாநிதிக்கு இந்தி பேசத்தெரியும் என்பதால்தான் அவர் அமைச்சராக்கப்பட்டார் என்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பிலேயே வளர்ந்த ஒரு கட்சியில் விளக்கம் சொல்லப்பட்டபோது, கியா, கியா என்றுகூட கேட்கமுடியாமல் மூர்ச்சையாகிப்போனோம். இருந்தாலும் மற்றவர்கள் ஓடிவந்து முகத்தில் தண்ணீர் தெளிக்காமலேயே சுயமாய் விழித்து, முரசொலி மாறனின் சாதனைகளை பட்டியலிட்டு அதில் தயாநிதியை படுக்கவைத்து சாமரம் வீசியபடியே அந்த கட்டிலுக்கு நான்கு பக்கமும் முட்டுக்கொடுத்தோம். மாறனின் தொழில் திறமைகள், அவரின் நிர்வாகத் திறமை, அவர் பாரம்பரியம் என்று சளைக்காமல் பேசினோம். ஒரு வேளை இவனுங்க சொல்றது உண்மைதானோ என்று எதிர்க்கட்சிக் காரனே ஒரு கட்டத்தில் வாயடைத்துப் போனான்.
முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவருக்கு, அதுவும் அரசியல் அனுபவமோ, ஆட்சி நிர்வாக அனுபவமோ இல்லாத ஒருவருக்கு காபினெட்டில் முக்கிய பொறுப்பா என்று கூட்டணி தலைமை கேட்டபோது, “பொருப்பா இன்னும் இருக்கிறது” என்ற கமா வைக்கப்பட்டது.
இந்தி மட்டுமல்ல, பட்லர் இங்கிலீசுகூட பேசவராத மு.க.அழகிரியும் மத்திய காபினெட்டில் அமைச்சராக்கப்பட்டார். அதைப் பார்த்து நாடு வேண்டுமானால் அதிர்ந்து போயிருக்கலாம். ஆனால் முட்டுக்கொடுப்பதற்கென்றே பிறவி எடுத்த திமுக தொண்டனாகிய நாங்கள் அசரவேயில்லை. முட்டுக் கொடுப்பது திமுக தொண்டனுக்கு புதுசா என்ன ? அண்ணன் தம்பி தகராறில் மதுரையில் அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டபோதும் முட்டுக் கொடுத்தோம். சொந்தக் கட்சிக் காரனையே கொலை செய்ததாக அழகிரி குற்றம் சாட்டப்பட்டபோதும் முட்டுக் கொடுத்தோம். பங்காளித் தகராறில், தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரித்துக் கொல்லப்பட்டபோதும் முட்டுக் கொடுத்தோம்.
தென் மண்டலத்தில் கட்சியை வளர்த்த அஞ்சா நெஞ்சனுக்கு ஐநா தலைமை பதவியே கால்தூசுக்கு சமம் என்றுபேசி, விமர்சகர்களை தெறிக்க தெறிக்க ஓடவிட்டோம். கனிமொழிக்கு ராஜ்ய சபா பதவி அளிக்கப்பட்டபோது, பெண்ணியத்திற்கு பெருமை சேர்க்கப்பட்ட அத்தியாயம் என அழகு மிளிர செதுக்கினோம். இலக்கியவாதி பாராளுமன்றம் சென்றதால், பாராளுமன்றத்துக்கே பெருமை என்று கூசாமல் பேசினோம்.
திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் கலைஞரின் குடும்பமே ஆதிக்கம் செய்யப்போகிறது என்று அரசியல் எதிரிகள் மேடைகளில் ஸ்பீக்கர்களில் பீஸ் பீஸ் ஆக்கினார்கள். “திமுக தொண்டர்களாகிய நாங்களே அந்த குடும்ப அரசியலைப் பற்றி கவலைப்படவில்லை. உங்களுக்கு ஏன் வலிக்கிறது”? என்று திருப்பிக் கேட்டு எங்களை நாங்களே குத்திக்கொண்டு எதிரிகளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தோம். உள்ளுக்குள் அவ்வளவு வலி. அது வேற டிபார்ட்மெண்ட்.
நடிப்பில் நடிகர் திலகத்தையே மிஞ்சினோம்.
இதற்கெல்லாம் நாங்களும் கட்சியும் கை மேல் கண்ட பலன்கள்தான் என்ன?
