ஜி. ஜி..ஜீ. என்று அலறியபடியே ஆமா ஜி ஓடி வந்தார்.
மாமா ஜி : மெதுவா ஜி. உக்காருங்க ஜி. ஏன் பதர்றீங்க.
ஆமா ஜி : ஜீ. நம்ப எச்.ராஜா ஜீயை நீதிமன்றம் மென்டல்னு சொல்லிடுச்சாமே ஜி.
மாமா ஜி : கண்டுபுடுச்சிட்டாங்களா ?
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. அப்போ அது உண்மையா ?
மாமா ஜி : அய்யோ இல்ல ஜி. யாரு இப்படி பரப்பி விட்டதுன்னு கண்டுபிடிக்கணும்னு சொன்னேன்.
ஆமா ஜி : அப்போ நீதிமன்றம் சொன்னது தப்பா ஜி ?
மாமா ஜி : அதெல்லாம் நம்ப எதிரிங்க பரப்பி விடுற கட்டுக் கதை. அதை நீதிமன்றமும் நம்பிடுச்சு.
ஆமா ஜி : நீதிமன்றம் எப்படி ஜி திடீர்னு எச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை பண்ணணும்னு உத்தரவு போடும் ?
மாமா ஜி : எதுக்கு உங்களுக்கு சந்தேகம். அவர்கிட்டயே கேளுங்க.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க… எச்.ராஜா ஜி மாதிரி பெரிய தலைவர் நம்பளை பாக்க வருவாரா ? நெஜம்மாவா சொல்றீங்க.
மாமா ஜி : உண்மையான ஆன்மீக போராளிகளை பாக்க எச்.ராஜா என்னைக்குமே மறுக்க மாட்டார். ஏன்னா அவரும் ஒரு ஆன்மீக போராளி. இதோ வந்துட்டார் பாருங்க.
எச்.ராஜா : வாங்க ஆமா ஜி. நல்லா இருக்கேளா. உங்களை பத்தி மாமா ஜி நெறய்ய சொல்லியருக்கார். உங்களை மாதிரி உண்மையான இந்து போராளிகளாலதான் இந்த தேசத்தை முன்னேத்த முடியும்.
ஆமா ஜி : சார் எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. நீங்கதானா அது ? பாக்க சாதாரணமா இருக்கீங்களே சார்.
எச்.ராஜா : நானும் உங்களை மாதிரியே ஒரு எளிமையான ஆர்எஸ்எஸ் தொண்டன். அவ்வளவுதான்.
ஆமா ஜி : சார். உங்களைப் பத்தி கோர்ட்டுல….
எச்.ராஜா : இல்லங்குறேன் நான்.
ஆமா ஜி : இல்ல சார் கோர்ட் உங்களை மனநலம் சரியில்லாதவர்னு…..
எச்.ராஜா : இல்லங்குறேன். நான் பைத்தியம் இல்லங்குறேன்.
மாமா ஜி : அதான் தெளிவா சொல்லிட்டாரே. இன்னும் என்ன சந்தேகம் ?
ஆமா ஜி : ஒரு கதை ஞாபகம் வருது ஜி. சொல்லட்டுமா ?
மாமா ஜி : சொல்லுங்களேன். பேஷா கேப்போம்.
ஆமா ஜி : ஒரு வாட்டி, எம்ஜிஆர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு போனாரு. அப்போ சிஎம் வர்றாருன்னு எல்லா பைத்தியங்களையும் வரிசையா நிக்க வைச்சிருந்தாங்க. எல்லா பைத்தியமும் எம்ஜிஆருக்கு வணக்கம் வைச்சிச்சு. ஒரே ஒரு பைத்தியம் மட்டும் வைக்கல. எம்ஜிஆருக்கு டக்குன்னு கோவம் வந்துடுச்சு. அந்த பைத்தியத்துக்கிட்ட போயி, நான் யாரு தெரியுமா ? சிஎம் ஆப் டமில்நாடு ன்னு சொன்னாரு. அதுக்கு அந்த பைத்தியம், நானும் இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். 12 வருசமா என்னை இங்க அடைச்சி வைச்சிருக்காங்க. சத்தம் போட்டு சொல்லாத. உன்னையும் அடைச்சி வைச்சிடுவாங்க ன்னு சொல்லுச்சு.
