“குடியரசுத் தலைவருக்கு பிரிவு 311 (2) (சி)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கோட்டைச்சாமி வெங்கட் ஆகிய உன்னை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்படுகிறது“ நான் கையெழுத்திட்டுக் கொடுத்ததும் வந்திருந்த நபர் எழுந்து சென்றார்.
எந்த வித விசாரணையும் நடத்தாமல் எப்படி ஒரு அரசு ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியும் ? எனக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படாமல் எப்படி என்னை டிஸ்மிஸ் செய்ய முடியும் ?
ஜெயிலரிடம் கான்ஸ்ட்டிடியூஷன் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டு வாங்கிப் பார்த்தேன். 311 (2) (சி)யில் தேசத்தின் பாதுகாப்புக் காரணங்களுக்காக, மாநில ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ, எவ்வித விசாரணையும் இன்றி ஒரு அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது… என் மீது விசாரணை நடத்தினால் தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தா… ? தேசப்பாதுகாப்புக்கா ? சிங்காரவேலுவின் பாதுகாப்புக்கா ?
என்னைப் போன்ற அப்பாவி ஊழியர்களை பழிவாங்குவதற்காகவா இப்படி ஒரு சட்டப்பிரிவை இயற்றிவைத்தார்கள் ? இதற்காகவா இரவு பகலாக உழைத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றினார்கள் ? அரசியல் அமைப்புச் சட்டமே சிங்காரவேலு போன்றவர்களுக்கா ? இதற்காகவா அம்பேத்கர் பாடுபட்டார் ?
அரசு இயந்திரம் நினைத்தால் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அலைக்கழிக்க முடிகிறது ? எதிர்காலமே இருண்டு போனது போல இருந்தது. ஜெயிலரிடம் கூட சொல்லாமல், எழுந்து என் அறைக்குச் சென்றேன்.
85 ஆயிரம் சம்பளம். எப்படி ஈடு செய்யப்போகிறேன்… ? பணமில்லாமல் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது… வீடு சொந்த வீடு. ஆனால் சோற்றுக்கு என்ன செய்வது ? அன்றாட செலவுகளுக்கு என்ன செய்வது ? செல்போனைக் கூட ரீசார்ஜ் செய்ய முடியாதே !!! இந்த வயதில் வேறு எந்த வேலைக்குப் போவது !! டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் எந்த அரசுப் பணியிலும் மீண்டும் சேரக் கூட முடியாதே !!
நாளைய எதிர்காலம் கேள்விக்குறியாகும்போது ஏற்படும் பயமும், விரக்தியும் மனிதனை புரட்டிப் போட்டு விடுகிறது. சிறைக்கு வந்தது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் வேலை போனது பயத்தை ஏற்படுத்தி விட்டது. எனக்கு இனி வாழ்க்கையே இல்லை என்ற உணர்வு வந்தது. தப்புப் பண்ணிட்டோமோ என்ற எண்ணம் வந்ததை என்னால் தடுக்க முடியவில்லை.
அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு பெரிய குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. அடர்ந்த காட்டுக்குள் தனியாக விடப்பட்டது போல உணர்ந்தேன். பொருளாதார நெருக்கடி மனிதனின் முதுகெலும்பை உடைத்து விடும் வல்லமை படைத்தது. அவன் கொள்கை, கோட்பாடு, உறுதி அத்தனையையும் உடைக்கக் கூடியது. இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோமே…
மறு நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் சிறையை விட்டு வெளியே வந்தேன். 45 நாட்கள் கழித்து வெளி உலகத்தைப் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது. இருபத்தைந்து அடி சுவருக்குள் இருக்கும் இன்னொரு உலகத்தில் வாழ்ந்து விட்டு, திடீரென்று புதிய உலகத்துக்குள் வந்தது போலிருந்தது.
நாற்பத்தைந்து நாட்களுக்குள் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் கூட, வித்தியாசமாக இருந்தது. வழக்கறிஞர் அருண் வந்திருந்தார். வாருங்கள் போகலாம் என்று அவர் சீனியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். உங்கள் போனைக் கொடுங்கள், அம்மாவிடம் பேச வேண்டும் என்றேன். அம்மா சீனியர் அலுவலகத்துக்கு வந்திருப்பார்கள் என்றார்.