திடீர் விரிசலால் விரட்டப்பட்டதிற்கு கைமாறாக, தயாநிதி புண்ணியத்தில் 2ஜி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டதில் உலகமே திமுகவை பார்த்து சிரிப்பாய் சிரித்தது. 2ஜி ஊழலை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கக் காரணம், பார்ப்பன சதி என்று பச்சைப் பொய்யை மேடை போட்டுப் பேசினோம். காபினெட் அமைச்சர் பதவி தந்ததற்கு கைமாறாய், திமுகவை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது என்று வரம் தந்து, கட்டு சோற்று பெருச்சாளியாய் காவியம் படைத்தார் மு.க. அழகிரி.
கண்டவனெல்லாம் திட்டுவதெற்கே படைக்கப்பட்ட கட்சி போல் ஆகிவிட்ட திமுகவை, இன்னும் ஒருபடி மேலேபோய் குடும்ப அரசியலின் பல்கலைக்கழகமாக சித்தரித்து இளக்காரத்தின் அடையாளமாகவே மாற்றிவிட்டன மீடியாக்கள்.
ஆனாலும் பாரம்பரியம் மிக்க திமுக குடும்பத்தில் பிறந்த என் போன்ற லட்சோப லட்ச உடன்பிறப்புகள், கலைஞர் என்ற தாரக மந்திரத்தை மூச்சுக்காற்றாய் சுவாசித்து, தேர்தல் அரசியலில் திமுக தொடர்ந்து கம்பீரமாக இருக்கச் செய்தோம். 2016 சட்டமன்ற தேர்தலில் மக்களை திரட்டி தொண்டனின் பலத்தை வாக்குச்சீட்டில் காட்டினோம்.
ஆட்சியை மயிரிழை அளவில் இழந்தாலும், தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவை புதிய சாதனை படைக்க வைத்தோம்.118 சீட்டு பெற்று அறுதிப்பெரும்பான்மையை பிடிக்காமல் போனாலும் 98 சீட்டுகளை எதிர்கட்சி வரிசையில் பெற வைத்தோம். ஒரு எதிர்க்கட்சிக்கு இவ்வளவு பலம் கிடைத்தது என்பது தமிழக சட்டமன்ற வரலாற்றில் புதுப்புரட்சி, முன்னுதாரணமில்லாத சாகச வரலாறு.
ஊழல் மகாராணி காலமானபின், அரசியலில் வெட்கத்தைவிட்டு மஞ்சமே குறிக்கோள் என்று சிற்றின்ப சிந்தனை கொண்ட பெண் போல் செயல்பட்டிருந்தால், ஆட்சிக்கட்டிலில் திமுக என்றைக்கோ அமர்ந்திருக்கும். அப்படி செய்திருந்தால் ஜனநாயக படுகொலை என்று சொல்லியிருப்பார்கள்.
அப்படி சொல்லும் நிலையில் இருப்பவர்களே இன்று ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடக்கும் ஆட்சியின் அலங்கோலங்களை கண்டு எதைத்தின்றால் பித்தம் தெளியும் எனத் தெரியாமல் கையை பிசைந்துகொண்டிருக்கிறார்கள். என் போன்ற திமுக தொண்டன் கேடுகெட்ட எடப்பாடி அரசை விமர்ச்சிக்கலாம் என்றால், எனக்கு முன்னே ஏராளமான தரப்பினர் நின்றுகொண்டு போய் பின்னால் வரிசையில் வா என்று தள்ளுகிறார்கள்.
சட்டத்தின் பிடியிலிருந்து இயற்கையின் உதவியால் தப்பிவிட்ட ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் ஆட்சியை அடிமைகள் கைப்பற்றிக்கொண்டு, கஜானாவை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏற்றிவிட்ட கொள்ளைக்கார சசிகலா குடும்பம், ஏற்றியவர்களை இறக்கிவிட்டுவிட்டு அந்த இடத்தில் அமர்ந்து கொள்ள துடியாய் துடிக்கிறது. ஊழலால் கொள்ளையடித்த பல்லாயிரம் கோடி ரூபாயை வைத்துக்கொண்டு அகப்படுகிறவனுக்கெல்லாம் டோக்கன் போட்டுக் கொண்டிருக்கிறது சசிகலா கும்பல்.
இன்னொரு பக்கம், வெற்றிடம் என்று சொல்லிக்கொண்டு, மார்க்கெட் போன வயதான நடிகர்களின் அலம்பல்கள் அன்றாடம் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பப்பார்க்கின்றன. அதுவும் எதிர்க்கட்சி கூட வேண்டாமாம். ஸ்ட்ரெயிட்டா சிஎம் போஸ்ட்டுதானாம்.