மாமா ஜி : சரி. இப்போ அந்த கதையை எதுக்கு சொல்றீங்க ?
ஆமா ஜி : இல்ல ஜி. ஞாபகம் வந்துச்சு.
மாமா ஜி : ஒரு ரத யாத்திரையை நடத்தி, தமிழகத்தையே தாமரை மலரும் பூமியா ரெண்டு நாள்ல மாத்திக் காட்டிருக்கோம் அதைப் பத்தி பெருமையா பேசாம என்ன ஜி நீங்க.
ஆமா ஜி : அந்த மாதிரி ஒரு ரதம் வந்து போனதுக்கான தடயமே இல்லையே ஜி. எதிர்க்கட்சிங்கதான் பெருசா விமர்சனம் பண்ணாங்க.
மாமா ஜி :என்ன நீங்க. இப்படி சொல்லிட்டீங்க. இந்துக்கள் மத்தியில இதுக்கு பெரிய எழுச்சி இருந்துச்சு. மதுரையில கூட நம்ப ராஜா சார்தான் கொடியசைச்சு தொடங்கி வைச்சார்.
ஆமா ஜி : எதிர்க்கட்சிகள் பிரச்சினை பண்றதை பாத்துட்டு, அரசு மொதல்ல ரதத்தை தமிழக எல்லையை விட்டு வெரட்டி விடுங்கன்னு சொன்னதா சொல்றாங்களே ஜி.
மாமா ஜி : இந்த ஸ்டாலினும் திமுகவும் பண்ண வேலைதான் இது. தேவையில்லாம சட்டசபையில பிரச்சினை பண்ணிட்டாங்க. அதனால கொஞ்சம் போலீஸ் நெருக்கடி குடுத்தாங்க.
ஆமா ஜி : கொஞ்ச நெருக்கடியா ? ரதயாத்திரைன்னு பேரை வைச்சிக்கிட்டு, யாத்திரை போகாம 90 கிலோ மீட்டர் ஸ்பீடுல, ரதம் பறந்துச்சே ஜி.
மாமா ஜி : நீங்க எங்க பாத்தீங்க ?
ஆமா ஜி : இந்த சவுக்கு சங்கர்னு ஒருத்தன் பேஸ்புக்குல போட்ருந்தான் ஜி.
மாமா ஜி : அவனா ? அவன் ஒரு ஜிகாதி ஜி. ரீசன்டா இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டான். நக்சலைட் வேற. அவன் பேஜையெல்லாம் பாக்காதீங்க ஜி. அவன் தேச விரோதி. இந்து மத விரோதி.
ஆமா ஜி : ஜிகாதியா நக்சலைட்டா ஜி.
மாமா ஜி : ம்ம்.. ரெண்டும் சொல்லலாம். ரெண்டும் கலந்த கலவைன்னு வச்சிக்கங்களேன். அந்த வீடியோ கூட ஒரிஜினல் இல்ல. அதை பாஸ்ட் பார்வேர்ட் பண்ணிட்டு அப்படியே போட்ருக்கான். நம்ப ரதம், 20 கிலோ மீட்டர் ஸ்பீடுல, நிறுத்தி நிதானமா போச்சு.
ஆமா ஜி : நிறுத்தி நிதானமா 20 கிலோ மீட்டர் ஸ்பீடுல போனா, ரெண்டு நாள்ல திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாக்குமரிக்கெல்லாம் போயிட்டு ரெண்டே நாள்ல, எப்படி ஜி கேரளாவுக்கு போக முடியும் ?
மாமா ஜி : ஸ்லோவாவும் போனோம். ஸ்பீடாவும் போனோம். பொதுமக்களுக்கு இடையூறு வரக் கூடாதுல்ல ?
ஆமா ஜி : புரிஞ்சுடுச்சு ஜி. நம்ப எச்.ராஜா மேல செருப்பு வீசுனாங்களாமே ஜி. கேட்டதும் செம்ம டென்சனாயிட்டேன் ஜி. என்ன ஜி இப்படி பண்றாங்க ?
மாமா ஜி : இதோ ராஜா சார்தான் இருக்காரே. அவர்கிட்டயே கேளுங்கோளேன்.
எச் ராஜா : வேட்டியை மடிச்சி கட்டுனா நானும் ரவுடிதான்றேன்.