அவரோடு பைக்கில் அவர் சீனியர் அலுவலகம் சென்றேன். அம்மா வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்தாள். பார்த்ததும் கண்ணீர்.
“சாப்டியாடா… என்னடா இப்படி இளைசுப் போயிட்ட ?” என்று சரசரவென்று கண்ணீர் விட்டாள். சிறிது நேரம் அழட்டும் என்று அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு பேசாமல் இருந்தேன். சத்தம் போடாமல் அமைதியாக அழுதாள். பிறகு சூழலைக் கருதியோ என்னவோ, அவளாகவே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமைதியானாள். வக்கீலுக்கு பீஸ் கொடுக்க வேண்டும். அம்மா பணம் கொண்டு வந்துருக்கியாம்மா ? தன் ஹேன்ட் பேக்கை திறந்து ஐந்து 100 ரூபாய் கட்டுக்களை எடுத்துக் கொடுத்தாள். “உள்ள வைம்மா… நான் வாங்கிக்கறேன்.“
சீனியர் ராஜராஜன் அழைப்பதாகக் கூறினார்கள்.
அம்மாவோடு உள்ளே சென்றேன். வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையை எடுத்துக் கொடுத்தேன்.
“இவ்வளோ மோசமா இருக்கறானுங்களே… லுக் வெங்கட். நாம இதை சேலஞ் பண்ணலாம். பட் டிஸ்மிஸ்ஸல் ஆர்டரை ஸ்டே பண்றதுக்கு கோர்டுக்கு பவர்ஸ் கிடையாது. எப்போ ஆர்டர் சர்வ் (serve) ஆச்சோ, அப்பவே அது எஃபெக்டுக்கு (effect) வந்துடுச்சு. இப்போ ரிட் பெட்டிஷன் (Writ Petition) பைல் பண்ணா கூட, இது டிஸ்போஸ் ஆகறதுக்கு குறைஞ்சது நாலு வருஷம் ஆகும். அப்பவும் பேக் வேஜஸ் (back wages) குடுப்பாங்களான்னு சொல்ல முடியாது. இதை நம்பிக்கிட்டு இருக்காதீங்க.. ட்ரை டு ஃபைன்ட் ய நியூ ஜாப். (Try to find a new job)
தென், நம்ப ஆபீசையே ரவுன்ட் தி க்ளாக் வாட்ச் (round the clock) பண்றாங்க. உங்க மொபைல், லேன்ட் லைன் ரெண்டும் மானிட்டரிங்ல (monitoring) இருக்கும். நம்ப ஆபீஸ் லைனையும் போட்டுருப்பாங்க. உங்களுக்கும் சர்வெயிலன்ஸ் (surveillance) போட்ருக்கதா எனக்கு தகவல் வந்துருக்கு. யு ஹேவ் டு பி வெரி கேர்ஃபுல். (You have to be very careful)
உங்க கேசுல எப்போ சார்ஜ் ஷீட் பைல் பண்றாங்கன்னு தெரியில. அது வரைக்கும் நமக்கு வேலை இல்லை. சார்ஜ் ஷீட் பைல் பண்ண பிறகு நீங்க வந்தாப் போதும். இந்த டிஸ்மிஸ்ஸல் ஆர்டரை ஒரு காப்பி எடுத்துக்கிட்டு ஒரிஜினலை குடுத்துட்டுப் போயிடுங்க.”