இவர்களுக்கு மத்தியில் இன்றைக்கும் நிலையான வாக்கு வங்கியோடு கட்டுக்கோப்பாய் கொள்கை பிடிப்புடன் நிற்கிற ஒரே இயக்கம் நமது திமுகதான்.
2ஜி, அழகிரி, தயாநிதி போன்ற நெகட்டிவ் எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள் அகன்றுபோய் திமுக புத்துணர்ச்சி பெற்று தெளிவாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், நீங்கள் அரசியல் களத்தில் குதித்து மறுபடியும் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கு ஏன் வித்திடுகிறீர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களே?
பிறந்தது முதலே உடம்பில் திமுக ரத்தம் ஓடுகிறது என்று சொல்கிறீர்கள்.. அப்போது பரம்பரை திமுக தொண்டனாகிய எங்கள் உடம்பில், முதலில் அமெரிக்க ரிபப்ளிக் கட்சி ரத்தமும் அப்பறம் ரஷ்யாவின் காம்ரேட் ரத்தமும் ஓடி இப்போதுதான் திமுக ரத்தம் பாய்கிறதா?
மேலே சொன்ன அரசியல் நெருக்கடி வரலாறுகளின்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காலத்தை மிஞ்சும் காவியங்களை படைத்துக் கொண்டிருந்தீர்கள்.
திமுகவின் ரத்தம் பீறிடுவதாக சொல்லிக்கொள்ளும் நீங்கள், உங்கள் படங்களில் எத்தனை இடங்களில் திமுகவையும் அதன் கொள்கைகளையும் விவரிக்கும் குறியீடுகளை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ காட்டியிருக்கிறீர்கள்? திமுகவில் சேர்ந்த பிறகு, தனது ஒவ்வொரு படத்திலும் அண்ணா மற்றும் திமுகவின் அடையாளம் இருக்கும்படி எம்ஜிஆர் பார்த்துக் கொண்டார். ஒரு சாதாரண மேடைப் பேச்சாளரான டி.ராஜேந்தர் கூட, திமுகவில் இருந்தவரை, படங்களில் திமுக அடையாளங்களை வைக்கத் தவறியதில்லை.
ஆடை குறைத்த கதாநாயகியோடு நெருக்கம் காட்டுவதை தவிர்த்து, உங்கள் படங்களில் எதை உருப்படியாக சாதித்திருக்கிறீர்கள் உதயநிதி ? ஒரே ஒரு வசனம் ? அல்லது ஒரே ஒரு காட்சி ?
முரசொலிக்கு நிர்வாகி என பொறுப்பை கொடுத்தால், முரசொலி பவள விழாவில் ரஜினியும் கமலும் இணையும் மேடையில் மைய நாயகனாக முன்னிலைப்படுத்திக்கொள்வதை தவிர உருப்படியாக ஒன்றும் செய்யத் தெரியவில்லை.
இன்றைக்கும் ஒரே கலைஞர்தான் என்று என்போன்ற கடைக்கோடி தொண்டர்கள் தீர்மானமாய் உள்ள நேரத்தில், திடீரென மூன்றாவது கலைஞராக முளைக்க ஆசைப்படும் நீங்கள், அதே முரசொலியில் என்றைக்காவது உங்கள் எழுத்தாற்றலை காண்பித்திருக்கிறீர்களா? ஒரே ஒரு பத்தி எழுதியிருக்கிறீர்களா ? அதையும் விடுங்கள். நீங்கள் முரசொலியை ஒரு நாளாவது படித்திருக்கிறீர்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காலை உணவை ரெயின் ட்ரீயிலும், மதிய உணவை தாஜ் ஹோட்டலிலும், இரவு விருந்தை தி பார்க் ஹோட்டலிலும் அருந்தும் உங்களுக்கு, காலையில் டீக்கடையில் முரசொலி படித்து விட்டு, வாய் கிழிய அரசியல் பேசும் என் போன்ற தொண்டனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இன்னும் முரசொலியை காசு கொடுத்து வாங்கும் சாதாரண தொண்டன். நீங்கள் முரசொலியின் மேலாண் இயக்குநர்.
இப்போது மதுரையில் தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்குகிறேன் என்று மாவட்டச் செயலாளர்களையே பின்னுக்கு தள்ளிவிட்டு மேடையை வசப்படுத்தும் படத்திற்கு டீசர், டிரெயிலர் விட்டுப்பார்க்கிறீர்கள். இதற்கெல்லாம் என் போன்ற தொண்டன் என்ன சொல்லி முட்டுக்கொடுத்து உங்களை பொதுவெளியில் தாங்கிப்பிடிப்பது?