ஆமா ஜி : இல்ல சார். அந்த செருப்பு.
எச்.ராஜா : அது அட்மின் மேல வீசுனதுங்க. என் மேல இல்ல.
ஆமா ஜி : அதானே சார் பாத்தேன். நான் கூட உங்க மேலதான் வீசிட்டாங்களோன்னு நெனைச்சேன். அட்மின்னா. அப்ப சரி. அப்ப சரி.
மாமா ஜி : 2019 தேர்தலுக்கு இப்பயில இருந்தே தீயா வேலை பாக்கனும் ஜி. ஒரு நொடியும் கண் இமைக்கக் கூடாது.
ஆமா ஜி : நாம போன தேர்தல்ல ஜெயிச்சதே, ஃபேஸ்புக் டேட்டாவை திருடித்தான்னு தகவல் வெளியாகியிருக்குதே ஜி. உண்மையா ஜி.
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க. மோடி ஜி டிஜிட்டல் இந்தியான்னு சொல்லும்போதே உங்களுக்கு புரியலையா ? டிஜிட்டல்னா அப்படித்தான் ஜி.
ஆமா ஜி : அடுத்தவங்க டேட்டாவை திருடுறது தப்பில்லையா ஜி.
மாமா ஜி : தேர்தல்ல ஜெயிக்கணும்னா எதுவுமே தப்பில்ல ஜி. இப்போ பாருங்க. மோடி ஆப் னு போனுக்கான ஒரு ஆப்பை உருவாக்குனோம் நம்ப பக்தாள் எல்லாரும், போட்டி போட்டுக்கிட்டு டவுன்லோட் பண்ணாங்க. அத்தனை பேர் டேட்டாவையும் எடுத்தாச்சு.
ஆமா ஜி : இது தப்பாச்சே ஜி.
மாமா ஜி : குழந்தைகள் இருக்குல்ல. அந்த குழந்தைகளோட நல்லதுக்காக நாம மருந்து குடுக்குறோம். ஊசி போட்றோம். அதை அந்த குழந்தை வேணாம்னுதான் சொல்லும். ஆனா குழந்தையோட நலனுக்காக நாம கட்டாயப்படுத்தி குடுக்குறது இல்லையா ? அது மாதிரிதான். மோடி ஜி இன்னும் 10 வருசம் பிரதமரா இருந்தா, அமெரிக்கா நம்பகிட்ட வந்து கடன் கேட்கும். ஒரு இந்திய ரூபாய்க்கு 45 டாலர் தர வேண்டி இருக்கும். அதெல்லாம் நடக்கணும்னா நாம இப்படித்தான் ஆட்சியை புடிக்கணும்.
ஆமா ஜி : புரிஞ்சுடுச்சி ஜி. இந்த விஞ்ஞானி ஒருத்தர் வீல் சேர்ல வருவாரே. அவரும் நம்ப ஆளா ஜி. நம்ப மினிஸ்டர் பேசியிருக்காரே.
மாமா ஜி : இந்த ஸ்டீபன் ஹாக்கிங், ஐன்ஸ்ட்டின் இவங்க எல்லாம் நம்ம வேதத்தில் சொல்லி இருக்கறதை திருடி அவங்க கண்டு பிடித்த மாதிரி சொல்லிகிட்டாங்க ஜி அவ்வளவு தான் விஷயம்
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க?
மாமா ஜி: விமானம், புவி ஈர்ப்பு சக்தி, கருந்துளை , மின்சாரம், தொலை பேசி இப்படி எல்லாமே நாம கண்டு பிடித்தது தான் ஜி . நம்ம மத்திய மந்திரி ஹர்ஸ் வரதன் கூட போன வாரம் சொன்னாரே.
ஆமா ஜி : இத்தனையும் கண்டுபிடிச்சிருக்கோம் ஏன் ஜி இவ்வளவு நாலா இதை சொல்லல ?
மாமா ஜி: அது வந்து ஜி, இதெல்லாம் நாம தான் கண்டு பிடித்தோம்ன்ற விஷயத்தையே வாட்ஸாப் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் தான் நாமளே கண்டுபிடிச்சிருக்கோம் ஜி அதான் .