அம்மாவிடம் சைகை காண்பித்ததும் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
“சார்.. உங்க பீஸ் எவ்ளோன்னு தெரியல… பட் இத வெச்சுக்கங்க.. மீதிய பின்னாடி தர்றேன்..“
“நான் வாங்கற பீஸை உன்னால தர முடியாது யங் மேன்… நான் உன்கிட்ட பீஸ் கேக்கலையே… பீப்பிள் லைக் யூ ஆர் அசெட்ஸ் டு தி சொசைட்டி… (People like you are assets to the society) ஐ டேக் திஸ் ஆப்பர்சூனிட்டி டு அசோசியேட் மைசெல்ஃப் வித் யு. (I take this opportunity to associate myself with you) கல்யாண சுந்தரம் உன்னைப் பத்தி நெறைய்ய சொல்லியிருக்கார்… ஐ டோன்ட் வான்ட் எனிதிங்.. (I don’t want anything) நெக்ஸ்ட் என்ன பண்றதுன்னு திங்க் பண்ணு. எனி லீகல் ஹெல்ப், டோன்ட் ஹெசிடேட் டு ஆஸ்க் மி..“ (Don’t hesitate to ask me)
பணத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டு எழுந்து வெளியே வந்தேன். பஸ்ஸில் போகலாம் என்றேன், அம்மா ஆட்டோவில் போகலாம் என்றாள். சின்ன வயதிலிருந்தே, ஆட்டோவில் போவது ஆடம்பரம் என்று ஏனோ பதிந்திருந்ததால் ஆட்டோவில் ஏறுவதேயில்லை. அது அம்மாவுக்கும் தெரியும். ஆனாலும், அவள் ஆட்டோவில் போகலாம் என்று கூறுகிறாள் என்றால், சீக்கிரம் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதோ, இல்லை காத்திருக்க அலுப்பாக இருந்ததோ தெரியவில்லை.
வீட்டுக்குள் நுழைந்ததும், காபி வைத்துக் கொடுத்தாள். பல நாட்களுக்குப் பிறகு, அம்மாவின் காப்பி வாயில் பட்டதும் புதிய சுவையாக இருப்பது போலிருந்தது. “அம்மா நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.. அப்புறம் எழுப்பு“ என்றேன். வக்கீல் என்னடா சொன்னார் ? “
“ஒன்னும் இல்லம்மா… கேஸ் சீக்கிரம் முடிஞ்சுடும்னு சொன்னார்.. “
“இங்கிலீஷ்லயே ரொம்ப நேரம் ஏதோ சொன்னாரே… “
“கேஸ் பத்திதாம்மா சொன்னார். வேலையிலேர்ந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்க… திருப்பி பேங்க் வேலை கெடைக்கறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்.. அது வரைக்கும் வெயிட் பண்ணுன்னு சொன்னார். “
“டிஸ்மிஸ்னு ஏதோ சொன்னாரே….“
“ஏம்மா நொய் நொய்யின்னு பேசி எரிச்சலக் கௌப்புற ? “ என்று கத்தினேன்..
“சரிடா.. நீ தூங்கு…“ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்..
‘படிக்காதவள் என்று எவ்வளவு எளிதாக நினைத்து விட்டோம்.. பேசும் வார்த்தைகளில் அவளுக்குப் புரிந்தவற்றை எப்படி கச்சிதமாக பிடித்துக் கொள்கிறாள் ? தேவையில்லாமல் கோபப்பட்டு விட்டோம். அவள்தான் என்ன செய்வாள் ? நான் இல்லாவிட்டால் யார் அவளுக்கு விஷயத்தைச் சொல்ல முடியும் ? அதுவும் என்னை எரிச்சல் படுத்துவதற்காகவா கேட்கிறாள் ? என் மீதுள்ள அக்கறையாலல்லவா கேட்கிறாள்.. ச்சை… யார் மீதோ உள்ள எரிச்சலை அம்மாவிடம் காட்டும் நான் என்ன மனிதன்.. ?’
நேராக அம்மாவிடம் சென்றேன். “அம்மா.. வேலையிலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கம்மா…“
“தெரியும்டா எனக்கு.. வக்கீல் உன்கிட்ட சொன்னது அந்த அளவுக்கா எனக்கு புரியாது… ? நான் ஒன்னும் தற்குறி இல்லடா.. … ஒன்னும் கவலைப்படாதடா… என் நகை 40 பவுன் இருக்கு. உன் தங்கச்சி வீட்டுக்காரர் நல்லா சம்பாரிக்கறார். நல்ல மனுஷன். வேற வழியே இல்லன்னா அவர் கிட்ட கேக்கலாம். உன் தங்கச்சியை விட, அவர்தான் டெய்லி போன் பண்ணி நீ எப்படி இருக்க, ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பார். உன்னைப் பாக்க வர்றேன்னு சொன்னார்.. நான்தான் என்னையே வர வேண்டாம்னு சொல்லிட்டான்னு சொன்னேன்..