வெளிப்படையாக கேட்கிறேன். தலைவரின் பேரன், தளபதியின் மகன் என்ற இரண்டு அடையாளங்களை தவிர வேறன்ன சிறப்பம்சம் உங்களிடம் வெளிப்பட்டிருக்கிறது? நாளை அழகிரியின் மகன் வந்து, ஆபாச நடிகை சன்னி லியோனை தமிழ் சினிமாவுக்கு கூட்டிவந்து அரும்பெருஞ்சேவை செய்த இந்த பேரன் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று கேட்டால்? தமிழரசுவின் மகன் அறிவுநிதியும், இரண்டாவது இன்னிங்ஸ் என தயாநிதி மாறனும் சேர்ந்து வந்து கேட்டால்?
உங்களை போன்றவர்களுக்கு முட்டுக்கொடுப்பதை தவிர வேறு வேலையே எங்களுக்கு கிடையாதா? நாங்கள் கறுப்பு சிவப்பை பார்ப்பதா, பேரன்மார்களின் கலர் கலரான காமடிகளை பார்ப்பதா?
ஒரு தலைவனுக்கு மகனாக பிறப்பது தானாக நடப்பது. ஆனால் அவனே தலைவனாக உருவெடுப்பது, தொண்டர்களின் வரவேற்பினால் நடப்பது.
ஒரு கலைஞர், ஒரு தளபதி போதும் எங்களுக்கு, கட்சியை சாமானியர்களுக்கான ஜனநாயக பாதையில் கொண்டு செல்ல.
தேர்தலில் வென்று ஆட்சி என்கிற வெண்ணெய் திரள தயாராய் இருக்கும் நிலையில், கட்சி என்கிற திமுக தாழிக்கு வேட்டு வைக்கும் சில்லுண்டி வேலையில் இறங்காதீர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. ஏனெனில் என் போன்ற தொண்டனும் ஒரு எல்லை வரைதான் பொறுமையை காக்க முடியும்..
சொந்த உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அடிமனதோடு பின்னிப் பிணைந்த ஆத்மார்த்த அரசியல். இந்த கடைக்கோடி தொண்டனின் மகனே, திமுகவுக்கு எதிராக கலகலக்கச்செய்யும் வேலையில் செயல்பட்டால் அப்பன் மகன் உறவே அறுத்துக்கொண்டு போய்விடும்.
அப்படிப்பட்ட அசல் திமுக தொண்டனுக்கு மற்றவரின் மகனெல்லாம் எம்மாத்திரம்? புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் உதயநிதி.
இன்றைய செய்தி நாளைய வரலாறு, இன்றைய கோளாறு நாளைய தகராறு.
இப்படிக்கு
பாமர திமுக தொண்டன்
evanya கலைஞர். avan ethilula kalaingan kattikriathulaiyum, vechukirathilaiyum koolai adipathiyalum கலைஞர்.
I have noticed you don’t monetize your page, don’t
waste your traffic, you can earn additional bucks every month because you’ve
got high quality content. If you want to know how to make extra money, search for: Ercannou’s essential adsense alternative
//மஞ்சமே குறிக்கோள் என்று சிற்றின்ப சிந்தனை கொண்ட பெண் //
இந்த உவமை வித்தியாசமா இருக்கே ?! பொதுவா ஆண்களை சொல்வார்கள்
சில பல விஷயங்களில் திமுகவின்(அல்லது திராவிட இயக்கத்தின்) நிலைபாட்டுடன் நான் உடன்படுவது இல்லையென்றாலும் என்னுடைய கருத்து
உட்கட்சி ஜனநாயகம் எல்லாம் வந்து திமுக ஆக்கபூர்வமாக செயல்பட்டால் தமிழகத்திற்கு நன்மையே. ஆனால் நடக்குமா ?! கனவு மட்டும்தான் காண முடியுமோ ?
Udayinidhi arasiyal kku kutti varathu periya strategy, sanakkiyathanam nnu kona vayanukku evano sketch pottu koduthirukkan. Rajini kamal aa samalikkarathukkam. Every year kona vayan and family goes to Europe tour in cruise, and we know what they do there.
kona vayan stalin kooja savukku sankar. udayanithi kki enn kooja thukkala ? poramaya ?