ஆமா ஜி : என்னமோ ஜி, ஆனா இந்த ஐன்ஸ்டின் ஸ்ரீரங்கத்து காரராமே. யூதர்கள் சின்ன வயசுலயே கடத்தி கொண்டு போய்ட்டாங்களாம் ஜி. போன வாரம் தான் வாட்சாப் forward ஒன்னு வந்துச்சு.
மாமா ஜி: ஆமா ஜி, இந்த நேரு தான் கடத்த உதவி செஞ்சிருக்கார். 2019இல் மட்டும் மறுபடியும் மோடி ஜி ஆட்சி அமைச்சா அந்த ரகசிய குறிப்பை வெளியிடுவேன்னு சொல்லிருக்கார் ஜீ .
ஆமா ஜி : 2014இல் மோடி ஆட்சி அமைச்சா இதே போல சுபாஷ் சந்திர போஸ் ரகசிய ஆவணத்தை வெளி இடுவோம்னு சொன்னோமே ஜி வெளியிட்டோமா?
மாமா ஜி: அதான் வெளி விட்டோமே ஜி, அவர் விமான விபத்தில் தான் இறந்தாருனு
ஆமா ஜி : அத தானே ஜி காங்கிரஸ் காரனும் சொன்னான்
மாமா ஜி: ஜி விமான விபத்தில் இறந்திருக்கலாம்னு தான் காங்கிரஸ் காரன் சொன்னான் ஆனா நம்ம மோடி ஜி விமான விபத்தில் தான் இறந்தார்னு சொல்லிட்டாரு.
ஆமா ஜி : அது சரி ஜி, உலகத்திலேயே அதிக பிரிவுகளோடு மிகவும் குழப்பமான வரி திட்டம் நம்ம GST தான்னு சொல்லிருச்சாம்
மாமா ஜி: இதுவும் நம்ம வேதத்தின் படி தான் செஞ்சிருக்கோம் ஜி, நம் வர்ணாசிரம முறை படி பிராமணர், சத்திரியர் , வைசியர் , சூத்திரர் இதில் எதிலும் அடங்காதவர் தலித்னு 5 பிரிவு இருக்கு. அதே போல தான் GST 5 பிரிவு வச்சிருக்கோம். இதெல்லாம் அந்த கொங்க பய உலக வங்கிக்கு தெரியுமா ஜி
ஆமா ஜி : அத விடுங்க ஜி, இந்த ராகுல் காந்தி ஏதோ பேசினாராம் அதுக்கு நம்ம கட்சிக்காரங்க எல்லாம் பிரச்னை பண்றங்களே ஜி
மாமா ஜி : ஜி அவரு பேசறது எல்லாம் கணக்குலயே எடுத்துக்க கூடாதுனு தான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்லிட்டாங்க ஜி, டிவி பாக்கலயா?
ஆமா ஜி : பாத்தேன் ஜி பாத்தேன், 3 மத்திய மந்திரி 4 பாஜக முதல்வர்கள் 5 செய்தி தொடர்பாளர்கள் எல்லாரும் சொன்னாங்க ஜி. ஆனா இந்த பாதுகாப்பு மந்திரி ராகுல் காந்தி பேசறதை கேக்காதீங்க அப்படினே ஒரு 30 நிமிஷம் பேசறாங்க ஜி , அவங்க பேசிட்டு இருந்த நேரத்துல டோக்லாம்ல் ரோடு போட்டுட்டாங்களாம் ஜி அதை பத்தி அவங்க ஒன்னுமே பேசலையே ஜி
மாமா ஜி : உங்களுக்கு வெவரம் பத்தலை ஜி , அவங்க நாட்டோட பாதுகாப்பு அமைச்சர் இல்ல, இந்த அரசாங்கத்தோட பாதுகாப்பு அமைச்சர். அதுவும் இல்லாம அவங்க பதவி ஏற்றவுடன் வேத முறை படி கலசம், எலுமிச்சை பழம் எல்லாத்தையும் மந்திரிச்சு பார்டர்ல பொதைச்சாச்சு ஜி. இனி எவன் பார்டர் தாண்டினாலும் ரத்தம் கக்கி சாவான். அப்பறம் அவன் ரோட போட்ட என்ன போடாட்டி என்ன ஜி.
ஆமா ஜி : ஜி வேதத்தில் இதுக்கு கூடவா தீர்வு இருக்கு?