எதுக்கும் பயப்படாதடா… சமாளிக்கலாம். உனக்கு இருக்கற டேலன்டுக்கு எந்த வேலைக்கு வேணாலும் போகலாம். பயப்படாத.. இந்த வேலை போனா என்னடா.. வேற வேலையே கிடைக்காதா… இந்த உலகம் ரொம்ப பெருசுடா… ஒரு வேலை போனதுனால குடியே முழுகிப் போயிடாது… போய் நிம்மதியா தூங்கு….“
‘வியப்பு… மலைப்பு.. ஆச்சர்யம்….. படிக்காதவள் என்று எத்தனை முறை இவளிடம் பல விஷயங்களை விவாதிக்காமல் தவிர்த்திருக்கிறோம்… இவளுக்கு என்ன விபரம் தெரியும் என்று எத்தனை முறை புறக்கணித்திருக்கிறோம்.. எவ்வளவு தவறான மதிப்பீடு… நான் படித்ததால் வந்த அகந்தைதானே இது… அவளுக்கு இருக்கும் மன தைரியம் எனக்குக் கூட இல்லையே… எவ்வளவு சுலபமாக இந்த பிரச்சினையை அணுகுகிறாள்.. ஏண்டா இப்படி செய்தாய் என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே.. இவளை விட என்னை வேறு யார் புரிந்து கொள்ள முடியும் ? நான்தான் இவளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன்.‘
ஒரு வாரத்துக்கு வெளியில் எங்குமே செல்லவில்லை. செல்போனைக் கூட ஆன் செய்யவில்லை. யாரிடமும் பேச பிடிக்கவில்லை. அடுத்து எங்கே வேலை தேடுவது என்பதும் புரியவில்லை. வெளியே சென்றால், பழைய வங்கியில் வேலை பார்ப்பவர்களைப் பார்க்க நேர்ந்து விடுமோ என்று அச்சமாக இருந்தது. அவர்கள் என்னை பரிதாபத்தோடு பார்க்கும் பார்வையை என்னால் சகித்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஒவ்வொருவரையும் பார்த்ததும், அவர்கள் உச்சு கொட்டி, அய்யய்யோ இப்படி ஆயிடுச்சே.. ஏம்பா இப்படிச் செஞ்சே.. என்று காட்டும் பரிதாபத்தை நினைத்தால் பயமாக இருந்தது. அந்த பச்சாதாபத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே எங்கும் செல்லவில்லை.
‘கதிரொளி உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை’ என்று ஃப்ளாஷ் செய்தி ஓடியது. கதிரொளி உரிமையாளர் சுரேஷ் நாத் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கதிரொளி உரிமையாளர் சுரேஷ் நாத், இந்தியா முழுக்க கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவரது ஆண்டு டர்ன் ஓவர் 2500 கோடியைத் தாண்டும். கட்டுமானத் தொழில் தவிர, போக்குவரத்து நிறுவனங்களும் நடத்தி வருகிறார். இவர் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர், திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இவரது அலுவலகங்கள் தவிர, கதிரொளி அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சிங்காரவேலு மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட வேலாயுதம் விசாரணை ஆணைய அதிகாரிகள் கதிரொளி அலுவலகத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது“ என்று சிறப்புச் செய்தியாளர் அறிவித்தார்.
‘அடுத்த சோதனை நம் வீட்டிலா ? தேன் கூட்டில் கை வைத்தது போல ஆகி விட்டதே.. இன்னும் என்னென்ன நடக்குமோ.. ?’
கல்யாணசுந்தரத்தைப் போய்ப் பார்ப்போம்.
“என்னப்பா வெங்கட்… ஜெயில் அனுபவம் எப்படி இருந்துச்சு..?“
உற்சாகம் குறையாமல் பேசினார்.