Mr. Udayanithi don’t enter now you have lot of time I agree wit this article last three generation our family also bakka DMK Please mind this
Tamizhan oru Muttaal. They know this. So why to worry about Thondan?
It’s all our fate. Son of Stalin will not be a qualification. I am working from my Childhood for party and my friend Uthayanithi never worked for party. Instead of working for party he was chasing girls like Nayan, Emi etc. we never agree his leadership. Instead of working under Uthayanithi we will fall in front of running train.
“ஆடை குறைத்த கதாநாயகியோடு நெருக்கம் காட்டுவதை தவிர்த்து, உங்கள் படங்களில் எதை உருப்படியாக சாதித்திருக்கிறீர்கள் உதயநிதி ?”
இப்படி சவுக்கு சங்கரோட கேள்வி ஒவ்வொன்னும் செருப்பால அடிச்சமாதிரி இருக்கு….
But
இதையெல்லாம் கமல்ஹாசன் அரசியல் பிரவேம் செஞ்சப்போ “கௌதமியை பத்து வருஷமா வீட்டுலயே வெச்சிக்கிடிருந்து பிறகு சம்பலம் பாக்கியோட கழட்டிவிட்டதை தவிர்த்து வேற என்ன சாதித்திருக்கிறீர்கள் கமல்?” ன்னு ஷூவுல அடிச்சமாதிரி ஏன் கேட்க மறந்துட்டாருன்னு நினைக்கும் போதுதான் அழுகையா வருது, ஆனா நான் அழுது என் சோகம் சவுக்க தாக்கி இந்த இந்தமாதிரி கட்டுரையெல்லாம் எழுதாம விட்டுட்டுவாரோன்னு நினைக்கும் போதுதான் வர்ர அழக கூட நின்னுடுது…
அபிராமி…… ராமி அபிராமி……
என்ன சார் நீங்க கரெண்ட் நடப்புக்கு வரவே மட்டெங்கிரிங்க .. இந்த யுகமே வாரிசு யுகமயிட்டுசு . பேசாம தோனி புடிச்சி அமெரிக்கா போயிடனும்.
கட்சி தலைமை குடும்பம் மட்டும் அல்ல.. அவரின் வேலைக்காரர்கள் நாடு ஆள நினைக்கும் நாடு இது..!
திராவிடம் வெறும் வார்த்தைதான் இப்போது உள்ள அனைவர்க்கும்.. கட்சிப்பணி ௫500,1000 அதிகபட்சம் 2000 உடன் முடியும் கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு..
அவரின் ஒத்தக்கடை கூட்டத்தில் கலந்துகொண்டு ௫5000 பெற்கிழி வாங்கிய பெரியவர் வளவந்தான் உரைதான் நிதர்சனம்…!
Simply absorbing and inspiring. But the asshole udayanithi stalin is doubtful whether he hears the loud sound from the bottom of the ocean. Your voice is the voice of the millions who are praying for the DMK to come back to power despite all the misgivings they have indulged in the past. Dynasty rule has to be curbed and nipped in the bud itself. When will our political parties become mature like the West wherein such ascendancy is quite difficult. Alas, we are”Waiting for Godot.”
இன்றைய செய்தி நாளைய வரலாறு, இன்றைய கோளாறு நாளைய தகராறு.- Nethi adi..
தி மு க வில் இப்படி தான் நடக்கும் என்பது முன்பே எதிர்பார்த்ததுதான் . இதில் எங்களுக்கு ஆச்சரியமும் இல்லை , அதிர்ச்சியும் இல்லை . எம்மை போன்றவர்கள் , திமுகவில் என்ன நடந்தாலும் , திமுகவை ஆதரிக்க காரணம் , அது தீவிர பெரியாரிச கட்சி என்பதால் தான் . அதனை உணர்ந்து தான் வைகோ , திருமா போன்றோரும் திமுக கூட்டணியில் இணைந்து விட்டார்கள் . தமிழகத்திற்கு பெரியாரிசம் தேவை .
Tamizhagathiruku thevai: Corruptionless/Bribeless Governance focusing on basic/proper infrastructure, good healthcare, 24/7 Power & Water Supply, Employment and etc.. etc..Periarism vachi enna bro panrathu?
Tamilarasu’s son name is Arulnidhi.
BTW the article has been written to yourself as ‘neutral and impartial sigamani’…hasn’t it?
correct.. antha DMK thondan Savukku thaan
narikal parikal aavathum,parikal narikal aavathum ulkatchi vivakaaram!