மாமா ஜி : வேதத்தில் எல்லாத்துக்கும் தீர்வு இருக்கு ஜி, இப்போ பாருங்க காத்து மாசு ஆவதை தடுக்க 50000 கிலோ மாமரத்தை எரித்து யாகம் நடத்த போறோம் ஜி
ஆமா ஜி : அத்தனை மரத்தை எரிச்சாலே காத்து மாசு ஆய்டுமே ஜி
மாமா ஜி : வெறும் மரத்தை எரிச்சா தான் ஜி மாசு, அதோட A2 பசு நெய் உத்தி எரிச்சா மருந்து. அது காத்துல கலந்தா நுரையீரல் புற்று நோய் குணமாகும்
ஆமா ஜி : அது சரி ஜி இத்தனை மரத்தை வெட்டுனா 10 வருசத்துக்கு மழையே வராதே ஜி
மாமா ஜி : அதுக்கும் தீர்வு இருக்கு, குண்டான்ல தண்ணிய ரொப்பி உள்ள உக்காந்து வருண பகவானை நோக்கி யாகம் இருந்தா மழை வந்திரும் ஜி
ஆமா ஜி : மழை வருதோ இல்லையோ …. ஒன் பாத்ரூம் வந்துடும் ஜி. போனவாட்டி இதே மாதிரி அண்டாவுல உக்காரச் சொன்னாங்க. அண்டாவுல இருந்து எந்திரிச்சா திட்டுவாங்கன்னு பயந்துக்கிட்டு அதுலயே போயிட்டேன் ஜி.
மாமா ஜி : வெளியில சொல்லாதீங்க ஜி. நம்பளோட இருக்கட்டும். அடுத்த வாரம் பாக்கலாமா ஜி ? இன்னும் நெறய்யா விவாதிப்போம்.
ஆமா ஜி : போயிட்டு வர்றேன் ஜி. நன்றி ஜி.
attack in there style 😀 interesting, comedy and makes to think
என்னங்க சங்கர், வகை தொகை இல்லம்மா இந்த நாய்ங்களை கலாய்க்குரீங்க .
பாவம் எச்ச லூசு. அங்கேயே உச்சா போயிடும்..
அப்புறம், மெய்யாலுமா 90 கிலோ மீட்டர் மெதுவா ரதம் போச்சு??
இதக் கேட்டா மோடிக்கே உச்சா வந்துடும்.
அருமை சவுக்கு சார் வாழ்த்துக்கள்
super Savukku. Indian என்ற பெயரில் சில நாயுங்க குலைக்கும். கவலை படாதீங்க
Terrific Lines
ஆமா ஜி : புரிஞ்சுடுச்சு ஜி. நம்ப எச்.ராஜா மேல செருப்பு வீசுனாங்களாமே ஜி. கேட்டதும் செம்ம டென்சனாயிட்டேன் ஜி. என்ன ஜி இப்படி பண்றாங்க ?
மாமா ஜி : இதோ ராஜா சார்தான் இருக்காரே. அவர்கிட்டயே கேளுங்கோளேன்.
எச் ராஜா : வேட்டியை மடிச்சி கட்டுனா நானும் ரவுடிதான்றேன்.
ஆமா ஜி : இல்ல சார். அந்த செருப்பு.
எச்.ராஜா : அது அட்மின் மேல வீசுனதுங்க. என் மேல இல்ல
அற்புதம் சவுக்கு சங்கர் ஜி
” ஆமா ஜி : மழை வருதோ இல்லையோ …. ஒன் பாத்ரூம் வந்துடும் ஜி. போனவாட்டி இதே மாதிரி அண்டாவுல உக்காரச் சொன்னாங்க. அண்டாவுல இருந்து எந்திரிச்சா திட்டுவாங்கன்னு பயந்துக்கிட்டு அதுலயே போயிட்டேன் ஜி.
மாமா ஜி : வெளியில சொல்லாதீங்க ஜி. நம்பளோட இருக்கட்டும். ”
ஐயா ,சிரிச்சு சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு .
semma article savukku… thodaratum ungal pani…
poda domaru naaye
நீதான்டா டொமரு.. இன்டியன்னு சொல்லிட்டா நீ இன்டியனா?
moratu entertainment G…