“நல்லா இருந்துச்சு தோழர்… தோழர் பேங்க்லேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க தோழர்.. “
“டொமெஸ்டிக் என்கொயரி இல்லாம எப்படிப்பா பண்ணாங்க.. அதுவும் இவ்ளோ சீக்கிரமா… ? “
“ஆர்டிக்கிள் 311 (2) தோழர்.. “
“அடப்பாவிகளா… இதுக்காகத்தான் அந்த ஆர்ட்டிக்கிளை ரிமூவ் பண்ணணும்னு பல வருஷமா போராடிக்கிட்டு இருக்கோம்…. இப்படி மிஸ்யூஸ் பண்றதுக்குத்தான் அதை இன்னும் வச்சுருக்காங்க.. அடுத்து என்னப்பா பண்ணப்போற… ? “
“தெரியலை தோழர்.. சுத்தமா ஐடியா இல்ல. என்ன பண்றதுன்னே புரியல.“
“வெங்கட்.. உன் எக்ஸ்பீரியன்ஸ்க்கு உனக்கு ப்ரைவேட் பேங்க்ல வேலை கிடைக்கும். ஆனா, சிங்காரவேலு நெனச்சா ஒரே நாள்ல அதை காலி பண்ணிட முடியும். அது இல்லாம நீ திரும்ப பேங்க் வேலைக்கு போறது சரியா இருக்குமான்னு எனக்குத் தெரியல.. உனக்கு ஏற்கனவே எழுத்து அனுபவம் இருக்கு. கதிரொளில ஜாய்ன் பண்றியா ?“
“கதிரொளி இப்போ இருக்கற நெலைமையில என்னை வேலைக்கு எடுப்பாங்களா தோழர் ?“
“ட்ரை பண்ணுவோமே.. நீ போயி லிங்கேஸ்வரனைப் பாரு.. இன்னைக்குப் போகாதே.. ரெண்டு நாள் கழிச்சுப் போ. ரெய்டு இன்னும் முடியலைன்னு நெனைக்கறேன்… தைரியமா இருப்பா… நாமளே மனசு உடைஞ்சுட்டோம்னா பல சிங்காரவேலுகள் உருவாயிடுவாங்க.. சிங்காரவேலுகளை உருவாக்கறது சுலபம். அது மழைக்காளான் மாதிரி தானா உருவாயிடும். உன்னை மாதிரி ஆளுங்களை உருவாக்கறதுதான் கஷ்டம். கவலைப்படாம போப்பா. “
இரண்டு நாட்கள் கழித்து லிங்கேஸ்வரனைப் பார்க்கச் சென்றேன்.
“வா வெங்கட். என்னய்யா தாடியெல்லாம்..“
“வேலையிலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க தோழர்….“
“ம்ம் நான் எதிர்ப்பார்த்ததுதான்.. சிங்காரவேலு உன்னை உயிரோட விட்டதே பெரிய விஷயம். கதிரொளியை என்ன பண்றான்னு பாத்தியா ? சேர்மேன் சாதாரணமான ஆளு இல்லை. பெரிய தொழிலதிபர். இந்தியா பூரா பிசினெஸ் இருக்கு.. பல பொலிட்டீஷியன்சை தெரியும்.. அவருக்கே என்ன கதி பாத்தியா ? ஒரு வருஷம் கூட சேர்மேன் டேக்ஸ் இவேஷன் பண்ணது இல்ல. இந்தியாவுல எத்தனை தொழிலதிபருங்க டேக்ஸ் ஏமாத்தறாங்க தெரியுமா ? அவங்களையெல்லாம் விட்டுட்டு இவரை ரெய்டு பண்றாங்க.. எல்லாருக்கும் இது சிங்காரவேலுவோட வேலைன்னு நல்லாத் தெரியும். பட் என்ன பண்ண முடியும் ? ரெய்டே பண்ணக் கூடாதுன்னு சொல்ல முடியுமா ? இல்ல கோர்ட்டுலதான் ஆர்டர்ஸ் வாங்க முடியுமா ?“
“சார். இப்போதைக்கு வேற வேலை இல்லை. கல்யாண சுந்தரம் தோழர் என்னை கதிரொளியில ஜாயின் பண்ணச் சொல்லி உங்ககிட்ட பேசச் சொன்னாரு…“
“வி ஆர் ஷட்டிங் டவுன் (We are shutting down) வெங்கட்…“
தொடரும்.
Kidney donor needed urgently, My client is urgently in need of a kidney transplant, If interested to sell contact here on my what’sApp number +4915219253693 Or Email: kidneydeal@gmail.com
हमें तत्काल किडनी डोनर की जरूरत है
(1 करोड़) की राशि और विदेशी मुद्रा में भी। लागू
अब! अधिक जानकारी के लिए ईमेल करें: healthc976@gmail.com
We are urgently in need of KlDNEY donors for the sum
of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors
are to reply via the sum of $500,000.00 USD, Email
for more details: Email: healthc976@gmail.com
I like this words அடர்ந்த காட்டுக்குள் தனியாக விடப்பட்டது போல உணர்ந்தேன். பொருளாதார நெருக்கடி மனிதனின் முதுகெலும்பை உடைத்து விடும் வல்லமை படைத்தது. அவன் கொள்கை, கோட்பாடு, உறுதி அத்தனையையும் உடைக்கக் கூடியது
ஊழல்… உளவு… அரசியல் படித்துவிட்டு தொடரைப் படித்துவிட்டு இந்த தொடரைப் படித்தால், நிறைய தகவல்கள் அதில் குறிப்பிட்டவையே இதில் ரிபீட் ஆகின்றன. போலீஸ், நீதிமன்றம், ஜெயில் என வரும்போது தவிர்க்கமுடியாமலிருக்கலாம். ஆனால் அந்த அம்மா, நாயகன்கூட உங்களையும் உங்கள் அம்மாவையும் நினைவுபடுத்துகிறார். கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சிக்கவும்.
Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 USD (3 Crore India Rupees) for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com
Dear Shankar, I follow you for almost 4 years. Your writing skill is amazing. You have (or would have developed) the skill to put exactly what you think in writing. You use correct words everywhere and those words are simple. Secondly, you have the capability to arrange the sequence of the matters to present so that the reader can understand clearly without repeat readings. I have noticed almost all the government staff (a) are very timid and (b) can give up the dignity to any extent for money. But, having in Governmental service for more than a decade, you continue to be brave and highly dignified and that could be the one reason why you could not continue in the service. Honestly speaking, I am unable to maintain friendship with any of Govt employees. In fact, I have several things to share with you for which I will contact you separately. I wish you all the best.
We should appreciate the lawyer words of supporting and understanding Venkat. Org velai Savukku thaan ivaro???
I liked the below Lines…. We always under estimate elders :
வியப்பு… மலைப்பு.. ஆச்சர்யம்….. படிக்காதவள் என்று எத்தனை முறை இவளிடம் பல விஷயங்களை விவாதிக்காமல் தவிர்த்திருக்கிறோம்… இவளுக்கு என்ன விபரம் தெரியும் என்று எத்தனை முறை புறக்கணித்திருக்கிறோம்.. எவ்வளவு தவறான மதிப்பீடு… நான் படித்ததால் வந்த அகந்தைதானே இது… அவளுக்கு இருக்கும் மன தைரியம் எனக்குக் கூட இல்லையே… எவ்வளவு சுலபமாக இந்த பிரச்சினையை அணுகுகிறாள்.. ஏண்டா இப்படி செய்தாய் என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே.. இவளை விட என்னை வேறு யார் புரிந்து கொள்ள முடியும் ? நான்தான் இவளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன்.‘
வங்கி ஊழியர் அரசு ஊழியர் இல்லை. Banks will not dismiss its employee under that section.
Wonderful post. especially… ‘படிக்காதவள் என்று எவ்வளவு எளிதாக நினைத்து விட்டோம்.. பேசும் வார்த்தைகளில் அவளுக்குப் புரிந்தவற்றை எப்படி கச்சிதமாக பிடித்துக் கொள்கிறாள் ? தேவையில்லாமல் கோபப்பட்டு விட்டோம். அவள்தான் என்ன செய்வாள் ? நான் இல்லாவிட்டால் யார் அவளுக்கு விஷயத்தைச் சொல்ல முடியும் ? அதுவும் என்னை எரிச்சல் படுத்துவதற்காகவா கேட்கிறாள் ? என் மீதுள்ள அக்கறையாலல்லவா கேட்கிறாள்.. ச்சை… யார் மீதோ உள்ள எரிச்சலை அம்மாவிடம் காட்டும் நான் என்ன மனிதன்.. ?’